Saturday, January 30, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு லக்கினம் சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 9ல் ராகு பகவானும், 3ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

தனுசு இலக்கின சிறப்பு இயல்புகள் :

தனுசு ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது,  ஜாதகரின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், அறிவுபூர்வமான செயல்களில் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்துகொள்ளும் வல்லமையை தரும், பிடிவாதம் மிகும் இலகுவான வழிமுறைகளை கையாண்டு வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையும், திட்டமிடுதல்களுடன் செயல்களை செய்து தொடர் வெற்றிகளை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு உபயோகம் மற்றும் நன்மையை தரும் விதத்தில் அமையும், உடல் ரீதியான உழைப்பைவிட அறிவு ரீதியான உழைப்பை அதிகம் விரும்பும் அன்பர்கள், பாரம்பரியம் ரகசியம் உணர்தல், புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், வரைமுறைக்கு உற்பட்ட சுய கட்டுபாடு, தன்னம்பிக்கை குறையாத மன நிலை, ஆரோக்கியமான உடல் நிலை, முற்ப்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்க்கொள்ளும் தன்மை என ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரே காரணமாக அமைவார், ஜன வசீகரம் எப்பொழுதும் உண்டு.

கடந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் சஞ்சாரம் செய்து ஜீவன ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு நன்மைகளையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஈட்டி தரும், சுய அறிவு திறன் சிறப்பாக செயல்படும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கும், சகோதர ஆதரவு பயணங்களில் லாபம், வியாபாரத்தில் விருத்தி, ஏஜென்சி துறையில் தன்னிறைவான வருமானம், புதிய வேலை வாய்ப்புகள், தனது திறமைக்கு உரிய மரியாதை அரசு கௌரவம் கிடைத்தல், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் காணுதல், காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் யோகம், திருமண முயற்ச்சிகள் பெரியவர்கள் மூலம் நிறைவேறுதல்,  உயர் கல்வியில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், இடம் மாறுதல் மற்றும் புதிய சூழ்நிலைகளில் பணியாற்றும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் இதனால் அதிர்ஷ்டமும் யோகமும் அதிகரிக்கும்.

9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களுக்கு அதிக அளவில் இன்னல்களே வரக்கூடும் என்பதால், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது, தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவமானங்களையும், அவபெயரையும் தரும், சரியான  நேரத்தில் அறிவு திறன் செயல்படாது, ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் தீட்சையையும் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிகடி சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், புத்துணர்வையும் தரும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது, உடல் ரீதியான வரும் சிறு சிறு தொந்தரவுகளையும் உடனடியாக மருத்துவம் செய்துகொள்வது நல்லது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவது நல்லதல்ல, அதிக அளவில் அலைச்சல் தரும் என்பதால் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் தரும், பொது வாழ்க்கையில் உள்ள  அன்பர்களுக்கு இனிவரும் காலம் அவ்வளவு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மையை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 50% விகிதம் முயற்ச்சிக்கு உண்டான வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தனுசு இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் வீரிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் தனுசு இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே தனுசு இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Wednesday, January 27, 2016

செவ்வாய் தோஷம் படுத்தும் பாடு !


ஒருவரின் சுய ஜாதக ரீதியாக பலாபலன்களை துல்லியமாக அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஜாதகரின் லக்கினமே, லக்கினத்தை அடிப்படையாக கொண்டே 12 பாவகங்களும் நிர்ணயம் செய்யபடுகிறது, 12 பாவகங்களின் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மைக்கு ஏற்ற வகையில் திசாபுத்திகள் நன்மை தீமை பலாபலன்களை சம்பந்தபட்ட ஜாதகருக்கு வழங்குவது எதார்த்தமான உண்மை, ஜாதக கணிதங்களில் லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து, 12 பாவகங்களும் ஆரம்பிக்கும் பாகையையும், முடிவுறும் பாகையையும் நிர்ணயம் செய்யபடுகிறது, இதன் அடிப்படையில் பலன் காண முற்படுவதே, சரியான பலாபலன்களை சம்பந்த பட்டவருக்கு துல்லியமாக கணிதம் செய்து சொல்ல இயலும், உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை எடுத்துகொள்வோம் அன்பர்களே!


ஜாதகிக்கு விருச்சிக லக்கினம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம், ஜாதகியின் தாயார் திருமணத்திற்காக பொருத்தம் காண வந்தார், அவர் வைத்த வாதம் தனது மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதாகவும், எனவே செவ்வாய் தோஷம் உள்ள வரனையே தேடுவதாகவும், இதுவரை திருமணதிற்காக எடுக்கும் முயற்ச்சிகள் " செவ்வாய் தோஷம் " என்ற ஒரு காரணத்திற்க்காக தடைபட்டு கொண்டு இருக்கிறது என்றும், தனது பெண்ணின் ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள வரனை மட்டுமே சேர்க்க வேண்டு, இல்லையை எனில் ஜாதகி வாழ்க்கையில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையையும், மன வாழ்க்கையில் சந்தோசம் அற்ற சூழ்நிலையையும் தரும் என்று இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் கூறியதாக தெரிவித்தார், மேலும் எனது மகளுக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரனை மட்டும் பரிந்துரை செய்யுங்கள் என்பதாக அவரது கூற்று அமைந்திருதது.

மேற்கண்ட பெண்ணிற்கு இதுவரை 100க்கு மேற்ப்பட்ட ஜாதகங்களை பொருத்தம் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை என்றும் கூறினார், சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றது என்ற அடிப்படை விஷயம் அறியாத பொழுது இது போன்ற சுய ஜாதகத்திற்கு உண்மைக்கு புறம்பான கருத்துகள் வருவது இயற்கையே, ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை, நவகிரகங்கள் பாவகங்களில் அமர்ந்து இருக்கும் உண்மை நிலை, பாவகங்களுக்கு கிரகங்கள் தரும் வலிமை வலிமை அற்ற நிலையை கருத்தில் கொண்டு பலாபலன் சொல்வதே ஜோதிடரின் கடமையாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு கடந்த நான்கு வருடங்களாக வரன் தேடுகின்றனர், இருப்பினும் திருமணம் கைகூடி வரவில்லை என்பதற்கு என்ன காரணம், சொவ்வாய் தோஷத்தின் உண்மை நிலை என்ன? திருமண தாமதத்திற்கு செவ்வாய் தோஷமே காரணமாக அமைகிறதா ? ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மைகள் என்ன? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ஜாதககிக்கு விருச்சிக லக்கினம், லக்கினம் எனும் முதல் பாவகம் விருச்சிக ராசியில் 235:37:23 பாகையில் ஆரம்பித்து தனுசு ராசியில் 264:54:37 பாகையில் முடிகிறது, எனவே ஜாதகிக்கு லக்கினம் விருச்சிகம் என்ற போதிலும் விருச்சிக ராசியில் 04:23:37 பாகைகள் மட்டுமே பெற்று இருக்கின்றது, தனுசு ராசியில் 24:54:37 பாகைகள் வரை வியாபித்து இருக்கின்றது, ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம்  விருச்சிக ராசியிலும் சிறிதும், தனுசு ராசியில் அதிக அளவிலும் வியாபித்து இருக்கிறது என்பதே உண்மை நிலை ஆகும் .

 ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ரிஷப ராசியில் 55:37:23 பாகையில் ஆரம்பித்து, மிதுன ராசியில் 84:54:37 பாகையில் முடிவடைகிறது. எனவே ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் ரிஷபம் என்ற போதிலும், ரிஷபராசியில்  04:23:37 பாகைகள் மட்டுமே பெற்று இருக்கின்றது, மிதுன ராசியில் 24:54:37 பாகைகள் வரை வியாபித்து இருக்கின்றது, ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம்  ரிஷப ராசியிலும் சிறிதும், மிதுன ராசியில் அதிக அளவிலும் வியாபித்து இருக்கிறது என்பதே உண்மை நிலை ஆகும்.

இதில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பது ரிஷப ராசியில் என்ற போதிலும் அவர் 40:26:38 பாகையில் அமர்ந்து இருப்பதால், செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றது என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் ஆரம்பிப்பதே ரிஷப ராசியில் 55:37:23 பாகையில்தான், எனவே செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் என்பதே முற்றிலும் உண்மை, இதை உணராமல் ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்று (7ல் செவ்வாய்) என்று நிர்ணயம் செய்வது ஜாதக கணிதம் தெரியாத அன்பர்கள் கூறும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

மேலும் ஒரு தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, அதே தோஷம் உள்ள ஜாதகத்தை திருமண வாழ்க்கையில் இணைப்பது எப்படி நன்மையை தரும் ? வலிமை அற்றவன் ஒரு வலிமை பெற்றவருடன் சேரும் பொழுது அவரது வாழ்க்கையும் நலம் பெரும் என்பதே சத்தியம், மாறாக ஒரு கொடியவனுடன் சேரும் தீயவனுக்கு எப்படி வாழ்க்கை முன்னேற்றமும் யோகமும் பெரும்? அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் தோஷம் ( வலிமை அற்ற நிலை ) உள்ளதா? என்பதே தெரியாத பொழுது சம்பந்தபட்ட ஜாதகருக்கு எவ்வாறு நாம் வழிகாட்ட இயலும் என்ற கேள்வியை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் முன் வைக்கிறது.

மேற்கண்ட ஜாதகத்தின் உண்மை நிலையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே!

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,6,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதிக்கு இலக்கின வழியில் கீர்த்தியும், நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்த்தை வழங்கும், 6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகிக்கு அடிக்கடி வந்து போகும், உடல் ஆரோக்கியத்தில் கவனத்தையும், வருமுன் காக்கும் விழிப்பு நிலையையும் தரும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை அமைந்த பிறகே ஜாதகியின் முன்னேற்றங்கள் அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும், பொதுமக்கள் ஆதரவும், நண்பர்கள் உதவியும் ஜாதகிக்கு தேடி வரும்.

2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்த பிறகே ஜாதகிக்கு யோகமும், அதிர்ஷ்டமும் உண்டாகும், இனிமையான பேச்சும், நல்ல வருமானமும் ஜாதகிக்கு இயற்கையாக கிடைக்கும், 8ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மூலம் திடீர் அதிர்ஷ்டங்களையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும் முற்போக்கு சிந்தனையும், நேர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை பெரும் யோகத்தையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் தன்மையையும் தரும். ( ஜாதகியின் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று தத்துவத்திலும் அமைவது ஜாதகி தனது  வாழ்க்கை துணை, நண்பர்கள், கூடாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பெரும் 100% விகித யோகத்தை காட்டுகிறது.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் அறிவு திறனையும், சமயோசித புத்திசாலிதனத்தையும் அதிகரிக்கும், எங்கு சென்றாலும் குல தெய்வத்தின் அருளாசி ஜாதகிக்கு பரிபூரணமாக கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும், கற்ற கல்வி வழியில் இருந்து யோகத்தையும் வாரி வழங்கும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கௌரவம் குறையாத தொழில் முன்னேற்றத்தையும், அரசு உதவி மற்றும் விருதுகளுக்கு தகுதி பெரும் யோகத்தையும், தன்னிறைவான தொழில் வாய்ப்புகளையும், செய்யும் தொழிலில் புகழ் பெரும் யோகத்தையும், கைராசியான தன்மையையும் ஜாதகிக்கு தரும், தனது தாய் வழியில் இருந்து நன்மைகளையும், நீடித்த உதவிகளை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகம் உண்டாகும், சுய தொழில் வெற்றி பெறும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

4,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4ம் பாவக வழியில் இருந்து தனது தந்தை வழியில் இருந்து உதவி அற்ற நிலையையும், தந்தையின் பிரிவையும், அவர் வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தனது பெயரில் உள்ள சொத்துகள், வண்டி வாகனங்கள் அனைத்தும் வீண் விறையத்தை தரும், சுக போக வாழ்க்கைக்கு அடிக்கடி இடைஞ்சல்கள் வரக்கூடும், ஜாதகியின் குணநலன்கள் வெகுவாக ஜாதகியின் மன நிம்மதியை கெடுக்கும், ஜாதகியின் குணத்தை எவராலும் புரிந்துகொள்ள இயலாது, நல்ல மனம் இருந்த போதிலும் தேவையில்லாத விஷயங்களில் தலையீடு செய்து பொருள் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, துன்பம், மருத்துவ செலவுகள், மன அழுத்தம் மன உளைச்சல் என ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், மனதை ஒருநிலை படுத்துவது ஜாதகியின் துன்பத்தை குறைக்கும்.

3,9ம் வீடுகள் பதாக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவு அற்ற நிலையையும், எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், பயணங்களில் இன்னல்களையும், முயற்ச்சி இன்மையையும், தாழ்வு மனபான்மையையும், வீரியமற்ற செயல்களால் துன்பங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு கர்ம வினை பதிவை தாம் அனுபவிக்கும் தன்மையையும், பெரியவர்கள் ஆசி மற்றும் இறை அருளின் கருணையை பெற ஜாதகி அதிக அளவில் போராட வேண்டி வரும், ஜாதகிக்கு உதவி செய்ய எவரும் முன்வர மாட்டார்கள், தனித்து போராட வேண்டிய சூழ்நிலைகளை தரும், தனது தந்தை வகையறாவில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.

ஆக இந்த ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்பது இல்லை, செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவமும் தர தேயில்லை, மேலும் வரனின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தால் போதும் திருமணம் செய்யலாம் என்பதே முற்றிலும் உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Tuesday, January 26, 2016

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வழங்கும் அவாயோக பலன்கள் !


லாப ஸ்தானம் என்றாலே மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்றும், லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கிரகங்கள் யாவும், அதிர்ஷ்டத்தையும் நன்மையையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து யாரும் சிரமங்களை அனுபவிக்க முடியாது, நன்மையான பலன்களே நடைபெறும் என்பது பல, ஜோதிடர்கள் பொது கருத்தாக இருக்கின்றது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, லாப ஸ்தான வழியில் இருந்து அனைவரும் நன்மையை பெறுகின்றனர் என்பது முற்றிலும் ஏற்றுகொள்ள இயலாத உண்மைக்கு புறம்பான வாதம், ஏனெனில் சர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, சர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் அந்தனை வீடுகளும் தமது வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தங்கு தடையின்றி, குறுகிய காலத்தில் வெகு விரைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வழியில் இருந்து ஒருவர் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலாபலன்களை வழங்கும் சக்தி உண்டு, திரிகோணம் (1,5,9 ) மற்றும் கேந்திர (1,4,7,10 ) பாவகங்கள் நன்மையை மட்டுமே செய்யும் என்பதும், மறைவு ஸ்தானம் எனப்படும் (6,8,12) பாவகங்கள்  தீமையை மட்டுமே செய்யும் என்பதும் முற்றிலும் சுய ஜாதக கணிதத்திற்க்கு புறம்பானது, ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்கும் என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : திருவாதிரை 3ம் பாதம் 

ஜாதகருக்கு கடக லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் தற்பொழுது நடைபெறுவது குரு திசை ( குரு மீனத்தில் ஆட்சி ) 03/12/2007 முதல் 03/12/2023 வரை, சுக்கிரன் புத்தி ( சுக்கிரன் மீனத்தில் உச்சம் ) 15/10/2015 முதல் 15/06/2018 வரை, குரு திசை ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் (லாப ஸ்தானம் ) சம்பந்தம் பெற்றும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பலனை தருவது ஜாதகரின் வளரும் பருவத்தையும், கல்வி காலங்களையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, உடல் நிலை சார்ந்த தொந்தரவுகள் ஜாதகரை வெகுவாக பாதிக்கிறது, ஜாதகரின் செயல்பாடுகளும் தனது உடல் நிலையில் அக்கறை இன்மையையும், தனது உடல்நிலையை தானே பாதிக்க செய்யும் விதாமாக இருப்பது, ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் ( லாப ஸ்தானம் )சம்பந்தம் பெறுவதை கட்டியம் கூறுகிறது, இந்நிலை தொடருமாயின் ஜாதகரின் உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும்.

 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் ( லாப ஸ்தானம் )சம்பந்தம் பெறுவது ஜாதகரின் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஜாதகரின் நல்வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பது, ஜாதகரின் வாழ்க்கை பெரிய போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை அடிக்கடி தரும் என்பது அச்சம் தரும் ஒரு அமைப்பாகவே கருத வேண்டி உள்ளது, மேலும் குரு திசை 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது, ஜாதகரின் நல்ல உறக்கத்திற்கும், மனதைரியத்திர்க்கும் வில்லனாக வந்து அமைகிறது, அனைவரிடமும் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வீண் மன பயம், தன்னம்பிக்கை அற்ற மன நிலை, எதிர்வாதம் செய்யும் குணம், அனைவராலும் இன்னலுக்கு ஆளாகும் தன்மை என ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும் என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

சுக்கிரன் புத்தியும் ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் (லாப ஸ்தானம் ) சம்பந்தம் பெற்று பலனை தருவது மேற்கண்ட பாதக ஸ்தான பலனை அதிகரிக்க செய்யும், 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சற்று ஆறுதல் தரும், எதிர்பாராத ஜீவன மேன்மையையும், தொழில் வாய்ப்புகளையும் வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டு, நல்ல  தொழில் வாய்ப்பு அமையும், ஜீவன வழியில் இருந்து ஜாதகர் எதிர்பாராத நன்மைகளையும் திடீர் யோகங்களையும் அனுபவிக்கும் தன்மை இருந்த போதிலும், லாபங்கள் அனைத்தும் விரையமாவதை தவிர்க்க இயலாது.

ஜாதகர் 11ம் பாவக வழியில் ( பாதக ஸ்தானம் ) இருந்து அனுபவிக்கும் இன்னல்கள் :

1,3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 1ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை அற்ற மன நிலை, எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்ட மன இயல்பு, தனது வாழ்க்கையை தானே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை, தனக்கு வரும் நன்மை மற்றும் யோகங்களை உதறி தள்ளும் மன நிலை என்ற அமைப்பிலும்.

3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவற்ற தன்மையையும், எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்திலும் தோல்விகளையும், முரட்டு தனமான செய்கைகளால் புகழுக்கு களங்கத்தையும், பயணங்களில் இன்னல்களையும், துன்பத்தையும் ஆணுபவிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் முயற்ச்சி இன்மையால் அனைத்து நன்மைகளும் ஜாதகரை விட்டு விலகி செல்வதை காட்டுகிறது.

5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியினால் பலன் அற்ற தன்மையையும், மற்றவர்கள் உதவி இல்லாமல் தவிக்கும் சூழ்நிலையையும், சரியான சமயத்தில் சிந்தித்து செயல்பட இயலாத தன்மையையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாமல் வீண் விறையங்களை சந்திக்கும் தன்மையை தரும் , அறிவு பூர்வமான செய்திறன் அன்றி கற்பனை வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கும் மன நிலையை  தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூடாளிகள் மூலம் 200% விகித இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அளவில்லா துன்பத்திற்கும், வியாபரத்தில் நஷ்டத்தையும், கூட்டு தொழில் மூலம் பெரிய இழப்புகளையும் விறையங்களையும் வாரி  வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து பெரியோர் பேச்சை கேளாமல் வீண் அவபெயரையும், சம்ப்பந்தம் இல்லாத விஷயங்களில் ஈடுபட்டு வீண் துன்பங்களையும் சந்திக்கும் தன்மையை தரும், உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் பின்னடைவையும் போராட்டங்களையும் சாதிக்கும் சூழ்நிலையை தரும், தமக்கு தெரியாத புரியாத விஷயங்களில் ஈடுபட்டு குழப்பத்தையும், சந்தேக மன நிலையையும் அடைவார்.

11ம் பாவக வழியில் இருந்து, தாழ்வு மனப்பான்மை, பிற்போக்கு தனமான விஷயங்களில் அதிக ஆர்வத்தையும், நம்பிக்கை அற்ற மன நிலையையும், எந்த ஒரு விஷயத்திலும் குற்றம் மற்றும் குறை காணும் மனப்பக்குவத்தையும், எதையும் எதிர்கொள்ளும் மன ஆற்றல் அற்ற தன்மையையும், பழமையான விஷயங்களில் மூழ்கி தனது அறிவுத்திறனையும், நேரத்தையும் விரையம் செய்யும் குணத்தையும் தரும், உலகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாட்டையும், தன்னிலை உணராமல் பிற்போக்குத்தனமான வாதங்களில் ஈடுபாட்டினையும் தரும், ஜாதகர் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்ப்பை பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

எனவே சுய ஜாதகத்தில் 11ம் வீடு கொட்டி கொடுக்கும், நன்மைகளை வாரி வழங்கும் என்று கற்பனை கோட்டையில் மிதப்பதை விடுத்து, சுய ஜாதக நிலையை தெளிவாக உணர்ந்து செயல்படுவதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Tuesday, January 12, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக லக்கினம்சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 10ல் ராகு பகவானும், 4ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

விருச்சிக இலக்கின சிறப்பு இயல்புகள் :

விருச்சிக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் இயக்கம் உணர்ச்சிபூர்வமானதாக அமையும், மனதின் எண்ணங்களும் சிந்தனையும் ஸ்திர தன்மையான வேகத்துடன் இயங்கிக்கொண்டே இருக்கும். அறிவுக்கு எட்டாத, புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியை தன்னகத்தே கொண்டவர்களாக காணப்படுவார்கள், வருமுன் காக்கும் சக்தி பெற்றவர்கள், இவர்களின் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையையும், ஒழுக்கம் நிறைந்த கட்டுபாட்டினையும் கட்டிக்காக்கும் யோகம் பெற்றவர்கள், தமக்கு வரும் நன்மை தீமையை தாமே ஏற்றுகொள்ளும் மனபக்குவம் நிறைந்தவர்கள், தீவிர சிந்தனை விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களாக மாற்றும் வல்லமையை தரும், எதிர்பாராத புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை, தனது அறிவு திறன் மூலம் பெரும் யோகம் பெற்றவர்கள், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், பதவிகளும் தேடிவரும், தனது மனநிலையை ஒருநிலை படுத்துவது செயற்கரிய காரியங்களை மிக எளிதாக சாதிக்கக் வைக்கும் என்பது விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இறையருள் வழங்கிய "வரம்" எனலாம்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் யோக பலன்களை வழங்கிய போதிலும், பெருவாரியான நன்மைகளை பெற இயலவில்லை, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு புதிய சொத்துகள், புதிய வீடு, வண்டி வாகன யோகம், சுகபோகமான வாழ்க்கை, என மிகுந்த நன்மைகளை தர காத்திருக்கிறார், தங்களின் மேலான எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், புதிய சொத்துகள் மூலம் லாபம் உண்டாகும், பெற்றோர் வழியில் இருந்து மிதமிஞ்சிய நன்மைகள் உண்டாகும், மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும், சொந்த பந்தம், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும், குல தெய்வ அனுகிரகம் உண்டாகும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், இதுவரை வாகன வசதி இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வீடு கட்ட அல்லது வாங்க முயற்ச்சித்த நடவடிக்கைகள் உடனடியாக வெற்றி பெரும், அனுபவம் மிக்க பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வழங்கும், மனதிற்கு இனி நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நல்ல மாற்றங்களை வாரி வழங்கும்.

10ல் ராகு பகவான் தங்களுக்கு தொழில் ரீதியான அபிவிருத்திகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஸ்திரமான லாபங்கள் தங்களுக்கு சீறிய இடைவெளியில் வந்துகொண்டே இருக்கும், தங்களின் அதிதீவிரமான அறிவு திறன் காரணமாக செய்யும் தொழிலில் நிர்வாக திறைமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்ப்பும், லாபமும் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி வணிகம் புரியும் அன்பர்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி அளவில்லா தனலாபத்தை வாரி வழங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், கூட்டு முயற்ச்சி தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், தங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், வலிமை பெற்ற ராகு பகவான் தங்களின் ஜீவன ஸ்தானத்திற்கு பரிபூர்ணா நன்மைகளை வழங்குவதால், தொழில் ரீதியான கௌரவம் மற்றும் அந்தஸ்து மற்றும் லாபங்கள் திடீரென அதிகரிக்கும், இதுவரை முன்னேற்றம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருந்த தொழில்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும், அரசு உதவிகள் மற்றும் அரசு கௌரவங்கள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு, மேலும் இதுவைரை வேலை வாய்ப்பற்ற அன்பர்களுக்கு சிறப்பான வேலையும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள், ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "அதிர்ஷ்ட ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விருச்சிக இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் மூன்றாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04 மற்றும் 10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே விருச்சிக இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04,10ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Monday, January 11, 2016

கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் துன்பம் ஏன் ?


மதிப்பிற்குரிய  ஐயா ,

பிறந்த திகதி 13/06/1977 , 
பிறந்த இடம் - யாழ்ப்பாணம் , ஸ்ரீலங்கா ,
பிறந்த நேரம் இரவு 8.02 (8.02pm)

எனது ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்க முறையில் கணிக்கும் ஜோதிடர்களிடம் காட்டிய போது எனக்கு கால சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அது எனது 32 வயது வரை கெடுதலை தரும் என்று கூறினார்கள், அதே போல் திருக்கணித ஜோதிடர்களிடம் காட்டிய போதும் அதே பலனை கூறினார்கள், அவர்கள் கூறியது சரியானதுதான் . 2009 ஆம் ஆண்டு வரை நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்தேன் (உயிர் அபாயம் ), எனது 32 வயது முடியும் கால பகுதியில் எனது மிக மோசமான கால கட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது, எனினும் நான் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து காளகஸ்தியில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்தேன் .
ஆனாலும் உயிருக்கு அச்சுறுத்தலான மோசமான கால கட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தாலும் நான் இன்றுவரை நல்ல நிலையில் இல்லை . இன்றுவரை என் எதிர்காலம் குறித்து 0.1% கூட முடிவு செய்து முடியாத மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றேன்.

கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் இந்த கேடுகாலம் தொடர காரணம் என்ன ?  இந்த கேடுகால நிலைமைகள் என்று முடிவுக்கு வரும் ?
கால சர்ப்ப தோஷ காலப்பகுதியில் பல தடவை மயிரிழையில் உயிர் தப்பி இருக்கின்றேன், எந்த பலனால் (கிரக ) எனக்கு உயிர் பாதுகாப்பு கிடைத்தது என்று அறிய முடியுமா ? உங்கள் மேலான பதிலை அறிய காத்திருக்கின்றேன் 

தங்கள் உண்மையுள்ள 
-----------------------------------அன்பு நண்பரே !

தங்களது கேள்விக்கு உண்டான பதில்களை பார்ப்போம்.

கேள்வி 1: 
கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் இந்த கேடுகாலம் தொடர காரணம் என்ன ?

பதில் 1 : 
தங்களது சுய ஜாதகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த கேது 3ம் பாவகத்தை வலிமை பெற செய்யவதும், 9ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பாதிப்புகளை வழங்குவதும் எதார்த்தமான உண்மை நிலை, இதில் சாய கிரகங்களின் பாதிப்பு என்பது தங்களுக்கு பிராண ஆபத்தை தரும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

 தங்களது பிராண ஆபத்திற்கு காரணாம் தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, ஆயுள் ஸ்தானமாக அமைவதும் தங்களுக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை தந்தது.

 தங்களது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தான வழியில் இருந்து பாதிப்பையும், 6,12ம் வீடுகள் விறைய ஸ்தான வழியில் இருந்தும், 8ம் வீடு ஆயுள் ஸ்தான வழியில் இருந்தும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதாலேயே, தங்களுக்கு மரண ஆபத்தை தந்தது, மேலும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தங்களுக்கு மரண பயத்தை தந்த போதிலும், நீண்ட ஆயுளை வழங்கி இருப்பது கவனிக்க தக்கது, எனவே ஆயுள் பற்றி தாங்கள் கவலைப்பட  தேவையில்லை.

கேள்வி 2:  
இந்த கேடுகால நிலைமைகள் என்று முடிவுக்கு வரும் ?

பதில் 2:
தங்களுக்கு இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித நன்மையான பலனையும், பாதக ஸ்தான அமைப்பில் இருந்து 200% விகித அதிதீமையான பலனையும் கலந்து வழங்கி இருக்கிறது.

அதற்க்கு அடுத்து நடந்த, செவ்வாய் திசை ஆயுள்,மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித அதிதீமையான பலனையும் கலந்து வழங்கி இருக்கிறது.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 03/09/2003 முதல் 02/09/2021 வரை) விரைய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித அதிதீமையான பலனையும் வழங்கி கொண்டு இருக்கிறது, இதில் 12ம் பாவகம் ஸ்திர நீர் ராசி என்பதால் தங்களின் மனநிலை சார்ந்த இன்னல்களே அதிக அளவில் இருக்கும், உடல் மற்றும் ஆயுள் சார்ந்த இன்னல்கள் தங்களுக்கு வர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறலாம்.

கேள்வி 3: 
கால சர்ப்ப தோஷ காலப்பகுதியில் பல தடவை மயிரிழையில் உயிர் தப்பி இருக்கின்றேன், எந்த பலனால் (கிரக ) எனக்கு உயிர் பாதுகாப்பு கிடைத்தது என்று அறிய முடியுமா ?

பதில் 3: 
தாங்கள் மயிரிழையில் உயிர் தப்பியதிற்க்கும், கால சர்ப்ப தோஷத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, தங்களுக்கு ஆபத்து வந்ததிற்கு காரணம் பாதக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், விரைய ஸ்தானத்தின் கூட்டுகலவையான கெடுபலன்களே.

 தாங்கள் உயிர் தப்பியதிற்க்கு காரணம், பூர்வ புண்ணிய எனும் 5ம் வீடு லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று வலிமை அடைந்து அதிர்ஷ்டத்தை வழங்கியதும், பாக்கியம் எனும் 9ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பித்ருக்கள் ஆசியையும், குல தேவதையின் ஆசியையும் ஒருங்கே இணைந்து "இறைஅருளின்" கருணையை தங்களுக்கு முழு அளவில் வழங்கியதுமே உண்மையான காரணமாக இருக்கின்றது.

ஒருவரின் சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமையை வைத்து இப்பிறவியின் பலாபலன்களை  அறிய இயலும் தங்களது சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கையும், மிகவும் யோகமான காலமும், காத்துகொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதி, அப்படிபட்ட சிறப்பான யோக வாழ்க்கையை தாங்கள் தேடி பெறுவதிலேயே இறை அருளின் சூட்சமம் அடங்கி உள்ளது, சிறப்பான தேடுதல்களும், தன்னம்பிக்கையான மன நிலையும், உறுதியான நல்எண்ணங்களும் தங்களுக்கு மிக உயர்வான யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Friday, January 8, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - துலா லக்கினம் சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 11ல் ராகு பகவானும், 5ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

துலா இலக்கின சிறப்பு இயல்புகள் :

துலா ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் நேர்த்தியான தன்மையில் காணப்படும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், முகமதிப்பையும் பெரும் யோகம் உண்டாகும், மக்கள் தொடர்பு மூலம் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெரும் அன்பர்களின் ஜாதகத்தில் துலாம் வலிமை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, இயல்பாக மிதமிஞ்சிய அறிவு திறனையும், சமயோசித புத்தியையும் குறைவின்றி தரும், மற்றவர் வழியை பின்பற்றாமல் தனிப்பட்ட வழிமுறையை கையாளும் யோகம் பெற்றவர்கள், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு மிக எளிதாக கையாண்டு சரியான தீர்வுகளை தரும் யோகம் பெற்றவர்கள், புதுமை விரும்பிகள், மனதிற்கு எட்டாத விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், தன்னம்பிக்கையும் மன உறுதியையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், ஆராய்ச்சி மூலம் பல அறிய புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்கள், எந்த ஒரு விஷயத்திலும் சத்தியத்தின் தன்மையை கடைபிடிக்கும் உத்தமர்கள், அறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்கள், புதிய கருவிகளை கையாளும் வல்லமையும், அதன் செயல்பாடுகளையும் விரைவாக உணர்ந்துகொள்ளும் மதிநுட்பமும் கொண்டவர்கள், நஷ்டத்தில் இயங்கும் எந்த ஒரு தொழிலிலும் சிறந்த நிர்வாக திறமையின் மூலம் மிகப்பெரிய  முன்னேற்றத்தை தரும் வல்லமை பெற்றவர்கள், "புத்தியே துணை" என்பது துலா இலக்கின அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு, 12ல் ராகுவும், 6ல் கேதுவும் மிகுந்த இன்னலகளை வழங்கி இருக்க கூடும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக வீண் விரையங்களையும், மன உளைச்சல்களையும், உடல்  நல பாதிப்புகளையும் தந்திருக்க கூடும், மேலும் மன நிம்மதி இழப்பு, கடன் சுமை, எதிரிகள் தொந்தரவு என வெகுவான பாதிப்புகள் தங்களை பாதித்து இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, 11ம் பாவக வழியில் இருந்து ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த ஸ்திர  தன்மையான லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், முன்னேற்றங்களும் தங்களுக்கு அபரிவிதமாக அமையும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், திட்டமிடுதல்கள் யாவும் செயல்முறை காணும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது ஸ்திர தன்மையில் லாபகரமாக அமையும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்,  வெளிநாடுகளில் இருந்து நல்ல செல்வாக்கு உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்கள் இல்லம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கி மணவாழ்க்கை சிறப்பாக அமையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை அமையும், தங்களின் மனதில் உள்ள ஆசைகள்  அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இனிவரும் 18 மாதங்கள்  அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு யோக பலன்களை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

5ல் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த நன்மைகளை தங்களுக்கு வழங்கும் என்பது கேள்விக்குறியே, எனவே தங்களது முயற்ச்சிகள் யாவும் பூர்வீகத்திற்கு அப்பார்ப்பட்டு அமைவது உசிதமானத "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது வாரிசுகளுடன் மிதமான கருத்து பரிமாற்றத்துடன், அறிவுரைகளையும் வழங்குவது அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், எந்த ஒரு காரியத்திலும் தங்களின் செயல்பாடுகள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அமைவதே தங்களுக்கு நன்மையை தரும், நிறைய கேட்பதும் நிறைய சிந்திப்பதும், குறைவாக பேசுவதும் தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை மிக கவனமாக பயன்படுத்தி கொண்டு முன்னேற்றம் பெறுவது அவசியமானதாகும், தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும், அதிசயத்தக்க மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தர கேதுபகவான் தயார் நிலையில் இருப்பது மட்டும் கண்கூடான உண்மை, இனிவரும் காலங்களில் தங்களின் குல தெய்வத்தின் அருளாசி தங்களுக்கு வெகுவாக தேவை படும் என்பதால், குல தேவதை வழிபாட்டினை சிறந்த முறையில் மேற்கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு 50% விகித "அதிர்ஷ்ட யோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, துலா இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் சிம்ம ராகுவின் மூலம் அதிர்ஷ்டத்தையும், கும்ப கேதுவின் மூலம் நல்ல ஞானத்தையும் பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் துலா இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11 மற்றும் 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே துலா இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Tuesday, January 5, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது"  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்ம ராசியில் "ராகு" பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் "கேது" பகவானும் சஞ்சாரம் செய்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான, கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கன்னி இலக்கின சிறப்பு இயல்புகள் :

கன்னி ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, தமது தனிப்பட்ட செயல்பாடுகளில் யாரும் தலையீடு செய்வதை சிறிதும் விரும்பாதவர்கள், ஒரு முடிவு செய்யும் முன் நிறையவே சிந்தனை செய்து செயல்படுவார்கள், இயற்கையாகவே அதித தன்னம்பிக்கையும் மன உறுதியும் பெற்றவர்கள், முற்போக்கு சிந்தனையும் சுதந்திர சிந்தனையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், தாம் எடுக்கும் செயல்களில் எந்த விதத்திலாவது வெற்றியை பெற்றுவிடுவார்கள், புதிய வாய்ப்புகளையும் மற்றவர்களின் தனி திறமைகளையும் தனக்காக சிறப்பாக பயன்படுத்திகொள்ளும் வல்லமை பெற்றவர்கள், தனது கொள்கைகளிலும், லட்சியங்களிலும் சிறிதும் பிறளாது வெற்றியை பெற இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள், குறுகிய கால லாபங்களை அடிகடி பெரும் யோகம் பெற்றவர்கள், மக்கள் சக்தியை சரியான பாதையில் பரிணமிக்க செய்யும் யோகம் பெற்றவர்கள், வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை சந்திக்கும் தன்மையை தரும்.

தங்களுக்கு இதுவரை லக்கினத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவானும், 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த கேது பகவானும், இலக்கின வழியில்  இருந்து யோக பலன்களையும், களத்திர பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தந்திருக்க கூடும், ஆனால் இனி வரும் 18 மாதங்களும் சாய   கிரகங்களான ராகுகேதுவினால் 12ம் பாவக வழியில் இருந்தும், 6ம் பாவக வழியில் இருந்தும் யோக பலன்களை தாங்கள் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம், "அனைத்து ஜோதிடர்களும் 12,6ம் வீடுகள் துர் ஸ்தானங்கள்  ஆயிற்றே தீமையை தானே தரும், மேலும் 12ம் பாவகத்திற்கு வரும் ராகு விரையத்தையும், 6ம் பாவகத்திர்க்கு வரும் கேது ஆரோக்கிய குறை மற்றும் கடன் சுமையை அல்லவே அதிகாரிக்கு என்ற கேள்வி தங்களுக்கு வரக்கூடும், இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே.

 சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவக வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்கள் என்னவென்பதை இனி காண்போம் அன்பர்களே !

தங்களுக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், பெரிய முதலீடுகளில் ஈடுபடும் யோகத்தை தருவார், நல்ல அயன சயன சுகத்தையும், நிம்மதியான மன நிலையையும், திருப்தியான மன சந்தோஷத்தையும் வாரி வழங்குவார், தாங்கள் செய்யும் காரியங்களில் இறை நிலையின் அருளாசி பரிபூர்ணமாக காணப்படும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது திடீரென ஏற்ப்படும், எதிர்பாராத வெளிநாடு வாய்ப்புகளும், வருமானங்களும் வந்து சேரும், தங்களது தொழில் சிறப்பான வருமான வாய்ப்புகளையும், திடீர் முன்னேற்றங்களையும் பெரும், ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் யோகம் மிகுந்த காலம் எனலாம், தங்களது ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கும் யோகம் உண்டாகும், இறை நிலையுடன் ஜீவசங்கமம் பெரும் யோகம் உண்டாகும், இறை அருளின் பரிபூர்ணதுவம் தங்களுக்கு புது வாழ்க்கையை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

தங்களுக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், குறுகிய கால அதிர்ஷ்டங்களையும், தங்களது சத்ரு வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவார், கேட்க்கும் இடத்தில் இருந்து பண உதவிகள் வந்துசேரும், தொழில் லாபங்கள் குறுகிய கால இடைவெளியில் வந்தவண்ணமே இருக்கும், உடல் நலம் மேம்படும், நீண்ட நாள் ஆரோக்கிய குறைகள் விரைவாக நிவர்த்தி பெரும், புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி செய்வார்கள், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதார உதவிகளும், வங்கி கடன்களும் உடனடியாக கிடைக்க பெறுவீர்கள், வாராகடன்கள்  வசூல் ஆகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், தங்களுக்கு வரும் எதிர்ப்புகளே தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், பயணங்களில் "ராஜயோக விருந்து" மற்றும் உணவு உபசரிப்பை போகும் இடங்களில் எல்லாம் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், நேர்மறையான எண்ணங்களால் தங்களின் வாழ்க்கையின் லட்சியங்களை குறுகிய காலங்களில் தங்குதடையின்றி அடைவீர்கள்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கன்னி இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "திடீர் விபரீத ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கன்னி இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கன்னி இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கன்னி இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Saturday, January 2, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்கினம்
சாய கிரகங்கள் என்று ஜோதிடத்தில் போற்றப்படுவதும், தாம் அமர்ந்த ராசியை ( பாவகம் ) தனது முழு கட்டுபாட்டில் எடுத்துகொண்டு யோக அவயோக பலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றதுமான ராகு கேது கிரகங்கள், 29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மராசியில் ராகு பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து பலாபலன்களை வாரி வழங்க தாயராக உள்ளனர், ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன்கள் காண "லக்கினமே" அடிப்படையாக அமைவதால், ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களும், இனிவரும் 18 மாதங்களில் சாய கிரகங்களான ராகு கேது வின் சஞ்சார நிலையில் இருந்து பெரும் யோக அவையோக பலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்திப்போம் அன்பர்களே!

29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்திலும், 11ம் ராசியான கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு சஞ்சாரம் செய்யும் சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை தந்து, சிம்ம லக்கினத்திற்கு சாய கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் எப்படி?இருக்கும் என்பதில் இருந்து இலக்கின வாரியாக தொடர்ச்சியாக காண்போம் அன்பர்களே !

சிம்ம லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5 ம் ராசியான, சிம்ம ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே ! தங்களது லக்கினத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான கும்பத்தில் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி ஆய்வு செய்வோம் , 

சிம்ம இலக்கின சிறப்பு இயல்புகள் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை  பெற்று அமைய பெற்றால், ஜாதகர் பெருதன்மை மிக்க குணங்களுடன், சிறப்பு மிக்க நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் செவ்வனே நிறைவேறும், உடல் உறுதியும் மன உறுதியும் ஜாதகருக்கு இயற்க்கையாவே அமைய பெரும், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் தமது அறிவுத்திறனை மிக சிறப்பாக பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள், அதிக அளவில் நகைசுவை உணர்வு கொண்டவர்கள், சாஸ்திர ஞாணமும், தியானம் ஆன்மீக மற்றும் யோக பயிற்ச்சியில் தேர்ச்சி பெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், சிறந்த ஆன்மீக பெரியோர்கள் அவதரித்த லக்கினம் சிம்மமே என்றால் அது மிகையில்லை, மேலும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இயற்க்கையாவே மனதிற்கு எட்டாத புலன் அறிவை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள்.

இதுவரை தங்களுக்கு 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்த ராகு பகவான், குடும்பம், வாக்கு தனம் என்ற வகையில் அதிக அளவில் இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வைத்திருக்க கூடும், மேலும் உடல் நிலையில் பாதிப்பும் வீண் விரையங்களும் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

 ஆனால் இனி தங்களது லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களுக்கு ஸ்திர தன்மையான வெற்றிகளை வாரி வழங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை, கலைகளில் தேர்ச்சி, கல்வியில் மேன்மை, எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் யோகம், தன்னம்பிக்கை புத்திசாலித்தனம் மூலம் சிறந்த நன்மைகளை அனுபவிக்கும் யோகம், குல தெய்வத்தின் ஆசியினால் சகல காரியங்களிலும் வெற்றி, உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் என இனிவரும் 18 மாதங்களும் தங்களுக்கு ஏறுமுகமாகவே அமையும், பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வந்த போதிலும் பெரிய பாதிப்புகளை தாரது, வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது, பொதுவாக சிம்மத்தில் ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்கு உண்டான பலாபலன்களை முழுவதும் தாமே சுவீகரிக்கும் என்பதால், லக்கினம் சார்ந்த யோக பலன்களை தங்களுக்கு தங்கு தடையின்றி தரும்.

 வெற்றி புகழ் கீர்த்தி என ராகு பகவான் தரும் நன்மைகளின் தரம் மிகவும் சிறப்பானதாகவும், நீடித்து நன்மைகளை தரும் அமைப்பிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், உடலும் மனமும் தங்களுக்கு முழுவதும் ஒத்துழைக்கும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களுக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய மனிதர்கள் மற்றும் புதிய சூழ்நிலைகள் தங்களுக்கு மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும்.

தங்களது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களின் வாழ்க்கையில் திடீரென திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவார், தங்களின் மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையை கைபிடிக்கும் யோகம் உண்டாகும், காதல் திருமணம் கைகூடும், திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும், பொது வாழ்க்கையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும், தங்களது கற்பனையிலும் நினைத்திறாத யோக வாழ்க்கையை எதிர்கொள்ள முனைப்புடன் தயாராக சிம்ம இலக்கின அன்பர்கள் இருக்கலாம்.

பொது மக்களின் ஆதரவும், அரசியலில் செல்வாக்கும் அதிகரிக்கும் தங்களின் களத்திர  பாவகம் ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தில் அமைவதால், தங்களின் அறிவு  திறனும் அதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து செயல்படும், மனதில்  தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், பெண்கள் வழியில் இருந்து ஆண்களும், ஆண்கள் வழியில் இருந்து பெண்களும் மிகுந்த நன்மைகளையும், யோகங்களையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், நுண்ணறிவு சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் உண்டாகும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடுகளில் இருந்து தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தங்களை தேடிவரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடுகளில் வசித்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள், குடியுரிமை, அரசு ஆதரவு, அரசு சலுகைகள் அனைத்தையும்  அனுபவிக்கும் யோக உண்டாகும்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி சிம்ம இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, சிம்ம இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் முதலிடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே சிம்ம இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696