சனி, 12 செப்டம்பர், 2015

திருமண தடைகளை சந்திக்கும் பெண்ணின் ஜாதக அமைப்பு !

  

சுய ஜாதகங்களில் குறிப்பாக பெண்களின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்க படுவது சம்பந்த பட்ட ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், திருமணம் செய்துகொள்வதற்கு எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தடைபடும், தாமதமாக செய்யும் திருமண வாழ்க்கையும் சோபிப்பது இல்லை, மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகியின் கதி அதோ கதிதான், கிழ்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமையாமல் இதுவரை தடை தாமதங்களை சந்தித்து கொண்டு இருப்பதின் காரணத்தையும், ஜாதகி இனி கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களையும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 2ம் பாதம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியை லக்கினமாகவும், சர நெருப்பு தத்துவ ராசியான மேஷத்தை ஜென்ம ராசியாகவும், சுக்கிரனின் நட்சத்திரமான பரணியை ஜென்ம நட்சத்திரமாகவும் அமைய பெற்ற இந்த ஜாதகியின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,5,7,8,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு,
2,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
4,6ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு 3,9,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பெருவாரியான பாதிப்பில் உள்ளது மிக  தெளிவாக புலனாகிறது, அடிப்படையில் ஒருவரின் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றி நாம் தெரிந்துகொள்ள கவனிக்க வேண்டிய பாவகங்கள் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையையுமே, மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு தொடர்பு பெறுவது பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தொடர்பு பெறுவது சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன்.

 ஆக  ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமைவதற்கு பல தடைகளையும், இன்னல்களையும் தரும் என்பதை 2,7ம் பாவக வலிமை நமக்கு தெளிவாக உணர்த்திவிடுகிறது, மேற்கொண்டு ஜாதகியின் லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது தனது வாழ்க்கையை தானே கேடுத்துகொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகிக்கு நல்ல வரன்கள் வந்த போதிலும் அனைத்தையும் தனக்கு பொருத்தமில்லை என்று உதறும் தன்மையை தரும், 12ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் எல்லை இல்லா கற்பனை வளத்தை காட்டுவதால், தனது வாழ்க்கை துணை பற்றிய அதிதீவிரமான கற்பனை தேடுதல் மூலம் தனக்கு வரும் வரன்களின் ஜாதகங்கள் அனைத்தையும் தவிர்த்து வருகிறார்.

இதை பார்க்கும் பொழுது கிராமங்களில் பெரியோர் சொன்ன பலமொழிதான்  நமக்கு  ஞாபகம் வருகிறது "ஆசை இருக்கு தாசில் செய்ய அம்சம் இருக்கு கழுதை மேய்க்க" என்பதற்கு இணங்க ஜாதகியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது, வயது 30க்கு மேல் முடிந்து விட்டது ஜாதகியின் லக்கினம்,குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் திருமண வாழ்க்கையை அமைத்து தாராமல், ஜாதகியை முதிர்கன்னியாக மாற்றிவிட ஆயத்த நிலையில் இருப்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே !

ஜாதகி தனது கற்பனை கணவனை மண்ணில் போட்டு புதைத்து விட்டு, தனக்கு வரும் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்து நல்ல இல்லறத்தை நடத்துவதே நல்லது, திருமணத்திற்கு பிறகு இன்னல்கள் வந்த போதிலும் அதை தனது கர்ம வினை பதிவின் விளைவு என உணர்ந்து, தனது இல்லற வாழ்க்கையை செம்மையாக நடத்துவதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 கருத்துகள்:

  1. 2 மற்றும் 12-ம் பாவகம் எவ்வாறு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு கொள்கின்றன? ஜோதிடத்தில் வெளிப்படை இல்லாமல் மறைப்பதற்கு என்ன இருக்கின்றது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் அஸ்தங்கத நிலையில், காற்று தத்துவ லக்கினத்தில், ராகுவின் நட்சத்திரத்தில் 6,8 ம் பாவாகம் வலிமை பெற்ற நேரத்தில் செய்யும் குற்றங்களை எவராலும் கண்டு பிடிக்க இயலாது, எனவே ஜோதிட சாஷ்திரத்திலும் ஒளிமறைவு உண்டு, மேற்கண்ட விஷயத்தை தீயவர்கள் அறிந்தால் சமூகத்தில் மக்கள் அமைதி கெடும் என்பதை உணர்ந்த சாஸ்திர நிபுணர்கள் ஜோதிடத்தில் நிறைய ஒளிமறைவு விஷயங்களை வைத்துள்ளனர், எனவே குரு முகமாக நின்று ஜோதிட கலையை கற்றுகொள்ளும் பொழுது தங்களின் பாவக தொடர்புக்கு உண்டான கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும், எமது குருவின் கருணையால் பாவக தொடர்புகளின் ரகசியம் அறிய பெற்றோம், தங்களுக்கும் ஆர்வம் இருப்பின் அருள்வேல் அய்யாவின் தொடர்பை பெற்று முறையாக கற்றுகொள்வது சிறப்பானதாக அமையும்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு