Monday, December 26, 2011

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம்!பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவம், ஒருவரது ஜாதகத்தில் வலுத்து நின்று திசையை நடத்தும் பொழுது அவருக்கு நடக்கும் பலாபலன் என்வென்று பார்ப்போம்.

1 தமது குலபெருமை காக்க ஒரு சிறப்பான ஆண்வாரிசு அமையும் , அக்குழந்தை கீர்த்தியுடனும், ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்று புத்திசாலி என பெயர் எடுக்கும்.

2 ஜாதகர் தமது பூர்விகம் எதுவோ அவ்விடத்தில் இருப்பதால் அனைத்து வளர்ச்சியும் அடைவார், குறிப்பாக நல்ல தொழில் முன்னேற்றம் பொருளாதரத்தில் தன்னிறைவு.

3 ஜாதகர் தமது முன்ஜென்மத்தில் செய்த அனைத்து நன்மைகளையும் இப்பிறப்பில் பிரதி பலனாக கிடைக்கும், அதனால் வாழ்வில் சகல முனேற்றமும் அடைவார், வருமுன் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இயற்கையாக அமையும்.

4 அரசு ஆதரவு, மக்கள் செல்வாக்கு , பெரிய மனிதர்கள் உதவி, நிலபுலன் வாங்கும் அமைப்பு , சொந்தமாக சகல வசதியுடன் புதிய வீடு அமையும், வண்டி வாகனம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, துவங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி என அனைத்து நலன்களும் கிடைக்கப் பெறுவார்.

5 மேலும் தியான தவ வாழ்கையில் வெற்றி, கடவுள் பக்தி, குலதெய்வ அருளாசி, தாய்மாமன் மூலம் அடையும் நன்மைகள், பூர்வீக சொத்துக்கள் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு, மந்திர சித்தி, தமது அறிவுரைகளை அனைவரும் மதித்து நடந்து கொள்ளுதல், நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.

Thursday, December 22, 2011

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட? !

வக்கிரக கிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட !

 திருவக்கரையில் அமர்ந்து தம்மை நாடி வருவோர்க்கு அனைவருக்கும், அனைத்து வளங்களையும், சகல நலன்களையும் ஏழை எளியவர் என எவ்வித பாகு பாடும் இல்லாமல், தமது நான்கிரண்டு கரங்களால் அனைவரையும் தாங்கி அருள் பாலிக்கிறாள் அன்பு தாய். அம்மாவை தரிசித்து வளமுடன் வாழுங்கள்.

இங்கு வந்து முறைப்படி வக்கிரக நிவர்த்தி செய்துகொள்ளும்  அனைவருக்கும், அல்ல அல்ல வழங்கும் அமுத சுரபி போல் அனைத்து நலன்களையும் பெற்று, வளமுடன் நலமுடன் வாழ்கின்றனர் .

வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்துக்கு வந்து வக்கிரகாரி, வக்கிரலிங்கம், வக்கிர சனிபகவான் ஆகியோரை வழிபட்டால் பயன் கிடைக்கும். 

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும். இது திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 7 கி.மீ. செல்ல வேண்டும். இங்கு குண்டலி மகாமுனிவர் தவம் செய்து சமாதி பெற்றுள்ளார். 


அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கும், பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கும் காட்டப்படும் ஜோதிதரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள குண்டலி முனிவரது ஜீவ சமாதியில் மனம் உருக வழிபட்டால் நினைத்தது நடக்கும். அங்கு 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும், மன சஞ்சலங்கள் பறந்தோடி விடும்.
இத்தலத்தில் 3 மாதம் பவுர்ணமி நாளில் தொடர்ந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும். 


இத்தல வரலாறு வருமாறு:-
வக்கிரா சூரன் என்ற அசுரன் தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும்  சிவனிடம் வரம் கேட்டான். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் வச்சிராசூரன்  தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். வக்கிராசூரன் பெண்களால் அழியா வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும் போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். அதன்படி ஈஸ்வரி 16 கைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்தாள்.
பின்னர் வக்கிராசூரனை அழித்தாள். பிறகு திருவக்கரை தலத்தில்  வடக்கு முகமாக அமர்ந்தாள். இதனால் அவளுக்கு அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது. வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது.
அவன் கண்டத்தில் லிங்கத்தை வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு இந்த சக்தி தலத்தில் நிம்மதி கிடைக்கிறது.
ஜோதிடன் வர்ஷன் 

வாழ்க வளமுடன் 

Saturday, December 17, 2011

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?

ஜாதகரை நிச்சயம் பாதிக்கும். தாம் அமர்ந்த இல்லத்தை பொறுத்து இன்று ஜாதக ஆலோசனை பெற வந்த ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் லக்கினம் , இரண்டாம் வீடுகள் முறையே சனி ,குரு, செவ்வாய் , புதன் ஆகிய கிரகங்கள்  வக்ரக நிலையில் இருந்தது.

அவருக்கு வயது 32 , இதுவரை அவர் அனுபவித்து வந்த பலன் என்னவென்று பார்த்த பொழுது, இரண்டில் உள்ள வக்ரக சனிபகவன் சம்பாதிக்கும் அறிவை கொடுத்து நல்ல வேலையாட்களை கொடுக்கவில்லை,  இதனால் அவரது தொழில் பல இன்னல்களை சந்தித்து இதுவரை போராடிக்கொண்டு இருக்கிறார்.

லக்கினத்தில் அமர்ந்த வக்ரக குரு, அளவிட முடியாத புத்திசாலிதனத்தை தந்து , அதனை பயன்  படுத்த முடியாத அளவிற்கு தடைகளை ஜாதகரே உருவாக்கி கொண்டிருக்கிறார், இவரது ஆலோசனையை கேட்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார், இவருக்கு பலன் தருவதில்லை.

வக்கிரக செவ்வாயோ இரண்டில் அமர்ந்து வருமானத்தை வெட்டி செலவு செய்ய வழி வகுத்துவிட்டார், லக்கினத்தில் அமர்ந்த வக்கிரக புத பகவான் மட்டும், பெரிய மனிதர்கள் தொடர்பு பெற வைத்து, தொழில் எப்படியாவது நடைபெற அருள் புரிந்து உள்ளார்.

இது அவரது சுயஜதகத்தின் அமைப்புப்படி. 

இது அனைவருக்கும் நடை பெற வாய்ப்பு இல்லை என்றாலும், வக்ரகம் பெற்ற சனி பகவான் தொழில் முறை பாதிப்பையும்,  வக்ரகம் பெற்ற குரு பகவான் செல்வநிலை காரிய தடைகளையும், வக்ரகம் பெற்ற செவ்வாய் பகவான் தேவையற்ற, கெட்ட நண்பர்கள் சகவாசமும், சில தவறான பழக்க வழக்கங்களையும், பெண்கள் சகவாசத்தையும் கொடுத்துள்ளார்.

புத பகவான் மட்டும் பெரிய மனிதர்கள் ஆதரவை பெறவைத்து, அதை முழுமையாக பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்.


இந்நிலை மாற ஜாதகருக்கு நாங்கள் கொடுத்த ஆலோசனை என்ன நாளைய பதிவில் காண்போம் .

கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ?

கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ?
கெட்டவன் கெட்டால் கிட்டிடுமா ராஜ யோகம் ? 
ஒரு சின்ன  வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது, ஏன் என்றால் ஒருவர் ஜாதகத்தில் சில  ஜோதிடர்கள், சுபர் அசுபர் என கணக்கில் எடுத்து கொள்வது எப்படி என்றால், சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோர் அசுபர் என்றும், வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோர் சுபர் என்றும். அசுபர்கள் ஒருவரது ஜாதகத்தில் கெட்டால் அவர்கள் நன்மை செய்வார்கள் என்ற கருத்தினை பல ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும், எந்த ஒரு கிரகமும் தமது வீடுகளுக்கு நன்மைதரும் அமைப்பில் அமரவேண்டும், அப்பொழுதுதான் அந்த பாவம் நன்மையான பலன்களை வழங்கும், இல்லையென்றால் ஜாதகர் பாடு திண்டாடம்தான். 

சில ஜோதிடர்கள் அசுபர் என சொல்லும் சூரியன், செவ்வாய், தேய்பிறை சந்திரன், சனி, சூரியனுடன் சேர்ந்தபுதன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் சகல முன்னேற்றங்களை  அடைந்த ஜாதகங்கள் நிறைய உண்டு,
சுபர் என சொல்லும் வளர்பிறை சந்திரன், குரு, தனித்த புதன், சுக்கிரன் ஆகியோரது திசை புத்தி நடக்கும் காலங்களில் அனைத்து தீமையான பலன்களை அனுபவித்தவரும் உண்டு, எனவே இது போன்ற வாயில் வந்ததை எல்லாம் வாக்கு என சொல்லி ஜாதகம் பார்க்கவந்தவரை, மண்டை காய வைக்கவேண்டாம் என சில ஜோதிடர்களை வேண்டுகிறேன்.

ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு நபருடன் மேற்கண்ட விவாதம் சென்ற வாரத்தில் நடந்ததை பதிவு செய்துள்ளேன்.

Friday, December 16, 2011

ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா?
ஐந்தாம் இடத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லையா? 

ஜாதக ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணின் கேள்வி இது,  ஏனெனில் தாம் இதற்குமுன் பல ஜோதிடர்களிடம் தமது ஜாதகத்தை கொடுத்து ஆலோசனை கேட்ட பொழுது, ஜோதிடர்கள் அனைவரும் உங்களது ஜாதகத்தில், ஐந்தில் ராகு பகவன் இருப்பதால், ஐந்தாம் வீடு கெட்டுவிட்டதாகவும், குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும்  தெரிவித்ததாகவும் அப் பெண்மணி கூறினார்.

இதை கேட்டவுடன் தம்மை பெண்பார்க்க வந்த அனைவரும், தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை எனவும், தமக்கு இந்நிலை மாற, தாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்,

அவரது ஜாதகத்தை ஆராய்ந்த பொழுது உண்மையில் ராகு ஐந்தில் இல்லை,( லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணித்த அமைப்பில்) நான்காம் வீட்டில் இருந்தார், மிகவும் நல்லநிலையில் ராகு அமர்ந்திருந்தார், பிறகு அந்த பெண்மணிக்கு ராகுவின் நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கம் தந்தோம்.

ராகுவினால் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு இல்லை எனவும், அவர் ஜாதக கட்டத்தில் தான் ஐந்தில் இருக்கிறார், ஆனால் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கொண்டு பார்க்கும் பொழுது நான்காம் வீட்டில் உள்ளார், என்றும் அவர் நன்மையான பலன் மட்டுமே தந்து வருகிறர் என்றும், இதனால் ஐந்தாம் வீடு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் தந்த பிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

மேலும் உங்களது திருமண தாமதத்திற்கு காரணம் களத்திர பாவம் பதிக்கப்பட்டது மட்டுமே என்று கூறி அதற்க்கு என்ன செய்தால் திருமணம் விரைவாகவும் சிறப்பாகவும் நடை பெரும் என்பதையும் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தோம்.


ராகு கேது பகவான் ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, துலாம்,தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் அமர்ந்து அது ஐந்தாம் வீடாக வந்தால், ஜாதகருக்கு ஐந்தாம் பாவத்திற்கு 100 சதவிகித சுப பலன்களையே, பாகு பாடு இல்லாமல் தருகிறார் என்பதே உண்மை .


Thursday, December 15, 2011

ராகு கேதுவுடன் சூரியன்,சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்.

ராகு கேதுவுடன் சூரியன்,சந்திரன் சேர்க்கை என்ன செய்யும்?
சூரியனுடன், ராகு கேது எந்த ஒரு வீட்டிலும் சேர்ந்து இருந்தாலும் அந்தவீடு எந்த அமைப்பை பெறுகிறதோ, அதன் பலன் விருத்தி அடைவதில்லை , குறிப்பாக லக்கினமாக இருந்தால், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், தாமதம் தோல்வி நிலை ஏற்ப்படுகிறது. 

மேலும் தமது கடின உழைப்பு வெற்றி பெறுவதில்லை,  அதிர்ஷ்டமில்ல நிலை ஏற்படுகிறது. பெரிய மனிதர்கள் உதவி கிடைப்பதில்லை, அரசு ஆதரவு  இல்ல நிலை, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவற்ற நிலை, அரசியலில் பொதுமக்களிடம் வரவேற்ப்பு அற்ற நிலை போன்ற தீமையான பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர்.

இந்நிலை மாற சூரியகிரகண தோஷ நிவர்த்தி செய்வதினால் அணைத்து நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்கலாம் என சாஸ்திரம்  வழி காட்டுகிறது .

இதே அமைப்பில் சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை ஜாதகருக்கு பொருள் ஆதார அமைப்பில் தடைகளை ஏற்ப்படுத்துகிறது, தொழில் தடை வண்டி வாகனம் சரியாக அமையாதது.

அனைத்தும் இருந்தும் சொகுசான வாழ்வினை அனுபவிக்க முடியாத நிலை , மனப்போராட்டம் மனோவியாதி, டென்சனான வாழ்க்கைமுறை, மனதினை ஒரு நிலை படுத்த முடியாத அமைப்பு போன்று தீமையான பலன்களே ஜாதகருக்கு நடக்கின்றது.

இந்நிலை மாற பௌர்ணமி வழிபாடு, சந்திர கிரகண தோஷ நிவர்த்தி செய்து நலம் பெறலாம்.  

Wednesday, December 14, 2011

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு


ஒவ்வொரு மனிதர்க்கும் இறை அருளின் கருணையினால் ஜீவனம் என்பது ஏதாவது ஒரு வழியில் உணர்த்தப்பட்டு, அதில் தனி திறமையுடன் செயல்பட அறிவுத்திறனையும் நல்லவர் தொடர்புடன் தொழில் விருத்தியடைய விழிப்புணர்வையும் இயற்கையிலேயே அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளார்.

இதில் அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துவதில் ஒவ்வொரு மனிதர்களிடையே 33 %, 66 %, 99 % சதவிகித வேறுபாடுகள் உண்டு, 99 சதவிகித அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்துபவர்கள், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுகின்றனர்.

மற்றவர்கள் காலம், நேரம், யோகம் என்று காரணம் சொல்லி தொழில் முன்னேற்றம் இல்லாமல் தோல்வி அடைகின்றனர், இதை போன்று விரக்த்தியில் உள்ளவர்களுக்கும், 99 சதவிகித தொழில் வெற்றி  பெற எங்களது அமுதவர்ஷினி ஜோதிடம், சரியான ஆலோசனைகள் கடந்த 8 வருடமாக வாரி வழங்கி வருகிறது, வாருங்கள் வளமான தொழில் முனேற்றம் பெறுங்கள். 

ஒருவருக்கு எந்த தொழில் சிறப்பான முன்னேற்றம் தரும் , அது கூட்டு தொழிலா அல்லது தனிப்பட்ட தொழிலா என தெளிவாக தெரிந்து கொள்ள எம்மை தொடர்பு கொண்டு நல வாழ்வினை பெறுங்கள் . 


Tuesday, December 13, 2011

செவ்வாய் தோஷம் பற்றிய உண்மை விளக்கம்

செவ்வாய் தோஷம் பற்றிய உண்மை விளக்கம்.
 ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  

 ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால், செவ்வாய் தோஷம் என்றும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்துகொண்டால் மணவாழ்க்கை சிறப்பதில்லை என்றும் மக்களிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது.

சில ஜோதிடர்களிடம் கருத்து கேட்கும் பொழுது மக்களுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை, மேலும் பல விதிவிலக்கு உண்டு என்று மழுப்பலான பதில் மட்டுமே  வருகின்றது.

எங்களது பத்து வருட ஜோதிட ஆராய்ச்சியில் கிடைத்த பதில் என்னவென்று பார்ப்போம் :

1 , ஜாதகத்தில் இலக்கணத்திற்கு  2 , 4  , 7  , 8  , 12  ஆகிய வீடுகளில் செவ்வாய்  இருந்தால் அவர்கள் நிர்வாக திறமை மிக அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்,

2, பத்தாயிரம் செவ்வாய் தோஷ ( மற்ற ஜோதிடர்கள் செவ்வாய் தோஷ ஜாதகம் என்று கணித்தஜாதகங்களை ஆராய்ச்சி செய்ததில் 88 சதவிகித ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் ( இலக்கணம் ஆரம்பிக்கும் பாகை வைத்து கணிதம் செய்த முறையில் ) அற்ற ஜாதகங்கள் ஆகும் .

3, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்கள் வாழ்வில் ஒன்றும் தீமையான பலன்களை அனுபவிக்கவில்லை, மேலும் ஒருவருடைய ஜாதகம் ஒருவரை எவ்விதத்திலும் பதிக்கவில்லை, நல்வாழ்வினையே வழங்கியுள்ளது இதற்கு காரணமானவர் செவ்வாய் பகவனே என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 

4,   செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்ததால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறை உள்ள குழந்தைகளாக இருப்பார்கள் என்பதும் சுத்தமான மூடநம்பிக்கை, ஏனெனில் இப்படி பிறந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாகவும், நல்லறிவுடன் திகழ்கின்றனர்.


5 , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து, வாழ்வில் பெரிய வெற்றிகளை பெற்ற மனிதர்களாக காணப்படவில்லை, சுய ஜாதக அமைப்புக்கு என்ன உண்டோ அதை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் . மேலும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பெரிய சிறப்பான தகுதியுடன் இருப்பதாக தெரியவில்லை.


6 , எங்களது கணிப்பில் தெரிந்தவை முக்கியமானது என்னவென்றால், செவ்வாய் தோஷம் மனிதர்கள் வாழ்வில் எவ்வித பதிப்பான பலன்களையும் தருவதில்லை என்பதே உண்மை .

7 , மூட நம்பிக்கைகளை தவிர்த்து உண்மையான ஜோதிட அறிவை ஏற்று வாழ்க்கையை தன் நம்பிக்கையுடன் வாழுங்கள் .


8 , தமது மகன் மகள் வாழ்வில் செவ்வாய் தோஷம் எவ்வித பதிப்பையும் தருவதில்லை, என்ற உண்மையை உணர்ந்து ,அவர்களுக்கு சரியான வயதில், திருமண வாழ்க்கையை ,அமைத்து தாருங்கள். அவர்கள் வாழையடி வாழையாக வளமுடன் வாழட்டும் . 

வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம ?

வைடுரியம் கோமேதகம் மனிதர்கள் அணியலாம ?

ஜாதக ஆலோசனை பெற வந்தவர் ஒருவர் கேட்ட கேள்வி இது !
நிச்சயம் அணிய கூடாது, ஏனெனில் இவைகள் மற்றவர்களுக்கு அல்லது நவகிரகத்துக்கு தானம் கொடுக்கவே சாஸ்திரம் கட்டளை இடுகிறது.

இதை மீறி பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் ,அதிக கோபம் போர்குணம் , திருமணவாழ்வில் போராட்டம், எதிர்பாரத இழப்புகள் ஆகிய கெடுபலன் மட்டுமே அனுபவிக்கின்றனர் இதுவே உண்மையாகும் . 

வெளி நாடுகளில் ஒருவர் கெட்டு தீமையான பலன்கள் அனுபவிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு   வைடுரியம் கோமேதகம், இதில் ஏதாவது ஒன்றை தருவார்கள்.
இது நடைமுறை உண்மை.

இதை அணிந்த பிறகு அவர் அனைத்தையும் இழந்த மனிதர் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக கண்ட உண்மை, எனவே உங்கள் சுய  ஜாதகத்துக்கு மேன்மையை தரும் அதிர்ஷ்ட கற்களை அணிந்து நன்மை பெறுங்கள் .

ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம் ராகுகேது தோஷம் பற்றி ஒரு விளக்கம்

ஜாதகத்தில் நல்ல பலன் நடப்பதிற்கு, மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ராகு கேது ஆவார்கள். இவர்கள் அமரும் இடத்திற்கு ஏற்ப 100 சதவித நன்மையோ தீமையோ பாகுபாடு இல்லாமல் வாரி வழங்கிவிடுகின்றனர்,

இதில் சோதிடர்களிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றது , ஜாதகத்தில் ராகு கேது 1 , 2 , 5 ,7 ,8 ,12 , ஆகிய வீடுகளில் இருந்தால் சர்பதோஷம், எனவே மணமக்களுக்கு  இதேபோல் உள்ள சர்பதோஷ ஜாதகத்துடன் தான் திருமணம் அமைக்க வேண்டும் இல்லை என்றால், திருமண வாழ்க்கை நிலைக்காது ,என்ற கருத்து நிலவுகிறது, இது முற்றிலும் முட்டாள் தனமான கருத்தாகும், 

இதனால் வது வரன் பார்ப்போர் அனைவரும் ஜாதகத்தை துக்கி கொண்டடு தலையை பிய்த்துக்கொண்டு அலைகின்றனர், இதில் உண்மை என்னவென்றால் சில  ஜோதிடர்கள் சொல்லுவது போல்  ராகு கேது இருவரும் மேற்காணும் வீடுகளில் இருந்தாலும், திருமணவாழ்வில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை சுய ஜாதகத்தில் குடும்பம்,களத்திர ஸ்தானம் எனும் இரு வீடுகளும் பாதிப்படைந்திருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை நிலைக்காது , என்பதை தெளிவாக மக்கள் தெரிந்து கொண்டு தமது மகன் மகள் வாழ்கையில் திருமணம் எனும் அகல் விளக்கினை ஏற்றிவைக்க பணிவுடன் வேண்டுகிறேன், 

இதில் ராகு கேது தோஷம் என்பதெல்லாம் சுத்தமான மூடநம்பிக்கை ஆகும் இதை பற்றி தெளிவு பெற எம்மை அணுகவும்.

மனித அறிவு மிகவும் சிறப்பாக செயல் பட வைப்பதில் ராகு கேதுவுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதே உண்மையாகும் .

 
   

Thursday, December 8, 2011

திசா சந்திப்புஎன்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவர் கேட்ட கேள்வி, தசா சந்திப்பு ஆண் பெண் ஜாதகத்தில் இருந்தால், திருமணம் செய்தல் கெடுதல் நேரும் ,என்று சில ஜோதிடர்கள் சொல்கின்றனர், இது உண்மையா ? 

இதை கேட்ட உடன், நான் அழுவாத, சிரிப்பத என்ற எண்ணம் வந்ததது .

ஒருவருடைய ஜாதகத்தில் ,ஒரு திசை நன்மையான பலன்களை, தந்துகொண்டு இருக்கும் பொழுது ,அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் நன்மையை மட்டுமே தரும், 
ஒருவருடைய ஜாதகத்தில், ஒரு திசை தீமையான  பலன்களை தந்துகொண்டு இருக்கும் பொழுது, அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் தீமையை  மட்டுமே தரும்,
இதுவே உண்மை .
 
திசா சந்திப்பு என்பது ஜோதிடர்கள் கண்டு பிடித்த ஒரு உச்சகட்ட நகைசுவையே என்று  தெரிந்து, மக்கள் இவைகளை தவிர்த்துவிட்டு தமது மகன் மகளுக்கு திருமண வாழ்வினை பருவத்தே செய்து, அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் சரியான வயதில் திருமணம் செய்து நலவழ்வினை அவர்களுக்கு வழங்குங்கள் .

Monday, September 26, 2011

ராசி ஜோதிட பலன்கள்


பொதுவாகப் பலன் சொல்லும் போது லக்கினத்தியே முதல் பாவமாக வைத்துப் பலன் சொல்கிறோம். ஆனால் ராசிபலன் எழுதும் போது சந்திர லக்கினத்தையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். லக்கினத்தை எடுத்துக் கொள்வது இல்லை. அதாவது நம் ராசியையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். மேலை நாட்டினர் அவர்கள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எங்கு இருக்கிறதோ அதை முதல் பாவமாக வைத்துப் பலன் எழுதுகின்றனர். கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமே "Aspect" எனப்படும் பார்வையாகும். இந்தப் பார்வையில் நல்ல பார்வையும் உண்டு, கெட்ட பார்வையும் உண்டு. அதற்கு ஏற்றார்போல் பலன்கள் மாறும். அவ்வளவே.
சரி ! நாம் நமது ஹிந்து ஜோதிடத்திற்கு வருவோம். ராசியை வைத்து ஏன் எழுதுகிறார்கள் எனப் பார்ப்போம். பொதுவாக எல்லோருக்குமே அவர்கள் லக்கினம் தெரியாது. ராசியும் நட்சத்திரமும்தான் தெரியும். ஆகவே எல்லோருக்கும் தெரிந்த ராசியை வைத்துப் பலன் எழுதுவதே அவர்களுக்குப் புரியும். இது ஒரு காரணம்.
இரண்டாவது, நமது ஜோதிட நூல்களே லக்கினம், அல்லது ராசி இதில் எது வலுவாக இருக்கிறதோ அதை வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. லக்கினம் ஒரு ஜாதகத்தில் வலுவில்லாத இருக்குமேயாகில் அந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி வலுவுடன் இருந்தால் ராசியை முதல் வீடாக வைத்துப் பலன் சொல்ல வேண்டும் என்பது நமது நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. ஆகவே ராசியை வைத்துப் பலன் சொல்வதில் தவறு இல்லை.
மூன்றாவது ஒரு தலையாய காரணம் இருக்கிறது. இது மிகவும் முக்கியமானதும் கூட. ஜோதிடத்தில் பிறந்த நேரத்தைவிட கருத்தறித்த நேரத்திற்கு ஜாதகம் கணித்தால் அது மிகச் சரியாக இருக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்து. கருத்தறித்த நேரத்தைக் கண்டு பிடிப்பது எவ்வாறு ? அது என்ன அவ்வளவு எளிய காரியமா ? ஒரு உயிர் எந்த லக்கினத்தில் கருத்தறிக்கிறதோ அந்த லக்கினத்திற்கு சுமார் ஒன்பது அல்லது பத்து மாதம் கழித்துச் சந்திரன் வரும் போது அந்த ஜீவன் பிறக்கிறது. அதாவது ஒரு குழந்தையின் ஜென்ம ராசியே அது கருவான லக்கினம் ஆகும். இது அநேகமாகச் சரியாக இருக்கும். ஆகவே ஜென்ம ராசியை வைத்துப் பலன்கள் கூறினால் அது கருத்தறித்த லக்கினத்தை வைத்துப் பலன் சொல்வதற்கு ஒப்பாகும்.
ஆகவே ஜென்ம ராசியை வைத்துப் பலன் கூறுகிறார்கள். ஆக இந்தப் பல்வேறு காரணங்களினால் சந்திரன் இருக்கும் நிலையை வைத்துப் பலன்கள் கூறுகிறார்கள், எழுதுகிறார்கள்.

Thursday, September 1, 2011

ஜோதிட தீபம் 4


12 ராசிகளின் பாவங்கள்

முதல் பாவம்:

உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:
சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:
கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:
இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்திகுழந்தைகள் பிறப்பதுஎப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

ஆறாவது பாவம்:
தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:
காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

எட்டாவது பாவம்:
ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:
பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

பத்தாம் பாவம்:
இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:
லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:
இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

சர ஸ்திர உபய ராசிகள்


பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்.

சரம்: 
சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோக பலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார்.
ஸ்திரம்: 
ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்.

உபயம்:  
உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதே சமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.