மேஷம் குருபெயர்ச்சி பலன்கள்
குருதிசை அல்லது குருபுத்தி தற்போழுது நடைமுறையில் உள்ள மேஷ ராசியினர் மட்டும் நிகழவிருக்கும் குருபெயர்ச்சியினை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளவும், கடக ராசியில் புனர்பூசம்(குரு) பூசம்(சனி) ஆயில்யம்(புதன்) நட்சத்திரத்தில் ( 18/10/2025 முதல் 31/10/2026 வரை ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் குருதிசை அல்லது குருபுத்தி நடைமுறையில் உள்ள மேஷ ராசி அன்பர்களுக்கு வழங்கும் சுபயோகங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே !
சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் மேஷ ராசி அன்பர்களுக்கு நீண்ட நாள் கனவான சொந்த வீடு இடம் வண்டி வாகன யோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கிய போதிலும் ஆண்களுக்கு தனது தாய் வழியிலும், பெண்களுக்கு தமது தந்தை வழியிலும் இன்னல்களை வீண் செலவினங்களை தரக்கூடும், தங்களின் கண்காணிப்பு திறன் அதிகரிப்பதுடன், ஆளுமை திறனும் மேம்படும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு, எதிர்பாராத பதவி உயர்வு, மேலதிகாரி ஆதரவு, புதிய யுக்தி மூலம் பெரும் வருமான உயர்வு என்ற நிலையில் நன்மைகள் உண்டாகும், விவசாயம் செழிக்கும், விவசாயி வாழ்க்கை முன்னேற்றம் பெரும், திடீர் தன சேர்க்கை தங்களின் செல்வாக்கை உயர்த்தும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் அதன் மூலம் பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், உறவுகளின் ஏளனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்கு தங்களின் பெருமையை உணர்த்துவீர்கள், இதுவரை மதிக்காத சொந்தபந்தம் தங்களின் உறவுக்காகவும் நட்புக்காகவும் ஏங்குவார்கள், குறிப்பாக காதலில் ஏமாற்றம் அடைந்தவர்கள் மேன்மை நிறைந்த இல்லற வாழ்க்கை துணையை பெரும் யோக காலமிது.
குரு பகவான் தனது 5ம் சுபபார்வையை திடீர் அதிர்ஷ்டத்தை தரும் தனது வர்க கிரக (செவ்வாய் ) வீடான விருச்சிக ராசியை ( 8ம் பாவகம் ) வசீகரிப்பது தடைபட்ட திருமண வாழ்க்கையை சீரும் சிறப்புமாக நடைபெற வைப்பார், தங்களது வாழ்க்கை துணை மூலம் எதிர்பாராத மாற்றங்களைகளும் முன்னேற்றங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தங்களுக்கு தொடர்ந்து துன்பத்தை தந்துகொண்டு இருந்த நபர்கள் அனைவரும் சிதறி ஓடுவர், எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் அற்புதமான நேரமிது எதிர்த்தவர்கள் அனைவரும் உங்கள்முன் மண்டியிடும் சூழ்நிலை உருவாகும், அதிகாரமிக்க பொறுப்புகள் திடீர் என தங்கள் திறமைக்கும் கைவரப்பெறும், போட்டி பந்தயம் வம்பு வழக்குகள் மூலம் வெற்றிகள் வந்து சேரும், நல்ல நண்பர்கள் துணையிருப்பார்கள், தீயவர் விலகி ஓடுவார்கள், பொதுமக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகும், பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்றுசேரும் வாய்ப்பை தரும், காதலர்களுக்கு யோகமான காலமிது மனதில் நினைத்தவரையே வாழ்க்கை துணையாக அடையும் யோகம் உண்டாகும், உறவுகள் ஆதரவு பெற்றோர் ஆதரவு திடீர் சொத்துக்கள், பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும், கனவுகள் நனவாகும், அரசியல் ரீதியான உயர் பதவி தேடி வரும்.
குரு பகவான் தனது 7ம் சுபபார்வையை தொழில் ஸ்தானமான தனது எதிர்வர்க்க கிரக ( சனி ) வீடான மகர ராசியை ( 10ம் பாவகம் ) வசீகரிப்பது தங்களுக்கு அதீத தனித்திறமை இருந்த போதிலும் வேலைப்பளுவின் காரணமாக சற்று சோர்ந்து போக வாய்ப்பு உண்டு, தேவையில்லாத இடத்தில் தங்களின் கடின உழைப்பை நீங்கள் விரையம் செய்ய கூடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தேங்கி இருக்கும் சரக்குகள் தங்களுக்கு தற்போழுது நல்ல லாபத்தை ஈட்டி தரும், வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார யுக்திகள் தங்களை சிறந்த தொழில் அதிபராக பரிணமிக்க வைக்கும், வேறு எவரையும் சார்ந்து இல்லாமல் தனித்து இயங்கி வெற்றி பெரும் யோகம் உண்டாகும், கூட்டு முயற்சி சில நேரங்களில் தங்களுக்கு அதீத நெருக்கடியை தரக்கூடும், இதுவரை நல்ல தொழில் அல்லது வேலை அமையாமல் சிரமபட்டு கொண்டு இருந்த மேஷ ராசி அன்பர்களுக்கு தகுதி திறமைக்கான நல்ல வேலைவாய்ப்பும், தொழில் யோகமும் உண்டாகும், கவுரவமான யோக வாழ்க்கையை தொழில் வழியில் இருந்து இந்த குருமாற்றம் தங்களுக்கு தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆண்கள் தனது தந்தை வழியிலும் பெண்கள் தனது தாய் வழியிலும் மிகப்பெரிய தனசேர்க்கையை பெரும் நேரமிது.
குரு பகவான் தனது 9ம் சுபபார்வையை நிறைவான மனநிலையை தரும் தனது வர்க கிரக (குரு ) வீடான மீன ராசியை ( 12ம் பாவகம் ) வசீகரிப்பது முதலீடுகள் வழியிலான லாபத்தை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளில் தங்களின் ஆளுமையை செயல்படுத்தும் யோகத்தை தருவார், புதியவர்கள் வெளிநாட்டினர் தங்களின் முன்னேற்றத்திற்க்கு உறுதுணையாக அமைவர், உறவினர் ஆதரவு அதிகரிக்கும், இதுவரை இருந்துவந்த மனக்கவலை நீங்கி நல்ல மனநிம்மதி கிட்டும், ஆன்மீகத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், தெய்வீக அனுகூலமும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் சிறப்பான மாற்றத்தை தங்களுக்கு தருவதுடன் பொருளாதர தன்னிறைவை சுவீகரிக்கும் யோகத்தையும் வழங்கும், பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழில், இடம் வீடு வண்டி வாகன தொழில், ஆடை ஆபரண தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும், வியாபாரம் விருத்தி அடைவதுடன் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விரைவாக வெளியேறும் யோகமும், கைநிறைவான வருமான வாய்ப்பையும் பெறுவீர்கள்.
குறிப்பு : தங்களின் சுயஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலன்களை காண்பதே 100% விகிதம் சரியான பலன்களாக அமையும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக