Tuesday, May 29, 2012

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 3

 

ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில்  அமர்ந்தால் நன்மை செய்யுமா  தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.துலா லக்கினத்திற்கு


2 ம் வீடு விருச்சகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் திடீர் என வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை பெறுவார் , மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், தனது இல்லத்தரசி மூலம் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் திடீர் என வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் நிலை ஜாதகருக்கு கிடைக்கும், ஜாதகரின் மனம் எப்பொழுதும் சந்தோசம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவார் , இல்லத்தரசியின் சொல்படி கேட்டு நடந்தால் ஜாதகர் விரைவில் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் . 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் , வாக்கு என்ற அமைப்பில் .


4 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது ஜீவன வழியில் இருந்து அனைத்து வசதி வாய்ப்புகளையும் அடைவார் , தன அயராத உழைப்பால் உலகில் உள்ள அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மை ஜாதகருக்கு கிடைக்கும் , நல்ல வசதியான கலை நயம் மிக்க சொகுசு வீடு , உயர்ந்த சொகுசு கார் , சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு , அரசியலில் வெற்றி பெரும் தன்மை , நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக பல தொழில்களை செய்யும் யோகம் , வீடு , நிலம் , வண்டி வாகனம் மூலம் அதிக லாபம் பெரும் வாய்ப்பு என 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.

5 ம் வீடு கும்பத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்க இயலாது , மீறி இருப்பாரே ஆயின் ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் புத்திர சந்தான பாக்கியம் கிடைப்பது அரிது , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , மன நிம்மதி கிடைக்காது , நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கவே கிடைக்காது , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியிலே முடியும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்றுவிடுவது நல்லது  100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து என்ற அமைப்பில்.

7 ம் வீடு மேஷத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் பரிபூரண அதிர்ஷ்டம் பெற்றவர் , கூட்டு தொழிலால் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கி விடும் , மனைவி வழி அதிக சொத்துகள் நிறைய கிடைக்கும் வாய்ப்பு ஜாதகருக்கு உண்டு , கூட்டு தொழில் செய்வதால் ஜாதகர் அதிக லாபம் கிடைக்கும். முக்கியமாக தொழினுட்பம் , மருத்துவம் , 64 கலைகள், போன்ற துறைகளில் மிகசிறந்து விளங்கும் ஆற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே அமையும். களத்திர வழியிலும் , பொதுமக்கள் , நண்பர்கள் கூட்டு என்ற அமைப்பிலும், ஜாதகருக்கு இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.

8 ம் வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு வரும் வருவாய் அனைத்தையும் திடீர் என இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் அல்லது உடல் நிலை பாதிப்பை தரும் , ஜாதகர் முக்கியமாக பண விஷயத்திலும் , வாக்கு , வார்த்தை , பேச்சு ஆகிய அமைப்புகளில் கட்டுப்பாடுகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும், இல்லை எனில் ஜாதகர் படாத பாடு பட வேண்டி வரும் , மன தைரியம்  ஜாதகருக்கு அதிகம் தேவை தன்னம்பிக்கை அதிகம் தேவை இல்லை எனில் ஜாதகர் பாடு திண்டாட்டம்தான். இது 100 சதவிகித தீமையான பலனையே தரும்.

12 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம் அற்ற நிலை , எதிரிகள் தொந்தரவு , நோய் நொடி , கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும் தொல்லை மற்றவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்ப்படும் துன்பம், என்ற அமைப்பில் தீமையான பலனே நடக்கும்.

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்அதிக நன்மை , வட்டி தொழில் நல்ல முன்னேற்றம் , எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் எல்லாம் வெற்றி என்ற நிலையே ஜாதகருக்கு தரும்.விருச்சக லக்கினத்திற்கு


2 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு நல்ல குடும்பம் அமைவதில்லை , இதனால் சமுதாயத்தில் ஜாதகருக்கு நல்ல பெயர் கிடைப்பதில்லை, மேலும் வரும் வருவாய் அனைத்தையும் மற்றவர்களுக்கே செலவு செய்யும் நிலைக்கு ஆளாக்கும் , மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும், ஜாதகரின் நடவடிக்கையும் பேச்சும் நன்றாக அமைவதில்லை , தீயவர் சகவாசம் பணத்திற்காக எதையும் செய்யும் குணம் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை என இந்த அமைப்பு 100 சதவிகித தீமையான பலனையே தரும் .

4 ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு மிகசிறந்த அதிர்ஷ்ட வாழ்க்கை அமையும் , அதன் மூலம் சொத்து சுகம் , வீடு வண்டி வாகனம் என சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மை பெற்றவராக காணப்படுவார் , வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் அதிர்ஷ்டகரமாக  இயற்கையாக அமையும் , நல்ல வீடு நல்ல வாகனம் என்று மிகசிறந்த வாழ்க்கையை பெறுவார் , ஜாதகர் தொடும் அனைத்தும் பொன்னாகும், 4 ம் பாவக வழியில் ஜாதகர் 100 சதவிகித அதிர்ஷ்டங்கலையே பெறுவார் .

5 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் பரந்த மனப்பான்மை பெற்றவராகவும் , நல்ல ஒழுக்கங்களை கடைபிடிக்கும் தன்மை கொண்டவராகவும் , மற்றவர்கள் மதிக்கும் செயல்களை உடையவராகவும் காணப்படுவார் , ஆன்மீக வாழ்க்கை 100 சதவிகித வெற்றியை தரும் , எளிமையான தோற்றம் , போதும் என்ற மனம் , மற்றவர்களை தம்மை போல் கருதும் ஆற்றல் என ஜாதகர் பல நன்மையான பலன்களையே அனுபவிக்கும் யோகத்தை பெறுவார், நல்ல குழந்தை ஜாதகருக்கு கிடைக்க பெறுவார் , தனது குழந்தைகளால் சகல யோகங்களையும் மகிழ்ச்சிகளை அடையும் தன்மை ஜாதகருக்கு உண்டு இது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை தரும் அமைப்பு .

7 ம் வீடு ரிஷப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் களத்திர வழியில் அதிக கெடுதல்களை அனுபவிக்கு சூழ்நிலை ஏற்ப்படும், நண்பர்களாலும், கூட்டாளிகளாலும் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும். வருமானத்தை நல்ல முறையில் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்ப்படும் , பொதுமக்களால் பொருள் இழப்பு ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதால் , பொதுநல சேவைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நலம் தரும். களத்திரம் , கூட்டு , நட்பு , வருமானம் என்ற வகையில் இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

8 ம் வீடு மிதுன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும், ஜாதகர் முயற்ச்சி இல்லாதவராகவும் , தனம்பிக்கை அற்றவராகவும் , மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார்.

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், எழுத்து துறையில் நல்ல முன்னேற்றம் , கலைத்துறையில் வெற்றி திடீர் என்று செல்வ சேர்க்கை , மக்கள் ஆதரவு , எவ்வித பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் ஆற்றல் என நன்மையான பலன்களையே தரும் அமைப்பு .

12 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மனைவி வழியில் 100 சதவிகிதம் கெடுதலையே அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்படும், மேலும் நண்பர்களாலும், கூட்டாளிகளாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்ப்படும் , மக்கள் செல்வாக்கு என்பதே கிடைக்காது பொது காரியங்களுக்கு செல்வதால் மன நிம்மதி இழக்கக வேண்டி வரும் , அவசரப்பட்டு எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஜாதகரை படாத பாடு படுத்தி எடுத்துவிடும்.
தனுசு லக்கினத்திற்கு


2 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், குடும்பம் ,தொழில் அல்லது வருமானம் ஆகிய அமைப்புகளில் இருந்து சகல முன்னேற்றத்தையும் ஜாதகர் விரைவில் பெறுவார் , சுய தொழில் செய்வதால் ஜாதகர் மிகசிறந்த வெற்றிகளை பெறுவார் அதன் மூலம் நிறை வருவாயினை பெரும் யோகம் கிடைக்கும் , வட்டி தொழில் , நிதி நிறுவனம் , மக்களை முன்னிறுத்தி செய்யும் தொழில்களில் அதிக வருமானத்தை தரும் இந்த அமைப்பு 100 சதவிகிதம் நன்மையை தரும்.

4 ம் வீடு மீன  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்காது, ஜாதகர் வீட்டிற்கு வந்தவுடன் மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , நல்ல சுக போகங்களை அனுபவிக்க இயலாது, அனைவராலும் மன நிம்மதி இழப்பு ஏற்ப்படும் , நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் ஆசி பெறுவது நன்மை தரும்.  இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

5 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்க இயலாது , மீறி இருப்பாரே ஆயின் ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் புத்திர சந்தான பாக்கியம் கிடைப்பது அரிது , ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , அவசர கதியில் எடுக்கும் சில முடிவுகளால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டி வரும் . இது 100 சதவிகித தீமையான பலனை  தரும் அமைப்பு .

7 ம் வீடு மிதுன  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகர் களத்திர வழியில் அதிக கெடுதல்களை அனுபவிக்கு சூழ்நிலை ஏற்ப்படும், சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம் , கூட்டு தொழில் , நண்பர்கள் , என்ற வகையில் , பொதுமக்களின் ஆதரவு, எழுத்தாற்றல் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு என்ற அமைப்புகளில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும் , அரசியல் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும் .

8 ம் வீடு கடக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் திடீர் என மனநிலை பாதிக்கும், மன நோயாலும் , மன போராட்டாத்தாலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் தன்மை ஏற்ப்படும் , போதை பழக்கத்திற்கு ஆர்ற்படும் நிலை வரும்  மற்ற நபர்களாலும் தன்னாலும் திடீர் என பல இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் . இது தீமையை தரும் நிலை

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் மிகசிறந்த மனோத்தத்துவ நிபுனாராக விளங்கும் தன்மை ஏற்ப்படும் , மன ஆற்றலை கொண்டு அனைத்து விஷயங்களையும் சாதிக்கும் தன்மை பெற்றவராக இருப்பார் , மனம் எனும் சக்தியினை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் இது நன்மையை தரும் நிலை .

12 ம் வீடு விருச்சக  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர்  திடீர் என  வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை பெறுவார் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானத்தை பெரும் யோகம் பெற்றவர் , தனது மனோ சக்தியால் அனைத்தையும் பெரும் தன்மை பெற்றவர் , மனதிற்கு எட்டாத விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்து வெற்றி காண்பவர் , அரசு துறையில் இருந்து சகல சலுகைகளையும் பெரும் ஜாதக அமைப்பை கொண்டவர் , இது 100 சதவிகித  நன்மையை தரும் நிலை .

குறிப்பு :

சுய ஜாதகத்தில் நடப்பு  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்  2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க. 


மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட  வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது 
2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் . 


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !திருமண வயது வந்தவுடன்  தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல்  திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற  நிறைவான வாழ்க்கையாக அமைய  வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .

வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின்  பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1)  ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான் , ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும்.

2 ) ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம் , இனிமையாக பேசும் தன்மை , மனைவியை  உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை , நல்ல பாரம்பர்ய குடும்பத்தை சார்ந்த அமைப்பு , மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும்  தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.

3 ) ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் . மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும்  பல பேர் உதவி செய்வார்கள் .
 
( சில பேர்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள்  பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில் 
கொள்க .)

4 ) ஜாதகனுக்கு சத்துரு ஸ்தானம் எனும் ஆறாம் வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல நிலையில்  இருக்கு அமைப்பை பெற்ற ஜாதகன் தனது மனைவியை எந்த நிலையிலும் கைவிட மாட்டான் , மேலும் வாழ்க்கையின் இறுதிவரை  தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலை தரும் .

5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால்  ஜாதகருக்கு தனது மனைவி தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் , மற்ற பெண்களை தனது தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராக காணப்படுவார் , தனது வாழ்க்கை துணைக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கொண்டவராக இருப்பார் , கணவனும் மனைவியும் அன்யோநியமாக குடும்பம் நடத்தும் தன்மை அமையும் , இல்லற வழக்கை எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கும் .

6 ) ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தனது மனைவியின், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் ஜாதகருக்கு ஏற்ப்படும் , திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம் பெற இந்த ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருப்பது முக்கியம் , மேலும் நிரந்தர தொழில் அமையும் நல்ல குண இயல்பை ஜாதகர் கொண்டிருப்பார் .

மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகனுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகனை 100 சதவிகிதம்  நம்பி தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம் , அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.


வதுவை ( மணமகளை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின்  பெற்றோர்கள், மணமகளின்  ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1)  ஜாதகிக்கு  லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி  மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள்  , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்ப்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் , கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும் , கணவனிடம்  நல்ல பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள் . வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் . சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .

2 ) ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும் , தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்ப்படும் , இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள் , சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு
அமைந்திருக்கும் , தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள், குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும் , எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள் இதுவே இவர்களின் சிறப்பு அம்சம் .

3 )
ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும் , கற்பு  நெறியில் சிறந்து விளங்குபவளாகவும் , சகல வசதிகளையும் , நிறைவான மனமும் , மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் , சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள் , தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள் , குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள், அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .

4 ) ஜாதகிக்கு  பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால்
மட்டுமே , பிறக்கும்  குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும் , தனக்கு பிறக்கும் குழந்தை  பல உயரிய பண்புகளையும் , இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும் , ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் , நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார் .

5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும் , கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும் , தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார் , குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார் , கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள் , களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் . சமுதாயத்தில் தனது கணவனை மிகசிரந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள் .

6 ) ஜாதகிக்கு  8 ம் வீடு  தனது கணவனின் உடல்நிலையையும் , மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை இந்த பாவக வழியில் இருந்தே செயல் படும் , ஒரு பெண்ணின் ஜாதகத்தில்  இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான் , ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின்  உயிரை காப்பாற்றி வைப்பதே இந்த பாவகம் தான் என்பதை,  பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் ஆண்கள் அனைவரும்  உணர வேண்டும் .

7 ) ஜாதகிக்கு 12 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள் .
 
மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகிக்கு  நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம்.  திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும் .
 
குறிப்பு :

ஆண்பெண் இருவரது ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும்,  மேற்கண்ட அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றி பெரும், மேலும் மேற்கண்ட பாவகங்கள் நன்றாக இருந்து நட்சத்திர பொருத்தம் ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட )  இல்லை என்றாலும் அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தால் வாழ்க்கை 100 சதவீதம் நன்றாக இருக்கும்.

ராகு கேது , செவ்வாய் தோஷங்கள் என்பதெல்லாம் நடைமுறையில் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை என்பதே உண்மை , ஜோதிட அறிவு அற்ற ஜோதிடர்கள் வேண்டுமானால் இந்த தோஷங்களை பற்றி சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்யாலாம் , ஆனால்

ஜோதிட தீபத்திற்கு
மக்கள் ஜோதிட ரீதியான விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது மட்டுமே முக்கிய நோக்கம் ....

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

jothidadeepam@gmail.com

Saturday, May 26, 2012

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 2ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில்  அமர்ந்தால் நன்மை செய்யுமா  தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.


கடக லக்கினத்திற்கு

2 ம்  வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு பூர்விக அமைப்புகளில் இருந்து நல்ல வருமானம் பெரும் அமைப்பை தடையின்றி கொடுக்கும் , ஜாதகருக்கு வாக்கு பலிதம் ஏற்ப்படும், அரசு துறைகளில் பணியாற்றும் வய்ய்பினை ஜாதகர் பெறுவார். 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் , வாக்கு என்ற அமைப்பில் . 

4 ம்  வீட துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் களத்திர வழியிலும் கூட்டு அமைப்பிலும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்,100 சதவிகித தீமையான பலனையே தரும். 


5 ம்  வீடு விருச்சக ராசியில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து என்ற அமைப்பில் திடீர் இழப்பு என்ற வகையில். 

7 ம்  வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும் திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே. 

8 ம்  வீடு கும்பத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , நீடித்த அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் மற்றும் இருதார அமைப்பு , வங்கியில் அதிக சேமிப்பு வெளிநாடுகளில் இருந்து அதிக வருவாய் என்ற அமைப்பில் ,
 

12 ம்  வீடு மிதுனத்தில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,  

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் சுப விரயம் , மனநிம்மதி , நல்ல தூக்கம் என்ற அமைப்பில் ,


சிம்ம லக்கினத்திற்கு

2 ம்  வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம் அற்ற நிலை , எதிரிகள் தொந்தரவு , நோய் நொடி , கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும் தொல்லை மற்றவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்ப்படும் துன்பம், என்ற அமைப்பில் தீமையான பலனே நடக்கும்.

சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில்  ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்அதிக நன்மை , வட்டி தொழில் நல்ல முன்னேற்றம் , எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் எல்லாம் வெற்றி என்ற நிலையே ஜாதகருக்கு தரும்.


4 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் நல்ல குணமும் , செயல்பாடுகளும் கொண்டவராக காணப்படுவார் , தாய் வழியில் அதிக நன்மை பெரும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , நல்ல வசதியான வீடு , சொகுசான வண்டி வாகனம் சொத்து சுகம் அனைத்தும் ஜாதகருக்கு தீடிர் என கிடைக்கும் இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.


5 ம்  வீடு தனுசு ராசியில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையானபலனையே தரும் பூர்வீகத்தில் செய்யும் தொழில்களில் வெற்றி  , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து அதிக வருமானம், விரைவான முன்னேற்றம் , பல தொழில் நிர்வாகிக்கும் தன்மை, அனைவரிடமும் நல்ல பெயர் , அதிகார பதவி என்ற அமைப்பில்.  
 

7 ம்  வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும் திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே. 

8 ம்  வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் ஆயுள் , ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை, மன நிலை பாதிப்பு, திடீர் இழப்பு , வாகன விபத்து செய்தொழில் முடக்கம் என்ற அமைப்பில்,

12 ம்  வீடு கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும் , கடும் கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மன நிம்மதி என்பது ஜாதகருக்கு கிடைப்பது அரிது , தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் மூக்கை நுழைத்து மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஜாதகருக்கு ஏற்ப்படும் இதுவே ஜாதகருக்கு முதல் ஜென்மம்  இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும். 

தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் மிகுந்த பாக்கியசாலி, மறு ஜென்மம் கிடையாது இதுவே கடைசி ஜென்மம் , சமுதாயத்திற்கு சிறந்த சேவைகளை செய்யும் தன்மை , மக்கள் செல்வாக்கு இதனால் அதிக வருமானம் , நல்ல நிம்மதியான தூக்கம், சிறு வயதிலேயே ஞானம் கிடைக்க பெறுபவர்கள் , சிறந்த அரசியல் தலைவர்கள் , ஆன்மீக வாதிகள் , மத தலைவர்கள் மத குருமார்கள் என்று எப்பொழுதும் மக்களிடம் அதிக தொடர்புகளை கொண்டவர்கள் அனைவரும் இவர்களே. இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும். கன்னி லக்கினத்திற்கு

2 ம்  வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனம், குடும்பம் , வாக்கு , களத்திரம் , கூட்டு தொழில் , நண்பர்கள் மக்கள் ஆதரவு அற்ற நிலை , முன்னேற்றம் இல்லாத அமைப்பு தன் வாயாலே தானே கெட்டு போகும் நிலை , மற்றவர்களை புரிந்துகொள்ளும் தன்மை அற்ற நிலை என இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும். 


4 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் வாழ்கை என்பதே போராட்டமாக மாறிவிடும் , வசிப்பதற்கு நல்ல இருப்பிடம் அமையாது , நல்ல வீடு வண்டி வாகன யோகம் அமையாது , சொத்து சுக அமைப்பில் அதிக தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும். 


 5 ம் வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வசிப்பது அதிக நலம் தரும் , இல்லை எனில் ஜாதகருக்கு ஜீவனம் என்பதே அமைய வாய்ப்பு இல்லை , முன்னேற்றம் என்பது சிறிதேனும் கூட ஏற்ப்பட வாய்ப்பு இல்லை, அனைத்தும் தாமதமாக அமையும், ஆண்வாரிசு கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும் , உதவி செய்ய யாரும் வரமாட்டார்கள். இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும். 

 7 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மனைவி வழியில் அதிக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசாக திருமண வாழ்க்கை அமைந்து விடும் , மன நோயால் ஜாதகர் அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உண்டு, கூட்டாளிகளிடம் , நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிவரும் திடீர் என அவர்களே பரம வைரியாக மாறிவிடும் அபாயம் ஏற்ப்படும். இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும். 

8 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லை எனில் அதிக துன்பம் ஜாதகரை வாட்டி வதைக்கும் , வெப்ப நோய்களால் அதிகம் துன்ப பட வேண்டி வரும் அல்லது திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகர் முன் பின் யோசிக்காமல் செய்யும் அனைத்து காரியங்களும் கெடுதலையே தரும், ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.

12 ம் வீடு சிம்ம ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மிகசிறந்த முன்னேற்றங்களை பெறுவார், வெளிநாடுகளில் இருந்து செல்வ வளம் , அதிக முதலீடு செய்வதால் லாபம் , சகல துறைகளிலும் முன்னேற்றம் , இன்சுரன்ஸ் துறைகளில் அதிக லாபம் , அரசு துறைகளில் அதிக லாபம், ஒப்பந்த தொழில்களில் நல்ல முன்னேற்றம் அதிக வருமானம் என இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் நடப்பு  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்  2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க. 

மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட  வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது 
2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் . 


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Thursday, May 24, 2012

மிதுன லக்கினத்திற்கு லக்கினாதிபதி நின்ற இட பலன்கள் !

( கிழ்காணும் பலன்கள் இலக்கின பாவக பாகைக்குள் உட்பட்டு, சம்பந்த பட்ட வீடுகளின் பகைகளில்  அமரும்பொழுது தரும் பலன்கள் ஆகும் என்பதை கவனத்தில் கொள்க )

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுன ராசி மூன்றாம் வீடாக வருகின்றது இந்த ராசியை சுய ஜாதக அமைப்பில் லக்கினமாக கொண்டவர்களுக்கு ராசி அதிபதியான புத பகவான் கிழ்கண்டவாறு இரு வித நிலைகளில் , இரண்டு வித பலன்களை தருகிறார் .

மிதுன லக்கினம் இந்த ராசிக்கு அதிபதியான புதன் இரண்டுவித தன்மை கொண்டவராக பலனை தருகிறார், ஒன்று சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் பொழுது அசுபர் என்ற நிலையிலும் , சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும்பொழுது சுபர் என்ற  நிலையிலும் லக்கினத்திற்கு அமரும் இடத்திற்கு தகுந்தார் போல் பலனை தருகிறார் . 


 கவனத்தில் கொள்க :

1 ) சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன்  சேராமல் இருக்கும்பொழுது சுபர்
2 ) சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் பொழுது அசுபர்

மிதுன லக்கினத்திற்கு புதன் லக்கினத்தில் நின்றால் தரும் பலன் :

சுபர் :
          

ஜாதகர் லக்கினபாவாக வழியில் அனைத்து நன்மையையும் பெறுவார் , லக்கினம் 100 சதவிகிதம் நன்மையை மட்டும் தரும் , ஜாதகருக்கு சிறந்த கல்வி அறிவு , அடிப்படை கல்வியில் தடையில்லா நிலை , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி , தனது அறிவு வழியில் சிறப்பான எதிர்காலத்தை தானும் , மற்றவர்களுக்கும் ஏற்படுத்தி கொள்ளும் தன்மை , நீண்ட ஆயுள் , கலைகளில் நிகரற்ற புலமை மற்றும் திறமை , சிறந்த விளையாட்டு வீரர் என்ற நிலை என ஜாதகர் மிகவும் சிறந்து விளங்குவார் .

அசுபர் :
            

 ஜாதகர் தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வார் , இலக்கின வழியில் 100 சதவிகித தீமையான பலனையே ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும், மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் . இந்த நிலை ஜாதகரை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கும் .

 
மிதுன லக்கினத்திற்கு புதன் 2 ம் வீடு கடகத்தில்  நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
            

நல்ல பலனை ஜாதகருக்கு நிச்சயம் வழங்க வாய்ப்பு இல்லை , மேலும் தனது வாயாலேயே வம்புகளில் மாட்டிக்கொள்ளும் நிலை ஜாதகருக்கு ஏற்படும் , நல்ல வருமானம் பெற இயலாது , குடும்பவாழ்க்கையில் மிகவும் சிரமப்பட வேண்டி வரும் , தனது பேச்சால் மாற்ரவர்களின் மனைதை அதிகம் நோகடிக்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும், இதனால் இவருடடைய மன நிலையம் பாதிக்கும், இது அவ்வளவு  சிறப்பானது அல்ல ஜாதகருக்கு இலக்கின அமைப்பிற்கு .

 

மிதுன லக்கினத்திற்கு புதன் 3 ம் வீடு சிம்மத்தில்  நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
           
மிக சிறந்த அதிர்ஷ்டசாலி , நல்ல திறமைகள் ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும் , முன்னேற்றாம் என்பது ஜாதகருக் நிலையானதாக இருக்கும் , எழுத்தின் மூலம் நல்ல வருமான பெரும் தன்மை ஜாதகருக்கு நிச்சயம் ஏற்ப்படும் , கலைத்துறையில் சிறந்து விளங்கும் புத்திசாலித்தனமும் , அதிர்ஷ்டமும் கொண்டவர்கள் ,இவர்கள் 60 சதவிகிதத்தினர் காதல் மனம் புரிந்துகொண்ட மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு மிக சிறப்பாக வாழ்க்கை நடத்துகின்றனர் . இந்த நிலை ஜாதகருக்கு மிகசிறந்த நன்மைகளையே தரும் .

 

மிதுன லக்கினத்திற்கு புதன் 4 ம் வீடு கன்னியில்  நின்றால் தரும் பலன் :

 சுபர் :
         

 தாய் வழி , வீடு  வண்டி வாகனம் , சொத்து , சுக அமைப்புகளில் ஜாதகர் 100 சதவிகிதம் தீமையான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பு லக்கினத்திற்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

அசுபர் :
        

தாய் வழி , வீடு  வண்டி வாகனம் , சொத்து , சுக அமைப்புகளில் ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையான பலன்களும் , தனது அறிவு வழியில் சொத்து சுக செக்கையும் கொண்டவர்கள் , மிகசிறந்த யோக நிலையை ஜாதகருக்கு லக்கினவழியில் தரும் , ட்ரவல்ஸ் , டிக்கட் முன்பதிவு அலுவலகம் , கமிசன் துறை , புரோக்கர் , என்ற அமைப்புகளில் ஜாதகருக்கு மிகசிறந்த நன்மையே தரும் இந்த நிலையில் புதன் இங்கு அமர்வது யோகமே .

மிதுன லக்கினத்திற்கு புதன் 5 ம் வீடு துலாம் ராசியில் நின்றால் தரும் பலன் :

 சுபர் :
         

 இறைஅருள் இயற்கையாக ஜாதகருக்கு துணை புரியும் , சொல்லும் நல் வாக்கு நிச்சயம் பலிதமாகும் , தெய்வீக தரிசனங்கள் & அனுபவங்கள் ஜாதகருக்கு  ஏற்ப்படும் , பின்னால் வருபவைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆற்றல் மிக சிறப்பாக அமைந்திருக்கும் , மிகசிறந்த தெய்வீக சக்தி ஜாதகரின் உடலில்  குடிகொண்டு  இருக்கும் . இவரால் மக்கள் அனைவரும் நலம் பெறுவார்கள் , இவர்களின் கை விரல் பட்டால் பல நோய்கள் குணமடையும் , ஜாதகர் இந்த நிலையை தனது தவ வழிமையால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் . இது மிகவும் சிறப்பான பலனை தரும் அமைப்பு .

அசுபர் :
             

 மேற்கண்ட அமைப்புக்கு நேர்மாறாக ஜாதகர் காணப்படுவார் தனது பூர்விக்கத்தை விட்டு வெகு தொலைவு பாரதேச ஜீவனம் நடத்த வேண்டி வரும் , மீறி பூர்வீகத்தில் இருந்தால் மனநிம்மதி , பூர்வீக சொத்துகள் அனைத்தையும் இழக்க வேண்டி வரும் , இத்துடன் பூர்வீகமும் பாதிக்க படுமாயின் ஆண் குழந்தை பேரு கிடைக்க வாய்ப்பு மிக குறைவு . இது ஒரு சிறப்பற்ற நிலை .

மிதுன லக்கினத்திற்கு புதன் 6 ம் வீடு விருச்சக  ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
                      

அனைத்து விதத்திலும் ஜாதகர் தொல்லை அனுபவிக்க வேண்டி வரும் , புராதன பொருட்களால் லாபம் ஆனால் அது நிலைக்காது , உடல்நிலையில் அதிக கவனம் ஜாதகர் செலுத்த வேண்டி வரும் , கடன் வாங்குவதும், கொடுப்பதும் அவ்வளவு நன்மைதருவதில்லை , ஆனால் எதிரியை வெல்லும் ஆற்றால் ஜாதகருக்கு ஏற்ப்படும் , உடல் பலம் அதிகம் இல்லை என்றாலும் , மனோ பலம் மிகுந்து காணப்படும் , அறிவை நல்வழியில் செலுத்துவது நல்லது இல்லையெனில் ஜாதகர் பாடு திண்டாட்டம் தான் . இந்த நிலை ஜாதகருக்கு அவ்வளவு  நன்மை தருவதில்லை .

மிதுன லக்கினத்திற்கு புதன் 7 ம் வீடு தனுசு  ராசியில் நின்றால் தரும் பலன் :
 
சுபர் :
         

 100 சதவிகித தீமை லக்கினத்திற்கு தீமையான பலனையே ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும், மற்றவரை சார்ந்து வாழும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் . இந்த நிலை ஜாதகரை மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கும் . ஜாதகர் தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வார், மற்றவர் பேச்சை கேட்க்கவும் மாட்டார் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்ற பிடிவாத குணத்தை தந்துவிடும் , இது நல்லதல்ல நண்பர்கள் வழியில் அதிக தீமையான பலன் நடைபெறும் .

அசுபர் :
            

ஜாதகர் லக்கினபாவாக வழியில் அனைத்து நன்மையையும் பெறுவார் , லக்கினம் 100 சதவிகிதம் நன்மையை மட்டும் தரும் , ஜாதகருக்கு சிறந்த கல்வி அறிவு , அடிப்படை கல்வியில் தடையில்லா நிலை , துவங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி , தனது அறிவு வழியில் சிறப்பான எதிர்காலத்தை தானும் , மற்றவர்களுக்கும் ஏற்படுத்தி கொள்ளும் தன்மை , நீண்ட ஆயுள் , கலைகளில் நிகரற்ற புலமை மற்றும் திறமை , என மிகவும் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , நபர்கள் மற்றும் மனைவியால் அதிக நன்மையை ஜாதகர் அடைவார் .

மிதுன லக்கினத்திற்கு புதன் 8 ம் வீடு மகர   ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் & அசுபர் :

ஜாதகர் உடல் நிலை அதிகமாக பாதிக்க படகூடும் , அல்லது வண்டி வாகன விபத்துகளில் திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , பண இழப்பு திடீர் என நிகழ அதிக வாய்ப்பு உள்ளாது , மேலும் ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் காரியங்களால் அதிக பதிப்புகளை அடைவார் , ஜாதகர் பண விவகாரங்களில் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம் . இந்த நிலை ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை செய்வதில்லை லக்கினத்திற்கு . இழப்புகள் எதிர்பாராத நேரங்களில் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் .

மிதுன லக்கினத்திற்கு புதன் 9 ம் வீடு கும்ப ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் :
          ஜாதகர் மிகசிறந்த நன்மைகளை பெரும் அமைப்பை பெறுவார் ,செல்லும்  இடங்களில் எல்லாம் நல்ல பெயர் ஏற்ப்படும் , மக்களிடம் நன்மதிப்பு பெயரும் புகழும் கிடைக்கும் , மிகசிறந்த ஆன்மிக வாதி , பெரியமனிதர்கள் என்ற தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , தனது அறிவு திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , மிகசிறந்த வழக்கறிஞர்கள் இந்த அமைப்பை பெற்றவர்களே . இது 100 சதவிகித நன்மையை தரும் .

அசுபர் :
              மேற்கண்டவற்றிற்கு நேர் எதிராக ஜாதகர் காணப்படுவார் , மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது நிச்சயம் இயலாது , தனது அறிவாற்றலை விரையம் செய்யும் நிலைக்கு ஜாதகர் தள்ள படுவார் , இது 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 10 ம் வீடு மீன  ராசியில் நின்றால் தரும் பலன்:

சுபர் :
 ஜாதகர் தொழில் முறையில் அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் , தொழில் சிப்பாக அமையாது , அதிக போராட்டங்களை ஜாதகர் வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும் , தனது தகப்பனார் அமைப்பில் இருந்து எவ்வித நன்மையையும் பெற இயலாது , அவர் வழியில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிவரும் , ஜாதகரின் ஜீவன வாழ்க்கை அதிகம் பாதிக்க படும்
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

அசுபர் :
செய்யும் தோழிகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் பெறுவார் ஜாதகர் , ஜீவன வழியில் அதிக நன்மை தகப்பானார் சொத்துக்களை ஜாதகர் அனுபவிக்கும் யோகம் , செய்தொழில் நல்ல முன்னேற்றம் . கூட்டு தொழில் செய்வதால் அதிக லாபம் , சிறப்பான எதிர்காலம் நல்ல வருமானம் , வண்டி வாகனங்களை வைத்து வியாபாரம் செய்வதால் அதிக லாபம் என
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 11 ம் வீடு மேஷ  ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
ஜாதகர் மிகசிறந்த யோகசாலி , அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையினை ஜாதகர் வாழ்நாள் முழுவது அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் , செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றியை தரும் , இரு தார அமைப்பை ஜாதகர் பெறக்கூடும் , திருமண வாழ்க்கையினால் அதிரடி முன்னேற்றங்களை ஜாதகர் பெறுவார் , அதிர்ஷ்ட தேவதையின்  பரிபூரண ஆசி ஜாதகருக்கு எப்பொழுதும் நிறைந்து நிற்கும் . வாழ்க்கையில் திடீர் என பணம் , பட்டம், புகழ் , என குறுகிய காலங்களில் முன்னேற்றத்தை பெரும் ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இவர்கள் 
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையான பலனை தரும் அமைப்பு .

மிதுன லக்கினத்திற்கு புதன் 12  ம் வீடு ரிஷப ராசியில் நின்றால் தரும் பலன் :

சுபர் & அசுபர் :
அனைத்திற்கும் கெடுதல் , அனைவராலும் மனநிம்மதி இழப்பு , உடல் நிலைபாதிப்பு , தேவையற்ற விரையம் என ஜாதகரை வாட்டி வதைத்து விடும் , குறிப்பாக உடல்நிலையிலும் , மன நிலையிலும் ஜாதகர் கவனம் செலுத்துவது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பப்பட வேண்டி வரும் ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் , அதிக முதலீடு செய்யும் தொழில்களில் ஜாதகர் இறங்குவது அவ்வளவு நல்லதல்ல , மற்றவர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் பழகுவது நன்மைதரும் ,
இது லக்கினத்திற்கு 100 சதவிகிதம் தீமையான பலனை தரும் அமைப்பு .

குறிப்பு :மேற்கண்ட பலன்கள் சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவக  பலனை  திசைகள் புத்திகள் . அந்தரம் , சூட்சமம் ஆகியவைகள்  நடத்தினால் மட்டுமே பலன் நடைமுறைக்கு வரும்  என்பதை கவனத்தில் கொள்க .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

Tuesday, May 22, 2012

மிதுன லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது தரும் பலன் !


மிதுன லக்கினம் காலபுருஷ தத்துவத்திற்கு மூன்றாம் வீடாகவும், காற்று தத்துவ உபய ராசியாகவும் அமைகிறது  , சுய ஜாதகத்தில் மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினத்தில் ராகு அல்லது கேது அமரும்பொழுது , இலக்கின பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே எடுத்துக்கொண்டு பலனை நடத்துவார்கள், அப்படி பார்க்கும் பொழுது மிதுனலக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்வது 100 சதவிகித நன்மையே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெறுவார்.

ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நல்ல அமைப்பை பெற்றிருக்கும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு இயற்கையாகவே நல்ல முறையில் அமையும் , ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும் , சிறந்த விளையாட்டு வீரராக திகழும் தன்மை ஏற்ப்படும் , இவர்களிடம் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் , தமக்கோ , அல்லது பிறருக்கோ ஏற்ப்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான ஆலோசனை வழங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே , சமயோசிதமான புத்திகூர்மை , மற்றவர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கும் அதி புத்திசாலி தனம் , அதிக அறிவாற்றல் திறன் , என இந்த லக்கினத்திற்கு உண்டான பலனை ராகு , கேது விருத்தி செய்து தரும் .

ஜாதகரின் சுதந்திர மனப்பான்மைக்கு குறுக்கே எவர் வந்தாலும் , அவரை தனது புத்திசாலி தனத்தால் எளிதாக கழட்டிவிடும் தன்மையும் ஏற்ப்படும் , ஒரு தொழில் நிறுவனம் சிறப்பாக இயங்க இந்த அமைப்பை பெற்றவர்களை நிர்வாகத்தில் வைப்பது சாலச்சிறந்தது , காரணம் இவர்களின் அணுகுமுறை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபாடும் , நலிந்த நிறுவனங்களை கூட தனது புத்திகூர்மையாலும் , நிர்வாக திறமையாலும் வெகு விரைவில் வெற்றி பெற செய்யும் தன்மை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு .

ஜாதகரை  மாஹாபாரத்தில் வரும் இருவருடன் ஒப்பிட முடியும் ஒருவர் பகவான் கிருஷ்ணர் , இன்னொருவர் ராஜ சகுனி , இதில்  பகவான் கிருஷ்ணர் தனது அறிவு திறனால் பாண்டவர்களை வாழவைத்தார், ராஜ சகுனி தனது அறிவு திறனால் கௌரவர்கள்  அழிவுக்கு காரணமாக விளங்கினார் , அதுபோல் ஜாதகர் சேரும் இடத்திற்கு ஏற்றார் போல் நன்மையையும் , தீமையும் பெறுவார்கள் , இவர்கள் நினைத்தால் தனது அறிவு திறனால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பதே உண்மை , நல்வழியில் நடந்து நலம் பெருக .

ஜாதாகர் இலக்கின வழியில் 100 சதவிகிதம் நன்மை பெற்றாலும், களத்திர , கூட்டாளி , கூட்டு ஆகிய வழியில் 100 சதவிகிதம் தீமையான பலனே நடக்கும் , இதற்க்கு காரணம் களத்திர பாவகத்தில் அமரும் ராகு , கேது கிரகமே, வெளியில் சகல விதங்களிலும் வெற்றிபெறும் ஜாதகர் வீட்டில் தனது மனைவியை கண்டால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார் , சிலர் தன் மனைவியிடம் அடி வாங்காத ஏரியாவே கிடையாது என்ற நிலை ஏற்ப்படும் .

தனது  மனைவிக்கு கோபம் வந்து விட்டால் அன்றைக்கு ஜாதகர்தான் பலிகட.  கரண்டி , பருப்பு மத்து , பூரிகட்டை என்று ஜாதகறது இல்லத்தரசி கையில் வைத்துள்ள , பொருட்களில் பாரபட்சம் இல்லாமல் பூஜை நடக்கும். உள்ளே நன்றாக வாங்கிகொண்டு வெளியே வந்து நான் என் பொண்டாட்டியை, அடிப்பேன் , குத்துவேன் ,வெட்டுவேன் , யாராவது கேட்டா அவர்களையும் அடிப்பேன் , குத்துவேன் ,வெட்டுவேன்  என்று நம்ம கவுண்டமணி கணக்கா டயலாக் விடும் நிலைக்கு ஜாதகர் ஆளாக வேண்டும்.

ஆக மிதுன இலக்கின ஜாதகர்கள் அனைவரும் தனது மனைவியிடம் சற்றே பயபக்தியுடன் இருப்பது நலம் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


  

நாகதோஷம்,சர்பதோஷம் பற்றிய உண்மை விளக்கம் ! பகுதி 1ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள், இந்த பாவக காராக வழியில் 100 சதவிகித தீமையான பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் , உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களும் அனுபவிக்க பிறந்தவர்கள் என்ற ரீதியில் கருத்தை ஒரு வலை பதிவில் கண்ட பொழுது ராகு கேது பற்றிய இப்படி தவறான கருத்தை மக்களிடம் பரப்பும் பொழுது இதனால் பாதிப்படைபவர்கள் அதிகம், என்பதை இவர்கள் உணரமாட்டார்களா என்ற எண்ணமே தோன்றியது.

 மேலும் சரியான காலத்தில் திருமணம் நடக்க வேண்டிய இளம் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் ராகு கேது தோஷம் , நாக தோஷம் , களத்திர தோஷம் , காலசர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் , என்று பல ஜோதிடர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளறுவதால் சரியான காலத்தில் நடக்க வேண்டிய திருமணம், காலதாமதம் ஆவதற்கு தாங்களே காரணம் என்பதையும், இதனால் ஏற்ப்படும் வினை பதிவினை ஜோதிடன் ஆகிய தாமே அனுபவிக்க வேண்டும் என்பதை உணர மறுக்கின்றனர்.

இனியும் இது போன்ற குழப்பங்கள் மக்களுக்கு ஏற்ப்படக்கூடாது என்ற எண்ணமும் ,  இந்த பதிவு மக்களுக்கு சரியான ஜோதிட ஆலோசனையும் , ஜோதிடத்தில் விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தும் என்ற நோக்கிலும் நாங்கள் இந்த பதிவை மக்கள் அனைவருக்கும் வழங்குகிறோம் .

முதலில் ராகு கேது எனும் இரு கிரகங்களும்
லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று எந்த லக்கினத்திற்கு
2,4,5,7,8,12 ம் வீடுகளில்  அமர்ந்தால் நன்மை செய்யுமா  தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.

 


மேஷலக்கினத்திர்க்கு

2 ம்  வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,

4 ம்  வீடு கடகத்தில்
ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.

5 ம்  வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,

7 ம்  வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,


8 ம்  வீடு விருச்சகத்தில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,

12
ம்  வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,
   


 

ரிஷப லக்கினத்திற்கு 

2 ம்  வீடு மிதுனத்தில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,

4 ம்  வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.

5 ம்  வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில்.

7 ம்  வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,

8 ம்  வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,

12 ம்  வீடு மேஷத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில்       

 


மிதுன லக்கினத்திற்கு

2 ம்  வீடு கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.

4 ம்  வீடு கன்னியில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,

5 ம்  வீடு துலாம் ராசியில்  ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,

7 ம்  வீடு தனுசு  ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,

8 ம்  வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,

12 ம்  வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் , 

குறிப்பு :


சுய ஜாதகத்தில் நடப்பு  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள்  2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க.

மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட  வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .

மேலும் இது 
2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் . 


பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை . 
 

தொடரும் ....வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

jothidadeepam@gmail.com