ஜாதகரின் தலை மற்றும் மூளையை குறிக்கும், மேலும் அரசியல் ரீதியான ஜாதகரின் செயல்பாடுகள், சிறப்பு அந்தஸ்து மற்றும் அடையாளம், நேர்த்தியான அழகு, அமைதியான குணம், அரசியல் சார்ந்த அறிவாற்றல், நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், தான் கொண்ட லட்சியம், இயல்பு வாழ்க்கை, இந்த பிறவியின் தன்மை மற்றும் நோக்கம், இளமை காலங்களில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, உயிர்சக்தி மற்றும் அதன் செயல்திறன், உழைப்பின் தன்மை அதனால் பெரும் நன்மைகள், உடல் ரீதியான பாதிப்பில் இருந்து மீண்டுவரும் யோகம், உயிரின் வீரியம், உடல் வலிமை, நேர்த்தியான உருவ அமைப்பு, ஐம்புலன்கள் செயல்படும் தன்மை.
ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, கனவு நனவாக ஜாதகரின் உழைப்பு, கல்வியில் பெரும் வெற்றி, புகழ், கீர்த்தி குலபெருமை, குணநலன்கள், கவுரவம், சிந்தனை திறன், சூழ்நிலை, ஒரு செயலின் ஆரம்பம் மற்றும் துவக்கம், ஜாதகர் பெற்ற ஞானம், தலைமை பண்பு, தனி திறமை, திருப்தியான மனம், தீர்மானமான செயல்பாடுகள், தோற்ற பொலிவு, நன்னடத்தை, நிறம், பதவி சார்ந்த வெற்றிகள், தனித்துவமான படைப்பாற்றல், புகழ் மிக்க பொறுப்புகள் அதை சிறப்பாக கையாளும் வல்லமை, புகழ் பெரும் யோகம், மச்சம் மற்றும் அடையாளம், மகிழ்ச்சியான மனநிலை, மரியாதை நிறைந்த வாழ்க்கை, உடல் மின்னோட்டம்.
முகபாவனை மற்றும் தேஜஸ், ஜாதகரின் முயற்சிக்கும் தன்மை, மூளையின் செயல்திறன், யோகவாழ்க்கையை சிறப்பாக சுவீகரித்தல், அதன் வழியிலான லாபங்களை முழுமையாக பெறுதல், வடிவமான உடல்கட்டு, வலிமையான தேகம், வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறை உணர்ந்து வெற்றி பெறுதல், ஆரம்ப கால வாழ்க்கையை சிறப்பாக துவங்குதல், உயர்வான வாழ்வை சுவீகரிக்க ஜாதகரின் உழைப்பின் தன்மையே காரணமாக அமைத்தல், தனது விருப்பங்களை மிக எளிதாக அடைதல், விவேகம் நிறைந்த செயல்பாடுகள் மூலம் அனைத்தையும் அடைதல், வீரியம் குறையாத யோக வாழ்க்கை என அனைத்தையும் ஒரு ஜாதகருக்கு "ஜென்ம லக்கினம்" எனும் முதல் பாவகமே வாரி வழங்கும்.
குறிப்பு :
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஜென்ம லக்கினம் நமது ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கிறதா ? என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை யோகம் நிறைந்ததாக அமையும்.
ஜோதிடன் வர்ஷன்
9443355696