இறை அருளின் கருணையினால் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் , உடல் உயிர் என்று வர்ணிக்கப்படும் லக்கினம் எனும் முதல் பாவகம் லக்கினத்துடன் தொடர்பு பெறுவதும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்து களத்திர ஸ்தானம் எனும் ஏழு, பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பது மற்றும் லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை தந்து , ஜாதகரின் சிந்தனையினாலும் , செயல்பாட்டினாலும் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை முழுவதும் அனுபவிக்கும் ஆற்றலை தரும் .
மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் , தனது வாழ்க்கையை தானே சுயமாக வாழும் வல்லமையை சிறு வயதினில் இருந்தே பெற்று விடுவார்கள், இந்த சிக்கலான சமுக அமைப்பில் இருந்து , தனது வாழ்க்கையை எப்படியும் செம்மையாக அமைத்து கொண்டு பிறர் வியந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக வாழும் தன்மையை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் , மேலும் இவர்களின் முற்ப்போக்கு சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும் , பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்று தரும் .
தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் அன்பர்கள் இவர்களே , இவர்களின் இறக்க சுபாவத்தை பலர் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள் , இருப்பினும் ஜாதகர் அதைபற்றிய கவலை எதுவும் இன்றி தனது செயல் மற்றும் நடவடிக்கை மற்றவரை பாதிக்கா வண்ணம் நடந்து கொள்வார்கள் , மேலும் தனக்கு வரும் துன்பம் மற்றும் சிரமங்களை கூட தனக்கு சாதகமாக மாற்றிகொண்டு வெற்றிகரமாக வாழும் சிறந்த வாழ்க்கையை இறையருள் ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கி கொண்டே இருக்கும் .
லக்கினம் முதல் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை விஷயங்களுக்கு தானே காரணம் , தனது வினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்தும் நடை பெறுகிறது , வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் எனும் சிந்தனையை தரும் , மேலும் சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை ஒழுக்கம் என்பது ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அடிப்படையாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்து விடும் , இதுவே ஜாதகர் சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி , இவரால் நிச்சயம் மற்றவர்கள் பாதிக்க வாய்ப்பு இல்லை, இதுவே ஜாதகரை சிறப்பான முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும் .
லக்கினம் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரிடம் குடிகொண்டுள்ள இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் உறுதுணை புரியும் , ஜாதகர் சிறு வயது முதற்கொண்டே இறை நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவராகவும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்றவராகவும் திகழ்வார் , தன்னுடன் சேர்க்கை பெரும் அன்பர்களின் குணம் , எண்ணம் , செயல் அறிந்து நட்பை வளர்த்துகொள்ளும் தன்மையை தரும் , இதுவே ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை படுத்தும் , தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் , இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான விஷயம் , தன்னை சார்ந்துள்ளவர்களின் தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , இவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம் .
லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் நல்வர்களாக திகழ்வார்கள் , பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக அமைந்துவிடும் , இவர்கள் வழியே ஜாதகர் அதிக யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , ஜாதகரின் செயல்பாடுகளை ஜாதகரின் நல்ல நண்பர்களும் , பொதுமக்களும் கூர்ந்து கவனிப்பதால் ஜாதகரின் நடத்தை மற்றும் ஒழுக்கம் மிகவும் சிறப்பாக அமைந்துவிடும் , மேலும் பொறுப்பான பதவிகள் அல்லது பொறுப்பான நிர்வாகத்தை ஜாதகர் நிர்வகிக்கும் யோகத்தை இளம் வயதிலேயே தந்துவிடுவதால் , ஜாதகர் அதில் சிறந்து விளங்கும் தன்மையை பெறுவதற்காகவே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்நாள் முழுவது வாழும் தன்மை தரும் .
லக்கினம் ஒன்பதாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது முன்ஜென்ம நல்வினை காரணமாகவும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னேர்கள் செய்த புண்ணிய பதிவின் காரணமாகவும் வாழ்க்கை பாதை சீரான ஒரு நேர்கோட்டில் அமைந்துவிடும் , ஜாதகரே நினைத்தால் கூட தீய வழி பாதையில் செல்ல இயலாது , அடிப்படையிலேயே ஒழுக்கத்தை தனது இரு கண்களாக பாவிக்கும் தன்மையை தரும் , மானம் ஒன்றே வாழ்க்கை என்ற சிந்தனையை தரும் , தவறி கூட தனது சொல்லால் , செயலால் மற்றும் சிந்தனையால் பிறருக்கு தீமை செய்யாத மன பக்குவத்தை தரும், ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் முன்னோர்களின் ஆசியினாலும் , இறை அருளின் கருணையினாலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும் .
லக்கினம் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுகொண்டே இருக்கும் யோக நிலையை தரும் , குறிப்பாக ஜாதகருக்கு புதையல் , லாட்டரி போன்ற அமைப்புகளில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும் அல்லது ஜாதகர் தனது நேர்மறை எண்ணங்களால் , புதையலுக்கு நிகரான செல்வ வளங்களை பெரும் புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறனை வாரி வழங்கும் , ஜாதகரால் முடியாத காரியங்கள் என்பது எதுவும் இல்லை என்ற நிலையை தரும் , தன்னம்பிக்கையும் , மனோதிடத்தையும் இறை நிலை ஜாதகருக்கு மற்றவரை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து , அதில் வெற்றி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும் , இவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வீரியத்தை எவராலும் அறிந்து கொள்ள இயலாது , இதுவே ஜாதகரின் வெற்றிக்கு உண்டான சூட்சமமாக விளங்கும் .
ஆனால் மேற்சொன்ன பாவகங்கள் ஜாதகரின் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது அப்படி அமையும் பட்சத்தில் மேற்சொன்ன பலன்களுக்கு எதிர்மறையான பலன்களே நடைமுறைக்கு வரும் , மேலும் லக்கினம் என்பது 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்மறை எண்ணத்தை ஊக்கபடுத்தி , ஜாதகரை செயல்படாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும் தன்மையை தர கூடும் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969

Nice analyses sir.. Thanks for sharing
பதிலளிநீக்கு