Sunday, April 29, 2012

பாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க ? டேய் நான் பித்ததிலும் நியுமராலஜி பார்ப்பேண்டா !
இனி வரும் காலங்களில் இதுதான் நடக்க போகிறது , சில தொலை காட்சி நிகழ்ச்சிகளில் இந்த எண்கணிதம் பலரிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது , ஆண் / பெண்  என்று வேறுபாடு இல்லாமல் எண்கணித மேதைகள் ஆலோசனை வழங்குவதை பார்க்கும் பொழுது நம்மக்களிடம் இதனை பேருக்கு சிறந்த பெயரை அவர்களது பெற்றோர்கள் வைக்க வில்லையா ? என்ற  சந்தேகமே நமக்கு வருகிறது .

பெயரியல் நிபுணர்கள் நமது தமிழ் நாட்டில் தெருவுக்கு ஒருவர் இருப்பார்கள் போல ? தொலை காட்சியில்  இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது  தலை சுத்தி சுத்தி வருகிறது நமக்கு .

 உங்களின் பெயரை மாற்றி அமைத்து விட்டால் வாழ்க்கையில் அடையும் முன்னேற்றத்திற்கு அளவே இல்லை , அனைத்தும் கிடைக்கும் எனவே இப்பொழுது இருக்கும் முனுசாமி என்ற பெயரை,  இன்று முதல் மூணுசாமி என்று மாற்றி அமைத்து விட்டேன் இனிமேல் எவ்வித கவலையும் உங்களுக்கு வராது , என்னால் அனைத்தும் நல்லதே நடக்கும் என்கிற அளவுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.   

( ஒரு மனுஷன இப்படிஎல்லாம கொடுமை படுத்துவது ! எவ்வளவு டீப்பா இரங்கி  யோசிக்கிறாங்க )

எண்கணித நிபுணர்களுக்கு மிக பெரிய சக்தியை இந்த ஆண்டவன் கொடுத்திருப்பாரோ , ஒருவேளை நன்கு கைகள் , நான்கு கால்கள் , நான்கு கண்கள் , இரண்டு மூளை என சிறப்பான படைப்பாகவே இவர்கள் இருக்க வேண்டும்!? இல்லை என்றால் இரண்டு கைகள் , இரண்டுகால்கள், ஒரு மூளை , இரண்டு கண்கள் கொண்டவர்கள் ஏன் அவர்களிடம் செல்ல வேண்டும்.?  

இவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் அவர்கள் மனதில் என்ன தோன்றியாதோ அதை சொல்லி சப்பை கட்டு கட்டுவதாகவே உள்ளது ! ஒரு பெயரில் சிறுமாற்றம் செய்தால் அவருக்கு அனைத்து நலன்களும் வந்து விடுமா ? என்ன ? .

இவர்கள் அனைவரும் மனதில் ஒன்றை கருத்தில் கொள்வது நன்மை தரும் , சட்டியில் இல்லாமல் , அகப்பையில் வருவதற்கு வாய்ப்பில்லை . மேலும் எவ்வித முயர்ச்சியும் செய்யாமல் எதுவும் மாறிவிட வாய்ப்பு இல்லை , தன்னுள் இருக்கும் தனி தன்மையை உணர்ந்து , அந்தவளியில் வாழ்க்கையினை  மேம்படுத்தி கொள்வது சால சிறந்தது , நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா என்பதை இனியாவது உணர்வார்களா ? மக்கள் .


நீங்கள் எந்தமாதிரியான பெயரை வைத்தாலும் உங்களின் சுய ஜாதக கர்ம வினை பதிவின் படியே, நன்மை தீமை பலன் நடக்கும் என்பது சரியான கருத்து . நாமத்தின் பெயரால் பலபேருக்கு இந்த எண்கணித நிபுணர்கள் பட்டை நாமம் சாற்றி கொண்டு இருப்பது பலபேருக்கு தெரிவதில்லை புதுசு புதுசா எதையாவது சொல்லி மக்களை மண்டை காய வைப்பதே இவர்களுக்கு ஒரு வேலையாகிவிட்டது .
  
 கர்ம வினை பதிவின் படியே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நடை பெறுகிறது , எனும்பொழுது மாற்றம் என்பதனை பெறுவதற்கு தனது கரு மையம் எப்பொழுது சுத்தம் பெறுகிறதோ அப்பொழுதே மாற்றம் நடக்க முடியும், இதற்க்கான வாய்ப்பை இறை நிலை அனைவருக்கும் வழங்கி உள்ளது இதில் விழிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு சுயமாகவே 
வழிகாட்டும் என்பது உண்மை . 

இதில் விழிப்பு நிலை அற்றவர்களுக்கு , சற்றே கடுமையான முயற்ச்சியை, நல்ல குரு முகமாக நின்று கற்றுகொண்டு நன்மை பெற முடியும் , என்பதனை உணர்வது அவசியம் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
 

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து , கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனது உறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனது வாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம் அடைந்து தானும் நன்றாக  வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும் நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வு செய்வோம் !

 6  ம்  வீடு

முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ அமைந்து, ஆறாம் பாவகம்  100  சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம் மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில் எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோ ஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .

மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல் அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவு அவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில் அமைய நிச்சயம் இந்த 6  ம்  வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் .

  8  ம் வீடு

இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல் அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கே அமையும் சிறப்பான வசதிகளும்.

 பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகன வசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும் தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில்,  ஜாதகத்தில் 8  ம் வீடு சர ராசியாகவோ , ஸ்திர ராசியாகவோ இருந்து 100  சதவிகிதம் நன்றாக 
அமைந்து .

  8  ம் வீடு மண் தத்துவம் அல்லது நீர் தத்துவம் அமைப்பை பெற்று இருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு , நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த 8  ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .

 12  ம் வீடு

முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில் அமர்ந்து , அனைத்து வசதிகளையும்,  அனுபவிக்கும் யோகத்தை பெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனது சந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடி உரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .

 வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பான பயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு நிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய் நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை , நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால் ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை  ஆபரண சேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம் அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12  ம் பாவகமே , அதற்க்கு இந்த 12  ம் வீடு  சர அல்லது  ஸ்திர ராசியாக வந்து , மண் அல்லது நீர் தத்துவத்தை பெற்று 100  சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .

மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாக இருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6  8  12  வீடுகளின் பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகல யோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல் நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

 ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

      

Friday, April 27, 2012

போவோம காசி ராமேஸ்வரம் ?கடந்த வாரத்தில் எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு நண்பர் வந்திருந்தார் அவருடைய தோற்றமும் பேச்சும் , பார்க்கும் பொழுது வாழ்க்கையில் ரொம்ப பாதிக்க பட்டது போல் இருந்தது , வந்தவர் அய்யா எனது நண்பர் தங்களிடம் ஜோதிட  ஆலோசனை பெற கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வந்திருந்தார்.

 அவர் பெயர் மூர்த்தி (தலை நகருக்கு சென்று  கிரகங்களை அக்டிவேசன் செய்து தன்னிடம் இருந்த இரண்டு லாரிகளையும் டீ அக்டிவேசன் செய்தவர் )   மற்றும்  எனது நெருங்கிய நண்பர் தங்களின் ஆலோசனையின் படி தற்பொழுது செய்துவரும் தொழில் படிப்படியான முன்னேற்றத்தை பெற்று வருகிறார் , நானும் அவர் செய்யும் தொழிலை வேறு இடத்தில் செய்து வருகின்றேன்.

 கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு  ஜோதிடர் என்னை குடும்பத்துடன் காசி ராமேஸ்வரம் சென்று வாருங்கள் , உங்கள் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இரண்டும் கெட்டுவிட்டது என்று சொன்னதை கேட்டு நம்பி !  குடும்பத்துடன் காசி சென்று வந்தோம் வந்ததிலிருந்து,  எனது தொழில் நீட்டி நெடுங்கடையாக படுத்து விட்டது , மேலும் அவர் பேச்சை கேட்டு கோமேதகமும் , வைடுரியமும் வலது இடது கையில் போட்டு இருக்கிறேன் . குடும்பத்தில்  நிம்மதிஎன்பதே இல்லை எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் என்று கேட்டார் .


சரி தொழில் எப்படி பாதிக்க பட்டது என்றேன் , காசி ராமேஸ்வரம் சென்றிருந்த போது இவர் நம்பிக்கையாக தனது நிறுவனத்தை நிர்வாகிக்க விட்டுருந்த மேலாளரும் , அவரது நண்பரும்  சேர்ந்து அவரது நிறுவனத்திற்கு வந்த வாய்ப்புக்ளை எல்லாம் வசப்படுத்தி , இவரது நிறுவனத்திற்கு பக்கத்திலேயே  ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து நன்றாக பயன்   படுத்திகொண்டு முன்னேற்றம் பெற வழி வகுத்துகொண்டனர் என்றார் , மேலும் இவர் வந்தவுடன் அந்த மேலாளர் சில காரணங்களை சொல்லி வேலையை விட்டு விலகி விட்டார் என்றும்  வருத்தத்துடன் கூறினார் .


பிறகு  அவரது ஜாதகத்தை வாங்கி கணிதம் செய்த பொழுது ஜோதிடர் சொன்னது போல் சூரியனும் , சந்திரனும் எவ்வித பாதிப்பான பலனையும் தரவில்லை , மேலும் ஜாதகருக்கு வயது 28 இந்த வயதில் ஜாதகர் தொழிலை கவனிக்காமல்  காசி ராமேஸ்வரம் என்று போனால் தொழில் நீட்டி நெடுங்கடையாக படுக்காமல் , 100  சதவிகித வளர்ச்சியினையா  பெரும் ?

யாராவது திண்ணையில் உட்கந்துகொண்டு பொழுதை போக்க எதையாவது உளறினால், அதை அப்படியே நம்பிக்கொண்டு செய்தால் விளைவு இதுதான் .

 திண்ணையில் உட்காந்து கொண்டு சொல்கிறவனுக்கு உன்னை பற்றி என்ன கவலை , அவனுக்கு வருவது வந்தால் போதும் என்று அவன் சொல்லுவதை சொல்லத்தான் செய்வான்,  உனக்கு எங்கு போயிற்று புத்தி என்று கேட்டதற்கு ஜாதகர் தலையை கவிழ்ந்து கொண்டார் , பிறகு ஜோதிட ரீதியான சரியான பலன்களை சொல்லி தொழில் வளர்ச்சி பெற, செய்ய வேண்டியவைகளையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் .

எனக்கு தெரிந்து காசி ராமேஸ்வரம் எல்லாம் வாழ்க்கையின் இறுதி காலங்களில்  வாழ்ந்து முடித்தவர்கள் செல்ல கூடிய இடங்கள், செய்த பாவங்களையும் வினைகளையும் தீர்த்து கொண்டு இறை நிலையை அடைய செல்வார்கள் என்பது  ஐதிகம் , ஆனால் இந்த தம்பிக்கு வயது 28 இவன் என்ன வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பான் என்று இதை சொன்ன அந்த  ஜோதிடனுக்கே  வெளிச்சம் .

மேலும் ரத்தினங்களில் கோமேதகமும் , வைடுரியமும் மனிதர்கள் அணிந்துகொள்ள  ஏற்றது இல்லை என்பதை கூடவா அந்த ஜோதிடனுக்கு தெரியாது , இதை கோவில்களுக்கு  தானம் செய்வதே சிறந்தது என்று  இரத்தின சாஸ்திரம் சொல்வதை அந்த  ஜோதிடன் ஒருவேளை படிக்க வில்லை போலும் .

 கோமேதகம் அணிவதால் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டும் , வைடுரியம் அணிதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியாது . சரி எப்படியோ போகட்டும் நமக்கு என்ன ? அவன் செய்யும் கர்ம வினை அவனே அனுபவிக்க வேண்டும்.

வயதுக்கு ஏற்றார்  போல் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு கடமை உண்டு சிறுவயதில் நன்றாக படிப்பது , வாலிபத்தில் நல்ல வேலை வாய்ப்பை செய்து வருமானம் செய்து தனது குடும்பத்தையும் , பெற்றோர்களையும் காப்பாற்றுவது .

 நல்ல குழந்தைகளை பெற்று நல்ல விதமாக வளர்ப்பது , தம்மை நாடி வரும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ,தம்மால் இயன்ற உதவியை செய்வது .  

தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து அதன் வளர்ச்சிக்காக பாடு படுவது இவையே ஆயிரம் கோவில் சென்று வழிபாடு செய்வதற்கு சமம் கடமையே கடவுள் . தனது கடமைகளில் இருந்து தவருபவனுக்கு எந்த கடவுளும் கருணை தந்தாக சான்று இல்லை.


காசி வழிபாட்டின் தத்துவம் :

காசி தீர்த்தம் என்பது நெருப்பு தத்துவம் ஆகும் . நெருப்பு மட்டும் தானும் புனிதமாகவும் தன்னிடம் சேரும் அனைத்தையும் சுத்தம் செய்து புனிதமாக்கும்  தன்மை கொண்டது , மற்ற நதிகள் அனைத்தும் நீரின் தன்மை கொண்டவை மலை நீரையும்  , ஊற்று நீரையும் அடிப்படையாக கொண்டவை .

 கங்கை மட்டும் பனிமலையில் உருவாகி வரும் தன்மையால் நெருப்பு
 ( ஐஸ் கட்டியை கையில் வைத்து பாருங்கள் கைகளை சுடும் )தத்துவம் கொண்டது .

 எனவே இதில் குளிப்பவர்கள் புனித தன்மையை பெறுகிறார்கள் , மேலும் அவர்கள் வினை பதிவை செய்யாமல் இறுதியில் இறை நிலையை பெறுகிறார்கள்,  அதற்க்கு ஏற்ற வயது  ஒவ்வொருவரின் இறுதி காலங்களே. 

சிறுவயதில் காசி சென்று வந்தால் மீண்டும் வினை பதிவினை தொடரும் சூழ்நிலை ஏற்ப்படும் .

காசி சென்று வழிபாடு செய்தால் கிடைக்கும் பலனை நாம் தமிழகத்தில் உள்ள ஒரு சிறப்பு மிகுந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நிச்சயம் பெற முடியும் , 

அந்த திருத்தலம் திருவெண்காடு இங்கு சென்று அக்கினி , சூரிய  , சந்திர தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசனம் செய்தால் , காசிக்கு சென்று வந்த பலன் நிச்சயம் கிடைக்கும் , கையில் வெண்ணையை வைத்துகொண்டு நாம் ஏன் நெய்க்கு அலைய வேண்டும்.

தமிழகத்தில் இல்லாத திருத்தளங்களா என்ன ? நாங்கள் இருக்கு பவானியில் உலகின் மிக சிறந்த  திருத்தலங்களில்  ஒன்றான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது இதன் அருமை , இங்கு வந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்  .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 .

செவ்வாய் தோஷமும்! ஆராய்ச்சி கூடமும் !

வணக்கம்,


பொதுவாக செவ்வாய் லக்னாத் 2,4,7,8,12ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்றும் அது போதுவிதி என்றும் அதற்கு சில விதிவிலக்குகளையும் அளித்துள்ளனர்.அதில் சில சந்தேகம் உள்ளது.அவை,
 
கேள்வி : 

1.கடகம் லக்னமாக இருந்து செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
என்கிறார்கள்.காரணம் செவ்வாய் நெருப்பு கிரகம்.கடக அதிபதி சந்திரன் நீர்
கிரகம் .எனவே நெருப்பு நீரில் பலம் இழந்துவிடுகிறது.எனவே செவ்வாய்
தோஷமற்றதாகிவிடுகிறது என்கிறார்கள்.இது சரியா?
 
பதில் :

ஒரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொண்டே இருங்கள் இறுதியில் என்னவாகும், தொடர்ந்து எரியும் நெருப்பின் வெப்பம் தாளாமல் பாத்திரத்தில் இருக்கும் நீர் ஆவி ஆகிவிடும் , இந்த இடத்தில் நெருப்புக்கு அதிக சக்தியா? , நீருக்கு அதிக சக்தியா ?  


என்ன அதிர்ச்சி அடைந்து விட்டீர்களா நண்பரே, நான் இப்பொழுது சொன்ன கதை போல் , நீங்கள் கேட்ட கேள்வியிலும் ஒரு கதையை சொல்லி மக்களை மூட நம்பிக்கையில் தள்ளுவது சில ஜோதிடர்களின் பிழைப்பு அதைபற்றி நமக்கு என்ன கவலை , உண்மை என்ன என்பதை பற்றி இனி நாம் பார்ப்போம் :

கால புருஷ தத்துவத்தில் மேஷம் முதல் வீடாக வந்து அதற்க்கு அதிபதி செவ்வாய் ஆகிறார் , அந்த வீடு நெருப்பு தத்துவத்தில் செயல்படுகிறது சர ராசியாக வருகிறது , அடுத்து  கால புருஷ தத்துவத்தில் எட்டாம் வீடு விருச்சகம்,  இது  செவ்வாய்க்கு உண்டான மற்றொரு வீடு, இந்த அமைப்பு ஸ்திர அமைப்பு நீர் ராசியாக அமைகிறது . 
இதன் செயல் பாடுகள் என்ன ?

  இயற்கையில் நவகிரகங்களுக்கு ஒரு தன்மை உண்டு அதாவது எந்த காரணத்தை கொண்டும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் நன்மையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் நன்மை மட்டுமே செய்யும்.

இதுவே மாறி லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் தீமையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் தீமையை மட்டுமே செய்யும். இதுவே கிரகங்களின் வலிமை .  

செவ்வாய் பகவானும்  2,4,7,8,12ல் இருந்தாலும் அல்லது லக்கினத்திற்கு எந்த வீடுகளில் இருந்தாலும் நன்மையோ தீமையோ சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு அந்தந்த வீடுகளுக்கு உண்டான பலனை மட்டுமே செய்யும் .

அப்படி பார்க்கும் பொழுது கடக லக்கினமாக வந்து செவ்வாய் பகவன் சிம்மம் , துலாம் , மகரம் , கும்பம் , மேஷம் , மிதுனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் பாரம்பரிய முறையில்  செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடும் , இதில் நமது ஜோதிட கணித முறைப்படி , தேய்பிறை சந்திரனாக வந்து கடக இலக்கின ஜாதகருக்கு  செவ்வாய் , மகரத்தில் அமர்வது மிக சிறந்த நன்மைகளை தரும் , தனது வீட்டுக்கு 10 மற்றும் 6 வீடுகளுக்கு 100  சதவிகித நன்மையே  செய்யும் . 

வளர் பிறை சந்திரனாக வந்து கடக இலக்கின ஜாதகருக்கு  செவ்வாய் , மகரத்தில் ( 7  ல் ) அமர்வது லக்கினத்திற்கு மட்டும் தீமையை தரும் , தனது வீட்டுக்கு 10 மற்றும் 6 வீடுகளுக்கு 100  சதவிகித நன்மையே  செய்யும் . 

இந்த வகையில் செவ்வாய் 100  சதவிகித  நன்மையையும் .

கடக லக்கினத்திற்கு 10  ல் செவ்வாய் அமருவது ஜீவன ( 10 வீடு  ), மற்றும் ரண ருண  ( 6 வீடு  ), வழியில் 100  சதவிகித  தீமையான பலன்களையே தரும் மேலும் தேய்பிறை சந்திரனாக இருப்பின் லக்கினத்திற்கு மட்டும் நன்மை செய்யும் , வளர் பிறை சந்திரனாக இருப்பின் லக்கினத்திற்கும் 100  சதவீதம் தீமையை மட்டும் செய்யும்.

இந்த வகையில் செவ்வாய் 100  சதவிகித தீமையும்   செய்யும் பொழுது எப்படி கடக இலக்கின ஜாதகருக்கு செவ்வாய் எங்கு அமர்ந்தாலும் நன்மை செய்யும் என்று எடுத்து கொள்வது 

மேலும் துலாத்தில் 4  ல்  அமரும் செவ்வாய் ஜீவன ( 10 வீடு  ), வழியில் நன்மையையும்  ரண ருண  ( 6 வீடு  ), வழியில் தீமையும் , இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .

சிம்மத்தில்  2  ல் அமரும் செவ்வாய்  ஜீவன ( 10 வீடு  ), வழியில் தீமையும்   ரண ருண  ( 6 வீடு  ), வழியில் நன்மையையும், இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .
   
  மிதுனத்தில் 12  ல் அமரும் செவ்வாய் ஜீவன ( 10 வீடு  ), வழியில் நன்மையையும்  ரண ருண  ( 6 வீடு  ), வழியில் தீமையும், இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .

இதில் செவ்வாய் எந்த வகையில் தீமை செய்யாது என்று நிர்ணயம் செய்வது .

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் சுய ஜாதக அமைப்பை வைத்தே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் .

2,4,7,8,12ல் இருந்தால் செவ்வாய் தோஷம்  என்று சொல்வதே தவறு , செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து , ஜோதிடர்கள் தனது பிழைப்புக்காக இடையில் புகுத்தியதே இந்த செவ்வாய் தோஷம் .

நவகிரகம் அனைத்தும் ஜீவன் ( உயிர் ) போன்றது , சுய ஜாதகத்தில் உள்ள 12  வீடுகளும் உடல் போன்றது , நாம் செய்யும் கர்மவினைக்கு ஏற்றார் போல்  இந்த 12  வீடுகளையும் வலிமை , வலிமை அற்ற தன்மை என்ற இரு  நிலைகளில் நவகிரகங்கள் ஆளுமை செய்கின்றது , எனவே ஒரு கிரகத்தை மட்டும் வைத்துகொண்டு தோஷம் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை .

 செவ்வாய் கடகம் என்ற ஒரு லக்கினத்திர்க்கே பலவித பலனை அமரும் தன்மைக்கு ஏற்ப செய்கிறது , எனும் பொழுது மற்ற லக்கினத்திற்கும் ,  அமரும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலனையே வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 சரி எனில் அந்த ஜாதகத்தில் செவ்வாயின் அனைத்து காரகங்களும் பலமற்றதாக அல்லவா ஆகிவிடும்.எனவே அந்த ஜாதகருக்கு செவ்வாயால் அனுகூலமற்ற தன்மை அல்லவா ஏற்படும்?இதை விளக்கவும்.
 
பதில் : 

இல்லவே இல்லை சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு அந்தந்த பாவகத்துக்கு உண்டான பலனை நிச்சயம் செய்யும் இதில் பாகுபாடு என்பதே இல்லை , ஏனெனில் நவகிரகங்கள் தனது கடமைகளில் இருந்து  ஒருபோதும் தவறுவது இல்லை , மனிதர்கள் வேண்டுமானால் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம் .

 


கேள்வி :
 

2.சிம்ம லக்ன காரர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை
என்கிறார்கள்.காரணம் சிம்மம் செவ்வாயின் நட்பு வீடு என்கிறார்கள்.இது
எந்த வகையில் சரியாகும்?
 

 பதில் : 

சிம்ம இலக்கின ஜாதகருக்கு செவ்வாய் 9  வீடு 4  வீடு என்ற அமைப்பில் இரு வீடுகளுக்கு  அதிபதியாக வருவார் இந்த வகையில் விருச்சகம் , தனுசு ராசியில் செவ்வாய் அமர்ந்தால் சிம்மலக்கினத்திற்கு 100  சதவிகிதம் தீமையை மட்டுமே செய்வார் , இந்த அமைப்பை சேர்ந்த ஜாதகரை கேட்டால் தெரியும் அவர் படும் பாடு .

 இந்தவைகை அமைப்புள்ள  ஜாதகருக்கு  பாதிக்கும் காரகம் நான்கா பவம் , பூர்வ புண்ணியம் வழியில் இருந்து அதிக தீமையான பலனை மட்டுமே அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் , நடக்கும் திசைகளில் இந்த வீடுகளின் பலன் நடந்தால், சற்றே ஆய்வுக்கு எடுத்துகொண்டு பாருங்கள் நண்பரே !   

இந்த இரு ராசிகளை ( விருச்சகம் , தனுசு ) தவிர மற்ற ராசிகளில் செவ்வாய்  அமரும் பொழுது சிம்ம லக்கினத்திற்கு  தனது வீடுகளுக்கு,  ஒன்றுக்கோ அல்லது இரண்டிற்குமோ நன்மையை செய்யும் என்பதாலோ இந்த காரணம் சொல்ல பட்டு இருக்கலாம் ?

இந்த விதி சரி எனில் எந்த கிரகமும் தன் நட்பு வீட்டில் இருந்தால் அது
தோஷத்தை ஏற்படுத்தாதா?ஒருவருக்கு 5ல் ராகு அமர்ந்தால் தோஷம்.அதுவே அந்த 5ம் இடம் ராகுவின் நட்பு வீடாக இருந்தால் தோஷம் இல்லை என கூறலாமா?


பதில் : 

 இயற்கையில் நவகிரகங்களுக்கு ஒரு தன்மை உண்டு அதாவது எந்த காரணத்தை கொண்டும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் நன்மையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் நன்மை மட்டுமே செய்யும்.

இதுவே மாறி லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் தீமையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் தீமையை மட்டுமே செய்யும். இதுவே கிரகங்களின் வலிமை . 


கேள்வி :

3.செவ்வாய் தனது உச்ச,ஆட்சி ,நீச வீடுகளில் இருந்தால் தோஷமில்லை
என்கிறார்கள்.இது முரண்பாடாக இல்லையா?
ஒரு கிரகம் தன் வீட்டிலோ,உச்ச வீட்டிலோ இருக்கும்போது அது பலம் அதிகமாக உள்ளதாக அல்லவா இருக்கும்.
எனவே செவ்வாய் அதிக தோஷம்தானே ஏற்படுத்துவார்?நீச வீட்டில் செவ்வாய் பலம் குன்றிவிடும்.சோ செவ்வாயின் காரகம் குன்றிவிடும்தானே?


பதில் : 

செவ்வாய் எங்கு இருப்பினும் அது எந்த இலக்கணம் ஆனாலும் , தனது பாவத்திற்கும் அமரும் வீடுகளுக்கும் , எவ்வித பலனை தர வேண்டுமோ அதை சரியாக செய்யும் இதில் நிச்சயம் விதி விளக்கு என்பதே இல்லை , இது செவ்வாய்க்கு மட்டும் அல்ல அனைத்து கிரகங்களுக்கும்  பொருந்தும் .
கேள்வி :

4.குரு,சந்திரன்,புதன் இவர்களுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை
என்கின்றனர்.அதேபோல சூரியன்,சனி,ராகு,கேது இவற்றுடன் சேர்ந்தாலும்
பார்த்தாலும் தோஷமில்லை என்கின்றனர்.இது முரண்பாடாக இல்லையா?
சுபகிரகத்துடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை என்றால்
ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அசுப கிரகத்துடன் சேர்ந்தாலும் பார்த்தாலும்
தோஷமில்லை என்பது லாஜிக்காக இல்லையே!இது பற்றிய தங்கள் கருத்து?
 


 பதில் :

ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் , " ஒருவன்  " செல்போனில் பேட்டரி போட்டாலும் பேசலாம் போடாவிட்டாலும் பேசலாம் என்பதை போல்,

ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒரு ஜோதிடன் சொல்லும் ஜோதிட பொன்மொழிகள் இது,  இதை தஞ்சாவூர் கல்வெட்டில் பதித்து வைத்துகொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விடவேண்டும் , அவர்களுக்கு பிறகு வரும் பரம்பரை ஜோதிடர்கள் இதை பார்த்து  அதன் படி நடந்துகொள்வார்கள் .
 
இதைதான் ஜோதிடத்தில் வாய் ஜாலம் என்று சொல்வார்கள் , எதிரில் அமர்ந்து ஜோதிட பலன் கேட்பவர் என்ன  வானவியலில் ஆராய்ச்சி செய்துவிட்ட வந்திருக்க போகிறார், என்ற ரீதியில் வரும் பதில் இது கிரகங்களின் தன்மையும் சுய ஜாதகத்தில் அமரும் நிலையம் அதன் வலிமையையும் பற்றி தெரியவில்லை என்றாலும் இந்த நிலையே ஜோதிடர்களுக்கு ஏற்ப்படும் , அதாவது காக்காய் சிட்டிங் , பனங்காய் பாலிங் .


மேலும் கிரகங்கள் பற்றிய பொதுவான கருத்துக்களை மக்களிடம் சொல்லிவிட்டு வருமானத்தை மட்டுமே குறியாக இருப்பவர்களிடம் இருந்து வரும் பதில் இது , ஜோதிடம் கேட்க வந்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற எண்ணமமும் இதற்க்கு காரணம்,  தோஷம் என்று சொல்வதே தவறு என்று நினைப்பவன்,  சுய ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை பொருத்தும் வீடுகளின் வலிமையை பொருத்தும் ஜாதகரின் வாழ்க்கை அமையும் என்பதே உண்மை. 

நாம் கோவில் வழிபாடும் , இரத்தின ஆகர்ஷ்ணமும் செய்துகொள்வது கிரகங்களின் வலிமையை, வீடுகளின் வலிமையை உயிர்கலப்பு பெறுவதற்கே . என்ற உண்மையை உணர்வது அவசியம் .

 

5.செவ்வாய் தோஷம் என்றால் அந்த ஜாதகருக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படும்? பதில் :
என்ன பிரச்சனை வந்தாலும் அதற்க்கு தீர்வுன்று ஒன்று நிச்சயம் இருக்கும் , அதை பெறுவதற்கு அறிவு என்ற ஒரு மிகப்பெரிய சக்தியை நம் அனைவருக்கும் இறைவன் கொடுத்து இருக்கிறார், நமக்கு தேவை அறிவு வழி தேடுதல் மட்டுமே , தேடுதல் இருப்பின் நிச்சயம் வழி கிடைக்கும் .

கேள்வி :

6.ரத்த வகைக்கும் செவ்வாய்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்களே,அதாவது
செவ்வாய் தோஷம் உள்ளவர்,தோஷம் அற்றவர்,பரிகார செவ்வாய் என்ற அமைப்பில் 3விதமாக ரத்தவகை வேறுபடும் என்கிறார்களே.இது பற்றிய தங்கள் கருத்து?

பதில் :

எந்த ஆராய்ச்சி கூடத்தில் இது நிருபிக்க பட்டு இருக்கிறது என்று எங்களுக்கு இதுவரை தகவல் இல்லை நண்பரே! அப்படி ஏதாவது ஒரு இடத்தில் நிருபிக்க பட்டு இருப்பின் தயவு செய்து அதன் முகவரியை எங்களுக்கு தாருங்கள் நாங்களும் அதை பற்றி தெரிந்து கொண்டு பலன் பெறுவோம்.

இது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது நண்பரே ! 

செவ்வாய் பகவான் மட்டும் இங்கு இருந்தால், கைபுள்ள கணக்காக 
( டேய் ! கட்ட துறைக்கு (ஜோதிடர்கள் ) கட்டம் சரியில்ல  நம்ம கூட விளையாடறதே வேலையா போச்சு கிளம்புங்கட அவர்களை ஒரு கை பாக்கலாம் ) என்று கிளம்பியிருப்பார் . இதுவும் ஜோதிடத்தில் ஒரு மூட நம்பிக்கை .


கேள்வி :

7.வக்ர செவ்வாய்க்கு செவ்வாய் தோஷத்தில் பங்கு இல்லையா?

பதில் :

ஜாதகத்தில் அமரும் இடத்திற்கு ஏற்ப வீடுகளுக்கு உண்டான பலனை மட்டும்  தரும், எடுத்துகாட்டாக நீர் ராசியில் அமர்ந்து வக்கிரகம் பெற்று , அந்த வீடு பாதிக்க பட்டு இருக்குமாயின், மன ரீதியான போராட்டங்களை அதிகம் தரும் , மண் தத்துவ ராசியில் அமர்ந்து, அந்த வீடு பாதிக்க பட்டு இருப்பின் உடல் நிலையில் பாதிப்பை தரும் . இதை தவிர மற்ற ராசிகளில் மற்ற வீடுகளில் அமருமாயின் பாதிப்பான பலனை தருவதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை .


கேள்வி :

8.மேலும் செவ்வாய் தோஷம் பற்றி தாங்கள் கூற நினைக்கும் கருத்துக்களை வழங்கவும்.
நன்றி


எங்களை கேட்டால் :

செவ்வாயும் மற்ற கிரகங்கள்  போல்  ஒன்றே , நமது கர்ம  வினை பதிவிற்கு ஏற்றவாறு நன்மையோ தீமையோ பலனை தரும் தன்மை கொண்டது என்றும் , தனியாக செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லை என்றும் சரியான பதில் வரும் .


மற்ற ஜோதிடரை கேட்டால் :

செவ்வாய் தோஷம் நிச்சயம் உண்டு , இதில் பல்வேறு  வகை உள்ளது , தங்களுக்கு தெரியாத  செவ்வாய் ஒன்றும் இல்லை ,   இதில் எது  சிறந்த செவ்வாயோ அதை தேர்ந்தெடுத்து நல்ல செவ்வாயை கொடுக்க வேண்டும் மை லார்ட் !  என்று ஜாதகத்தை வாங்கும் பொழுதே  கடவுளிடம் வேண்டிகொல்வார்கள் .

பிறகு அதற்க்கு பரிகாரமாக செவ்வாய் கிரகத்துக்கு சென்று வழிபாடு செய்து ,  நன்மை பெற வேண்டும் என்று சொன்னால்,  கூட ஆச்சரிய படுவதிற்கில்லை.  

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

Thursday, April 26, 2012

7 ல் சுக்கிரன் இருந்தால் திருமணம் நடக்காத ?சுய ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து  7  ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகருக்கு திருமணம் மிகவும் தாமதமாக நடக்கும், அல்லது திருமணமே நடக்காது என்றும் இல்லற வாழ்க்கைக்கு உகந்த ஜாதகம்  இல்லை என்று  ஜோதிடர்கள் சொல்லும் கருத்தால்  எனது ஜாதகத்தை, பெண் வீட்டார் அனைவரும் பெண் தர மறுக்கின்றனர் , அல்லது ஜாதகத்தை தவிர்த்து விடுகின்றனர்.

 எனவே எனக்கு திருமணம் நடக்குமா அல்லது நடக்காத,  இல்லை நான்  காவிகட்டி  சன்யாசி ஆகி விடட்டுமா,  எனக்கு  நல்ல வழி ஒன்றை சொல்லுங்க என்று  ஒரு அன்பர் தனது ஜாதகத்தை எடுத்துகொண்டு எம்மை காண வந்தார், ஜாதகருக்கு நாங்கள் கொடுத்த தீர்வு கீழ்கண்டவாறு :அவரது ஜாதக அமைப்பில் , லக்கனத்தில் இருந்து சுக்கிரன் களத்திர பாவத்தில் அமர்ந்ததால் திருமண தடையும் , கால தாமதமும் ஏற்ப்படவில்லை , குடும்ப ஸ்தானம் எனும் 2  ம் வீடும் , களத்திரம் 
எனும் 7  ம் வீடும் பாதிக்க பட்டதே காரணம் , மேலும் 7  ல் அமர்ந்த சுக்கிரனால் தான் களத்திர பாவம் சற்றே  ( 40  சதவிகிதம் )   வலுவாக இருந்தது .

 களத்திர ஸ்தான அதிபதியான சூரியனும் , குடும்ப ஸ்தான அதிபதியான புதனும் வெகுவாக தனது வீடுகளுக்கு நன்மையை தர இயலாத  அமைப்பில் இருந்த காரணத்தினாலே, ஜாதகருக்கு திருமண தடையும் , கால தாமதமும் ஏற்ப்பட்டு கொண்டு இருந்தது . 

 இதற்க்கு உண்டான சரியான வழி முறைகளை கடை பிடிக்க சொன்ன பிறகு ஜாதகருக்கு இறை அருளின் கருணையினால் விரைவில் திருமணம் நடை பெற்று நலம் பெற்றார் .

பொதுவாக ஒரு  ஸ்தான அதிபதி சம்பந்தபட்ட ஸ்தானத்தில் அமர்ந்தால் பாவ நாஸ்தி என்ற முறையில் பாரம்பரிய முறையில் பலன் சொல்வது முற்றிலும் தவறான முறை இதில் பல விதி விளக்குகள் உள்ளன .

ஒரு பாவகத்தை பற்றி பலம் நிர்ணயம் செய்யும் பொழுது நன்கு கவனமுடன் ஆராய்ந்து நிர்ணயம் செய்வது ஜாதகருக்கும் , ஜோதிடனுக்கும் நன்மை தரும்,  பொது விதிகளின் படி கணிதம் செய்து பலன் சொல்லுவது  இது போல் தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம்.  

மிதுனம் , கன்னி , தனுசு , மீன லக்கினத்திற்கு களத்திர பாவத்தில் அமரும் சுக்கிரனால் நன்மையே 100  சதவிகிதம் நடை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் களத்திர பாவத்தில் சுக்கிரன் அமர்ந்தாலும் களத்திர பாவகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகருக்கு நிச்சயம் திருமண வாழ்க்கை இளம் வயதில் சரியான நேரத்தில் , நல்ல முறையில் வசதி வாய்ப்புகளுடன்  நல்ல மனைவியாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

பொது பலன் , பொது விதி என்றுமே சுய ஜாதகத்தை கட்டுபடுத்தாது என்பதை நாம் கவனத்தில் கொள்வது மிகுந்த நன்மை தரும் .

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் க
9443355696

உள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே
வணக்கம்,
(எவ்வளவு கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இன்றி உங்களின்
தெளிவான விளக்கத்தை அளிக்கிறீர்கள்.இதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.இது
ஐஸ் அல்ல நிஜமான வார்த்தை.மேலும் தங்களின் பதில் மற்ற ஜோதிடரை காட்டிலும்
வித்யாசமாக உள்ளது.நான் 4 ஜோதிட ப்ளாக்குகளை கவனிக்கிறேன்.
 

1.சுப்பையா அவர்களின் வகுப்பரை என்ற ப்ளாக்.அவர் தொழில்முறை ஜோதிடர் அல்ல
எனவே ,எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள் என்று கேட்டால்,எப்படிப்பட்ட
மனைவி கிடைத்தாலும் அதை சந்தோஷமாக அனுபவி என்று கூறுவது அவர் பாணி.ரொம்ப
அலட்டிக்கொண்டு விதிகளை ஆராயமாட்டார்.இருந்தாலும் அதில் பல தகவல்கள்
கிடைக்கின்றன.மேலும் அஷ்டவர்கத்தை அடிப்படையாக வைத்து பலன் சொல்வது அவர்
பாணி.

பதில் : 

ஜோதிடத்தை பற்றிய கணித அறிவு இருப்பின் , பதில் சொல்ல இயலும் , அலட்டிக்கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்வது , அவருக்கு ஜோதிட கலையின் உண்மை புரியவில்லை என்றே அர்த்தம் , நன்றாக கதைமட்டும் சொல்ல தெரிந்தவர் போல் இருக்கிறது .

அடுத்து...

அனுபவ ஜோதிடம்.காம் எழுதும் திரு சித்தூர் முருகேசன்.
இவர் உங்களைப்போல ஜோதிடத்தை மாறுபட்ட கோணத்தில் அலசுபவர்.ஆனால் சில
நேரங்களில் அவரது எழுத்து நடை புரியாது.


பதில் : 

யாருக்கும் புரியவில்லை என்றால் ஒருவேளை அவர் இந்தியாவில் இல்லாத மொழியில் எழுதுகிறாரோ ?
 


அடுத்து...

நல்லநேரம் திரு சதீஷ்குமார்.
இவர் வழிவழியாக ஜோதிடம் பார்ப்பவர் என நினைக்கிறேன்.பாரம்பரிய ஜோதிட
விதிகளின் படியே பலன் கூறுவார்.


பதில் : 

பரம்பரை, பரம்பரையாக வருவதற்கு ஜோதிடம் என்ன குடும்ப சொத்த நண்பரே ?

அடுத்து உங்கள் ப்ளாக்.நீங்கள் எழுதும் பதிவுகள் மாறுபட்ட கண்ணோட்டத்தில்
உள்ளதால் அனைவராலும் விரும்பப்படும் என்பதே உண்மை.நன்றி)
 
இதற்க்கு காரணம் நிச்சயம் இறை அருளின் கருணையே !
 
நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றி
ஜோதிட கலை என்பது இறை அருளின் கருணையினால், எனது குரு அருள் வேல் அய்யா அவர்களாலும் , பரஞ்சோதி மகான்  அருளாசியினாலும், இல்லத்தரசி கார்த்திகா ஸ்ரீ அவர்களாலும்  எனக்கு கிடைத்தது, மேலும் இவர்களே எனது ஜோதிட ஆசிரியார்கள் .

இதை நான் அலட்ச்சியமாக எடுத்துகொள்ள இயலாது. 
மேலும் ஜோதிடம் என்பது கதை சொல்லி கதை கேட்பது இல்லை , கணிப்பும் அல்ல,  இது கணிதம் ஜோதிட கணிதம் எந்த காலத்திலும் பொய்பதில்லை .


 நமது வலை பூவிற்கு வருபவர்களுக்கு ஜோதிடத்தை பற்றி தெளிவான விளக்கம் தருவது எனது கடமை.


 காரணம் தண்ணீர் இல்லாத ஊரில் இருப்பவனுக்குதான் தண்ணீரின் அருமை புரியும், ஜோதிட ரீதியாக சரியான ஆலோசனை 
கிடைக்காமலும் , ஜோதிட ரீதியான மூட நம்பிக்கையாலும் எத்தனை எத்தனை மக்கள் பாதிக்க படுகின்றனர் என்பதை கண் முன்னே கண்டவன்


மேலும் ஆய கலைகள் 64 இதில் ஒன்று நமக்கு கிடைக்கிறது, என்றால்  அது நமது பிறவி பயன் அதில் முழு ஈடுபாட்டுடன் , அர்பணிப்புடன் இருப்பவர்களை இறை நிலை மேன்மைக்கு எடுத்து செல்லும் , இதை அனுபவ ரீதியாக நன்றாக உணர்ந்தவன் . இதை உணராமல் இருப்பவர்களை படு குழியில் தள்ளிவிடும் என்பதையும் கண்ணார கண்டவன் .


இறைநிலை நம்மை ஒரு கருவியாக கொண்டு மக்களுக்கு சேவை செய்ய கொடுத்த நல்ல வாய்ப்பாக நாம் கருதுவதே முக்கியம் . மேலும் ஜோதிடம் என்பதே உள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே எனும் பரஞ்சோதி மாகானின் வார்த்தைகளின் படி அமைவதே ஆகும் .
எங்களிடம் வரும் ஒவ்வோர் ஜாதக அமைப்பிலும் ஒரு புதுமையான விஷயங்களை தெரிந்துகொண்டு இருக்கிறேன், எனவே எனக்கு ஜோதிட கலையில் எந்த காலத்திலும் ஆர்வ குறைவு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை , மேலும் ஜோதிடத்தை உயிராக நேசிக்கும் தன்மை கொண்டவன் எனவே எனக்கு ஒவ்வொரு ஜாதகமும் , ஒவ்வொரு கேள்விகளும் மேலும் மேலும் பல விசயங்களை தந்து கொண்டே இருக்கின்றது .


எங்களின் ஜோதிடம் மற்றவர்கள் வாழ்க்கையில் சரியான வழிகாட்டியாகவும் , சரியான ஆலோசனை சொல்லுவதில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை, எங்களை நாடி வருபவர்கள் அனைவரும் சுய ஜாதகத்திற்கு உட்பட்டு படி படியான முன்னேற்றம் மட்டுமே பெறுவார்கள் என்பது நிச்சயம் .  


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 கேள்வி:

1.ஒரு ஜாதகத்தை பார்க்கும்போது எடுத்த உடன் என்னென்ன விஷயங்களை பார்க்கவேண்டும்?
எந்தெந்த வீடுகள் பலமாக உள்ளது?
எந்தெந்த கிரகங்கள் பலமாக உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?


பதில் :
 வீடுகள் பலமாக இருக்கிறதா என்றே பார்க்க வேண்டும்  இதில் சந்தேகமே வேண்டாம் , காரணம் நடக்கும் திசைகள் அனைத்தும் பாவக வழியில் நின்றே பலனை செய்யும் , வீடுகள் நன்றாக இருந்தாலே நிச்சயம் கிரகங்கள் ஜாதகத்தில் வழு பெற்று நிற்கும் , இதில் கோட்சார ரீதியான கிரகங்கள் அந்த வீடுகளுக்கு எவ்வித பலனை செய்கிறது என்று தெரிந்தால் போதும் ஜாதக அமைப்பை பற்றிய முழு நிலையையும் தெரிந்து கொள்ள இயலும்  .எந்தெந்த வீடுகள் பலமாக உள்ளது?
எந்தெந்த கிரகங்கள் பலமாக உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? 


இது ஒரு பதிவில் நிச்சயம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை , வரும் காலங்களில் நிச்சயம் தெரிந்துகொள்ள இறை அருள் துணை புரியும் .


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஜோதிட ஆலோசனை

 ஜோதிட ஆலோசனை 


kuwait ல் இருக்கும்   hassanudeen  அவர்களுக்கு


அதிக வேலை பளுவின் காரணமாக பதில் அனுப்ப இயலவில்லை, தங்களின் ஜாதக அமைப்பின் படி சனி திசையில் சுக்கிரன் புத்தியில் தொழில்  சிறப்பாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் சூரியன் அந்தரத்திலும் , அல்லது ராகு அந்தரத்தில் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

 தங்களின் ஜாதக அமைப்பில் , ஜீவன ஸ்தான அதிபதி வெகுவாக பாதிக்க பட்டுள்ளார் , தங்களை விட வயதில் பெரியோர் அல்லது தங்கள் அமைப்பை சேர்ந்த ஆன்மிக வாதிகள் போன்றோரிடம் ஆசிர்வாதம் பெறுவது மிகுந்த நலம் தரும்.  

தங்களால் இயன்ற அளவு,  கல்வி கற்க  வசதி இல்லாதவர்களுக்கு   கல்வி கற்க உதவி செய்வது  ஜீவன மேன்மை தரும்.

மேலும் ஜீவன அதிபதி வலுப்பெற சந்திரன் குரு ஆகிய  கிரகங்களுடன் தவம் இயற்றி  உயிர் கலப்பு பெறுவது உடனடி தீர்வை தரும் . அல்லது  பத்ம பொன் புஷ்பராகம் சுத்தி செய்து தங்கத்தில் அணிந்து சந்திரன் குரு கிரகங்களின் சக்தியினை உயிர்கலப்பு பெற முடியும் , இது விரைவில் ஜீவன மேன்மை , நிறைந்த வருமானம், செல்வ நிலையில் விரைவான முன்னேற்றம் பெற முடியும் .

மேலும் விபரங்கள் நேரில் அல்லது தொலை பேசியில் ...

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

Tuesday, April 24, 2012

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ
வணக்கம்,
எனது
கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை வழங்கிக்கொண்டிருப்பமைக்கு நன்றி.

கேள்வி :
1.
ஒரு பாவம் கெட்டுவிட்டது என்பதற்கும் பாதிக்கப்பட்டது என்பதற்கும் என்ன
வித்யாசம்
?

 பதில் :

ஒருவருக்கு  சுய ஜாதகத்தில் ஒரு பாவத்துக்குண்டான கிரகம் தனது வீட்டுக்கு சுப பலனை பெறாமலும் , அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கிரகங்களும் சம்பந்தம் பெற்ற பாவத்துக்கு நன்மையை செய்யவில்லை என்றால், அந்த பாவகம் 100   சதவிகிதம்  கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்ய முடியும். 

மேலும் இந்த அமைப்பில் பாவகத்துக்கு அதிபதி நன்றாக இருந்து, சம்பந்தம் பெற்ற  பாவத்தை  பார்க்கும் கிரகங்கள்  தீமை செய்தாலும் . பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்து , பாவ அதிபதி மட்டும் தீமை செய்தாலும். அந்த பாவகம் பாதிக்க பட்டுள்ளதாக நிர்ணயம் செய்ய முடியும் . மேலும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது என்று சுய ஜாதகத்தை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் .  


 கேள்வி :
2. பூர்வபுண்ணியத்தில் ராகு இருந்தால் ஏற்படும் தோஷத்திற்கும்,ராகுவோடு
சூரியன்
சேர்ந்து இருக்கும் தோஷத்திற்கும் என்ன வித்யாசம்?இதில் எது
கொடியது
?பதில் : 

ராகு சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே செய்வார் ஆகவே அவருடன் சேர்ந்த கிரகம், அந்த பாவகத்தை பார்த்த கிரகம் பற்றிய கவலை நமக்கு தேவையே இல்லை அது எந்த கிரகமானாலும், ஒரு ஜாதகத்தில் மிகுந்த வலிமை உடைய கிரகம் ராகுவும் , கேதுவுமே ஆகும் என்பதனை நான் இங்கு நினைவு கூறுகிறேன் . 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பாரே ஆயின் அவருடன் சேரும் சூரியனால் மற்ற கிரகங்களால் பெரிய கெடுதல் எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பு இல்லை, சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மை ராகு கேதுவுக்கு உண்டு . இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஐந்தாம் பாவத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ நன்மை செய்கின்றனர அல்லது தீமை செய்கின்றனர என்பது மட்டுமே .
கேள்வி :
3.
லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?இதை அறிவியல் மற்றும் சாஸ்திர ரீதியாக எப்படி சரிசெய்வது?பதில் : 

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ, சுய ஜாதகத்தில் லக்கினம் கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு , மேலும் லக்னாதிபதி ஆட்சி, 
உச்சம் , நட்பு , சமம் என்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மை செய்வதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு. 

எடுத்துகாட்டாக : 


சிம்ம லக்கின ஜாதகருக்கு சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் அமர்ந்தாலோ , கும்பத்தில் அல்லது ரிஷபத்தில் பகை பெற்று அமர்ந்தாலோ லக்கினத்திற்கு நன்மையே செய்வார், மேலும் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமருவது லக்கினத்தை தானே 100  சதவிகிதம் கெடுத்து விடுவார், மேஷத்தில் உச்சம் பெற்று அமருவது பாதிப்பையே செய்வார்.

  ஒருவேளை சிம்மத்தில் ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்தால், லக்கினாதிபதி எங்கு இருந்தாலும் அவரை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை ஏனெனில் லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் ராகுவோ அல்லது  கேதுவோ மட்டுமே செய்வார் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக ! 

லக்கினம் எந்த கிரகத்தால் பாதிக்க பாதிக்க படுகிறதோ அந்த கிரகத்தின் மீது தவம் இயற்றலாம், அந்த கிரகத்திற்கு உண்டான உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் நல்லுறவை பேணலாம் . அந்த கிரகத்திற்கு உண்டான ரத்தினங்களை சுத்தி செய்து பயன் படுத்தி உயிர்கலப்பு பெறலாம், இந்த அமைப்பின் மூலம் ஜாதகர் 100  சதவிகித  நன்மை பெற முடியும் .

 கேள்வி :
லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ,6,8,12ம் வீட்டின் தொடர்பை பெற்றிருந்தாலோ என்ன
மாதிரியான பலன் ஏற்படும்?அதை சரிசெய்வது எப்படி?

நன்றிகளுடன்.

By
ஜோதிட பித்தன்

பதில் :
 லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு இல்லை , ஒரு வேலை
6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால் வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு , அப்படி பாதிக்க பட்டாலும் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் லக்கினம் 100  சதவிகிதம் வலுப்பெறும் .


ஜோதிடன் வர்ஷன்
9443355696 

ஜோதிட கிழ மொழிகள்


பத்தில் பாம்பு இருந்தால் பணம்
பறந்து வரும்
ராகு/கேது பத்தில் இருந்தால்
ஜாதகர் நன்கு சம்பாதிப்பார்
இது ஒரு வலை பதிவில் கண்டது அதாவது பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வருமாம் என்ன கொடுமை சார் ?
சுய ஜாதகத்தில் பத்தாம் வீடு ரிஷபம் , துலாம் , தனுசு , மீனமாக வந்து அந்த வீட்டில் ராகு கேது இருப்பின் ஜாதகருக்கு பணம் பறந்து வராது பாய்சன் தான் பறந்து வரும் , மேலும் வளர் பிறை சந்திரனாக ஜாதகத்தில் அமைந்து கடகம் பத்தாம் வீடாக வந்து ராகு கேது இருப்பின்  , சூரியனுடன் சேராத ( 14  பாகைக்குள் ) புதனாக சுய ஜாதகத்தில் அமைந்து மிதுனம் அல்லது கன்னி பத்தாம் வீடாக வந்து ராகு கேது இருப்பின் அந்த ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகவும் பரிதாப கரமாக அமைந்துவிடும் மேலும், இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் டவுசர் கிழிந்து டார் டாராக  தொங்குவதை எவராலும் தடுக்க இயலாது .

சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்
எவனோ சும்மா இருந்தவன் திண்ணையில் உட்காந்து கொண்டு சொல்லிவிட்டு போன பலமொழில் இதுவும் ஒன்று நான் பார்த்தவரை சித்தரையில் பிறந்தவர்கள் அதிகம் பேர் அரசு துறையில் பணியாற்றுகிறார்கள், மேலும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர் .

குரு பார்க்க கோடி நன்மை
ஒருவரது ஜாதகத்தில் குரு இருந்த
இடத்தை விட குரு பார்த்த இடங்கள்
மிகச் சிறந்த பலன்களை தரும்
தனுசு லக்கினத்திற்கு மிதுனத்தில் அமர்ந்து நேரெதிர் பார்வையாக தனுசை பார்க்கும் அமைப்பை பெற்ற ஜாதகரையும் , மீன லக்கினத்திற்கு கன்னியில் அமர்ந்து நேரெதிர் பார்வையாக மீனத்தை பார்க்கும் அமைப்பை பெற்ற ஜாதகரையும் சும்மா கேட்டு பாருங்கள் அவர்களது கோவணம் எவ்வாறு உருவபட்டது என்று .
  
இப்படி பல கட்டு கதைகளையும் , வசன நடையாகவும் சில ஜோதிட மொழிகளை நம்பி வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதிர்கள் நண்பர்களே.
 ஜாதக பலன் என்பது சுய ஜாதகத்தி கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றவை எல்லாம் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் என்பதை மனதில் கொள்ளுங்கள் .
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

அற்ப ஆயுளும் 8 ம் இடமும் !?தனது ஆயுள் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாத மனிதரே கிடையாது எனலாம், பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இது இயற்க்கை நியதி .

 கடந்த மாதம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவரின் மரணம்  என்னை வெகுவாக பாதித்து விட்டது, காரணம் ஜாதகர்  நன்கு படித்தவர் நல்ல அனுபவம் பெற்றவர்  வயதும் இளம் வயதே ஆனாலும் ஜாதகரின் மன கவலை மிகுதியால், தனது குடும்பத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமலும்  தன் உயிரை தானே மாய்த்து கொண்டார் . 

தனது உயிரை தானே போக்கி கொண்டாலும் கர்ம வினை பதிவுகளில் இருந்து தப்பித்து கொள்ள இயலாத நிலையே ஏற்ப்படும், கர்மவினை பதிவினை முழுவதும் தமது வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்து போக்கி கொள்வதே மிகவும் சரியான வழி , இதை விடுத்து  தனது உயிரை மாய்த்து கொண்டால் அந்த ஆன்மாவுக்கு முக்தி கிடைக்காமலும் , சாந்தி அடையாமலும், அடையும் துன்பத்திற்கு ஒரு அளவு கிடையாது , மேலும் ஆன்மாவை கட்டுப்படுத்தும் சில மந்திர வாதிகளிடம் அந்த ஆன்மா சிக்கி விடுமாயின் அதை விட கொடுமை எதுவும் இல்லை .

இவர்களிடம் சிக்கும் ஆன்மாவை தமது காரியத்திற்கா ஏவிவிட்டு சுயலாபம் காண்பார்கள்,  இதனால் ஏற்ப்படும் கர்ம பதிவுகளையும் அந்த ஆன்மா மறு பிறவியில் கழிக்க வேண்டி வரும் , இந்த வாழ்க்கையை விட அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கும்,  மேலும் இந்த பிறவியில் போக்கி கொள்ள வேண்டிய கர்ம வினை பதிவையும்  சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் . 

மனிதனாக பிறவி கண்டதே தனது அறிவின் வழி நடந்து நன்மையை மட்டும் தமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு,  தீமையை தவிர்த்து தாமும்  தம்மை சார்ந்தவர்களுக்கும் துன்பம் எந்த விதத்திலும் தராமல் வாழ்க்கையை நடத்தி இறை நிலையை அடைவதே பிறவி பயன் ஆகும் .

 வரும் துன்பங்கள் யாவும் நிரந்தரம் அல்ல என்பதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்வது மிக முக்கியம் , இந்த மன நிலையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்ப்படும் துன்பத்திலிருந்து வெகு விரைவில் மீட்டெடுத்து சரியான  பாதையில் நடத்தி செல்லும் .

உங்களுக்கு வரும் துன்பங்கள் யாவையும் கண்டு பயம் கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் கர்ம வினை பதிவை போக்கி கொள்ள இறைநிலை உங்களுக்கு தரும் ஒரு வாய்ப்பாக நினைத்து வாழ்க்கையை செம்மையாக நடத்துங்கள் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.

 அதே போல் தன்னம்பிக்கை என்பதும் உங்களை சார்ந்ததே அதை மற்றவரால் தர முடியாது , உங்களின் நம்பிக்கையே தன்னம்பிக்கை இதை நீங்களாகவே உணர்வது முக்கியம், பிறகு பாருங்கள் உங்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு மணித்துளியிலும் நம்பிக்கை மிகுந்ததாகவும் , ஒரு சிறப்பான எதிர்காலத்தி நோக்கி நீங்கள் பயணம் செய்வது தெளிவாக தெரியும் பிறகு உங்களை எதிர்க்க எந்த  எமனாலும் முடியாது .

தற்கொலை செய்து கொள்ளும் தன்மை உள்ள ஜாதக நிலைகள் :

ஜாதகருக்கு 8  ம் வீடு, லக்கினம் ஆகியவை சர மண் தத்துவமாகவோ அல்லது சர நீர் தத்துவமாகவோ அமைந்து 8  ம் வீட்டுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் தனது மரணத்தை தானே தேடிக்கொள்ளும் துர் பாக்கியத்திற்கு ஆளாகும் நிலை ஏற்ப்படும் . மக்களின் நலன் கருதி வேறு அமைப்புகள் பற்றி எழுதவில்லை

 இந்த நிலை பெற்ற ஜாதகர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நேசிக்க கற்று கொள்வது மிகுந்த நன்மையை தரும் . இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறவுகளும் , அவர்களது  வாழ்க்கை துணையும் ஆறுதலாக இருப்பது வாழ்க்கையை வெற்றிபெற செய்ய உறுதுணை புரியும் .

இதில் வளரும் இளம் பருவத்தினர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை சவாலாக ஏற்றுக்கொண்டு வாழ்வது முக்கியம் .

இறை நிலையின் கருணையினால்  இறந்த அந்த ஆன்மா சாந்தி பெறட்டும் வரும் காலங்களில் இதுமாதிரியான ஜாதகங்களை எங்களின் கணிதத்திற்கு வராமல் இருக்க  இறைநிலை கருணை புரியட்டும் .


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

Monday, April 23, 2012

பூர்வ புண்ணியம் என்றால் என்ன ?
 கேள்வி :

பூர்வ புண்ணியம் என்றால் என்ன ??  பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன??? அதற்கான காரணம் என்ன ???
பரிகாரம் என்ன ??? எவ்வாறு பூர்வ புண்ணியம் கெடுகின்றது ???
 பதில் : 

சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் .

 சுய ஜாதகத்தில் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய வீடுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது இந்த பூர்வ புண்ணியம் ஆகும் , இந்த வீடு நல்ல நிலையில் ஒரு ஜாதருக்கு இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு சிறு வயது முதல் கிடைக்க வேண்டிய நன்மைகள் யாவும் சிறப்பான முறையில் தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும்.

 குறிப்பாக ( குழந்தை பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் , மன 
ஆரோக்கியம் , நல்ல அடிப்படை கல்வி , தந்தை தாயாருடன் வாழும் சூழ்நிலை, அவர்களின்  முழு அன்பும் ஆதரவும் கிடைக்க பெறுதல் ) என அடிப்படையில் நல்ல சூழ்நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக தொடரும் நிலை கிடக்க பெரும் ஜாதகராக காணப்படுவார் .  தனது குல தெய்வத்தின் பரிபூரண அருள் ஜாதகருக்கு நிறைந்து எப்பொழுது ஜாதகரை காத்து நிற்கும் .

ஜாதகரின் பூர்விகம் எதுவோ அங்கிருந்தே ஜாதகருக்கு சகல யோகங்களையும் பெரும் அமைப்பு , சமுதாயத்தில் மற்றவருக்கு முன் மாதிரியாக செயல் படும் தன்மை என ஜாதகர் நன்மையனைத்தும் அனுபவிக்க பூர்வபுண்ணியம் நிச்சயம் நன்றாக இருப்பது நன்மை தரும்.

மேலும் ஜாதகருக்கு நன்மக்களின் அறிமுகமும் ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்க பெரும் பாக்கியம் ஜாதகருக்கு நிச்சயம் கிடைக்கும் , தன விருத்தியும் , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கியே பயணம் செய்யும் காரணம் குல தெய்வத்தின் பரிபூரண கருணையே !?

ஜாதகருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலேயே நல்லதொரு வாரிசு அமைப்பை பெரும் தன்மையும் குறைவு இல்லாமல் கிடைக்க பெறுவார், அந்த குழந்தை பிறப்பின் மூலமாகவும் ஜாதகர் யோக வாழ்வினையே பெறுவார் .

 பூர்விகம் கெட்டு விட்டது என்றால் என்ன?  

சுய ஜாதகத்தில் பூர்விகம் பாதிப்படைந்து இருந்தால் , ஜாதகர் அந்த வீட்டுக்குண்டான தன்மையை விருத்தி செய்துகொள்ள நிச்சயம் வாய்ப்பு உண்டு.

 ஆனால் கெட்டு விட்டது என்றால் ஜாதகரால் ஒன்றும் செய்ய இயலாது  இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தில் இருந்து 100  கிலோமிட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது சகல முன்னேற்றத்தையும் தரும், வேறு வழியே கிடையாது .இந்த ஜாதகர் இதை தவிர்ப்பாரே ஆயின் நிச்சயம் ஜாதரால் கஷ்டங்களை தாக்கு பிடிக்க முடியாது, தனது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகி விடும். 

பூர்விகம் கெடுவதற்கு முக்கிய காரணங்கள் :

ஜாதகரின் முன்னோர்கள் தம்மை நாடிவந்தவர்களை நிந்தனை செய்வதாலும், பெண்களை போக பொருளாக நடத்தியதாலும் , தனது மனைவியை கொடுமை செய்து  மனம் நோக செய்ததாலும் , பசுவை கொன்றதாலும் , இளம் பெண்ணை  மான பங்கம் செய்ததாலும் .

 மற்றவர் சொத்தை அகபரித்து கொண்டு  அவர்களை மனம் நோக செய்ததாலும் , மற்றவர் மரணத்திற்கு நேரடியாக மறைமுகமாக காரணமாக இருந்தாலும் , சிவனடியார்களுக்கு அண்ணம் இடாத காரணத்தாலும், தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , தனது குழந்தையை தானே கொன்றதாலும் , தனது பெற்றோர்களை வயதான காலத்தில்  பேணி பாதுகாக்கும் கடமையை செய்யாத காரணத்தினாலும். கோவில் சொத்தை அகபரித்து கொண்ட காரணத்தினாலும்  நிச்சயம் பூர்விகம் 100  சதவிகதம் பாதிப்படைய வாய்ப்பு உண்டு .

பரிகாரம் :

தனது முன்னோர்கள் என்ன தவறை செய்தனரோ அந்த தவறுகளை  தான் செய்யாமலும் , அனைவரிடத்திலும் அன்பாகவும், மற்றவர்களால் வரும் துன்பங்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டும் , தனது பெற்றோர்களையும் , உடன் பிறப்புக்களையும் அனுசரித்தும் , அவர்களுக்கு தேவையானவற்றை, சந்தோஷத்துடன் செய்து கொடுப்பதும் , குறிப்பாக தனது மனைவிக்கு நல்ல கணவனாகவும் , தனது குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் நடந்துகொண்டு  , தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்வது தனது வாரிசுகளுக்கும் , பின்வரும் சந்ததியினருக்கு 100  சதவிகிதம்  பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்க  வழிவகுக்கும் .  

ஜாதக அமைப்பில் ஐந்தாம் வீடு பாதிப்படந்ததை எப்படி கண்டு பிடிப்பது ?

மேஷம் , விருச்சகம் , சிம்மம் , மகரம் , கும்பம் ஆகிய வீடுகள் ஐந்தாம் வீடாக வந்து அந்த வீடுகளில் ராகு அல்லது கேது அமர்ந்து இருந்தால்
 ( ஐந்தாம் வீடுக்குண்டான பாகைகளில் ) ஜாதகரின் பூர்வ புண்ணியம் 100  சதவிகதம் பாதிப்படைந்து விடும் , அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உண்டான அதிபதி தனது வீட்டுக்கு மறைவு நிலை பெற்றால். ஜாதகருக்கு பூர்வீகம் 100   பாதிக்க வாய்ப்பு இருக்கின்றது .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Saturday, April 21, 2012

ஏழரை சனி, ஜென்ம சனி
கேள்வி :
வணக்கம், 
ஜோதிடத்தின்மீது நம்பிக்கை உள்ள எவருமே ராசிபலன் பார்க்காமல்
இருக்கமாட்டார்கள்
.ஆனால் ஜோதிட வல்லுனர்களோ கோசார ரீதியாக கூறப்படும்
ராசி
பலன்கள்,குரு,சனி,ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் எல்லாமே 10%
பலித்தாலே
பெரியவிஷயம் என்கின்றனர்.மேலும் தசா புக்தி யின் உட்பிரிவான
அந்தரம்
அதன் உட்பிரிவான சூட்சுமத்தின் படியே அந்த ஜாதகரின் அன்றாட செயல்
அமையும்
என்கின்றனர்.இது சரியா?இதுபற்றிய தங்களின் விளக்கத்தை
உதாரணத்துடன்
எதிர்பார்க்கிறேன்.

பதில் : 
ஜாதகம் என்பது ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கே வினாடிகள் என்ற அமைப்பில் மாறுதலாக அமையும் தன்மை 
கொண்டது , இதில் கோட்சார ரீதியாக அனைவருக்கும் பொதுவாக பலன் எழுதுவது என்பது முற்றிலும் ஏற்றுகொள்ள இயலாதவை, ஜோதிடர்கள்  தன்னை விளம்பரம் செய்துகொள்ள வேண்டுமானால் பயனுள்ளதாக 
இருக்கலாம் .

மேலும் சுய ஜாதக அமைப்பை கொண்டே கோட்சார ரீதியான பலனை கணிதம் செய்வது துல்லியமாகவும் , சரியானதாகவும் இருக்கும்.


கேள்வி :

இது சரி எனில் அஷ்டம,ஏழரை சனி,ஜென்ம குரு,சந்திராஷ்டமம் போன்றவற்றிற்கு
மனிதன் பயப்பட தேவையில்லையா? அல்லது

பதில் : 

 பயப்படுவதால் மட்டும் பலன் நன்மையாகவா நடந்து விடும் நிச்சயம் இல்லை.


இந்த ஜாதக அமைப்பில். 2018 ஆண்டுவரை நடக்கும் குருதிசை 3 ,6 ,9 ,12 வீடுகள் 12  ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்துகிறது. எனவே இந்த ஜாதகர் 2018 ஆண்டுவரை 12 ம் வீட்டுக்குண்டான பலனை மட்டுமே அனுபவிப்பார். மேலும் கோட்சார ரீதியாக இந்த வீட்டுடன் தொடர்பு பெரும் கிரகம் கோட்சார ரீதியாக இந்த வீட்டை பார்வை செய்யும் கிரகம் மட்டுமே சம்பந்தபட்ட வீட்டுக்கு நன்மையோ தீமையோ செய்யும் , மேலும் ஜாதகர் துலா ராசி எனவே ஏழரை சனி அமைப்பால், ஜாதகர் பாதிக்க படுவார் என்று பலன் சொல்வது முற்றிலும் தவறான பலனை சொல்லும். 

சுய ஜாதக அமைப்பில் தற்பொழுது கோட்சார ரீதியாக உள்ள சனி பகவான் துலாத்தில் இருக்கிறார், நடக்கும் குரு திசை 12  ம் வீட்டின் பலனை மட்டுமே செய்கிறது, அந்த 12  ம் வீட்டிற்கு சனி பகவானின் பார்வையும் இல்லை எனவே ஏழரை சனியால் பாதிப்பு சிறிதளவேனும் ஜாதகருக்கு நடக்க வாய்ப்பே இல்லை.

 மேலும் மற்ற ஜோதிடர்கள் இந்த ஜாதகத்தை பார்த்து விட்டால் ஏழரை சனியால் ஏற்ப்படும் துன்பம் அனைத்தையும் சொல்லி, ஜாதகம் பார்க்க வந்தவரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவார்கள் . ஜாதகம் பார்க்க வந்தவர் தன்னிடம் இருந்த கொஞ்ச நாசம் மன உறுதியையும் குழைத்து விடுவார்கள். 

ஒரு வேலை இந்த ஜாதகத்தில் துலாம் ராசியின் ஐந்தாம் வீட்டுக்கு உண்டான பலன் நடக்குமாயின் ஜாதகர் ஏழரை சனி பற்றி கவலை கொள்ள வேண்டும். அப்படி நடக்கும் ஏழரை சனி நன்மையை செய்தால் நிச்சயம் நல்ல பலன் நடக்கும் , தீமையை செய்தால் மட்டுமே கெடுதல் நடக்கும். அதை தெளிவாக கண்டு பிடிப்பதே ஜோதிடனின் கடமை .   

1.
சுய ஜாதக அமைப்பில் சனி எங்கே எப்படி இருந்தால் அவரை ஏழரை சனி,அஷ்டம
சனி
பாதிக்கும்?
 

சனி எங்கு இருந்தாலும் சுய ஜாதகத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வீடுகளுடன் நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் தொடர்பு பெற்றால் மட்டுமே , அல்லது சனிபகவானின் அந்த வீடுகளுடன் சம்பந்தம் பெற்றால் மட்டுமே அதன் பாதிப்பு அதற்கேற்றவாறு  நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும் .

2.
சுய ஜாதக அமைப்பில் குரு எங்கே எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் அவரை
ஜென்ம
,அஷ்டம குரு பாதிக்கும்?

 நடக்கும் திசையுடன் சம்பந்தம் பெற்ற வீடுகளுக்கு கோட்சார ரீதியாக குரு பகவான் வரும் பொழுது மட்டுமே நன்மையே தீமையோ பலனை தவறாமல் வழங்கும்.
 இதில்  ஜென்ம , அஷ்டம குரு என்ற பாகுபாடு இல்லை ஒருவேளை சம்பந்தபட்ட வீடுகளுடன் கோட்சார குரூ சம்பந்தம் பெறவில்லை என்றால் அதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை .
சந்திர ராசிக்கு கோட்சார கிரகங்களை சம்பந்தம் செய்து பலனை சொல்லுவது 100 சதவிகிதம் தவறான அணுகு முறை , நடைமுறை வாழ்க்கையில் சரியாக வர வாய்ப்பில்லை இது முடியை கட்டி மலையை இழுக்கும் அமைப்புக்கு ஒப்பானது . 

 3. சுய ஜாதக அமைப்பில் சந்திரன் எங்கே எப்படிப்பட்ட நிலையில் இருந்தால்
அவரை சந்திராஷ்டமம் பாதிக்கும்?

சந்திராஷ்டமம் என்பது சந்திர ராசிக்கு 8 ல் கோட்சார சந்திரன் வரும்பொழுது சொல்லப்படும் பலன் ஆகும் , சந்திர ராசிக்கு 8 வீடு இலக்கான ரீதியாக நடக்கும் திசையுடன் சம்பந்தம் பெற்றால் மட்டுமே அதற்க்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை தரும் . சந்திராஷ்டமம் என்பதும் முற்றிலும் தவறான கணித பலனே .

4.
அந்தரத்தின் உட்பிரிவான சூட்சுமம்.  கோசாரபடி அன்றைய கிரக நிலை
இவற்றில்
எதற்கு வலிமை அதிகம்?எதன்படி அந்த ஜாதகருக்கு பலன் நடக்கும்?

 சூட்சமம் நடத்தும் விடுகளுடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்களையும் கணிதம் செய்து இரண்டையும் இணைத்த அமைப்பில்  நடக்கும் பலன் வழுமையானது .

இதற்கு
சற்று விரிவாக உதாரணத்துடன் பதில் அளித்தால் என்போன்ற ஜோதிட
ஆர்வலர்களுக்கு
பயன் உள்ளதாக அமையும்.

நன்றிகளுடன்
,
By,
ஜோதிட
பித்தன்

பதில் திருப்தியாக இருக்கும் என்று நம்புகிறேன் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696