கேள்வி :
5ல் ராகு அமர்வது ஜாதகருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை ( ஆண் வாரிசு இல்லை ) என்பது உண்மையா ?
பதில் :
இது முற்றிலும் தவறான கருத்து மேலும் ஜோதிடகணிதம் பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் பலனாகவும் சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறும் பொது கருத்தாகவே உள்ளது, 5ல் அமரும் ராகு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றிய தெளிவில்லாமல் கூறப்படும் விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, 5ல் ராகு அமர்ந்து தான் அமர்ந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு பொருத்தமானதாக அமையும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலை இருப்பின் அதற்க்கு சரியான தீர்வு உண்டு என்பதால் அதைபற்றிய கவலை தேவையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு கேது ஜாதகருக்கு தரும் யோக வாழ்க்கை பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் மேலும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகமான மீனத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றார், அதற்க்கு சம சப்தமாக லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமான கன்னியில் கேது அமர்ந்து இருக்கின்றார், சாய கிரகங்களான ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று யோகத்தை தருகின்றனரா ? அல்லது தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை அற்று
அவயோகத்தை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தெளிவர அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பாவகங்களின் அதிபதி ( பாரம்பரிய முறைபடி ) யார் என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, 5 ம் பாவகத்திற்கு முழு முதற் சுப கிரகமாகவும் ( கோணஅதிபதி ) "பிரகஸ்பதி" என்று ஜோதிட சாஸ்திரத்தால் போற்றபடும் "குருபகவான்" பொறுப்பு ஏற்கிறார், 11ம் பாவகத்திற்க்கு ( கோண அதிபதி ) "வித்யாகாரகன்" என்று போற்றப்படும் புதபகவான் " பொறுப்பு ஏற்கிறார், இதில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கோண வீடாகவும், லாப ஸ்தானம் சம வீடாகவும் அமைவது அங்கு அமரும் சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு சுப துவத்தை தந்து, சம்பந்தப்பட்ட 5,11ம் பாவகங்களுக்கு 100% விகித வலிமையை பெற்று தருகின்றது.
இதன் காரணமாக சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமும், அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகமும் முழு வலிமை பெற்று ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் அமைப்பை பெறுகின்றது. சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே புத்திர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு புத்திர தடையை தாராமல் நல்ல யோகம் மிக்க புத்திர பாக்கியத்தை நல்கி இருக்கின்றது, யோகம் மிக்க ஓர் ஆண் வாரிசும், அதிர்ஷ்டமிக்க 2 பெண் குழந்தைகளும் ஜாதகருக்கு இறைஅருள் வாரி வழங்கி இருப்பது நடைமுறை உண்மை ஆகும், மேலும் இதுவே சுய ஜாதக வலிமை ஆகும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் சாயா கிரகங்களால் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது குழந்தைகளால் அதிர்ஷ்டம் மற்றும் சுபயோகங்களை 100% விகிதம் பெறுவார் என்பதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், ஜாதகருக்கு வாரிசு அமைந்தவுடன் ஜாதகர் பெற்ற முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானது, மேலும் ஜாதகருக்கு நடைபெற்ற திசாபுத்திகள் சாதகமாக அமைந்தது ஜாதகரின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்தது.
பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்று தான் அமர்ந்த பாவகத்தை முழு அளவில் வலிமை பெற செய்வது முன் ஜென்ம கர்மவிணை பதிவினை இறைஅருளின் துணையுடன் கழித்துகொள்ளவும், பிறப்பில்லா யோக வாழ்க்கையை பெற்று ஜீவன் முக்தி பெறவும் சிறந்த வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், சிலருக்கு இளமையில் இன்னல்களையும், மத்திம வயதில் மிகுந்த யோக வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் நல்கும் வல்லமை பெற்றது, இது அவரவர் சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப மாறுபடும், மேலும் தாம் அமர்ந்த பாவக வலிமைக்கு ஏற்ப யோக பலாபலன்களை ஸ்திரமாக வாரி வழங்கும், எது எப்படி இருப்பினும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்றவர்கள் "வாழ்ந்து கெட்டவர்கள் " அல்ல, கெட்டபின்பு வாழ்ந்து காட்டுபவர்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சால சிறந்தது, இதை தவிர்த்து 1,2,5,6,7,8,12ல் அமர்வது தோஷம் என்று முடிவு செய்வது சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை மனதில் நிறுத்துவது அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக