சனி, 23 டிசம்பர், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மீனம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மீனம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மீன லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், செயல்படும் காரியங்களில் பரிபூர்ணத்துவத்தை அடைய விரும்பும் மீன லக்கின அன்பர்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் தங்களுக்கு ஆன்மிகம் சார்ந்த தடைகளையும், சமூகமதிப்பில் ஓர் சுணக்கத்தையும், தெளிவில்லாத மன நிலையையும் அதன் வழியிலான திருப்தியற்ற வாழ்க்கையையும் தந்து இருக்க  கூடும், ஆனால் தற்போழுது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து  ( ஜீவனம் ) சிறு சிறு அவப்பெயர் மற்றும் தடைகளை தந்த போதிலும் தனது  வர்க்க கிரகங்களின் வீடுகளான ரிஷபம்,மிதுனம் மற்றும் கன்னியை வசீகரித்து மிகுந்த லாபத்தை தரும் அமைப்பாகும், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த சனி தங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும், மேல் அதிகாரிகள் வழியில் இருந்து மனஉளைச்சலை தரும், செய்யும் தொழில் வழியில் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் யாதொரு பாரபட்சமும் இன்றி  கடுமையான இன்னல்களை தங்களுக்கு தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் குறையும், பெற்ற தந்தை வழியிலான இன்னல்கள் தங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது  தங்களுக்கு சகல நலன்களையும் வாரி வழங்கும், திட்டமிடாமல் செய்யப்படும் காரியங்கள் தங்களின் வாழ்க்கையில்  மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க, மீன  லக்கினத்தை சார்ந்த பெண்கள் தனது தாயின் வார்த்தைகளை மதித்து நடப்பது  நல்லது இல்லை எனில் வீண் அவப்பெயரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் , எக்காரணத்தை கொண்டும் தனிமையில்  பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல மேலும், பாதுகாப்பான பயணம் தங்களுக்கு வரும் வீண் மருத்துவ செலவினங்களை குறைக்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனைகாலமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அவர்களது  உண்மை தன்மையை பரிசோதித்து உதவுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், சனிபகவானின் தாக்கம் குறைய இறையருளின் ஆசியை பெறுவது ஒன்றே தீர்வாக அமையும்.

3ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், தங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல  வெற்றி வாய்ப்பு கிட்டும், சகோதரவழியிலானா உதவிகள் தேடிவரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், கமிஷன் தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வருமான கிடைக்கும், அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும், தங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறன் மூலம் சகலவித நன்மைகளையும் பெறுவதற்கு யோகம் உண்டு, தனிப்பட்ட திறமைகளை பரிசோதித்து வெற்றிகாணும் நேரமிது என்பதனை மீன லக்கின அன்பர்கள் உணர்வது அவசியமாகிறது, மனபலம் அதிகரிக்கும்  செயற்கரிய காரியங்களை சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் நேரமாக இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு அமையும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு கவுரவம் மற்றும் நன்மதிப்பு உண்டாகும், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு, செய்தி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சியை பெற்று தரும், புதிய எதிர்காலம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தர தயார் நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும், வீர்ய ஸ்தானத்தின் மீதான சனிபகவானின் பார்வை தங்களுக்கு கைநிறைவான வருமான வாய்ப்பையும், தடைகளை உடைத்தெறிந்து தன்னிறைவான முன்னேற்றத்தை பெறுவதற்க்கான சந்தர்ப்பங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது மீன இலக்கின அன்பர்களே!
 " வாழ்த்துகள் "

4ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு மிதம் மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்குவார், தங்களின் அறிவுத்திறனும், நல்ல குணமும் எதிர்பாராத பொருளாதார அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் தேடிவரும் தெய்வீக அனுக்கிரகம் கூடும், அறிய திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை  உருவாக்கும், சுகபோக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது , தங்களின் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் ஆதாயம் தங்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு சரியான முதலீடாக அமையும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், புதிய வீடு வண்டி வாகனம் வாங்க இதுவே சரியான  தருணம், தடைபெற்ற காரியங்கள் யாவும் தன்னிறைவாக வெற்றி வாய்ப்புகளை வழங்கும் என்பதனால், அறிவில் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளை பெறுவது தங்களின் கடமையாகிறது, சனிபகவானின் சமசப்த பார்வை தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமையுடன் திகழ்கிறது.

7ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சுகபோகத்தை வாரி வழங்குவார், திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதோர் வாழ்க்கை துணை அமையும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளையும், ஆதரவையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நல்ல நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றப்படும், இதுவரை இருந்த சந்தேகங்கள் நீங்கி தங்களின் மனம் தெளிவடையும், எதிர்ப்புகள் யாவும் நட்பு பாராட்டும், விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள், தங்களின் ஆலோசனையின் பெயரில் பல காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும், சமூக அந்தஸ்து உயரும், உடல் நலம் சார்ந்த  முன்னேற்றமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், பிணி அகலும், பொருளாதார வசதி வாய்ப்பை பெறுவதற்கான ஆயத்த பணிகளை இனிவரும் காலங்களில் தாங்கள் நடைமுறைப்படுத்தலாம், கூட்டு தொழில் வழியிலான நன்மைகள் தங்களை தேடி வரும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடு வெளியூர் செல்லும் யோகமும், அதன் வழியிலான ஜீவன முன்னேற்றமும் சிறப்பாக தங்களை தேடிவரும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் சகல சௌபாக்கியமும் தங்களுக்கு உண்டாகும், எதிர்பாலின ஆதரவு தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில்  மீன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 16 டிசம்பர், 2017

பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகுபகவான் தரும் அதிர்ஷ்டம் மிக்க ஆண் வாரிசு !



 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு கடுமையான புத்திர தோஷத்தை தரும் என்றும், ஜாதகருக்கு புத்திரபாக்கியம் கிட்டாது என்று கூறி சுய ஜாதகத்தில் ராகு பகவானால் வலிமை பெற்ற 5ம் பாவகத்தை கொண்ட ஜாதகங்களையும் திருமண பொருத்தம் காணும் பொழுது புத்திரபாக்கியம்  இல்லை என்று பல அன்பர்களின் ஜாதகங்களை பெண்வீட்டார் தவிர்த்து விடுகின்றனர், 5ல் ராகு அமர்ந்த ஜாதகங்களை குழந்தை பாக்கியம் அற்ற ஜாதகம் என பல ஜோதிடர்களும் பெண்வீட்டாருக்கு மனதில் ஓர் பயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர், இது மிகவும் தவறான அணுகுமுறையாகும், சுய ஜாதகத்தில் 5ல் ராகு அல்லது கேது அமர்ந்து இருப்பதை மட்டும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் இல்லை என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறானதாகும், 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட 5ம் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? அல்லது வலிமை இழக்க செய்கிறாரா ? என்பதில் தெளிவு இல்லாமல் கூறப்படும் கருத்துக்கள் யாவும் ஜோதிடக்கணிதத்திற்கு புறம்பான விஷயம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

 சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசாகவே பிறக்கும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் இவர்களுக்கு பெண் குழந்தை பிறப்பதென்பதே அரிதாக அமையும், தொடர்ந்து ஆண் குழந்தைகளாகவே பிறக்கும், ஒருவேளை 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டு ஆண் வாரிசு என்பது தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் அமையும், எனவே சுய ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகு அல்லது கேது புத்திரபாக்கியம் இன்மையை தரும் என்று கருதுவது சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை பற்றிய எதுவும் தெரியாமல் குத்துமதிப்பாக சொல்லும் வாய்ஜாலம் என்பதை அனைவரும் உணருவது அவசியமாகிறது.

5ல் அமர்ந்த ராகு கீழ்கண்ட ஜாதகருக்கு தொடர்ந்து  3 ஆண் வாரிசாகவே வாரி வழங்கி இருப்பதற்கு அவரது ஜாதகத்தில் 5ல் அமர்ந்த வலிமை பெற்ற ராகுபகவானின் கருணையே காரணம் என்பதை உறுதியாக பதிவு செய்ய முடியும், மேலும் ராகு பகவான் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்வதால் ஜாதகர் பெரும் நன்மைகளை என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 3ம் பாதம்

மேற்கண்ட மகர லக்கின ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 5ம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு 100% விகித யோக பலன்களை தரும் அமைப்பில் காணப்படுகிறார், இது ஜாதகருக்கு உபய மண் தத்துவம் சார்ந்த தொழில்களான மண் மனை வண்டி வாகன துறையில்  நல்லறிவையும், சமயோசித அறிவுத்திறன் மூலம் மேற்கண்ட தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையையும் தருகின்றார், மேலும் ஜாதகரின் தொழில் நுணுக்க அறிவு திறன் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு  சுய ஜாதகத்தில் ராகு பகவான் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் வலிமை பெற்று இருப்பதே அடிப்படை காரணம் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

பொதுவாக 5ல் அமர்ந்த ராகு புத்திர பாக்கியத்தை வழங்கமாட்டார் என்ற விஷயம் யாதொரு ஜோதிட நூல்களிலும் இல்லை, இந்த கருத்து இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்ட தவறான கருத்து என்பதை சொல்லி தெரிவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஓர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தாம் அமரும் பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்ற அடிப்படை விஷயம் அறிந்திருப்பது அவசியமாகிறது, குறிப்பாக மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் அமர்ந்த ராகுவும், 11ல் அமர்ந்த கேதுவும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது வசம் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், அதுவும் 100% விகித வலிமையுடன், இதன் காரணமாக சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்பட்ட போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறு தாமதத்திற்கு பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தந்து இருக்கின்றது, பொதுவாக சுய ஜாதகத்தில் 2ம் வீடு பாதிப்படைவது ஜாதகருக்கு திருமண தடைகளை தரும் , பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் ராகு பகவானால் வலிமை பெறுவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை பெறுகின்றார்.

ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே " புத்திரபாக்கியம் இல்லை " என்ற மூடத்தனமான நம்பிக்கைகளை களைந்து, 5ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு வலிமையை  சேர்க்கிறதா ? வலிமையற்று இன்னல்களை தருகின்றதா ? என்பதை  தெளிவாக தெரிந்து கொண்டு சிறப்புறுவதே " ஜோதிட கணிதத்தின் " பரிபூர்ணத்துவம் அடங்கியிருக்கின்றது.

நவ கிரகங்கள் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு பார்த்து  பலாபலன்களை தருவதில்லை, அவரவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமையும் லக்கினம் முதல் 12 பாவகங்களின் மீது விழும் நவக்கிரகத்தின் ஜீவகாந்த சக்தியை சுவீகரிக்கும் வலிமை பெற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவகங்கள் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து  அவயோகங்களையும் தருகின்றது, இந்த பாவக பலன்களை நவக்கிரகத்தில் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் காலங்களில் ஏற்று நடத்தி ஜாதகனுக்கு நன்மை தீமையை வழங்குகின்றது என்ற உண்மையை உணரும் பொழுது, ஒருவருக்கு தமது வாழ்க்கையில் தனது ஜாதகத்தின் பங்கு என்ன என்பதை பற்றியும், அது தரும் பலாபலன்கள் பற்றியும் ஓர் தெளிவான விழிப்புணர்வு கிடைக்கும், மாறாக நவ கிரகங்கள் நன்மை தீமை தருகின்றது  என்ற மூடநம்பிக்கையில் இயங்குவது முற்றிலும் ஜாதக கணிதம் தெரியாமல் ஒருவர் கூறும் கற்பனை நிறைந்த கட்டுக்கதைகளாகவே அமைந்துவிடும், சுய ஜாதக வலிமை என்பது லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் அமையும் என்பதனை உணரும் பொழுது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், சாதக பாதகங்களை அறிந்து செயல்படும் வல்லமையும் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற ராகு, தொடர்ந்து 3 ஆண் வாரிசுகளையும், அவர்களின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களையும் கொண்டிருக்கும் தன்மையை தருகின்றார், எனவே நமது சுய ஜாதகத்தில் 5ல் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்து இருந்தால் பயமேதும் கொள்ளாமல், அவர் வலிமையுடன் உள்ளாரா ? வலிமை அற்று காணப்படுகிறாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, 5ல் வலிமை பெற்ற சாயா கிரகங்கள் ஒருவருக்கு நல்ல ஆண் வாரிசை வழங்குவதுடன், அவர்களை அதிர்ஷ்டத்துடன்  யோகம் மிக்கவர்களாக திகழ செய்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

குறிப்பு :

 ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி,துலாம்,தனுசு மற்றும் மீன ராசிகள் 5ல் பாவகமாக அமைந்து அங்கு அமரும் ராகுகேது ஜாதகருக்கு புத்திர தோஷத்தை நிச்சயம் தாராது, ஆனால் இதில் சில விதி விளக்குகளும் உண்டு என்பதை  கருத்தில் கொள்வது சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 13 டிசம்பர், 2017

கிரகமாலிகா யோகம் ஜாதகருக்கு பலன் தருமா? சுய ஜாதக வலிமை ஜாதகருக்கு பலன் தருமா ?


கேள்வி :

 கிரகமாலிகா யோகம் உள்ளதால் எனது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் என்கின்றனர், நடைபெறும் குரு திசை சிறப்பான நன்மைகளை தரும் என்கின்றனர், ஆனால் குரு திசை கடந்த 5 வருடமாக மிகுந்த சிரமங்களையே வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, யாதொரு முன்னேற்றமும் இல்லை, எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தருகின்றது, தன்னம்பிக்கையுடன் போராடி வருகின்றேன், வெற்றி கிட்டுமா ? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? கிரகமாலிகா யோகம் எனக்கு பலன்தருமா? பலன் தாராத விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

 சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று இந்த கிரகமாலிகா யோகம், கிரகங்கள் தொடர்ச்சியாக வீடுகளில் அமர்ந்து இருப்பது மேற்கண்ட கிரகமாலிகா யோகத்தை தரும் என்று கூறுவது சுய ஜாதக வலிமை அமைப்பிற்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்பதை முதலில் நாம் தெளிவாக உணர்ந்துகொள்வது நல்லது, நமது சுய ஜாதகம் என்பது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், கிரகமாலிகா யோகம் , கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் என்பதெல்லாம் கிரகங்களின் சேர்க்கை நிலை, அமர்ந்த நிலை மற்றும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு கற்பனையாக சொல்லப்படும் விஷயங்களாகும், இவையெல்லாம் ஜோதிடம் கேட்க வந்தவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துமே அன்றி நடைமுறையில் பயனேதும் தாராது என்பதே உண்மையாகும், தங்களது ஜாதகத்தில் உள்ள கிரக மாலிகா யோகம் என்பது தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது யாதொரு நன்மைகளையும் சுபயோகங்களையும் தாராது என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம் அன்பரே !

இனி தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தங்களது சுய ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகள் சற்று வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து தாங்கள் நிச்சயம் சுபயோக பலாபலன்களை நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் சுவீகரிக்க அதிக வாய்ப்பு உண்டு அதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் 8ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களுக்கும், 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களும் தங்களை  படுத்தி எடுக்கும் என்பதுடன் 3,9ம் பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களை தங்களால் தாங்க இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், கிரகமாலிகா யோகம் என்று யாரவது வாயில் வந்ததை உளறி வைத்திருக்க கூடும் அதை நம்பிக்கொண்டு தாங்கள் செய்யும் காரியங்கள் யாவும் தாங்க இயலாத துன்பத்தையும், படுதோல்விகளையும் தரும் என்பதை தாங்கள் இதுவரை நடைமுறையில் உணர்ந்து இருக்க கூடும், சுய ஜாதகம் வலிமை பெறாமல் தங்களால் ஓர் அணுவையும் அசைக்க இயலாது இது இறையருள் நிர்ணயம் செய்த விதி, தங்களது லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மிதம் மிஞ்சிய தன்னம்பிக்கையை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, ஆனால் தங்களது ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை நம்பிக்கொண்டு வீணாக நேர விரயத்தையும், பொருள் விரயத்தையும் செலவு செய்வது தங்களது முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 பொதுவாக தங்களது சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது  தங்களின் முயற்சிகள் யாவினையும் தடை செய்து கடும் நெருக்கடிகளை தரும், தங்களின் அறிவு திறன் தங்களுக்கு பயன் தாராது, பித்ரு சாபம் சார்ந்த இன்னல்களையும், அதன் தாக்கத்தால் தொடர் தோல்விகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும் தங்களது சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  வலிமை பெற்று இருப்பினும் 11ம் பாவகம் உபய ராசியில் அமைவது லாப  ஸ்தான வழியில் இருந்து முழு யோக பலன்களை தாராது, மேலும் லாப ஸ்தானம் என்பது மிதுன ராசியில் 9 பாகைகளையும், கடக ராசியில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய காற்று தத்துவத்தில் சிறிதும், சர நீர் தத்துவ அமைப்பில் அதிக அளவும் வலிமை பெற்று நிற்பது மனம் சார்ந்த வலிமையை தருமே அன்றி, அறிவு,உடல் மற்றும் செயல்திறன் சார்ந்த நன்மைகளை தாராது, தங்களின் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ அமைப்பே மேலோங்கி நிற்கிறது, தங்களின் மனஎண்ணத்தின் வீரியத்தை அதிகரிப்பதை மட்டுமே இது குறிக்கின்றது, மற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து  தங்களுக்கு செயல் திறன், உடல் திறன் மற்றும் அறிவு திறனை  வெகுவாக பாதிக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை, சுய ஜாதகத்தில் நெருப்பு, நிலம், வாயு மற்றும் நீர் தத்துவ ராசிகள் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகம் தனது பரிபூர்ண இயக்கத்தை பெரும், தங்களது சுய ஜாதகத்தில் நெருப்பு மண் தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது  உடல் மற்றும் செயல் திறனில் தடைகளை தரும் அமைப்பாகும், காற்று  தத்துவ ராசி பாதிக்கப்படுவது தனது அறிவார்ந்த முயற்சிகளில் வரும் பின்னடைவை உறுதிப்படுத்துகிறது.

 எனவே தங்களின் மன எண்ணத்தின் ஆசைகளை நிறைவு செய்ய நெருப்பு,மண் மற்றும் காற்று தத்துவ ராசிகள் தங்களுக்கு ஒத்துழைப்பை நல்கவில்லை என்பதால் தங்களது ஜாதகத்தில்  உள்ள " கிரகமாலிகா " யோகம் என்பது வாய் ஜாலமே அன்றி தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது  என்பதை கருத்தில் கொண்டு, சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை மட்டும் சுவீகரிப்பது தங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள், சுய ஜாதகத்தில் கிரகமாலிகா யோகம் உள்ளதால் தங்களுக்கு எதிர்பாராத யோகங்கள் கிட்டும் என்ற கனவை தவிர்த்து, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுங்கள், மற்றவர்கள் சொல்லும் வாய் ஜாலங்களை நம்பி செயல்பட்டால் மண்குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு பொருத்தமான பலாபலன்களை தாங்கள் அனுபவிக்க நேரும் என்பதை மனதில் நிலை நிறுத்தி வாழ்க்கையில் நலம் பெறுங்கள்.

 தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குரு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும், குரு திசை சனி புத்தி பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் நல்குவது தங்களுக்கு 7,5ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை தரும் என்பதால் களத்திரம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியிலான பலாபலன்களை சுவீகரித்து வளமான வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 டிசம்பர், 2017

இரட்டையர் சுய ஜாதகத்தில் பாவக தொடர்பு வழியிலான வித்தியாசங்கள் ! திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் !

 

 ஒருவரின் சுய ஜாதகத்தை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது லக்கினமும் 12 பாவகங்களின் வலிமை நிலையே என்பதற்கு நல்ல உதாரணம் கிழ்கண்ட ஜாதகங்களே, கீழ்கண்ட ஜாதகங்கள் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் நாம் இதை தெளிவாக உணர முடியும், குறிப்பாக சுய ஜாதகம் என்பது பிறந்த தேதி நேரம்  மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படும் விஷயமாகும், கீழ்கண்ட ஜாதகங்கள் 1நிமிட இடைவெளியில் ஜனனம் ஆன ஜாதகங்கள் என்ற போதிலும், இருவருக்கும் பாவக தொடர்பு என்பது நிறைய வித்தியாசங்களை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதை நமது ஆய்வின் மூலம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இது ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தாலும், ஒருவரது ஜாதகம் போல் மற்றோருவரின் ஜாதகம் அமையாது என்பதற்கு நல்ல உதாரணமாகவும், சுய ஜாதகம் என்பது ஒவ்வொருவருக்கும் கைரேகை போன்று தனித்துவம் பெற்றதாகவே அமைந்திருக்கும் என்பதற்கும் நல்ல எடுத்துகாட்டகவும் விளங்குகிறது என்பதை பதிவின் இறுதியில் நாம் மிக தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

 பெரும்பாலும் சுய ஜாதக பலன் காணும் பொழுது கிழ்கண்ட ஜாதகங்களுக்கு  கிரக நிலைகள் ஒரே மாதிரியான அமைப்பை பெற்று இருக்கும், திசா புத்திகளும் ஏக காலத்தில் இருவருக்கும் ஒரே மாதிரி அமைப்பில் நடைமுறைக்கு வரும், ஆனால் ஜாதகர் இருவரின் குணாதிசியமும், பலாபலன்களும் மிக பெரிய வித்தியாசமான அமைப்பை பெற்று இருப்பது நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடும், இதற்க்கு என்ன காரணம் என்பதை கீழ்கண்ட இரட்டையர் ஜாதகத்தில் இருவருக்கும் ஜாதக ரீதியாக பாவக வழியிலான தொடர்புகளின் வலிமை நிலையை பற்றியும், இருவரும் பாவக வழியில் இருந்து பெரும் நன்மை தீமை நிலையை பற்றியும், தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது அதற்க்கான பதில் நமக்கு கிடைக்கும்.


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 3பாதம் 


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 4பாதம் 

மேற்கண்ட இரண்டு பெண் குழந்தைகள் ஜாதகத்தில் பொதுவாக பார்க்கும் பொழுது இரு ஜாதகமும் ஒன்றை போலவே தெரியும் ஆனால் இருவரது சுய ஜாதகத்தை பாவக வழியிலான தொடர்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது இருவரது சுய ஜாதகத்திலும் பாவக வழியிலான தொடர்புகளில் உள்ள வேற்றுமை மிக தெளிவாக நமக்கு புரிய வரும்.

ஜாதகி : 1 ( பாவக தொடர்புகள் )

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் உள்ளது.
2,4,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.
8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
10ம் வீடு ஆயுள் ஸ்தானமான  8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையற்று காணப்படுகிறது.

ஜாதகி : 2 ( பாவக தொடர்புகள் )

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் உள்ளது.
2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று காணப்படுகிறது.
5ம் வீடு  ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.
6,10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான  8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
8ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று வலிமை அற்று காணப்படுகிறது.
11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையற்று காணப்படுகிறது.

மேற்கண்ட இரட்டை பிறவி சகோதரிகள் 1 நிமிட இடைவெளியில் பிறந்து இருந்தாலும் இருவரது சுய ஜாதகத்தில் கிட்டத்தட்ட 5 வீடுகள் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக பெரிய வித்தியாசத்தை நமக்கு எடுத்துரைக்கிறது, முதல் சகோதரி ஜாதகத்தில் வலிமை அற்ற 2,4,6ம் வீடுகள் இரண்டாவது சகோதரி ஜாதகத்தில் 2,4ம் வீடுகள் வலிமை பெற்றும் 6ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்றும் காணப்படுகிறது, முதல் ஜாதகத்தில் ஜாதகிக்கு குடும்பம், சுக போகம் மற்றும் ஆரோக்கியம் நன்றாக அமையாத பொழுது, இரண்டாம் ஜாதகத்தில் ஜாதகிக்கு நல்ல குடும்பம், சிறந்த பேச்சு திறன், நிறைவான வருமானம் என்றவகையில் குடும்ப ஸ்தான நன்மைகளை சிறப்பாக வாரி வழங்குகிறது, மேலும் சுக ஸ்தான வழியில் இருந்து தனது தந்தைக்கு யோகத்தையும், தனது தந்தை வழியிலான சொத்து சுக சேர்க்கையையும் பெரும் அமைப்பை பெறுகின்றார், மேலும் ஜாதகியின் குணம் மிகவும் நல்ல குணமாகவும், பரோபகார மனநிலையை கொண்டவராகவும் திகழ்வார், முதல் ஜாதகிக்கு 4ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி தனது தகப்பனாருடன் பகைமை பாராட்டும்  தன்மையையும், தனது குணத்தில் சிறப்பற்ற தன்மையையும் பெற்று இருப்பார், மேலும் நல்ல வருமானம் இன்மை, வாக்குவாதம்  செய்யும் குணம், வீடு வண்டி வாகன யோகம் அற்ற தன்மை, சத்ரு வழியிலான இன்னல்கள் உடல் நல பாதிப்புகளை அடிக்கடி சந்திக்கும் தன்மையை பெறுவார், இரண்டாவது சகோதரிக்கு சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து கடன் சார்ந்த இழப்புகளை தரும் ஆனால் உடல் நல பாதிப்பு அதிகம் தாராது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

முதல் சகோதரி ஜாதகத்தில் 8ம் பாவக வழியில் இருந்து தகப்பனாருக்கு சில பொருளாதார இழப்புகள் ஏற்படும், ஜாதகி தனக்கு வரும் சுக போக  வாழ்க்கையை உதறித்தள்ளுவார், இரண்டாம் சகோதரி 8ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை சந்தித்த போதிலும் திடீர் வருமான வாய்ப்புகளை புதையலுக்கு நிகராக பெறுவார், மேலும் இன்சூரன்ஸ், கிராஜுவிட்டி, போனஸ் போன்ற அமைப்புகளில் இருந்து நல்ல வருமானம் உண்டாகும், தனது பேச்சு திறன் மூலம் நல்ல வருமானத்தை இரண்டாம் சகோதரி பரிபூர்ணமாக பெறுவார்.

இரண்டு சகோதரிகளுக்கும் தற்போழுது நடைபெறும் ராகு திசை பாக்கிய ஸ்தான பலனை தந்த போதிலும், ராகு திசை சுக்கிரனை புத்தி முதல் சகோதரிக்கு 10ம் பாவக வழியில் இருந்து தனது அன்னைக்கு கடும் இன்னல்களை தருகின்றார், ஜீவன வழியிலான சிரமங்களை அதிக அளவில் தருகின்றார், இரண்டாம் சகோதரி 6,10ம் பாவக வழியில் இருந்து திடீர் பொருள் இழப்புகளையும், தனது அன்னைக்கு பெரும் சிரமங்களையும் சேர்த்து தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எதிர்வரும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக  பலன்களும் இதை போன்றே சில வித்தியாசமான பலாபலன்களை தருவதற்கு ஏதுவாக காணப்படுகிறது என்பது கவலைக்குரிய விஷயமாக காணப்படுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 6 டிசம்பர், 2017

சுக்கிரன் திசை ( குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கிய ஸ்தானாதிபதி திசை ) நடைபெற்றும் திருமணதடை ஏற்ப்பட காரணம் என்ன ?


கேள்வி :

 கடந்த 13 வருடங்களாக சுக்கிரன் திசை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி திசை என்பதால் நன்மைகளை தருவார் என்றனர், இதுவரை யாதொரு நன்மையையும் இல்லை, கல்வியில் தடை, திருமண முயற்சிகள் யாவும் தடை, பொருளாதார சிக்கல்கள், எதிர்பாரா இழப்புகள் என மிகுந்த இன்னல்களுக்கு மட்டுமே இதுவரை ஆளாகி வந்துள்ளேன், சுக்கிரன் திசை எனக்கு வழங்கும் உண்மையான பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எனக்கு எப்படி அமையும் ?


பதில் :

லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்

தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் குடும்பம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல், மிகவும் வலிமை அற்ற கடுமையான பாதிப்புகளை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதே தாங்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, பொதுவாக சுய ஜாதக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் நன்மையை செய்யும், அசுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் பகை,நீசம் என்ற நிலையை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் தீமையை செய்யும், என்று கருதுவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்பட்டும் பொது பலன்களே, இதை கருத்தில் கொண்டு நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது என்பது மண் குதிரையை நம்பி நடுஆற்றில் இறங்குவதற்கு சமமானது, இதை மேற்கண்ட தங்களின் சுய ஜாதகத்தை உதாரணமான கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !

  தங்களது ஜாதகத்தில் 5,7ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் தங்களுக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக  பாதிக்கப்பட்ட 5,7ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது  ( 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தங்களின் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க இயலாத துன்பங்களை 5ம் மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% விகிதம் வாரி வழங்கும், அடிப்படையில் தங்களின் பூர்வீகத்தில் இருந்து ஜீவன செய்ய இயலாத நிலையை தந்து பரதேச ஜீவனம் என்ற நிலைக்கு ஆளாக்கும், சிறிதும் இறை அருளின் கருணை தங்களுக்கு உதவி செய்யாது, தங்களின் அறிவு திறனும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் பயன்படாது, உதவி செய்ய யாரும் அற்ற நிலையில் தனிமையாக போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலனளிக்காது, தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத துறையில் தனது வாழ்க்கை பயணத்தை நடத்தியாகவேண்டிய சிரமமான சூழ்நிலையை உருவாக்கிவிடும், ஜாதகர் மேற்கொள்ளும் சுப நிகழ்வுகள் யாவும் தடைபெற்று பாதியிலே நின்றுவிடும், ஜாதகரின் அனைத்து முயற்சிகளும் மிகப்பெரிய தோல்வியையே தரும் என்பது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5ம் பாவாக வழியில் இருந்து தரும் பலன்களாகும்.

 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பாலின அமைப்பினர் மூலம் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், காதல்வயப்பட்டு அதன் மூலம் மிகப்பெரிய இழப்புகளை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும், இறுதியில் தேவையற்ற வீண் அவப்பெயர் மற்றும் களங்கம் ஏற்படும், குறிப்பாக ஜாதகர் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இருந்து பெரிய அளவிலான துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும், கூட்டு முயற்சி பெரிய பாதிப்புகளை தரும், நண்பர்கள் வழியிலான பொருளாதார சீர்குலைவு தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், தேவையற்ற சகவாசம் தங்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

தங்களின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் அமைவது தங்களின் தொழில் வழியிலான முன்னேற்றத்தையும், அறிவு சார்ந்த முயற்சிகளையும் கடுமையாக பாதிக்கும், ஓர் நல்ல வேலை வாய்ப்பை பெறுவதே குதிரை கொம்பாக அமையும், மேலும் கவுரவம் சார்ந்த பிரச்சனைகள் தங்களின் எதிர்காலத்தையும், தொழில் வழியிலான முயற்சிகளுக்கும் மிக பெரிய தடைக்கற்களாக அமையும் என்பதை கவனத்தில் கொள்க.

தங்களின் 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு விரைய ஸ்தானமான மீன ராசியில் அமைவது எதிர்பாலினம், நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து கடுமையான மனநிம்மதியிழப்பையும், மனஅழுத்தத்தை வழங்கும் என்பதால் சற்று கவனமுடன் மேற்கண்ட உறவுகளுடன் நட்பு பாராட்டுவது நலம் தரும், குறிப்பாக தவறான எதிர்பாலின சேர்க்கை இருப்பின் அதில் இருந்து வெகு விரைவில் விடுபடுவது தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்த நன்மைகளை தரும்.

அடுத்து வரும் சூரியன் திசை தரும் பலன்கள் திருமண தடை சார்ந்த கேள்விகளுக்கு  அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் நவகிரக திசாபுத்திகள் !



 சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருப்பினும், நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருந்தும் பயனற்ற நிலையையே தரும், குறிப்பாக ஜாதகர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் க்கு அலைந்த நிலையை தந்துவிடும், கீழ்கண்ட ஜாதகருக்கு வயது 41 கடந்தும் திருமணம் எனும் பந்தத்தில் இணையாத சூழ்நிலையை தந்து, ஜாதகரையும் ஜாதகரின் பெற்றோரையும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் 9ம் வீடு என மூன்று வீடுகள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற 9 வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருந்தும் ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான யோக பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார், சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் 12ம் வீடுமட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒரு வகையில் இன்னல்களை தந்த போதிலும் 2,5,7,8ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை ஏன் ஏற்படுகிறது என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், 6,9,12ம் எனும் மூன்று பாவகங்கள் மட்டுமே சுய ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படுகிறது இதில் 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான பாதிப்புகளையும், 9ம் பாவக வழியில் அளவில்லா கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவக வழியிலான நன்மை தீமைகளை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதில் இருக்கிறது ஜாதகரின் முன்னேற்றம் என்பது, ஜெனன காலம் முதல் தற்போழுது  வரை நடைபெற்ற நவகிரக திசை ஜாதகருக்கு தந்த பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜெனன கால கேது திசை 4வருடம் 2மாதம் ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை தடையின்றி வாரி வழங்கியது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பான யோக பலன்களை  வாரி வழங்கியிருக்கின்றது, ஜாதகர்  மாற்றும் ஜாதகரின் பெற்றோர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை பெற்று இருக்கின்றனர்.

சுக்கிரன் திசை 20 வருடம் ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கி இருப்பது சிறப்பான யோக பலன்களை தந்து இருக்கின்றது, ஜாதகரின் அடிப்படை கல்வி, உயர்கல்வி மற்றும் பட்டயபடிப்பு பரிபூர்ண சுபயோகங்களை வழங்கி இருக்கின்றது, கல்வி காலம் சிறப்பாக நிறைவு பெற்ற உடன் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பும் அமைந்து நிறைவான வருமானத்தை பெற ஆரம்பித்தார் என்பது ஜாதகருக்கு சுக்கிரன் திசை வழங்கிய சிறப்பு பலன்களாகும்.

சூரியன் திசை 6 வருடம் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை 5ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கியது ஜாதகர் தான் கற்ற கல்வி வழியில் இருந்து ராஜயோக பலன்களை பெற்றார் என்பது ஜாதகருக்கு சூரியன்  திசையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

சந்திரன் திசை 10 வருடங்கள் ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலன்களை வழங்கியது, ஜாதகருக்கு தொழில் ரீதியான சுபயோகங்களை வழங்க ஆரம்பித்தது, அதன் வழியில் ஜாதகர் பெற்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி ஜாதகரின் வாழ்க்கை பாதையை வெகுவாக சீர்குலைக்க ஆரம்பித்தது, குறிப்பாக சந்திரன் திசையில் செவ்வாய் மற்றும் ராகு புத்திகள் ஜாதகருக்கு தவறான எதிர்பாலின சேர்க்கையையும், தீய பழக்க வழக்கங்களை கொண்ட நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையை புரட்டிப்போட ஆரம்பித்தது, செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் ஜாதகரின்  வாழ்க்கையில் திருமணம் எனும் முயற்சிகளில் பிரதிபலித்தது, ஜாதகரின் திருமண முயற்சிகள் அனைத்திற்கும்  வெகுவான தடை தாமதத்தை வழங்க ஆரம்பித்தது தற்போழுது வரை நிறைவடையவில்லை, திருமணத்திற்க்கான பகிர்தன முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு கடுமையான தோல்வியை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 05/05/2016 முதல் 05/05/2023 வரை ) ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதகம் மற்றும் விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான முயற்சிகள் அனைத்திற்கும் நல்லதோர் திண்டுக்கல் பூட்டை பலமாக பூட்டி சாவியை தன்வசம் வைத்துக்கொண்டது என்பதுடன் அடுத்துவரும் ராகு திசையிடம் தன்வசம் உள்ள சாவியை பொறுப்பாக தந்துவிடும் என்பதை நினைக்கும் பொழுது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை பற்றிய கேள்விக்குறி மிக பெரியதாக நம்முன் நிற்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்கள் வழியில் இருந்து சுபயோக அமைப்புகள் இருப்பினும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் வலிமையற்ற பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் இருந்தும்  துரதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் இருப்பினும், நடைமுறையில், எதிர்காலத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நவக்கிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் பாடு பெரும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ?

1) சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும் களத்திர ஸ்தானமாகவும் அமைகிறது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கடந்த சந்திரன் திசையில், செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட எதிர்பாலின தவறான தொடர்பு ஓர் அவயோக ஜாதகமாகும் ( தரித்திர யோகம் ) இதன் தாக்கத்தை ஜாதகர் தற்போழுது வரை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுடன், செவ்வாய் புத்திக்கு அடுத்து வந்த ராகு புத்தி ஜாதகரின் திருமண முயற்சிக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்தியது.

3) தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவனம் மற்றும் களத்திர வழியில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதுவே ஜாதகரின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை எதுவென்றாலும் சரி சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை
எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலனேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்தாலும் நடைபெறும் அல்லது எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால் சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராமல், ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 நவம்பர், 2017

லக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன்கள் என்ன ?



கேள்வி :

 வணக்கம் எனது சுய ஜாதகத்தில் தற்போழுது சூரியன் திசை நடைமுறையில் உள்ளது, சூரியன் லக்கினாதிபதி என்பதால் எனக்கு நன்மையே செய்வார் என்றார்கள் ஆனால் இதுவரை எந்தவித நன்மையையும் சூரியன் திசை தரவில்லை, கடன் மட்டுமே அதிகரித்துள்ளது, எதிர்வரும் சந்திரன் திசை விரையாதிபதி திசை என்பதால், வீண் விரையமே ஏற்படும் என்கின்றனர், எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது, தயவு செய்து சந்திரன் திசை எனக்கு இன்னல்களை அதிகம் தருமா ? ஓரளவு நன்மையாவது செய்யுமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன், " நன்றி "

பதில் :

  பொதுவாக சுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களை தரும் என்பதும், அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய யாதொரு தெளிவும் இன்றி, பொதுப்படையாக சொல்லப்படும் கருத்துக்களே, ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தனிப்பட்ட முறையில் சுபயோக பலன்களையே, அவயோக பலன்களையே தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் என்பது, சிறிதும் சுயஜாதக கணித அறிவு இல்லாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே, இதற்க்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கற்களை உருவாக்கிக்கொள்வதற்கு இணையானது.

 மேலும் கால புருஷ தத்துவ அமைப்ப்பிற்கு நமது சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் பெரும் வலிமை நிலையை ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) கருத்தில் கொண்டு, நமக்கு அவை நன்மை தீமை பலன்களை தரும் என்று கருதுவதும் சுய ஜாதக பாவக வலிமை பற்றிய கணித அறிவு இல்லாமல் கூறப்படும் தவறான கருத்துக்களே, சுய ஜாதக கணிதம் என்பது மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது அவையாவன :

1) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது, சுய ஜாதகத்தை இயக்குவதில் லக்கினமே முதன்மை வகிக்கிறது, இந்த லக்கினத்தை மூலாதாராமாக கொண்டு மற்ற பதினோரு பாவகங்களும் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையை பெறுகின்றது ( லக்கினம் உற்பட ) இதில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மை மற்றும் சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் தீமை மற்றும் அவயோக பலன்களை ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார்.

2) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே, சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசாபுத்திகள் சுவீகரித்து தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் வழங்குகிறது, நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின் பலனையே, பார்த்த இடத்தின் பலனையே தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும், தான் பெற்ற ஆதிபத்யத்தின் பலனை தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை அல்லது புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை என்ன ? அது தரும் பலாபலன்கள் என்ன ? என்ற அடிப்படை விஷயம் அறியாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே என்றால் அது மிகையில்லை.

3) கோட்சார கிரகங்களின் பலன்கள் என்பது தற்போழுது பெரும்பாலும் சந்திரன் நின்ற இடத்தை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு பலன் கூறப்படுவதும் தவறான அணுகு முறையே, நமக்கு சுய ஜாதகம் உள்ளது என்றால் கோட்சார பலாபலன்களை நமது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் சம்பந்த படுத்தி கோட்சார பலன்களை அறிந்துகொள்வதே சரியானது, இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூறுவதற்கு ஏதுவானதாக அமையும், மேற்கூறிய விஷயங்களை, கேள்விகள் வினவிய அன்பரின் சுய ஜாதகத்துடன் பரீட்சித்து பார்த்து ( உதாரண ஜாதகமாக கொண்டு ) தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்

சூரியன் லக்கினாதிபதி, லக்கினாதிபதி திசை ஏன் நன்மையை தரவில்லை ?

பொதுவாக லக்கினாதிபதி என்ற முறையில் ஓர் ஜாதகருக்கு, லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்பது தவறான கருத்து, லக்கினாதிபதி திசை என்றாலும் சரி, யோகாதிபதி திசை என்றாலும் சரி நமது ஜாதகத்தில் எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பொறுத்தே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களோ, அவயோக பலன்களோ நடைமுறைக்கு வரும், லக்கினாதிபதி என்ற ஓர் தகுதியை வைத்து, அவரது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நன்மையை மட்டுமே வழங்கும் என்பது தவறான கருத்து, மேற்கண்ட ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை என்றாலும், அவரது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 2,6,8,12ம் வீடுகளின் பலனை தனது திசையில் ஏற்றுநடத்துவதால் ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை நன்மைகளை தரவில்லை, சூரியன் திசை ஜாதகருக்கு ( 20/04/2012 முதல் 20/04/2018 வரை ) சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், வருமான  பாதிப்பு, வரும் வருமானம் மற்றும் தனம் விரையமாகும் தன்மை, வாக்கு வன்மை அற்ற நிலை என்றவகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகள், எதிரி தொல்லை, கடன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் அவப்பெயர், எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்றவகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான வீண் செலவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வீண் விரையம், மற்றவர்களை நம்பி தரும் பணம் மற்றும் பொருட்கள் வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் மன நிம்மதி கேள்விக்குறியாக மாறும், நிம்மதியின்றி அதிக மனஉளைச்சலை ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும், முதலீடுகளில் எதிர்பாராத பேரிழப்புகளை தரும், இதன் தாக்கம் ஜாதகரின் மனநிம்மதியை சீர்குலைக்கும், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்ற ஆலோசனையின் பெயரில் செய்த முதலீடுகள் அனைத்தும் வீண் விரையம் என்ற நிலையை அடைந்ததற்கு அடிப்படை காரணமே, சுய ஜாதகத்தில் சூரியன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது  என்று தெரியாமல் வழங்கிய தவறான ஜாதக ஆலோசனையே என்றால் அது மிகையில்லை, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியிருந்தால் ஜாதகருக்கும் இது போன்ற தவறான ஜோதிட  ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்காது, சிறந்த ஜோதிடர் கிடைத்திருப்பர், ஜாதகருக்கும் சரியான ஆலோசனை கிட்டியிருக்கும், விதியின்  பயனை வெல்ல ஜாதகரின் குல தெய்வமும், பித்ருக்களின் ஆசியையும் பெற தவறிவிட்டார் என்பதுடன் உதாசீனம் செய்தார் என்பது வருந்தத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் மனநிலையை வெகுவாக படுத்தியெடுத்துவிட்டது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை,

விரையாதிபதி சந்திரன் திசை விரையத்தை தரும், வீழ்ந்து கிடக்கும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வெற்றிகொள்ள செய்யுமா ?

 எதிர்வரும் விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன் என்ன? என்பதை காணுமுன் கிராமங்களில் உள்ள பெரியோர்கள் ஓர் " செலவேந்தரம் " ஒன்று சொல்வதுண்டு அதாவது " கப்பல் வியாபாரத்தில் விட்ட காசை, கட்டில் கயிறு திரித்து பெற முடியாது " என்று சொல்வதுண்டு இதற்க்கு அர்த்தம் நாம் எங்கு விட்டோமோ அங்கு இருந்துதான் அதை பெற முடியும் என்பதாக அமையும், எனவே ஜாதகர் லக்கினாதிபதி திசையில் வெகு விரயங்களை சந்தித்து விட்டார், ஆனால் விரைய ஸ்தான அதிபதியான சந்திரன் திசையோ ஜாதகருக்கு வலிமை பெற்ற  3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்தி, ஜாதகருக்கு அபரிவிதாமான யோக வாழ்க்கையை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது ஜாதகருக்கு தற்போழுது " ஜோதிடதீபம் " வழங்கும் சிறப்பான நல்ல செய்தியாகும், மேலும் சந்திரன் திசை முழுவதும் வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலன்கள் நடைபெறுவது ஜாதகரின் வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது  வெளிநாடுகளில் இருந்து வரும் சரளமான பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதுடன், ஜாதகர் இவையனைத்தையும் தனது அறிவு சார்ந்த முயற்சிகளில் இருந்து பரிபூர்ணமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஜாதகரின் சமயோசித அறிவு புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சகல விதங்களில் இருந்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், ஜாதகரின் அறிவின் வீச்சு மிகவும் பிரமாண்டமானதாகவும், ஜாதகரின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் உலக மக்களின் அவசிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமையும் என்பதை நினைத்து " ஜோதிடதீபம் " வியப்படைகிறது.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல மனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், சத்தியத்தை மதித்தது நடப்பது, கல்வி கேள்விகளில் வெற்றி, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, புதிய சிந்தனை மற்றும் புதிய  வாய்ப்புகள், ஏஜென்ஜி துறை வழியிலான அபரிவித வளர்ச்சி என்ற எமது  ஆசான் அருள்வேல் அய்யாவின் வாக்கிற்க்கு இணங்க, மேற்கண்ட சிம்ம லக்கின ஜாதகர் விரைய ஸ்தான அதிபதியான "சந்திரன்" திசையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுவார் என்பதை உறுதிபட தெரிவித்து, மேற்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் விரைய ஸ்தான அதிபதி சந்திரன் திசை விரையத்தை தாராது என்ற மனஉறுதியை வழங்குவதுடன், சந்திரன் திசைக்கு பிறகு வரும் செவ்வாய் திசையும் 4,10ம் வீடுகள் வழியில் இருந்து  சுபயோக பலன்களையும், செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசை  5ம் வீடு வழியில் இருந்து சகல சௌபாக்கியத்துடன் கூடிய சுபயோக பலன்களையும் வாரி வழங்கும் என்ற திடமான ஜாதக உண்மையை கூற கடமைப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே தருவதால் ஜாதகருக்கு " வானமே எல்லை " என்பதை அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியும் மிதமிஞ்சிய இறை அருளின் கருணையை நினைத்து உவகை கொள்கிறது, எல்லாம் இறைஅருள் " வாழ்த்துக்கள் " அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 23 நவம்பர், 2017

சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் தரும் பலாபலன்கள் !



 ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வழங்கும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமை மற்றும் அது தரும் பலன்கள் என்ன ? என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது ராகு திசை ஜாதகிக்கு 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது  ஜாதகிக்கு 6ம் பாவக வழியில் இருந்து  நன்மைகளையும், 2,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் தரும் அமைப்பாகும், ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தன ஆதாயத்தை வழங்கிய போதிலும், குடும்பம் சார்ந்த வழியில் இருந்து இன்னல்களை தரும், ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களை சிரமங்களை அதிகரிக்கும், குறிப்பாக  ஜாதகியின் வார்த்தைகள் இல்லற துணையின் பொறுமையை வெகுவாக சோதிக்கும், பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை  அதிகரிக்கும் என்பதனால் ஜாதகி மிகவும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, வாழ்க்கை துணையுடன் வரும் கருத்து வேறுபாடுகளை களைந்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்வதற்கான நடவடிக்கைகளில் ஜாதகி இறங்குவது  மிகுந்த சிறப்புகளை தரும் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகிக்கே 2ம் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது, 

 மேலும் 8ம் பாவகம் வலிமை இழந்து இருப்பதும், 8ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவதும், ஜாதகியின் மனநிம்மதியை வெகுவாக பாதிக்கும், இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை வழங்கும், மணவாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சில சிரமங்களை தரக்கூடும், இவையெல்லாம் ஜாதகியின் சுய ஜாதகத்தில் உள்ள 2,8ம் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையாலே ஏற்படுகிறது என்பதை ஜாதகி  உணர்ந்து அதன் வழியில் கர்மவினை பதிவினை கழித்துக்கொள்வதே நல்லது, தனது வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை அதிகரித்துக்கொண்டு  இனிமையான இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.

ராகு திசை ராகு புத்திவரை ஜாதகி 2,8ம் பாவக வழியிலான இன்னல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதால் அவசப்பட்டு ஜாதகி எடுக்கும் முடிவுகள் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிவிடும் என்பதால், ஜாதகி பொறுமையை கையாண்டு இல்லற வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை  பெறுவதே புத்திசாலித்தனம்.

சுய ஜாதகத்தில் நமக்கு நடைபெறும் திசா புத்திகள் பாதிப்பான பாவக தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தரும் பொழுது பொறுமையை கையாள்வதே சிறந்த நன்மைகளை தரும், தனக்குவரும் பெரிய சிக்கல்களில் இருந்து விடுபட நல்லநேரம் வரும் வரை பொறுமை காப்பதே சாலச்சிறந்தது, மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது  நடைபெறும் ராகு திசை ராகு புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் பின்னடைவை தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ராகு திசை நன்மையை தருவதால் , ஜாதகிக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுப யோக பலன்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறுவார் என்பதை ஜாதகியின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 1,5,7,11ம் வீடுகள் உறுதிப்படுத்துகிறது.

லக்கின பாவக வழியில் ஜாதகிக்கு உடல் நலம், மனவலிமையையும், 5ம்  பாவக வழியில் இருந்து சிறந்த இறை ஆசிர்வாதைத்தையும், சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமையையும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையின் ஆதரவையும், அவருடனான தாம்பத்திய யோக வாழ்க்கையும், 11ம் பாவக வழியிலான நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குணத்தையும் தருவது ஜாதகியின் ராகு திசையின் வழியில் வரும் இன்னல்களை ஜாதகி வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், சுய ஜாதகம் நல்ல வலிமையுடன் இருந்தாலும் 2ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகியின் வார்த்தைகள் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதை கருத்தில் கொண்டு தனது இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்தி செல்வதே ஜாதகிக்கு முன் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கை வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 21 நவம்பர், 2017

ராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன ? 1ல் அமர்ந்த கேதுவும், 7ல் அமர்ந்த ராகுவும் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ?


 ராகுகேது எனும் சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது  ராகுகேது தோஷமாகவும், சர்ப்ப தோஷமாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையை சுய ஜாதகத்தில் பெற்ற அன்பர்கள் சாயாகிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்களால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் தன்மையை தரும் என்றும், கல்வி,தொழில்,திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தும் என்றும், இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகும் என்ற கருத்து ஸ்திரமாக இருக்கின்றது, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தோஷத்தை தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட வீடுகளில் அமர்ந்திருக்கும் ராகு கேது இன்னல்களை மட்டுமே சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும் தவறான கருத்தே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகத்தில் ராகுகேது அமர்ந்தாலும், தான் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமை, சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு நிச்சயம் உண்டு, தான் அமர்ந்த பாவகத்தில் சேர்ந்த மற்ற கிரகங்களின் பலாபலன்களை தானே சுவீகரித்து ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் வல்லமையும் சாயாகிரகங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், ஏழாம் பாவகத்தில் ராகுவும் அமர்ந்து இருப்பதை கருத்தில் கொண்டு ஜாதகருக்கு சர்ப்பதோஷம் என்று முடிவு செய்வது மிகவும் தவறான அணுகுமுறையாகும், ராகு கேது உண்மையில் அமர்ந்த பாவகம் எது ? என்பதில் முதலில் தெளிவு வேண்டும், ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் கும்ப ராசியில் 325:47:55 பாகையில் ஆரம்பித்து, மேஷ ராசியில் 000:32:21 பாகையில் முடிவடைகிறது, கேது அமர்ந்திருப்பது கும்ப ராசியில் உள்ள 316:55:40 பாகையில் என்பதனால் ஜாதகருக்கு கேது கும்ப ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியானது, அதை போன்றே நேரெதிராக சிம்மத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும் சிம்மத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே சரியான ஜாதக கணிதமாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 7ல் கேது ராகு அமர்ந்த தோற்றத்தை தந்தாலும் பாவக கணித முறைப்படி 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதே முற்றிலும் சரியானதாகும்.

பாவங்கள் முறையே 6,12ல் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? என்பதே அடுத்த கேள்வி சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையே 6,12ல் அமர்ந்த ராகுகேது முழு வலிமை பெற்று சுபத்துவத்தை பெற்று இருப்பதால் ஜாதகர் 6,12ம் பாவக வழியில் இருந்து 100% சதவிகித நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார் என்பதே மிக சரியான ஜோதிட கணிதமாகும்.

ஜாதகருக்கு 6ல் வலிமை பெற்ற ராகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், எதிரிகள் வழியில் இருந்து நன்மைகளையும், மருத்துவ உபகரணம் மருந்துகள் மூலம் அபரிவிதமான லாபங்களை பெற்று தருவார், ஜாதகரின் உடல் வலிமை மற்றும் மனவலிமை அதிகரிக்கும், சிம்மத்தில் உள்ள 6ல் அமர்ந்த ராகு ஜாதகரின் ஆன்மீக வெற்றியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து செல்லும், யோக கலையிலும் சாஸ்த்திரம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தருவது ஜாதகருக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவின் சிறப்பு அம்சத்தாலே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் வாக்கு வன்மையும், அதிகார வல்லமையும் சிறப்பான நிர்வாக திறமையும் பெருவாரியான வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், 6ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு குறுகிய கால வெற்றி வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருப்பதும், ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளும் மிகவும் அபரிவிதமானதாக இருப்பதை ஜாதகர் தனது சிறு வயதில் இருந்தே பரிபூர்ணமாக உணர்ந்துகொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் வெற்றிகொள்ளும் திறன் அதிகரித்து இருப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைவது ஜெனன காலத்தில் 6ம் பாவகத்தில் நின்ற ராகு பகவானே என்றால் அது மிகையில்லை.

ஜாதகருக்கு 12ல் வலிமை பெற்ற கேது பகவான், நல்ல மனநிம்மதியை தனது அறிவார்ந்த செயல்கள் மூலம் பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, அயனசயன ஸ்தானத்தில் அமர்ந்த கேது ஜாதகருக்கு நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசீர்வாதத்தையும், தெய்வீகம் நிறைந்த பல திருத்தல தரிசனங்களையும் சிறப்பாக வழங்கியுள்ளது, நல்ல உறக்கம் ஜாதகரின் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது, தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் பரிபூர்ண வெற்றிகளை வாரி வழங்குகிறது, யோக வாழ்க்கையில் நல்ல ஞானத்தை பெற ஜாதகருக்கு கும்பத்தில் அமர்ந்த கேது வாரி வழங்குகிறார், ஜாதகரின் எண்ணம் மற்றும் லட்சியம் நிறைவேற முழுவீச்சில் உதவி புரிவது ஜாதகத்தில் 12ல் அமர்ந்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, ராகுகேது இரண்டு சாயா கிரகங்களும் ஸ்திர ராசியான சிம்மம் மற்றும் கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, ஸ்திரமான பலாபலன்களை ஜாதகருக்கு வழங்க தவறுவதில்லை, அயன சயன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான 11ம் வீடாக அமைவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தை 12ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், முதலீடுகளில் இருந்து ஜாதகருக்கு வரும் வருமானம் ஜாதகரின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்கிறது, ஜாதகரின் மனநிம்மதி, தெளிவான சிந்தனை, போதும் என்ற மனது திருப்திகரமான யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு அடிப்படை காரணகர்த்தாவாக விளங்குவதே சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் சாயா கிரகங்களான ராகு கேது பகவானே என்றால் அது மிகையில்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் நிலையில் ராகுகேது இருப்பின் நிச்சயம் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவார், மாறாக சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருக்கும் ( எந்த பாவகம் என்றாலும் சரி ) ராகு கேது ஜாதகருக்கு அவயோக பலாபலன்களை வாரி வழங்க தவறுவதில்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில்  1,2,5,6,7,8,12 வீடுகளில் ஜெனன ஜாதகத்தில் அமர்ந்து இருப்பது மட்டுமே தோஷத்தை தாராது, லக்கினம் முதல் 12 பாவகத்தில் அமர்ந்து இருக்கும் ராகுகேது தான் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பின் சுபயோக பலாபலன்களையும், வலிமை அற்று இருப்பின் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களை தரும் என்பதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வதே சரியான ஜோதிட கணித முறையாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 20 நவம்பர், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன்களை தர மறுப்பதேன் ?



 ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் ஓர் ஜாதகருக்கு யோக பலன்களை நடைமுறையில் எடுத்து நடத்ததிற்கு மூன்று காரணங்கள் உண்டு 1) ஜாதகருக்கு சரியான நேரத்தில் நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல் போனால் ஜாதகர் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்து அதனால் ஒரு பயனும் ஏற்படாது, 2) தனது ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத அல்லது நேரெதிரான அவயோகங்களை பெற்றுள்ள எதிர்பாலின அமைப்பினரிடம் சேர்க்கை பெறுவதினால், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பங்கம் பெற்று சுபயோக பலாபலன்களை நடைமுறைக்கு வாராது. 3) ஓர் ஜாதகத்தில் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருவது ஜாதகரின் சுய அறிவு நிலை மற்றும் சமயோசித புத்திசாலித்தனத்தை அடிப்படையாக கொண்டே அமையும் என்பதால், ஜாதகர் எந்த ஓர் சூழ்நிலையிலும் தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் மழுங்கும் விஷயங்களில் ஈடுபட கூடாது, குறிப்பாக ஜாதகரின் அறிவை மழுங்கடிக்கும் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர் என்றால் சுய ஜாதகத்தில் யோக பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு இறை அருள் கொடுத்துள்ள சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அரிதானது, அபரிவிதமான செல்வாக்கினை வாரி வழங்கும் தன்மையை பெற்றது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் ஒன்றை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிகவும் வலிமையுடன் இருப்பதை வைத்தே இதை உறுதிசெய்யலாம், மேலும் ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் என்பது அதிர்ஷ்டத்தின் தன்மையை பரிபூர்ணமாக உணரவைக்கும் அமைப்பாகும், நடைபெறும் குரு திசையை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் சுபயோக பலன்களில் உச்ச நிலையாகும்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், இது ஜாதகரை எந்த சூழிநிலையிலும் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கான  நல்ல வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தந்துகொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு அத்துணை சிறப்புகள் இருந்து யாதொரு நன்மையையும் அனுபவிக்க இயலாமல், இன்னல்களை இந்நாள்வரையிலும் அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கு அதிமுக்கிய காரணம், ஜாதகரின் சகவாச தோஷம் என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு பணியிடத்தில் ஏற்பட்ட தவறான எதிர்பாலின சேர்க்கை ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை கபளீகரம் செய்துகொண்டு இருப்பது, ஜாதகரின் பேச்சின் வழியிலும், அந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தின் வழியிலும் மிக தெளிவாக நாம் உணர முடிந்தது, ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அனைத்தும் பங்கம் பெற்று நிற்பதற்கு அடிப்படை காரணமே அந்த எதிர்பாலின சேர்க்கைதான் என்பதை ஜாதகர் உணராமல் பிதற்றி கொண்டு இருப்பது, ஜாதகரின் ஆயுள் பாவகம் தரும் பலாபலன்களின் திருவிளையாடல் என்பதை  எப்படி? ஜாதகருக்கு புரியவைப்பது.

சம்பத்தப்பட்ட எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் கிட்டத்தட்ட லக்கினம் முதல் மிக முக்கியமான 8 பாவகங்கள் பாதக ஸ்தான தொடர்பை பெற்றிருப்பதை ஜாதகர் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை  என்பதை அவரின் வார்த்தைகளில் இருந்து மிக தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடிந்தது, குறிப்பாக எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை சூன்ய நிலைக்கு ஆற்படுத்திக்கொண்டிருப்பதை, ஜாதகர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதை வெகு நேர ஆலோசணைக்கு பிறகு நாம் தெளிவாக உணர்ந்துகொண்டோம்.

மேலும் இந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் தொடர்புக்கு பிறகு ஜாதகர் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களில் சிக்குண்டு சீரழிந்துகொண்டிருப்பது தெளிவாக நமக்கு தெரிந்தும், ஜாதகரின் சுய ஜாதக வலிமையை பற்றி சிறிதும் புரியவைக்க முடியவில்லை, எல்லாம் ஜாதகரின் இறைநம்பிக்கை அற்ற தன்மைக்கு பரிசாக கிடைத்ததாக நமக்கு தோன்றுகிறது, ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கான இறுதி வாய்ப்பையும் ஜாதகர் இழந்ததாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதகருக்கு குரு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி நல்லதோர் ஆன்மீக குருவின் தொடர்பை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்க ஓர் நல்ல வாய்ப்பை இறையருள் வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறோம்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்கள் பெரும்பாலும் முறையற்ற எதிர்பாலின சேர்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படும் தன்மை, தனது  சுய ஜாதக வலிமை பற்றிய தெளிவின்மை போன்ற காரணங்களாலேயே, யோகபங்க நிலையை பெறுகின்றது என்பதால், சுய ஜாதக வலிமை பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியமாகிறது, என்பதை  " ஜோதிடதீபம் " இந்தநேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 18 நவம்பர், 2017

தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் திசாபுத்தி எது ?


கேள்வி :

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ? எனது ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்தி எவை என்பதை தெளிவுபடுத்த இயலுமா ?


லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் ஒரு பாவகம் கூட வலிமை இழந்து காணப்படவில்லை என்பது தங்களுக்கு இறைஅருள் வழங்கி உள்ள ஆசிர்வாதம் என்பதை தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் மிகவும் நேர்த்தியாகவும், சுபயோகங்கள் நிறைந்தததாகவும் உள்ளது, இனி தங்களின் கேள்விகளுக்கான பதில்களை தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவுபடுத்துகிறோம்.

தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

நடைமுறையில் உள்ள திசா தரும் பலாபலன்கள் பற்றி நமக்கு தெளிவாக தெரிய வருவது நமது வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களையும், அதன் வழியிலான நன்மைகளையும் பெறுவதற்கு பேருதவியாக அமையும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு நமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மிக சிறப்பாக எடுத்துச்செல்ல உதவி புரியும், நமது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது அந்த பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை சிறிதும் மாற்றம் இன்றி தரும், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தான பலனை முழு அளவில் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இது தங்களுக்கு சமயோசித அறிவு திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், குலதெய்வத்தின் அருளாசி மூலம் சகல வித சம்பத்துக்களையும் பெரும் யோகம், தெய்வீக அனுக்கிரகம், நல்ல குழந்தை  பாக்கியம் மற்றும் சிறந்த வாரிசு யோகம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்கள் வழியிலான உதவிகள், தொழில் துறையில் நல்ல ஞானம், அதன் வழியில் இருந்து பெரும் பொருளாதார வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் புதிய திட்டமிடுதல்கள், மனதில் நினைத்த விஷயங்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் தங்களின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும் சர காற்று தத்துவ அமைப்பிலும் வலிமை பெற்று இருப்பது, தங்களின் வெளிவட்டார பழக்க வழக்கத்தை சிறப்பாக அமைத்து தரும், நல்ல மக்கள் செல்வாக்கு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் தங்களின் அறிவு திறன் கொண்டு ஜீவனம் பெரும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியிலான அறிவார்ந்த உதவிகள், அரசியல் செல்வாக்கு , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது தங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.

ராகு திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் சகல விதமான செல்வாக்கினையும் தங்களின் அறிவு சார்ந்த அமைப்பிலும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வெளியூர் வெளிநாட்டில் இருந்து அபரிவிதமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ராகு திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி 8ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது தங்களுக்கு மேலும் நன்மைகளை தரும் அமைப்பாகும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாக அமைவது தங்களின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை வாரி வழங்கும்.

அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ?

எதிர்வரும் குரு திசை தங்களுக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை மிக்க சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது தங்களுக்கு சிறப்பான அம்சமாகும், குறிப்பாக தங்களின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 1பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 2பாகை வரை வியாபித்து நிற்பது, முதலீடுகளில் வரும் அதிக லாபத்தை குறிக்கின்றது, தங்களின் தொழில் ரீதியான முதலீடுகள் மிகுந்த லாபத்தை தரும், தொழில் ரீதியாக மனநிம்மதியும், திருப்திகரமான யோக வாழ்க்கையையும் ஜீவன வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் தொழில் ரீதியான சிறப்புக்களை எதிர்வரும் குரு திசையில் பரிபூர்ணமாக பெறுவீர்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

தங்களின் ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்திகள்.

சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற ஸ்தானம் 5,11ம் பாவகம் ஆகும், 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து தாங்கள் 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பதால் 5,11ம் பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுபயோகங்களை வாரி வழங்கும் இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களுக்கு, சுக்கிரன்,சந்திரன்,ராகு,சனி,புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு பரிபூர்ண சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், மேற்கண்ட கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைபெறும் பொழுது தங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை 100% விகிதம் பெற இயலும் என்பதை " ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்கிறது.

குறிப்பு :

  பெரும்பாலும் மேற்கண்ட ஜாதகம் போன்று ஓர் வலிமையான ஜாதகம் அமைவது அரிதிலும் அரிதானது, ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சிறப்பான சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை உறுதிபட சொல்ல முடியும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லை எனில் ஜாதகர் தனது பழக்க வழக்கங்களிலும், எதிர்பால் இணைசேர்க்கை வழிகளிலும் சுய பரிசோதனை செய்துகொள்வது, யோக பலன்களில் ஏற்பட்ட தடைகளுக்கான மூல காரணத்தை தெரிந்துகொள்ள இயலும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 17 நவம்பர், 2017

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ? கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

  

  சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தனிப்பட்ட முறையில் பலாபலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றவை அல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஓர் கிரகம் அமர்ந்த இடத்தின் பலாபலனை தரும் என்று கருதுவதும் தவறானது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற  நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் சுபயோக பலனை தரும் என்று கருதுவதும் தவறானது, அதைப்போன்றே நீசம்,பகை என்ற நிலையில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் அவயோக பலனை தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறானது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யோக அவயோகங்களை வழங்குகிறது, குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்றாலும் சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கும், அது பாவ கிரகத்தின் ( சூரியன்,செவ்வாய்,சனி,ராகுகேது, தேய்பிறைசந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ) திசாபுத்திகள் என்றாலும் சுபயோக பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும், இவர்களை ஏழரை சனி அஷ்டமசனி, குரு சஞ்சாரம் போன்ற விஷயங்கள் யாதொரு இன்னல்களையும் ஏற்படுத்தாது, சுய ஜாதக வலிமையே மேலோங்கி நிற்கும் என்பதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் நன்மைகளே நடைமுறைக்கு வரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டோ, அல்லது 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின், ஜாதகருக்கு சுபக்கிரகங்களின் ( குரு,சுக்கிரனை,வளர் சந்திரன், புதன் ) திசா புத்திகள் நடைமுறையில் இருப்பினும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்களே நடைமுறைக்கு வரும், என்பதனை கருத்தில் கொள்வது நலம் தரும் அன்பர்களே !

கீழ்கண்ட ஜாதகர் வினவிய கேள்விகளுக்கான பதில்களுடன், மேற்கண்ட கருத்துக்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : துலாம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

6ல் உச்சம் பெற்ற சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

ஜாதகர் தனது ஜாதகத்தில் சுக்கிரன் 6ல் உச்சம் பெற்று அமர்ந்து இருப்பதாக கூறியிருக்கிறார், அடிப்படையில் அதுவே தவறானது ஏனெனில் சுய ஜாதகத்தில் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் ஜாதகருக்கு மீன ராசியில் 347:45:08 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 017:03:59 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது ஜாதகரின் சத்ரு ஸ்தானம் எனும் 6ம் பாவகம் மீனத்தில் 13பாகைகளும், மேஷத்தில் 17 பாகைகளும் கொண்டிருக்கின்றது, சுக்கிர பகவான்  346:42:15 பாகையில் மீன ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே  உண்மை நிலை என்பதால், ஜாதகருக்கு சுக்கிரன் 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியானது, அடுத்து ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்னவென்பதை ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு சுக்கிரன் திசை 6ம் வீடு பாதக ஸ்தானமான  11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், சுக்கிரன் ஜாதகத்தில் மீனத்தில் உள்ள 5ம் பாவகத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருந்தாலும் தனது திசையில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை  சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, பாரம்பரிய முறையில் லக்கினாதிபதி திசை ஜாதகருக்கு நன்மையை தரும் என்று கூறும் விஷயம் எல்லாம் இங்கே எடுபடாது என்பதை கருத்தில் கொள்வது நலம், நவகிரகங்கள் தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான பலாபலன்களில் யாதொரு சமரசமும் செய்துகொள்வது கிடையாது, தரவேண்டிய பலன்களை தங்குதடையின்றி வாரி வழங்கும், அது நன்மையென்றாலும் சரி தீமையென்றாலும் சரி, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை 6ம் பாவக வழியில் இருந்து படுத்தி எடுத்துவிடும், 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12 மற்றும் 1ம் வீடுகளில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு உடல் நலம் சார்ந்த இன்னல்களை கடுமையாக தரும்,  ஜாதகருக்கு தனது உடல் நலனை தானே இன்னலுக்கு ஆளாக்கிக்கொள்வார், இதனால் ஜாதகருக்கு மனஅழுத்தமும், மனப்போராட்டமும் அதிகரிக்கும், இதன் தாக்கம் ஜாதகருக்கு 200% விகிதம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது மேலும் கடன் சார்ந்த தொந்தரவுகள், எதிரிகள் வழியிலான இன்னல்களும் ஜாதகரை படுத்தி எடுக்கும்.

கூட்டு தொழில் செய்வது எனது ஜாதகத்திற்கு பொருத்தமானதா ?

கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் துலாம் ராசி நல்ல வலிமை பெற்று இருந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டு தொழில் செய்வதற்கு ஜாதகருக்கு யோகம் இல்லை என்பதை  தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலும் வியாபித்து நிற்பது ஜாதகரின் கூட்டு தொழில் அம்சத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாகும், ஜாதகருடன் கூட்டு வைப்பவரும் சேர்ந்து நஷ்டமடைவார் என்பதையே இது தெளிவாக காட்டுகிறது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,2,3,5,4,9,10ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் துணிந்து சுய தொழில் செய்வதே நல்லது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகரின் தொழில் வல்லமையை தெளிவாக காட்டுகிறது , மேலும் திறன் மிகுந்த நிர்வாக வல்லமை பெற்றவர் என்பதுடன் பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமையை பெற்றவர் என்பதை மேற்கண்ட பாவகங்களின் வலிமை நிலை உறுதிப்படுத்துகிறது, எனவே  ஜாதகர் சுய தொழில் செய்து நலம் பெறுவதே நல்லது ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை அதற்க்கு சாதகமாக இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

இருப்பினும் சுக்கிரன் திசையில் சூரியன்,செவ்வாய்,குரு,புதன் மற்றும் கேது புத்திகள்  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் அந்த காலகட்டங்களில் ஜாதகர் தனது முயற்சிகளை விருத்தி செய்து சிறப்பான முன்னேற்றங்களை  பரிபூர்ணமாக பெறலாம், எனவே சுய ஜாதகத்தில் பாவக வலிமையின்  தன்மையை தெளிவாக உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில்  நிச்சயம் நாம் மிகப்பெரிய வெற்றிகளை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகம் ஓர் உதாரணம் அன்பர்களே வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696