வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?




 ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு கிடையாது , பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது , ஜாதகர் தனது பூர்வீகத்தை  விட்டு வெளியில் சென்றால் மட்டுமே , வாழ்க்கையில் நலம் பெற முடியும் என்றும் , தனது பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு நன்மையில்லை என்றும் , புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது , மேலும் பல ஜோதிடர்களின் கருத்தும் இதுவாகவே 
இருக்கிறது , இதில் உண்மை என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதக அமைப்பை கணிதம் செய்யும் பொழுது லக்கினத்தில் இருந்து , ஐந்தாம் பாவகத்தில் ராகு கேது  இருக்கிறதா (ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) என்பதை முதலில்  உறுதி செய்துவிட்டு , ஜாதக பலன் காணுவது சரியான ஜாதக பலனை சொல்ல உதவி புரியும் , மேற்கொண்டு ஐந்தாம் பாவகத்தில் ராகுவோ கேதுவோ இருப்பின்  (அதாவது  ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) எந்த ராசியில் இருக்கிறார் என்பதை சரியாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்வது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் தன்மையை உறுதி செய்ய நமக்கு உதவி புரியும், ( அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? , கெட்டு விட்டதா ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் .

மேற்கண்ட அமைப்பில் கணிதம் செய்யும்பொழுது ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிழ்க்கண்ட ராசிகள் 
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக வருமாயின் , இந்த ராசிகளில் ராகுவோ கேதுவோ அமரும் பொழுது ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100  சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் , தனது பூர்வீகத்தில் இருப்பதால் எவ்வித தீமையும் ஏற்ப்படாது என்றும் , புத்திர பாக்கியத்திற்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது என்றும் உறுதியாக சொல்ல முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , அதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் நன்மை தரும் ராசிகள் :

1 ) ரிஷபம் , துலாம் ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , 
இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 
நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

 2) மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுக்கு 14  பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் )  ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம் 
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் 
சந்தேகமே இல்லை .

3 ) தனுசு , மீன ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம்  ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும்,
புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .



மேற்கண்ட ராசிகள் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இந்த ராசிகளில் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமர்ந்தால் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100  சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , பூர்வீகத்தில் ஜாதகர் குடியிருப்பதால்  வாழ்க்கையில் சகல முன்னேற்றமும் ஏற்ப்படும் , குழந்தை பாக்கியத்தில் ஜாதகருக்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது , பேர்சொல்ல ஆண் வாரிசு நிச்சயம் உண்டாகும் .



எனவே ஒருவருடைய ஜாதக  அமைப்பில் ராகு கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் , புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது ஜோதிட கலையை பற்றி தெரியாத கத்துக்குட்டிகள், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் போலி ஜோதிடர்கள் சொல்லும் ஒரு வாய்ஜாலம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதே ஜோதிட தீபத்தின் ஆவல் , மேலும் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி அவைகள் ஜாதகருக்கும் , அமர்ந்த பாவகத்திர்க்கும் நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே சரியான ஜோதிட பலனாக இருக்கும் , அதுவே ஜோதிடர்களை நம்பி வருபவர்களுக்கு  வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் .



வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 3


பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் .

சிம்ம லக்கினம் :

2  ம் பாவகம் கன்னியில் செவ்வாய் அமர்வது , ஜாதகருக்கு லக்கினம் மற்றும்  4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையையே தரும் , ஜாதகர் தனது தாயார் அமைப்பில் இருந்து அதிக யோக பலனை அனுபவிக்கு யோகம் உண்டாகும் , குறிப்பாக நல்ல வண்டி வாகனம் , சொகுசான வீடு , சுயமாக சம்பாதித்து சொத்து, நகை மற்றும் பொருட்கள்  வாங்கும் யோகம் , எங்கு சென்றாலும் நல்ல மதிப்பு மரியாதை ஆகியன கிடைக்க பெறுவார் நான்காம் பாவக அமைப்பிற்கு , ஒன்பதாம் பாவக அமைப்பிற்கு செவ்வாய் பகவானால் ஜாதகர் சிறந்த ஒழுக்க சீலராகவும் , நல்ல எண்ணம் கொண்ட மனிதராகவும் , இறையருளின் கருணையை பெரும் யோகமும் , பல ஆன்மீக திரு தளங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பினையும் இந்த இடத்தில் அமரும் செவ்வாய் பகவானால் ஜாதகர் பெறுவார் .

4 ம் பாவகம் விருச்சக ராசியில் அமரும் செவ்வாய் பகவான் லக்கினம் மற்றும்  4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார் என்பதில் சந்தேகமே இல்லை இந்த அமைப்பில் செவ்வாய் நான்காம் வீட்டினை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் , ஒன்பதாம் வீட்டிற்கு மறைவு பலம் பெறுவதால் ஜாதகருக்கு நல்ல குணங்கள் அனைத்தும் பாதிக்க படும் , மற்றவரிடம் சகஜமாக பழகும் சூழ்நிலை பாதிக்க படும் , ஜாதகர் எவ்வளவு நன்மை மற்றவருக்கு செய்தாலும் இறுதியில் அவ பெயரே உண்டாகும் , குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நன்மை தரும் .

7 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு லக்கினம் மற்றும்  4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையையே தரும் , ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் , புதிய திட்டங்கள் , புதிய கண்டுபிடிப்புகள் , கட்டுமான துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தும் தன்மை , காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆற்றல் , எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என ஜாதகரை மிக சிறப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் ஆற்றல் இங்கு அமரும் செவ்வாய் பகவானுக்கு உண்டு மேலும் அரசு மரியாதை , அரசு கெளரவம் , அரசியலில் செல்வாக்கு , பெரிய மனிதர்களில் ஆதரவு என மிகவும் யோகமான பலன்களை தரும் அமைப்பாக இது காணப்படுகிறது , செவ்வாய் இங்கு அமர்வது சிம்மலக்கின ஜாதக அமைப்பை பெற்றவருக்கு யோகமே .

8 ம் பாவகம் மீனத்தில் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும் நான்காம் பாவக அமைப்பிற்கு 100 சதவிகித தீமையும் , ஒன்பதாம் பாவகத்திர்க்கு மட்டும் அதிக நன்மையையும் நிச்சயம் தருவார் , குறிப்பாக ஜாதகருக்கு அதிக மன உளைச்சலையும் , மன நிம்மதி இழப்பையும் தவறாமல் தந்துவிடுகிறார் , இதனால் ஜாதகர் கடும் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையும் , மற்றவரை புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவும் , தேவையற்ற விஷயங்களுக்காக மனதை வருத்திகொள்ளும் சொல்நிலைக்கு தள்ளப்படும் நிலை வரலாம் , இருப்பினும் பொது மக்களிடம் நல்ல பெயரும் , ஊருக்கு உழைக்கும் உத்தமர்கலாகவும் , பொதுவாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை கொண்டவராகவும் ஜாதகர் காணப்படுவார் , செவ்வாய் மீனத்தில் அமர்வது சிம்மலக்கினத்திர்க்கு 9 ம் பாவகத்திர்க்கு மட்டும் 100 சதவிகித  நன்மையை செய்யும் .

12 ம் பாவகம் கடகத்தில் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும்  4 ம் பாவகத்திர்க்கும் , 9 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார் காரணம் இங்கு அமரும் செவ்வாய் ஜாதகரை அதிக மன உளைச்சலுக்கும் , சொத்து சுக இழப்பிற்கும் காரணமாக அமைந்து விடுவார் , மேலும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையும் , பொதுமக்களிடம் அவ பெயரை சம்பாதிக்கும் நிலைக்கும் தள்ளிவிட கூடும் , குறிப்பாக ஜாதகர் மனம்போன போக்கில் ஜாதகர் சென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட  வாய்ப்பு உண்டு , எந்த விஷயத்தை செய்யுமுன்னர் ஜாதகர் பலமுறை யோசனை செய்து , செய்தால் மட்டுமே நன்மை பெற முடியும் இல்லை எனில் அதிக துன்பம்தான் , குறிப்பாக திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அதிக கவனம் தேவை , இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் சிரம பட வேண்டியதுதான் .


கன்னி லக்கினம் :

2 ம் பாவகம் துலாம் ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும்  3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார், குறிப்பாக ஜாதகரின் வாழ்க்கையில் அதிக அவ பெயரை சந்திக்க வேண்டிவரும் , ஜாதகரின் சிந்தனை ஆற்றல் , அறிவாற்றல் இரண்டையும் குறைக்கும் தன்மை இங்கு அமரும் செவ்வாய் பகவானால் ஏற்ப்படும் , இதனால் ஜாதகர் அதிக அவதிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , தேவையில்லாமல் பிடிவாத குணத்தையும் , மற்றவரிடம் இதனால் கெட்ட பெயரை சம்பாதிக்கும் சூழ்நிலையையும் ஏற்ப்படுத்தும் , குறிப்பாக அடிப்படை கல்வி காலங்களில் தடை ஏற்ப்படகூடும் ,அனைவரிடமும் வெறுப்பை காட்டுவதால் ஜாதகரிடம் யாரும் நெருங்கி பழகும் சூழ்நிலை கிடைக்காது , இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும் .

4 ம் பாவகம் தனுசு  ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும்  3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார், ஜாதகர் மன நோய் பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , அவசரப்பட்டு செய்யும்காரியங்கள் யாவும் தோல்வி ஏற்ப்படும் , கடுமையான முயற்ச்சிகள் செய்வதாலும் வெற்றி பெற வாய்ப்பு குறைவு , தனது சகோதர வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் , இந்த அமைப்பை பெற்றுள்ளவர்கள் அனைவரும் தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது வாழ்க்கையில் அதிக நன்மையை தரும் , சுயமாக முடிவெடுத்து அதிக பதிப்பை சந்திக்காமல் இருக்க இது ஒன்றே வழி , கவனம் குறைந்தால்  உயர் கல்வி காலங்களில் தொடர்ந்து சில தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , வீடு ,சொத்து ,நகை , வண்டி வாகனம் அனைத்தையும் தனது பெயரில் வைத்து கொள்ளாமல் இருப்பதே சாலசிறந்தது .

7 ம் பாவகம் மீன ராசியில் அமரும் செவ்வாய் , லக்கினம் மற்றும்  3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார், குறிப்பாக திடீர் இழப்புகளை ஜாதகரின் மன அமைப்பால் சந்திக்க வேண்டிவரும் , உடல் ரீதியான பாதிப்பையும் , மன ரீதியான பாதிப்பையும் ஜாதகர் அதிகம் சந்திக்க வேண்டி வரும் , ரத்த அழுத்தம் , இதயத்தில் கோளாறு , சுயமாக சம்பாதிக்கும் பொருட்களை இழக்கும் சூழ்நிலையும் , வெளிநாடு , வெளியூர் செல்வதால் அதிக துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரலாம், அதிகம் மன நிலை பாதிப்பாலும் , பிடிவாத குணத்தாலும் தனது உடலை தானே கெடுத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்படும், எனவே செவ்வாய் இங்கு அமர்வது கன்னி லக்கின ஜாதக அமைப்பை பெற்றவருக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

8 ம் பாவகம் மேஷ ராசியில்அமரும் செவ்வாய்  லக்கினம் மற்றும்  3 ம் பாவகத்திர்க்கும் , 8 ம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே தருவார், குறிப்பாக அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பதால் , அதிக இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும் , இல்லற வாழ்க்கையில் அதிக துன்பமும் , மகிழ்ச்சி இல்ல வாழ்க்கையும் அமைய கூடும் , தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உண்டு , திருமண வாழ்க்கை தாமதமாக அமையும் , குழந்தை பாக்கிய அமைப்பிலும் சிக்கல்கள் ஏற்ப்படும் , ஜீவன வழியில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , அடிக்கடி விபத்து உடல் தொந்தரவு போன்றவைகளால் பாதிக்க வாய்ப்பு அதிகம் , பண விஷயங்களில் அதிக கவனமுடன் இருப்பது அதிக நன்மை தரும் இல்லை எனில் தேவையின்றி அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் , மேஷத்தில் அமரும் செவ்வாய் கன்னி லக்கின ஜாதகரை அளவுக்கு அதிகமாக பாதிக்கும் என்பதே உண்மை .

12 ம் பாவகம் சிம்ம ராசியில் அமரும் செவ்வாய் லக்கினம் மற்றும்  3 ம் பாவகத்திர்க்கு அதிக நன்மைகளையும் ,8 ம் பாவகத்திர்க்கு100 சதவிகித தீமையான பலனையே தருவார், குறிப்பாக ஜாதகர் உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும் அமைப்பு  , பூர்வீகத்தில் இருப்பதால் நன்மை , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி , சகோதர வழி ஆதரவு , கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் புலமை , அறிவாற்றல் மூலம் அனைத்தையும் பெரும் யோகம் , மக்கள் செல்வாக்கின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பு , தன்னம்பிக்கை , வாழ்க்கையில் சுய முன்னேற்றம்  பெரும் யோகம் , பல இடங்களுக்கு சென்று வரும் யோகம் , புண்ணிய ஸ்தல யாத்திரை செல்லும் யோகம் , வண்டிவாகன யோகம் , வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் , போன்றவை சிறப்பாக அமைய பெறுவார் , எதிர்பாராத நேரங்களில் சில விபத்துகளை சந்திக்க வேண்டி வரும் எனவே பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுவது நலம் தரும் .

சுக்கிர திசை தரும் நன்மை தீமை பலன்கள் !




பொதுவாக பல ஜோதிடர்கள் சுக்கிர திசை ஒருவருடைய ஜாதகத்தில் வந்தால் மிகுந்த யோகம் என்று மிகை படுத்தி கூறுவது உண்டு  , மேலும் சுக்கிர திசை நடக்கும் காலங்களில் ஜாதகர் அளவில்லா செல்வ வளங்களையும் , பொன் பொருள் சேர்க்கையும் , மாட மாளிகையையும் , கூட கோபுரங்களையும் பெறுவார் என்று அளவுக்கு மீறி  கதை அளப்பதும் உண்டு , மேலும் சுக்கிர திசை ஒருவருக்கு நடந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளையும் பெண்கள் வழியில் இருந்து ஆதரவும் கிடைக்கும் என்றும் , வண்டிவாகன யோகம் ஏற்ப்படும் என்றும் , திருமண வாழ்க்கை இனிதே அமையும் என்றும் சொல்பவர்களும் உண்டு .

மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் குரு திசை , சுக்கிர திசை , சந்திர திசை , புதன் திசை அமைப்புகள் யோக பலன்களையும் , சூரியன் , செவ்வாய்சனி , ராகு , கேது திசை அமைப்புகள் அவயோக பலனையும் தரும் என்று நிர்ணயம் செய்கின்றனர் இதில் எது உண்மை , எது உண்மைக்கு மாறானது என்று இந்த பதிவில் காண்போம்.

மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஜாதகருக்கு கும்ப லக்கினம் , லக்கினத்திற்கு யோக அதிபதி என்று வர்ணிக்கும் சுக்கிர பகவானின் திசை ஜாதகருக்கு ( 17 /03 /1990 முதல் 17 /03 /2010 ) வரை நடை பெற்றது , மேலும் இந்த சுக்கிரன் திசை சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு திருமணம் அமைந்தது , ( விருப்ப மனம் ) சுக்கிரன் திசை குரு புத்தியில் ஆண் வாரி ஜாதகருக்கு கிடைத்தது , சுக்கிர திசை சனி புத்தியில் தம்பதியர் பிரிவி , இப்பொழுது வழக்கு நீதிமன்றாத்தில் நிலுவையில் உள்ளது , ஜாதகரின் மன நிம்மதி அறவே இல்லாமால் தவித்துக்கொண்டு இருக்கிறார், தன்மீது எவ்வித தவறும் இல்லாத நிலையில் ஜாதகரின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறி நிற்கிறது .

இந்த நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை எவ்வித நன்மையையும் தரவில்லை ( சுக்கிரன் யோக அதிபதியாக இருந்தும் கூட ) ஜாதகருக்கு ஏன் இந்த நிலை ?

பொதுவாக ஒருவருக்கு நடக்கும் திசை என்னவாக இருந்தாலும் , அது சுய ஜாதக அமைப்பில் எந்த வீடுகளின் பலனை  பெற்று நடத்துகின்றது என்பதை தெரிந்தால் மட்டுமே , ஜாதகருக்கு குறிப்பிட்ட திசை நன்மையை செய்கிறதா ? தீமையை செய்கிறதா ? என்று நிர்ணயம் செய்ய இயலும் , மேற்கண்ட ஜாதக அமைப்பில் சுக்கிரன் தனது திசை முழுவதும் 6 ,9 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தி இருப்பதே இதற்க்கு காரணம் , மேலும் ஜாதகருக்கு  திருமணம் நடை பெரும்பொழுது நடந்த  சந்திரன் புத்தியும் 6 ,9 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை செய்யும்பொழுது நடந்ததால், தனக்கு பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது ,
(
ஜாதகருக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்தும் கூட இந்த நிலை )

அதற்க்கு பிறகு குரு புத்தியில் ஆண் வாரிசு , ஜாதகருக்கு குரு புத்தியும் 12 ம் பாவகம் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலன் நடத்தியது , இதனால் ஜாதகருக்கு குழந்தை பிறந்த நாள் முதற்கொண்டு மன நிம்மதி போனது , சனி புத்தியில் தம்பதியர் பிரிவு சுய ஜாதகத்தில் சனி புத்தி நன்மையை செய்தாலும் சனி புத்தி காலகட்டத்தில் கோட்சார அமைப்பு நல்ல நிலையில் இல்லாத காரணத்தால் குடும்ப வாழ்க்கையில் ஜாதாகருக்கு பிரிவு ஏற்ப்பட்டது , இதற்க்கு பிறகு நடந்த காலகட்டங்களில் ஜாதகர் கோர்ட்டு கேசு என்று அலைந்து திரிந்து , மன நிம்மதி இழப்பையும் , பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டி வந்தது .

சரியான வயதில் ( அதாவது இளம் வயதில் ) வந்த சுக்கிரன் திசை ஜாதகரை படுத்தி எடுத்து விட்டது , இதில் இருந்து நாம் உணர்வது என்ன வென்றால் , ஒருவருடைய ஜாதகத்தில் நடக்கும் திசை பலனை நிர்ணயம் செய்வதில்லை , அது சம்பந்தம் பெரும் பாவக அமைப்பே நன்மை தீமையை பலனை நிர்ணயம் செய்கிறது என்பதே உண்மை , இதே ஜாதகருக்கு சுக்கிர திசைக்கு பிறகு தற்பொழுது நடக்கும் சூரிய திசை மிகுந்த நன்மையை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது ஏனெனில் சூரியன் திசை 2,5,8,11 ம் வீடுகள் 11 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்துவதே இதற்க்கு காரணம் .

எனவே சுபகிரகங்களின் திசை அனைத்தும் நன்மை செய்யும் என்று கணிதம் செய்வதும் , அசுபகிரகங்களின் திசை அனைத்தும் தீமை செய்யும் என்றும் கணிதம் செய்வது , குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அமைப்பிற்கு ஒப்பானது , ஒருவருடைய ஜாதக அமைப்பில் நடக்கும் எந்த திசை என்றாலும் அவை எந்த பாவக பலனை செய்கிறது என்று தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே ஜோதிட ஆலோசனை பெற வரும் அன்பர்களுக்கு அதிக நன்மை தரும் , இதற்க்கு மாறாக உங்களுக்கு சுக்கிரதிசை ஆரம்பித்து விட்டது இனியெல்லாம் யோகமே என்று மேற்க்கண்டவரிடம் சொல்லி புதிதாக முதலீடு செய்து தொழில் துவங்குங்கள் என்று சொல்லியிருந்தால் , ஜாதகரின் நிலையை சற்றே நினைத்து பாருங்கள் என்னவாகி  
இருக்கும் என்று ? தான் செய்வதெல்லாம் சரி என்று ஜாதகர்  நினைத்து கொண்டு அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையே ஏற்ப்படும் .

ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும்பொழுது அதிக கவனத்துடன் , நாடி வந்தவருக்கு சரியான ஜோதிட பலனையே சொல்ல வேண்டும் , இதுவே ஜோதிட தர்மம் . இல்லை எனில் தவறான பலன் சொல்லியதற்கு உண்டான பாவவினை பதிவின்  பலனைஜோதிடர்கள் அனுபவிக்க வேண்டிவரும் .வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443306969