வெள்ளி, 21 அக்டோபர், 2022

சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 ) அஷ்டமசனி தரும் அபரிவிதமான வளர்ச்சி !

சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 )

 களத்திர ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி சனிபகவான் கடக ராசி மற்றும் லக்கினத்திற்க்கு ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அஷ்டமசனியாக சஞ்சரிக்கும் இனிவரும் இரண்டரை வருடம் மிகுந்த இன்னல்களை தருவார் என்று பயம்கொண்டீர்கள் என்றால்? அது தவறான முரண்பட்ட கருத்தாகும், ஏனெனில் அஷ்டம ஸ்தானத்திற்கு புதையலுக்கு நிகரான சொத்துசுக சேர்க்கையை வழங்கும் வல்லமையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களை தன்னிறைவாக சுவீகரிக்கும் யோகமும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகப்பெரிய சுபயோகங்களை பெற்று வாழ்வில் மிகப்பெரிய பிரபல்ய யோகத்தை பெரும் அமைப்பும் உண்டு என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் கடக ராசி மற்றும் லக்கின அன்பர்களே.



மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம், தனது எதிர் வர்க்க கிரகம் என்றவகையில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், வாழ்க்கை துணை நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மற்றும் கும்பம் வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் அஷ்டம சனியின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் திடீர் அதிர்ஷ்டம் மட்டுமே தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை தொடர்ந்து நிலைத்தன்மையுடன் வாரிவழங்கும், இருப்பினும் தாங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் அதீத கவனம் கொள்வது நல்லது அது தங்களின் பாதுகாப்பான பயணங்கள் என்றால் மிகையாது, இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைக்கவசம் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது பாதுக்காப்பு கச்சை அவசியம் அணிவது நன்மையை தரும், ஆயுள் காப்பீடு அவசியம் செய்து வையுங்கள், மருத்துவ காப்பீடும் மிக மிக அவசியம் என்பதை உணருங்கள், இவையனைத்தும் தங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும், மேலும் தங்களின் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம், குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவது நல்லது தங்களின் குடும்பம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதும், குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்பதும் தங்களின் மனவலிமையை அதிகரிக்கும், தேவையற்ற மனக்குழப்பம் போன்ற விஷயங்களில் இருந்து தங்களை மீட்டு எடுக்கும், மிகப்பெரிய முதலீடுகளை செய்வதற்க்கு முன்பு தங்களின் சுய ஜாதகத்தில் திசா புத்திகளின் வலிமையை உறுதி செய்த பிறகு மேற்கொள்வதே சரியானதாக அமையும், மருத்துவ துறையில் உள்ள நபர்களுக்கு மிகுந்த சுபயோகம் உண்டு, அரசு துறையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டாகும், தொழில் வளர்ச்சியை வெகு அற்புதமாக முன்னெடுக்கும் யோகம் உண்டு, பொது வாழ்க்கையில் உள்ள நபர்களுக்கு அதிகார பதவியை சுவீகரிக்கும் வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை தங்களின் முன்னேற்றத்தை வெகு அற்புதமாக நிர்ணயம் செய்ய உதவி புரியும், முன் பின் அறிமுகம் இல்லாதா நபர்கள் வழியில் இருந்து சுபயோகங்கள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பு உண்டாகும், திடீர் முடிவுகளை தவிர்ப்பதும், அவசர கதியில் செய்யும் காரியங்களும் தங்களுக்கு அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், பிரிந்த கணவன் மனைவி உறவு மேம்படும், திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது கடக ராசியினர் இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி நலம் பெறுங்கள்.

சனி பகவான் தனது 6ம் பார்வையால் ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் கடகராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, உடல் ஆரோக்கியத்தை வெகு சிறப்பாக கட்டமைப்பு செய்வார், உடல் ரீதியாக இருந்த இன்னல்கள் நீங்கும், மனதில் தெளிவு பிறக்கும், மனக்குழப்பம் மனஅழுத்தம் மனபயம் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும், உழைக்கும் திறன் அதிகரிக்கும், தங்களின் நேர்மையான குணம் எதிர்பாராத முன்னேற்றத்தை தரும், கடின உழைப்பு கைகொடுக்கும், வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த கடன் சுமை நீங்கி பொருளாதார தன்னிறைவை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புதிய வீடு வண்டி வாகனம் இடம் பொருள் சொத்து  சுக சேர்க்கை உண்டாகும், தங்களின் குணநலனும் பராமரிக்கும் தன்மையும் மேலோங்கி நிற்கும், எதிர்ப்புகள் அகன்று திறமைக்கான முழு மதிப்பு மரியாதை அங்கீகாரம் கிடைக்கும், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் யோகம் உண்டாகும், தங்களின் தாய் வழி சொத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் தங்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வை தரும், எதிர்ப்புகள் அகன்று நிம்மதியான வாழ்க்கையை சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி தேர்வுகளில் சிறப்பான முன்னேற்றம், உயர்கல்வி பட்டய படிப்பு ஆராய்ச்சி கல்வியில் தேர்ச்சி என்ற வகையில் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும், வெளிநாடு யோகம், வெளியூர் ஜீவனம் தங்களின்  வாழ்க்கையில் பல்வகை மாற்றங்களை வாரி வழங்கும், சீரிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு செழிப்பான வாழ்க்கையை நல்கும், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது தங்களின் உடல்நலத்தை சிறப்பாக அமைத்து தரும், குறிப்பாக பல், எலும்பு, கேசம் போன்ற அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு குணம் பெறுவீர்கள், நேர்மையான செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள், எதிர்பாலின சேர்க்கை சார்ந்த இன்னல்கள் விலகும், முரண்பட்ட உறவுகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை தரும், சிறந்த தொழில் அல்லது வேலைவாய்ப்பு அமைவதற்கான சந்தர்ப்பம் உண்டு மிக சிறப்பாக வாய்ப்புகளை கையாண்டு வெற்றிகொள்ளுங்கள்.

சனிபகவான் தனது சமசப்த 7ம்  பார்வையின் மூலம் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக வழங்கிய போதிலும், குடும்பத்தில் சில சிக்கல்களும் வரவுக்கு மீறிய செலவினங்களும் அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் அதிக அளவில் தேவைப்படும், தங்களின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக அமைவது அவசியமானது, தங்களது பேச்சில் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, பலரது கருத்துக்கள் தங்களுக்கு வீண் மனபயத்தையும் சஞ்சலத்தையும் தரும், செய்யும் காரியங்களில் அதீத தடுமாற்றத்தை தாங்கள் எதிர்கொள்ளவேண்டி வரும், எனவே வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது, கல்வியிலும் கலைகளிலும் மிகப்பெரிய தேர்ச்சியை பெறுவீர்கள், முன்பின் யோசிக்காமல் செய்யும் செயல்களால் தாங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், அறிய கலைகளில் தேர்ச்சியையும் இயல் இசை நாடக துறையில் உள்ள நபர்களுக்கு அபரிவிதமான வெற்றி வாய்ப்பும் உண்டாகும், தங்களின் வாழ்க்கை துணையுடன் சிறு சிறு கருத்துவேறுபாடு வர வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே அவர்களை அனுசரித்து செல்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது தேவையற்ற அவப்பெயரை சந்திக்காமல் மீண்டு வருவதற்கு துணைபுரியும், தனது கருத்துக்களை பதிவு செய்யும் பொழுது மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது, ஆன்மீகத்தில் வெற்றி உண்டு, இறையருளின் கருணை பரிபூரணமாக அமையும், தெய்வீக காரியங்களில் அதீத ஈடுபாடும் அதனால் பெரும் சுபயோகங்களும் அதிகரிக்கும், நன்மை தரும் காரியங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், தங்களின் குழந்தைகள் வழியில் இருந்து சிறப்பான சுபயோகங்கள் உண்டு, இருப்பினும் அவர்களது வளர்ச்சியில் அக்கறையும் முக்கியத்துவம் தருவது நல்லது, சனியின் சமசப்த பார்வை தங்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும், கடின உழைப்பையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும் சிறப்பாக முன்னெடுக்க அருமையான வாய்ப்பையும் வழங்கும்.

சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு பூர்வீக வழியில் இருந்து தன்னிறைவான சுபயோகங்களை வாரி வழங்கும், சனி தனது வர்க்க ராசியான துலாம் ராசியை வசீகரிக்கும் அமைப்பு ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை நல்கும், சிறு குறு தொழில் விருத்தி அடையும், செய்யும் தொழில்வழியில் தங்களின் தனித்திறமை அபரிவிதமாக வெளிப்படும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றமும் வருமான வாய்ப்பும் கைகூடி வரும், தடைபட்ட திருமண  வாழ்க்கை கைகூடி வரும், தங்களின் குடும்பத்தில்  நல்லதொரு ஆண் வாரிசு பிறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, புத்திர பாக்கியம் தங்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் யாவற்றையும் போக்கி மனமகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் முழு அளவில் வாரி வழங்கும், தங்களின் துறை சார்ந்த ஞானம் தொழில் ரீதியான அபிவிருத்தியை தன்னிறைவாக வாரி வழங்கும், கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கான பொருளாதார உதவிகள் வந்து சேரும், குல தெய்வத்தின் ஆசிர்வாதம் தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்க காத்திற்குக்கிறது என்பது கவனிக்கத்தக்க  சிறப்பு அம்சமாகும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள், புதிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும், ஆயகலைகளில் தேர்ச்சியையும், பொதுமக்கள் மூலம் அபரிவிதமான முன்னேற்றங்களை பெறுவதற்கான வாய்ப்பும் தங்களுக்கு வந்து சேரும், பொதுமக்கள் தொடர்பு உள்ள தொழில்களில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றங்களை தன்னிறைவாக பெறுவது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் எழுத்து பத்திரிகை மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் மற்றும் பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் தனைத்திறனை முழுமையாக பிரயோகித்து  வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் பொன்னனான நேரமிது.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696


வெள்ளி, 7 அக்டோபர், 2022

சனிபெயர்ச்சி பலன்கள் - மிதுனம் ( 2023 - 2025 ) விடாமுயற்சி வீரியமிக்க செயல்பாடுகள்!

சனிபெயர்ச்சி பலன்கள் - மிதுனம் ( 2023 - 2025 )

 அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி சனிபகவான் மிதுன ராசி மற்றும் லக்கினத்திற்கு அஷ்டம சனியில் இருந்து பாக்கிய ஸ்தானத்தில் 9ம் பாவகத்தில் சஞ்சரிப்பது வரவேற்கத்தக்க விஷயம், அஷ்டமசனியின் பாதிப்பின் தன்மை வெகுவாக குறைந்து தங்களுக்கான முன்னேற்றம் பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து வெகு அற்புதமாக வெளிப்படும், தங்களின் முன்னேற்றம் என்பது தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, ஞானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் ஆன்மீக வெற்றி என்பது அபரிவிதமானதாக அமையும்.



 பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மிதுன ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் வெகு அற்புதமான சுபயோகங்களை தனது வர்க்க கிரகம் என்றவகையில் மிகுந்த நன்மைகளை மட்டுமே தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் அறிவுபூர்வமான செயல்பாடுகள் தங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமையும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், காணக்கிடைக்காத பல அற்புதமான புண்ணிய திருக்கோவில்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இவையாவும் தங்களுக்கு முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக நடைமுறைக்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தெய்வீக அனுகூலம் இனிவரும் காலங்களில் தங்களுக்கு வெகு அற்புதமாக வெளிப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இதுவரை தங்களின் வாழ்க்கையில் நினைத்தும் பார்த்திராத அற்புதமான விஷயங்கள் அதிர்ஷ்டகரமாக நடைமுறைக்கு வந்து சேரும் என்பது கவனிக்கத்தக்கது, தெளிவான சிந்தனை, அறிபூர்வமான நடவடிக்கை, அறிவார்ந்த ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, மிகசிறந்த குருமார்களின் வழிகாட்டுதல்கள், ஆயகலைகள் அறுபத்திநான்கில் தேர்ச்சி, தெய்வீக தரிசனம், ஆன்மீக வழியில் தங்களுக்கு இருந்த அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டுவரும் யோகம், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுமையாக சுவீகரிக்கும் யோகம், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, தனது தொழில் குடும்பம் மற்றும் முயற்சிக்கான வெற்றி போன்றவற்றால் தன்னிறைவான சுகபோகங்களை சுவீகரிக்கும் வாய்ப்பை தங்களுக்கு இனிவரும் காலம் வெகு அற்புதமாக வாரி வழங்கும், சுப விசேஷங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், நல்லதொரு ஆரம்பம் உங்களில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தை தன்னிறைவாக வாரி வழங்கும்.

சனி பகவான் தனது 6ம் பார்வையால் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் மிதுனராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கையை வாரி வழங்குவார், இதுவரை இருந்த திருமண தடைகள் யாவும் நீங்கி மிதுன ராசி மற்றும் லக்கின அன்பர்களுக்கு மனதிற்கு இசைந்த நல்லதொரு இல்லற வாழ்க்கையை  நல்குவார், அதே சமயம் பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிகரிக்கும், வீண் ஆடம்பரம் தங்களுக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியமானது, குடும்ப வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகும், வார்த்தைகளில் கவனம் தேவை, வீண் விவாதங்கள் தங்களின் மனநிம்மதியை கேள்விக்குறியாக்கும், வாழ்க்கை துணையுடன் ஓர்  இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பது நல்லது, இல்லையெனில் தங்களின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், எக்காரணத்தை கொண்டும் வாக்கு கொடுப்பது தங்களின் செயல்திறனை குறைக்கும், நிம்மதி சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்குவது நல்லது, வருமானம் வெகுசிறப்பாக வந்த போதிலும் அதற்க்கு மீறிய செலவினங்கள் அதிகரிக்கும், போதும் என்ற மனம் ஒன்றே பெண்ணான மருந்து என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, வார்த்தை பிரயோகம் என்பது மற்றவர்களை பாதிக்காவண்ணம் இருப்பது நல்லது, புதிய வீடு வண்டி வாகன யோகம் அமைந்த போதிலும் எவ்வித சிக்கல்கள் வில்லங்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது தங்களுக்கான நன்மைகளை அதிகரிக்கும், வெளிநாடு யோகம் வெளியூர் தொழில் அமைப்பு தங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் பிரிவு நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை அனைவரிடமும் அன்பு பாராட்டுவது நல்லது, சில வீண் விரயங்களை தவிர்க்க இயலாது, தங்களால் தங்களின் வாழ்க்கை துணை  வெகுவான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கருத்து சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை பெரியமானதுடன் வழங்குவது நல்லது, கணவன் மனைவி உறவுக்கு அதீத முக்கியத்துவம் தருவது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் சனிபகவான் தரும் சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க உதவி புரியும்.

சனிபகவான் தனது சமசப்த 7ம்  பார்வையின் மூலம் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் எடுக்கும் முயற்சிகள் யாவிலும் தன்னிறைவான முன்னேற்றங்களை மட்டுமே வெகு அற்புதமாக வாரி வழங்குவர், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் வெளிநாடு யோகம் உண்டாகும், பத்திரிகை மற்றும் ஊடக துறையில் உள்ள நபர்களுக்கும் தன்னிறைவான வசதி வாய்ப்புகள் வந்துசேரும், இளைய சகோதர வழியில் மிகப்பெரிய நன்மைகளும் சுபயோகங்களும் வந்து சேரும், காதலில் வெற்றி, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து கிடைக்கும் சுபயோகம், தெய்வீக அனுகூலம், குறுகிய காலத்தில் லட்சியங்களை வெற்றிகொள்ளும் ஆற்றல், திட்டமிட்ட காரியங்களில் அற்புதமான வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம், வீரியமிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து வரும் சுபயோகங்கள், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் அம்சம், விளையாட்டு துறையில் முழு அங்கீகாரம் மற்றும் உலக புகழ் பெரும் யோகம், தெளிவான சிந்தனை என்ற வகையில் சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு வெற்றி மேல் வெற்றி உண்டாகும், புதிய முயற்சி புதிய சிந்தனை புதிய வாய்ப்புகள் தங்களின் வாழக்கையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.

பொதுவாக வீரிய ஸ்தானமான 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் அல்லது வசீகரிக்கும் சுப அசுப கிரகங்கள் முழு அளவில் நன்மைகளை மட்டுமே  தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இந்த அற்புதமான வாய்ப்பை பெரும் மிதுன ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் பல அற்புதமான சுபயோகங்களை வீரிய ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவாக வாரி  வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களின் விடாமுயற்சிக்கு நல்லதொரு வெற்றிகளை சனிபகவான் ஸ்திரத்தன்மையுடன் வழங்குகிறார் என்பது கவனிக்க தக்கது, எழுதுபொருள் பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் கவிஞனார்கள் பொருளாதர வல்லுனர்களின் வாழ்க்கையில் இனிவரும் காலம் அற்புதமான பொற்காலமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தெய்வீக அனுக்கிரகம் மூலம் தங்களின் வாழ்க்கை வெகு சிறப்படையும், அரசுத்துறையில் உள்ளோர் அரசியல்வாதிகள் ஆசிரிய பணி தெய்வீக பணி செய்வோருக்கு சனிபகவான் தரும் யோகம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பதை கருத்தில் கொண்டு சிறப்படையுங்கள்.

சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது மிதுன ராசியை சார்ந்த அன்பர்களுக்கு கடினமான உழைப்பை வெளிப்படுத்துவார், உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் தங்களின் வெற்றி நிலைநிறுத்தப்படும், செய்யும் தொழில் வழியில் திடீர் முன்னேற்றம் மற்றும் உயர்பதவி போன்ற அற்புதமான விஷயங்கள் தங்களை தேடிவரும், சுய ஆளுமை திறன் அதிகரிக்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும், சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் வெற்றிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு, உடல் நலம் கெடும் , உணவு  பழக்க வழக்கம் தங்களுக்கு அதீத நெருக்கடிகளை தரும் மருத்துவ  செலவினங்களை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் நல்லதொரு முன்னேற்றங்களை பெறுவார்கள், உயரிய அந்தஸ்துகளை இறைஅருள் தங்களுக்கு பெற்றுத்தருவார், புண்ணிய காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும், இதுவரை இருந்து வந்த தொழில் முடக்கம் நீங்கும், கடன்பிரச்சனை நீங்கும், பொருளாதர தன்னிறைவை பெறுவீர்கள், கேட்ட இடத்தில் இருந்து பொருளாதார தன்னிறைவு உண்டாகும், சுய முயற்சி சார்ந்த காரியங்கள் யாவும் 100% விகித வெற்றியை தரும், புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் வாய்ப்பு, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் முன்னேற்றம் என்ற வகையில் இனிவரும் காலம் தங்களின் வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்களை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை, தெளிவான  முடிவுகளை மேற்கொள்ளும் சிறந்த நிர்வாக திறனை தங்களுக்கு  சனிபகவான்  வாரி வழங்குவார், பயணங்களில் அதீத கவனம் தேவை, மற்றவர் பணம் தன் கையிருப்பை உறுதி செய்யும் என்பதால் நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை இனி நடைமுறைப்படுத்தலாம், எதிரிகளை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி உண்டு, வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் பொருளாதார உதவி தங்களுக்கு வெகு அற்புதமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனையுடன் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நேரம் இது என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள் வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் மிதுன ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696


சனி, 1 அக்டோபர், 2022

சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 ) தொழில்யோகம் பொருளாதார முன்னேற்றம் !

சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 )


 கர்மாதிபதி சனி பகவான் ரிஷப ராசி மற்றும் லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் நேரமானது தொழில் ரீதியான தன்னிறைவான யோகங்களை நல்குவதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை வெகு அற்புதமாக வாரி வழங்கும் அருமையான நேரமாக அமைகிறது, இதுவரை இருந்து வந்த தொழில் ரீதியான பிரச்சனைகள் நீங்கி புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடி வரும்.

 ஜீவன ஸ்தானமான 10ம் இட சஞ்சாரம் ரிஷப ராசியினருக்கு தனது வர்க்க கிரக வீட்டில் இருந்து மிகுந்த சுபயோகங்களை மட்டுமே நல்குவது கவனிக்கத்தக்கது, வேலைவாய்ப்பு இன்றி தடுமாறி வந்த அன்பர்களுக்கு தகுதிக்கு தகுந்த நல்லதொரு வேலைவாய்ப்பு தேடி வரும், கவுரவ பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், அரசு வேலைவாய்ப்பு சார்ந்த நிலைகள் நல்லதொரு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் வந்து சேரும், உயர்பதவிகளை வெகு விரைவாக சனி பகவான் தங்களுக்கு பெற்று தருவதுடன், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் நல்குவார் என்பது கவனிக்க்கத்தக்கது, சுய தொழில் யோகம் கூட்டு தொழில் வழியில் இருந்துவரும் மிகப்பெரிய வளர்ச்சி, புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றிகள், சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்துவது வழியில் இருந்து வரும் நன்மைகள், புது முயற்சிகளுக்கான அங்கீகாரம், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை செய்தொழில் வழியில் இருந்து சுவீகரிக்கும் யோகம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையில் தன்னிறைவான ஜீவன மேன்மையை முழு அளவில் சுவீகரிக்கும் யோகம் உண்டு, இதுவரை இருந்து வந்த மனபயம் நீங்கி தைரியத்துடன் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தொழில் ரீதியான முயற்சிகளுக்கான வெற்றிகளை தாங்கள் தன்னிறைவாக சுவீகரிக்கும் நல்ல நேரமிது, மதிப்பு மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து தங்களுக்கான அங்கீகாரம் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள்.

 தங்களின் தகப்பனார் வழியில் இருந்து அபரிவிதமான தொழில் வளர்ச்சி ஏற்படும், அவரது தொழிலை தாங்கள் ஏற்றுநடத்தும் சுபயோகமும் உண்டாகும், குடும்பத்தில் உள்ளோரது அரவணைப்பும் ஆதரவும் தங்களுக்கு முழுமையாக வந்து சேர்வதுடன் சுய கவுரவம் மேம்படும், நிர்வாக திறன் வெகு அற்புதமாக வெளிப்படும், தைரியம் தன்னம்பிக்கை, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் போன்றவை தங்களை மற்றவர்கள் மெச்சும் தன்மையிலான சுபயோகங்களை பெற்று தரும், பணியாளர்கள் ஆதரவு தங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் தொழில் ரீதியான நுட்பங்களை வெகு அற்புதமாக கற்று தேர்ச்சி பெரும் யோகம் உண்டாகும், தொழில் வழியில் முதலீடுகள் புதிய சொத்து வண்டி வாகன யோகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை  தன்னிறைவாக சனிபகவான் நிறைவாக வாரி வழங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இனிவரும் இரண்டரை வருடமும் ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியாக வெற்றி மேல் வெற்றியே உண்டாகும்.

சனி பகவான் தனது 6ம் பார்வையால் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் ரிஷபராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக 3,11ம் வீடுகளை வசீகரிக்கு சுபகிரகமானாலும் சரி, அசுப கிரகமானாலும் சரி சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான சுபயோகங்களையே 3,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அந்த அற்புதமான வாய்ப்பை ரிஷப ராசியை சார்ந்த அன்பர்கள் இனிவரும் இரண்டரை வருடம் தன்னிறைவாக சுவீகரித்து  முயற்சிக்கான வெற்றிகளையும், திட்டமிட்ட காரியங்களில் 100% விகித நன்மைகளையும், இளையசகோதர வழியில் இருந்து வெற்றி வாய்ப்புகளையும், சிறு பயணங்கள் மூலம் மிகப்பெரிய லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்க இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள ரிஷப ராசியினர் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்களை பெறுவார்கள், சரியான விஷயங்களை கிரகிக்கும் ஆற்றல் உண்டாகும், பொதுமக்கள் தொடர்புகள் வழியில் ஏராளாமான நன்மைகளை பெறுவீர்கள், பொதுமக்கள் தொடர்புள்ள துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு அற்புதமான யோக வாழ்க்கையை வழங்க தயார் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது, தோல்விகள் இல்லாத ஒரு அற்புதமான எதிர்காலத்தை ரிஷப  ராசியினர் தன்னிறைவாக பெருகிண்றீர்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஊடகம் பத்திரிகை மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் எதிர்பாராத முன்னேற்றங்களையும், அபரிவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற்று தரும், குறிப்பாக விரைவில் ஜனரஞ்சகமாக பிரபல்யம் அடையும் யோகம் உண்டாகும், முயற்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சரியான தகவல்களை உணர்ந்து அதை பொதுமக்கள் விழிப்புணர்வு பெரும் வகையிலான தகவல் பரிமாற்றத்தை தங்களின் கலைத்திறனுடன் வெளிப்படுத்துவீர்கள், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு பல அற்புதமான முன்னேற்றங்களை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய முயற்சிக்கான வெற்றி 100% சதவிகிதம் தங்களுக்குஉண்டாகும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் இனிவரும் இரண்டரை வருடம் தாங்கள் முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வாய்ப்புகளை சரியாக முன்னெடுத்து நலம் பெறுங்கள்.

 சனிபகவான் தனது சமசப்த 7ம்  பார்வையின் மூலம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வீடு வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை என்ற வகையில் வெகு அற்ப்புதமான யோக வாழ்க்கையை வழங்கிய போதிலும், ஆண்களென்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக அவரது உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஏற்படும் மருத்துவ செலவினங்களை தாங்கள் எதிர்கொள்ளும் தன்மையை தரும் எனவே இன்சூரன்ஸ் திட்டங்களை முன்னெடுப்பது தங்களுக்கான பொருளாதார சிக்கல்களை தீர்க்கும், பெண்கள் தங்களது தந்தையின் வழியில் இருந்து வரும் பொருளாதார செலவினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் புதிய  வீடு வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும், இடமாற்றம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான சுபயோகங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் இந்த அற்புதமான  மாற்றங்களை சுவீகரிக்கும் தன்மையை விழிப்புணர்வுடன் இருந்து பெற்று மகிழுங்கள்.

 தங்களின் குணம் நலன் சார்ந்த சுயமதீப்பீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் தாங்கள் கவனம் செலுத்தவில்லை எனில் தங்களுக்கு வரும் இழப்புகள் என்பதை தவிர்க்க இயலாது, எனேவ அனைவரிடமும் அன்புபாராட்டுங்கள், அவசர கதியில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு அதீத இடர்பாடுகளையும் இன்னல்களையும் வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியத்தை  கையாள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் அதீத தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், கணவன் மனைவி உறவு பலப்படும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் யோகம் உண்டு, திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற  வாழ்க்கை சுவீகரிக்கும் யோகம் உண்டு, எதிர்பார்ப்புகள் நிறைவேறும் லட்சியங்களை வென்று எடுக்கும் யோகம் உண்டு, சொத்து சுக சேர்க்கையை விழிப்புணர்வுடன் பெற்று நலம் பெறுங்கள்.

 சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது திடீரென ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு காதல் திருமண வாழ்க்கை கைகூடி வரும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து  சில நன்மைகள்  நடைபெற்ற போதிலும், அவர்கள் வழியில் இருந்து பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இல்லற வாழ்க்கை கைகூடி வந்த போதிலும் வாழ்க்கை துணை தங்களுக்கு  நேரெதிரான குணநலன்களை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, இதனால் தங்களின் தனித்திறன் யாவும் வீண் விரையம் ஆகும், அதே சமயம் மனநிம்மதி சார்ந்த விஷ்யங்களையும் கேள்விக்குறியாகும்  என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள், இறைவழிபாடும் முற்போக்கு சிந்தனை மட்டுமே தங்களை மேற்கண்ட இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்  என்பதை  கவனத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே, குறிப்பாக பொது வாழ்வில் பொதுமக்கள் தொடர்பில் உள்ள அன்பர்கள் தங்களது பேச்சில் மிகுந்த கவனம் கொள்வது நன்மைகளை தரும், தெளிவில்லாத செயல்பாடுகள் மூலம் அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 வெளியூர் மற்றும் வெளிநாடு சார்ந்த  சுபயோகங்கள் தங்களுக்கான பொருளாதார முன்னேற்றங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும், வெளிநாடுகளில்  ஜீவனம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் சனி பகவான்  திடீரென பல அற்புதமான நன்மைகளை வாரி வழங்குவார், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், தெய்வீக  அனுக்கிரகம்,  புதிய சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், அரசு சார்ந்த உதவிகள் பெண்கள் வழியிலான தொழில் முன்னேற்றங்கள், வண்டி வாகன துறையில் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், குடும்பத்துடன் சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் தன்மை, மூதாதையர் சொத்துக்கள் கைவர பெரும்  யோகம் என்ற வகையில் நன்மைகளை சனிபகவான்  வழங்குவார் தங்களின் தனித்திறன் கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுங்கள்.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் ரிஷப ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  10,3,4,7ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696