Saturday, July 22, 2017

அற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு !

 

இயற்கையாகவே அமாவாசை தினங்களில் மனிதனுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பு மிக நெருக்கமாக அமையும், மனதில் எழும் எண்ணத்தின் வலிமைதனை அதிகரிக்கும் அதன்காரணமாக இறை அருளின் கருணையையும், பித்ரு தேவதைகளின் ஆசியையும் மிக எளிதாக பெரும் வண்ணம் ஜீவதொடர்பை ஓவ்வொருவரும் பெறுவது இயற்கையாக நடைபெறும், குறிப்பாக ஆடி,புரட்டாசி,தை அமாவாசை தினங்களில் இதன் தாக்கம் சற்று அதிக அளவில் அமையும் என்பதனால் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான லாப ஸ்தானமான 11ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கையும், அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகளை வாரி வழங்கும்.

 பித்ரு வழிபாடு செய்வதன் மூலம் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல ஞானத்துடன் கூடிய நல்லோர் சேர்க்கை உண்டாகும், பித்ருக்கள் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்க தக்க மாற்றங்களை வாரி வழங்கும், மேலும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு தைரியமும் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகளும் உண்டாகும், இதனால் சகல சௌபாக்கியமும் ஜாதகரின் வாழ்க்கையில் வந்து சேரும், மேற்கண்ட விஷயங்கள் அவரவர் சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போல் பலாபலன்களை தரக்கூடும் என்ற போதிலும் சுப பலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும்.

மேலும் ஆடி அமாவாசை வழிபாடு என்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் வல்லமை பெற்றது, என்பதனால் அனைவரும் முறையாக அவரவர் குல வழக்கபடி குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு செய்து சகல நலன்களையும் பெருக.

குறிப்பு :

 ஆடி அமாவாசை வழிபாடு செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில், குலம் விருத்தி அடையும், அண்டிய பிணி அகலும், நீண்ட ஆயுள் அமையும், பேரிழப்புகள் தவிர்க்கப்படும், தொழில் விருத்தி உண்டாகும், முன் ஜென்ம விணை, சாபங்கள் தீரும், பிரம்மஹஷ்தி தோஷம் நீங்கும், தீயோர் சேர்க்கை விலகும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும், தெய்வீக அனுபவமும், வருமுன் உணரும் பேராற்றலும் அதிகரிக்கும், சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ( பாவக வலிமை இன்மை ) விலகி, சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும், கடன் சார்ந்த  இன்னல்கள் நீங்கி பொருளாதார தன்னிறைவு உண்டாகும், புதுவித ஜீவன முன்னேற்றமும், ஏற்றமிகு எதிர்காலமும் நம் அனைவருக்கும் உண்டாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Thursday, July 20, 2017

7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?

 சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்வது ராகுகேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது, எந்த ஓர் லக்கினம் என்றாலும் சரி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்ப்பட்ட பாகையில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து முழு அளவிலான யோக பலன்களை தரும், குறிப்பாக ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய நன்மைகளையும் யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிப்பார், நீண்ட ஆயுள், நல்ல உடல் நலம், ஜாதகர் பெரும் புகழ் மற்றும் கீர்த்தி, நல்ல எண்ணங்கள், கட்டுப்பாடு, உடல் மற்றும் மனவலிமை, சரியான திட்டமிடுதல்கள், தனக்கு தேவையான நல்ல விஷயங்களை அனைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் அறிவாற்றல், நேர்மை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சிந்தித்து செயல்படும் தன்மை என்ற வகையில் ஜாதகர் நன்மைகளை பெறுவார், இது அணைத்தது லக்கினத்தினருக்கும் பொருந்தும் இனி தங்களது சுய ஜாதக அமைப்பில் ராகு கேது தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்.

 கடக லக்கினம், லக்கினம் கடக ராசியில் 109.28.14 பாகையில் ஆரம்பித்து, சிம்ம ராசியில் 137.56.07 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289.28.14 பாகையில் ஆரம்பித்து, கும்ப ராசியில் 317.56.27 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, தங்களது ஜாதகத்தில் மகரம் மற்றும் கடக ராசியில் ராகு கேது அமர்ந்த போதிலும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமரவில்லை எனவே தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் லக்கினத்தில் ராகு கேது அமரவில்லை என்பதை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" விரும்புகிறது, மேலும் ராகு கேது மகரம் மற்றும் கடகத்தில் உள்ள 6ம் பாவகம்  மற்றும் 12ம் பாவகத்தில் உள்ளது என்பதே தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்துள்ள உண்மை  நிலை, எனவே லக்கினத்தில் ராகு கேது எண்ணத்தை தவிர்த்து விடுங்கள், மேலும் அதை வைத்து பலன் காண முற்படுவதும் தவறான அணுகுமுறை என்பதில் தெளிவு பெறுங்கள்.

அடுத்து தங்களின் கேள்வி ராகு கேது தங்களது ஜாதகத்திற்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும்  பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், 6ல் அமர்ந்த ராகு தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 12ல் அமர்ந்த கேது தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் தருகின்றனர், இருப்பினும் தற்போழுது  நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் விரைய ஸ்தான பலனை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து தங்களுக்கு கடுமையான இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுக வாழ்க்கைக்கு தடை, வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சார்ந்த இழப்புகள், உடல் நிலை பாதிப்பு, மருத்துவ செலவு, கடன் தொந்தரவு, எதிர் பாராத செலவுகள், தொழில் வழியில் இன்னல்கள், தொழில் முடக்கம், தொழிலாளர் பிரச்சனைகள், மனநிம்மதி இழப்பு, முதலீடு செய்த வகையில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மனப்போராட்டம், அனைத்திலும் முடக்கம் என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது தாம் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பினும், ராகு தனது திசையில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது  தங்களுக்கு நன்மை தரும் அமைப்பு அல்ல என்பதனை  நினைவில் வைத்து செயல்படுங்கள், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்ப்பதற்கு உண்டான பரிகாரங்களை தேடி நலம் பெறுங்கள் "வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை கூறுவது முற்றிலும் தவறு, பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் பலன் காண்பதே சரியான அணுகுமுறை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பினும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகள் மற்றும் யோகங்கள் நடைமுறைக்கு வரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Tuesday, July 18, 2017

சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?


 சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது  சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி  திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம்  என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு  7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.

இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது  நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப  வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.

எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி  ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Monday, July 17, 2017

திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத்துவம் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை முற்றிலும் உண்மையே, ஓர் ஆண் மகனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் அவசியமாகிறது, எவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிமை பெற்ற ஜாதகம் என்ற போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்த பட்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் வெற்றிகளையும் சுப யோகங்களையும் அனுபவிக்க முடியும், ஒருவேளை தனது ஜாதகம் வலிமை அற்று இருந்தால் கூட, தமது மனைவியின் ஜாதக வலிமை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், இந்த அமைப்பு கணவன் மனைவி உறவுக்கு மட்டும் மிக சிறப்பாக பொருந்தும் ( ஈருடல் ஓருயிர் ) என்ற தாத்பரியத்தின் மூலம் இதன் தாக்கம் மிக சிறப்பாக கணவனுக்கு சுப யோகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட அமைப்பின்படியே மனைவியின் ஜாதகம் யோகம் அற்று இருப்பின், அதனால் கணவனுக்கும் அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் இதில் விதிவிலக்கு கிடையாது, குறிப்பாக மனைவியின் ( துணைவி ) ஜாதகம் வலிமை அற்று காணப்பட்டால், ஜாதகரின் கதி அதோகதிதான், சுய ஜாதகத்தில் பாரிஜாத யோகங்கள் காணப்படினும், அனைத்தும் யோக பங்கம் என்ற நிலைக்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன், அவரது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக தெரிந்திருப்பது ஓவ்வொரு ஆண் மகனின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

எனவே இல்லற வாழ்க்கையில் இணையும் முன்பே, வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை பற்றியும் அறிந்திருப்பது, இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பெரும்பாலும் தமக்கு உகந்த வழக்கை துணையை தேர்வு செய்யாமல் அதன் பிறகு அதற்கான தீர்வுகளை தேடி அலைவது இல்லற வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை ஏற்ப்படுத்தும், திருமண பொருத்தம் காணும் பொழுதே தமக்கு உகந்த, பொருத்தமான ஜாதக வலிமை கொண்ட வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சாலசிறந்தது, இல்லற வாழ்க்கையில் இன்பங்களையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும். 

கீழ்கண்ட ஜாதகியை தமது வாழ்க்கை துணையாக ( காதல் திருமணம் ) ஏற்றுகொள்ளலாமா ? என்ற கேள்விக்கும் "ஜோதிடதீபம்" வழங்கும் ஆலோசணை :


லக்கினம் : கன்னி 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்

மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகியை, ஜாதகர் விருப்பமணம் செய்துகொள்ளலாமா? என்ற கேள்வியை வினவி இருக்கிறார், இது அவரது வாழ்க்கை பிரச்னை என்பதால், அவருக்கு சில அறிவுரைகளை வழங்க "ஜோதிடதீபம்" விரும்புகிறது, தமது மனைவியாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் பற்றி ஓர் சிறு அறிமுகம், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணாதிசியம், ஆரோக்கியம் மற்றும் மன வலிமையை குறிப்பிடும், குடும்ப ஸ்தானமான 2ம் வீடு வலிமை பெறுவது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு, நிறைவான வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடும், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வலிமை பெறுவது சிறந்த புத்திசாலித்தனத்தையும், சமயோசித அறிவுத்திறன் மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தை நல்கும், களத்திர ஸ்தானமான 7ம் வீடு வலிமை  பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வாழ்க்கை துணை உடனான புரிதல்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை நல்கும், ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு வலிமை பெறுவது வாழ்க்கை துணைக்கு தமது வழியில் இருந்து வருமானம், யோகம், தீர்காயுள், திடீர் செல்வத்தை தரும், மோட்ச ஸ்தானமான 12ம் வீடு வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பொருளாதார தன்னிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நல்கும்.

மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் அளவில்லா சந்தோஷங்களை வாரி வழங்கும், மேற்கூறிய விஷயங்களை பெற்ற ஜாதகியை திருமணம் செய்வது, சம்பந்தப்பட்ட ஆண் மகனுக்கு யோக வாழ்க்கையை நல்கும் இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் தாங்கள் பொருத்தம் காண பணித்த ஜாதகத்தில், இதை போன்ற அமைப்புகள் இல்லை, அதற்க்கு நேர்மாறாக உள்ளது, லக்கினம் மட்டும் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று  மிக வலிமையாக உள்ளது, 2,8,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறது, 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, தமது கணவருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது, ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எனவே சிறுதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து அதன் பிறகு மிகுந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டாம், 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது என்பது, ஜாதகியின் கணவனுக்கு தாங்க இயலாத இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தங்களின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது என்பதுடன், மற்ற பாவகங்களும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் தரும்.

ஒருவேளை தாங்கள் மேற்கண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்தால், அதன் விளைவு மிக கடுமையாக இருக்கும், உதாரணமாக கல்லை கட்டிக்கொண்டு நீச்சல் பயிலுவதற்கு சமமான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், எனவே தங்களுக்கு உகந்த பொருத்தமான வேறு வழக்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Saturday, July 15, 2017

வேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தருமா ? சுய தொழில் செய்வது முன்னேற்றத்தை தருமா ?
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்."

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

என்ற திருக்குறளுக்கு ஏற்ப இதை இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆய்வு செய்ய சுய ஜாதகம் மிக துல்லியமாக கண்டறியும் என்பதனை எவராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் ஓர் ஜாதகருக்கு பிறப்பிலேயே "இறை அருள்" அவருக்கு ஏற்ற ஜீவனத்தை வகுத்து வைத்து விடுகிறது, இதை உணர்ந்து செயல்படும் அன்பர்களுக்கு ஜீவன ரீதியான தோல்விகள் என்பது சிறிதும் இல்லை, இதற்க்கு காரணமாக சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதக பாவக வலிமை அடிப்படையாக அமைகிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் அவருக்கு உகந்த ஜீவனத்தை சரியான வயதில் அறிமுகம் செய்து, அதன் வழியிலான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்க ஆரம்பித்து விடும், மேலும் ஜாதகர் தனக்கு உகந்த ஜீவனத்தை தேர்வு செய்த குறுகிய காலத்தில் அதில் தன்னிறைவான வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெற ஆரம்பித்து விடுவார், மேலும் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் தொழில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஓர் விஷயமாக மாறிவிடும், ஜாதகருக்கு யாதொரு சிரமும் இன்றி ஜீவன வாழ்க்கை நல்ல முறையில் சுப யோகங்களை வாரி வழங்கும்.

பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் எவரும் தனது ஜீவனம் மற்றும் தொழில் பற்றிய கவலைகள் இன்றி மிக தெளிவாக தமக்கு உகந்த தொழில் வாய்ப்புகளை பெற்று 100% விகித யோக வாழ்க்கையை பெறுகின்றனர், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட அன்பர்கள் மட்டுமே தொழில் மற்றும் வேலை சார்ந்த இன்னல்களை கடுமையாக சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர், தமக்கு உகந்த தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை அறிந்துகொள்ள இயலாமல், சற்றும் பொருந்தாத தொழில் மற்றும் வேலையினை தேர்வு செய்து நேரத்தையும், தமது உடல் மற்றும் அறிவு சார்ந்த உழைப்பையும் மாற்றுவர்களுக்கு அர்ப்பணம் செய்து ஜீவித்திருக்கும் சூழ்நிலையை பெறுகின்றனர், பெரும்பாலும் தமக்கு உகந்த ஜீவனத்தை தேர்வு செய்யாத ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையையே பரிசாக பெறுகின்றனர், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கும் மற்ற பாவக வழியில் சுதந்திரமாக ஜீவித்து இருக்க இறை அருள் ஓர் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கும் என்ற ஓர் விஷயத்தை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, அந்த ராகசியத்தை அறிந்த  அன்பர்கள் வாழ்க்கையிலும் ஜீவன ரீதியான யோக வாழ்க்கை வெற்றி மாலையுடன் காத்து இருக்கின்றது என்பது மறுக்க இயலாத விஷயமாகும்.

சுய ஜாதக பாவக வலிமையை தெளிவாக அறிந்து கொண்டு, அடிப்படையில் தமது ஜாதகம் சுய தொழில் செய்ய உகந்தததா ? அடிமை தொழில் செய்ய உகந்தததா ? அல்லது கூட்டு தொழில் மூலம் ஜீவன மேன்மை பெரும் யோகம் பெற்றதா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியாமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே ! 


லக்கினம் : கடகம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : பூரட்டாதி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6ம் வீடு பாக்கிய  ஸ்தானமான  9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு ஆகும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு வலிமை பெற்று  இருப்பது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து முழு அளவிலான  நன்மைகளை வாரி  வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,12ம் பாவக வழியில்  இருந்து கடுமையான இன்னல்களை தரும், 8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது எதிரிகள் வழியில் இருந்து மிக பெரிய இழப்புகளை ஏற்படுத்தும்.


ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கிறது எனவே ஜாதகரை சுய தொழில் செய்ய பரிந்துரை செய்யலாமா ? என்ற கேள்விக்கு பதில் கூடாது  என்பதே என்று " ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் தேர்வை சரியாக தேர்வு செய்யவும், தேர்வு செய்த தொழிலில் நல்ல ஞாணத்தையும் தரும், ஆனால் அதுமட்டுமே ஜாதாரை சிறந்த தொழில் அதிபராக மாற்றும் வல்லமை பெற்றது அல்ல,  மேலும்  தற்போழுது நடைபெறும் திசா புத்தி மற்றும் எதிர் வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக  பலனை ஏற்று நடத்தாமல், முறையே விரைய ஸ்தான பலனையும், பாதக ஸ்தான  பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சுய தொழில் வழியிலான நன்மைகளை  தாராமல் 200% விகித இன்னல்களை  வாரி வழங்கிவிடும்.

பொதுவாக சுய தொழில் செய்ய ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெறுவது  ஜாதகரின் திட்டமிடுதல்களையும், செயல்திறனையும் குறிக்கும் ( ஜாதகருக்கு லக்கினம் 200% விகிதம்  பாதிக்கப்பட்டுள்ளது ) சுக ஸ்தானமான 4ம் வீடு வலிமை பெறுவது சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை தரும், எண்ணத்தின் வலிமையை பறைசாற்றும் ( ஜாதகருக்கு சுக ஸ்தானம் வலிமை பெற்று இருக்கிறது ) களத்திர ஸ்தானமான 7ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு பொதுமக்கள் செல்வாக்கு, வியாபார விருத்தி, உலக பிரபல்யம் மற்றும் தனது வியாபாரத்திற்க்கான தனிப்பட்ட குறியீட்டை பெரும் யோகத்தை தரும் ( ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் 200% விகிதம்  பாதிக்கப்பட்டுள்ளது ) ஜீவன ஸ்தானமான 10ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் அறிவையும், அது சார்ந்த திட்டமிடுதல்களையும் குறிக்கும், மேலும் ஜீவன வழியிலான நன்மைகளை முழு அளவில் வாரி வழங்கும் ( ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருக்கிறது ).

மேற்கண்ட விஷயம் மட்டும் அல்ல மேலும் பல விஷயங்கள் உண்டு அதாவது குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரளமான   வருமானத்தையும் இனிமையான பேச்சு திறனையும், வீர்ய ஸ்தானமான 3ம் பாவகம்  வலிமை பெறுவது ஜாதகரின் வீரியமிக்க செயல்பாடுகளையும் தைரியத்தையும், வெற்றியுடன்  கூடிய சகல  சௌபாக்கியத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சமயோசித புத்திசாலித்தனத்தையும், அறிவு  நுணுக்கத்துடன் கூடிய புதிய சிந்தனையையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது சத்ரு வெற்றியையும், 8 ம் பாவகம் வலிமை  பெறுவது திடீர் யோகத்தையும், 9ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில்  நற்ப்பெயருடன் கூடிய நம்பிக்கையையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது நீடித்த அதிர்ஷ்டத்துடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையையும், நெடுங்கால திட்டமிட்ட வளர்ச்சியையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது செய்த முதலீட்டிற்கு யாதொரு இழப்பும் ஏற்படாத பெரும் செல்வ  சேர்க்கையையும் வாரி வழங்கும்.

இத்துடன் தற்போழுது, எதிர்வரும் திசா  புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவது  ஜாதகரின் தொழில் சார்ந்த முன்னேற்றங்களை 100% விகிதம் வெற்றிகரமாக வாரி வழங்கும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகத்தில் 4,6,10ம் பாவகங்களை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், தற்பொழுது மற்றும் எதிர்வரும் திசாபுத்திகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பினும் அதனால் யாதொரு பலனும் இல்லை என்பதே  உண்மை நிலை, மேலும் சுய ஜாதகத்தில் எத்தனை பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் மற்ற பாவக வழியிலான நன்மைகளை பெற இயலும் என்பது கவனிக்கதகக் விஷயமாகும்.

" ஜோதிடதீபம் " ஜாதகருக்கு அடிமை தொழில் அமைப்பையே பரிந்துரை செய்கிறது ஏனெனில், ஜாதகருக்கு தனது துறை சார்ந்த ஆளுமை திறன் சிறப்பாக இருக்கும் என்பதால், ஓர் இடத்தில் வேலைக்கு செல்வதே ஜாதகருக்கு மிக சிறந்த பாதுகாப்புடன்  கூடிய  ஜீவன நன்மைகளை வாரி வழங்கும், மாறாக ஜாதகருக்கு தொழில் ஆளுமை திறன் உள்ளது என்பதை ஓர் சிறப்பு தகுதியாக எடுத்துகொண்டு, சுய தொழில் செய்ய முற்ப்பட்டால், சுவற்றில் அடித்த பந்து போன்று, ஆரம்பித்த இடத்திற்கே ஜாதகர் வெகு விரைவில்  வந்து சேர்ந்து விடுவார் என்பதுடன், இன்னல்களும் ஜாதகருக்கு அதிக அளவில் வந்து சேரும் என்பதுமட்டும் நிச்சியம் செய்யபட்ட பலாபலனாகும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள், ஜாதகருக்கு பலன்தாராமல் போவதற்கு காரணம் என்ன ?

 
 
ஒருவரது சுய ஜாதகத்தில் யோக அவயோகங்களை நிர்ணயம் செய்யும் பொழுது கிரக சேர்க்கைகளை கொண்டோ, சில கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் பலத்தை ( ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் ) கருத்தில் கொண்டோ, லக்கினம் மற்றும் ராசி அமைப்பிற்கு கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் நின்ற நிலையை கருத்தில் கொண்டோ, யோகம் அவயோகம் என்று நிர்ணயம் செய்யும் பொழுது பலாபலன்கள் முற்றிலும் முன்னுக்கு பின் முரணாக அமைந்துவிடும், மேலும் சுய ஜாதகத்தில் சுப கிரகங்கள் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தை தரும் என்று முடிவு செய்வதும், அசுப கிரகங்களின் திசாபுத்திகள் ஜாதகருக்கு அவயோகத்தை தரும் என்று முடிவு செய்வது சிறிதும் சுய ஜாதக ஜோதிடகணிதத்திற்க்கு பொருந்தாத விஷயமாக " ஜோதிடதீபம்" கருதுகிறது.

எனில் ஒருவரது ஜாதகத்தில் யோக நிலை அல்லது அவயோக நிலையை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்வது மிக துல்லியமாக அமையும் என்ற கேள்வி எழுவது இயற்கையே, இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது அவரவர் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலாபலன் காண்பதே சரியான அணுகுமுறை என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களையும் அனுபவிக்கும் நிலையை தரும், இதில் கோட்சார கிரகங்களின் தாக்கமும் ஜாதகருக்கு நன்மை தீமையை வழங்கும் வல்லமை உண்டு என்பதை கருத்தில் கொள்வது, துல்லியமான ஜாதக யோக அவயோக பலாபலன்களை பற்றி கூற உதவும்.

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது ( பாவக வலிமை ) பெரிய விஷயமல்ல நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் யோக பலனை ( வலிமை பெற்ற பாவக பலனை ) ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகர் சுய ஜாதகத்தில்  உள்ள யோக அமைப்பின் மூலம் நன்மைகளையும் சுபயோக வாழ்க்கையையும் பெற இயலும், யோகம் என்பது இங்கே சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அதனால் ஜாதகர்  பெரும் நன்மைகளையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் யோகங்கள் உண்டு, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோக பலன்களை ஏற்று நடத்துகிறது, இருப்பினும்  ஜாதகர்  சம்பந்தப்பட்ட பாவக வழியில் நன்மைகளை அனுபவிக்க வில்லை எனில் அதற்க்கு காரணம் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகர்  தேர்வு செய்த  வாழ்க்கை துணை ( அவயோக ஜாதகம் கொண்ட இல்லற துணை ) நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ( அவயோக ஜாதகம் கொண்ட நண்பர்கள், தொழில் முறை கூட்டாளிகள் ) அமைப்பில் இருந்து ஜாதகர் அதிக அளவிலான இன்னல்களை  சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஜாதகருக்கு சுப யோகங்கள் ( பாவக வலிமை ) பல இருந்தாலும் அதனால் யாதொரு நன்மையையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்க இயலாது என்பதனை மிக தெளிவாக பதிவு செய்கிறோம், மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !லக்கினம் : கன்னி 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொண்ட அன்பருக்கு சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 12/02/2014 முதல் 12/02/2033 வரை ) 1,4,7,10ம் வீடுகள் லாப ஸ்தானமான  11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமாக விளங்கும் கடக ராசியில் அமைவது ஜாதகரின் சுக போக வாழ்க்கையின் உன்னத தன்மையை எடுத்து உறைக்கிறது, ஜாதகருக்கு திருமணம் 2014 செப்டம்பர் மாதம் நடைபெற்றது, நடைபெற்ற சில மாதங்களிலே ஜாதகரின் வாழ்க்கையில்  புயல் வீச துவங்கிவிட்டது, குறிப்பாக ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளானார், சற்றும் தனது  குணத்திற்கு பொருந்தாத வாழ்க்கை துணையை தேர்வு செய்தது ஜாதகருக்கு போக போக நன்றாக புரிய ஆரம்பித்தது, இதன் தாக்கம் ஜாதகர் சிறப்பாக செய்துகொண்டு இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஜாதகருக்கு பாதிப்பை தந்து சொந்த ஊருக்கு செல்லும் நிலையை தந்தது, கைநிறைவாய் பெற்று கொண்டு இருந்த வருமானமும் முற்றிலும் நின்றது, இதுவரை இருந்த ஜாதகரின் நம்பிக்கைகள் முற்றிலும் உடைந்தது, வாழ்க்கை துணை வழியில் இருந்து மேலும் இன்னல்கள் ஜாதகருக்கு வர ஆரம்பித்தது, ஜாதகர் ஒரு நிலைக்குமேல் தாங்க இயலாமல் அதிக அளவிலான மனப்போராட்டம், மனஅழுத்தத்திற்கு ஆளானார், குறிப்பாக ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆனது ஜாதகரின் கவுரவ வாழ்க்கையே புரட்டி போட்டது, நிறைந்த குடி நோயாளியாக ஜாதகர் மாறி வாழ்க்கையில் மிகுந்த இன்னல்களை சந்திக்கும்  சூழ்நிலை ஏற்பட்டது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இந்த நிலை இல்லை என்ற போதிலும் தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் ஜாதகரை கடுமையாக வாட்டி எடுக்க  ஆரம்பித்து விட்டது, இதற்க்கு காரணமான வாழ்க்கை துணையின் ஜாதகத்தை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

மேற்கண்ட கன்னி லக்கின ஜாதகிக்கு, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் 2,7ம் வீடுகள் முறையே விரைய ஸ்தானமான பனிரெண்டாம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் வரும் இடர்பாடுகளை கட்டியம் கூறுகிறது, குறிப்பாக பெண்களின் சுய ஜாதகத்தில் 1,2,4,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது யோகம் மிக்க இல்லற வாழ்க்கையை நல்கும், ஜாதகி லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் மனநலம், 2ம் பாவக வழியில் இருந்து கணவருடன் சச்சரவு அற்ற இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் வருமான யோகத்தையும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல குணம் மற்றும் சுக போகங்களை வாழ்க்கை துணையுடன் அனுபவிக்கும் யோகத்தையும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண்வாரிசுடன் கூடிய  சமயோசித அதிபுத்திசாலித்தனத்தையும், 7ம் பாவக வழியில் இருந்து பரஸ்பர அன்பு நிறைந்த இல்லறத்தையும், 8ம் பாவக  வழியில் இருந்து நல்ல ஆயுளுடன் கூடிய திடீர் அதிர்ஷ்டங்களை கணவருக்கு வழங்கும் அமைப்பையும், 12ம் பாவக வழியில் இருந்து இல்லற சுக போகங்களை  தம்பதியர் இருவரும் லக்கிக்கும் தன்மையையும்  தரும்.

ஆனால் ஜாதகிக்கு 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும், 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு அளவில் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிறது, லக்கினம் எனும் 1ம் வீடு மட்டும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நன்மையை தருகின்றது , பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் பாதிக்கப்படுவது நல்லதல்ல, குறிப்பாக எந்த ஒரு பாவகமும் மறைவு ஸ்தானமான 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானதல்ல, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதக ஜாதகியின் வாழ்க்கை நரகத்திற்கு இணையான இன்னல்களை  வாரி வழங்கும், ஜாதகிக்கு மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டது ஒரு பக்கம்  இருப்பினும், தற்போழுது நடைமுறையில்  உள்ள  குரு திசை ஜாதகிக்கு 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது ஜாதகியின் வாழ்க்கையை  நெருப்பில் இட்ட புழு போல் துவண்டு போக வைக்கும், மேலும் பாதக ஸ்தானத்தின்  தாக்கத்தை  தனது  கணவர்  அனுபவிக்கும் நிலையை  தரும் என்பது கவனிக்க தக்கது, குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியும் ஜாதகிக்கு சாதகம் இன்றி  11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது ஜாதகியையும், ஜாதகியின் கணவரையும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும் என்பதனை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" கடமை பட்டுள்ளது.

குறிப்பு : 

எனவே சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும், நமக்கு வரும்  வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும், நட்சத்திர பொருத்தத்திற்கு மட்டும் முக்கிய துவம் தந்து, சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல் பொருத்தம் உண்டு என்று திருமணம் செய்ததின் விளைவை ஜாதகர் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும், அதற்க்கு பொருத்தமற்ற அவயோகம் நிறைந்த வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களின் சேர்க்கையை நாம் பெற்றால், அதன் காரணமாக நமது சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் " யோக பங்கம் " என்ற நிலையை அடைந்து  நமக்கு சுபயோகங்களை நல்காது என்பதனை, மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் தெளிவு பெறலாம்.
 
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Thursday, July 13, 2017

5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது தரும் அதிர்ஷ்டங்கள் !கேள்வி :

5ல் ராகு அமர்வது ஜாதகருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை ( ஆண்  வாரிசு இல்லை ) என்பது உண்மையா ?

பதில் :

 இது முற்றிலும் தவறான கருத்து மேலும் ஜோதிடகணிதம் பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் பலனாகவும் சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறும் பொது கருத்தாகவே உள்ளது, 5ல் அமரும் ராகு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றிய தெளிவில்லாமல் கூறப்படும் விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, 5ல் ராகு அமர்ந்து தான் அமர்ந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு பொருத்தமானதாக அமையும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலை இருப்பின் அதற்க்கு சரியான தீர்வு உண்டு என்பதால் அதைபற்றிய கவலை தேவையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு கேது ஜாதகருக்கு தரும் யோக வாழ்க்கை பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் மேலும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும்  5ம் பாவகமான மீனத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றார், அதற்க்கு சம சப்தமாக லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமான கன்னியில் கேது அமர்ந்து இருக்கின்றார், சாய கிரகங்களான ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு  தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று யோகத்தை தருகின்றனரா ? அல்லது தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை அற்று
அவயோகத்தை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தெளிவர அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பாவகங்களின் அதிபதி ( பாரம்பரிய முறைபடி ) யார் என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, 5 ம் பாவகத்திற்கு முழு முதற் சுப கிரகமாகவும் ( கோணஅதிபதி ) "பிரகஸ்பதி" என்று ஜோதிட சாஸ்திரத்தால் போற்றபடும் "குருபகவான்" பொறுப்பு ஏற்கிறார், 11ம் பாவகத்திற்க்கு ( கோண அதிபதி )  "வித்யாகாரகன்" என்று போற்றப்படும் புதபகவான் " பொறுப்பு ஏற்கிறார், இதில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கோண வீடாகவும், லாப ஸ்தானம் சம வீடாகவும் அமைவது  அங்கு அமரும் சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு சுப துவத்தை தந்து, சம்பந்தப்பட்ட 5,11ம் பாவகங்களுக்கு 100% விகித வலிமையை பெற்று தருகின்றது.

 இதன் காரணமாக சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமும், அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகமும் முழு வலிமை பெற்று ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் அமைப்பை பெறுகின்றது. சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே புத்திர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு புத்திர தடையை தாராமல் நல்ல யோகம் மிக்க புத்திர பாக்கியத்தை நல்கி இருக்கின்றது, யோகம் மிக்க ஓர் ஆண் வாரிசும், அதிர்ஷ்டமிக்க 2 பெண் குழந்தைகளும் ஜாதகருக்கு இறைஅருள் வாரி வழங்கி இருப்பது நடைமுறை உண்மை ஆகும், மேலும் இதுவே சுய ஜாதக வலிமை ஆகும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் சாயா கிரகங்களால் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது குழந்தைகளால் அதிர்ஷ்டம் மற்றும் சுபயோகங்களை 100% விகிதம் பெறுவார் என்பதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், ஜாதகருக்கு வாரிசு அமைந்தவுடன் ஜாதகர் பெற்ற முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானது, மேலும் ஜாதகருக்கு நடைபெற்ற திசாபுத்திகள் சாதகமாக அமைந்தது ஜாதகரின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்தது.

 பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்று தான் அமர்ந்த பாவகத்தை முழு அளவில் வலிமை பெற செய்வது முன் ஜென்ம கர்மவிணை பதிவினை இறைஅருளின் துணையுடன் கழித்துகொள்ளவும், பிறப்பில்லா யோக வாழ்க்கையை பெற்று ஜீவன் முக்தி பெறவும் சிறந்த வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், சிலருக்கு இளமையில் இன்னல்களையும், மத்திம வயதில் மிகுந்த யோக வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் நல்கும் வல்லமை பெற்றது, இது அவரவர் சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப மாறுபடும், மேலும் தாம் அமர்ந்த பாவக வலிமைக்கு ஏற்ப யோக பலாபலன்களை ஸ்திரமாக வாரி வழங்கும், எது எப்படி இருப்பினும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்றவர்கள் "வாழ்ந்து கெட்டவர்கள் " அல்ல, கெட்டபின்பு வாழ்ந்து காட்டுபவர்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, அமர்ந்த பாவகத்திற்கு  தரும் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சால சிறந்தது, இதை தவிர்த்து 1,2,5,6,7,8,12ல் அமர்வது தோஷம் என்று முடிவு செய்வது சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை மனதில்  நிறுத்துவது அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Tuesday, July 11, 2017

தொழில் ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில், ஜாதகருக்கு நல்ல தொழில் முன்னேற்றம் இல்லையா ?


 ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வதில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனத்திற்கு யாதொரு சிக்கல்களும் இல்லமால் சரியான தொழில் அமைப்பை தந்துவிடும், ஜாதகருக்கு உகந்த தொழில் எதுவோ? அதில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்ப்படுத்தி ஜாதகருக்கு தொழில் ரீதியான நன்மைகளை சிறப்பாக வாரி வழங்கிவிடும், இதில் மாற்று கருத்து இல்லை, சிலரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் மிகவும் வலிமை அற்றோ? பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தமக்கு உகந்த தொழிலிலை தேர்வு செய்வதென்பதே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து நிற்கும், ஜாதகரின் எண்ணமும் செயல்பாடும் தவறான தொழில் தேர்வுகளை செய்து அதன் வழியிலான இன்னல்களையும் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலைக்கு ஆளாகும், குறிப்பாக ஜாதகர் தேர்வு செய்து செய்யும் தொழில்கள் யாவும் ஜாதகருக்கு சிறிதும் பொருத்தமற்று காணப்படும், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது கிணற்றில் இட்ட கல் போன்று யாதொரு அசைவும் இன்றி கிடக்கும்.

மேலும் சிலரது வாழ்க்கையில் தொழில் ரீதியான நன்மைகளை பெறுவதற்கு பல வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலையை தரும், அல்லது ஜாதகரின் உழைப்பின் பயனை மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, நிர்கதியாக நிற்கும் சூழ்நிலையை தரும், வேறு சிலருக்கு எதிர்ப்புகளின் மூலம் ஜாதகரின் உழைப்பும் வருமானமும் வெகுவாக பாதிக்கப்படும், செய்யும் தொழிலை சூழ்நிலை காரணமாக கைவிடும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார், மேலும் ஜீவன ரீதியான போராட்டங்கள் ஜாதகரை மிகுந்த சோர்வுக்கு ஆளாக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையும், உகந்த தொழிலை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்ப்படும், தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் கடுமையான பின் விளைவை தரும், ஆழம் தெரியாமல் தொழிலில் இறங்கி கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, செயல்படுவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை சிறப்பாக அமைத்து தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தால் போதும் ஜாதகருக்கு நல்லதொரு ஜீவனமும் சிறப்பான தொழில் முன்னேற்றமும் அமைந்துவிடும் என்று கருதுவது சரியான கருத்து அல்ல, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் வலிமை பெற்ற  ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு அளவிலான நன்மைகளை பெறுவார், ஒருவேளை நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான  பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும், குறிப்பாக ஜாதகரின் உழைப்பு அனைத்தும் வீணாகும், என்பதனை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது.

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்


லக்கினம் : கும்பம் '
ராசி : கடகம்
நடசத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ரீதியாக கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகர் சுயமாக தொழில் செய்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியமாக அமையும், குறிப்பாக ஜாதகர் மண் தத்துவம் சார்ந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு கடுமையான நஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் கடந்த 12 வருடங்களாக மண் தத்துவம் சார்ந்த தொழில் மட்டுமே செய்து வருகிறார், இதானால் ஜாதகரின் வாழ்க்கையில் யாதொரு நன்மையையும் முன்னேற்றம் இன்றியே காணப்படுகிறது, இதற்க்கு அடிப்படை காரணமாக தற்போழுது ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ( 09/09/2002 முதல் 09/09/2022 வரை ) ஜாதகருக்கு  4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு  அளவில் விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசா புத்தியும் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட ஜீவன ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியை  சிறிதும் தாராமல், ஜாதகருக்கு தொழில் ரீதியான மனநிம்மதி இழப்பை மட்டுமே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.

மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வருமானத்தை குறிக்கும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர்  சம்பாதிக்கும் அனைத்தையும் வீண் விரையம் அல்லது திடீர் என இழக்கும்  சூழ்நிலையை ஏற்படுத்தும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள், தேவையற்ற செலவுகள் என ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும்,  மேலும் இதனால் ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து கடுமையான மனஉளைச்சல்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், மேலேயும் உழைப்பிற்க்கு உண்டான வருமானம் இன்றி தவிக்கும் நிலையும், ஏமாற்றும் மனிதர்களால் வஞ்சிக்கும் நிலைக்கு ஆளாகி, சுய கவுரவம் மற்றும் மரியாதையை இழக்கும் நிலை உருவாகிறது, எனவே  சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை இழப்பு  ஜாதகரின் சுய கவுரவத்தையும் கடுமையாக  பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயமாகும்.

பொதுவாக சுக்கிரன் திசை நடைபெற்றால் ஜாதகருக்கு சகல யோகத்தையும் தரும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை சுக்கிரன் திசை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை அறியாமல் கூறப்படும் வாய் வார்த்தையே அன்றி சிறிதும் உண்மையில்லை, மேற்கண்ட ஜாதகத்தில்  சுக்கிரன் தனது திசையில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனையே 4 மற்றும் 10ம் பாவக வழியில் இருந்து தருவது ஜாதகருக்கு சுக்கிரன்  திசை  அவயோக பலனையே தருகின்றது என்பது  உறுதிபட தெளிவாக தெரிகிறது.

நடைபெறும் திசை  எதிர் வரும் திசை, சுப கிரகத்தின் திசை அசுப கிரகத்தின் என்பதை வைத்து ஜாதக பலாபலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் தவறான ஜாதக கணித முறை, சுய ஜாதகத்தில ஏற்று நடத்தும் பாவக வலிமை பற்றி தெளிவாக உணர்ந்து பலன் காண்பதே மிக துல்லியமாக அமையும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பினும் மாற்று வழி ஜீவனத்தை குறிக்கும் 3,7,11ம் பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு  கிடைத்திருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும், மேற்கண்ட பாவக வழியிலான ஜீவனத்தை ஜாதகர் தேடினால் அதில் 100% விகித வெற்றியை ஜாதகர் பெறாலாம் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

Tuesday, July 4, 2017

காலசர்ப்ப தோஷமும், சுய ஜாதகத்தில் ராகுகேது தரும் பாதிப்புகளும் !


ஒருவரது சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுமையாக ஆளுமை செய்வதில் தனித்துவம் மற்றும் வல்லமை பெற்ற கிரகங்கள் ராகுகேது என்றால் அது மிகையில்லை, தான் அமர்ந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிலும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையையும் தனதாக்கிக்கொண்டு பலாபலன்களை தனது பலனாக தருவதில் சாயா கிரகங்களுக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று மிக தெளிவாக கூறிவிடலாம், ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்களும் ( ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுதல் ) தனது வலிமையை சாயா கிரகங்களே சுவீகரித்து கொள்ளும் தன்மையை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

  ராகு கேது தான் அமரும் பாவகத்தை வலிமை  சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ஒருவேளை தான் அமர்ந்த பவகத்தை வலிமை அற்ற நிலைக்கு ராகு கேது ஆளாக்கினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான இன்னல்களை நிச்சயம் தவிர்க்க இயலாது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் ராகு கேது அமர்ந்து வலிமை பெற்று இருப்பின் ஜாதகருக்கு, குடும்ப ஸ்தான வழியில் இருந்து நல்ல பேச்சு திறனும், நிறைவான வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, தன சேர்க்கை, பொருளாதார தன்னிறைவு, வாழ்க்கை துணையின் ஆதரவு, இனிமையான இல்லற வாழ்க்கை, போதுமான நிதி வசதி, தெளிந்த பேச்சு, கவரும் வார்த்தை பிரயோகம், மக்களை தனது வாக்கிற்கு கட்டுப்பட்டு நடக்கும் படியான வல்லமை, வாக்கு வன்மை, வாக்கு பலிதம், தெய்வீக பேச்சு திறன், வாக்கை தொழிலாக கொண்டு ஜீவிக்கும் யோகம், ஆன்மீக அனுபவம் என ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோக பலன்களை அனுபவிக்கும் அமைப்பை தரும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள், வாழ்க்கை துணையின் வருமானம் மற்றும்  சொத்துக்கள் கிடைத்தல், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவந்தன் ஆகும் யோகம், புதையல் யோகம் அல்லது அதற்க்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, மறைபொருள் வழியில் இருந்து வரும் ஜீவனம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை, மருத்துவ உபகரணம் மற்றும் ஆயுள் காக்கும் மருந்துகள் வழியிலான தன சேர்க்கை, மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியிலான தன சேர்க்கை, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறன் மூலம் பெரும் சுப யோகங்கள், தனது உயிர் அமைப்பின் பரிபூர்ணதுவத்தை உணரும் யோகம், பஞ்சபூதங்களின் ஆசியை பெரும் யோகம், தன்னிலை உணர்வு, உயிரின் ஓட்டத்தை கையாளும் வல்லமை என ஆயுள் பாவகத்தில் அமரும் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற நிலையில் இருந்து யோகங்களை வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் அமரும் ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை எனில், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தான வழியில் இருந்து திருமண தடை, நல்ல குடும்ப வாழ்க்கை அற்ற நிலை, வருமானம் அற்ற நிலை, சம்பாத்தியம் அனைத்தும் வீண் செலவு செய்யும் நிலை, வாக்கு வலிமை அற்ற நிலை, பேச்சிற்கு மதிப்பு அற்ற நிலை, பொருளாதார ரீதியான கடுமையான இன்னல்கள், எதிர்ப்புகள் மூலம் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, அனைத்தும் எதிராக மாறும்  நிலை, உதாசீனம்  செய்யும் மனநிலை, பொறுப்பற்ற தன்மை, கடுமையான வார்த்தைகள், மற்றவர்களை நிந்தித்தல், பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி ஆற்றாமையால் மற்றவருக்கு இன்னல்களை ஏற்படும் தன்மை என ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், அடிகடி விபத்துகளை சந்தித்தால், எலும்பு முறிவு, உடல் ரீதியான பிரச்சனைகள், தெளிவில்லாத முடிவுகளால் வரும் திடீர் இழப்புகள், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை, மற்றவர்களின் ஆளுமைக்கு கிழ் வாழ்க்கையை வாழும் அமைப்பு, சுய மரியாதை இழக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள், தெய்வீக சிந்தனை அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இழப்புகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் இழப்புகள் என ஜாதகரை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கும்.

அடிப்படையில் சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி சம்பந்தப்பட்ட பவகத்தை வலிமை பெற செய்கிறதா ? வலிமை இழக்க செய்கிறதா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ராகு கேது தரும் பலாபலன்களை நிர்ணயம் செய்வது சால சிறந்தது, தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது தரும் பலாபலன்களை பற்றிய தெளிவு இல்லாமல் தோஷம் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகு முறையே, சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12ம் பாவகங்களில் சாயா கிரகமான ராகு கேது அமர்வது தோஷத்தை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை, ராகு கேது மேற்கண்ட பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும், சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமையை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை அனுபவிப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க  வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696