வெள்ளி, 9 நவம்பர், 2012

எண்கணித முறையில் குழந்தைக்கு பெயர் வைப்பது யோக வாழ்க்கையை தருமா ?



ஐயா வணக்கம்,


பிறந்த ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது? தற்கால நடைமுறையில் ஜோதிடர்கள் ஜன்ம நக்ஷத்திரங்களின் நாம எழுத்துக்களை பரிந்துரைக்கிறார்கள்.இது எந்த அளவிற்கு சரியாகும்?ஏனெனின் புராணங்களில் வரும் ராமர்,கிருஷ்ணர் போன்றோர்களுக்கு இந்த முறைப்படி பெயர் வைத்ததாக தெரியவில்லையே மேலும் தர்ம சாஸ்திரங்களும் அவரவர் முன்னோர் அல்லது கடவுளின் பெயரை வைக்குமாறு சொல்கிறது . இதில் எது சரி? மேலும் நேமாலஜி என்ற ஒரு பிரிவே உள்ளது.இது எங்கிருந்து வந்தது? தெளிவுபடுத்தினால் நன்று.

நன்றிகளுடன்,
ஜோதிடப்பித்தன்


வணக்கம் அன்பு நண்பரே !

ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பதும் , பெயர் எண் சாஸ்திரம் அடிப்படையில் பெயர் வைப்பதும் அவரவர் விருப்பத்தை பொறுத்தே , ஆனால் பெயர் ஒன்றே எல்லா வசதி வாய்ப்பினையும் , வெற்றியினையும் தந்துவிடும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை , சில பெயரியல் சாம்ராட்டுகள் சொல்வது போல் பெயரில் சிறு மற்றம் செய்தால் போதும் ,  கூரையை பிய்த்து கொண்டு கொண்டும் என்பதெல்லாம் , முற்றிலும் நகைப்பிற்கு உரியதாகவே  காணப்படுகிறது , இதையும் நம்பிக்கொண்டு மக்கள் அவர்களை நாடி சென்று பொருள் செலவு செய்வதை நினைத்து மன வேதனையே ஏற்ப்படுகிறது , ஒருவருடைய விதியை பெயர் மாற்றிவிடும் என்பதில்  எனக்கு சிறுதும் நம்பிக்கை இல்லை , அதை ஒரு மனிதன் செய்து தருகிறான் என்று மக்கள் செல்வதை பார்க்கும் பொழுது சிரிப்பே வருகிறது.

மக்களுக்கு அல்லது ஒரு தனிபட்ட நபருக்கு  ( புதிய தலைமுறை நபர்களுக்கு ஏற்வாரோ , புதுமையில் விருப்பம் கொண்டவராகவோ இருப்பின் ) பிடித்த மாதிரி பெயரை வைத்து கொள்வதில் எவ்வித தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ,  ஆனால் பெயரியல் நிபுணர்கள் சொல்வது போல் அந்த பெயர் ஜாதகருக்கு அனைத்து நன்மையையும் வாரி வழங்கும் என்று சொல்வது கொஞ்சம் அதிகமாகவே படுகிறது , எமக்கு தெரிந்தவரை கடவுளின் பெயரை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே  எனது கருத்து , நல்ல தமிழ் பெயரை வைக்கலாம் , நாம் வைக்கும் பெயரில் ஒரு அர்த்தம் இருப்பது சம்பந்தபட்ட நபருக்கு நலம் தரும் .

முன்னோர்களின் பெயரை வைப்பதில் எவ்வித தீமையும் வர வாய்ப்பில்லை , ஒருவருக்கு நல்ல பெயர் அமைகிறது என்றால் அதற்க்கு காரணம் அவரது சுய ஜாதக அமைப்பில் லக்கினம் மற்றும் இலக்கின அதிபதி மிகவும் நல்ல நிலையில் இருப்பார் என்பதில் ஆச்சரியம் இல்லை , மேலும் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த குழந்தையின் ஜாதகத்தில் வலிமையாக இருக்கும் பாவகதிர்க்கு சம்பந்தம் பெற்ற உறவு நிலையில் இருக்கும் நபர் அந்த குழந்தைக்கு பெயரினை தேர்ந்தெடுக்கலாம் , உதரணமாக நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் தாயும் பத்தாம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் தகப்பனும் குழந்தைக்கு  பெயரை தேர்ந்தெடுக்கலாம். அப்படி  தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த குழந்தைக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும் , ஒரு வேலை மேற்க்கண்ட பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் பெற்றோர்கள் பெயரை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நலம் தரும் , மேலும் குழந்தையின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகதிர்க்கு உரிமையுள்ள உறவு சம்பந்தபட்ட நபர் பெயரை தேர்ந்தெடுப்பது குழந்தைக்கு யோக பலன்களை வாரி வழங்கும் .  

எது எப்படி என்றாலும் சுய ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அதுவே நடை முறையில் பலன் தரும் , ( அதாவது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் )  எனவே பெயரில் எவ்வித நன்மை தீமையும் வந்துவிட போவதில்லை , எனக்கு தெரிந்து பெயர் மாற்றம் செய்துகொண்டவர்கள் , எவ்வித ராஜயோக பலன்களையும் பெற்றதாக நினைவில்லை , சுய ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அந்த பலன்களே நடைமுறையில் நடந்து கொண்டு இருக்கிறது  என்பதே உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்: