Thursday, March 30, 2017

சத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாதிபதி ஜாதகருக்கு மிகுந்த பாதிப்பை தருவாரா ?


சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை சிறப்பாக அமைத்துத்தரும், குறிப்பாக சுபயோகங்களை ஜாதகர் பெறுவதற்கு யாதொரு தடைகளும் இருக்காது, சரியான நேரம் காலம் கூடி வரும்பொழுது யாருடைய உதவியும் இன்றி ஜாதகரே தன்னிறைவாக பெறுவார், எதிர்ப்புகள் இல்லாமல் சுப நிகழ்வுகள் யாவும் ஜாதகருக்கு தொய்வின்றி நடைபெறும், ஜாதகரின் நடவடிக்கையும் செயல்பாடுகளும் அனைவரும் மெச்சும்வண்ணம் இருக்கும், ஜாதகரும் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை, சுய கட்டுப்பாடு மற்றும் பண்பாடு கொண்டவராக திகழ்வார், வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார்.

சுய ஜாதகத்தில் லக்கினம் அல்லது லக்கினாதிபதி பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரே தனது  வாழ்க்கை முன்னேற்றமின்மைக்கு காரணகர்த்தாவாக விளங்குவார், ஜாதகரின் மனம் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டு இருக்கும், சிந்தனையும் செயல்திறனும் அற்று வீண் கற்பனையும் மனபயமும் கொண்டவராக காணப்படுவார், வரும் எதிர்ப்புகளை சந்திக்க திறன் இன்றி மற்றவர் ஆளுமையின் கீழ் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தரும், பொறுப்புகளை தட்டிக்கழிப்பதும், மற்றவர்கள் மீது காரணம் காட்டி தப்பித்துக்கொள்வதும், ஜாதகரின் வாழ்க்கையில் பல தோல்விகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், வாழ்க்கையில் நேர் வழியை கடைபிடிக்காமல், மாற்றுவழியில் சென்று தனது வாழ்க்கைக்கு பொருத்தமில்லா செயல்களை செய்து இன்னலுறும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களையும் ஜாதகர் பெற இயலாமல் வீண் விரயங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்பதில் இருந்தே லக்கினம் என்ற முதல் பாவகத்தின் வலிமை மற்றும் லக்கினாதிபதி பெரும் வலிமையின் அவசியம் நமக்கு  புரிய வரும்.

லக்கினம் என்பது மனிதனின் இதயம் போன்றது, இதயம் செயல் இழந்தால் எப்படி உயிர் இயக்கம் பெறாதோ ? அதைப்போன்றே லக்கினம் வலிமை குறைவது ஜாதகரின் இயக்கத்தை பாதிக்கும், சுய ஜாதகத்தில் பலவித யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பயனும் ஜாதகருக்கு கிடைக்காது, யோகங்கள் தரும் பாவக வழியிலான உறவுகள் ஜாதகரை பயன்படுத்திக்கொண்டு நன்மைகளை பெறுவார்கள், ஜாதகரின் ஆசைகள் யாவும் நிராசையாக மாற அதிக வாய்ப்புகள் உண்டு, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு, கன்னி ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் உள்ளார், லக்கினாதிபதி 6ல் மறைவு, லக்கினம் தொடர்பு பெறுவது விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் எனவே ஜாதகருக்கு லக்கினாதிபதியும் பாதிக்கப்பட்டு, லக்கினமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது, ஜாதகர் மனதளவில் எப்பொழுதும் கவலையும் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றார், சிந்தனையும் செயல்பாடுகளும் நம்பிக்கை அற்ற தன்மையுடன் இருப்பதால் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தருகின்றது, மற்றவர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகிறது, ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடங்கல், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தவிர்த்து, இன்னல்களை தரும் காரியங்களில் ஆர்வம் செலுத்தியதால், இன்று வரை ஜாதகர் ஓர் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டை பெற இயலவில்லை, திருமண வாழ்க்கையிலும் தடை, ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு என்றாலும் அவர் சத்ரு ஸ்தானத்தில் வலிமை அற்று அமர்வதால் நல்ல ஞானத்தை வழங்கவில்லை, சாஸ்திர ஞானம் அற்ற நிலையையும், தனது உடல் நிலையில் அக்கறை கொள்ளாத தன்மையையும் தருவது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை அற்ற  5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவதும், ராகு திசை ஜாதகருக்கு பருவ வயதில் வருவதும் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துகொண்டு இருக்கின்றது, குல தேவதையின் அருளாசி இன்மையும், ஜாதகருக்கு ஏற்படும் திடீர் இழப்புகளும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தருவது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் 8ம்  பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது ஜாதகரின் கூட்டாளி, நண்பர்கள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உடல் நிலையும் கடுமையாக பாதித்துக்கொண்டு இருக்கின்றது, இந்த நிலை இப்படியே நீடித்தால் ஜாதகர் ராகு திசை இறுதியில் கடுமையான நெருக்கடிகளை  சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது, அதாவது ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்தால், ஜாதகரின் வாழ்க்கையிலும் சுபயோகங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது, அதற்க்கான சாத்தியக்கூறுகள் சிறிது உள்ளது என்று சொல்லலாம் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகர் 2ம் பாவக வழியில் ( குடும்பம் ) இருந்து மட்டும் நன்மைகளை பெரிய அளவில் பெற இயலும், இறுதி வரை குடும்ப வாழ்க்கையை ஜாதகர் சிதைக்காமல் வாழ்வது அவர் முன் உள்ள சவாலாக இருக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினாதிபதி சத்ரு ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு பாதிப்படைந்து, ஜாதகருடன் சேர்பவரையும் பாதிப்படைய செய்யும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Wednesday, March 29, 2017

கணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அமையுமா ? ஒருவருக்கு நன்மையான பலன்கள் நடைபெறுவதற்கும், தீமையான பலன்கள் நடைபெறுவதற்கும் அவரவர் சுய ஜாதக வலிமையே காரணமாக அமையும், மேலும் ஒருவரின் ஜாதகம் மற்ற ஒருவருக்கு நன்மை தீமை பலாபலன்களையும் தாக்கத்தையும் தருகிறது என்றால்? அது கணவன் மனைவி ஜாதகங்களுக்கு மட்டும் சாத்தியம், ஆனால் பெற்ற குழந்தைகளின் ஜாதகம் வழியிலான இன்னல்களை பெற்றோர் அனுபவிக்கின்றனர் என்பது சற்று உண்மைக்கு புறம்பானதே, ஒருவேளை குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோர் இன்னலுற நேரும் என்றால், பெற்றோரின் ஜாதகம் மிகவும் வலிமை குறைவாக இருக்கும் என்பதே உண்மை நிலை, பொதுவாக குழந்தைகளின் ஜாதகம் பெற்றோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இல்லை ( குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே சிரமம் தர கூடும், அதுவும் பெற்றோரின் சுய ஜாதகம் வலிமை குறைவாக இருப்பதினால் மட்டுமே இது நடைபெறும் ) எனவே குழந்தைகள் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யாமல் பெற்றோரின் சுய ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சாலச்சிறந்தது, இதை ஓர் தம்பதியர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

கணவர் ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 5ம் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் களத்திர வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் வல்லமை பெற்றது, ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் அதிகமான மனஉளைச்சல் மற்றும் நிம்மதி இழப்பை ஜாதகர் வெகுவாக சந்திப்பார், ஜாதகருக்கு இரண்டு வாழ்க்கை துணை அமைந்தும் இருவரிடமும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார், தனது 2வது மனைவி வழியில் புத்திர பாக்கியத்தை பெற்றது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவாக வலிமையை காட்டுகிறது.

2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாய் வார்த்தை, பேச்சு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தமது குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் ( உண்மையில் குழந்தைகள் இந்த ஜாதகருக்கு சுபயோகங்களை தருகின்றனர் )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், பொருளாதார சரிவையும், தாங்க இயலாத மனப்போராட்டத்தையும் சந்திப்பர், பெரும் கவலைகள் ஜாதகரை வாட்டி எடுக்கும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை  குறிக்கும் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக சிதைக்கும்.

தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், குரு திசை ராகு புத்தி வலிமை அற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், தம்பதியர் தற்போழுது பிரிந்து இருக்கும் சூழ்நிலையையே தரும்.


மனைவி ஜாதகம் :


லக்கினம் : விருச்சகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம்

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 12ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், தனது கணவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் பெரும்பாண்மையானவை ஜாதகிக்கு மிகவும்  வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும்  ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசை மட்டுமே பாதிக்கப்பட்ட 10,12ம் பாவக  பலனை ஏற்று நடத்துகிறது, மேற்கண்ட தனது கணவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசையும், ஜாதகிக்கு நடைபெறும் திசையும் ஏக காலத்தில் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனையும், ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவதே தம்பதியரின் பிரிவுக்கு முழு முதற் காரணமாக அமைகிறது, அடுத்து வரும் சனி புத்தி ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தர கூடும் என்பது " ஜோதிடதீபத்தின் " எச்சரிக்கை.

மேலும் சனி புத்தி காலத்தில் ஜாதகி தன்னை விட வயதில் அதிகம் உள்ள  பெரியோர்கள் வார்த்தைகளை மதித்து நடப்பது சகல நலன்களையும் தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், நடைபெறும் திசைபுத்தி  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகர்  பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்பது மேற்கண்ட தம்பதியரின் ஜாதகம் கொண்டு தெளிவடையலாம்.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த ஓர் ஜாதகத்தை, அதை போன்றே பாதக ஸ்தானத்தால் பாதிப்படைந்த ஓர் ஜாதகத்துடன் இணைப்பது மாபெரும் தவறாகும், குறிப்பாக குடும்பம் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அதற்க்கு இணைசேர்க்கும் ஜாதகம் மிகுந்த வலிமையுடன் இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் , இல்லை எனில் இல்லற வாழ்க்கை வெகுவாக கசப்பை தந்து, குறுகிய காலத்தில் பிரிவை தரும், மேலும் தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது மிக முக்கியமான விஷயமாக அமைகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Sunday, March 26, 2017

தொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்குவரத்து ) தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஏன் ? தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலும், மற்ற பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டது நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் வழியிலான தொழிலை ஜாதகர் தேர்வு செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு பெரும் நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தனது ஜாதக வலிமையின் அடிப்படையில் தான் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழில் செய்யலாமா? அல்லது கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் உண்டாகுமா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகு, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் பிறகு, தொழில் வழியிலான முயற்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் ஓர் ஜாதகருக்கு குழப்பம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் கடுமையானதாக அமையும், ஜீவன வழியிலான முன்னேற்றங்களை பெற இயலாமல் ஜாதகர் இன்னலுறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், தொழில் ரீதியாக வரும் எதிர்ப்புகளும், முன்னேற்றம் இன்மையும் ஜாதகருக்கு வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு அதிகம், தங்களின் சுய நம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் இருந்தாலும், செய்யும் தொழிலை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் " பாடும் பட்ட மாதிரி வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு உதாரணமான அமைந்துவிடும், தங்களின் கடின உழைப்பும், அறிவு திறனும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்காமல், மற்றவர்களுக்கு பலன்தர ஆரம்பித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தொழில் முன்னேற்றம் என்பது ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் தன்னிறைவான முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்களுக்கு தருகின்றது எனில் தாங்கள் தேர்வு செய்த தொழில் தங்களுக்கு உகந்தது என்பதனையும், ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் யாதொரு முன்னேற்றம் இன்றி போராட்டத்தை சந்தித்து கொண்டு இருந்தால், ஜாதகர் தேர்வு செய்த தொழில் ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை உறுதியாக சொல்லிவிடலாம்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு நான்காம் ராசியான கடகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்தாம் ராசியான மகரமும் ஜாதகருக்கு முழு வலிமை பெற்றும், ஜாதகரின் லக்கினத்திற்க்கு சுக ஸ்தானமான நான்காம் பாவகம் மற்றும்  ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவகம் முழு வலிமை பெற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் ஜாதகருக்கு வலிமை பெற்ற மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ( ட்ரான்ஸ்போர்ட் ) எனப்படும் வண்டி வாகன தொழில் மிக சிறப்பாக அமையும், ஜாதகர் ஒரு வண்டியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் தொழில் அபிவிருத்தி பெற்று வண்டி வாகனங்கள் பெருகி தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழிலில் நம்பகத்தன்மை உடையவராகவும், நிலைத்து நின்று தொழில் புரியும் வல்லமை மிக்கவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகர ராசிகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை ஏதாவது ஒருவழியில் முன்னேற்றங்களை தந்து மிகப்பெரிய தொழில்களை திறம்பட நடத்தும் வலிமை மிக்கவராக செயல்பட வைக்கும் என்பதால், சுய ஜாதகத்தில்  மேற்கண்ட ராசிகள் பெரும் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான ( தொழில் ) வெற்றிகளை பெறுவதற்க்கு அடிப்படையாக அமையும், வாழ்க்கையில் சிரமமில்லா தொழில் வெற்றிகளை வாரி குவிக்க நல்லதொரு வாய்ப்புகளையும், தொடர்புகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கும்.

குறிப்பாக மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ( முறையே மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகரம் ) ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு வழங்கும், ஜாதகரின் வளர்ச்சி என்பது மற்றவர்களால் வியப்புக்கு உரிய வகையில் கவனிக்கப்படும், குறுகிய காலத்தில் பன்மடங்கு தொழில் வளர்ச்சியை பெற்று ஜாதகர் தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் பெறுவார், மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்துவது அவசியமாகிறது, மேற்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்தி வலிமை பெற்ற ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகத்தில் ஜீவன பாவகம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் யாதொரு பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்க.

குறிப்பு :

எது எப்படி இருப்பினும் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து, அதில் வெற்றி பெறுவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், சுய ஜாதக வலிமையை உணராமல் மற்றவர்கள் செய்கின்றனர் அதனால் நானும் செய்கிறேன் என்பது " எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போகிறார் " என்ற கதைக்கு பொருத்தமானதாக மாறிவிடும் என்பதனை நினைவில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

Saturday, March 25, 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெற.....


இறை அருள் அனைவருக்கும் எப்பொழுதும் தனது அருள் கரங்களை கொண்டு, வேண்டும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்க தயாராக இருப்பதை இறை அருள் நிரம்ப பெற்ற திருகோவில்களில், சிலை வடிவில் உள்ள இறைவனை காணும் பொழுது நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக உணர இயலும், "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதனை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இறை அருளின் பரிபூர்ண கருணையை பெற அடித்தளமாக அமையும் பாவகங்கள், லக்கினம் எனும் முதல் பாவகம், பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம், மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் இறை அருளின் கருணை சற்று அதிகம் என்றே சொல்லலாம், இவர்களுக்கு தடைகள் என்பது எதுவும் இல்லை என்ற நிலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், செய்யும் காரியங்கள் யாவிலும் சத்தியத்தை கடைபிடிக்கும் உத்தம நிலையை தருகிறது, சரியானதை லக்கினம் தேர்வு செய்கிறது, சிறப்பான நன்மைகளை பூர்வபுண்ணியம் வழங்குகிறது, நன்மைகள் வழியிலான பூர்ணகதியை பாக்கிய ஸ்தானம் நல்குகிறது, எனவே ஜாதகர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தேடி செல்லாமல், தம்மை தேடிவரும் வழியிலான செயல்களை செய்து சிறப்படைகிறார், எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது, எந்த ஓர் சூழ்நிலையிலும் இறையருளின் கருணையினால் ஜாதகர் நிலையான சுபயோக வாழ்க்கையை பெறுகிறார்.

சுய ஜாதகத்தில் உள்ள வலிமை வலிமை அற்ற நிலையை, யோகம் அவயோகம், தனது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மை தீமை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஜாதகர் துல்லியமாக அறிந்துகொள்ளவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னிலை முழுவதும் உணர்ந்தவராக திகழ்வார், வீண் கற்பனையில் காலத்தை எதிர்கொள்ளாமல், தனது சுய வலிமையையும், தனது திறமை மற்றும் தகுதியும் உணர்ந்து செயல்படும் யோகம் பெற்றவராக இருப்பார், குறிப்பாக தனது பிறவியின் நோக்கம் அறிந்து செயல்படும் வல்லமை பெற்றவராக திகழ்வார், மேற்கண்ட பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் சிறு வயது முதலே மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்வார், மனதிற்கு அப்பாற்ப்பட்ட, புலனறிவுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிலும் தெளிவு, அறிவார்ந்த செயத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி இவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும்.

நல்ல மனிதர்கள் சேர்க்கை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் அறிமுகம், ஆன்மீக பெரியோர்களின் ஆசி, குலதெய்வ அனுக்கிரகம், பித்ருக்கள் நல்லாசி ஆகியவற்றை பெற சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தனக்கு உகந்த விஷயங்களையும், தனக்கு உகந்த காரியங்களையும் தேர்வு செய்வதற்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமை மிக மிக அவசியமாகிறது, வருமுன் உணரும் சக்தியும், விளைவு அறிந்து செயல்படும் வல்லமையும் மேற்கண்ட பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு அமைகிறது, மேலும் தனக்கு வரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களை இறைவழியில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறவும், தன்னால் சாதிக்க இயலும் செயல்களை தேர்வு செய்து முன்னேற்றங்களை பெறவும் லக்கினம்,பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையே ஓர் ஜாதகருக்கு அடிப்படை உந்துதலாக இருக்கின்றது.

கால நேரம் அறிந்து செயல்படும் தன்மையும், சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவாக அறிந்து உணர்ந்து செயல்படும் வல்லமையையும், வாழ்க்கையில் வரும் சுப யோகங்களை தெளிவாக உணர்ந்து அதன் வழியிலான நன்மைகளை பெரும் ஆற்றலும் ஓர் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாகவும், முன்னேற்றம் மிகுந்ததாகவும் அமைத்துக்கொண்டு 100% விகித சுபயோகங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Wednesday, March 22, 2017

ராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, புத்திரபாக்கியத்தை வழங்காதா ?சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம்  பாவகத்தில் சாயா கிரகமான, ராகு அல்லது கேது அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, ஜாதகிக்கு புத்திர பாக்கிய தடைகளை தரும் என்பதும், புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாத நிலையை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தனது ஆளுமையின் மூலம் புத்திர பாவகத்திற்கு வழங்கும் வலிமை அல்லது வலிமை இன்மையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் பொது கருத்து என்பதை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு "ஜோதிடதீபம் " தெளிவு படுத்த விரும்புகிறது, சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேது புத்திர பாவகத்தில் அமர்ந்திருக்கும் பல ஜாதகங்களை புத்திர பாக்கியம் கிடையாது என்று திருமண பொருத்தத்தில் நிராகரிப்பதும், ஜோதிட உண்மைக்கு புறம்பானது.

 ஒருவருக்கு புத்திர ஸ்தானத்தில்தான் ராகுகேது அமர்ந்து இருக்கின்றதா? என்பதில் முதலில் தெளிவு பெறுவது அவசியம், அப்படி புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கின்றனரா? அல்லது வலிமை இழக்க செய்கின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது மிக மிக முக்கியமான அம்சமாக கருதவேண்டியுள்ளது, ஏனெனில் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி யாதொரு தெளிவும் இன்றி, குத்துமதிப்பாக புத்திரபாவகத்தில் ராகுகேது அமர்வது புத்திரபாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வதே அன்றி உண்மை சிறிதும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை பெற செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசு உண்டு, ஒருவேளை புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க  செய்தால் ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்ய இயலாது, ஏனெனில் தனது  வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்கிறாரா ? என்பதையும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் மற்றும் ஆண் வாரிசு அமைப்பை நிர்ணயம் செய்வதே துல்லியமானதாக அமையும்.   லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

 ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் ( 5ம் பாவகத்திற்க்கு உற்பட்ட பாகைக்குள் ) ராகு பகவான் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு அழகான, யோகம் நிறைந்த நல்ல ஆண் வாரிசை வழங்கி உள்ளது, மேலும் ஜாதகரின் முன்னேற்றம் என்பது தனது ஆண் வாரிசு மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் ஆண் வாரிசு வளர வளர ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை தொடர்ந்து வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து இருந்த போதிலும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு ஆண் வாரிசை மட்டும் அல்ல சமயோசித புத்திசாலித்தனத்தையும் வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஆதவனை கண்ட பனிபோல் நீக்கும் அறிவு திறனையும், இறை அருளின் கருணையையும் வாரி வழங்கி இருக்கின்றது, தான் கற்ற கல்வியை ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் வல்லமையை பெற்று இருப்பது வியப்புக்கு உரியது, ஜாதகரின் தெளிவான சிந்தனை, அறிவில் விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படும் தன்மை என 5ம் பாவக  வழியிலான சுப யோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ராகு 5ல் வலிமை பெற்று அமர்வது போல், கேதுவும் ஜாதகருக்கு 11ல் வலிமை பெற்று அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, ஜாதகர் தனது லட்சியம் ஆசை என விருப்பம் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் தன்னிறைவான யோகங்களை பெறுவதற்கு, சுய ஜாதகத்தில் வலிமை பெற்று 11ம் பாவகத்தில்  அமர்ந்து இருக்கும் கேது பகவானே முழுமுதற் காரணகர்த்தாவாக திகழ்கிறார், எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது அமரும் பாவகம் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களால் ஏற்படும் யோகம் மற்றும்  அவயோகத்தை பற்றி மிக துல்லியமாக கூற வழிவகுக்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால், மேற்கண்ட பலாபலன்களை எதிர்மறையான அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Saturday, March 18, 2017

சனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து தரும் நன்மை தீமை. கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி, தனது திசையில் இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் நடைபெறும் சனி திசை தரும் பலன் ( சனி தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு ) பற்றி ஓர் தெளிவில்லாமல் கூறப்படும் கருத்தாகவே இருக்கும், ஒருவருக்கு சனி திசை நடைபெறும் பொழுது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் ஏற்று நடத்தும் பாவக வழியிலான நன்மைகளையும், வலிமை அற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான இன்னல்களையும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான வழியிலான கடுமையான நெருக்கடிகளையும் ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்டவற்றை கருத்தில் கொள்ளாமல் சனி திசை என்றாலே இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பானது என்பத உறுதியாக கூற இயலும், சனி திசை தரும் யோக அவயோகம் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகம் உண்மையிலேயே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 2,4,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடனும், 1,5,7,9,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருந்த போதிலும், கடந்த குரு திசை, தற்போழுது நடைபெறும் சனி திசை, எதிர்வரும் புதன் திசை, கேதுதிசை, சுக்கிரன் திசை வரை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்துகிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பெரும்பான்மையான பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், சூரியன்,சந்திரன் மற்றும் ராகு திசாபுத்தியை தவிர மற்ற அனைத்து திசா புத்திகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது அதிசயமான விஷயம் என்பது ஜோதிடம் உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும் என்பதுடன் வியப்பை தரக்கூடும்.

இன்றைய சிந்தனைக்கு வருவோம் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? ஜாதகர் சிம்ம லக்கினம் சனி சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற நிலையை பெற்ற போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ 3ம் ராசியான மிதுனத்தில் ஆரம்பித்த போதிலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படும் கடக ராசியில் முழுமையாக வியாபித்து, ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை பன்மடங்கு அதிகரித்து தருகின்றது, ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும்பான்மையான பாகைகள் ( 26 பாகைகள் ) கடக ராசியிலே வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு லாப ஸ்தான வழியிலான யோகங்களை முழு வீச்சில் செய்யும், அதுவும் தற்போழுது நடைபெறும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் மிக சிறப்பான நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சிம்ம லக்கினத்திற்கு சனி திசை நடைபெற்றால், ஜாதகரின் நிலை மிகவும் மோசமாகும் என்று பொது கருத்தாக கூறுவது உண்டு, மேற்க்கண்ட ஜாதகருக்கு சனி திசையே வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது  பொது பலன் காணும் அன்பர்களுக்கு மிகப்பெரிய  அதிர்ச்சியை தர கூடும், ஆகவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் சரி சம்பந்தப்பட்ட திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலாபலன்கள் காண்பதே துல்லியமான சுய ஜாதக பலாபலன்கள் காண உதவும்.

மேற்கண்ட ஜாதகருக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு அது சனி திசைக்கு அடுத்து வரும் புதன்,கேது ,சுக்கிரன் திசைகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், சுய ஜாதகத்தில் ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் ஜாதகருக்கு ஜாதகமாக இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

ஜாதகர் எந்த தொழிலை தேர்வு செய்வது என்ற கேள்வியை முன் வைக்கிறார், அவருக்கு " ஜோதிடதீபம் "  வழங்கும் ஆலோசணையாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிக்கும் தொழில்களை தேர்வு செய்து செய்யும் பொழுது ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும், அதன் அடிப்படையில் ஜாதகர் அழிவை சந்திக்கும் நீர்த்துவ பொருட்களான பால்,காய்கறி, மளிகை, உணவு தொழில், தேநீர் நிலையம், பால் பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய பொருட்கள், அரிசி வியாபாரம் போன்ற தொழில்களை, தனக்கு உகந்ததை தேர்வு செய்து சிறு வியாபாரமாக ஆரம்பித்து வாழ்க்கையில் வெற்றி காணலாம், மேலும் அதன் வழியிலான அதிர்ஷ்டங்களையும் ஜாதகர் தன்னிறைவாக பெறலாம் என்பதே " ஜோதிடதீபம் " ஜீவன ரீதியாக ஜாதகர் வெற்றி பெற வழங்கும் சிறப்பு ஆலோசனை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Friday, March 17, 2017

ராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா ? குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வதும், அப்படி அமரும் சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அனைத்தும் அடைபடுவதையு காலசர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கின்றனர், மேற்கண்ட வீடுகளில் அமரும் சாயா கிரகங்கள் ஜாதகருக்கு நாகதோஷம், சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம் என்று கூறுவதும் உண்டு, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு, அதை போன்றே சர்ப்ப தோஷம், நாகதோஷம், ராகுகேது தோஷம் உள்ள ஜாதகத்தையே திருமண வாழ்க்கையில் இணைப்பது உகந்தது என்ற கருத்தையும் சொல்வது உண்டு, மேலும் திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட தோஷங்கள் காரணமாக அமையும் என்ற கருத்தையும் முன்வைப்பது உண்டு, திருமணத்திற்கு பிறகு புத்திர பாக்கிய குறைபாடுகளையும் மேற்கண்ட தோஷங்கள் தரும் என்றும் கூறுவது உண்டு, மேற்கண்ட கருத்துக்கள் யாவும் சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி கருத்தில் கொள்ளாமலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமலும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொள்ளாமலும், கூறப்படும் பொதுப்பலன்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வது மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களை தந்து விடாது, தான் அமர்ந்த பாவகத்தை முழுமையாக தனது ஆளுமைக்கு கொண்டுவரும் சாயாகிரகங்கள், சம்பந்தப்பட்ட பாவகத்தை பாதிப்பை தரும் நிலையில் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களையும், துன்பத்தையும் தரும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின், யாதொரு இன்னல்களையும் தாராமால், ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை 100% விகிதம் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமரும் சாயா கிரகம் தரும் யோக அமைப்பை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 
லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் முறையே ராகுவும் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர், லக்கினத்தில் அமர்ந்த ராகு ஜாதகிக்கு தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் லக்கினம் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, களத்திர பாவகத்தில் அமர்ந்த கேதுவும் தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, இதனால்  ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து நல்ல உடல் ஆரோக்கியம், மனவலிமை, புகழ் கீர்த்தி, புத்திசாலித்தனம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய முயற்சியில் வெற்றி பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான  நன்மைகளை  100% விகிதம் பெறுகின்றார்.

களத்திர பாவகத்தில் வலிமை பெற்று அமரும் கேது பகவானால், ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், மக்கள் செல்வாக்கு, பெயரும் புகழும் தேடிவரும் யோகம், கைராசி, செய்யும் தொழில் மூலம் பிரபல்ய யோகம், செல்லும் இடங்களில் ஜாதகிக்கு தேடிவரும் உதவிகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், பரந்த மனப்பக்குவம், எண்ணத்தின் வலிமை மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் கேது பகவான் ஜாதகிக்கு வாரி வழங்குவார்.

ஜாதகியின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் ராசியாகவும், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான  4ம் ராசியாகவும் வலிமை பெற்று இருப்பது மேற்கண்ட லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில்  வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில்  வழியில் நேர்மை மற்றும் உண்மையை கடைபிடிக்கும் வல்லமை, மற்றும் தொழில் வழியில் ஜாதகி காட்டும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஜாதகிக்கு மிதமிஞ்சிய யோக வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து ராகு பகவானால்  பெறுவார், களத்திர பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர் வழியிலான அதிர்ஷ்ட வாழ்க்கையையும் ஜாதகி முழு அளவில் பெறுவார், வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை , வசதி மிக்க நல்ல வீடு, சிறந்த குணநலன்கள், வெளியூர் வெளிநாடுகளில் சிறப்பு மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் வலிமை பெறுவது சாயா கிரகங்களான ராகுகேதுவின் வலிமை மிக்க ஆளுமையினால்  என்றால் அது மிகையில்லை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது  100% விகிதம் வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பதால், மேற்கண்ட ஜாதகி சாயா கிரகங்களால் யோக பலாபலன்களையே அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், பலரது கருத்துப்படி மேற்கண்ட ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு கேது திருமண வாழ்க்கையை தடை செய்வதாக  கூறியிருக்கின்றனர், உண்மையில் ஜாதகியின் திருமணம் தாமதம் ஆக காரணமாக இருப்பது தற்போழுது நடைபெறும் குரு திசையும், சனி புத்தியுமே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் குரு திசையும் ஜாதகிக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது, சனி புத்தியும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகிக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலன் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகி எதிர்பாராத வகையில், முழு யோகம் நிறைந்த நல்லதொரு வாழ்க்கை துணையை நிச்ச்யம் பெறுவார், திருமணம் தாமதம் ஆவதும் ஜாதகிக்கு ஓர் வகையில் சுபயோகங்களை தரும், மேலும் திருமணம் தாமதம் ஆக காரணம் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசைபுத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே காரணமாக அமைகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Thursday, March 16, 2017

குரு திசை வழங்கும் யோக பலன்கள் ! லாப ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை !


 சுய ஜாதகத்தில் குரு திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோக அமைப்பை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது உண்டு, குரு திசை ஒருவருக்கு நடைபெறும் பொழுது அவருக்கு நன்மையான பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்து, இது உண்மைக்கு புறம்பானது என்ற போதிலும், நடைபெறும் குரு திசை ஒருவருக்கு சுப யோகங்களை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

எந்த ஓர் ஜாதகத்தில் நவகிரகங்களின் திசைபுத்தி ( சுபர் அசுபர் ) தனிப்பட்ட நன்மை தீமைகளையும், யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றதல்ல என்ற அடிப்படை விஷயத்தை முன் வைத்து இந்த பதிவை தொடர்கிறது " ஜோதிடதீபம் " உண்மையில் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை ஏற்றே நவ கிரகங்களின் திசாபுத்திகள் யோக அவயோக பலாபலன்களை வழங்குகிறது என்பதால், சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக பலன்களையும், சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் நிலையை தருகிறது, இதை மறுத்து சுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு யோக பலன்களையும், அசுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு அவயோக பலன்களையும் தரும் என்ற வாதம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலை உணராமல் கூறும் பொது பலன்களாகவே கருத வேண்டி உள்ளது, கிழ் கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை, அடுத்து வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம்.

ஜாதகருக்கு குரு திசை ( 07/02/2007 முதல் 07/02/2023 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், ஜாதகர் நினைத்தபடி நிகழ்வுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தன்னம்பிக்கையும் தைரியமும் வெகுவான  லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனை, செய்யும்  காரியங்களின் புதுமையை விரும்பும் மனநிலை என ஜாதகர் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார்.

குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துவதும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடான கடகம் ஜாதகருக்கு லாப ஸ்தானமாக அமைவது ஒரு வகையில் வண்டி வாகன யோகம், வீடு, நிலம், இடம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை என்ற வகையிலும் சுபயோகங்களை தரும், தனது தாய் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகர் இந்த குரு திசை காலத்தில்  தடையின்றி பெறுவார், தனது எண்ணத்தின் வலிமையை வெற்றிகரமான சாதனைகளுக்கு மூலதனமாக பயன்படுத்தும் யோகம் பெற்றவராக மாற்றும் வல்லமையை தரும்  தற்போழுது நடைமுறையில் உள்ள குரு தசை என்பது மேற்கண்ட ஜாதகத்தில் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம். ( தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனை தருவது இன்னல்களை தரும் அமைப்பாகும் )

ஜாதகருக்கு எதிர் வரும் ( 07/02/2023 முதல் 07/02/2042 வரை ) சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பதும் மிகுந்த யோகத்தை தரும் அமைப்பிலேயே உள்ளது அதாவது 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் , 8ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் தருவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே எதிர்வரும்  ( இயற்க்கை பாவியான ) சனி திசையும் ஜாதகருக்கு பாக்கியம் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுப யோகங்களையே வாரி வழங்குகிறது என்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 9,10ம் பாவக பலனை ஏற்றுநடத்துவதில் இருந்து தெளிவாகிறது.

குறிப்பு :

நவகிரகங்கள் தனது திசையில் தரும் பலன்களை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அவர்கள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பை கருத்தில் கொண்டு  நிர்ணயம் செய்வதே மிக சரியான அணுகு முறை, இதை தவிர்த்து பொது பலன் கூறுவது என்பது, ஜோதிட கணிதத்தின் உண்மை நிலையை புரியாமல் சொல்லும் வாய்ஜாலம் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Wednesday, March 15, 2017

செவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையைதான் தேர்வு செய்ய வேண்டுமா ?


 செவ்வாய் தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருப்பின், அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருப்பதே திருமணம் வாழ்க்கைக்கு நல்லது, இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், தம்பதியர் ஒற்றுமை குறையும், குறிப்பாக மணமகன் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தை விட மணமகள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் சற்று வலிமை குறைவாக இருப்பது நல்லது, செவ்வாய் தோஷம் என்பது ஜாதகத்தில் 2,4,7,8,12ல் இருப்பின் அந்த ஜாதகரோ ஜாதகியோ செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்படுவார்கள், என்ற  விஷயங்கள் யாவும் காலம் காலமாக மக்களிடம் பரவலாக உள்ள மூட நம்பிக்கை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, தங்களின் ஜாதகத்தையே இந்த செவ்வாய் தோஷம் சார்ந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் 7ல் அமர்ந்து இருப்பதால் கடுமையான செவ்வாய் தோஷம் என்றும், இதனால் தாங்கள் செவ்வாய் தோஷம் உள்ள வாழ்க்கை துணையையே தேர்வு செய்ய வேண்டும் என்பதனை, தங்களின் கேள்வியில் இருந்தே தெளிவாக அறிய முடிகிறது, ஆனால் தங்களின் ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தங்களுக்கு தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்து இருக்கின்றார் என்பது மற்றவர்களின் கூற்று, இதில் உண்மை இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து பொதுவாக ஓர் பாவகம் ஆரம்பிக்கும் பாகை, முடிவுறும் பாகை ஆகிய விஷயங்கள் தெளிவாக தெரிந்த ஜோதிடர்களுக்கு மேற்கண்ட குழப்பம் வர சிறிதும் வாய்ப்பில்லை, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு மீன ராசியில் 347:04:48 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:22:32 பாகையில் முடிவடைகிறது, தங்களது களத்திர பாவகம் மீன ராசியில் 13 பாகையும், மேஷ ராசியில் 17 பாகையும் கலந்து நிற்கின்றது, செவ்வாய் பகவான் தங்களது ஜாதகத்தில் 339:17:46 பாகையில் நிற்கின்றார், எனவே செவ்வாய் மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை.

இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் ( மீன ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் ) அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதியாகிறது, எனவே சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமரவில்லை, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றார் எனும் பொழுது, இங்கு செவ்வாய் தோஷத்திற்கு கூறும் விதி முறைகள் யாவும் பொய்த்து போகின்றது, 7ல் செவ்வாய் அமர்வதே செவ்வாய் தோஷம் ( உண்மைக்கு புறம்பானது )  என்றால் , தங்களது ஜாதகத்தில் செவ்வாய்  6ல் அமர்ந்து இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதே சரியானது, ஆகவே செவ்வாய் தோஷம் என்ற விஷயம் தங்களது ஜாதகத்திற்கு  பொருந்தி வாராது.

செவ்வாய் தோஷம் என்ற மாயையை களைந்து சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு வாழ்க்கை துணையை தாங்கள் தேடுவதே சாலச்சிறந்தது என்று  அறிவுறுத்த ஜோதிட தீபம் விரும்புகிறது, தங்களது திருமணம் தாமதமாக செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பது உறுதி, திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பரே, 

தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களது திருமண வாழ்க்கை தாமதமாக முழு முதற்காரணமாக அமைகிறது என்பதே உண்மை, எனவே அதற்க்கான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான வழியில் ஜாதகர் பெரும் நன்மைகள் !சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி ( நவகிரகங்களின் திசாபுத்தி எதுவென்றாலும் சரி ) வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சம்பந்தப்பட்ட, ஜாதகருக்கு தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கையில் பலவித நன்மைகளும் சுப யோகங்களும் தொடர்ந்து நடைபெறும். கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் சந்திரன் திசை நடைபெறுகின்றது, தனது திசையில் ஜாதகருக்கு சந்திரன் வழங்கும் பலாபலன்களை பற்றி சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! மேலும் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் எவை ? வலிமை பெற்ற வீடுகள் எவை ? என்பதையும் சற்று தெளிவாக காண்போம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது, 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  அடிப்படையிலே வலிமையான ஜாதகர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கேந்திரம் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம்  வீடுகள் வலிமை பெறுவது, ஓர் நாற்காலியில்  நான்கு கால்களும் வலிமை  மிக்கதான ஸ்திர தன்மையை பெற்று இருக்கும், மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர் தனது வாழ்க்கையில் எந்த ஓர் சூழ்நிலையிலும் தோல்வியை தழுவாத யோக வாழ்க்கையை தரும், செய்யும் செயல்களில் வெற்றி, ஸ்திரமான அறிவு திறன், ஆரோக்கியமான உடல் நிலை,  நிலையான சொத்து, வண்டி வாகன யோகம், நல்ல குணம், நல்ல நண்பர்கள், சிறந்த வெளிவட்டார பழக்க வழக்கம், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், ஸ்திரமான ஜீவன முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, சிறந்த  வாத திறமை, செய்யும் தொழில் அல்லது பணியில் வெற்றி, உயர் பதவி யோகம், என்றவகையில் சுப யோகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு இந்த அமைப்பு ( கேந்திர ஸ்தான வலிமை ) இருப்பது, ஜாதகரின் ஸ்திரமான வெற்றிகளை குறிக்கிறது, அடுத்து 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், தைரியம் மனஉறுதி இரண்டையும் தனது  சொத்தாக பாவிப்பவர் என்பது தெளிவாகிறது, மேலும்  தான் செய்யும் எந்த ஓர் காரியத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பவர், ஒழுக்கம் நிறைந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, சகல செல்வங்களையும் பெரும் யோகம், எதிரிகளை  வெல்லும் வல்லமை, சத்தியத்தை மதித்தல், சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வம் மற்றும் புதுமை விரும்பி என்பதை தெளிவு படுத்துகிறது.

5,11ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்திலே மிகவும் உயர் ரக யோகங்களை வழங்கும் அமைப்பாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது ( மீன ராசியில் 355:05:14 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 28:06:04 பாகையில் முடிவடைகிறது ) மேஷ ராசியிலே அதிகம் வியாபித்து இருக்கின்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், இதனால் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டங்கள்  மற்றும் லாபங்கள் முழு அளவில் ஜாதகருக்கு வந்து சேரும், மேலும் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், சர நெருப்பு  தத்துவ ராசியில் அமைவதும் ஜாதகருக்கான யோக பலன்களை விரைவாகவும், தன்னிறைவாகவும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், அப்படி பட்ட யோகங்களை தரும் 5,11ம் பாவக பலனை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது என்பது வரவேற்க தக்க விஷயமே, மேலும் ஜாதகர் சந்திரன் திசை முழுவதும் 5,11ம் பாவக வழியிலான சுப யோகங்களை பெறுகிறார் என்பது சிறப்பு அமசமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெறும் சந்திரன் திசை சுப யோகங்களை வழங்குவது சிறப்பு என்ற போதிலும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின்  நிலையையும் கருத்தில் கொள்வது நல்லது, ஏனெனில் வலிமை அற்ற பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் தவிர்த்தால் மட்டுமே, தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வழங்கும் லாப ஸ்தான பலனை முழுமையாக ஜாதகர்  பெற இயலும், ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 2,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தரும், 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,9ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை தரும், எனவே ஜாதகர் சுய ஜாதகத்தில் 2,6,8,9,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிப்பார்  என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை வழங்கிய போதிலும், சனி புத்தி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 6ம் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்தது அல்ல, ஜாதகர் 5,11ம் பாவக வழியில் நன்மைகளையும், 6ம் பாவாக வழியில் கடுமையான இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை அற்று காணப்படுவது நன்மை தரும் அமைப்பு அல்ல, பாதகஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது கடுமையான இன்னல்களை தரும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் பாதிக்கப்பட்டும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் பித்ரு சார்ந்த சாபங்களை  தரும், மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  10ம் வீடாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன சார்ந்த இன்னல்களும் பெயருக்கு களங்கத்தையும்  தரக்கூடும், என்பதால் ஜாதகர்  முறையான  பித்ரு வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Tuesday, March 14, 2017

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ? இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட காரணம் என்ன ?திருமணம் தாமதம் ஆக சுய ஜாதக ரீதியாக ( வரனுக்கோ, வதுவுக்கோ ) பல காரணங்கள் உண்டு, அவற்றிக்கு அடிப்படையாக சுய ஜாதகத்தில் பாவக வலிமை இன்மையே காரணமாக அமையும் என்ற போதிலும், கீழ்கண்ட காரணங்களால் ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக வாய்ப்புகள் உண்டு.

1) சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை இன்றி இருப்பின், திருமணம் தாமதமாகும்.

2) சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை இன்றி இருப்பின், திருமணம் தாமதமாகும்.

3) சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம், களத்திர ஸ்தானம்  எனும் ஏழாம் பாவகம் வலிமை இன்றி இருப்பின், திருமணம் தாமதமாகும்.

4) நடைபெறும் திசைபுத்தி பாதிக்கப்பட்ட குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம், களத்திர ஸ்தானம்  எனும் ஏழாம் பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதமாகும்.

5) சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம், களத்திர ஸ்தானம்  எனும் ஏழாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் திருமணம் தாமதமாகும்.

6) நடைபெறும் திசைபுத்தி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற குடும்ப ஸ்தானம் அல்லது களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதமாகும்.

7) நடைபெறும் திசைபுத்தி பாதிக்கப்பட்ட மற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதமாகும்.

8) சுய ஜாதகத்தில் கேந்திரம் மற்றும் கோணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் திருமணம் தாமதமாகும்.

9) சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

10) சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக வழியிலான உறவுகள், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வரன் அல்லது வது தேடினாலும் திருமணம் தாமதமாகும்.

11) ஜாதகரின் எதிர்பார்ப்புகள்  என்பது சுய ஜாதக  வலிமைக்கு ஒத்து வாராத அமைப்பில் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

12 ) தனக்கு உகந்த திசை அமைப்பு இல்லாத வீட்டில் குடியிருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

13) கண் திருஷ்ட்டி, மற்றவர்கள் மூலம் வரும் சூட்சம பாதிப்பின் காரணமாகவும் திருமணம் தாமதமாகும்.

14) சுய ஜாதகத்த்தில் உள்ள களத்திர ஸ்தான தொடர்பு தெரிவிக்கும், திசை சார்ந்து வரன் வது தேடாமல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

15) சுய ஜாதகத்தை தானே கெடுத்து கொள்வதாலும், அவயோகம் பெற்ற ஜாதகத்துடன் சேர்க்கை பெறுவதினாலும் ( முறையற்ற எதிர்பாலின சேர்க்கை ) திருமணம் தாமதமாகும்.

திருமணம் தாமதம் ஆக இன்னும் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம் என்ற போதிலும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமண தாமதத்திற்கு காரணம் அறிந்து  சரியான தீர்வுகளை தேடுவதே சாலச்சிறந்தது.

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !லக்கினம் : சிம்மம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்

 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகளின் தொடர்பு  :

2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் உள்ளது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் உள்ளது.

7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் உள்ளது.

8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7 ம் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், கடந்த ராகு திசை ( 09/04/1997 முதல் 10/04/2015 வரை ) 18 வருடமும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை  பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலனை ஏற்று நடத்தி திருமண வாழ்க்கை அமைய வாய்ப்பு இல்லாமல் தடைகளை வாரி வழங்கி இருக்கின்றது, ஜாதகர் திருமணத்திற்க்காக எடுத்த முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியையே தந்து இருக்கின்றது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் இருந்தாலும்,  நடைபெரும் திசாபுத்தி வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும் திருமண வாழ்க்கை அமையாது, எனவே  திருமண தடைக்கான உண்மை காரணத்தை சுய ஜாதகம் கொண்டு தெளிவாக அறிந்துணர்ந்து, அதற்க்கன முறையான  பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு திருமண தடைகளை தகர்த்து எரிந்து, இல்லற வாழ்க்கையில் நலம்  பெறுவது  அவசியமாகிறது .

குறிப்பு :

திருமணத்திற்கு வரன் வது தேடும் பொழுது சுய  ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடனும், நடைபெறும் திசைபுத்தி, எதிர்வரும் திசைபுத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பிலான ஜாதகங்களை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, திருமண வாழ்க்கையிலான  சுபயோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Monday, March 13, 2017

சிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான சனிதிசை தரும் பலாபலன்கள் என்ன ?


கேள்வி :

சிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதியான சனிதிசை நடைபெறுகிறது, சனி திசை வழங்கும் பலாபலன்கள் என்ன?

பதில் :

தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை தரும் பலன்களை தெளிவுற அறிந்து கொள்ள, சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, சனி எந்த பாவக அதிபதி? அவர் எங்கு அமர்ந்து இருக்கின்றார் ? என்பது முக்கியமல்ல தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ? என்பதே சம்பந்தப்பட்ட கிரகம் தரும் யோக அவயோக பலாபலன் பற்றி தெளிவு பெற உதவும், தங்களுக்கு சனி தசை ( 13/12/2014 முதல் 13/12/2033 வரை ) நடைமுறையில் உள்ளது, மேலும் சனி திசையில் சனி புத்தி ( 13/12/2014 முதல் 16/12/2017 வரை ) நடப்பில் உள்ளது மேற்கண்ட சனி திசையும், சனி புத்தியும் தங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி  சிந்தனைக்கு   எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்.

சனி திசை நடப்பு ( 13/12/2014 முதல் 13/04/2033 வரை ) 
சனி புத்தி நடப்பு ( 13/12/2014 முதல் 16/12/2017 வரை )

தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது  வரவேற்க தக்க விஷயமாகும், மேலும் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும்  மேற்கண்ட பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சனி தசை ( சனி புத்தி ) களத்திர பாவக வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

மேலும் தங்களின் 7ம் வீடு கால புருஷ தத்துவ ராசிக்கு லாப ஸ்தானமாகவும், தங்களின் 11ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும் அமைவது கும்பம் மற்றும் மிதுன ராசிகள் வழியில் சுப யோகங்களை 100% விகிதம் தரும், சனி திசை தங்களுக்கு வலிமை பெற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், உறவுகள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக வெளிநாடு வெளியூர் சார்ந்து யோக வாழ்க்கை தேடி வரும், கூட்டு  முயற்சி வெற்றி தரும், பிரபல்ய யோகம் உண்டாகும்.

குறிப்பு :

தங்களது சிம்மலக்கினத்திற்கு 6,7ம் பாவக அதிபதி சனி என்ற போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனையே தருவது வரவேற்கதக்க சிறப்பு அம்சமாகும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

  

Sunday, March 12, 2017

கேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் சுக்கிரன் திசை சுபயோகங்களை தருமா ?கேது திசை தரும் பலன்கள் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தி ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தி ஜாதாருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தரும், தங்களுக்கு தற்போழுது நடைபெறும் கேது திசை தங்களுக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலாபலனை ஏற்று நடத்துவது கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், அதாவது தற்போழுது நடைபெறும் கேது திசை தங்களுக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு 5,11ம் பாவக வழியில் இருந்து மிக கடுமையான இன்னல்களை தருகின்றது, மேலும் கேது திசை தங்களுக்கு 22/12/2017 வரை நடைபெறுவதால், அதுவரை தங்கள் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையையே தரும், இருப்பினும் தற்போழுது கேது திசையில் புதன் புத்தி நடைபெறுவது வரவேற்க தக்க அம்சமாகும், ஏனெனில் புதன் புத்தி தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவது தங்களுக்கு ஜீவன ரீதியான சுப யோகங்களை வாரி வழங்கும், புதன் புத்தி தங்களுக்கு சுபயோக பலன்களை தொழில் அமைப்பில் இருந்து சிறப்பாக வாரி வழங்கும்.


லக்கினம் : கடகம்
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்

எதிர்வரும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் 

தங்களது சுய ஜாதகத்தில் எதிர்வர இருக்கின்ற சுக்கிரன் திசை உண்மையில் மிகுந்த நன்மைகளை தார இருக்கின்றது, 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்க தக்க விஷயமாகும், மேலும் தங்களுக்கு களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியாக வருவது தங்களுக்கு, கூட்டு தொழில் நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்கள் என சுக்கிரன் திசை முழுவதும் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான யோக வாழ்க்கையை நல்கும்.

லக்கின வழியில் இருந்து உடல் நலம், மன நலம், தீர்க்க ஆயுள், செயல்களில் வெற்றி வாய்ப்பு, தன்னம்பிக்கை மிக்க செயல்களால் வாழ்க்கையில் எதிர்பாராத மிகுந்த நன்மைகளை தரும், களத்திர பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை ஆதரவு தங்களுக்கு மிகுந்த தைரியத்தை வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவி மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை சந்திப்பீர்கள், தொழில் வளர்ச்சி மிக அபரிவிதமாக அமையும், கடந்த காலங்களில் கேது திசையின் பாதிப்பில் இருந்து மிக விரைவாக மீண்டு வரும் யோகத்தை தரும், சுக்கிரன் திசை 20 வருடமும் தங்களுக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து எதிர்பாராத முன்னேற்றங்களை சரளமாக வாரி வழங்கும், சுக்கிரன் திசை தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து முன்னேற்றத்தை தராமல், உழைப்பின் மூலம் எதிர்பாராத சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குகின்றது என்பதால், கடினமான உழைப்பை முன்னிறுத்துங்கள், வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவியுங்கள் " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Saturday, March 11, 2017

திருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் !திருமண பொருத்தம் காண்பதில், நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகிய விஷயங்களுக்கு ( உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ) முன்னுரிமை தந்து, திருமண பொருத்தம் காண்பதை விடுத்து, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதே சிறந்ததென "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே சுய ஜாதகத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை அறியாமல் நிர்ணயம் செய்யப்படும் ( நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ) திருமணங்கள் தம்பதியருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்கியதா? என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா ? என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்க்கு பதில் " இல்லை " என்பதே, இதை நாம் விவாகரத்து பெற்ற தம்பதியர்கள் ஜாதகம் கொண்டு அறிய இயலும்.

நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருமணம் செய்த தம்பதியரும் இல்லற வாழ்க்கையில் விவாகரத்து பெற்றதற்க்கு காரணமாக அவர்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை இன்மையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை திருமணத்திற்க்கு பிறகு நடைபெற்ற திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தியதே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கும், இதை பல உதாரண ஜாதகம் கொண்டு நாம் தெளிவு பெற இயலும், இருப்பினும் இன்றைய சிந்தனைக்கு நாம் திருமண  பொருத்தம் காண்பதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதால் தம்பதியர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

பொதுவாக திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில்  வெற்றிகளையும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமையும், திருமணத்திற்கு பிறகு வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் திசாபுத்திகளும் காரணமாக அமைகிறது, உதாரணமாக கீழ்கண்ட ஜாதகங்களை ஆய்வு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகர் :


லக்கினம் : ரிஷபம்
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

ஜாதகி :

லக்கினம் : கன்னி 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட வரன் வது இருவரது ஜாதகத்திலும் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்வோம் அன்பர்களே !

திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையையும் பெறுவதற்கு, வரன் வது ஜாதகத்தில் 2,5,7,8,12 பாவகங்கள் வலிமை பெற்று இருக்கவேண்டியது அவசியமாகிறது, மேலும் திருமணத்திற்கு  பிறகு வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, தம்பதியர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும்  தேடி வரும், மேற்கண்ட வரன் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது ஜாதகரின் திருமண வாழ்க்கையில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான  சுபயோகங்களை வாரி வழங்கும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான  5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது  திருமணத்திற்கு  பிறகு தனக்கான ஓர் நல்ல ஆண் வாரிசை பெரும் யோகம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தரும்.

வது ஜாதகத்தில் 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி தனது  வாழ்க்கை துணை உடன் இணைபிரியா யோக வாழ்க்கையை பெறுவதை  தெளிவு படுத்துகிறது, 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும் என்பது தெளிவாகிறது, வரன் வது இருவரது  ஜாதகத்திலும் பரஸ்பரம் சில பாவக பெருத்தங்கள் வலிமை பெற்று இருப்பினும் ஆணுக்கு 8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும், பெண்ணுக்கு 2,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும் சற்று சிரமம் தரும் அமைப்பாகும், இருப்பினும்  இருவரது களத்திர ஸ்தானங்களும் வலிமை பெற்ற லாபஸ்தானத்துடன் சம்பந்தம்  பெறுவது, தாம்பத்திய வாழ்க்கையில் யோகத்தையே வாரி வழங்கும், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து தம்பதியருக்கு  சில இன்னல்கள் வந்த போதிலும், பிரிவினை  தாராது என்பது  வரவேற்கத்தக்க விஷயம்.

மேலும் தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை சனி  புத்தி  4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சுக்கிரன் புத்தி 3,9ம் வீடுகள்  பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும்  வரவேற்க தக்க விஷயமாகும், எதிர்வரும் திசை தரும் பலன்கள் பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

ஜாதகிக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது  லக்கின வழியில் இருந்து சுய முன்னேற்றத்தையும், ஐந்தாம் பாவக  வழியில் இருந்து தனது குழந்தை மற்றும் அறிவுத்திறன் மூலம், களத்திர பாவக  வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் மூலமும் மிதம்மிஞ்சிய யோக வாழ்க்கையை பெறுவார் என்பதால், ஜாதகிக்கு திருமண வாழ்க்கைக்கு பிறகே சுபயோக வாழ்க்கை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், எனவே ஜாதகி திருமணத்திற்கு பிறகே சகல சௌபாக்கியங்களையும் பெறுவார் என்பது உறுதியாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகர் அல்லது ஜாதகி  தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில்  2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும் ராகுகேது !சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுவதும் தமது ஆளுமையின் கீழ் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள், ஒருவருக்கு தாம் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் கொடுத்து வைத்தவர் எனலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் அதி வலிமை வாய்ந்த கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோகங்களை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ( உதாரணமாக அதிகாரமும்,அறிவு திறனும், வலிமையும் , ஒருங்கே அமையப்பெற்ற ஒரு நாட்டின் மன்னன் , நல்லவராக இருப்பின் அவர் சார்ந்த சமூகம் மற்றும் மக்கள் சிறப்பான முன்னேற்றங்களையும், நன்மைகளையும் எப்படி பெறுவார்களோ, அதற்க்கு இணையான நன்மைகளை )  சாயா கிரகங்கள் ஜாதகருக்கு வாரி வழங்கும், மேலும் தனிப்பட்ட சிறப்பு திறமைகளை இயற்கையாக பிறவியிலேயே பெற்று இருப்பார்கள் .

குறிப்பாக சுய ஜாதகத்தில் சாயா கிரகமெனும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது ஜாதகர் லக்கினம் மாற்று களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கைக்கு சிறு குறையும் இருக்காது, மேற்கண்ட அமைப்பு சிம்மம் மற்றும் கும்ப லக்கினத்தை பெற்றவர்களுக்கு இருப்பின், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சந்தேகம் இன்றி கூறலாம், ஜாதகரின் உடல் நலம் மனநலம், செயல்திறன் ஆகியவை ஸ்திரமான இயக்கத்தை பெற்று இருக்கும், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், ஸ்திரமான அறிவு திறன், தெய்வ அனுக்கிரகம், மிதம் மிஞ்சிய புத்திசாலித்தனம் மூலம் அனைத்திலும் வெற்றி வாய்ப்பினை பெறுவார்கள்.


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து இருப்பதை சர்ப்ப தோஷ ஜாதகம் என்று நிர்ணயம் செய்வது  பொதுவான அணுகு முறை மேலும் அது உண்மைக்கு புறம்பானது, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித வலிமை பெற செய்கின்றனர், எனவே லக்கினத்தில் அமர்ந்த  ராகு பகவானால் ஜாதகர் லக்கினம் முழு வலிமை பெற்றும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவானால் 7ம் பாவகம் முழு வலிமை பெற்றும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோக பலன்களை 100% விகிதம் பெரும் வல்லமையை பெறுகின்றார், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று நன்மையை தருகின்றாரா ? வலிமை அற்று தீமையை தருகின்றாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் ராசியாக அமைவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை ராகு பகவானால் கிடைக்க பெறுவார், வளரும் சூழ்நிலையில்  அதிர்ஷ்ட யோகங்களை பெறுவதும், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எப்பொழுதும் தனது மனதில் கொண்டவராக திகழ்வார், சிறந்த மதி நுட்பமும் கூரியஅறிவுத்திறனும் ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையையும், தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஓர் நேர்த்தியை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சூழ்நிலைகளை கையாள்வதில் இவருக்கு நிகராக வெறும் எவரும் இல்லை எனலாம், முற்போக்கு சிந்தனை, மெய்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் யோகம், அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையை சிறப்பிக்கும் வல்லமை என ஜாதகருக்கு சுபயோகங்கள் வலிமையாக வேலை செய்யும், குறிப்பாக ராகு காலத்தில் ஜாதகர் செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றிகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள், தெளிந்த நல்லறிவு, விழிப்பு மிக்க மனநிலை, ஜாதகரின் வாழ்க்கையில் முழு அளவிலான யோகங்களை தங்கு தடையின்றி தரும்.

கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களை வழங்கும், லக்கினம் ஜாதகர் சார்ந்த விஷயங்களையும், களத்திர பாவகம் ஜாதகருடன் தொடர்பு பெரும் நபர்களான , வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பொதுமக்களால் சார்ந்த விஷயங்களையும் தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர பாவகம் கேது பகவானால் 100% விகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட அன்பர்களின் தொடர்புகள் மூலம் மிகுந்த நன்மைகளையும் முன்னேற்றங்களையும்  ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கு உண்டான  வாய்ப்புகளை வழங்கு, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் காலத்திர ஸ்தானம் 5ம் ராசியான சிம்மத்தில் அமைவது, சிறந்த வாழ்க்கை துணையையும், அவர்கள் வழியிலான மதி நுட்ப ஆலோசனை மூலம் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளையும் குறிக்கின்றது, ஜாதகருக்கு  அமையும் வாழ்க்கை துணை, நண்பர்கள், மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டங்களை பெறுவார், உலக அறிவு ஜாதகருக்கு மிதம்மிஞ்சிய அளவில் கிரகிக்கும் வல்லமையை தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு அபரிவிதமானதா அமையும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எப்பொழுதெல்லாம் 1,7ம் பாவக பலன்களை, நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறதோ அப்பொழுதெல்லாம், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியிலான சுபயோகங்களை தன்னிறைவாக பெறுவார் என்பது கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை மட்டுமே செய்யும் என்பதே உண்மை நிலை, எனவே சுய ஜாதகத்தில் ராகுகேது வலிமை பெற்று அமர்ந்து இருக்கின்றதா? வலிமை அற்று அமர்ந்து இருக்கின்றதா ? என்பதில் மட்டும் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Thursday, March 9, 2017

தொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜாதகருக்கு அமையும் தொழில் வாய்ப்புகளும் !


" செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை நமது செல்வம் " என்ற வாசகத்தை மெய்ப்பிக்க சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதுடன் சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான விருத்திகள் பன்மடங்கு அதிகரிக்கும், தமக்கு உகந்தது சுய தொழிலா? அல்லது அடிமை தொழிலா? என்பதை தேர்வு செய்ய சுய ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக தெளிவாக உணர இயலும், மேலும் தான் தேர்வு செய்ய வேண்டிய துறை எதுவென்று நிர்ணயம் செய்யவும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகம் நமக்கு நன்கு உணர்த்தும்.

தொழில் துறையில் மூன்று பிரிவுகள் உண்டு 1) உற்பத்தி துறை 2) விற்பனை துறை 3) சேவை துறை மேற்கண்ட மூன்று பிரிவுகளில் ஜாதகருக்கு உகந்ததை தேர்வு செய்யவோ அல்லது இயற்கையாக அமையவோ சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியாமாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எந்த ராசியாக அமைகிறது என்பது மிக முக்கியம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனத்தை நிர்ணயம் செய்வதில் சம்பந்தப்பட்ட ராசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு எக்காரணத்தை கொண்டும் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும், மாறாக மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவன ரீதியாக கடும் நெருக்கடிகளையும், சுய மரியாதை குறைவான தொழில்களை தேர்வு செய்து ஜீவனம் செய்யு சூழ்நிலைக்கு ஆளாக்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடான கும்பராசியை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக அமைந்து வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான யோகங்களை புதையலுக்கு நிகராக பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும்  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு ஸ்திர நீர் தத்துவ அமைப்பை பெறுவது ஜாதகரின் மன எண்ணத்தில் எண்ணியபடி ஜீவன வாழ்க்கை சிறப்பாக அமையும், மனதில் என்ன நினைக்கின்றாரோ அதன்படியே ஜீவன முன்னேற்றமும், தொழில் வழியிலான விருத்தியையும் பெறுவார், மேலும்  ஜாதகர் தனது மன உறுதியான செயல்பாடுகள் மூலம் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார்.

  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியை லக்கினமாக பெறுவதும், லக்கினமும் 100% விகித வலிமையை பெறுவதும் ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்பதை தெளிவு படுத்துகிறது, பிறப்பில் இருந்தே ஜாதகர் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுபவர் என்பதை வலிமை பெரும் லக்கின வழியில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு யோக வாழ்க்கையை வழங்குகிறது என்பது ஓர் சிறப்பு அம்சம் என்ற போதிலும், ஜீவன ஸ்தானத்துடன் மற்ற வீடுகள் எந்த வகையிலாவது தொடர்பை பெருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் ஜீவன ரீதியான முன்னேற்றம் பற்றியும், ஜீவனம் சார்ந்து ஜாதகர் பெரும் முழு வலிமையை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் மட்டும் அல்லாமல் 1,4,7,8ம் வீடுகளும் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அந்தஸ்து, சுய மரியாதை, பெயரும் புகழும் கிடைத்தால், செல்வாக்கு, அரசு மரியாதை ஆகியவை தேடி வரும், 4ம் பாவக வழியில் இருந்து சுயமாக சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம், வண்டி வாகன யோகம், தொழில் நிறுவனங்களை திறம்பட நடத்தும் வல்லமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் வழியில் யோகம், நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணையின் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, நிறுவன தொழிலாளர்கள் ஆதரவு என அனைத்து வழிகளிலும் சிறப்பான ஆதரவை தரும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் தொழில் வழியில் புதையலுக்கு நிகரான அதிர்ஷ்டங்களையும், தன சேர்க்கையையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக அமைவதும், சுய ஜாதகத்தில் 8ம் வீடு அதே ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்திலே சிறப்பான அம்சமாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனம் புதையலுக்கு நிகரான தன சேர்க்கையை தருவதற்கு மேற்கண்ட அமைப்பே மூல காரணமாக அமையும், மேலும்  இது சார்ந்த நன்மைகளை ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( திருமணத்திற்கு பிறகு ) முழு அளவில் அனுபவிப்பார்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான பாவக தொடர்புகள் வலிமை பெற்று  இருப்பினும், தற்போழுது நடைபெறும் சூரியன் திசையிலும், அடுத்து வரும் சந்திரன் திசையிலும் நடைமுறைக்கு வாராது, அதற்க்கு பிறகு வரும் ராகு திசையில்தான் மேற்கண்ட பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும் என்பதே ஜாதகத்தில் உள்ள "சூட்சமம்" என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Wednesday, March 8, 2017

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 2


 சுய ஜாதகங்களில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை உறுதியான நிலைத்தன்மையுடன் வாழும் யோகத்தை தரும், குறிப்பாக சுய தொழில் செய்ய விரும்பும் அனைவரது ஜாதகமும் மேற்கண்ட பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, ஜீவன ஸ்தானம் குறிப்பிடும் தொழில் வாய்ப்பினை தேடி நலம் பெறுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் சுய தேடுதல், உடல் நலம், மனதிடம், எண்ணத்தின் வலிமை, ஜாதகரின் செயல்திறன் ஆகியவற்றை ஸ்திரமாக மேம்படுத்தி தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் குண இயல்பு, ஜாதகரின் பொருள் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், இடம் நிலம் ஆகியவற்றின் தன்மையை பற்றியும் ஜாதகர் சுக ஸ்தான வழியில் இருந்து பெரும் யோகங்கள் பற்றியும் தெளிவு படுத்தும்.

 காலத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் கூட்டாளிகள், நண்பர்கள், வெளிவட்டரா பழக்க வழக்கங்கள், சமூகத்துடன் ஜாதகர் கொண்டுள்ள நல்லுறவு, மக்கள் தொடர்பு மூலம் ஜாதகர் பெரும் யோகங்கள் ஆகிவற்றை ஸ்திரமானதாகவும், ஜாதகருக்கு பொருத்தமானதாகவும் மேம்பட்ட தகுதி நிர்ணயத்துடன் அமைத்து தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது என்பது ஜாதகரின் சுய கவுரவம், அந்தஸ்த்து, அரசு வழியில் ஆதாயம், தீர்க்கமான வாதத்திறன் மூலம் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை, செய்யும் தொழில் வழியிலான நுண்ணறிவு, சரியான திட்டமிடுதல்கள், செயல்பாடுகளில் தொய்வில்லாத நிலை, எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும் யோகம், செய்யும் தொழிலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வல்லமை, பிரபல்ய யோகம், தனது நிறுவனம் சார்ந்த கட்டமைப்பில் சமரசம் செய்து கொள்ளாமல், தெளிவாக முடிவெடுக்கும் யோகம், இன்றைய சிந்தனையுடன் எதிர்கால திட்டமிடுதல் மூலம் நிறுவனத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் வல்லமை என ஜாதகரின் நோக்கம் யாவும் 100% விகித வெற்றிகளை பெறுவதிலேயே குறியாக இருக்கும்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை குன்றி இருப்பவர்கள் மேற்க்கண்ட விஷயங்களில் சிறிதும் ஞானம் இன்றி இருப்பார்கள் என்று சொல்லி  தெரிவதில்லை, மேற்கண்ட விஷயங்களை நாம் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது  அதை பற்றிய சிறு தேடுதல்கள் கூட அவர்களுக்கு இருப்பதில்லை, மேற்கண்ட 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்கள் 1,4,7,10ம் பாவக வழியிலான யோகங்களை முழு அளவில் பெறுவதற்கு உண்டான ஞானத்தை இயற்கையிலேயே பெற்று இருப்பார்கள் என்பது கவனிக்கதக்க அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று ஜீவன ரீதியாக சகல யோகங்களையும் பெற்று கொண்டு இருக்கும் சில ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய ராசியில் வலிமை பெற்றும், லாப ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்றும் அமைவது, ஜாதகருக்கு  10 ரூபாய் முதலீட்டில்  100 ரூபாய் வருமானம் பெரும் யோகத்தை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு குறிப்பிட்ட பாவக தொடர்பு ஜீவன ஸ்தானம் உபய ராசியில் வலிமை பெற்றும், லாப ஸ்தானம் சர ராசியில் வலிமை பெரும் அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு இறை அருள் கொடுத்த நற்கொடை எனலாம்.

மேலும் ஜாதகத்தில் பாவக தொடர்புகளின் வலிமை :

1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று  இருப்பது லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல மனநிலை, பயணவிருப்பம், சகோதரம் மற்றும் உறவுகளுடன் நல்ல நட்பு, அவர்கள் உதவி என்ற வகையில் நன்மைகளையும், வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்லமனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், உண்மை பேசுதல், தைரியம், சாகசம், பயண விருப்பம், கல்வியில் தேர்ச்சி, மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் வெற்றி வாய்ப்பு என்ற வகையில் யோகத்தை தரும்.

2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து  இசை ஞானம், திரைப்படம், நாடகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, குழந்தைகள் வழியில் சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும், 5ம் பாவக வழியில் இருந்து கலைகளில் தேர்ச்சி, புத்திசாலித்தனம், தீர்வு செய்யும் வல்லமை, வாத திறமை, செல்வ வளம், நல்ல குடும்பம், நல்ல குழந்தைகள், விளையாட்டில் ஆர்வம், காதல் வெற்றி, தர்ம சிந்தனை என்ற வகையில் யோகத்தை தரும்.

4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உயர் கல்வி ஞானம், வெளிநாடு யோகம், ஆராய்ச்சி மனப்பக்குவம், ரசாயனம், சுரங்கதுறை, ஸ்தல யாத்திரை, தர்ம சிந்தனை, ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் மூலம் சொத்து சுக சேர்க்கை உண்டாகும், 6ம் பாவக வழியில் பயணம் மூலம் லாபம், குறுகிய கால முதலீடுகளில் லாபம், எதிரிக்கு சிம்ம சொப்பனம், நுண்ணறிவு திறன், வருமுன் காக்கும்  வல்லமை, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் முதலீடுகளில் அதிக லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் யோகம், பயணம் மூலம் தொழில் விருத்தி, உல்லாச வாழ்ககை, தொழில் மற்றும் இருப்பிடத்தை மாற்றும் யோகம்என்ற வகையில் நன்மைகளை தரும்,

7,10ம் வீடுகள் ஜீவனஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து, திருமணத்திற்கு பிறகு யோகம், நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணை, அரசியல் வியாபாரத்தில் வெற்றி, சமூகத்தில் உயர் அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து உயர் தொழில் யோகம், வியாபாரத்தில் வெற்றி, செய்யும் தொழில் மூலம் யோக வாழ்க்கை, கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான வாத திறமை மூலம் ஜீவன வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டசாலி, அனைத்திலும் லாபம், நல்ல குண நலன்கள் என்ற வகையில் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் 8,9ம் பாவகங்கள்  மட்டும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற அணைத்தது  பாவகங்களும் மிகுந்த வலிமையுடன் இருக்கின்றது.

ஜாதகருக்கு ( 30/10/1996 முதல் 31/10/2013 வரை ) நடைபெற்ற புதன் திசை 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலாபலன்களை  வழங்கி இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழுமையாக வழங்கி இருக்கின்றது, மேலும் தற்போழுது நடைபெறும் கேது திசையும் ( 31/10/2013 முதல் 30/10/2020 வரை )  ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது அபரிவிதமான செல்வாக்கை தரும், செல்வ செழிப்பு, புதிய  சொத்து சுக சேர்க்கை, வியாபார விருத்தி என்ற வகையில் சுப யோகங்களை வாரி வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல ஜீவன  வாழ்க்கையை தரும், மற்ற பாவகங்கள் வலிமை பெறுவது ராஜயோக வாழ்க்கையையும், தன்னிறைவான பொருளாதார வசதியையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை  பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் தொய்வில்லாத தொழில் வெற்றிகளையும், முன்னேற்றங்களையும் வாரி  வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து மட்டுமே சிறு சிறு இன்னல்கள் ஏற்படும், மற்றபடி ஜாதகருக்கு ஜீவன ரீதியாக மிகப்பெரிய அந்தஸ்தும், கவுரவம் குறையா யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

காலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வழங்குமா ?


பொதுவாக சுய ஜாதகத்தில் காலதாமத திருமணம் பரிந்துரை செய்யும் சூழல் லட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு வரக்கூடும் அதற்க்கு காரணம் ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரோ, ஜாதகியோ திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, திருமணம் அமையாது, வீண் விரையம் மற்றும் மனஉளைச்சல்தான் அதிகரிக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருந்து, ஜாதகரை தாமத திருமணத்திற்கு பரிந்துரை செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை, ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும் பொழுதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும், ஜாதகருக்கு சரியான பருவ வயதில் திருமணம் கூடி வரும், இதை உணர்ந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமணம் செய்து வைப்பதே உகந்த நடைமுறையாகும், ஒருவேளை சில விஷயங்களை காரணம் கூறி திருமண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, விரும்பத்தகாத உறவுகளை உருவாக்கி விடும், ஏனெனில் காலமும் நேரமும் எவருக்கும்  காத்து இருக்காது.

( பொதுவாக தொழில்,வீடு,வசதி,வாய்ப்புகள், வண்டி வாகனம், சொத்து, நிலம், பொருளாதார விஷயங்களை நாம் எந்த வயதிலும் சம்பாதித்து கொள்ள இயலும், ஆனால் திருமணம் என்பது பருவ வயதில் செய்துகொள்வதே உகந்தது, இந்த விஷயத்தில் தாமதம் செய்ய செய்ய நிச்சயமாக சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் பாழ்படும். )

சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கால தாமதத்தை பரிந்துரை செய்ய வேண்டும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், திருமணத்திற்கு உகந்த வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு காலதாமதம் செய்யாமல் திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவது, சிறந்த யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை பெறுவதற்கு வழிவகுக்கும், நடைபெறும் திசாபுத்தி ஜாதகருக்கு அந்த வாய்ப்பை நல்கிவிடும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் யாவும் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தரவில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே தாமத திருமணத்தை பரிந்துரை செய்ய வேண்டும், அதுவும் பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறையில் உள்ள காலம் வரையில் மட்டுமே இந்த விஷயம் பொருந்தும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில்   2,5,7,8,12ம் பாவகங்களில் 8,12ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் 8ம் பாவகம் உபய ராசி தொடர்பை பெறுவதால் அதனால் யாதொரு இன்னல்களும் வாராது, 12ம் பாவகம் பாதிக்கப்படுவது மட்டுமே சற்று இன்னல்களை தர கூடும், ஜாதகர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் இருக்கும் ஓர் வதுவை தேர்வு செய்தால் போதும், ஜாதகரின்  திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதுடன், தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எடுத்துவரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் அமைப்பில், பொருத்தமான வரனை தேர்வு செய்து  கொடுப்பது மட்டுமே ஜோதிடரின் கடமை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது  நடைபெறும் திசை கேது என்பதால், அது இன்னல்களை  தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் திருமணம் செய்வது உகந்தது என்று பரிந்துரை செய்து இருக்க  கூடும் என்று  நம்புகிறேன், நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்ற போதிலும், சமபந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலேயே மேற்கண்ட குழப்பங்கள்  ஏற்படுகிறது, ஜாதருக்கு தற்போழுது நடைபெறுவது  கேது  திசை ( 02/01/2014 முதல் 02/01/2021 வரை ) என்ற  போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக  தொடர்பு என்பது, 5,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கேது திசை ஜாதகருக்கு 5,10,11ம் பாவக வழியில் இருந்து  யோகங்களையே வாரி வழங்குகிறது.

தற்போழுது கேது திசையில் நடைபெறும் ராகு புத்தியும்  ( 02/12/2016 முதல் 21/12/2017 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகர் திருமண வாழ்க்கையை தள்ளிப்போடாமல், உடனடியாக திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம்  பெறுவது அவசியமாகிறது,

குறிப்பு :

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696