ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு பாவகங்களுக்கு , அதிபதியாகும் தன்மை சனி ,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களுக்கு உண்டு . இருப்பினும் ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை தருவதில் முன்னுரிமை சனிபகவானுக்கே உண்டு , கலபுருஷ தத்துவத்திற்கு சனிபகவான் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டிற்கும் , அதிர்ஷ்டம் ,லாபம் எனும் பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார் , பொதுவாகவே இவருடைய கருணையில்லாமல் , ஒரு ஜாதகருக்கு நல்ல தொழிலும் , அதிர்ஷ்டமும் கிடைத்து விட வாய்ப்பு என்பது இல்லை அது சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எந்த லக்கினம் என்றாலும் சரி , மேலும் இந்த இரண்டு பாவகங்களில் , சனிபகவான் ஏதாவது ஒரு பாவகத்திர்க்காவது இயற்கையாகவே நிச்சயம் நன்மையை தருவர் அது எந்த லக்கினம் என்றாலும் சரி, மகரம் , கும்பம் என்ற ராசி அமைப்பில் இருந்து ஒரு ஜாதகருக்கு தரும் நன்மைகளை பற்றி இனி காண்போம் .
மகர ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :
மகர ராசி கால புருஷ தத்துவத்திற்கு சர நில ராசியாகவும் , பத்தாம் வீடாக அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த மகர ராசி லக்கினத்திற்கு எந்த பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பை கொடுத்துவிடும் , வாழ்க்கையில் ஜாதகருக்கு எந்தவிதமான உடல் நிலை குறைவும் நிச்சயம் ஏற்ப்படாது , அப்படி ஏற்ப்பட்டாலும் ஜாதகர் விரைவில் நலம் பெறுவார் , மேலும் தொழில் அமைப்பில் மண்ணில் இருந்து கிடைக்கும் கனிம வளங்களை அடிப்படை மூலதனமாக கொண்டு விரைவில் , அந்த தொழில் கொடிகட்டி பறக்கும் தொழில் அதிபர்கள் அனைவரின் ஜாதகத்திலும் இந்த மகர ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .
குறிப்பாக அவர் மேஷ லக்கினம் கடக லக்கினம் , துலா லக்கினம், தனுசு லக்கினம் ,மீன லக்கினம் போன்ற அமைப்பை நிச்சயம் பெற்றிருப்பார் , மேலும் கட்டுமான தொழில்களில் , கனரக வாகனம் , சரக்கு வாகனம் ,பண்ணை தொழில் , வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை மொத்த வியாபாரம் செய்வோர், இரும்பு , சிமென்ட், தொழில்களில் சிறந்து விளங்கும் நபர்கள் , மண்ணை ஆதராமாக கொண்டு தொழில் செய்யும் நபர்களில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதக அமைப்பில் இந்த மகர ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆக ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் மகர ராசி அமைப்பில் நன்மையை செய்கிறார் என்றால் , அந்த ஜாதகருக்கு தொழில் அமைப்பில் இருந்து விரைவான முன்னேற்றமும் , தான் செய்யும் தொழில் சிறந்து விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு இதை தடுக்க எவராலும் முடியாது .
கும்ப ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :
கும்ப ராசி கால புருஷ தத்துவத்திற்கு ஸ்திர காற்று ராசியாகவும் , பதினொன்றாம் வீடாக அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த கும்ப ராசி லக்கினத்திற்கு எந்த பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அளவிட முடியாத புத்திசாலி தனத்தையும் , சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கி விடுகிறார் , மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் அனைவரும் அரசு துறையில் மிக உயர்ந்த பல பதவிகளில் அமர்ந்து இருக்கின்றனர் , மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களையும் , அவர்களின் நல்வாழ்விற்க்கான அறிய திட்டங்களை வகுக்கும் பொறுப்புகளில் சிறப்பாக செயல் படுகின்றனர் , அரசு இயந்திரம் சிறப்பாக செயல் பட இவர்களின் அறிவாற்றல் அதிகம் பயன்படுகிறது , சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் இவர்களின் உதவி நிச்சயம் தேவைபடுகிறது . தனது அறிவை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அனைவரின் ஜாதகத்திலும் இந்த கும்ப ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .
குறிப்பாக அவர் ரிஷப லக்கினம் , மிதுன கன்னி லக்கினம் ,சிம்ம லக்கினம் ,விருச்சிக லக்கினம் போன்ற அமைப்பை நிச்சயம் பெற்றிருப்பார் , தனியார் துறையில் உயர் பதவிகள் வகிப்பதிலும், சட்டம் மற்றும் மருத்துவ துறைகளிலும் ,கலை துறையிலும் , ஆடிட்டர், வங்கி மேலாண்மை ,புதிய கண்டு பிடிப்புகள் , மக்கள் ஆதரவு தொழில்களிலும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் நபர்களும் , இந்த கும்பராசி அமைப்பில் சனிபகவானால் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களே , அதிலும் தகவல் தொழில் நுட்பம் , மின்னணு சாதனங்கள் மூலம் அதிக லாபம் பெறுவோர்கள் என சிறப்பான வாழ்க்கையை, இந்த கும்பராசி, சனிபகவானால் பெறுவோர்கள் அதிகம் .
ஆக மகர ராசி அமைப்பில் சனிபகவான் சொத்து , சுகம் , மனம், உடல் என்ற அமைப்பில் யோக பலன்களையும் , கும்ப ராசி அமைப்பில் சனிபகவான் அறிவு , புத்திசாலி தனம் , அதிர்ஷ்டம் , மக்கள் செல்வாக்கு என்ற அமைப்பில் யோக பலன்களையும் , தவறாமல் தந்து விடுகிறார் . எந்த ஒரு லக்கினம் என்றாலும் சனிபகவான் அதிபதியாக வரும் இந்த மகரம் , கும்பம் ராசி அமைப்பில் இருந்து ஒரு ராசி , அமைப்பிற்கு நிச்சயம் சனிபகவான் நன்மையான பலன்களை தந்து விடுகிறார் , எனவே எந்த ஒரு ஜாதகரும் சனிபகவானால் 100 சதவிகிதம் பாதிக்க படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com
சனி பார்வையிலிருந்து யாரும் தப்பமுடியாது – சிறுகதை
பதிலளிநீக்குஜோதிட கணிதம் பற்றி விழிப்புணர்வு இல்லை எனில், இப்படியே வெறுங்கதை பேசிகிட்டே போகவேண்டியதுதான்,
பதிலளிநீக்குஎனக்கு கும்ப லக்கினம். 12ல்(மகரம்) சனி இதற்க்கு எப்படி இருக்கும்?
பதிலளிநீக்குyenaku virsigam laganam kani rasi 7 la sukkiran nalathu nathakuma
பதிலளிநீக்கு