கூட்டுதிசை அல்லது திசாசந்தி (மணமகன் மணமகள்) இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண பொருத்தம் அற்ற நிலையையோ அல்லது இல்லற வாழ்க்கையில் பாதிப்பையோ தருமா ?
கூட்டுதிசையோ அல்லது திசாசந்தியோ மணமகன் மணமகள் ஜாதகத்தில் இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறும் பொழுது இருவருக்கும் நடைபெரும் தசா அல்லது எதிர்வரும் தசைகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிப்பை தாராது, மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மிகுந்த பாதிப்பை தரும், தசாசந்தி அல்லது ஏகதசை நடைபெறாத சூழ்நிலையிலும் வரன் வதுவுக்கு நடைபெறும் தசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது திருமண வாழ்க்கையில் இன்னல்களையும், இல்லற வாழ்க்கையில் கடுமையான பாதிப்பையும் தரக்கூடும் என்பது உண்மை நிலை, எனவே தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டியது சுய ஜாதக வலிமையோ அன்றி, ஏகதிசை, கூட்டுதிசை, திசாசந்தி, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம் போன்ற சுய ஜாதக வலிமைக்கு புறம்பான விஷயங்கள் அல்ல என்பதை அன்பர்கள் உணருவது அவசியம், இதை ஓர் உதாரண ஜாதகங்கள் கொண்டு உண்மையையும் தெளிவையும் பெறுவோம் அன்பர்களே !
மணமகள் ஜாதகம் :
லக்கினம் : ரிஷபம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம்
ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன் தற்போழுது நடைபெறும் செவ்வாய் தசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அமைப்பாகும், ஜாதகிக்கு செவ்வாய் தசை தான் கற்ற கல்வி வழியில் இருந்தும், குலதெய்வ ஆசிகள் வழியில் இருந்து மிகப்பெரிய அளவிலான யோக வாழ்வை நல்கும் என்பது கவனிக்க தக்கது மேலும் எதிர்வரும் ராகு தசையும் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகிக்கு தொடர்ந்து சுபயோகங்களை 5,11ம் பாவக வழியில் வாரி வழங்கும், அதன் பின் வரும் குருமகா தசையும் 2,6,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வழியில் சுபயோகங்களை வாரி வழங்குவது இல்லற வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்வையே நல்கும் அமைப்பாகும், அடுத்து மணமகன் ஜாதக நிலையை கருத்தில் கொள்வோம்.
மணமகன் ஜாதகம் :
லக்கினம் : மகரம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : உத்ராடம் 1ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன், ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் மிக மிக வலிமையாக இருப்பது கவனிக்க தக்க விஷயம், இது ஜாதகருக்கான சுபயோக வாழ்வை உறுதி படுத்தும் அம்சமாகும், தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் ராகு தசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்வை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகர் வாழ்வில் சுயமாக வெற்றி பெறுபவராகவும், ஆரோக்க்கியம் கல்வி தொழில் போன்ற அமைப்புகளில் சுய ஆளுமைத்திறன் நிறைந்தவராகவும் காணப்படுவார், மேலும் எதிர்வரும் குரு மகா தசையும் 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்வை தொடர்ந்து நல்குவதுடன், அதன் பின் வரும் சனி மகாதசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும். 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை இல்லற வாழ்க்கையில் நல்கும், எனவே மணமகள் மற்றும் மணமகன் இருவரது சுய ஜாதகமும் மிக மிக வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் எதிர்வரும் தசை புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வெற்றிகரமான இல்லற வாழ்வை வழங்கும் யோக அமைப்பாகும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறோம்.
இப்படி பட்ட யோக ஜாதக அமைப்பை தசாசந்தி கூட்டுதசை ஏகதசை நடப்பு என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்வது சுயஜாதக வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் தவறான கருத்துக்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.
சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் திருமணபொருத்தம் இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதே உண்மை நிலை அன்பர்களே "வாழ்த்துக்கள்"
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக