பின்தொடர...

Friday, June 2, 2017

திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலனும், சுய ஜாதக யோக நிலையும் !


 ஜோதிட கணிதத்தில் மிகவும் சிக்கலான விஷயம் எதுவெனில், ஓர் ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயமும், ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் எவை ? வலிமை அற்ற பாவகங்கள் எவை ? ஜாதகருக்கு யோகத்தை தரும் பாவகங்கள் எவை ? ஜாதகருக்கு அவயோகங்களை தரும் தரும் பாவகங்கள் எவை ? என்பதை கண்டு சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  தெளிவான பலாபலன்களை கூறுவதே, சில ஜாதகங்களில் பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும், இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாது, இதனால் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும் ஜாதகருக்கு  யோக பலன்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது, சில ஜாதகங்களில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் இருப்பினும், ஜாதகர் சுக போகங்களுக்கு குறைவின்றி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பார், இதற்க்கு காரணமாக ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், இதனால் ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை சந்திக்காமல், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே அனுபவித்துக்கொண்டு இருப்பர்.

 மேற்கண்ட விஷயம் பற்றி தெளிவு பெற நமது சுய ஜாதக வலிமை பற்றியும், நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக நிலையை பற்றிய ஜோதிட கணித அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்,  ஜாதக கணிதம் செய்வதில் தவறு ஏற்படும் பொழுது, கூறப்படும் பலாபலன்களை முற்றிலும் தவறானதா மாறிவிட வாய்ப்பு அதிகம் உண்டு, மேலும் சுய ஜாதக பலன் காணும் பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும், ஆதாவது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? நவகிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார  கிரகங்கள் தரும் பலாபலன்கள் என்ன ? என்பதை பற்றி தெளிவு இல்லாத  பொழுது, ஜோதிடம் கூறுவதே கற்பனை நிறைந்ததாக மாறிவிடும், மேலும் சந்திரன் நின்ற ராசிக்கு சொல்லும் பொது பலன்களையும், நவகிரக திசாபுத்திகளுக்கு சொல்லப்படும் பொது பலன்களையும் ஜாதக பலாபலன்களாக  உண்மைக்கு புறம்பாக கூறும் நிலை உருவாகிவிடும், இது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குழப்பத்தையும் தெளிவில்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு  பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தரம் பற்றிய உண்மை நிலையை உணரவைக்கும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக நிலையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகர் திசாபுத்திகளில் அனுபவிக்கும்  யோக அவயோக நிலையை பற்றி தெளிவு படுத்தும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை, வலிமை அற்ற  தன்மையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகரின்  நிகழ்கால எதிர்கால திட்டமிடுதல்களை  மேம்படுத்த உதவிகரமாக அமையும், மேற்கண்ட ஜாதக கணித  விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாத பொழுது, சுய ஜாதக பலாபலன்கள் காண முற்படுவது நகைப்புக்கு உரியதாகவே அமைந்துவிடும், மேலும் ஜாதக கணிதம் சார்ந்த தெளிவு இன்மையையே எடுத்துக்காட்டும்.

கீழ்கண்ட ஜாதகிக்கு 2ல் நின்ற புதன் 3,12க்கு அதிபதியாகி, தனது திசை முழுவதும் ஏற்று நடத்திய பாவக  பலாபலன்களை  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! மேலும் " கேது திசை போல் கெடுப்பார்  இல்லை" என்ற பொது பலனுக்கு, அடுத்து வரும் கேது திசை ஜாதகிக்கு  தரும் பலாபலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்

ஜாதகிக்கு வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,5,7,11ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
6,9ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள்.

ஜாதகிக்கு வலிமை  அற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில்  இருந்து ஜாதகிக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகள், வீண் செலவினங்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.
12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு  விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை  தரும், எனவே ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 4,8,12ம் வீடுகளான 3பாவகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதில் 4ம் பாவகம் மட்டும் கடுமையான  வகையில் பாதக ஸ்தான வழியிலான இன்னல்களை 200% விகிதம் தருகின்றது.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 9 பது பாவகங்கள் வலிமை பெற்றும், 3 பாவகங்கள் வலிமை அற்றும் காணப்படுகிறது, எனவே சுய ஜாதகம் 80% சதவிகிதம் மிகவும் வலிமையுடன் உள்ளது என்பதை உறுதியாக கூறலாம், இனி ஜனனம் முதல் தற்போழுது வரை நடைபெறும் திசை தரும் பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு ஜெனன அமைப்பில் சனி திசை 16 வருடம் 5 மாதங்கள் இருப்பில் இருந்து நடைபெற்று இருக்கின்றது, சனி திசை ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் சுக  ஸ்தானமான 4ம் பாவகத்தில் உச்சம் பெற்று நின்று, 7,8ம் பாவகங்களுக்கு அதிபதியாகி தனது திசையினை நடத்தியிருக்கின்றது, நடைபெற்ற 16 வருடம் 5 மாதமும் ஜாதகிக்கு, சனி தனது திசையில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன வழியிலான யோக பலனையும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான வழியிலான அவயோக பலனையும் வழங்கியிருக்கின்றது, எனவே ஜாதகி சனி திசையில் ஜீவன வழியில் நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து இருக்கின்றார், எனவே ஜாதகிக்கு சனி திசை 90% விகித யோக பலனையே நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.

சனி திசைக்கு பிறகு தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஜாதகிக்கு 2ல் நின்ற புதன் 3,12க்கு அதிபதியாகி, தனது திசை முழுவதும் 4ம் வீடு பாதக  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தற்போழுது வரை நடத்தியிருக்கின்றது, இதில் வருத்தம் என்னவெனில் ஜாதகி புதன் திசையில் 4ம் பாவகத்தை குறிக்கும் தகப்பனாரை திடீரென இழந்ததுதான், இது  ஜாதகிக்கு கடுமையான நெருக்கடிகளை வளரும் சூழ்நிலையில் தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டிய சூழ்நிலையையும், கடுமையான போராட்டங்களையும்,  அதிகமான எதிர்ப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, எனவே ஜாதகிக்கு புதன் திசை 4ம் பாவக வழியிலான பாதக ஸ்தான பலனை அனுபவிக்க  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் புதன் திசை அவயோக பலாபலன்களை தந்து இருக்கின்றது, சுய ஜாதகத்தில் 9 பது பாவகங்கள்  வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை ஜாதகிக்கு அவயோக பலன்களாக 200% விகிதம் தந்து கொண்டு இருக்கின்றது.

புதன் திசைக்கு அடுத்து வரும் கேது ஜாதகிக்கு 5ல் நின்று தனது திசையில் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு  அளவில் யோக பலன்களை தருவது ஜாதகிக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி  வழங்கும் , இங்கே கேது தனது திசையில் வீரிய ஸ்தான பலனை ஏற்று   நடத்துவது " கேது திசை போல் கெடுப்பார்  இல்லை" என்ற பொது பலனை   பொய்யாக்குகிறது, கேது திசை ஜாதகிக்கு 3ம் பாவக வழியிலான  யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

கேது திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 2ல் நின்று, சுகம்  மற்றும் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாகி தனது திசையில் 1,2,5,7,11ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,2,5,7,11ம் பாவக  வழியிலான  யோக பலன்களை சிறப்பாக வாரி வழங்குவது ஜாதகிக்கு  சிறப்பான எதிர்காலத்தை சுக்கிரன் திசையில் வாரி வழங்கும் என்பதில்  சந்தேகம் இல்லை, எனவே ஜாதகிக்கு எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை  இரண்டும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவது சுப யோகங்களை ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்  என்பது  உறுதியாகிறது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே ஜாதகருக்கு யோக பலாபலன்களை  தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான  சுபயோகங்களை பெற இயலும் என்பதை நினைவில்  நிறுத்துவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் நடைபெறும் புதன்  திசை வலிமை பெற்ற பாவக  பலனை ( 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஏற்று நடத்தவில்லை, ஆனால் கேது மற்றும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு யோக வாழ்க்கையை வாரி  வழங்கும் அமைப்பாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696     

No comments:

Post a Comment