பின்தொடர...

Monday, May 20, 2013

சாய கிரகங்களான ராகு கேது வழங்கும் யோக பலன்களும், 4,10ம் பாவக வழியில் ஜாதகர் பெரும் நன்மைகளும் !சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேதுவின் வலிமையை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உதவும் ஜாதகம் இது என்றால் அது மிகையாகாது.இந்த குழந்தையின் ஜாதக அமைப்பில் சாயா கிரகங்களான  ராகு கேது முறையே மகரம் மற்றும் கடகம் என்ற ராசிகளில் அமர்ந்து சம்பந்தபட்ட பாவக அமைப்பிற்கு 100 சதவிகித யோகபலன்களை தரும் நிலையில் இருக்கின்றனர் , பொதுவாக ஜாதக பலன்கள் காணும் அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த சாயாகிரகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகத்தில் ராகுவும், பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்த பலன்களை தரும் அமைப்பை கொண்டுள்ளதாக பல ஜோதிடர்களின் கணிப்பாக இருக்க கூடும் .

உண்மையில் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் , பாவக அமைப்பின் படி பாகை வாரியாக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது மகரத்தில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், கடகத்தில் உள்ள 4ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் என்பதே சரியான ஜோதிட கணிதம் , மேலும் ஜாதகருக்கு சரியான பதில் சொல்ல இதுவே உதவும்.

ஏனெனில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது தனுசு ராசியில்  259.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , மகரத்தில் 286.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 276.24.26 பாகையில் மகர ராசியில் , ராகு அமர்ந்து இருப்பது ஜீவன ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

மேலும் ஜாதகருக்கு சுக  ஸ்தானம் என்பது மிதுனத்தில் 79.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , கடகத்தில்  106.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 96.24.26 பாகையில்கேது அமர்ந்து இருப்பது சுக ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

ஆக மேற்க்கண்ட ஜாதகத்தில் கேந்திர வீடுகளான ஜீவன ஸ்தானத்தில் ராகுவும் , சுக ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 100 சதவிகித நல்ல நிலையில் இருப்பது தெளிவாகிறது , எனவே ஜாதகருக்கு இவர்களால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை இனி பார்ப்போம் .

 காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  ஜீவன ஸ்தானமான மகரத்தில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு ஜீவன  ஸ்தானத்திற்கு  100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தகப்பனார் அமைப்பில்  இருந்து கிடைக்க வேண்டிய அனைத்தும் 100 சதவிகிதம் எவ்வித தங்கு தடையும் இன்றி கிடைக்கும் , தனது தகப்பனாருடன் ஜாதகர் நல்ல நடப்பு மற்றும் பாசத்துடன் பழகும் யோகம் உண்டாகும் , தனது தகப்பனார் மீது அளவுகடந்த நன்மதிப்பையும் , மரியாதையும் ஜாதகர் கொண்டு இருப்பார் , ஜாதகர் பிறந்ததில் இருந்து ஜாதகரின் தகப்பனாருக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

 பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், மேலும் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் கவுரவமாகமும் , மதிப்பு மிக்க  செயல்களாகவும் , அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்கும் , ஜிவனத்தில் அமரும் ராகு ஜாதகருக்கும் , ஜாதகரின் தகப்பனாருக்கும்  தொழில் , வேலை , ஜீவனம் என்ற அமைப்பில் இருந்து 100 சதவிகித முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சிறிதும்  சந்தேகம் இல்லை , இந்த முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு விரைவில்  குறுகிய காலத்தில் அமையும் என்பது சிறப்பான விஷயம் .

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் கேது நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு சுக ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தாயார் அமைப்பில் இருந்து கிடைக்க  வேண்டிய சிறந்த உயர்கல்வி , சுகமான வாழ்க்கை , சிறந்த சொகுசு வண்டி  வாகனம் , சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கையான மன நிலை , ஸ்திரமான புத்தி , நல்ல மன நிலை , உடல் ரீதியாக வரும் நோய் நொடிகளில் இருந்து விரைவான குணம் பெரும் அமைப்பு என்ற வகையில் அதிக நன்மைகளை  விரைந்து தரும் .

குறிப்பாக ஜாதகரின் தாயாருக்கு இது மிக சிறந்த அமைப்பு , அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் , நிம்மதியான வாழ்க்கை கிட்டும் , தாயாரின் அமைப்பில் இருந்து ஜாதகருக்கு சிறந்த அரவணைப்பும் , பாசமும் தடையின்றி கிடைக்கும் , ஜாதகரின் சிறந்த ஒழுக்கத்திற்கு காரணமாக தாயின் அறிவுரைகளும் , ஜாதகரின் வெற்றிக்கு காரணமாக தாயின் ஆலோசனைகளும் உறுதுணையாக இருக்கும் , மகரத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு சிறந்த சொத்து சுக சேர்க்கைகளை , தனது சுய உழைப்பின் மூலம் பெற்று தரும் , கடகத்தில் அமரும் கேது ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையையும் , விட்டுகொடுக்கும் தன்மையையும் , மற்றவர்களிடம் பரிவு காட்டும் நல்ல குணத்தையும் தரும் .

ராகு கேது இருவரும் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது சிறப்பு , இதை போன்று தகப்பனை குறிக்கும் 10ம் பாவகத்துடனும் , தாயை குறிக்கும் 4ம் பாவகத்துடனும் , சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த மாமனிதனாக வளர வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , ஒருவருக்கு நல்ல பெற்றோர் அமைந்துவிட்டால் , அவர் தனது வாழ்க்கையை  எவ்வித சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


No comments:

Post a Comment