"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சரியான ஜோதிடம் மக்களை சென்றடைவதே முக்கியம் , ஜோதிட ரீதியாக உள்ள மூட நம்பிக்கையை களைவதே ஜோதிடதீபத்தின் நோக்கம்!

Wednesday, April 16, 2014

ஆயுள் பாவக நிர்ணயம், பூர்ண ஆயுள் அற்ப ஆயுள் விளக்கம் !கேள்வி :

 அய்யா வணக்கம் எனது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், எனது பெற்றோரிடம் இந்த ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமையில்லாமல் இருப்பதால், ஆயுளுக்கு பங்கம் ஏற்ப்படலாம் என்று கூறியுள்ளனர், இதனால் எனது பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுடன் இருக்கின்றனர், என்னையும் மனதளவில் கவலையுற செய்கின்றனர், எனது ஜாதகத்தை சரியாக கணிதம் செய்து ஆயுள் பாவக பலனை நிர்ணயம் செய்து ஜாதக பலன் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

 அன்பு தம்பிக்கு தங்களது ஜாதகத்தை நன்றாக ஆய்வு செய்த வகையில் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன் தங்களுக்கு பூரண ஆயுள், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஏனெனில், தங்களின் சுய ஜாதகத்தில் ஆயுள் வலிமையை குறிக்கும் 8ம் வீடும், உயிர் உடல் அமைப்பை குறிக்கும் லக்கினமும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதே அதற்க்கு காரணம், குறிப்பாக 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும், இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கு எவ்வித சிரமும் வர வாய்ப்பில்லை என்பதால், தாங்கள் எவ்வித கவலையும் அடைய தேவையில்லை.

தங்களது பெற்றோருக்கும் தெளிவாக சொல்லிவிடுங்கள் தங்கள் உயிருக்கும், உடலுக்கும் எவ்வித பாதிப்பும் வர வாய்ப்பில்லை என்று, எனவே தாங்கள் எவ்வித மன கவலையும் கொள்ளாமல் தைரியமாக இருக்கலாம், இதற்க்கு மேலும் உங்களுக்கு ஆயுள் பாவகம் பற்றிய கவலை வருமெனில், நேராக வளர்பிறை திங்கள் அன்று திருமலை திருப்பதி சென்று ஏழு மலையானுக்கு முடி காணிக்கை செய்துவிட்டு, ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் குளித்து ஸ்ரீ வாரி பெருமாளை தரிசனம் செய்து வரவும், தங்களுக்கு 100 சதவித நன்மையை ஆயுள் என்ற அமைப்பில் இருந்து தருவார், மேலும்  தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற அமைப்பில் இருக்கட்டும்.

 மேலும் எக்காரணத்தை கொண்டும் எந்த ஒரு ஜோதிடராலும் ஒருவரின் ஆயுள் பாவகத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாது, இறை அருளின் தன்மைக்கு மட்டுமே இந்த விஷயம் புலப்படும், எனவே தங்களின் ஜாதக அமைப்பில் ஆயுள் என்ற அமைப்பு நல்ல நிலையில் இருப்பது மட்டும் உறுதி  என்பதால் பெரிய அளவில் தாங்கள் மன கவலை கொள்ளாமல் வாழ்க்கையை இனிமையாக வழ கற்று கொள்ளுங்கள், தங்களின் பெற்றோருக்கும் தைரியம் சொல்லுங்கள். வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

Tuesday, April 15, 2014

காலசர்ப்ப தோஷமா? காலசர்ப்ப யோகமா? ராகு கேது ஜாதகத்தில் தரும் பலன்கள் என்ன ?
 பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் பிடியில் ( அதாவது ராகு கேது கிரகங்களுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் அடைபடுவது காலசர்ப்ப தோஷமாக பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிட படுகிறது, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகத்தை சார்ந்த நபர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட வயது வரை ( 32  வயது ) பல இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆர்ப்பட்டு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெரும் யோக நிலையை தரும் என்று செல்வதும் உண்டு.

 மேலும் சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகருக்கு, இதை போன்றே சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைக்க வேண்டும் என்ற கருத்தும் பாரம்பரிய ஜோதிடத்தில் உண்டு. 
( அது எப்படி தோஷமுள்ள இரு ஜாதகத்தை இணைக்கும் பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை? ) 

 நமது ஜோதிட முறையில் ராகு கேது என்ற இரு கிரகங்களுக்கும் தனிப்பட்ட வலிமை உண்டு என்பதை கடந்த பதிவில் பதிவு செய்து இருக்கிறோம், குறிப்பாக ராகு கேது எந்த பாவகத்தில் அமருகின்றதோ அந்த பாவகத்தின் பலனை 100 சதவிகிதம் தானே ஏற்று நடத்தும், குறிப்பிட்ட பாவகத்தில் ராகு கேதுவுடன் சேரும் எந்த கிரகமானாலும் அவற்றின் பலனையும் தானே ஏற்று நடத்தும் என்பதே அது.

 மேலும் ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகத்தில் அமரும் ராகு அல்லது கேது லக்கினத்தை 100 சதவிகிதம் வலிமை பெற செய்து, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை 100 சதவிகிதம் பெற செய்யும், மேலும் ராகு கேது தோஷம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கணிப்பு செய்த பல ஜாதகங்களில் ராகு கேது இரண்டு கிரகங்களும் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

உதாரணமாக: மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் கேதுவும், 11ல் ராகுவும் அமர்ந்து ஜாதக ரீதியாக மிகப்பெரிய யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயம், கேது 5ம் பாவக வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியில் அமர்ந்து ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையையும், சிறந்த புத்திர சந்தான அமைப்பையும் பெற்று தந்திருப்பது குறிப்பிட தக்கது, மேலும் துலாம் ராசி ஜாதகருக்கு சர காற்று தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக  விளங்குவது புலனாகிறது.

 மேலும் தான் காற்ற கல்வியையை கொண்டும் அறிவாற்றலை கொண்டும் ஜாதகர் மிகப்பெரிய வெற்றியை குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும் என்பது முக்கியமான விஷயம், இங்கே அமர்ந்திருக்கும் கேது பகவான் ஜாதகருக்கு குல தெய்வ நல்லாசியையும், இறை நிலையின் அருள் ஆற்றலையும் மிக எளிதாக பெற்று தரும் என்பது உறுதி, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்திருப்பார்கள் என்பதும், நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களின் மூலம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்வார் என்பதும் உறுதியாகிறது.

 11ல் அமர்ந்திருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசி அமைப்பில் இருந்து மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், குறிப்பாக எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி, முற்போக்கு சிந்தனை, சிறந்த செயல் திறன், எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பு, உடல் மனம் என்ற அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் எண்ணம் யாவும் நிறைவேறும் சக்தியை தரும், குறிப்பாக தான் எடுத்துக்கொண்ட காரியங்களில் உறுதியாக நின்று வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பை ஜாதகர் பெறுவார்.

 மேலும் ஜாதகர் துவங்கும் தொழில்கள் யாவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், குறைவான முதலீட்டில் மிகப்பெரிய தொழில் விருத்தியை தரும், ஜாதகருடன் கூட்டு சேர்ந்து செய்யும் நபர்கள் யாவரும் மிகுந்த லாபத்தை பெறுவார்கள், பல தொழில் செய்யும் யோகத்தையும், லாட்டரி மற்றும் புதையல் போன்ற விஷயங்களில் ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், லட்சிய நோக்கில் செயல்படும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும்.

ராகு கேது மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருப்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம், மேலும் மேற்க்கண்ட ஜாதகத்தில் பாரம்பரிய ஜோதிட வழியில் சொல்வதென்றால் சம்பந்தபட்ட ஜாதகருக்கு, காலசர்ப்ப யோகத்தை பிறவி முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தந்துகொண்டு இருக்கிறது என்பதே முற்றிலும் உண்மை.

மேலும் சர்ப்ப யோகம், தோஷம் இரண்டையும் நாம் ராகு கேது எவ்வித நிலையில் சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேது என்றவுடன் அவை தீமையான பலனையே தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான விஷயம் இலக்கின அமைப்பில் ராகு கேது அமர்ந்திருக்கும் பாவகத்தின் வலிமை உணர்ந்து பலன் நிர்ணயம் செய்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Sunday, April 6, 2014

ஒருவரது சுய ஜாதகத்தில் 4,10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ? பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, அதிலும் குறிப்பாக 1,4,7,10 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் வாரி வழங்கும், ஒரு வேலை மேற்கண்ட 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது சால சிறந்தது.

 கேள்வியில் ஜாதகர் 4 மற்றும் 10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் எவ்வித பலனை அனுபவிப்பர் என்பதனை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே! 

 4ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தனது தாயர் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  பெண் எனில் தகப்பனார் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும் , உதாரணமாக தாயாரின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை தராது, தாயின் அன்பினை பரிபூரணமான அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், வளரும் காலத்தில் பெரிய அளவில் சுகமான வாழ்க்கையை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.

  நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக அமைப்பை பரிபூரணமாக பெற இயலாத தன்மையை தரும், வளரும் காலத்தில் ஜாதகர் அதிக இன்னல்களையும், கல்வியில் தடை மற்றும் முன்னேற்றம் அற்ற தன்மையையும் தரும், ஜாதகர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்து சுகங்களை திடீர் என இழக்கும் அமைப்பை தரும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையையும் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்ப்பட அதிக சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

 சுருக்கமாக ஜாதகரின் சுக வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறிவிட வாய்ப்பு உண்டு, மேற்கண்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது தாயாரை
 ( பெண்கள் எனில் தகப்பனாரை )  மிகவும் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துகொள்வது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும் .

 10 ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தகப்பனார் வழியில் இருந்தும், பெண் எனில் தாயர் வழியில் இருந்தும் அதிக இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகரின் அடிப்படை விஷயமாக கருதும் தொழில் அல்லது வேலை சரியாக அமையாமல், ஜாதகரை ஜீவன வாழ்க்கைக்காக போராடும் சூழ்நிலையை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், ஜாதகர் ஒரு இடத்தில் ஜீவன வாழ்க்கை மேற்கொள்ளுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், பரதேச ஜீவனம் அமைவதற்கு வழிவகுத்துவிடும்.

சிறு வயதிலேயே தனது தகப்பனாரை விட்டு பிரிந்து வாழும் அல்லது இழந்து வளரும் சூழ்நிலையை தரும் ஜாதக அமைப்பில் இந்த 10ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருக்கும் என்பது கவனிக்க தக்கது, மேலும் ஜாதகரின் கௌரவமான வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுவதிர்க்கு மேற்கண்ட அமைப்பே காரணம், தேவையில்லா விஷயங்களில் தலையிடுவதாலும், மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையீடு செய்வதாலும், ஜாதகரின் கௌரவம் ஆதால பாதாளத்திற்கு செல்லும் என்பது மட்டும் 100%ம்  உறுதி, எனவே ஜாதகர் மற்றவர் விசயத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற எந்த ஒரு ஜாதகரும் சுயமாக முதலீடு செய்து தொழில் துவங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்காமல் இருப்பது மிக்க நல்லது ஏனெனில் ஜாதகர் துவங்கும் தொழில் எதுவென்றாலும், அந்த தொழில் பாதியிலே முடங்கும் அல்லது பெருத்த நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பளிக்கும், அல்லது பணியாற்றும் வேலையாட்களால் அதிக இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்துவிடும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர் தனது தகப்பனாரை சிறப்பு கவனம் எடுத்து கவனித்துகொள்வது  ஜீவன அமைப்பில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், கௌரவமான வாழ்க்கையையும், அந்தஸ்து மிகுந்த மக்கள் செல்வாக்கினையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696
9842421435Wednesday, March 26, 2014

உச்சம் பெற்ற சனி திசை ஜாதகருக்கு நன்மை வழங்க இயலாததிர்க்கு காரணம் என்ன ?

 பொதுவாக துலாம் ராசியில் உச்சம் பெரும் சனி பகவான், தனது திசை மற்றும் புத்தி காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு கிழ்கண்ட ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வக்கிரக நிலையில் இருப்பதால் நன்மை தர இயலாது என்பதும் பாரம்பரிய ஜோதிடத்தின் கணிப்பு, ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சற்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!
நமது ஜோதிட முறை படி ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் எப்படி பட்ட நிலையில் இருந்தாலும் லக்கினத்திற்கு எவ்விதமான பலன்களை தருகிறார் என்பதை முதன்மையாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதே அடிப்படி விதி, பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்சம் போன்ற நிலைகளில் அமர்வது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கே, இந்த நிலை சுய ஜாதகத்தில் லக்கினத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்தாது என்பதே உண்மை, குறிப்பாக சில ஜாதகத்தில் சுப கிரகங்கள் ஆட்சி உட்சம் பெற்று இருக்கும், ஆனால் தனது திசை மற்றும் புத்திகளில் எவ்வித யோக பலன்களையும் தராமல் அவயோக பலன்களையே தரும்.

மேற்கண்ட ஜாதகத்தில் சனி ஆட்சி உச்ச நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு தனது திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மையை தராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம், சுய ஜாதகத்தில் சனி உச்ச நிலையில் இருந்தாலும் தனது திசையில் 1,7ம் வீடுகள் பதாக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று பலனை நடத்துவதே இதற்க்கு காரணம், பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது 200 மடங்கு இன்னல்களை தரும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து.  

 இந்த ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகமும் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை தரும் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை மற்றும் புத்தி காலங்களில், இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை சனி மற்றும் செவ்வாய் திசை,புத்தி காலங்களில் பாதக ஸ்தான பலனை நடத்துவதால் இங்கே உச்சம் பெற்ற சனி பகவானாலும் தனது திசையில் நன்மை செய்ய இயலாது, சமம் என்ற நிலையில் இருக்கும் செவ்வாய் பகவனாலும் தனது திசை,புத்தி காலங்களில் நன்மை செய்ய இயலாது என்பது உறுதியாகிறது.

 மேலும் ஜாதகருக்கு எவ்வித அமைப்பில் இருந்து தீமை நடை பெரும் என்பதை ஆய்வு செய்யும் பொழுது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாகவும், உபய நெருப்பு ராசியாகவும் வருவதால், ஜாதகர் தனது அவசர செய்கையினாலும், சுய கட்டுப்பாடு அற்ற தன்மையினாலும், பெரியவர்களின் சொல் பேச்சு கேளாமல் நடப்பதாலும், பெயருக்கும் புகழுக்கும் தனது ஆண் பெண் நண்பர்களால் அவ பெயர் உண்டாகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும், எனவே இந்த காலகட்டங்களில் ஜாதகர் பெரியோர் சொல் பேச்சு கேட்டு நடப்பது மிகுந்த நன்மை தரும், மேலும் தனது பித்ருகளுக்கு முறையான தர்ப்பன வழிபாட்டினை மேற்கொள்ளுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

மேற்கண்ட சனி திசை ஜாதகருக்கு சரியான பருவ வயதில் வருவதால், களத்திர பாவகம் வலிமை பெற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வதும், நல்ல நண்பர்களின் சேர்க்கையை வைத்துகொள்வதும், முடிந்த அளவிற்கு நண்பர்களின் தயவினை எதிர்பாராமல் வாழ்க்கை நடத்துவது நல்லது, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்தது செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை  தரும்.

குறிப்பாக மேற்கண்ட சனி திசை காலங்களில் கூட்டு முயற்ச்சியினை தவிர்ப்பது சால சிறந்து, கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வாரி வழங்கும், நண்பர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பத்தையும் தரும், மேலும் ஜாதகரின் லக்கினமும் பாதிக்க படுவதால் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் தோல்வியையே தரும், தன்னம்பிக்கை குறையும் சகோதர வழியில் இருந்து செலவுகள் வர கூடும்.

ஆக மேற்க்கண்ட சனிதிசை உச்சம் பெற்று வக்கிரகம் பெற்றதால் நன்மையை தரவில்லை என்று கணிப்பது முற்றிலும் தவறானது, சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலேயே தீய பலன்கள் நடை பெரும் என்பதே முற்றிலும் உண்மை.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


Wednesday, March 12, 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் ! சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435


Friday, February 28, 2014

பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோக ஜாதக நிலை !

பொதுவாக அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை விரும்பாத நபர்களே இல்லை எனலாம், அதிர்ஷ்டம் மூலம் வாழ்க்கையில் செல்வ வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடையும் அன்பர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதுண்டு, யார் செய்த புண்ணியமோ ஜாதகர் சகல நலன்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு, ஆக ஒருவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையில்லை, ஒருவரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் 5ம் பாவகத்திர்க்கு முக்கிய பங்கு உள்ளது.

 குறிப்பாக ஜோதிட ஆலோசனை பெற வரும் பல அன்பர்கள் எனக்கு பங்கு வர்த்தகத்தில் வருமானம் ஈட்டும் யோகம் உண்ட என்று கேட்பது வாடிக்கையானதே, இதற்க்கு உண்டான பதில் ஒருவருடைய சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும் 11ம் பாவகமும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பங்கு வர்த்தகத்தில் கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் என்பது உறுதியான விஷயம்.

சுய ஜாதகத்தில் 5ம் வீடு 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, 11ம் வீடு  5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ, ஜாதகர் பங்கு வர்த்தகம் சார்ந்த எந்த ஒரு தொழில் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், நினைத்து பார்க்க இயலாத லாபம் கிடைப்பது உறுதி, 5,11ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நுண் அறிவு திறனால் பங்குவர்த்தகத்தில் லாபம் ஈட்டும் யோகத்தை தரும் .

குறிப்பாக மிதுன இலக்கின ஜாதகருக்கு துலாமும்,மேஷமும் 5,11ம் பாவகமாக வரும், மிதுன லக்கினத்திற்கு துலமும்,மேஷமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பொது மக்கள் வாயிலாகவும், தனது சுய திறனை கொண்டும் லாபம் ஈட்டும் தன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகருக்கு பங்குவர்த்தக துறையில் தினசரி முதலீடு செய்வதால் தொடர்ந்து வருமானம் ஈட்டும் யோகம் உண்டாகும், நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால் ஜாதகருக்கு இரட்டிப்பு யோகம் உண்டாவது நிச்சயம்.

கன்னி இலக்கின ஜாதகருக்கு மகரமும், கடகமும் 5,11ம் பாவகமாக வரும், கன்னி லக்கினத்திற்கு மகரமும் கடகமும் வலிமை பெரும் பெரும் பொழுது ஜாதகர் செய்யும் தொழில் துறை சார்ந்த நிலைகளில் இருந்தும், சொத்து சுக அமைப்பில் இருந்தும் தனது அதிர்ஷ்டத்தின் மூலம் லாபம் ஈட்டும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகர் பங்குவர்த்தக துறையை சுய தொழிலாகவே ஏற்று நடத்தலாம் 100 சதவிகித வெற்றியை தரும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலாமும் 5,11ம் பாவகமாக வரும், தனுசு இலக்கின ஜாதகருக்கு மேஷமும்,துலமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது நண்பர்கள் வழியிலும், கூட்டு தொழில் அமைப்பில் இருந்தும் தனது சுய திறமையால் லாப வாய்ப்பை பெரும் யோகத்தை தரும் குறிப்பாக, ஜாதகருக்கு சம்பந்தம் இல்லாமலேயே பல இடங்களில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், பங்கு வர்த்தக துறையில் முதலீடு செய்வதால் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் உண்டாகும், மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் தனது சுய திறமையால் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகத்தை 100 சதவிகிதம் தரும்.

மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும்,மகரமும் 5,11ம் பாவகமாக வரும், மீன இலக்கின ஜாதகருக்கு கடகமும், மகரமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது தன்னிகரற்ற தொழில் திறனை கொண்டும், சிறப்பாக கற்ற கல்வி அறிவை கொண்டும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகம் உண்டாகும், பங்கு வர்த்தக துறையில் ஆலோசனை சொல்லும் சிறப்பு திறமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்றிருப்பர், இவர் சொல்லும் கணிப்புகள் யாவும் 100 சதவிகித வெற்றியை பங்குவர்த்தக துறையில் குறைவின்றி தரும். மேலும் நடை பெரும் திசை மற்றும் புத்தி 5,11ம் பாவகத்தின் பலனை செய்தால், ஜாதகர் குறுகிய  காலத்தில் பங்கு வர்த்தக துறையில் கொடி கட்டி பறக்கும் யோகத்தை தரும்.

மேற்கண்ட மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் எனும் உபய இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் சர ராசியாக அமைவதால் 100 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எனும் ஸ்திர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள்   ராசியாக அமைவதால் 35 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும், மேஷம்,கடகம்,துலாம்,மகரம் எனும் சர இலக்கின ஜாதகர்களுக்கு 5,11ம் பாவகங்கள் ஸ்திர  ராசியாக அமைவதால் 70 சதவிகித யோகத்தை மேற்கண்ட அமைப்பில் இருந்து வாரி வழங்கும்.

ஆக அன்பர்களே ! பங்கு வர்த்தகத்தில் ஜாதகர் வருமானம் பெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696

Saturday, February 8, 2014

இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் ! மேஷ லக்கினம்
ஒருவரின் பிறந்த சரியான நேரம், இடம், நாள் ஆகியவற்றை 
அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் லக்கினம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் யோகம் மற்றும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீடான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் அடையும் நன்மைகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் , மேஷ ராசி காலபுருஷ தத்துவத்திற்கு முதல் வீடாகவும், சர இயக்கம் கொண்ட நெருப்பு ராசியாக இருப்பதால் ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் மிகவும் துரிதமாகவும், சுறுசுறுப்பு நிறைந்தவராகவும் காணப்படுவார், மேஷ லக்கினத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், ஜாதகர் தனது செயல்களை திறம்பட செய்து வெற்றிகாணும் தன்மையை இயற்கையாகவே பெற்று இருப்பார், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் ஒரு நேர்த்தியையும், ஒழுக்கத்தையும் எதிர்ப்பார்க்கும் குணத்தை கொண்டு இருப்பார், லட்சியமுடன் ஒரு காரியத்தில் இறங்கி இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 ஜாதகரின் தோற்றம் என்பது மிகவும் கம்பீரம் நிறைந்த திடகாத்திரமான உடலமைப்பை இயற்கையாக பெற்று இருப்பார், அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு மற்றும் தேசஸ் ஜாதகரிடம் இயற்கையாகவே குடிகொண்டு இருக்கும், சுய கட்டுபாடு , நேர்மை தவறாமை, தனக்கு சரியென பட்டத்தை துணிவாக வெளிபடுத்து தன்மை, தம்மை நாடி வந்தவரை காக்கும் வல்லமை, எந்த ஒரு காரியத்தையும் நினைத்தவாறு செய்து முடிக்கும் பேராற்றல், தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் நன்மை செய்யும் குணம், பொது வாழ்வில் தூய்மையாக செயலாற்றும் யோக அமைப்பு, பிரதி பலன் பாராமல் உழைக்கும் தன்மை மற்றும் உதவும் மனப்பான்மை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும். 

மேஷ ராசியை லக்கினமாக பெற்று லக்கினம் வலிமையுடன் அமையும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்துவிடும், மேலும் அதித மனவலிமை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்திருக்கும், கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் உடல் மற்றும் மன வலிமை படைத்தவராக ஜாதகர் காணப்படுவார், தனது முன்னேற்றத்தில் ஜாதகருக்கு தீவிர ஆர்வம் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடாமல் முறையாக பயன்படுத்தி தனது முன்னேற்றத்தை செழுமையாக அமைத்தது கொண்டு வாழ்க்கையில் மற்றும் சமுகத்தில் நல்ல அந்தஸ்த்தை விரைவில் பெரும் தன்மையை பெறுவார்.

கால புருஷ தத்துவத்திற்கு முதல் ராசியாக மேஷம் வருவதால், ஜாதகரின் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து 100 சதவிகித யோகத்தை தங்கு தடையின்றி விரைவாக பெரும் யோகத்தை தரும், மற்றவர்களின் செயல் திறனுக்கும், ஜாதகரின் செயல் திறனுக்கும் பன்மடங்கு வித்தியாசம் இருக்கும், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்ற தன்மையை ஜாதகரின் உடலமைப்பிற்கு தந்துவிடும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்படும் பொழுது அதிலிருந்து விரைவாக குணம் பெரும் மன ஆற்றலை தரும், வலியை தாங்கும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்று இருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், மேலும் ஜாதகர் எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் மன வலிமை கொண்டவராக காணப்படுவார்.

 மேஷ ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மேஷ  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மேஷ லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696