வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 


குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் கடகராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

கடக ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் கடக ராசியினருக்கு பாக்கிய சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் கடக ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனியின்" பாதிப்பில் இருந்து கடக ராசியினர் அனைவரையும் மீட்டு எடுத்து பாக்கியங்களை நல்கும் சுப நேரமாகும், தங்களின் மனரீதியான கவலைகளும், அழுத்தங்களுக்கும் அறிவுபூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கும் காலம் இது, எதிர்ப்புகள் சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், எதிராளிகள் வழியில் இருந்தும் நன்மைகள் கைகூடிவரும், மனதில் தெளிவு பிறக்கும், குழப்பங்கள் நீங்கி சரியான முடிவுகளை முன்னெடுக்கும் வாய்ப்பு உண்டு, பலபுண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வருவதன் மூலம் ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் முழுமையாக பெறுவீர்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்து அதன் வழியில் இருந்து நல்ல வருமானம் பெறுவதற்கு வாய்ப்பை நல்கும்.


புதிய முதலீடுகள் புதிய தொழில் வாய்ப்புகள் புதிய சந்தர்ப்பங்கள் யாவும் இனிவரும் காலங்களில் தங்களுக்கு முழுமையான வெற்றிகளை வாரி வழங்கும், உறவுகள் அனைவரும் தங்களுக்கு உதவி புரியும் நேரமிது, தம்பதியர் இருவரிடமும் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்க்கையை வெற்றிகரகமாக எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து குடும்பத்தை வெகு சிறப்பாக நடத்தும் வாய்ப்பு தங்களுக்கு அதீத மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், பெற்றோர்கள் தங்களுக்கான நலம்தரும் விஷயங்களை சிறப்பாக முன்னெடுப்பார்கள், சொத்து வீடு வண்டி வாகனம் போன்ற விஷயங்களை தங்களது உடைமையாக்கி மகிழ்ச்சி பெற செய்வார்கள், ஆன்மீகத்தில் நாட்டத்தையும் இறையருளின் கருணையையும் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் அற்புதமான நேரமிது  என்பதை கடக ராசியினர் உணரும் நேரமிது, தங்களது கல்விஞானம் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்பட்டு எதிர்பாராத வெற்றிகளை வாரி வழங்கும்.

தனது 6ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு குடும்பஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு வருமான வாய்ப்பை மிக பெரிய அளவில் வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம் ஆகும், பேச்சில் உறுதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, திடீர்திருமண யோகம், காதலில் வெற்றி, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை முன்னெடுக்கும் யோகம், திடீர் பிரபல்யம், பொதுமக்கள் வழியிலான செல்வாக்கு, பொதுமக்கள் ஆதரவு வழியிலான பதவிகள், அரசியல் ரீதியான வெற்றிகள் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் அளவிலா நன்மைகளை வாரி வழங்குவார், சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை தன்னிறைவாக  மேற்கண்ட பாவக வழியில் முழுமையாக வாரி வழங்குவார், இருப்பினும் தங்களது குழந்தைகள் வாழ்வில் அதீத அக்கறையுடன் செயல்படுவது அவசியம், அவர்களது உடல் ஆரோக்கியம், மனவலிமை சார்ந்த விஷயங்களில் ஆறுதல், நடவடிக்கை சார்ந்த விஷயங்களில் கண்காணிப்பு, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பு, கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதல்கள் இவையனைத்தும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக மேம்படுத்தும், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிர்த்தல், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தங்களுக்கு வெகு சிறப்பான எதிர்காலத்தை நல்கும்.

தனது 7ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத வெற்றிகள், தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி மூலம் அபரிவித முன்னேற்றம், கல்வியில் ஆர்வம், நேர்த்தியான செயல்பாடுகள், தெளிவான சிந்தனை திறன், கற்பனை வளம், கலைத்துறையில் புகழ் பெரும் யோகம், தான் ஏற்றுக்கொண்ட காரியங்களில் திட்டமிட்டு செயல்படும் யோகம், எதிர்ப்புகளை துச்சமாக கருதி வெற்றிகொள்ளும் அமைப்பு, சர்வ சாதாரணமாக பல காரியங்களை சாதிக்கும் யோகம், பூமிக்கு கீழ் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியில் இருந்து மிகுந்த லாபம், விவாசாயம் சார்ந்த தொழில்கள் வழியில் கிடைக்கப்பெறும் அதீத முன்னேற்றம், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழியில் இருந்து வரும் லாபங்கள், அன்றாட தேவைகள் வழி பொருட்கள் மூலம் கிடைக்க பெரும் லாபங்கள் என மிகப்பெரிய தனசேர்க்கையை பெறுவீர்கள், மேலும் பிரச்சனைக்கான சரியான தீர்வுகளை முன்மொழிவதன் மூலம் கிடைக்க பெரும் பிரபல்ய யோகம், சரியான திட்டமிடல் மூலம் கிடைக்க பெரும் வெற்றி என தங்களின் வாழ்க்கையில் இதுவரை இல்லாத சுபயோகங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், இளைய சகோதரன் சகோதரி வழியில் கிடைக்க பெரும் அதிர்ஷ்டம், ஒத்துழைப்பு, பாகப்பிரிவினை சார்ந்த நன்மைகள் தங்களுக்கு அதீத தைரியத்தை தரும், எதிலும் வெற்றிபெறும் யோகம் உண்டு என்பதால் தன்னம்பிக்கை குறையாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

தனது 10ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், செய்யும் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட நிலைகளில் சற்று கடுமையான சிக்கல்களை தந்து வெற்றிபெரும் யோகத்தை நல்குவார், மற்றவர்கள் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதன் மூலம் தங்களின் கவுரவம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், சற்று விலகி நிற்பது நன்மையை தரும், தெய்வீக அனுகிரகம் தங்களின் கடுமையான உழைக்கும் திறனுக்கான அங்கீகாரத்தை வெகு சிறப்பாக நல்குவார், பதவி உயர்வு ஊதிய உயர்வு, அதிகாரம் சார்ந்த விஷயங்களில் தங்களின் கருத்துக்கள் இல்லாமல் வெற்றிகாண முடியாத வாய்ப்புகள், எதிலும் தனிமரியாதை, அயலதேச பயணங்கள் வழியிலான முன்னேற்றங்கள், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் மிகப்பெரிய வெற்றிகள், உடல்நலன் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஆரோக்கியம் மேம்படுதல், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக மீண்டு வரும் யோகம், தனது தேவைகளுக்கான நிதியை எந்த தடையும் இன்றி பெரும் வல்லமை, வங்கி கடன் பொருளாதார உதவிகள் தேடிவரும் யோகம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் 10ம்  சனிப்பார்வை தங்களுக்கு வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள். 

இனிவரும் காலங்களில் கடக ராசி அன்பர்களுக்கு சமூகத்தில் மதிப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு, உறவுகள் வழியில் ஆதாயம் உண்டு, உண்மையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், அதிகாரம் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவிகள் தங்களை தேடி வரும் என்பதை கருத்தில் கொள்க, எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696