7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா? நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன ?
சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்வது ராகுகேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது, எந்த ஓர் லக்கினம் என்றாலும் சரி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு உற்ப்பட்ட பாகையில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து முழு அளவிலான யோக பலன்களை தரும், குறிப்பாக ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய நன்மைகளையும் யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிப்பார், நீண்ட ஆயுள், நல்ல உடல் நலம், ஜாதகர் பெரும் புகழ் மற்றும் கீர்த்தி, நல்ல எண்ணங்கள், கட்டுப்பாடு, உடல் மற்றும் மனவலிமை, சரியான திட்டமிடுதல்கள், தனக்கு தேவையான நல்ல விஷயங்களை அனைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் அறிவாற்றல், நேர்மை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் சிந்தித்து செயல்படும் தன்மை என்ற வகையில் ஜாதகர் நன்மைகளை பெறுவார், இது அணைத்தது லக்கினத்தினருக்கும் பொருந்தும் இனி தங்களது சுய ஜாதக அமைப்பில் ராகு கேது தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
லக்கினம் : கடகம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்.
கடக லக்கினம், லக்கினம் கடக ராசியில் 109.28.14 பாகையில் ஆரம்பித்து, சிம்ம ராசியில் 137.56.07 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289.28.14 பாகையில் ஆரம்பித்து, கும்ப ராசியில் 317.56.27 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, தங்களது ஜாதகத்தில் மகரம் மற்றும் கடக ராசியில் ராகு கேது அமர்ந்த போதிலும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமரவில்லை எனவே தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் லக்கினத்தில் ராகு கேது அமரவில்லை என்பதை தெளிவு படுத்த "ஜோதிடதீபம்" விரும்புகிறது, மேலும் ராகு கேது மகரம் மற்றும் கடகத்தில் உள்ள 6ம் பாவகம் மற்றும் 12ம் பாவகத்தில் உள்ளது என்பதே தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது அமர்ந்துள்ள உண்மை நிலை, எனவே லக்கினத்தில் ராகு கேது எண்ணத்தை தவிர்த்து விடுங்கள், மேலும் அதை வைத்து பலன் காண முற்படுவதும் தவறான அணுகுமுறை என்பதில் தெளிவு பெறுங்கள்.
அடுத்து தங்களின் கேள்வி ராகு கேது தங்களது ஜாதகத்திற்கு அமர்ந்த பாவக வழியில் இருந்து தரும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், 6ல் அமர்ந்த ராகு தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 12ல் அமர்ந்த கேது தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் தருகின்றனர், இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் விரைய ஸ்தான பலனை தருவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து தங்களுக்கு கடுமையான இன்னல்களை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுக வாழ்க்கைக்கு தடை, வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சார்ந்த இழப்புகள், உடல் நிலை பாதிப்பு, மருத்துவ செலவு, கடன் தொந்தரவு, எதிர் பாராத செலவுகள், தொழில் வழியில் இன்னல்கள், தொழில் முடக்கம், தொழிலாளர் பிரச்சனைகள், மனநிம்மதி இழப்பு, முதலீடு செய்த வகையில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மனப்போராட்டம், அனைத்திலும் முடக்கம் என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.
தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது தாம் அமர்ந்த பாவக வழியில் வலிமை பெற்று இருப்பினும், ராகு தனது திசையில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு நன்மை தரும் அமைப்பு அல்ல என்பதனை நினைவில் வைத்து செயல்படுங்கள், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்ப்பதற்கு உண்டான பரிகாரங்களை தேடி நலம் பெறுங்கள் "வாழ்த்துக்கள் "
குறிப்பு :
ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெற்ற வலிமையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன்களை கூறுவது முற்றிலும் தவறு, பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் பலன் காண்பதே சரியான அணுகுமுறை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பினும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகள் மற்றும் யோகங்கள் நடைமுறைக்கு வரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Sir my son date of birth is 29th may 1991.time 9.05 am. Place coimbatore. I want to know when his marriage will be and his ethirkalam.
பதிலளிநீக்குமுறையாக ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக மேலும் விபரங்கள் அறிய அலைபேசி எண் 9443355696
நீக்கு