ஞாயிறு, 3 நவம்பர், 2013

திசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் !



பொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில் ஜாதகருக்கு நடந்த திசை என்ன ? பலனை வழங்கியது, நடக்கின்ற திசை என்ன? பலனை வழங்கி கொண்டு இருக்கிறது, இனி நடக்க இருக்கும் திசை என்ன? பலனை வழங்கும் என்ற கணிதத்தில் ஜோதிடர்களுக் மத்தியிலேயே பல முரண்பாடுகள் உண்டு.

 மேலும் ஜாதகத்தை ஒரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும், அதே ஜாதகத்தை மற்றொரு ஜோதிடர் கணித்து பலன் சொன்னதிற்கும் நிறை வேறுபாடுகள் வருகிறது எனும் பொழுது, ஜாதக பலன் அறிந்துகொள்ள வந்த நபரின் நிலை என்னவாகும், ஒருவர் சுப யோக பலன் என்கிறார்,வேறொருவர் அவ யோக பலன் என்கிறார், இந்த விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள, தொலைகாட்சியில் வரும் தின ராசிபலனை கேட்டாலே போதும். ( ராசி பலன் என்பது சரியாக சுய ஜாதகத்திற்கு பொருந்தாது, கட்டுபடுத்தாது  என்பது வேறு விஷயம் )


 இந்த நிலை ஏற்ப்பட காரணம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடை பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அவருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று தெரியாத பொழுதும், தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களுக்கு கோட்சார ரீதியான பலன்களை எவ்விதம் வழங்குகிறது என்று தெரியாத நிலையிலேயே, ஜோதிடர்கள் தனது அறிவுக்கு உட்பட்டு, இதற்க்கு முன் அறிந்த அனுபவத்திற்கு ஏற்ப பலாபலன்களை எடுத்துரைக்கின்றனர்.


 உண்மையில் சுய ஜாதக ரீதியாக நடக்கும் திசை தரும் பாவக பலன்களுக்கும், அதற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது , ஒருவேளை சொல்லும் பலன் பொருந்தி இருப்பின் "காகம் அமர பனம்பழம் விழுந்த" கதையாகவே இருக்கும். ஜோதிடர்கள் உறுதியாக அறுதியிட்டு கூற இயலாத நிலையில் பலன்கள் நடக்கலாம், என்ற வார்த்தையை உபயோகிக்கும் சூழ்நிலையை ஜோதிடர்களுக்கு வரக்கூடும்.


 குறிப்பாக பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு,கேது,சனி,செவ்வாய் மற்றும் சூரியன் திசைகளில் ஜாதகர் அதிக இன்னல்களுக்கு ஆர்படும் நிலையை தரும் என்ற ரீதியிலும் , சந்திரன்,சுக்கிரன்,குரு மற்றும் புதன் திசைகள் மிகுந்த யோக வாழ்க்கையை வழங்கும் என்ற ரீதியிலுமே பலன்களை "கணித்து" சொல்லுவதுண்டு அல்லது மேற்கண்ட கிரகங்கள் ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கின்றனர்  என்ற நிலையை வைத்தும், ( ராசி மற்றும் அம்ச நிலை, சந்திரனுக்கு கோட்சார நிலை ) ஆட்சி,உச்ச,நட்பு,பகை மற்றும் நீட்ச நிலை கருத்தில் கொண்டும் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்கின்றனர், இதிலும் பல கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு, இன்னும் சிலர் நட்சத்திரம் மற்றும் சார பலம் என்றும் பல் வேறு கருத்துகளை சொல்வதுண்டு, எது எப்படி இருந்தாலும்  நமது ஜோதிட முறையில் நம்மை நம்பி வரும் ஒருவருக்கு சரியான உறுதியான முறையில் ஜாதக பலன் காணும் எளிய முறையினை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம்.



ஜாதகரின் விபரம்




லக்கினம் : தனுசு

ராசி : கும்பம்
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்கள் அவரின் வாழ்க்கை முறையினையும், வாழ்க்கையில் அடையும் வெற்றி தோல்வி, நன்மை தீமை யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கின்றது என்றால் அது மிகையில்லை.


 லக்கினம் ஜாதகரின் உடல் உயிர் நிலை பற்றியும், வளரும் சூழ்நிலையை பற்றியும், 2ம் பாவகம் ஜாதகரின் வாக்கு, தனம், குடும்பம் அடிப்படை கல்வி பற்றியும், 3ம் பாவகம் சகோதரர், எடுக்கும் முயற்சிகளில் வரும் வெற்றி வீரியம் பற்றியும், 4ம் பாவகம் தனது தாய், சொத்து,வீடு,வண்டி வாகன வசதி பற்றியும், ஜாதகரின் குண இயல்பு பற்றியும் உயர் கல்வி பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தந்தையை பற்றியும் ), 5ம் பாவகம் தனது நினைவாற்றல் குல தெய்வ ஆசி, குழந்தை செல்வம் பற்றியும், தான் கற்ற கல்வியினால் வரும் யோக அமைப்பை பற்றியும், 6ம் பாவகம் தனது எதிரிகளால் வரும் நன்மை தீமை, உடல் நலம் நலமின்மை, கடன் பெறுவதால் வரும் யோக அவயோக நிலையை பற்றியும்.


7ம் பாவகம் தனது நண்பர்கள் வழக்கை துணை, கூட்டாளிகள், பொதுமக்கள் அதரவு, அரசியலில் ஜாதகர் பெரும் வெற்றி, வியாபர நிலையை பற்றியும், 8ம் பாவகம் ஜாதகருக்கு தீடீரென நிகழும் யோக அவயோக நிலையை பற்றியும் , ஆயுள் நிலையை பற்றியும், விபத்து மற்றும் சிகிச்சை பற்றியும், 9ம் பாவகம் ஆன்மீக பெரியோரின் ஆசியை பற்றியும், தான் செய்த பாக்கிய அமைப்பினால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றியும், சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நர்ப்பெயர் பற்றியும், 10ம் பாவகம்  ஜாதகரின் தந்தையை பற்றியும் ( பெண்கள் ஜாதகத்தில் தாயை பற்றியும்) ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , கர்ம நிலையை பற்றியும், 11ம் பாவகம் ஜாதகர் இந்த பிறவி எடுத்ததின் காரணம் பற்றியும் தனது நீடித்த அதிர்ஷ்டத்தை பற்றியும், மூத்த சகோதர அமைப்பை பற்றியும், இரண்டாவது திருமண வாழ்க்கை பற்றியும், 12ம் பாவகம் ஜாதகரின் நிம்மதி, உறக்கம், வாழ்க்கை துணையுடன் உண்டான அன்யோன்யம் மற்றும் சுக வாழ்வு பற்றியும் ஜாதகர் செய்யும் மிகப்பெரிய முதலீடுகள் பற்றியும், வாழ்க்கையின் இறுதியில் அவரது ஆன்மா பெரும் யோக நிலையை பற்றியும் நாம்  தெளிவாக தெரிந்துகொள்ள உதவும்.


மேற்கண்ட 12 பாவகங்கள் சுய ஜாதகத்தில் பெரும் வலிமைக்கேற்ப சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கை அமையும், மேற்கண்ட 12 பாவக நிலையை ஏற்று யோக அவயோக பலன்களை ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அமைப்புகள் வாரி வழங்கும், மேற்கண்ட 12 பாவக நிலையை  பற்றியும், கோட்சார ரீதியாக அந்த பாவகங்களுக்கு நவ கிரகங்கள் தரும் பலன்களை பற்றியும் துல்லியாமாக கணிதம் செய்தால், நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு தெளிவான ஜாதக பலன்களை உறுதியாக சொல்விட இயலும்.


இனி மேற்கண்ட ஜாதகருக்கு பலாபலன்களை நிர்ணயம் செய்வோம்.


ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம்.
6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும்.

ஜாதகத்தில் பாதிக்கபட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :


8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம். ( 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நீண்ட ஆயுளை தரும் இருப்பினும் உடல் தொந்தரவுகளை அடிக்கடி தரும் )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் தீமையையும் அவயோகத்தையும் தரும்.

ஜாதக பொது பலன்கள் :


1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்தும் 80 சதவிகித யோக பலன்களை தரும் , ஜாதகருக்கு நல்ல உடல் நிலையையும், வளரும் சூழ்நிலையையும் , நிறைவான அறிவாற்றலையும், நீண்ட ஆயுளையும் இலக்கின அமைப்பில் இருந்து பெறுவார், லக்கினம் தனுசு ராசியாக வருவதும், இந்த ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதும், அது உபய நெருப்பு தத்துவ ராசியாக அமைவதும், ஜாதகருக்கு பரந்த விசாலமான மனதினை தரும், தனது எண்ணத்திலும் செயலிலும் தூய்மையை தரும், தனது சிந்தனையில் வரும் விஷயங்களை நடைமுறையில் காணும் யோகம் உண்டாகும், சமுதாயத்தில் எப்பொழுதும் நர்ப்பெயர் கிடைக்கும், ஆன்மீக  பெரியோர்களின் நல்லாசியும், வழிகாட்டுதலும் ஜாதகருக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள்  செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகருக்கு 100 சதவிகிதம் யோகமாக தரும் இதன் வழியில் ஜாதகரின் முன்னேற்றம் அமையும் .


3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அந்த மூன்றாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும் ஸ்திர காற்று தத்துவ ராசியாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெரும் யோகத்தையும் தரும், குறிப்பாக ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் மிகப்பெரிய யோக வாழ்க்கையை தரும், வியாபாரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம், செல்வ சேர்க்கை மற்றும் செல்வ செழிப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல ஸ்திரமான மன நிலை, தைரியம், பயணங்களில் லாபம் மற்றும் முன்னேற்றம், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் புதிய சூழ்நிலைகள், ஏஜென்சி துறையில் அபரிவிதமான முன்னேற்றம் என்ற அமைப்பில் யோக பலன்களை வாரி வழங்கும். 


2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து  இசையில் ஈடுபாடும் நல்ல ஞானத்தையும் தரும், திரைப்படம், நாடகம்,விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விசயங்களில் ஈடுபாட்டினையும், வெற்றியையும் வாரிவழங்கும், தனது குழந்தைகளால் வாழ்க்கையில் யோக அமைப்பை பெறுவார் நிறைவான செல்வ சேர்க்கையை பெரும் யோகம் உண்டாகும், மேலும் ஐந்த பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், அது மேஷ சர நெருப்பு தத்துவ அமைப்பாக வருவதும் யோக அமைப்பே, குறிப்பாக ஜாதகருக்கு சுய  கட்டுப்பாட்டினையும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் தெளிவான வாக்கு வன்மையையும், இனிமையான பேச்சு திறனையும் சரளமாக வாரி வழங்கும்.


5ம் பாவக வழியில் இருந்து கலைகளில் வெற்றியும், கலைஈடுபாட்டினையும், தானியம் மற்றும் உணவு பொருட்களாலும், நீர்ம பொருட்களாலும் அதிக லாபத்தையும் , புத்திசாலித்தனமான நடவடிக்கையின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பையும், தனது வாத திறமையினால் அனைத்தையும் வெல்லும் யோகம் உண்டாகும், தனது பேச்சு திறனால் அனைவரையும் மயக்கும் ஆற்றல் உண்டாகும், மேலும் தர்ம சிந்தனை, நல்ல குழந்தைகள், விளையாட்டு வீரர், தன்னம்பிக்கை மிகுந்த மன நிலை, இறை அருளின் கருணையை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகம், குல தேவதையின் கருணையை விரைவில் பெரும் யோகம் என ஜாதகர்க்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.


4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து கல்வியில் உயர்வு, கல்வி சார்ந்த விஷயங்களிலும் கல்வி நிறுவனங்களினாலும் லாபம், ஆய்வு மனப்பான்மை, பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு , ஏற்றுமதி இறக்குமதி  வியாபர விருத்தி, ஆன்மீக ஈடுபாடு என்ற அமைப்பில் யோகத்தை தரும், 9ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமாக வருவதாலும் , 9ம் பாவகம் சிம்ம ஸ்திர நெருப்பு ராசியாக இருப்பதாலும் ஜாதகருக்கு ஆன்மீகத்திலும், இறை நிலையின் பரிபூரண கருணையும் நிச்சயம் உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து யோக வழக்கை, பயணங்களால் அதிக லாபம், வசதிமிக்க பொறுப்புகள் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பெரிய தன சேர்க்கை, தொழில் மற்றும் இடமாற்றம் மூலம் அதிக லாபம், வெளி வட்டார பழக்க வழக்கங்களில் நர்ப்பெயரும் யோகமும் உண்டாகும் தன்மை , தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைக்கும் தீர்வு காணும் புத்திசாலித்தனம் என்ற அமைப்பில் சுபயோக பலன்களை வழங்கும்.

6,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாகவும் உபய நில தத்துவ ராசியாகவும் இருப்பதால், ஜாதகருக்கு ஜீவனம் என்பது, மண் சார்ந்த தொழில் அமைப்பையும், இதன் வகை தொழில்களில் வெற்றிமேல் வெற்றியையும், ஜீவன மேன்மையும் தரும், தனது தந்தையின் மூலம் ஜாதகர் வாழக்கையில் நல்ல படிப்பினையை பெறுவார், அவர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம், பெரும் அமைப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த பொருத்தமான வாழ்க்கை துணையை  தமது விருப்பம் போல் பெரும் யோகத்தை தரும், சிறந்த நண்பர்களும் நடப்பும் வாழ்க்கையில் சரியான நேரத்தில் கிடைக்கும், இதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெறுவார், அரசியலில் எதிர்பாராத வெற்றியை தரும் , பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு எப்பொழுதும் உண்டு, ஜாதகருக்கு அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து என்ற நிலையில் யோக பலன்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம் அல்லது தொழில் அமையும் , வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சியை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், பல் வகை தொழில் முன்னேற்றத்தை பெரும் யோகம் உண்டு, கம்பீரமான தோற்றமும், தீர்க்கமான வாத திறமையும் ஜாதகரின் வெற்றிக்கு வழிவகுக்கும், எந்த நிலையிலும் ஜீவன வழியில் இருந்து பின்னடைவை தராது, வெற்றிமேல் வெற்றி உண்டாகும்.

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பிலேயே 200 சதவிகித யோகத்தை தரும், ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, அனைத்திலும் லாபம், நல்ல  குணம் என்ற வகையில் பலன்களை வாரி வழங்கும், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் 11ம் பாவகம் 7ம் ராசியாக வருவதும் அது துலாம் சர காற்று தத்துவ ராசியாக இருப்பதும் மிகுந்த யோக அமைப்பை தரும் நிலையாகும், இந்த பாவகத்தின் பலன் நடை பெரும் பொழுது ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் 100 சதவிகித வெற்றியை தரும் என்றால் அது மிகையில்லை , சர காற்று தத்துவ ராசியின் தன்மையே மனிதர்களுக்கு சிறந்த அறிவாற்றலையும் திட்டமிடுதலையும் அதன் வழியில் நடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுதலையும் குறிக்கிறது.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், அதற்க்கு இணையான பொருள் இழப்பை தரும் , குறிப்பாக பொருளாதரத்தில் ஏற்ற இறக்கங்களை ஜாதகர் அடிக்கடி கவனத்தில் கொள்வது நல்லது , ஜாதகரின் 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாக வருவதும், அந்த ராசி சர கடகமாக அமைவதும், ஜாதகரின் மன இயல்பில் வரும் மாற்றங்களை குறிக்கிறது, எடுத்துகாட்டாக தேவையற்ற மன கவலை ஜாதகரின் முன்னேற்றமான வாழ்க்கையை பதம் பார்க்கும், வீண் கவலைகளை தவிர்த்து எதிர்த்து நிற்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், தனது பெயரில் உள்ள சொத்து அமைப்புகளில் சற்றே கவனம் செலுத்துவதும் நல்லது, சிறு சிறு உடல் தொந்தரவுகளை தவிர்க்க இயலாது, இதனால் ஜாதகருக்கு நன்மையே உண்டாகும்.

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பில் சற்றே பொருளாதார விரையத்தை கொடுக்கும் , ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக   வருவது இழப்பின் வீரியத்தை குறிக்கிறது மேலும் ஸ்திர நீர் ராசியாக இருப்பதால், ஜாதகருக்கு ஏற்ப்படும் இழப்பு அதிக நாள் மன நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது , இந்த காலகட்டங்களில் ஜாதகர் சற்றே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது , வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டிய நேரமிது , 8,12ம் பாவக வழியில் இருந்து பலன்கள் நடை பெரும் பொழுது மட்டும் ஜாதகர் சற்றே கவனமுடன் இருப்பது நலம் தரும், திசை மற்றும் புத்திகளிலும், கோட்சார நிலைகளிலும் மேற்கண்ட பாவக பலன்கள் நடை முறைக்கு வரும் பொழுது எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

ஜாதகருக்கு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் எந்த எந்த பாவகங்களின் பலனை ஏற்று நடத்துகிறது என்று இனி பார்ப்போம் .

ராகு திசை : (பிறந்த தேதி முதல்  28/10/1961 வரையிலும் ) 

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையும்,  8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று தீமையையும் தந்திருக்கிறது .

குரு திசை : ( 28/10/1961 முதல் 28/10/1977 வரை )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

சனி திசை:( 28/10/1977 முதல் 28/10/1996 வரை) 

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி  திசையானது பெரிய யோகத்தையும் தரவில்லை.

புதன் திசை : ( 28/10/1996 முதல் 28/10/2013 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கி இருக்கிறது.

கேது திசை : (28/10/2013 முதல் 28/10/2020 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

சுக்கிரன் திசை :(28/10/2020 முதல் 28/10/2040 வரை )

4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சமபந்தம் பெற்று 80 சதவிகித நன்மையையும் வாரி வழங்கும்.

சூரியன் திசை : ( 28/10/2040 முதல் 28/10/2046 வரை )

11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித நன்மையை வாரி வழங்கும்.

சந்திரன் திசை : ( 28/10/2046 முதல் 28/10/2056 வரை)

1,3ம் வீடுகள் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித யோக பலன்களை  வாரி வழங்கும்.

செவ்வாய் திசை : ( 28/10/2056 முதல் 28/10/2063வரை)

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தரும் .

ஆக மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து அவயோக பலன்களையும்.

ராகு,புதன்,கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் சந்திர மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜாதகருக்கு தாம் தொடர்பு கொண்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது உறுதியாகிறது .

எனவே ஜாதகர்  செவ்வாய்,குரு,சனி மகா திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலகட்டங்களில் சற்றே எச்சரிக்கையாகவும், அவைகள் தொடர்பு பெரும் பாவக சம்பந்தம் பெற்ற விஷயங்களில் ஈடுபடாமலும் இருந்தாலே ஜாதகருக்கு நன்மையே உண்டாகும் , மேற்கண்ட பாவகங்களுடன் கோட்சார கிரக அமைப்பை கருத்தில் கொண்டு பலன் காணும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையை பற்றி தெளிவாக ஜாதக பலன்களை சொல்லவிட இயலும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435
Jothidadeepam@gmail.com