Saturday, March 31, 2012

குழந்தை பாக்கியம் !இதில் குழந்தை என்பது ஐந்தாம் பாவத்தையும் , பாக்கியம் என்பது ஒன்பதாம் பாவத்தையும் சேர்ந்தே குறிக்கிறது , இதிலிருந்து நாம் உணர வேண்டியது பாக்கியம் என்னும் பாவம் ஒருவருக்கு 100  சதவிகிதம் நன்றாக இருப்பது, மிக முக்கியம் ஏன் எனில் ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் குழந்தை நிச்சயம் உண்டு .

 ஆனால் ஒன்பதாம் பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை சிறப்பான திறமைகளும் , நல்ல குணங்களும் பரிபூரணமாக நிறைந்த அதிர்ஷ்ட வாழ்க்கையை வழங்கும் ஜாதக அமைப்பை பெற்று இருக்கும். 


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே , அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் , பெற்றோர் மற்றும் முன்னோர் செய்யும்  பாக்கியமே ! என்று சொல்வதே சாலசிறந்தது .

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் குழந்தை பருவத்தையும் , இளமை பருவத்தையும், நல்ல நிலையில் அமைய வேண்டும் எனில் நிச்சயம் இந்த  ஐந்தாம் பாவகமும் , ஒன்பதாம் பாவகமும் 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும்.

 இந்த இரு பாவங்களும் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சேர்ந்தவர்களின் குழந்தை பருவம் மற்றும் இளமை பருவம் இரண்டும் வெகுவாக பாதிக்கப்படுவது நிச்சயம் .

 மேலும் அஸ்திவாரம் நன்றாக இல்லாத கட்டிடம் நிலைத்து 
நிற்பதில்லை , அதுபோல் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்  தனது குழந்தை பருவத்தையும் , இளமை பருவத்தையும் பல சிரமங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் இந்த அமைப்பை பெற்ற குழந்தையின் பெற்றோர் அல்லது அந்த ஜாதகரோ   குல தெய்வ வழிபாட்டினையும் , பித்ரு கர்மங்களையும் , தொடர்ந்து செய்து வருவதால் ஜாதகருக்கு இந்த பாவகங்கள் வலிமை பெரும் .

சம்பந்தப்பட்ட பாவகங்களின் வழியே சகல நன்மையையும் பெற முடியும் , மேலும் ஜாதகரின் வாழ்க்கை படி படியாக முன்னேற்றம் அடைவார் என்பது நிச்சயம் , நடைமுறையில் பயன்படுத்தி நன்மை பெறுங்கள் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421345 
9443355696    

Friday, March 30, 2012

"ருண பந்தம்"


உலக " வாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்" என்றார் கவியரசர்.

" போனால் போகட்டும் போடா " என்று விரக்தியானவர்கள் சொல்லலாம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் யாரோருவரும் அப்படி நினைக்கலாமோ? வாழ்க்கை என்பதெல்லாம் உவமான, உவமேயமே அன்றி வேறில்லை. இது யாவருக்கும் பொருந்தும்.

இறை அருளின் கருணையினாலும் , பூர்வ ஜென்ம புண்ணியத்தை அனுசரித்தும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன்களை ( ருணம் ) ஏற்றுக்கொண்டே பிறக்கிறார், அவை :

1 ) தேவ ருணம் :

தேவ ருணம், " அணையாத அக்னி காரியங்களை செய்வதால் தீரும் என்பது நியதி " கலியுகத்தில் 
இது சாத்தியம் இல்லை. பின் எவ்வாறு தீர்ப்பது ?

அனுதினமும் ஆண்டவனை ஆரதிப்பதோடு நில்லாமல் " குல தெய்வத்தை
 கொண்டாடுவதால் தீரும் " .

ஒரு ஜாதகர் எவ்வளவு கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்தாலும், துயரமும், சோதனைகளும் வந்தாலும் குல தெய்வத்திடம் மனம் உருக வேண்டினால் பாரம் குறையும், மார்க்கம் பிறக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .

வம்சா வளியினருக்கு, மொட்டை அடிப்பது, காது குத்துவது மட்டும்  " குல தெய்வத்தை நாடினால் போதும் என்றில்லாமல், பிறந்த நாள் , திருமண நாள் , அமாவாசை  , பொர்ணமி , மஹாலய பட்சம் , சொத்து வாங்கும் போதும், இன்ன பிற முக்கியமான நிகழ்வுகளின் போதும், " குலம் தளைக்க உதவிடம்மா" என குல தெய்வத்திடம் வேண்டிட வேண்டும் .

எளிமையாக சொன்னால் , நமது மாவட்ட கலெக்டர்தான் நமக்கு உதவுவார், 
மேலும் அது அவரது கடமை , வேறு அதிகாரி ஒருவரை, எனக்கு அவரை 
தெரியுமே என்றாலும், அவரால் எதோ பரிந்துரைக்க முடியுமோ தவிர 
"Executor" நம் குல தெய்வமே .

" நான் பாவி, பாவ கர்மமுடையவன், பாவத்தையே  செய்பவன் , 
பாவத்துடன் சம்பந்தம் உடையவன் உம்மை சரணடைந்தேன். 
என்னை காப்பாற்ற வேண்டும் என்று இறை நிலையை " அபயம் " என்று அடைந்தால் " வரதம்" கொடுத்தேன் என இறைவன் இறங்குவார்.

ஆக லயிப்புடன் , பக்தி செலுத்தி வேண்டுதல் நலம் தரும் , நம் ஆணவம் , கன்மம் , மாயை , நீங்கி சத் , சித் , ஆனந்த நிலையை அடைய 
" சிரத்தையுடன்" பிரார்த்திக்க வேண்டும் .

வீட்டுக்கு ஒரு பிரதிநிதி என்றில்லாமல் குழந்தை, குட்டிகளோடு,
 குடும்பத்தோடு  பிரார்த்திக்க வேண்டும் . இதனால் அடுத்த 
சந்ததிக்கு இதன் அருமை மற்றும் பாரம்பரியம்  புரியும்.

2 ) ரிஷி ருணம் :

உலக நன்மையின் பொருட்டு சான்றோர்கள் பலர் சிறந்த 
சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவற்றை தானும் 
கசடற கற்று, பிறருக்கு கற்க உதவிட வேண்டும் . " கல்வி கொடை" மிகச்சிறந்தகும். வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு " கல்வி கற்க உதவி செய்வது மிக சிறந்த தொண்டாகும் .

3 ) பித்ரு ருணம் :


நாம் நமது முன்னோருக்கு கடமை பட்டுள்ளோம் , அவர்கள் 
எவ்வுலகில் இருந்தாலும் , எந்த   நிலையில் இருந்தாலும் , அவர்கள் நன்மை கருத்தில் குறித்து நித்தமும் எண்ணுதல் வேண்டும் .

உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு பணிவிடை செய்வது பித்ரு ருணத்தின் ஒரு பகுதியாகும் , சொல்ல போனால் பெருகிவரும் முதியோர் இல்லங்கள் தேவையில்லையோ என என்னும்படி வாழ வேண்டும் .

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " எனும் குறள் படி தென்புலத்தார் ஐந்து வகையானவர்கள் :

புரூரவர்கள்          - தேவர்களின் அம்சம்
ஆருத்ரவர்கள்     -  ரிஷிகளின் அம்சம்
வசுக்கள்                 -  அமரரான தந்தை
ருத்ரர்                       -  அமரரான தாத்த
ஆதித்யர்                 -  அமரரான முப்பாட்டனார்

இவர்களை வழிபடுவது தலையாய கடமையாகும் .

4 ) நர ருணம் :

சக மக்களுடைய பசி, பிணி , இவைகளை  போக்க உதவுவது, சுற்றியுள்ளோர் வாழ்க்கையை பன்படுத்துதலும் மற்றும் பல தொண்டுகள் நர ருணத்தை தீர்க்கும் .

அன்னதானம்  செய்தாலும் , மருத்துவ முகாம்கள் , இன்ன பிற உதவிகளும் செய்வது இதன் காரணமாகத்தான் .

5 ) பூத ருணம் :

கால்நடைகள் உள்ளிட்ட மற்ற ஜீவன்கள் மனித வாழ்க்கைக்கு பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன . அவ்வுயிர்களை பேணி பாதுகாப்பது நமது கடைமைகளில் ஒன்றாகும் .


நன்றி :  திரு ஆர் மணிவண்ணன்

ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 

                  

Monday, March 26, 2012

கடன் தீர ! செல்வம் வளம் பெற !கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் ! என்று கடன் பெற்றவர்களின்  நிலையை கம்பர் இலக்கிய 
நயத்துடன், தனது இலக்கியத்தில் செல்லியிருப்பார் .

பெரியவர்களும் நெருப்பு ,  பகை, கடன் ஆகியவைகளை மிச்சம்   வைக்க கூடாது அப்படி வைத்தால் அது அவர்களது கழுத்தை நெரிக்கும் என்று எச்சிரிக்கை செய்துள்ளனர்.

கேள்வி :

சரி ஜாதக ரீதியாக மீள கடனில் மூழ்கிவிடும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன செய்தால் கடனில் இருந்து மீண்டு நல வாழ்வினை பெற முடியும் ?

இதற்க்கு சரியான வழி என்ன ? மேலும் பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவது எப்படி ? இதற்க்கு ஜோதிட ரீதியான தீர்வுதான் என்ன ? ஜோதிடம் இந்த சிரமத்தில் இருந்து விடுபட வழி காட்டுகிறதா ?

பதில் :

நிச்சயம் இதற்க்கு ஜோதிடம் சரியான வழிகாட்டுதலை வழங்குகின்றது , சுய ஜாதகத்தில் இரண்டாம் வீடு , ஆறாம் வீடு என  இருவீடுகள் முறையே 6  , 8  , 12  பாவத்துடன் தொடர்பு பெறுமாயின்
ஜாதகர் கடன் சுமையால் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், 
ஆறாம் வீடு எந்த பாவத்துடன் சம்பந்தம் பெறுகிறதோ அந்த பாவ 
அதிபதியாக வரும் கிரக சக்தியை ஜாதகர் உயிர்கலப்பு பெற்றால்
ஜாதகரின் வாழ்க்கை கடன் நிலையில் இருந்து வெகு விரைவில்
மீண்டு பொருளாதார வாழ்வில் ஏற்றம் பெறுவார் .

ஜாதகர் எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்க பட்டிருந்தாலும்
காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்ஷி அம்மனை,
 ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி 
வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து மீட்டு 
சகல யோகமுடன் மன நிறைவான வாழ்வினை தருவாள் என்பது 
கண்கூடாக  கண்ட உண்மை . சுய ஜாதக அமைப்பில் இந்த நிலையால் 
பாதிக்க பட்டவர்கள், இதை செய்து பாருங்கள் உங்களின் வாழ்வில் 
அபரிவிதமான முன்னேற்றமும், மன நிறைவான வாழ்வினையும் பெறுவீர்கள் இது நிச்சயம் நடக்கும்  .

மேலும் சில குறிப்புகள் :

சுய ஜாதக அமைப்பில்  இரண்டாம் வீடு , ஆறாம் வீடு என  இருவீடுகள் முறையே 6  , 8  , 12  பாவத்துடன் தொடர்பு பெறுமாயின்   

ஜாதகர் முடிந்த வரை கடன் பெறாமலே வாழ்க்கை நடத்துவது நலம் தரும் அதாவது உள்ளதை கொண்டு சிறப்பாக வாழ்வது . ஒரு வேலை கடன் வாங்கும் நிர்பந்தம் ஏற்ப்படுமாயின், செவ்வாய் கிழமைகளில் கடன் பெறுவதும், கடனை திருப்பி  செலுத்துவதும் கடனில்லாத வாழ்வை தரும் .

மேலும் விளக்கம் பெற நேரில் அணுகவும் :

ஜோதிடன் வர்ஷன்
98424 -21435
94433 -55696

Friday, March 23, 2012

சுய ஜாதக அமைப்பில் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும், 5 ம் வீடு வலு விழந்து இருந்தால், ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ?


 கேள்வி :

சுய ஜாதக அமைப்பில் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  எனும், 5 ம் வீடு வலு விழந்து இருந்தால், ஜாதகர் என்ன  செய்ய வேண்டும் ?பதில் :

ஜாதகர் தனது பூர்விகம் எதுவோ அந்த ஊரை விட்டு 100  கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று ஜீவனம் மற்றும் குடும்பம் நடத்துவது சகல நலம் தரும்.


பாதிக்கப்பட்ட பூர்வ புண்ணியம் சர ராசியாக இருந்தால் ஜாதகர் நிலை மிகவும் மோசமான பதிப்புக்களை சந்திப்பவராக இருப்பார்.  

ஜாதகரின் முன்னேற்றம்  என்பது 100  சதவிகிதம் பாதிக்கப்படும்.
 கல்வியை  நிறைவு செய்ய முடியாத தன்மை, சரியான தொழில் அமைவதில் சிக்கல் , திருமண தாமதம் , பொருளாதார முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை முறை , உடல்நிலை பாதிப்பு , தனது உடலை தானே கெடுத்துக்கொல்லுதல், போதைக்கு அடிமை , மன நிம்மதி இல்லாத வாழ்க்கை , மற்றவரை சார்ந்து வாழ்க்கை நடத்துதல்


மேலும் புத்திர பாக்கியம் இல்லாத நிலை , மற்றவர்களுடனும் உறவினருடனும் , நல்ல தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடியாத நிலை , உளவியல் ரீதியான பிரச்சனைகள் , சட்ட ரீதியான பிரச்சனைகள் என ஜாதகரை ஒரு வழி செய்துவிடும் இந்த பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டால் .

இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட ஜாதகர் செய்ய வேண்டியது தனது பூர்வீகத்தை விட்டு எல்லை தாண்டி சென்றுவிடுவது ஜாதகத்தில் இருக்கும் இந்த பாதிப்புக்களை 70  சதவிகிதம் குறைத்துவிடும் , மேலும் ஜாதகர் தனது குல  தெய்வ வழிபாட்டினை தவறாமல் செய்தால் ஜாதகரின் வாழ்க்கையில் 100  சதவிகிதம் நன்மையான பலன்களை அனுபவிக்க முடியும் .


ஒரு வேலை ஜாதகருக்கு இந்த பூர்வ புண்ணியம் நன்றாக இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு 100  கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்றுவிட்டால் , ஜாதகத்தில் உள்ள அனைத்து யோக பலன்களும் பாழ்பட்டுவிடும் மேலும் எந்தவிதமான நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்க இயலாது .

 பூர்விகம் பாதிக்க பட்டவர்கள் மட்டுமே பூர்விகம் எதுவோ அந்த ஊரை விட்டு 100  கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று ஜீவனம் செய்வது நலம் தரும் .


குறிப்பாக பூர்வபுண்ணியம் பாதிப்படைந்து இருந்தால் அந்த பாவகத்தை எளிதில்  வலு பெற செய்துவிட முடியும் என்பது அனுபவரீதியாக கண்ட உண்மை .

இந்த அமைப்பால் பாதிக்க பட்டவர்கள் எங்களை தொடர்புகொண்டு  நன்மை அடையுங்கள் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696   

Tuesday, March 20, 2012

மன சிதைவும் ஜாதக அமைப்பும் !எந்த ஒரு ஜாதகரும் தனது எண்ணங்களை செயல் வடிவமாக காணும் பொழுது அவர் அடையும் சந்தோசம் மன நிம்மதிக்கு அளவே கிடையாது , இப்படி ஜாதகர் அனைவரும் என்னும் எண்ணங்கள் எல்லோருக்கும் நிறைவேறுவது இல்லை , 100  சதவிகித மக்களில் 22  சதவிகித மக்கள் நினைக்கும் எண்ணங்களை செயல் வடிவமாக பெறுகிறார்கள்.

 மற்றவர்கள் கனவு மட்டுமே காண்கின்றனர் 22  சதவிகிதினரை கண்டு ஏக்க பெரு மூச்சுமட்டுமே விட முடிகிறது . இந்த 22  சதவிகித மக்கள் மட்டும் எப்படி நினைத்ததை சாதிக்க முடிகிறது ?

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் 
இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்குமே ஆனால் , நிச்சயம் ஜாதகரின் எண்ணங்கள் 100  சதவிகிதம் செயல் வடிவம் காண மூடியும் . மேலும்  ஜாதகர் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக இருப்பார், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் வழிமை உடையதாக இருக்கும் .

மன நிலையை குறிக்கும் மூன்றாம் வீடு ஜாதகர் எடுக்கும் முயற்ச்சி , மற்றும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் திறமை , இனிமையாக பேசி தமது கருத்தை சபையில் எடுத்து வைக்கும் திறன் ஆகியவை இந்த மூன்றாம் விடுகளின் வழியே செயல் படும் . சக மனிதரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் இந்த மூன்றாம் வீட்டில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள  இயலும் .

லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகரால் மனதை ஒரு நிலை படுத்த   இயலும், மேலும் மன ஆற்றல் மிகுதியாக ஜாதகரிடம் காணப்படும் . 

புலன்கள் வழியே ஜாதகர் தனது ஜீவ சக்தியை செலவு மற்றும் விரையம் செய்யாமல் , பாதுகாக்க நிச்சயம்  லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில்இருக்க வேண்டும் . மேலும் புலன் அடக்கம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து விடும் .

மற்றவர்களின் உள் மனதில் நினைப்பதை ஜாதகரால் எளிதில் தெரிந்துகொள்ள, மற்றவர்களுக்கு ஏற்றார் போல் தமது எண்ணங்களை சீர்படுத்தி கொள்ள இந்த அமைப்பு தேவை . 

இந்த அமைப்புகள் ஜாதகருக்கு பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு அளவே கிடையாது , மிக விரைவாக போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் நபர்கள் அனைவரும் இந்த அமைப்பு பாதிக்க பட்டவர்களே , மேலும் பேய் , பிசாசு , பில்லி , சூன்யம் என்று தனது மனதை தானே கெடுத்துக்கொண்டு மற்றவர்களையும் படாத பாடு படுத்தி விடுவார்கள். 


மொத்தத்தில் குடும்பத்தில் இருக்கும் ஆணாக இருந்தால் குடி பழக்கம் , தவறான தொடர்புகளால் மன நிம்மதி இழப்பு , பொருள் இழப்பு போன்ற நிலைக்கு தள்ளி விடுகிறது , பெண்களாக இருந்தால் மன நோய் , மன சிதைவு , பேய் , பிசாசு என்று சொல்லிக்கொண்டு தனது மனதை தானே கெடுத்துக்கொண்டு , குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்து விடும் தன்மை ஏற்ப்படும் .

இந்த நிலையில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் தேவையானது, குடும்பத்தாரின் அன்பான வார்த்தைகளும் , ஆதரவும் இருந்தால் நிச்சயம் அவர்கள் இந்த நிலையில் இருந்து வெகு விரைவில் மீண்டு விடும் வாய்ப்பு அதிகம் . 

இதில் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது  லக்கினம் , மூன்றாம் வீடு , இந்த இரு வீடுகளிலும் வக்கராக கிரகங்கள் இருந்தால், எவ்வளவு சீக்கிரம் அந்த கிரகங்களுக்கு வக்கராக நிவர்த்தி செய்கிறாரோ அவ்வளவு நன்மை தரும்.  

ஜாதகர் வக்கராக நிவர்த்தி பெற உலகத்திலேயே ஒரே இடம் தான் உண்டு.  

அது  தாய் வக்கிரக காளி அம்மன் குடிகொண்டு வரும்  பக்தர்களுக்கு அனைவருக்கும் சகல நலன்களையும் வாரி வழங்கி கொண்டு இருக்கும் 
திரு வக்கரை  எனும் திரு தளம் ஒன்றுதான் . இங்கு வந்து வக்கராக நிவர்த்தி பெறுவது  ஜாதகருக்கு சகல யோகங்களையும் மன நிம்மதியையும், நினைக்கும் காரியங்களை  மனம் போல் நடக்கும் அதிசயத்தையும் காண முடியும், ஒரு முறை வந்தவர்கள்  தொடர்ந்து வருவது  ஆச்சரியமான விஷயம் .


ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  
 

நவகிரகமும் மனித உடல் சம்பந்தமும் & நோய்களும் !


 நவகிரகமும்  மனித உடல் சம்பந்தமும் & நோய்களும் !ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்ப்படும் நோய்களுக்கு நவக்கிரக சம்பந்தம் நிச்சயம் உண்டு. மேலும் அவ்வாறு ஜாதகர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் ஜாதகர் விரைவில் உடல் நிலை பாதிப்பில் இருந்து விடுபட செய்ய வேண்டியவைகள் பின் வருமாறு :


பிரபஞ்ச ஆதார சக்திகளில் நிலம், உடலாகவும்; ஆகாயம், உயிராகவும் உள்ளது. மீதியுள்ள நெருப்பு , வாயு , நீர் சக்திகளின் இயக்கத்தில் ஏற்ப்படும் முரண்பாடுகளே நோயாக வெளிப்படும்.


மேலும் நெருப்பு சக்தியால் பசி, தாகம், தூக்கம், சோர்வு, முதலியன ஏற்ப்படும். நில சக்தியால் எழும்பு , தசை , நரம்பு , தோல் , முதலியவை பாதுகாக்க படுகின்றது . வாயு சக்தியால் உடல் உறுப்புகளின் இயக்கம் ( சுருங்கி விரியும் தன்மை ) பாதுகாக்க படுகிறது. நீர் சக்தியால் இரத்தம் , விந்து , வியர்வை , கழிவு பொருட்கள் வெளியேற்றும் இயக்கம் முதலியவை பாதுகாக்க படுகிறது.


உடம்பில் நெருப்பு சக்தி குறைவால் ஏற்ப்படும் நோய்களுக்கு ' பித்தம் ' என்றும்; வாயு சக்தி குறைவால் ஏற்ப்படும்  நோய்களுக்கு 'வாதம்' என்றும்;  நீர்  சக்தி குறைவால் ஏற்ப்படும் நோய்களுக்கு ' கபம்' என்றும் பெயர் .

ஜாதகத்தில் நெருப்பு ராசிகள் பதிக்கப்படும் பொழுது ரத்த  அழுத்தம் ,  பித்தம், தலை வலி , காய்ச்சல் , கால் கை வலிப்பு; பார்வை கோளறு, மூலம், குடல் புண் , கரு சிதைவு , கொப்புளம் , மூளை கட்டி தீக்காயம் போன்ற உஷ்ண சம்பந்தமான பீடைகள் ஏற்ப்படும் .

நில  ராசிகள் பதிக்கப்படும் பொழுது தசை மண்டலம் , இதயம் , சிறு நீரகம் , எழும்பு , பல் போன்ற உறுப்புகள் பாதிப்பு ஏற்ப்படும் .

  
வாயு ராசிகள் பதிக்கப்படும் பொழுது மார்பு நோய் , நரம்பு மண்டலம் , உணர்ச்சி புலன்கள் , மூளை , தோல் , கழுத்து , இடுப்பு , சுவாச நோய்கள் ஏற்ப்படும் .


நீர் ராசிகள் பதிக்கப்படும் பொழுது ரத்த போக்கு , பேச்சில் தடுமாற்றம் , மன நோய் , சளி , மார்பு , வயிற்று கோளாறு, மாதவிடாய் தொந்தரவு , இரத்தத்தில் சத்து குறைவு , சுரப்பிகள் பாதிப்பு , புற்று நோய் , குஷ்டம் , போன்ற நோய்கள் ஏற்ப்படும் . 

நெருப்பு , நிலம் , காற்று , நீர் எனும் ராசிகளின் அமைப்பில்  ஜாதகர் எந்த ராசி அமைப்பில் , எத்தனை சதவிகித பதிப்பை அடைந்துள்ளார் என்பதனை சுய ஜாதகத்தை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் . மேலும் எந்த ராசி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ராசி அதிபதியினை தமது உடலுடன் உயிர் கலப்பு செய்தால் , ஜாதகரின் உடல் நிலை பாதிப்பு விரைவில் குணம் பெற்று , மீண்டும் வராமல் தடுத்து கொள்ள இயலும் இது அனுபவ ரீதியான உண்மை .
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

Monday, March 19, 2012

வாழ்வில் கல்வி , தொழில், திருமணம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் ?

வாழ்வில் கல்வி , தொழில், திருமணம் சிறப்பாக அமைய ஒவ்வொரு ஜாதகரும் செய்ய வேண்டி மிக முக்கியமான கடமைகள் பின்வருமாறு :

ஜாதகர் தமது பெற்றோரிடம் வருடம் ஒரு முறையாவது ஆசிர்வாதம்
( ஜாதகர் எங்கு இருந்தாலும் ) பெறுவது, ஜாதகத்தில் உள்ள வீடுகளின் பலன்களை விருத்தி செய்யும். மேலும் அவர்களது மனம் சந்தோசம் பெறுமாறு நடந்து கொள்வது ஜீவன விருத்தி தரும் .

தமது குல தெய்வ வழிபாட்டினை வருடம் தவறாமல் ஆடி , புரட்டாசி , தை அமாவாசைகளில் செய்து வருவது, ஜாதகரின் அறிவுத்திறனையும் , நல்ல திருமண வாழ்க்கையினையும் அமைத்து தரும் , ஜாதகரை பெற்ற தாய்க்கு பிறகு அவரது நல வாழ்க்கையில் அதிக அக்கறை மற்றும் உரிமை உள்ள, ஒருவர்தான் அவரது குல தெய்வம் .

 எனவே குல தெய்வ வழிபாடு செய்யாமல் ஜாதகர் எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும்,  முழு பலன் கிடைப்பதில்லை. எனவே வருடம் ஒரு முறையாவது தமது குல தெய்வ வழிபாடு செய்து, முன்பின் தெரியாத ஒரு இருபது நபருக்காவது அண்ணதானம் செய்வது ஜாதகரின் கல்வி , வாழ்க்கை துணையை சிறப்பாக தேர்ந்தெடுக்க வழி வகுக்கும் . 

மேலும் ஜாதகர் தமது முன்னோர்களுக்கு, செய்ய வேண்டிய கடமைகளை
 ( பித்ரு கடமை ) வருடம் தவறாமல் (கடலில் செய்வது நலம் தரும் ) செய்வது  பரிபூரண தொழில் வளர்ச்சியும் , சந்ததி விருத்தியும் வாரி வழங்கும். மேலும் ஜாதகருக்கு ஏற்ப்படும் இழப்புகளையும் , நஷ்டங்களையும் தடுக்கும் தன்மை இதற்க்கு உண்டு , வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது உங்களுக்கு பாதுகாப்பாக வழி நடத்தும் தன்மை பித்ரு கடமை செய்வதால், கிடைக்க பெறலாம் .

மாற்று திறன் வாய்ந்தவர்களுக்கு தம்மால் இயன்ற அளவிற்கு பொருள் தானமோ , அண்ணதானமோ, செய்வது ஜாதகரின் தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி நிலையில் தடையில்லாத, அமைப்பை உருவாக்கும் , ஜாதகரின் ஆயுளை  விருத்தி செய்யும் ,

 ஜாதகர் கல்வி நிலையில் மேன்மை பெற, பிராமண தர்மம் செய்வது கல்வியிலும் சகல கலைகளிலும் தடையில்லாத முன்னேற்றம் பெற உதவும் , பிராமண தர்மம் செய்யும் பொழுது ஜாதகர் பிராமணரை தமது குருவாக, பாவித்து  தர்மம் செய்வது , அதிக பலன்களை வழங்கும்.

குல தெய்வ வழிபாடு , பித்ரு கடமை செய்யும் பொழுது ஜாதகரே செய்வது 100  சதவிகித பலன் தரும்.

பசு போன்ற நான்கு கால் ஜீவன்களுக்கு ஜாதகர் தம்மால் ஆனா உணவுகளையோ  அல்லது பழங்களையோ தருவது ஜாதகருக்கு, ஜீவன மேன்மை மற்றும் இல்லற வாழ்க்கை விரைவாகவும் , சிறப்பாகவும் அமைய வழி கிடைக்கும் .

சூரிய நமஸ்காரம் உத்தம வேளையில்   ஜாதகர் அனுதினமும் செய்துவருவது சகல யோகங்களையும் , அனைத்து அதிர்ஷ்டங்களையும் தரும் என்பது கண்கூடாக கண்ட உண்மை ,   சூரிய நமஸ்காரம் உத்தம வேளையில்  தினமும் செய்து வருபவர்களுக்கு நவகிரகங்களின் அருளாசி எப்பொழுது கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பது உண்மை .


இந்த அமைப்பை அனைவரும் வாழ்வில் கடைப்பிடித்து சகல யோகங்களையும் பெற்று நீண்ட அதிர்ஷ்டமுடன் வாழ்வாங்கு வாழ்க .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

பாவ காரகத்துவ வழியில் நடத்தும் பலன்கள் !ஜாதக பாவங்களில் இருந்து ஒருவீடு நன்றாக இருந்தால் தரும்   பலன்கள் :


லக்கினம்  நன்றாக இருந்தால் :

ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை மிகவும் நன்றாக இருக்கும், மன ஆற்றல் ,தன்னம்பிக்கை , மன நலம் , வாழ்க்கையில் சகல வளங்களும் நிறைந்து இருக்கும் , கற்பதில் ஆர்வம் அதிகமிருக்கும் , எண்ணம் செயல்பாடு நேர்மையான அமைப்பில் இருக்கும் .


இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் :

நல்ல அறிவு திறன் , சிறப்பான  வருவாய் , குடும்பம் சிறப்பாக அமையும் , ஜாதகரின் பேச்சு திறன் சிறப்பாக அமைந்து இருக்கும் , மேலும் தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் நடத்தி செல்லும் ஆற்றல்  ஜாதகருக்கு அதிகம் உண்டு.


மூன்றாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் மன நிலை , ஜாதகரின் நண்பர்கள் , மேலும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்டவை , எழுத்தாற்றலின் மூலம் ஜாதகர் பெரும் நன்மை , ஜாதகர் மேற்கொள்ளும் சிறு பயணங்கள் , ஜாதகரின் மன வலிமை , தைரியம் , சிறு அதிர்ஷ்டம் போன்ற நிலைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .


நான்காம் வீடு நன்றாக இருந்தால் :

தனது தாயின் நிலை , அவரால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை , ஜாதருக்கு அமையும் சொத்து , சுகம் , வீடு , வண்டி வாகனம் , ஜாதகருக்கு அமையும் சொகுசு  வாகனம் மற்றும் வீடு , விவசாய நிலம் மூலம் ஜாதகர் அடையும் லாபம் போன்றவை சிறப்பாக அமையும் .


 ஐந்தாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகர் தனது பூர்விக இடத்தில் வசிப்பதால் நன்மைகள் அதிகம் , குழந்தை பாக்கியம் மற்றும் வாரிசு மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு ஏற்ப்படும் , அவர்கள் வழியே ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயரும் புகழும் . ஜாதகர் அனுபவிக்கும் பொழுது போக்கு விசயங்கள் , கலை வாழ்வில் ஈடுபாடு  போன்ற விசயங்கள் சிறப்பாக அமையும் .


ஆறாம்  வீடு நன்றாக இருந்தால் :

உடல் நலம் முயற்ச்சியால் ஜாதகருக்கு கிடைக்கும் வெற்றி , கடன் பெறுவதால்  ஏற்ப்படும் முன்னேற்றம், வழக்குகளில் கிடைக்கும் வெற்றி , தனது தாய் மாமன் மூலம் ஜாதகர் அனுபவிக்கும் நல்ல வாழ்க்கை  போன்ற விஷயங்கள் சிறப்பாக அமையும் .


ஏழாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் மனைவி மற்றும்  ஆண் / பெண் நண்பர்கள், அவர்களால் ஏற்ப்படும் நன்மைகள் , ஜாதகரின் கூட்டாளி , தொழில் முறை கூட்டாளி , கூட்டு தொழிலால்  அடையும் நன்மைகள் , தொழில் நிலையில் ஏற்ப்பாடு நிலையான வளர்ச்சி போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


எட்டாம்  வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகருக்கு திடீர் என வரும் அதிர்ஷ்ட வாழ்க்கை , புதையல் , பூரண ஆயுள் , விபத்திலிருந்து வெகு விரைவில் உடல் நிலை முன்னேற்றம் , சொந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு ஏற்ப்படும் திடீர் வளர்ச்சி , வாகன மாற்றம் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 ஒன்பதாம்  வீடு நன்றாக இருந்தால் : 

ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயர் , நீதி நேர்மையான மன பக்குவம் , பாக்கியம் செய்ததால் ஜாதகருக்கு அமையும் நல வாழ்க்கை , இறை நிலையுடன் ஜாதகருக்கு ஏற்ப்படும் தொடர்பு , கடவுள் பக்தி , அறிவியல் ரீதியான ஆராய்ச்சி , அதனால் ஜாதகர் அடையும் நன்மைகள் ,   போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .  


பத்தாம் வீடு நன்றாக இருந்தால் :

ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , தொழில் , சுய தொழில் செய்வதால் பெரும் அபரிவிதமான முன்னேற்றம் , தனது தகப்பனார் அவர் மூலம் ஜாதகர் அடையும் முன்னேற்றம் , வாகன சுகம் நாற்கால் ஜீவன்கள் வளர்ப்பதால் ஜாதகர் அடையும் நன்மைகள் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 லாப ஸ்தானம் நன்றாக  இருந்தால் :

ஜாதகரின் துணைவியார் , ஜாதகரின் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர் பாலினரிடம் ஏற்ப்படும் மயக்கம் , ஜாதகரின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் , ஜாதகரின் எண்ணம் பலிதம் , அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் யோகம், போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


 பன்னிரெண்டாம் வீடு  நன்றாக இருந்தால் :

ஜாதகர் அதிகமான பணம் முதலீடு செய்வதால் அடையும் லாபம், மற்றும் வாழ்க்கையில் திடீர் என நிகழும் யோகம் , நல்ல நிம்மதியான தூக்கம் , அறிவின்  செயல் பாடுகள் , மன ஆற்றல் மற்றவர்களால் ஏற்ப்படும் மன நிம்மதி , ஆன்மிக வாழ்வில் ஏற்ப்படும் முன்னேற்றம்  போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .


ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696

Thursday, March 15, 2012

பரிகாரம்

ஜோதிட பலன் கேட்கவரும் அனைவரின் அடுத்த கேள்வி என்ன பரிகாரம் செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கும் என்பாதாக இருக்கிறது இதை பற்றி ஒரு சிந்தனை :

பரிகாரம் என்றாலே மக்கள் அனைவருக்கும் ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் கோவில் வழிபாடு, பூஜை முறைகள் , நவக்கிரக சாந்தி , இரத்தின ஆலோசனை , பெயர் மாற்றம் , என எண்ணில் அடங்காத பல பரிகாரங்களை, ஜோதிட  ஆலோசனை பெற வந்தவர்களிடம் சொல்கின்றனர் , இதை கேட்கும் மக்கள் அனைவரும், நிறைய பொருட் செலவு செய்தும் பலன் பெற முடியாமல் இருப்பவர்கள் அதிகம், இதற்க்கு காரணம் ஜோதிடர்கள் சொன்ன பாரிகாரங்கள் சரியா ? அல்லது அந்த பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தரவில்லையா? 

 என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்கள் 80  சதவிகிதம் பேரின் வாக்கு மூலம் என்னவென்றால் நான் இதற்க்கு முன் ஜோதிடர்கள் சொன்ன அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன் பலன் இல்லை என்பதாகவே இருக்கிறது .

உண்மைதான் என்ன ?

பரிகாரம் என்றாலே அது நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகர்தான் செய்ய வேண்டும் , அது எந்த பாவம் ஜாதகத்தில் கெட்டு விட்டது என்று, ஜோதிடனின் கணிதம் கொண்டு அறிந்து. 

எந்த ஒரு சிறந்த ஜோதிடனும் ஜாதகருக்கு பரிகாரம் பற்றி சொல்வாரோ தவிர அவரே பரிகாரம் செய்ய மாட்டார் .

 இதில் அடுத்த விஷயம் கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால் தோஷம் போய்விடும் என்று சொல்லுவது உண்மையில்லை , கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால்  ஜாதகத்தில் எந்தவீடு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வகையில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு ஜாதகரின் அறிவு  விழிப்புடன் செயல்பட்டு, அந்த பிரச்சனைகளுக்கு ஜாதகரே தீர்வு காணும் ஆற்றலை கோவில் வழிபாடு / பரிகாரம் ஜாதகருக்கு  கொடுத்து விடும் என்பதே உண்மை , அது எந்த வகை பரிகாரமானாலும் சரி .  

மேலும் கோவில் வழிபாடு / பரிகாரம் என்பது ஜாதகரின் சிந்தனை திறன், செயல் பாடு, அறிவில் விழிப்பு நிலை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும்  என்பது கண்கூடாக கண்ட உண்மை. மேலும் நன்மை தீமைகளை உள் உணர்வு மூலம் தெரிந்துகொண்டு வருமுன் காக்கும் தன்மையை அதிகரிக்கும். 


 
ஜாதகர் எவ்வித பரிகாரம் செய்யாமலே ஜாதகத்தில் பாதிப்புக்களை நிவர்த்தி நிச்சயம் செய்துகொள்ள முடியும் எப்படி எனில் ? 

சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தொடர்ந்து தவம் செய்து வருவாரே ஆயின் அந்த கிரகத்தில் இருந்து வரும் அலை கதிர்கள் நன்மையான  பலனையே வாரி வழங்கும் , இது ஓரிரு நாட்களில் நடக்க வாய்ப்பு இல்லை தொடர்ந்து மாதகணக்கில் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

  மேலும் சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்ற அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஜாதகர் நன்மையே செய்வார் எனில், ஜாதகருக்கு மிகுந்த நன்மையே ஏற்ப்படும் .

எடுத்துகாட்டாக :

1  ம் ( இலக்கணம் ) வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் சுய ஒழுக்கம் , மன கட்டுப்பாடு , தன்னம்பிக்கை  , கெட்ட எண்ணங்களை தவிர்த்தல் , தனது உடல் நிலையில் அதிக அக்கறை , போன்றவற்றில் கவனம் செலுத்துவாறே ஆயின் பாதிப்படைந்த லக்கினம் வழு அடைந்து ஜாதகர் நன்மை பெறுவார் .

 4  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தாயாரிடம் அதிக அன்புடனும் , மரியாதையுடனும் நடந்து கொள்வது நலம் தரும் , மேலும் தாயாரின் ஆசைகளை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும், அவர்களிடம் காட்டும் அன்பு ஜாதகருக்கு நல்ல சொத்து சுக சேர்க்கையை பெற்று தரும் , தாயாரை அவரது இறுதி காலம் வரை நன்றாக பார்த்துக்கொள்வது ஜாதகருக்கு நல வாழ்வினை தரும் .

 7   ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது நண்பர்களுடன் நல்லுறவு அவர்களால் ஏற்ப்படும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளுதல் , மனைவி வழியில் இருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு முழு அளவில் நன்மையே செய்தல் , மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுதல் ( மனைவி  கெடுதலே செய்தாலும் ) போன்ற தன்மையுடன் இருந்தால்  சிறிதுகாலம் ஜாதகர்  சிரமம் அடைந்தாலும் பிறகு அந்த பாவ வழியில் இருந்து 100  சதவிகித நன்மையே பெறுவார் .

 10  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தகப்பானரிடம் பற்றுடனும் பாசமுடனும் இருப்பது ஜாதகருக்கு 100  சதவிகித தொழில் வளர்ச்சியை பெற்று தரும் ,  மேலும் தகப்பானார் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவரை நன்றாக பாதுகாக்க வேண்டும். மேலும் அவரது கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வது ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும் .

பரிகாரம் என்பது நாம் முன் ஜென்மங்களில் செய்த கர்ம வினை பதிவுகளை,  இந்த பிறப்பில் போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பை இறைநிலை, நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்,

 இதை நன்றாக நாம் உணர்ந்து செயல் பாடுவோமே ஆனால், நமது சந்ததியினர் அனைத்து நலன்களையும் பெறுவார்கள் . இதை உணராமல் மேலும் இந்த கர்ம வினை பதிவினை அதிகரித்து கொள்ளுதல் நமக்கும் நல்லதல்ல , நமது சந்ததியினருக்கும் நல்லதல்ல,

பரிகாரம் நம்மை சுற்றியே உள்ளது அதை நாம் தெளிவாக தெரிந்து கொண்டு நடந்தோம்  என்றால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக வாழ முடியும் .

ஜோதிடன் வர்ஷன் 
 9842421435 
9443355696 
    

Wednesday, March 14, 2012

தொழில் ஸ்தானம் சிறப்பாக அமைந்தால், ஜாதகருக்கு அமையும் தொழில்கள் !ஒவ்வெருவருக்கும் பிறக்கும் பொழுதே இறைவன் ஜீவனம் செய்யும் வாய்ப்பினை நன்கு உணர்த்தியே படைத்து விடுகிறார், சரியான நேரம் வரும்பொழுது ஜாதகருக்கு இந்த நிலை விழிப்புணர்வால் ( தனது அறிவின் நிலையிலிருந்து ) தெரிந்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்கின்றனர், 

இருப்பினும் ஜாதகரீதியாக 100  சதவிகிதம் தெரிந்துகொண்டு அந்தவகை தொழிலை ஜாதகர் தன்னம்பிக்கையுடன் செய்வாரே ஆயின் நிச்சயம் நல்ல வாழ்வினை பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை .

ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதி , மற்றும் ஜீவன ஸ்தானம் எனும் இரு அமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜாதகர் எந்த தொழில் செய்தால் சிறப்பாக வருவார் என்று தெளிவாக சொல்லிவிட முடியும், மேலும் தொழில் அமைப்பில் இரு நிலைகளை வைத்தே ஜாதகருக்கு அமையும் தொழிலை சொல்லிவிட முடியும் அது கீழ்க்கண்டவாறு அமையும் :

ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

மருத்துவம் , நீதிமன்றம் , ரயில்வே , தொழிற்சாலை , காவல் துறை , கெமிக்கல் , இஞ்சினியர் , அரசு அதிகாரி , விஞ்ஞானி , நீதித்துறை , ஜவுளி , பங்கு மார்க்கெட் , மேனேஜர் , விளையாட்டு வீரர் , அரசியல் , நகை , பணம் , விமானம் , சமயத்துறை , துப்பறியும் இலாகா , வங்கி , கல்வி நிறுவனங்கள், அரசு ஒப்பந்த வேலை, அணுசக்தி , பொதுத்துறை நிறுவனம், நில ஆய்வாளர் , சென்சஸ் ஆபீஸ் , கணித துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவர் ,

   ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது  என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம் நிலை தொழில்கள் :

தொழிலாளி , மெக்கானிக் , அரசுக்கு பொருட்களை சப்பளை செய்வோர் , அரசு சார்ந்த தொழில்கள் , டெக்னீசியன் , பாய்லர் , ரோமம் , சுரங்கப்பொருள் , உலோகம் , சர்க்கரை , ரப்பர் , எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் போன்ற துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் படை , ரயில்வே அதிகாரி , மருந்துகள், தூதுவர்கள், கணித ஆசிரியார்கள் , பொறியியல் துறை சார்ந்தவர்கள் , பஸ் முதலாளி , நர்ஸ் , மொழி பெயர்ப்பாளர் , கவுன்சிலர் , வங்கி , நீதி துறை , நீர் விநியோகம் , ஓவியர் , இசை, குழந்தை மருத்துவர் , மன நல மருத்துவர் , அரசியல் , பொது நல வாதி , நீதி மன்றம் சார்ந்த தொழில் , எழுத்தாளர் , வெளிநாட்டில் வேலை , பேச்சாளர் , நீர்பாசன துறை, விவசாயம், உணவகம் , 64  கலைகள் , இலக்கியம் , சாஸ்திரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம்  நிலை தொழில்கள் :

திரவ பொருட்கள் , வியாபாரம் , மாலுமி , பாய்லர் , விவாசய தொழிலாளி , சிற்றுண்டி சாலை , லாட்ஜ் , உரம் , ட்ராவல் ஏஜென்சி , ஜவுளி , பால் , வாசனை திரவியம் , புரோக்கர் , விர்ப்பனையாளர் , மருந்துகடை , வட்டி தொழில் , மீனவன் , மண்ணெண்ணெய் , ஆறு, குளம் , கிணறு , போர்வெல் , கடல் , சார்ந்த தொழில்கள் , இரவு நேர வேலைகள், சமையல் பொருட்கள் , எண்ணெய், பட்லர்,  சமையல் , ரொட்டி கடை , பெட்ரோல், கண்ணாடி, சாய பட்டரை , டோபி, ஐஸ், சிமென்ட் , பார்பர் , குளிர்பானம் , டெய்லர் , பழம் , காய்கறி , விளையாட்டு பொருட்கள் , தரகர், சாராயம் , பொழுது போக்கு சாதனங்கள் , நீரோட்டம் பார்ப்பவர் , நாடகம் ,சினிமா நடிகர்கள் , போன்ற துறையை சார்ந்தவர்கள் . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

திருமண வாழ்க்கை விரைவாக இனிதே அமைய, இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய!
கேள்வி :

திருமண வாழ்க்கை பருவத்தே அமையாமல் காலம் தாழ்த்தி கொண்டே செல்லும் ஜாதக அமைப்பை சேர்ந்த ஆணாக இருந்தாலும் , அல்லது பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு திருமணம் விரைவில் அமைய என்ன வழி ?

பதில் :

சம்பந்தப்பட்ட ஜாதக அமைப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்தோம்  நிச்சயம் குடும்பம் , களத்திரம் எனும் இருபாவங்கள் பதிப்பை பெற்று இருக்கும், மேலும் அது எந்த வகையில் பதிப்பை பெற்று இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொண்டால், நிச்சயம் அவர்களுக்கு சரியான தீர்வு சொல்லிவிட முடியும், மேலும் திருமண வாழ்க்கை விரைவில் இனிதே அமைய சரியான தீர்வினையும் மிக எளிதாக,  சொல்லி அவர்களுக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கையினை அமைத்து தந்துவிட முடியும் .

இரண்டாம் பாவம்  மற்றும் ஏழாம் பாவம்  சர தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால் ஜாதகருக்கு  ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு,  ஜாதகரே காரணமாக இருப்பார், ஜாதகரின் மனதில் தனது வாழ்க்கை துணையாக வேறு ஒருவரை நினைத்துக்கொண்டு , அமையும் வது /  வரன்களை எல்லாம் தட்டிக்களிப்பார் , தனது பிடிவாத குணத்தினால் இனிமையாக அமையும் நல்ல வது / வரன்களை   எல்லாம் தவிர்த்துவிட்டு பொருத்தம் இல்லாத துணையை தேர்ந்தெடுத்து விட்டு தமது வாழ்க்கைக்கு தாமே கெடுத்துக்கொள்வார்.

 இரண்டாம் பாவம் மற்றும் ஏழாம் பாவம்  ஸ்திர  தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால், நிச்சயம் ஜாதகருக்கு ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு தமது உறவினர் அல்லது ஜாதகரின் பெற்றோரே காரணமாக இருப்பார்கள் , ஜாதகருக்கு அமையும் நல்ல வாழ்க்கையை ஏதாவது காரணம் சொல்லி திருமணம் அமையாமல் செய்து விடுவார்கள் , அல்லது ஜாதகரை பற்றி  தவறான கருத்துக்களை பரப்பி அதனால் திருமண தாமதத்தை உண்டாக்கி வாழ்வை கெடுத்து விடுவார்கள் . இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்  அனைவரும் தாமே சுயமாக முடிவு எடுப்பது நலம் தரும்.

 இரண்டாம் பாவம் மற்றும் ஏழாம் பாவம்  உபய   தத்துவமாக அமைந்து பாதிப்படைந்து இருந்தால், ஜாதகருக்கு ஏற்ப்படும் திருமண வாழ்க்கை தடைக்கு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் காரணமாக அமைந்து விடும், மேலும் இந்த அமைப்பை பெற்றவர்கள், நல்ல நேரம் காலம் அறிந்து திருமணத்தை பற்றி பேசி முடிவெடுப்பது திருமணம் இனிதே அமைய வாய்ப்பளிக்கும், இவர்களது திருமண வாழ்க்கை அமைவதில் முக்கிய மற்றும் அதிக பங்கு வகிப்பது காலமும் நேரமும் ஆகும், நல்ல நேரம் அறிந்து செயல்பட்டால் நிச்சயம் திருமணம் சிறப்பாக அமைந்துவிடும் .

 திருமணம் செய்து இதே அமைப்பை சார்ந்து இல்லற வாழ்வில் இனிமையான அமைப்பை பெற இயலாத தம்பதியினர், சம்பந்தப்பட்ட பாவங்களின் அதிபதியை  தெரிந்து கொண்டு அந்த கிரக சக்தியினை தவ வழிமையால் பெற்றால்  அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக இனிமையானதாக அமையும் என்பது உறுதி, அல்லது கிரக சக்தியினை  உடலில் ஏற்றுக்கொள்ளும் வழிமுறையினை தெரிந்துகொண்டு அதன் மூலம் நலம் பெறலாம். 

குறிப்பு :

ஜாதகத்தில் பாதிப்படைந்த கிரக சக்தியினை மற்றும் பெற்றால் போதும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435
9443355696

Sunday, March 11, 2012

ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? என்று மிகச் சரியாக கண்டறிந்து பலன் சொல்வது எப்படி?
கேள்வி :

ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? என்று மிகச் சரியாக கண்டறிந்து பலன் சொல்வது எப்படி?

பலரும் இறந்தவர்களுடைய ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டு பலன் சொல்லி முடித்த பிறகு இவர் இறந்து 10 வருடம் ஆகிவிட்டது என்று சொல்லி நகைக்கின்றனர். எனவே இறந்தவர்களின் ஜாதகத்தை உடனே கண்டறிய ஏதேனும் வழிமுறைகள் ஜோதிடத்தில் இருக்கிறதா?

பதில் : 

நிச்சயம் பதில் செல்ல முடியவே முடியாது, காரணம் ஆயுளை நிர்ணயம் செய்யும்  தகுதி இறை நிலை ஒன்றால் மட்டுமே முடியும். சத்தியமாக என்னால்  முடியாது, இந்த ஒரு கணிதத்தை மட்டும் எவரும் கணிப்பதில்லை, மேலும் அப்படி கணிதம் செய்தால் அது சரியாகவும் இருப்பதில்லை.

நாளையிலிருந்து " இங்கு உயிருடன் இருப்பவர்கள் / மற்றும் வருபவர்களுக்கு மட்டும் ஜோதிடம் சொல்லப்படும் " என்று போர்டு வைத்துவிடலாம் நண்பரே ! இந்த மாதிரி கேள்வி கேட்பவரெல்லாம் ஜாதக பலன் தெரிந்து கொள்ள வருபவர்கள் அல்ல, சகலகலா வல்லவர்கள் எனவே காலில் விழுந்து கும்பிட்டு அனுப்பி விட வேண்டியதுதான் .

நாம் உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டும் ஜோதிடம் சொன்னால் போதும்.

கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஜாதகர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என தெரிந்து கொள்ள மாற்று வழிகள் உண்டு:

 அதாவது நிமித்தம் மற்றும் சகுனம் எனும் இரு விஷயங்களை வைத்து நிர்ணயம் செய்து விட முடியும், மேலும் சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் எனும் இரு நிலைகளும் நன்றாக செயல்படுபவர்களுக்கு நிச்சயம் இந்த விஷயங்கள் துல்லியமாக கண்டுபிடித்து கேள்வி கேட்க வந்தவரின் முகத்தில் அடித்தார் போல் சொல்லி, நோஸ் கட் செய்துவிடலாம் , சரியா நண்பரே இதற்குண்டான பயிற்ச்சியை முறைப்படி கற்று பயன் படுத்தி பாருங்கள் உங்களை ஊரே பாராட்டும்.  

நன்றாக வாழ்வதற்கு வழி கேளுங்கள் என்றால்,  இதை போல் போவதற்கு / போனவர்களுக்கு  சிலபேர்  வழி கேட்ப்பார்கள் இதையெல்லாம் நீங்கள் பொருட்படத்தாமல் கடமையை செய்யுங்கள் காலம் உங்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும் அது எந்த துறையாக இருந்தாலும்.

மேலும் சில குறிப்புகள் : 

ஹோரா சந்திப்பு , கிரக சந்திப்பு , உதய, மத்திம , அந்திம, காலங்களில் ஜாதக பதில் தேடி வருபவர்களுக்கு, ஜோதிட கணிதம் செய்யும் பொழுது கவனித்து பாருங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு நேரில் வரவும் .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

Thursday, March 8, 2012

தொழில் நிர்ணயம் !?


கேள்வி :

ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று நிர்ணயிப்பது எப்படி? 10ம் பாவம் ஜீவனத்தை குறிக்கிறது. 6மிடம் பிறருக்கு கீழ் பணியாற்றும் நிலையை குறிக்கிறது. 11ம் பாவம் நமக்கு வருமானம் வரும் வழியை குறிக்கிறது. 2ம்பாவம் ஜாதகரது செல்வநிலையை குறிக்கிறது.

இப்படி பல பாவங்கள் தொழிலை குறிப்பதால் நாம் எந்த பாவத்தை கொண்டு ஜாதகரது அடிப்படை ஜீவனத்தை நிர்ணயிக்க வேண்டும்.பதில் :


ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று, எங்களது ஜோதிட முறை மூலம்,  தெளிவாக நிர்ணயம்  செய்துவிட முடியும். மேலும் ஒருவருக்கு தொழில் நிலை பற்றி தெளிவாக சொல்லும் பாவம் 10  ம் வீடு, இந்த ஒரு வீட்டினை வைத்தே ஜாதகருக்கு  அமையும் ஜீவனத்தை பற்றி தெளிவாக சொல்லிவிட முடியும். 

இதற்க்கு 2  ம் வீடு 6  ம் வீடு 11  ம் வீடு ஆகியவற்றுடன் தொடர்பு செய்து பலன் சொல்ல தேவையில்லை,.

மேலும் இந்த வீடுகள் முறையே  (  2  ம் வீடு ) ஜாதகருக்கு வரும் வருவாய் அது எந்த வழியில் இருந்து வரும் என்பதனையும் ,  ( 6  ம் வீடு ) கடன் பெற்று தொழில் செய்தால் ஜாதகருக்கு நன்மை தருமா ? சிறு அதிர்ஷ்டம் பற்றியும் . ( 11  ம் வீடு ) ஜாதகருக்கு தொழில் ரீதியாக நீடித்த அதிர்ஷ்டம் உண்ட, செய்யும் தொழில் அதிர்ஷ்ட வாழ்வினை தருமா ? என தெரிந்து கொள்ளவே இந்த வீடுகளை பயன்படுத்தி பலன் சொல்லலாம்.

 அது சரி நீங்கள் எப்படி இந்த வீடுகள் எந்த விதமான பலனை தரும் என்று நிர்ணயம் செய்வீர்கள் நண்பரே ?

தொழில் என்றாலே 10  ம் வீட்டை மட்டும் வைத்து 100  சதவிகிதம் ஜாதகருக்கு என்ன தொழில் அமையும் என்று நிர்ணயம் செய்து விட முடியும் என்பது எனது தீர்க்கமான முடிவு . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

பலன் சொல்ல மூன்று வழி !
கேள்வி :

எனக்கு ஒரு சிறிய ஐயம். ஒருவருக்கு சந்திர தசா நடக்கிறது எனில் 10 வருடம் நடைபெறும் சந்திர தசாவின் நன்மை தீமைகளை கோச்சாரத்தில் 2 நாளைக்கு ஒரு முறை மாறும் சந்திரனை எப்படி சம்பந்தப்படுத்தி பலனை நிர்ணயிப்பது. 

மற்றொரு ஐயம். எந்த தசாவிலும் சுயபுக்தி வேலை செய்யாது என்றும் அப்படி நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்றும் ஜோதிட கருத்து உள்ளதே. தங்களின் கருத்து என்ன?

ஒரு தசாவில் சுய புக்தி பலன்களை எப்படி நிர்ணயம் செய்து பலனை சொல்வது? ஏனெனில் பல தசாக்களில் சுய புக்தி காலம் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் போது அவருக்கு வாழ்வில் முக்கியமான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதா? அவற்றை ஜோதிடர்கள் சுயபுக்தி பலன் தராது என்று நினைத்து சொல்லாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன்.

பாரம்பரிய ஜோதிட முறைக்கும் நமது ஜோதிட முறைக்கும், கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது ஏனெனில் பாரம்பரிய முறையில் ஜோதிட பலன்களை தெரிந்து கொள்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதை போன்றது நீங்கள் எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும் நிச்சயம் சரியான தெளிவான பதில் கிடைப்பது அரிது , இருந்தாலும் உங்களது ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள், ஜோதிடம் என்றாலே தெளிவு மற்றும் சரியான வாழ்வியல் வழிகாட்டி என்று பொருள், நமக்கு தேடுதல் இருந்தால் நிச்சயம் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் .

சரி பதிலுக்கு வருவோம்  ஒருவருக்கு சந்திர தசா நடக்கிறது எனில் 10 வருடம் நடைபெறும் சந்திர தசாவின் நன்மை தீமைகளை கோச்சாரத்தில் 2 நாளைக்கு ஒரு முறை மாறும் சந்திரனை எப்படி சம்பந்தப்படுத்தி பலனை நிர்ணயிப்பது.  

பலனை சந்திரனை வைத்து நிர்ணயம் செய்ய தேவை இல்லை, சந்திரன் திசை எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது கண்டறிந்து அந்த வீடுகள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று கண்டறிந்து, அந்த வீடுகளுக்கு நவகிரகங்கள் கோட்சார ரீதியாக தொடர்பு உள்ளாத அதனால்  நன்மையா தீமையா என பலன் கணிதம் செய்தால் மட்டும் போதும். நமக்கு நிச்சயம் சரியான ஜாதக பலன் கிடைத்துவிடும்.
எந்த தசாவிலும் சுயபுக்தி வேலை செய்யாது என்றும் அப்படி நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்றும் ஜோதிட கருத்து உள்ளதே. தங்களின் கருத்து என்ன?

திசைகளில் சுய புத்தி வேலை செய்யாமல், ஒரு வேலை ஓய்வெடுக்க ஊட்டி கொடைக்கானல் , என்று சுற்றுள சென்றுவிடுமா என்ன ? எந்த திசையாக இருந்தாலும் அது எந்த புத்தியாக இருந்தாலும் தனது கடமையை சிறிதுகூட தவறாமல் செய்யும் தன்மை பெற்றவை நவ கிரகங்கள். இதில் எவ்வித சந்தேகம் தேவையில்லை.

 இதில் அதைவிட நகைசுவை சுய புத்தியில் நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்று சொல்வது,  ஜோதிட கணிதம் தெரியாமல், குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் மட்டுமே பயன் படுத்தும் வாய் ஜாலம். 

எந்த திசை புத்தியாக இருந்தாலும், நிச்சயம் நன்மையோ தீமையோ துல்லியமாக செய்யும் இதில் எந்தவிதமான விதி விளக்கும் இல்லை, சுய புத்தி நன்மை செய்தால் திசை முழுவது நன்மை செய்யாது என்பது முற்றிலும்  தவறான கருத்து . இந்தமாதிரியான கணிப்புகள் எந்த பழமையான ஜோதிட நூல்களிலும் இல்லை .

ஒரு ஜாதகருக்கு பலன் சொல்ல மூன்று வழியினை மட்டும் பயன்படுத்தினால் போதும்  தெளிவாக மற்றும் சரியாக பலன் சொல்லிவிட முடியும் . அது கீழ்க்கண்டவாறு :

1    நடக்கும் திசை, புத்தி  எந்த வீடுகளுடன் சம்பந்தம் பெற்று எந்த வீட்டின் பலனை செய்கிறது .

2   அவ்வாறு நடக்கும் திசை, புத்தி ஜாதகருக்கு நன்மை செய்கிறதா, அல்லது தீமை செய்கிறதா ?

3   அந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெரும் நவ கிரகங்கள் நன்மை செய்கிறதா அல்லது தீமை செய்கிறதா ?

இந்த விஷயங்களை துல்லியமாக தெரிந்து கொண்டாலே ஜாதகருக்கு சரியான மற்றும் தெளிவான பதிலை சொல்லிவிட முடியும், வேறு எந்த விஷையங்களையும் போட்டு குழப்பி கொள்ள தேவை இல்லை .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
    

Wednesday, March 7, 2012

அழகான பெண், அதிர்ஷ்டமான பெண் யாருக்கு மனைவியாக அமைவாள் ?
ஒரு ஜாதகருக்கு ஏழாம் வீடோ அல்லது இரண்டாம் வீடோ, ரிஷபம் , கடகம் , சிம்மம், துலாம் , தனுசு, கும்பம், மீனமாக  அமைந்து, அந்த வீடுகள் முறையே 100  சதவிகிதம் சுய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்.

 நிச்சயம் அந்த ஜாதகருக்கு அமையும் மனைவி, நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த ஜாதகியாகவும், அழகான அமைப்பை கொண்டவளாகவும் இருப்பாள் என்பது  முற்றிலும் உண்மை.

மேலும் ரிஷபம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி,
 நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த பெண்ணாகவும், தனது கணவனுக்கு, சொத்து சுகம், வண்டி வாகனம், செல்வம் போன்ற வளங்களை கொண்டு வருபவளாகவும் இருப்பாள் .  

கடகம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக   கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு மனோ ரீதியாக ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கையுடன் தனது கணவன் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற துணையிருப்பாள்.

சிம்மம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது சுய உழைப்பால் ஆதரவாக நின்று , தனது கணவன் வாழக்கையில் முன்னேற்றம் பெறவும் சகல யோகங்களையும் பெறவும் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும், வாழ்க்கையில் எந்த நிலையிலும் தனது கணவனுடன் நின்று அவனது வாழ்வு முன்னேற்றம் பெற ஆதரவு தந்து அதிர்ஷ்டத்தையும் அள்ளி தருவாள் .

 துலாம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது அறிவாற்றலால் துணை நின்று ஒரு சிறந்த மந்திரியாக ஆலோசனை சொல்லி அவனது வாழ்க்கையில் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற ஆலோசனை சொல்பவளாகவும், எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவளாக, தனது கணவனுக்கு இறுதிவரை துணை இருப்பாள் .

 தனுசு ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது பூர்வீக அமைப்பில் இருந்து வரும்பொழுதே சகல யோகங்களையும், பொன் பொருள், பசு பாக்கியம் , நிலையான சொத்துகள் அனைத்தையும் கொண்டுவரும் தன்மை உடையவளாக இருப்பாள் .

 கும்பம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, குடும்பத்திற்கு வந்தவுடனேயே ஜாதகருக்கு யோகா வாழ்க்கை ஆரம்பம் ஆகிவிடும் , மேலும் தம்பதியர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும், மற்றாவர்கள் ஆதாரவு இவர்களுக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும், மக்கள் ஆதரவால் வெகு விரைவில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவாள் .

மீனம்  ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
ஒரு அதிர்ஷ்ட தேவதை இவளது கால் பட்ட இடமெல்லாம் சகல யோகங்களும் பெருகும், தனது கணவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவர்களுக்கும், இந்த அதிர்ஷ்டம் பலன் தரும் என்பது ஒரு சிறப்பான விஷயம்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

பாதக ஸ்தானம் பற்றிய ஒரு விளக்கம் !
 பாதக ஸ்தானம் :

ஒருவரது லக்கினம் சர ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது 11  ம் வீடு ஆகும்.

 ஒருவரது லக்கினம் ஸ்திர ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது ம் வீடு ஆகும்.

ஒருவரது லக்கினம் உபய ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது ம் வீடு ஆகும். 

ஒருவர் எந்த லக்கினம் ஆனாலும் , லக்கினம் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு கொள்வது அவ்வளவு சிறப்பான பலனை தருவதில்லை, மேலும் ஜாதகனே தனது நல் வாழ்வினை, உடல் நிலையை  தானே சிதைத்து கொள்ளவார்.


 ( போதை பொருளுக்கு அடிமையாகுதல், தீமையான வழியினை வாழ்கையை அமைத்துகொல்லுதல் , சமூக வாழ்க்கைக்கு எதிர் பதமாக செயல்படுதல், முரண் பட்ட வாழ்க்கை , பெண்களின் சாகவாசத்தால் பொருள் இழப்பு, பெயர் கெடுதல், சிறை வாசம் , எதிரி பயம் , விபத்து போன்ற பாதிப்புக்களால், ஜாதகரை விதி வருத்தி எடுத்து விடும்.)

 இதற்காக ஜாதகர் பயப்பட தேவையில்லை, எங்களது வழிகாட்டுதல் உங்களுக்கு இதில் இருந்து மீட்டு நல வாழ்வினை வழங்கும்.

மேலும் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் எந்த வீடுகளும் விருத்தி அடைவதில்லை, இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும்மெனில் ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெற கூடாது. தொடர்பு பெரும் எந்த ஒரு பாவமும் 200  சதவிகிதம் தீமையே செய்யும்.

   இதில் ஒரு விதி விளக்கு ஒன்று உண்டு அதாவது நடக்கும் திசை மற்றும் புத்திகளில், பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் வீடுகளின் பலன் நடக்கவில்லை என்றால் நிச்சயம் ஜாதகருக்கு மேற்ச்சொன்ன பலன்கள் நடக்க வாய்ப்பில்லை , ஒரு வேலை நடக்கும் திசை மற்றும் புத்திகளில், பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் வீடுகளின் பலன்  நடந்தால், ஜாதகர் கதி அதோ கதிதான்.

இந்த அமைப்பை பெற்ற ஜாதக அமைப்பை கொண்டவர்கள், எங்களை சந்தித்து சரியான வழிகாட்டுதல் பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம்  காணுங்கள்.

பிரச்சனை என்று ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கும், லக்கினம் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் கரு மையம் துய்மை பெரும் பொழுது, அவர்களது வாழ்க்கை நிச்சயம் பன்மடங்கு முன்னேற்றம் பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

வாழ்க வளமுடன் 
 9842421435 
9443355696 
      


அரசியலும் 6ம் வீடும்
ஒருவர் அரசியலில் துறையில் வெற்றி பெற்றாவராக ஆக  வேண்டும் எனில் அவரது சுய ஜாதக அமைப்பில் 6  ம் வீடு சர ராசியாக அமைந்து 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும் .

 இந்த அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் அரசியல் ரீதியான பதவிகள் தானே தேடிவரும் வாய்ப்பு அதிகம் பெறுவார்கள். இந்த ஆறாம் வீடு நல்ல நிலையில் இருந்து, நடக்கும் திசை ஆறாம் வீட்டின் பலனை நடத்துமாயின் நிச்சயம் அரசியலில் நல்ல முன்னேற்றம் , பதவி அமையும் என்பது நிச்சயம் .

அதே சமயம் நல்ல அரசியல் வாதியாக செயல் படும் தன்மை எந்த ஜாதகருக்கு அமையும் எனில் கிழ்க்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகராக இருக்க வேண்டும் 

1 )  லக்கினம் , இரண்டாம் வீடு , ஆறாம் வீடு , ஏழாம் வீடு, பதினொன்றாம் வீடு வீடுகள் முறையே 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும் .

2 )  லக்கினம்   100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே பதவியை முழுமையாக நன்மையான விசயங்களுக்கு பயன்படுத்த முடியும் , மேலும் ஜாதகர் நேர்மையான குணம் கொண்டவராக இருப்பார் , பெதுநல வாழ்க்கையில், ஆர்வம் மற்றும் கடமை உணர்ச்சி அதிகம் உள்ளவராக காணப்படுவார் .

3 )   இரண்டாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே பேச்சு திறன் , வாக்கு வன்மை அதிகம் உண்டு , மேலும் அரசியல் வாதிகளுக்கே உரித்தான மக்களை கவரும் விதத்தில் பேசும் ஆற்றல் அதிகம் ஏற்ப்படும். ஒரு வாக்குறுதியை கொடுப்பாரே ஆயின் அதை தனது உயிரை கொடுத்தாவது நிறைவேற்றும் குணம் கொண்டவராக காணப்படுவார். மற்றவரை ஏமாற்றும் குணம் சிறிதேனும் இருக்க வாய்ப்பில்லை .

4 )   ஆறாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, மக்களின் ஓட்டு ஜாதகருக்கு 100  சதவிகிதம் கிடைக்கும். மேலும் மக்களின் மனதில் நீங்காத இடம் ஜாதகருக்கு கிடைக்கும் , தனது எதிரியை வீழ்த்தும் வல்லமை ஜாதகருக்கு 100  சதவிகிதம் செயல் படும். ஒரு பதவியில் இருந்து நல்ல ஆட்சி இந்த அமைப்பை பெற்றவரால் மட்டுமே தர  முடியும் .

5 )  ஏழாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, ஜாதகருக்கு தொலை  நோக்கு பார்வை , மற்றவரை அனுசரித்து நடந்துகொள்ளும் பக்குவம், மக்களிடம் நன்மதிப்பை பெரும் தன்மை, கூட்டணியில் உள்ளவர்களின் ஆதரவு நிலையாக கிடைக்கும் வாய்ப்பு , தர்ம சிந்தனை , அனுபவம் பெற்றவர்களை மதித்து  ஆலோசனையை கேட்கும் தன்மை, போன்ற குணங்கள்  மேலோங்கி நிற்கும் .

6 )   பதினொன்றாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, அரசியலில் நீடித்து நிற்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு கை கொடுக்கும் , தன்னம்பிக்கை அதிகம் கொண்டுள்ள மனிதராக ஜாதகரை காண முடியும், மேலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக மக்களை சந்திக்கும் குணமும், மக்களுக்காக மற்றும் இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக அயராது பாடு படும் குணம் மேலோங்கி நிற்கும் .

இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகம் நிச்சயம் சிறந்த அரசியல் வாதியாக இருப்பார் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

இந்த ஜோதிட கணிதம் கொண்டுதான் பல மன்னாதி மன்னர்களை அந்த காலத்தில் சித்தர்களும் முனிவர்களும், இறையருளின் துணையுடன், நாட்டு நலனுக்காகவும் சமுதாய நல்வழியில் முன்னேற்றம் பெறவும், உருவாக்கினார்கள் .( குறிப்பிட்ட நேரத்தில் கருவுறும் குழந்தை மேற்கண்ட அமைப்பை பெரும் என்று கணிதம் செய்து தந்தனர் )  
ஆனால் இன்றைய நிலை ?

இந்த இடத்தில் நான் ஒன்று  முக்கியமாக  சொல்ல கடமை பட்டுள்ளேன் .
 அது : 

ஆறாம் வீடும், லக்கினமும் வழுத்து நிற்கும் பொழுது, ஒரு திருட்டு நடந்து விட்டால் கண்டிப்பாக அதை பற்றிய ஒரு சிறு துப்பு கூட கிடைக்காது, களவு போன பொருள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது, 

அது போல் இப்பொழுது உள்ள 70 சதவிகித அரசியல் வாதிகளுக்கு இந்த இலக்கணமும் ஆறாம் வீடு மட்டும் வழுத்து நிற்ப்பதால், இவர்கள் அடிக்கும் கொள்ளையை, ஒரு பைசாவை கூட யாராலும் கண்டு பிடிக்க முடிவதில்லை, மேலும் இவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல், ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் .

மக்களும் கழுதை கெட்டால் குட்டிசுவரு? என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர், இதில் இந்த அரசியல் வாதிகளின் பதில், குற்றத்தை சட்டப்படி சந்திப்போம் என்று மக்கள் காதில் பூ மாலையே மாட்டி விடுகின்றனர், மக்களும் இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்ட பரவாயில்லை, ரெம்ப நல்லவேண்டா ? என்று மறுபடியும் தனது வாக்கு சக்தியை உணராமல் அவர்களையே  தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்து விடுகின்றனர் . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

Tuesday, March 6, 2012

11 ம் வீடும் அதிர்ஷ்ட வாழ்க்கையும் !நீடித்த அதிர்ஷ்டம் அமைந்த ஜாதகங்கள் பற்றிய ஒரு சிந்தனை :


நீடித்த அதிர்ஷ்ட வாழ்வு ஒவ்வொரு மனிதரும் ஏக்கம் கொள்ள செய்யும் ஒரு வார்த்தை, இந்த அதிர்ஷ்ட வாழ்வினை எந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் அனுபவிக்க இயலும்.


 மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்கன அமைப்பை கொண்டவர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டம் வழங்கும் 11  ம் வீடு சர ராசியில் அமையும் . 

 இவ்வாறு அமைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் சுய  ஜாதகங்களில் 
( இந்த 11  ம் வீடு 11  ம் வீட்டுடனோ, இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் ) , நிச்சயம் நீடித்த அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் என்பதில் சிறிதேனு சந்தேகமே இல்லை , ஆனால் இந்த வீடுகளின் பலன்களை தற்பொழுது நடக்கும் திசை நடத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க இயலும் .


மேலும் ஜாதகர் எந்த வழியில் அதிர்ஷ்டங்களை அடைவார் என்று நிர்ணயம் செய்வதுதான் ஜோதிடனின் திறமை உள்ளது .


பொதுவாகவே  இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் , ஜாதகர் ஓரளவு அதிர்ஷ்ட வாழ்வினை பெற இயலும் அது எந்த லக்கினம்
ஆனாலும் சரி.


அதிர்ஷ்ட அமைப்பை பற்றி கணிதம் செய்த பொழுது கிடைத்த 
தகவல்கள் :


1 ) மிதுன லக்கினத்திற்கு மேஷம் 11  ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக செயல் படும் பொழுது எந்தவகையில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் ஜாதகர் செய்யும் தொழில் பொறியியல் சம்பந்தம் பெற்று அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார் ,

2 ) கன்னி லக்கினத்திற்கு கடகம் 11  ம் வீடாக வந்து சர நீர்த்ததுவமாக செயல்படும் பொழுது ஜாதகர்  தனது மன ஆற்றலை கொண்டு ( யோக நிலை மனோவசியம், மக்கள் வசியம்)  அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

3 ) தனுசு  லக்கினத்திற்கு துலாம் 11  ம் வீடாக வந்து சர காற்று தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் தனது அறிவை மூலதனமாக கொண்டு ( கமிஷன், போதனை , பேச்சு ) அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

 4  ) மீன லக்கினத்திற்கு மகரம் 11  ம் வீடாக வந்து சர மண் தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் மண் மனை வண்டி, வாகனம் ,சொத்து வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.


இதுவெல்லாம் சிறு விளக்கம்  நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டும் . இதில் மேலும் பல விசயங்கள் உண்டு .ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

Monday, March 5, 2012

திசை புத்திகளில் நவ கிரகங்கள் கோட்சார ரீதியாக நடத்தும் பலன்களும் !
ஜோதிட பலன் சொல்லும்பொழுது பெரும்பாலும்  பல ஜோதிடர்கள் , சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு , கோட்சார ரீதியாக , ராகு கேது , குரு, சனி ஆகிய கிரகங்கள் ஜாதகரின் ராசியுடன் சம்பந்தம் செய்து நன்மை தீமை பலன்களை சொல்லுகின்றனர், இந்த கணிப்பு சரியான பலன்களை சொல்லுமா ? 

நிச்சயம்  சரியான பலன்களை தருவதில்லை என்பதே உண்மை . மேலும் கோட்சார ரீதியாக பலன் சொல்லுவது எப்படி ?

1  முதலில் ஜாதகரின் லக்கினம் என்னவென்று பார்க்க வேண்டும் , இலக்கணத்தை வைத்து பலன் சொல்லுவதே மிகவும் சரியான பலன்களை தெரிந்து கொள்ள முடியும் .

2  ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் , என்ன வென்று சரியாக கணிதம் செய்து ஜாதகத்துடன் ஒப்பிட்டு பார்த்து சரி செய்து கொள்ளுவது நல்லது.

3  ஜாதகருக்கு நடக்கும்  திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் , அனைத்தும் எந்த எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது என்று கணித்து கொள்ள வேண்டும் .

4  குறிப்பாக    திசை , புத்தி எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது என்று காண்பது முக்கியம் 

5  இதற்க்கு பிறகு ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம் , சூட்சமம் அனைத்தும் எந்த வீடுகளின் பலன்களை நடத்துகிறது, அது என்ன விதமான பலன்களை நடத்துகிறது ( நன்மை தீமை ) என்று கணிப்பது சரியான பலன்களை சொல்ல ஏதுவாக இருக்கும் . மேலும் இந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக  நவ  கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதா என்று கணிப்பது மிக முக்கியம் .

 6   அப்படி இந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக  நவ  கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் அவை எந்தவிதமான பலன்களை தருகிறது  ( நன்மை தீமை ) என்று கணிப்பது முக்கியம் .

7  ஒரு வேலை திசை புத்தி பலன் நடத்தும்  வீடுகளுடன் கோட்சார ரீதியாக கிரகங்கள் சம்பந்தம் பெற வில்லை என்றால், கோட்சார பலன்களை பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை.

8  எந்த ஜாதகமாக  இருந்தாலும் நடக்கும் திசை எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளுடன் கோட்சார கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை செய்யும் . 


எடுத்துகாட்டாக :  கோட்சார அமைப்பு 05  / 03  / 2012 

ஒரு ரிஷப லக்கினம் , கன்னி ராசியை சேர்ந்தவருக்கு , சுய ஜாதகத்தில் நடக்கும் திசை 1ம் வீடு 7 ம் வீடு, -- 10 ம்    வீட்டுடன் தொடர்பு பெற்று  தற்பொழுது பலன் நடத்துமாயின், ஜாதகர் கன்னி ராசியாக இருந்தாலும் துலாத்தில் தற்பொழுது  இருக்கும் சனிபகவானால் ( ஏழரை சனி என்று மற்றவர் பயமுறுத்துவார் ) எந்தவிதமான நன்மை தீமையான பலன்களையும் அனுபவிக்க மாட்டார் , ஆனால் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டுடன் தொடர்புடைய கோட்சார ராகு கேது இரு கிரகங்களினாலும் 100  சதவிகித நன்மையே பெறுவார்.ஜோதிடமும் பெண்களும் !

பொதுவாக ஜாதக பலன்கள் சொல்லும் பொழுது அவர்கள் ஆண்களாக இருந்தாலும் , பெண்களாக இருந்தாலும் ஒரே முறையை ஜோதிடர்கள் பின்பற்றுகின்றனர் , இது முற்றிலும் தவறான கணிப்புகளை தந்துவிட வாய்ப்பு உள்ளது , மேலும் பலன்களும் சரியாக வர வாய்ப்பில்லை .


எடுத்துகாட்டாக :

 ஒரு பெண்ணின் தாய் தந்தை ஸ்தான பலன்களை தெரிந்துகொள்ள அந்த பெண்ணின் ஜாதகத்தில் எந்த வீடுகளை வைத்து நிர்ணயம் செய்யலாம் ? 

பாரம்பரிய முறையில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களது சுய ஜாதகத்தில் தாய் தந்தை ஸ்தான பலன்களை தெரிந்துகொள்ள அந்த பெண்ணின் ஜாதகத்தில் ( தாய் )நான்காம் வீடு
 ( தந்தை )ஒன்பதாம் வீடு என்று கணித்து பலன் சொல்லுகின்றனர் ,

ஆனால் நமது ஜோதிட முறையிலும் சரி , ஜோதிட தொன்மையான நூல்கலிலும் சரி பெண்ணின் ( தாய் ஸ்தானத்தை  10 ம்   வீடும் ), ( தந்தை ஸ்தானத்தை 4  ம் வீடும் ) வைத்து நிர்ணயம் செய்யும் பொழுது பலன்கள் மிகவும் துல்லியாமாக சொல்லிவிட முடியும் .

இயற்கையாகவே பெண்ணின் குணம் மற்றும் கற்ப்பு நிலை , அழகு போன்ற அமைப்பை இந்த நான்காம் வீட்டை வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்து விட முடியும்.

பெண்களின் மனம் என்பது மிகவும் இறக்க சுபாவம் கொண்டது , மேலும் மற்றவர்கள் சொல்லுவதை தனது சுய சிந்தனையால் ஆராய்ச்சி செய்யாமல் நம்பிவிடும் தன்மை இவர்களது பலவீனம் ஆகும் . ஆனால் புத்திசாலி தனத்தில் ஆண்களை விட பெண்களே மிகவும் சிறந்தவர்கள் என்பது கண்கூடான உண்மை , ஒரு முடிவு செய்வதில் ஆண்களை விட பெண்கள் மிக விரைவாக செயல்படும் தன்மை கொண்டவர்கள். 

பொதுவாகவே ஒரு ஆண் திருமண வாழ்க்கைக்கு முன்பு இருந்த முன்னேற்றத்தை விட , திருமணத்திற்கு பிறகு ஏற்படும் முன்னேற்றம் மிக விரைவானதாகவும், சரியானதாகவும் அமைவதற்கு காரணம் இந்த பெண்களின் முடிவெடுக்கும் திறனும் அவர்களது ஒத்துழைப்பும் காரணம் ஆகும் . மேலும் அந்த பெண்ணின் யோகா அமைப்பும் சேர்ந்தால் அந்த ஆணின் வாழ்க்கை மிகவும் சிறப்படைகிறது .

ஆண்களின் சிந்தனைகளை விட பெண்களின் சித்தனை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது, மேலும் பல புதுமைகளை உலகுக்கு, சமுதாயத்திற்கு  சொல்கிறது என்பதே ஆராய்ச்சியில் கிடைத்த உண்மை.

இவர்களது பலவீனங்களை தவிர்த்தால் பெண்களால் சாதிக்க இயலாதது ஒன்றும் இல்லை என்பது உண்மை . ஜோதிட ரீதியாக பெண்கள் தமது திறமைகளை உணர்ந்து ஜோதிடம் காட்டும் நல்வழியில் செல்வார்களே ஆனால் இவர்களது வாழ்க்கை ஒரு பூந்தோட்டமே !

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

கம்ப்யூட்டர் ஜாதகம் பற்றிய விளக்கம் !
இந்த நவீன உலகத்தில் கணினி இல்லாத இடங்களே இல்லை எனலாம் ! மேலும் இந்த கணினி மாயம் மக்களுக்கு பணிகளை முடித்து தருவதில் மிகவும் அதிகம் பயன் படுகிறது .

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜோதிட ஜாதகம் கணிப்பதைக்கூட கணினிகள் துல்லியமாக கணிதம் செய்து சில நெடிகளில் தந்து விடுகிறது, இந்த கணித அடிப்படையில் ஜாதகபலன்களை ஒரு ஜோதிடர் சொல்லுவதற்கு சில நிமிடங்களே போதும் .

மேலும் சில ஜோதிட மென் பொருட்கள் பலதரப்பட்ட ஜோதிட கணிதங்களை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து கொடுத்துவிடுகின்றது .

சரி இப்படி கணிதம் செய்து கொடுக்கும் கணினி ஜோதிட மென் பொருட்களில் , ஜாதக பலன் , கிரக பலன் , கோட்ச்சாரா பலன் என பலன்களையும் அதில் இருந்தே தெரிந்து கொள்ள வழி செய்துள்ளனர் , இதில் காணப்படும் பலன்கள் நடைமுறை வாழ்க்கையில் ஒத்து வருமா ? 


நிச்சயம் வாய்ப்பில்லை காரணம்.  ஜோதிட மென் பொருள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டு கணினியில் உள்ளீடு செய்யப்பட்ட ஒரு மென் பொருள் அவ்வளவே ! இதில் கூறப்படும் பலன்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு உள்ளிடு செய்யபட்டவை   என்பதை கருத்தில்  கொள்வது மிக்க நலன் தரும் .

ஜோதிட ரீதியான பலன்களை தெரிந்து கொள்ள சிறந்த ஜோதிடரை நாடுவதே 100  சதவிகித நன்மை தரும் , மேலும் கிரக நிலைகளை துல்லியமாக தெரிந்து கொள்ளவும் , ஜாதக அமைப்பை துல்லியமாக கணிதம் செய்யவும் மட்டுமே இந்த ஜோதிட  மென் பொருட்கள் ( நான் பயன்படுத்தும் ஜோதிட மென் பொருள் உட்ப்பட ) 
பயன்படும் .   பலன் சொல்லுவது என்பது  ஜோதிட  மென் பொருட்கள் பயன்பட சிறிதேனும் வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்க .


ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696