செவ்வாய், 29 டிசம்பர், 2015

தாமத திருமணமும் சுயஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமை நிலையும்!


“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யபடுகிறது “ என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணம் என்பது ஒவ்வொரு தம்பதியருக்கும், யோகங்களை வாரி வழங்கும் தன்மையில் அமையவேண்டும், எந்த ஒரு ஜாதகருக்கும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சம்பந்தபட்ட ஜாதகரின் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7 ம் பாவக வலிமையே, சரியான வயதில் எவ்வித தங்கு தடையும் இன்றி திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவது சம்பந்தபட்ட ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையிலே என்றால் அது மிகையில், சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சம்பந்தபட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை ( வது, வரன் ) சரியான பருவ வயதில், சரியான நேரத்தில், மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெறும், தாம்பத்திய வாழ்க்கையும் மணமக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே!

சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7 ம் பாவகம் எந்த விதத்திலாவது பாதிக்கப்படும் பொழுது, ஜாதகர் அல்லது ஜாதகியின் திருமண வாழ்க்கை வெகுவாக பாதிக்க படுகிறது, பொருத்தமற்ற வரன்கள் வருவது, திருமணம் தாமதம், திருமணதிற்கு பிறகு இன்னல்கள், தாம்பத்தியத்தில் மனகசப்பு, மன வாழ்க்கையில் பிரிவு என திருமண வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றிவிடும், பொதுவாக களத்திர ஸ்தான வலிமையை பெரும்பாலும் 7ம் பாவகத்தில் அமர்ந்த கிரகம், பார்த்த கிரகம், 7ம் பாவகத்திற்கு அதிபதியான கிரகம், அவர் அமர்ந்த வீடு என நிர்ணயம் செய்வது, களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது அன்பர்களே!

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு அல்லது கேது களத்திர ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு களத்திர தோஷத்தை வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் அபத்தமான விஷயம், களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தபட்ட பாவகத்திற்கு வலிமை பெற்று யோக பலன்களை தருகின்றனர? வலிமை அற்று அவயோக பலன்களை தருகின்றனர? என்று தெளிவு பெற்ற பின்பு ஜாதக பலன் காண முற்படுவதே சரியானதாக அமையும், சாய கிரகங்களுக்கு மட்டும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது கட்டுபாட்டில் கொண்டவரும் வல்லமை உண்டு, மேலும் சம்பந்த பாவகத்திற்கு 1௦௦ சதவிகித வலிமை பெற்று யோக பலன்களையோ, 1௦௦ சதவிகித வலிமை அற்று அவயோக பலன்களையோ தங்கு தடையின்றி வழங்கும் தனிப்பட்ட வலிமை உண்டு.

களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக அறிந்துகொள்ள, 7ம் வீடு தாம் தொடர்பு பெரும் பாவகத்தின் அடிப்படையில் களத்திர ஸ்தான வலிமையை நிர்ணயம் செய்வது மிகவும் துல்லியமாக அமையும், உதாரணமாக 7ம் வீடு 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வலிமை அற்ற நிலையையும், 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் பாவகமும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகமும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகமும் ) சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வழியில் இருந்து  கடுமையான பாதிப்புகளை தரும் என்பதை தெளிவாக உணரலாம், இதை தவிர்த்து வேறு எந்த பாவகத்துடன் 7ம் வீடு தொடர்பு பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு, மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, ஒருவரது சுய ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையில் பலாபலன்களை ஓர் உதாரணா ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே!



லக்கினம் : கடகம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகியின் திருமண தாமதத்திற்கு, ஜாதக ரீதியாக ஜோதிடர்கள் சொன்ன காரணங்கள் :

காரணம் 1) 
களத்திர ஸ்தானத்தில் ராகு, லக்கினத்தில் கேது எனவே கால சர்ப்ப தோஷம், திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

 ஜாதகிக்கு லக்கினம் கடக ராசியில் 109:28:14 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 137:56:07 பாகையில் முடிவடைகிறது, கேது பகவான்  கடக ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் 107:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

 ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

எனவே சுய ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு சாயா கிரகங்களான ராகுகேது காரணம் இல்லை என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

காரணம் 2) 
செவ்வாய் தோஷம், 8ம் பாவகத்தில் செவ்வாய் அமர்ந்து இருப்பது தோஷத்தை தரும் எனவே திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

8ம் பாவகத்தில் அமர்ந்த செவ்வாய் எந்த ஒரு விதத்திலும் களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறவில்லை என்பதாலும், செவ்வாய் தான் அமர்ந்த பாவக அமைப்பில் இருந்து மேஷம் விருச்சிகம் இரண்டு பாவகங்களுக்கும் நன்மை தருவது சிறப்பானதே, எனவே திருமண தாமதத்திற்கு செவ்வாய் காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.

காரணம் 3) 
சனி பகவான் 7ம் வீட்டில் அமர்ந்து இருப்பது, திருமணம் தாமதமாக காரணமாக உள்ளது.

உண்மை நிலை : 

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

காரணம் 4) 
களத்திர ஸ்தானத்தில் 3 பாவ கிரக சேர்க்கை எனவே திருமணம் அமைய தாமதமாகிறது.

உண்மை நிலை :

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பாகையிலும், சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32  பகையிலும், சந்திர பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 270:25:14 பகையிலும் அமர்ந்து இருப்பதால், 3 பாவ கிரக சேர்க்கை 6ம் பாவகத்திலேயே அமைகிறது, எனவே திருமண தாமதத்திற்கு இதுவும் சரியான காரணமல்ல.

திருமண தாமதத்திற்கு உண்மையான காரணம் :

ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷப ராசியில் அமைவதாலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், விரைய ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவத்திற்கு முயற்ச்சி ஸ்தானமாக  அமைவது திருமனத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும்  வாரி  வழங்குகிறது.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 21 டிசம்பர், 2015

தொழில் வெற்றியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையும் !


 சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம், தாம் தொடர்பு பெரும் பாவக வலிமைக்கேற்ப யோகபலன்களை ஜாதகருக்கு வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, உதாரணமாக சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரியான வயதில், அவருக்கு பொருத்தமான தொழில் தொடர்புகளையும், அந்த தொழிலில் நிகரற்ற அனுபவங்களையும் சரியான நேரத்தில் வழங்கிவிடுகிறது.

சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமையற்று காணப்படும் பொழுதே சம்பந்தபட்ட ஜாதகருக்கு ஜீவனத்தை தாராமல், அதிக அளவில் அவதிகொள்ள வைக்கிறது, மேலும் நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த நன்மைகளை தரும், மாறாக ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை ஜாதகருக்கு, முழுமையான யோக பலன்களை தருவதில்லை, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றும் பலனில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.

தொழில் ரீதியான வெற்றிகளை மிக பெரிய அளவில் பெரும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெற்றும், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், கேட்சார கிரகங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் பொழுது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகள் 100% விகிதம் உறுதி செய்யப்படும், ஜாதகர் தாம் மேற்கொள்ளும் தொழில் மூலம் அபரிவிதமான லாபங்களையும், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுகின்றார், இருப்பினும் தொழில் வெற்றிகளை ஜீவன ஸ்தானம் மற்றும் நடைமுறையில் உள்ள திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மட்டுமே நிர்ணயம் செய்வதில்லை என்பதை கவனிக்கதக்க விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தன் முனைப்பையும், சுய முயற்ச்சி மாற்றும் தொழில் ஆர்வத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சி, வணிக விருத்திகளையும், தொழில் முறை தொடர்புகள் மூலம் வரும் வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழிலில் புதிய யுக்திகளையும், வியாபர தந்திரங்களையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் பரிபூரண ஆதரவையும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் தொழில் இடர்பாடுகளை மிக எளிதாக கையாளும் தன்மையையும், நிர்வாக திறமையையும், எவ்வித சூழ்நிலையையும் மிக எளிதாக கையாளும் தன்மையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் முற்போக்கு சிந்தனையையும், தொழில் ரீதியாக பெரும் யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையும், தன்னம்பிக்கை குறையாத மன ஆற்றலையும், பன்முக தொழில் திறன் மூலம் தாம் செய்யும் தொழில் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.

ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே :


லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கதக்க அம்சம், மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான, கடக ராசியில் அமைவது ஜாதகி ஜீவன ரீதியாக பெரும் விரைவான வெற்றிகளை குறிக்கிறது, கடகம் சர இயக்கம் கொண்ட நீர் தத்துவ ராசியாக இருப்பது ஜாதகி பெறும் அதிர்ஷ்டம் மற்றும் யோகங்களின் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகி மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து பெறுவார் என்பது உறுதியாகிறது.

தற்பொழுது ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை ( 07/12/2012 முதல் 08/12/2030 வரை ) ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகியின் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு உண்டான சரியான கால நேரம் இதுவே என்பதும் தெளிவாகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது, ஜீவன ரீதியாக திடீர் வெற்றிகளையும், செய்யும் தொழில் வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது ( 8ம் வீடு வலிமை பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தையும், 8ம் வீடு வலிமை இழப்பது திடீர் இழப்புகளையும் தரும் ) 8ம் வீடு ஸ்திர ராசியிலும், 10ம் வீடு சர ராசியில் அமைவது ஜாதகிக்கு ஸ்திரமான தொழில் வாய்ப்பையும், விரைவான தொழில் முன்னேற்றத்தையும், அதிக லாபத்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சம் அன்பர்களே !

ஆனால் ஜாதகிக்கு ராகு திசை துவங்கி 3 வருடங்களுக்கு மேல் கடந்து சென்றாலும், ஜீவன வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்கவில்லை, பொருளாதார முன்னேற்றங்களையும் சந்திக்க வில்லை, இதற்க்கு காரணம் ஜாதகி தனது ஜாதகத்தில் உள்ள ஜீவன வலிமையையும், தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனின் தன்மையையும் உணராமல் இருப்பதே, ( ஜோதிடர் ஒருவரின் கூற்றுப்படி ராகு திசை தீமையை தரும் என்ற எண்ணத்தில் தனது சுய ஜாதக வலிமையை உணரவில்லை ) இனி ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று  இருந்தும், நடைபெறும்  ராகு திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்த போதிலும், ஜீவன ரீதியான வெற்றிகளை பெற இயலாமல் இருப்பதற்கு உண்டான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

3,6,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகி சுய முயற்ச்சி அற்றவர் என்பதும், 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் தன்மையும், வீண் மன பயத்தையும், 9ம் பாவக வழியில் இருந்து நிர்வாக திறமையின்மையையும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் இல்லாத தன்மையும், பிற்போக்கு எண்ணங்களும், தன்னம்பிக்கை அற்றவர் என்பதையும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் மன கற்பனைகளையும், அதிக மன போராட்டங்களையும் கொண்டவர் என்பதும், சரியான தீர்கமான முடிவுகளை எடுக்க இயலாத சூழ்நிலையில் உள்ளவர் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

எனவே ஜாதகி தனது சுய ஜாதக பாவக வலிமையை உணர்வது மிக மிக அவசியம், மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை தரும் ஜீவன ஸ்தான யோக பலன்களை சுவீகரிக்க தேவையான நடவடிக்கையில், தாமாகவே சுய முனைப்புடன் ஈடுபடுவது மிகுந்த யோகத்தை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும் என்ற உண்மையை உணர்வது அவசியம், இல்லை எனில் ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதை வீணடிப்பதற்கு ஒப்பான நிலையை ஜாதகிக்கு வரும் எதிர்காலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 19 டிசம்பர், 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களையும், அளவில்லா இன்னல்களை சந்திக்கும் ஜாதக நிலை !


கேள்வி :

தசவித பொருத்தங்கள் கண்டு, உறவுகள் பேசி  முடிவு செய்து, நல்ல நேரம் பார்த்து  திருமணம் செய்தும், இல்லறவாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை வர காரணம் என்ன? ஆணோ பெண்ணோ தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவில்லா இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலை ஏன் வருகிறது?  "திருமணம் ஆயிரம் காலத்து பயிர்" என்று சொல்லும் வார்த்தையை பொய்யாக்கும் தாம்பத்திய நிலை வர காரணம் யாது? திருமணத்திற்கு பிறகு பிரிவு வரும் என்பதை  ஜோதிட கணிதம் ஜோதிடர்களுக்கு உணர்த்தவில்லை, உணர்த்தியதை ஜோதிடர்கள் சொல்லவில்லையா ? எமது ஜாதகம் மற்றும் எமது இல்லத்தரசி ஜாதகத்தில் உள்ள உண்மையான நிலை, இல்லற இன்னல்களுக்கு காரணம் அறிய விளைகிறேன் ?

பதில் :

 அன்பரே தம்பதியரான தங்களது இருவரின் ஜாதகங்களை கொண்டு, தங்களின் கேள்விக்கு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமை பெற்றுள்ளது, பொதுவாக திருமண பொருத்தங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு முக்கியதுவம் தாராமல், 1) நட்சத்திர பொருத்தம் பத்து  2) ராகு  கேது 3) செவ்வாய் தோஷம் 4) 7ல் பாவக கிரகம் 5) 2ல் பாவக கிரகம் 6) 5ல் ராகு 7) கால சர்ப்ப தோஷம் 8) களத்திர தோஷம் 9) ஏக திசை பொருத்தம் 10) திசாசந்திப்பு 11) புத்திர தோஷம் என வகைக்கு 10 தோஷங்களை வாயில்  வந்ததை  சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமில்லை  எனவும், பொருத்தமற்ற ஜாதகங்களை சிறப்பான பொருத்தம் உண்டு என்று அறிவித்தும், திருமண வாழ்க்கையில் ஆண்மகனையும் பெண்  மகளையும் இணைப்பதாலே, இல்லற வாழ்க்கையில் இன்னல்களும்  துன்பங்களும் ஏற்ப்படுகிறது .

திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின்  வலிமையை நன்கு உணர்ந்து வதுவையும், வரனையும் இணைத்தால்  அவர்களின்  வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், மாறாக  மேற்கூறிய காரணங்களை முன்வைத்து இல்லற வாழ்க்கையில் வதுவையும்  வரனையும் இணைத்தால், தங்களின் கேள்வியில் உள்ள சூழ்நிலையே "தம்பதியரை"  வெகுவாக பாதித்து, திருமண வாழ்க்கையில் துன்பம் எனும்  சூழ்நிலைக்கும், பிரிவு எனும் மிகப்பெரிய இன்னலுக்கு ஆட்படுத்தும்,
தங்களின் ஜாதகங்களை இனி  ஆய்வு செய்வோம் அன்பரே!

தங்களின் ஜாதக நிலை 


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரீடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,7,11ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மையையும் யோகத்தையும் களத்திர வழியில் இருந்து தரும்  அமைப்பாக கருதலாம்.

2,4,8,10ம் வீடுகள் உடல் உயிராகிய லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து தாங்கள் அனுபவிக்கும் யோக பலன்களை உறுதி செய்யும்.

3,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாக்கியங்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பூர்வபுண்ணிய வழியில் இருந்தும் தங்களின் வாரிசுகள் வழியில் இருந்தும், சுய அறிவு மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தாலும் தாங்கள் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

எனவே தங்களது ஜாதகத்தில் 11பாவகங்கள் மிகவும் வலிமை உடையதாக அமைகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தங்களுக்கு வீண் விரையங்களையும், அதிக மனக்கவலை மற்றும் மனபோராட்டத்திர்க்கு ஆளாக்கும்.


தங்களின் வாழ்க்கை துணையின் ( மனைவியின் ) ஜாதக நிலை 


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

தங்களது மனைவியின் ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெருவது மேற்கண்ட பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகிக்கு வீண் மன கவலைகளையும், அதிக அளவு துன்பங்களையும் தரும், மேற்கண்ட பாவகத்தை சார்ந்த உறவுகளும் ஜாதகியால் சொல்ல இயலாத துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது,   ஜாதகியை குடும்ப வாழ்க்கையிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து தாமும், தமது கணவரும் இன்னலுறும் அமைப்பை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணைக்கு நித்தியகண்டம் பூரண ஆயுசு என்ற சூழ்நிலை உருவாக்க கூடும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 5ம் பாவக வழியில் இருந்து குழந்தை  பாக்கியத்தில் குறைகளையும் , போதிய அறிவு  நுணுக்கமும் புத்திசாலித்தனமும் அற்றவர் என்பதை உறுதி செய்கிறது. 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்றவர் என்பதும் தமக்கு வரும் நன்மைகளை உதறி எறிபவர் என்பதும், மூட நம்பிக்கைக்கு முக்கிய துவமும்,  பிற்போக்குத்தனமான செய்கையினால் அனைவராலும் வெறுக்கப்படும் நபராக இருப்பார் என்பதும் உறுதியாகிறது. ( பெண்களின் ஜாதகத்தில் எந்த ஒரு  பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல) தன்னைபற்றிய வீண் கற்பனைகளுடன், மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன் மற்றவர்கள் அனைவரையும் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொள்வார் என்பது கவனிக்க தக்கது.


4,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது,  கல்வியில் ஓரளவு தேர்ச்சியும், சிறிதளவு நல்ல குணத்தையும் தரும், ஜாதகி செய்யும் செயல்களால் ஜாதகியின் நற்பெயருக்கு களங்கம் விளையலாம், நல்ல மனிதர்களையும் தன்னைவிட வயதில் அதிகமுள்ள பெரியோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது நல்லது, பெரியோர்களின் அறிவுரைப்படி நடப்பதால் வாழ்க்கையில் நலம் உண்டாகும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமக்கு அமையும் வாழ்க்கையை தக்கவைத்துகொள்வது நல்லது, வாழ்க்கை  துணையுடன் அனுசரித்து செல்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், வீண் பிடிவாதம் முரண்பட்ட செயல்கள், அறிமுகம் அற்ற நபர்களின் சகவாசம் படுகுழியில் ஜாதகியை தள்ளிவிடும், ஜீவானத்தை அதிகரித்துக்கொள்ள நல்ல வேலை அமையும் என்றபோதிலும் ஜாதகியின்  செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 22/11/2007 முதல் 22/11/2023 வரை )  12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  பலனை  தருகிறது, தங்களின் 12ம்  பாவகம் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறது,  மேலும் 12ம் வீடு சர காற்று தத்துவத்தில் அமைவதால், வாழ்க்கை துணையின் செயல்களால் தங்களின் அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், தற்பொழுது  நடைபெறும்  திசையும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 12ம் பாவகமும் தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தர இயலாத சூழ்நிலைக்கு காரணமாக  அமைந்துவிட்டது.

தங்களின் வாழ்க்கை துணைக்கு நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களின் வாழ்க்கை துணைக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 08/11/2013 முதல் 08/11/2033 வரை ) 1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 2,ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 1,2,3,7 பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் நடத்துகிறது, மேலும் தங்களின் ஜாதக வலிமையின் காரணமாகவே தங்களது இல்லத்துஅரசி ஜீவிக்கும் சூழ்நிலையில் இருப்பது கண்கூடான உண்மை, இதை தங்களின் இல்லத்துஅரசி  உணர்ந்துகொண்டு, வாழ்வதற்கு உண்டான வாய்ப்பு  சிறிதும் இல்லை  என்பதே வருத்தத்திற்கு உரியது.

சிலரது யோக ஜாதகங்கள் கூட இதுபோன்ற பொருத்தமில்லா சேர்க்கையின் காரணமாக "குடத்தில் இட்ட விளக்குபோல" எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் தவிப்பது கண்கூடான உண்மை, இந்த உண்மையை தங்களின் மனைவிக்கு யார் சொல்லி புரிய வைப்பது, 
"இறை அருளுக்கே வெளிச்சம்"

ஓவொரு ஆணும்  பெண்ணும் திருமணத்திற்கு பிறகு , தனது ஜாதக வலிமை உணர்ந்து தனது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை தேர்ந்தேடுக்கவிட்டால், கால நேரம் காத்திருக்காமல் தனது கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்று விடும் என்பதை, தம்பதியர் அனைவரும் உணர்வது அவசியமாகிறது. 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 16 டிசம்பர், 2015

கேது மஹா திசை சுய ஜாதகத்தில் நடைபெற்றால் கெடுதல் உண்டாகுமா ?



"கேதுபோல் கெடுப்பவரும் இல்லை ராகுபோல் கொடுப்பவரும் இல்லை" என்பது வசனநடைக்கு பொருந்துமோ தவிர, ஒருவரின் சுய ஜாதகத்தில் தனது திசையில் மேற்கண்ட பலனை தரும் என்று நினைப்பது முற்றிலும், ஜோதிட கணிதம் அறியாத அன்பர்கள் சொல்லும் வாய்மொழியாகவே இருக்கும், பொதுவாக ஒருவருக்கு நடைபெறும் திசை குரு,சந்திரன்(வளர்பிறை),புதன்,சுக்கிரன் போன்ற கிரகங்களின் திசையாக இருப்பின் யோக பலன்களை நன்மையையும் தரும் என்று கணிப்பதும், சூரியன்,சனி,செவ்வாய்,சந்திரன்(தேய்பிறை),ராகு,கேது போன்ற கிரகங்களின் திசையாக இருப்பின் அவயோக பலன்களையும், தீமையையும் தரும் என்று கணிப்பது கற்பனைக்கு உகந்தாக அமையுமோ தவிர, உண்மையான ஜோதிட கணிதமாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது, இதில் நவகிரகங்களுக்கு  தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் தன்மையை ஏற்றுநடத்தும் பொறுப்பு மட்டுமே உள்ளது, இத்துடன் அன்றைய கோட்சார பலன்களுக்கு ஏற்றவாறு யோக அவயோக பலன்களின் தன்மை மாறுபடும் என்ற போதிலும் பாவக வலிமையின் பலாபலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும், தங்களின் கேள்வி கேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா? என்பதாக உள்ளதால், தற்பொழுது நடைமுறையில் கேது திசை தரும் பலாபலன்களை அனுபவித்து கொண்டு இருக்கும் நமது நண்பரின் சுய ஜாதகத்தை இந்த  பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பரே !


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம்  
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே நவகிரகங்கள் தனது திசையில் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதற்கு சரியான உதாரணம் மேற்கண்ட நமது நண்பரின் ஜாதகமே மிகவும் சரியாக பொருந்தும், தற்பொழுது 31/10/2013 முதல் 30/10/2020 வரை கேது திசை நடைமுறையில் உள்ளது கவனிக்க தக்கது, எனவே அன்பரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தற்பொழுது நடைமுறையில் உள்ள கேது திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்களை இனி ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3ம் வீடுகள் தைரியம் வீரியம் மற்றும் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.( ஜாதகரின் 3ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாபஸ்தனமாக அமைவது அதிர்ஷ்டத்தின் தன்மையை காட்டுகிறது)

2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 5ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லக்கினமாக அமைவது, ஜாதகர் செய்த புண்ணியத்தின் தன்மையையும், ஜாதகரின் கல்வி அறிவையும், சமயோசித புத்திசாலிதனத்தையும், சுய கட்டுபாடு  மற்றும் ஜாதகரின் அறிவு திறனின் வேகத்தையும் காட்டுகிறது )

4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 9ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைவது ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தையும், இறை அருள் ஜாதகருக்கு வாரி வழங்கும் அறிவு திறனையும், அதிபுத்திசாலிதனத்தையும் பெரிய மனிதர்களின் ஆதரவையும், நல்லோர் ஆசியையும் பரிபூர்ண ஆன்மீக வெற்றியையும் பறைசாற்றுகிறது.)
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 10ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக அமைவது, எதிரிகளை வெல்லும் மார்க்கத்தையும், குறைவான முதலீட்டில் மிகப்பெரிய லாபங்களை தொடர்ந்து வழங்கும் தன்மையை தருகிறது, மேலும் கன்னி உபய மண் தத்துவம் என்பதால் விவசாய விதை பொருட்கள் மற்றும் உணவு சார்ந்த பொருட்களை வியாபாரம் ( வியாபாரம் 7ம் பாவகத்தை குறிக்கும் ) செய்யும் யோகத்தை தந்தது.)

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கை துணையையும், சிறந்த நண்பர்களையும், சக்தி வாய்ந்த பலமிக்க தொழில் முறை கூட்டாளிகளை அமைத்து தந்தது, வாழ்க்கையின் முன்னேற்றங்கள் என்பது ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு மிகவும் அபரிவிதமாக அமைந்தது.

ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி வலிமை அற்ற பாவகங்கள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது, நீண்ட ஆயுளை தந்து, ஜாதகருக்கு சுக போக பாக்கியங்கள் அனைத்தும் இருந்தாலும், ஜாதகர் அவற்றை முழுமனதாக அனுபவிக்காமல் தாமரை இலை நீர் போல் வாழும்  சூழ்நிலையை தந்தது, ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகரித்தது, எதிர்பாராத பொருள் இழப்பால் மனம் மிகவும் வேதனையை அனுபவிக்கும் தன்மை உண்டானது )

9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 12ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் மனம் நிலையற்ற தன்மையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகர்  சமூகத்தில் விமர்சனங்களை சந்தித்து வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் யோகத்தை தந்தபோதிலும், அதிக மன உளைச்சலுக்கும் மன போராட்டத்திற்கும் ஆளாக்கியது.)

மேற்கண்ட அமைப்பில் ஜாதகர் தனது பாவக வலிமை,வலிமை அற்ற நிலையில் இருந்து பொது பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது, இனிவரும் காலங்களில் தரும், இதில் ஜாதகருக்கு 8,9ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு 100% விகித உறுதியை வழங்குகிறது.

இனி கேள்விக்கு வருவோம் கேது திசை கெடுக்குமா ?

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் தைரியம் வீரியம் மற்றும் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, வலிமை பெற்ற மூன்றாம் பாவக வழியில் இருந்து  செல்வ செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல உடல் மற்றும் மன நிலை, சிறந்த சிந்தனை அறிவு, பகுத்தறியும் சிறப்பாற்றல், உண்மை மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் குணம், தன்னிறைவான வியாபர விருத்தி, ஏஜென்சி துறையில் அபரிவிதமான லாபம், பயணங்கள்  மூலம் வெற்றி வாய்புகள் வந்து குவியும் யோகம், புதியவைகளை கற்றுகொள்ளும் யோகம், புதிய மாற்றங்கள் மூலம் வாழ்க்கையில் சிறப்பு, புதிய சூழ்நிலைகள் மூலம் புத்துணர்வு என்ற வகையில் யோகத்தை தரும்.

ஜாதகரின் 3ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாபஸ்தனமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவ ராசியில் அமைவதாலும் ஜாதகரின் வெற்றிகள் யாவும் ஸ்திரமாகவும், நிலைதன்மையுடன்  நிலைத்து நிற்கும், ஜாதகர் பெரும் வெற்றிகள் யாவும் தனது அறிவு திறன் மூலமாகவும், சமயோசித புத்திசாலிதனத்தாலும் விருத்தியடையும் என்பது கவனிக்க தக்க அம்சம், மேலும் புதிய சொத்துகள், வண்டி வாகனம் மற்றும் புதிய நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் மிகுந்த லாபம் பெரும் யோகம் உண்டாகும், ஆக கேது  திசை  ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குவது உறுதியாகிறது.

எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் கேது மட்டுமல்ல நவ கிரகங்கள் அனைத்தும் சம்பந்தபட்ட ஜாதகரின் பாவக பலனை ( வலிமை, வலிமை அற்ற ) ஏற்று நடத்துமே தவிர, குத்துமதிப்பாக கேது கெடுதல் செய்யும் சுக்கிரன் நன்மை  செய்யும் என்று கணிப்பது ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட கற்பனை கலந்த கட்டுகதையாகவே இருக்கும் என "ஜோதிடதீபம்" கருதுகிறது.

எனவே ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட கற்பனை கதைகளை நம்பி, எந்த ஒரு ஜாதகரும் செயல்படாமல், மிகவும் விழிப்புணர்வுடன் தனது சுய ஜாதக பாவக வலிமை உணர்ந்து வாழ்க்கை மேன்மை மற்றும் முன்னேற்றங்களை பெற "ஜோதிடதீபம்" ஆலோசனை வழங்குகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 12 டிசம்பர், 2015

ராகு திசை ( நடைமுறையில் உள்ள ) எனக்கு நன்மையை தருமா ? தீமையான பலன்களை தருமா ?


பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்தின் திசையும் தான் ஏற்று நடத்தும் பாவக பலனை தங்குதடையின்றி வாரி வழங்கும், இதன் அடிப்படையில் தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் தங்களுக்கு தனது திசையில் தரும் பலாபலன்களை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே! 


5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு என்றவுடனே தங்களுக்கு ஒரு ஐயம் ஏற்படலாம், சுய ஜாதகப்படி மேஷ ராசியில் தானே ராகு அமர்ந்து இருக்கிறார், இது எப்படி 5ல் ராகு அமர்ந்தாக ஆகும் என்ற கேள்வி தங்களுக்குள் ஏற்ப்படுவது இயல்பே, அடிப்படியில் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் மீன ராசியில் 351:21:13 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 20:34:02 பாகையில் முடிவடைகிறது, இந்த 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட  11:16:13 பாகையில்  ( மேஷ ராசியில் ) ராகு பகவான் அமர்ந்து இருப்பதை கவனித்தால்,  ராகு பகவான் தங்களின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தனது திசை 18 வருட காலங்களில் தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பரே !

தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 11ம் வீடு, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமாகி  11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க்கதக்க அம்சமாக கருதலாம், 11ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை , நேர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையை யோகமனதாக மற்றும் வல்லமை, அனைவராலும் லாபம் மற்றும் ஆதரவு கிடைக்க பெறுதல், எடுக்கும் காரியங்களில் வெற்றி, எதிர்பாராத உதவிகள், திடீர் முன்னேற்றங்கள், அதிர்ஷ்டகரமாக நிகழும் நிகழ்வுகள், பன்முக திறன்கள் மூலம் வாழ்க்கையை மிகவும் எளிமையாக நடத்தும் வல்லமை, அதிர்ஷ்டத்தின் பரிபூரணதுவத்தை அனுபவிக்கும் நிலையை தரும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 8 பாகைகளும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய மண் தத்துவத்தில் இருந்தும், சர காற்று தத்துவத்தில் இருந்தும் லாப ஸ்தான பலன்களை வாரி வழங்கும், தங்களின் அறிவு சார்ந்த செயல்பாடுகள் மக்களிடம் சென்றடையும், மக்கள் செல்வாக்கு உண்டாகும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் தங்கு தடையின்றி கிடைக்க பெறுவீர்கள்.

பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், வியாபாரத்திலும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  பொதுமக்கள் வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்தும் கிடைக்க பெறுவீர்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், தேடுதல் தங்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தரும், அதிக அளவில் தங்களின் 11ம் பாவகம் துலாம் ராசியிலேயே வியாபித்து இருப்பதால், அறிவு சார்ந்த தொழில்களும் நிர்வாக திறமையும் தங்களுக்கு எதிர்பாத வெற்றிகரமான யோக வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டங்களையும் ஆதரவுகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் அனுபவிக்க கூடும், சிறந்த கூட்டாளிகள் நல்ல நண்பர்கள் தங்களுக்கு வெகுவாக தாமாகவே முன்வந்து உதவுவார்கள், கேட்க்கும் இடங்களில் இருந்து நல்ல பதில் கிடைக்கு சிறப்பான உதவிகளும் தேடிவரும், தங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களின் சாமர்த்தியத்திலும் புத்திசாலிதனத்திலும் உள்ளது என்பதால், அதிக விழிப்புணர்வு இனிவரும் காலங்களின் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும்.

தங்களுக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை லாப ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால் மிகுந்த நன்மைகளையும் யோக பலன்களையும் தங்குதடையின்றி வாரி வழங்கும் 

 வாழ்த்துகள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :

1) கூட்டு முயற்ச்சியில் எச்சரிக்கை தேவை 
2) தாம் மேற்கொள்ளும் முயற்ச்சியில் எந்த காரணத்தை கொண்டும் பின்வாங்குவது நல்லதல்ல.
3) பல முறை சிந்தனை செய்து ஒரு காரியத்தில் இறங்கவும்.
4) வீண் மன கவலையும், மன போராட்டத்தையும் தாங்கள் தவிர்ப்பது நல்லது, 1,9ம் வீடுகள் பாதிப்பதால் உடல் மன நலத்தில் அதிக அக்கறை கொள்வது சிறப்பான யோகத்தை தரும்.
5) வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடு, வியாபர ஸ்தலங்கள் தங்களுக்கு அபரிவிதமான யோகத்தை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஜாதக ஆலோசனை, சுய ஜாதக ரீதியாக திருமணம் மற்றும் யோக வாழ்க்கை உண்டா ?


வணக்கம்...

ஜோதிடதீபம் ஆசிரியர் அவர்களூக்கு.  K.சக்திவேல் எழுதுவது
எனது ஜாதகம் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.
13/12/1970(2.03am) dharapuram
இதுவரை எதுவும் உருப்படவில்லை !!!
இதுவரை திருமணம்இல்லை (அந்த ஐடியாவும் இல்லை)
ஆடும்வரைஆட்டம்,ஆயிரத்தில்நாட்டம்.எனவாழ்ந்துவிட்டேன்!!!
வாழாவெட்டியாகவும் & வெட்டியாவாழாமழும்  (நடைபிணம்போல் இருக்கிறேன்)
என் ஜாதகம்பார்த்து ஏதாவது தேருவேணா? அல்லது வீணாய்போகும் வாழ்க்கையா எனபார்க்கவும்.



அன்பு நண்பரே,

 ஒரு மனிதருக்கு சில குறைகளை இறை "அருள்" தந்தபோதிலும், அந்த குறைகளை களைந்து வாழ்க்கையில் நன்மைகளை அடைய சில நல்ல வழிகளையும் வைத்திருக்கும், தங்களது ஜாதகத்தில் பாவக தொடர்பு அமைப்புகளை ஆய்வு செய்வோம்.

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் பாதக ஸ்தான வழியில் இருந்தும், 12ம் பாவக வழியில் இருந்தும் அதிக அளவில் இன்னல்களை தரும், இதில் பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து 35% விகித இன்னல்களையும் தாங்கள் அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே மேற்கண்ட பாவக தொடர்புகளே தங்களது வாழ்க்கையில் இன்னல்கள் தரும் அமைப்பாக கருதலாம்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் தங்களது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக கருதலாம், உதாரணமாக தங்களது 3ம் பாவகம் விருச்சிக ராசியிலும்,தனுசு ராசியிலும் வியாபித்திருப்பது மிகுந்த நன்மைகளை தரும், மேலும் தரகு தொழில், கமிஷன் வியாபாரம், ஏஜென்சி துறையில் நல்ல வருமானத்தை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு 5ம் பாவகம் கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் ராசியில் வியாபித்து இருப்பது, ஜாதகர் தனது புத்திகூர்மையாலும், சமயோசித புத்திசாலிதனத்தாலும் ஜீவனம் மற்றும் லாபங்களை பெரும் யோகத்தை தரும், எனவே தனது அறிவு திறனின் அடிப்படையில் ஜீவனத்தை தேடுவது சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் அணுகும் எந்த ஒரு காரியமும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், அறிவு சார்ந்த முயற்ச்சிகள் ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கும்.

9,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுகம் மற்றும் பூர்வபுண்ணிய வீடுகளான கடகம் மற்றும் சிம்மத்தில் வியாபித்து இருப்பது சுக போக வண்டி வாகன யோகத்தையும், ஆன்மீக வழியில் வெற்றியையும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாததினால் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும் அதிர்ஷ்டகரமாக பெரும் யோகத்தை வாரி வழங்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை மிகவும் சிறப்பாக தரும், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நன்மையான பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தரும்.

சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதே தங்களுக்கு அதிக அளவில் இன்னல்தரும் அமைப்பாக கருதலாம், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரே தனது வாழ்க்கையை பாதிப்பிற்கு உள்ளாக்கும் தன்மையை தரும், ஜாதகர் உடல் மனம் உயிர் ஆகியவற்றை சிறப்பாக பராமரிக்கவில்லை எனில், ஜாதகர் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தனது உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும் செயல்களில் ஜாதகர் ஈடுபடாமல் இருப்பதே ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், ஜாதகரின் முயற்ச்சி இன்மையும், அறிவு திறனில் சிந்தனை ஆற்றல் குறையும் பொழுது ஜாதகரின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கும், எனவே சிறந்த ஆன்மீக பெரியோரிடம் தீட்சை பெறுவதும், மனதையும் உடலையும் பேணிகாப்பது ஜாதகரின் நலவழ்விற்கு சரியான பாதையை அமைத்து தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, எதிர்பால் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வழங்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது, 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகப்பெரிய இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தர கூடும், மேலும் தேவையில்லாத பிரச்சனைகள் மூலம் மற்றவர்களால் மனநிம்மதியும், மன போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாக கூடும், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் தங்களுக்கு சிறப்பான நன்மைகள் நிச்சயம் நடை பெரும், மாறாக வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் இன்னல்களின் சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

தற்பொழுது நடைபெறும் சனி திசை தங்களுக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும்,
2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை நடத்துவதால் பாதக ஸ்தான வழியில் இருந்து அதிக இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும் என்பதால் 7ம் பாவக வழியில் இருந்தும், 12ம் பாவக வழியில் இருந்தும் தங்களை தற்காத்து கொள்வது நல்லது, மேலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக எச்சரிக்கையுடன் சில விஷயங்களை கையாள்வது சிறந்த நன்மைகளை தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து முயற்ச்சிகளையும் செயல்பாடுகளையும் செய்வது நன்மையையும் யோகத்தையும் தரும்.

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அதிக எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களையும் கையாள்வது, தங்களுக்கு சிரமங்களை வெகுவாக குறைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடு வலிமை பெறுவது தாமத இல்லற வாழ்க்கையை அமைத்து தரும், எதிர்பார்ப்புகள் இல்லாத இல்லற துணையை தேடிகொள்வது சிறப்பு, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கக் பட்டு இருப்பதால் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்து வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வது தங்களின் ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள கேது புத்தி தங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை தேடிக்கொள்ள ஏற்ற யோக காலம் இதுவே என்றால் அது மிகையல்ல.

தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான முயற்சிகளில் இனி தாங்கள் முழு மூச்சாக இறங்குவது சிறப்பான யோகத்தையும் நன்மையையும் பெற்றுத்தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாயா கிரகங்களான ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அமர்ந்தால் யோகமா ? தோஷமா ?


ஐயா .

கவிபாரதி  03.07.2014 ( 2.35AM ) salem
 
இது என் மகள் ஜாதகம். அனைத்து கிரகங்களும் கேது, ராகுவுக்கு  நடுவில் உள்ளது இது யோக பலன்களை வழங்குமா சார் ?எனது மகளின் எதிர் காலம் எப்படி இருக்கும்? தொந்தரவுக்கு மன்னிக்கவும்


தங்களது மகளின் சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது, சனி பகவனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சாய கிரகங்கள் என்று அழைக்கப்படும் கேது ராகுக்கு மத்தியில் அமர்ந்து உள்ளது என்பதை வைத்து, தங்களது மகளின் ஜாதக பலனையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயம் செய்ய இயலாது அன்பரே! ( உண்மையில் தங்களது மகளின் ஜாதகத்தில் கேது வலிமை பெற்று 12ம் பாவகத்திலும், ராகு வலிமை அற்று 6ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது கவனிக்க தக்கது )

அவரது சுய ஜாதக அமைப்பின் படி 12 பாவகங்களின் வலிமை நிலையையும், தற்பொழுது மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் துல்லியமாக தெரிந்தால் மட்டுமே சரியான பலனை கூற இயலும், எனவே தங்களது மகளின் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் வலிமை பெற்று இருக்கும் பாவகங்கள் எவை எவை ? சுய ஜாதகத்தில் பதிப்பான நிலையில் வலிமை அற்று இருக்கும் பாவகங்கள் எவை எவை ? நடைபெறும், எதிர்வரும்  திசா புத்திகள் எந்த எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது என்பதை துல்லியமாக ஆய்வு செய்து இனி பலன் காண்போம் அன்பரே!

தங்களது மகளின் ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கும் பாவகங்கள் :

1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு,
7ம் வீடு லக்கின ஸ்தானமான 1ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு, பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் ஆகும்.

ஜாதகத்தில் வலிமை அற்று  இருக்கும் பாவகங்கள் :

2,5,6,8,11,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் ஆகும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை (03/07/2014 முதல் 13/01/2028 வரை ) தங்களது மகளுக்கு 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலனை தருவதும் 7ம் பாவகம் துலாம் ராசியில் 2 பாகையும், விருச்சிக ராசியில் 25 பாகையும் கொண்டு இருப்பதால், இனிமையான குழந்தை பருவத்தை பெறுவார் என்பதும் திடீர் அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் பெற்றவர் என்பதும், பொதுமக்கள் வழியில் இருந்தும் நண்பர்கள் வழியில் இருந்தும் நன்மைகளை பெறுவார் என்பதும் உறுதியாகிறது, இந்த சுக்கிரன் திசை முடிவு பெரும் வரையிலும் ஜாதகிக்கு உடல் நலமும், மன ஆரோக்கியமும் சிறந்து விளங்கும், கல்வி காலங்களில் சிறந்த மாணவியாக திகழ்வார், அனைவரையும் மிக எளிதாக வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும், ஜாதகி வளரும் இடம் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்ததாக விளங்கும் என்பதை கவனத்தில் கொள்க.

சுய ஜாதகத்தில் 2,5,6,8,11,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்தும், மேற்கண்ட பாவக வழியில் இருந்தும் சிறு சிறு இன்னல்களை தரக்கூடும் என்பதால், சரியான பரிகாரங்களை தேடிகொள்வது ஜாதகிக்கு எதிர்காலத்தில் நலம் தரும், மேலும் ஜாதக ரீதியான முழுமையான பலன்களுக்கு முறையான ஆலோசனை நேரில் பெற்று கொள்ளவும்.

சுய ஜாதகத்தில் ராகு வலிமை பெற்று அமர்ந்த போதிலும் தனது திசா புத்தியில் இன்னல்களையும் 12ம் பாவக பலனையும்.

கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்த போதிலும் தனது திசா புத்திகளில்  நன்மைகளையும் 4ம் பாவக பலனையும் நடத்துவது சாயா கிரகங்கள் ரீதியான கவனிக்க தக்க அம்சம்.

ராகுவின் அமைப்பில் இருந்து ஜாதகி மன நிம்மதியையும், கேதுவின் அமைப்பில் இருந்து ஜாதகி உடல் நலத்தில் இன்னல்களையும் சந்திக்கும் தன்மையை தர கூடும், இருப்பினும் நடைபெறும் திசை சிறப்பாக இருப்பதால் எவ்வித பயமும் கொள்ள தேவையில்லை என்பது தங்களது மகளின் ஜாதக யோக நிலை, மேலும் விபரங்களுக்கு நேரில் அணுகவும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் யோகபலன்களை வாரி வழங்குமா?


தங்களின் கேள்விக்கு ஜோதிட அன்பர்களின் கருத்து பெரும்பாலும் யோக பலன்களை வாரி வழங்கும் என்பதாகேவே இருக்கும், இந்த கேள்வி தங்களின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தே கேட்கபட்டதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, எனவே தங்களின் ஜாதகத்தையே உதாரணமாக கொண்டு விளக்கம் தருகிறோம் அன்பரே !

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று ( ராசி அல்லது அம்சம் ) அமர்ந்து இருந்தால் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள் யோக பலன்களை வாரி வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் தவறு என்றே கருதுகிறோம், பொதுவாக ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகை இல்லை, உதாரணமாக தங்களது ஜாதகத்தையே ஆய்வு செய்வோம் அன்பரே!



லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி அமைப்பில், சந்திரன் சனி  ஆட்சி பெற்றும், சுக்கிரன் ராகு  உச்சம் பெற்றும், சூரியன் செவ்வாய் பகை பெற்றும், குரு நட்பு நிலையிலும், புதன் சம நிலையிலும், கேது நீசம் பெற்றும் அமர்ந்து இருக்கின்றனர்.

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் நவாம்ச நிலையில், புதன் ஆட்சி பெற்றும், சூரியன் சனி உச்சம் பெற்றும், குரு ராகு கேது பகை பெற்றும், சந்திரன் சம நிலையிலும், செவ்வாய் சுக்கிரன் நட்பு நிலையிலும் அமர்ந்து இருக்கின்றனர்.

தாங்கள் பிறந்த பொழுது நடந்தது புதன் திசை, இந்த புதன் தங்களது சுய ஜாதகத்தில் ராசியில் சம நிலையிலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்றும் இருக்கின்றது எனவே தங்களுக்கு யோக பலன்களை தந்திருக்கும் என்று கணிப்பது சரியாக இருக்குமா ? நிச்சயம் இல்லை அன்பரே ஏனெனில் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே தங்களுக்கு புதன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது என்பது தெரிய வரும்.

எனவே தங்களது ஜாதகத்தில் பாவகன்களின் தொடர்புகளை அறிவது அவசியமாகிறது, அதன் அடிப்படையில் கிழ்கண்டவாரு தங்களது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் தொடர்பு நிலையும் அமைகிறது.

1,2,5,6,7,10,11,12 ம் வீடுகள் பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் பாவகம் ஆகும் ) 11ம் பாவகத்துடன் தொடர்பு.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு.
4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு.

பிறப்பில் தங்களுக்கு நடந்த புதன் திசை ( ராசியில் சமம், நவாம்சத்தில் ஆட்சி ) 2,6,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது,

அடுத்து வந்த கேது திசை ( ராசியில் நீசம்,நவாம்சத்தில் பகை ) தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ( 23/07/2002 முதல் 23/07/2022 வரை ) சுக்கிரன் திசை ( ராசியில் உச்சம், நவாம்சத்தில் நட்பு ) தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று  நடத்தி கொண்டு இருக்கிறது, எனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே! மேலோட்டமாக தங்களது ஜாதகத்தை காணும் அன்பர்கள் சுக்கிரன் உச்சம் பெற்று தனது திசை நடத்துவதால் தங்களுக்கு மிகுந்த யோகமும் நன்மையையும் உண்டாகும் என்பதாக கருதக்கூடும், ஆனால் தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, சுக்கிரன் தனது திசையை 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு படுத்தி நடத்துவது வருந்தத்தக்கதே.

சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடுகளும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல, அப்படி தொடர்பு பெற்றாலும், நவ கிரகங்கள் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்லது, ஆனால் தங்களது சுய ஜாதகத்தில் பிறப்பில் வந்த புதன் திசையும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையும் தங்களுக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

 எனவே தாங்கள் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் சுக்கிரன் திசையில் அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக கூடும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து உடல் மனம் பாதிக்கும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியும், சிந்தனையும் அறிவு திறனும் பாதிக்கும், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இன்னல்களையும், எதிர்பால் அமைப்பில் இருந்து துன்பங்களையும், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைவையும், வீண் அலைச்சல் மற்றும் அதிக போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

பாதக ஸ்தானம் என்பது ஒருவருக்கு 200% சதவிகித இன்னல்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது, எனவே சுக்கிரன் திசை முழுவதும் தாங்கள் 1ம் பாவக வழியில் இருந்து சுய கட்டுபாடு நல்ல ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை கையாள்வதும், 5ம் பாவக வழியில் இருந்து குல தேவதை வழிபாடும், எந்த ஒரு காரியத்தையும் பொறுமையாக கையாளும் தன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற அமைப்பில் எச்சரிக்கையுடனும், 11ம் பாவக வழியில் இருந்து மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டும், அதிர்ஷ்டத்தை நம்பாமல், தீவிர உழைப்பை நம்பி செயல்படுவதும் தங்களுக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலன்களில் இருந்து காப்பாற்றும், குறிப்பாக தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்தாலே 90% சதவிகித இன்னல்கள் குறைந்துவிடும்.

தங்களது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று திசையை நடத்துகிறது, எனவே இனி மிகுந்த யோகத்தை தரும் என்று யாரவது சொல்வதை கேட்டுக்கொண்டு தங்களது பூர்வீகத்திலேயே ஜீவனம் செய்தீர்களா என்றால், அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதால், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியேறி, சிறப்பாக திட்டமிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 3 டிசம்பர், 2015

நீசம் பெற்ற கிரகம் அவயோக பலன்களையும், ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் யோக பலன்களையும்தான் வழங்குமா ?

கேள்வி :

மதிப்பிற்குறிய ஐயா,
                    
எண் பெயா்  ராஜேஷ் குமார்  date of birth 14/02/1985,11.10 AM,cumbum (theni dist).  மூன்று மாதங்களுக்கு முன் என் நண்பா் அதா்வன  ஜோதிடா் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றாா்.என் ஜாதகத்தை பாா்த்த அவா் 9 ஆம் அதிபதி நீசம் ஆகி உள்ளாா் அதனால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்க்கை நகா்த்த முடியும் பாிகாரமும் எதுவும் இல்லை உங்கள் குல தெய்வம் தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி முடித்துக் கொண்டாா்.
     +2 வில் 94% மதிப்பெண் பெற்றும் என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனாலூம் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இறுக்கிறேன் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்பதால் கடவுளின் பாதங்களை பணிந்து வாழ்க்கையை நகா்த்தி கொண்டிருக்கிறேன், ஐயா தயவு செய்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.


பதில் :

அன்பரே வணக்கம் பொதுவாக சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் ஆட்சி அல்லது உச்ச நிலைகளில் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பதும்

சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நீசம் அல்லது பகை நிலைகளில் இருந்தால் மிகுந்த அவயோகத்தை வாரி வழங்கும் என்று கணிப்பதும்


சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நட்பு அல்லது சமம் என்ற நிலைகளில் இருப்பின் ஜாதகருக்கு மிதமான பலன்களை வழங்கும் என்று கணிப்பதும், முற்றிலும் ஜோதிட விதிகளுக்கும், ஜோதிட கணிதத்திற்கு சம்பந்தம் இல்லாத கற்பனையே அன்றி  வேறு எதுவும் இல்லை, மேலும் இதன் அடிப்படையில் ஒருவரது ஜாதகத்திற்கு பலன் காண முற்ப்பட்டால், சுயஜாதாக பாவக வலிமைக்கும், நடைமுறையில் வரும் பலாபலன்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க சிறிதும் வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை.

பொதுவாக சுய ஜாதகங்களில் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக கணிதம் செய்யும் பொழுது ஜாதகரின் லக்கினத்திற்கும், 12 பாவக அமைப்பிற்கும் நவ கிரகங்கள் எவ்வித வலிமையை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சுய ஜாதகத்தில் உண்மையான பாவக வலிமையை அறிய உதவும், மாறாக காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவ கிரகங்கள் பெற்ற ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை மற்றும் நீசம் நிலைகளை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்துடன் ஒப்பிட்டு பலன்கான முற்படுவது, முற்றிலும் தவறான பலாபலன்களை ஜாதகருக்கு கூறும் சூழ்நிலையை தந்துவிடும்.

உதாரணமாக :




தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்திற்க்கு அதிபதியான குரு பகவான் மகர ராசியில் நீசம் பெற்று அமர்ந்து இருப்பது ஜாதக கணிதம் அறியாத அன்பர்கள் மேலோட்டமாக காணும் பொழுது 9ம் பாவகம் 100% விகிதம் பாதிப்படைந்து விட்டதாகவும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குரு பகவான் நீசம் அடைந்ததை, தங்களது ஜாதகத்திற்கு அவயோக பலன்களை 9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்று உண்மைக்கு புறம்பாக கூறியிருக்க வேண்டும்.


ஆனால் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 9ம் வீடு கோண வீடு, அதன் அதிபதியான குருபகவானும் கோண அதிபதி, அவர் அமர்ந்திருப்பது மகர ராசியில் உள்ள 9ம் 
( நீசம் ) பாவகத்தில், எனவே குரு பகவான் திரிகோண வீடான 9ம் பாவகத்தில் ( தனது வீட்டில் சுய பலம் பெற்று அமர்வது ) 9ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும்.

தங்களது லக்கினம் 

மேஷ ராசியில் 18:04:39 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 45:35:29 பாகையில் முடிவடைகிறது, 
இதை அடிப்படையாக கொண்டு தங்களது 9ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது, 
9ம் பாவகம் தனுசு ராசியில் 253:06:19 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 280:37:08 பாகையில் முடிவடைகிறது, 
இந்த 9ம் பாவகத்திற்க்கு உற்பட்ட 253:06:19 முதல் 280:37:08 வரை ) 
278:09:51 பாகையில் குரு பகவான் கோண பலம் பெற்று அமர்வது,
 தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்தை 100% சதவிகிதம் வலிமை பெற செய்துவிடும்,  எனவே தங்களது சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெற்றே இருக்கிறது,
ஆக குரு பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் நீசம் பெற்று இருப்பது, தங்களது சுய ஜாதகத்தில் எவ்வித அவயோக பலன்களையும் வழங்க வாய்ப்பில்லை என்பதை மிகவும் உறுதியாக ஜாதக கணிதம் கொண்டு சொல்ல இயலும். 

மேலும் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் மட்டுமே ஒருவருக்கு நன்மையை தரும் என்பதும், பகை நீசம் பெற்ற கிரகங்கள் தீமையை செய்யும் என்பதும், சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பான அம்சமாகவே கருத வேண்டி உள்ளது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், சில அன்பர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது, பகை நீசம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், பல அன்பர்களுக்கு ராஜயோக பலன்களை வாரி வழங்கி இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை,  சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், நவகிரகங்கள் தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தியதுமே இதற்க்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்றால், அது மிகையில்லை.


ஒருவரின்  சுய ஜாதகத்தை முழுமையாக ஆளுமை செய்வது லக்கினம் உற்பட 12 பாவகங்களின் வலிமை நிலையும், 

வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்து நவகிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமும் என்றால் அது மிகையில்லை, 
ஒரு குறிப்பிட்ட  நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு கிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருந்த போதிலும், அனைவரும் ஒரே விதமான யோக பலன்களை அனுபவிப்பது  இல்லை, அவரவர் லக்கினம் மற்றும் பாவக வலிமைக்கு ஏற்ப பலாபலன்களை தருகிறது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்ட அன்பர்களும், ஒரே மாதிரியான யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலைக்கு காரணமாக அமைவதும் அவரவர் சுய ஜாதக பாவக வலிமையின் தன்மையே, எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையே, அவர் அனுபவிக்கும் யோகம் அவயோகம், நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 9ம் அதிபதி மகர ராசியில் நீசம் பெற்று இருப்பினும், லக்கினத்திற்கு 9ம் பாவகத்திலே கோண பலம்பெற்று அமர்ந்து இருப்பது தங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவையும், நல்ல அறிவு திறனையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசிகளையும் நிச்சயம் பெற்றுத்தரும், தங்களின் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும் சுயஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை அற்ற நிலையும், வலிமை அற்ற பாவகத்தின் பலாபலன்களை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்துவதே காரணமாக இருக்கலாம் என்பதால், தங்களது சுய ஜாதகத்துடன் முறையாக நேரில் ஜாதக ஆலோசனை பெற்று தெளிவு பெறுங்கள்.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696