கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கு அளவில்லா சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும் அற்புதமான திருக்கோவில், கேட்ட அனைத்தையும் தாய் பகவதி வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர், அஸ்த நட்சத்திர அன்பர்கள் வளர்பிறை திங்கள் அன்று இத்திருக்கோவிலுக்கு சந்திர ஹோரையில் மல்லிகை மலர்மாலை மற்றும் வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இவர்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும், குறிப்பாக உடல் ஆரோக்கியம், மனோ வலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, திருமண யோகம், புத்திர பாக்கியம், வீடு வண்டி வாகன யோகம், புதிய வேலை அல்லது தொழில், பொருளாதார வழியிலான முன்னேற்றங்கள், விவசாயம் மற்றும் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ சாபம் நீங்குதல், பித்ரு சாபம் நீங்குதல், பெண்சாபம் நீங்குதல் என சகல தோஷங்களில் இருந்தும் விடுதலை வழங்கும் வல்லமை பெற்ற தெய்வம் "சோட்டானிக்கரை பகவதியம்மன்" என்பதை அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் வழிபாடு செய்வதன் வழியில் இருந்து உணர முடியும்.
வருடம் ஒருமுறை (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" சென்று வரும் கன்னி ராசி அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் நிலைத்தன்மையிலான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கமுடியும், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை, புதிய முயற்சிகள் வழியிலான முன்னேற்றங்கள் உண்டாகும், தனது துறை சார்ந்த ஞானம் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி உண்டு, அருங்கலைகள் மூலம் உலகப்புகழ் பெரும் யோகம் உண்டாகும், சாதனை படைப்பதற்கான அத்துணை வாய்ப்புகளும் வந்து சேரும், ஜீவன விருத்தி, திருமணயோகம் வெகு சிறப்பாக வந்து சேரும், உயரிய குணங்களால் வாழ்க்கையில் உன்னத வெற்றிகளை பெறுவதுடன் சமுதாயத்திற்க்கு பயனுள்ள வாழ்க்கையை முன்னெடுக்கும் யோகம் உண்டாகும், நல்ல எண்ணமும் சிறந்த நற்செயல்களும் அஸ்த நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், தொட்ட காரியங்கள் விருத்தி பெறுவதுடன், புகழ் மிக்க பொறுப்புகளும் அரசியல் பதவிகளும் வந்து சேரும், முறையான வாழ்க்கை, நேர்மையான முன்னேற்றம், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பாரம்பரிய விஷயங்களை கட்டிக்காக்கும் பேராற்றல், உறவுகளுடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடிக்கும் வல்லமை, தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள், அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை சுவீகரித்தல் என்ற வகையில் தன்னிறைவான யோக வாழ்வை பெற்று நலம் பெறுவார்கள்.
குறிப்பு :
கன்னிராசியில் "அஸ்தம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், அதிர்ஷ்டத்தையும் ஆளுமை திறனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள், இவர்களது வளர்ச்சி அதிர்ஷ்டகரமாக அமையும், வாழ்வை மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலய" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் பொருள் ஆதாயத்தையும் அதிகார பதவிகளையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே !
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக