வியாழன், 8 அக்டோபர், 2015

திருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறையில் உள்ள பொருத்தம் காணும் விஷயங்களுடன் ( நட்சத்திர பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம்) , சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் அமைத்து தருவது சம்பந்தபட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்து தரும், உதாரணமாக கிழ்கண்ட ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகிக்கு வயது 32 நடைமுறையில் உள்ளது, இதுவரை நல்ல வரன் அமையவில்லை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது, மேலும் ஜாதகி தான் ஒரு வரனை தேர்ந்தெடுத்ததாகவும், தேர்ந்தெடுத்த ஜாதகரை தான் திருமணம் செய்துகொண்டால் இல்லறவாழ்க்கை சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வியை முன் வைக்கிறார், ஜாதகின் சுய ஜாதகத்தையும், ஜாதகி தேர்ந்தெடுத்த வரனின் ஜாதகத்தையும் திருமண வாழ்க்கைக்கு உகந்ததா? இல்லறவாழ்க்கை சிறப்பாக அமையுமா? என்பதை சம்பந்தபட்ட ஜாதகங்களின் பாவக வலிமையை இனி ஆய்வு செய்வோம்.

அடிப்படையில் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வது வரனின் ஜாதகத்தில் ஆய்வுக்கு எடுத்துகொள்ள வேண்டிய விஷயங்கள், 1) குடும்ப ஸ்தானமனான 2ம் பாவகம், 2) புத்திர ஸ்தானமான 5ம் பாவகம், 3) களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், 4) ஆயுள் பாவகமான 8ம் பாவகம், 5) தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி வழங்கும் பலாபலன்களும், எதிர்வரும் திசை,புத்தி வழங்கும் பலாபலன்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்வது மிக மிக அவசியம் ( நட்சத்திர பொருத்தமோ, மற்ற தோஷங்களோ தம்பதியரை வெகுவாக பாதிப்பதில்லை, சுய ஜாதகத்தில் 12 பாவகங்கள் நல்ல வலிமையுடன்  இருப்பின் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம், செவ்வாய் மற்றும் ராகுகேது, சனி தோஷங்களும் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை).

 ஜாதகிக்கு

லக்கினம் : கன்னி
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 4ம் பாதம்



ஜாதகருக்கு

லக்கினம் : விருச்சிகம்
ராசி : மிதுனம்
நட்சத்திரம் : திருவாதிரை 1ம் பாதம்



இருவரது சுய ஜாதக அமைப்பின் படி திருமண பொருத்தத்திற்கு அதி முக்கியமான பாவகங்கள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானமான 7ம் பாவக வலிமையையும், ஆய்வு செய்வோம். 

பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் 

பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியருக்கு புத்திரசந்தான யோகத்தை வழங்கும் 5ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியர் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் பெரும் யோக நிலையையும், ஆயுள் அமைப்பையும் குறிக்கும் 8ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.

பெண்ணிற்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும், ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் குரு திசை 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவதும் இருவருக்கும் மிகுந்த இன்னல்களையே தரும்.

மேலும் ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை முழுவதும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும், குறிப்பாக ஜாதகர், ஜாதகர் மேற்கொள்ளும் முயற்ச்சிகளில் வரும் தோல்வி, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து வரும் தாங்க இயலாத இன்னல்கள், சமுதாயத்தில் ஜாதகருக்கு ஏற்ப்படும் வீண் அவபெயர்கள் என ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை மிகுந்த சோதனை காலமாகவே அமையும் என்பது கவனிக்க தக்கது.

எனவே மேற்கண்ட வது வரன் ஜாதகத்தை திருமண வாழ்க்கையில் இணைப்பது என்பது "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொள்வதற்கு" ஒப்பானதாக அமைந்து விடும் என்பது 100% விகித உண்மை, எனவே இருவரது ஜாதகங்களுக்கு, ஜாதக மற்றும் பாவக பொருத்தம் இல்லை என்பதை அறிவுறுத்துவதே சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696