ஞானகாரகனாகிய கேது பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்து தனது திசையில் இலக்கண ரீதியாக வலுமையுடன் இருக்கும் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தரும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் எவ்வித தீய பலன்களும் நடை பெறுவதில்லை, மாறாக வலிமை இழந்த பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையில் பலனை நடத்தும் பொழுது கேது தொடர்பு பெற்ற பாவகத்தின் வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள் அன்பர்களே !
உதாரண ஜாதகம் : 1
லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்
ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 25/01/2010 முதல் 25/01/2017 வரை)
ஜாதகருக்கு நடக்கும் கேது திசை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதக ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தந்துகொண்டு இருக்கிறது , இதன் பலன்கள் என்ன என்பதை பற்றிய சற்றே இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே !
1) லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல காரணம் பாதக ஸ்தானம் என்பது 200 சதவிகிதம் தீமை தரும் அமைப்பு, எனவே இந்த கேது திசை நடக்கும் காலத்தில் ஜாதகர் உடல் மற்றும் மனோ ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகருடையை பாதக ஸ்தானமானது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாக வருவதும், உபய மண் தத்துவ ராசியாக அமைவதாலும், ஜாதகரின் உடல் நிலை பாதிக்க படும் , பொருள் இழப்பு உண்டாகும் , ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்களை திடீரென இழக்கும் தன்மையை தரும் .
2) ஜாதகரின் செயல்களும், எண்ணங்களும் ஜாதகருக்கு எதிராக செயல்படும் , தனது திட்டங்கள் யாவும் தோல்வியையே தரும் , குறிப்பாக ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி தனது உடல் நிலையையும் மன நிலையையும் தானே கெடுத்து கொள்வார் இதற்க்கு காரணமாக எதிர்பாலினர் மற்றும் அவரது நண்பர்களே அமைந்துவிடுவார்கள் .
3) ஜாதகர் பெரும் கடன் மற்றும் ஏற்றுகொள்ளும் ஜாமீன் போன்றவற்றால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகர் வெகுவாக சமுகத்தில் அவ பெயரை சந்திக்கும் தன்மையை தரும், கடன் பெற்று செய்யும் எந்த காரியமும் ஜாதகருக்கு கடும் நெருக்கடியை தரும் , முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக தெரியும் .
4) கேது திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை செய்வது ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவாற்றலை வெகுவாக பாதிக்கும் , ஜாதகர் பின்னல் வரும் இன்னல்களை உணர்ந்து செயல்படும் தன்மை இல்லாமல் செயல்படுவார் , இன்றைய காரியம் முடிந்ததா நாளைய விஷயத்தை நாளை பார்க்கலாம் என்ற எண்ணத்தையே தரும் , சோம்பல் ஆர்வமின்மை , தனம்பிக்கை இன்மை என்ற விஷயங்களால் ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க கூடும் .
5) மேற்கண்ட அமைப்பில் ஜாதகருக்கு தீமையான பலன்கள் நடைபெறும் பொழுது ஜாதகர் செய்யவேண்டிய பரிகாரம் என்ன ? முதலில் ஜாதகர் தனது நடவடிக்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் , ஆண்கள் என்றால் பெண்களிடமும், பெண்கள் என்றால் ஆண்களிடமும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் , தனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் , அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும் , ஒரு முறைக்கு பல முறை ஜாதகர் நன்கு யோசனை செய்து ஒரு காரியத்தை செய்வது நலம் தரும், பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று சொன்னாலும், சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வது, ஜாதகரை படு குழியில் தள்ளிவிடும் , மேலும் கேது திசை முடியும் வரை ஆன்மீகத்தில் மனதை செலுத்தலாம் , அல்லது நல்ல ஆன்மீக பெரியோர்களிடம் ஆசி பெற்று மனதை ஒருநிலை படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் பெற தனது சிந்தனை ஆற்றலை பயன்படுத்துவது சிறந்த பரிகாரமாகும் .
இதே ஞானகாரனாகிய கேது பகவான் மேற்கண்ட ஜாதகர் பிறந்த ஊரில் ஜாதகர் பிறந்த நேரத்தில் இருந்து, 2 நிமிடம் தாமதமாக பிறந்த வேறு ஒருவருக்கு தனது பலனை எவ்விதம் நடத்துகிறார் என்பதை பற்றி தற்பொழுது காண்போம் அன்பர்களே !
உதாரண ஜாதகம் : 2
லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்
ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 13/02/2010 முதல் 13/02/2017 வரை)
இந்த ஜாதகருக்கு நடக்கும் கேது 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாக கருதலாம் , மேலும் ஜாதகருக்கு 11ம் வீடு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக அமைவது , ஜாதகரின் முன்னோர்கள் செய்த நல்வினை பதிவினையும் , தான் செய்த நல்வினை பதிவினையும் யோக வாழ்க்கையாக இந்த கேது அனுபவிக்க வைக்கும் என்பது முற்றிலும் உண்மை .
1) லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் கேது திசை முடிய நீடித்த அதிர்ஷ்டத்தை , மேலும் ஜாதகரின் உடல் நிலை மன நிலை மிகவும் சிறப்பாக இயங்கும் , ஜாதகர் நல்ல அறிவாளியாக இருப்பார் , தன்னம்பிக்கை மிகும் , முற்போக்கு சிந்தனைகளால் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் .
2) 2ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல வருமானத்தை தரும் , இனிமையான பேச்சு திறனையும், நல்ல மக்கள் செல்வாக்கினை பெற்று தரும் , பொதுமக்களை நம்பி செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் காரணம் ஜாதகரின் 2ம் பாவகம் மேஷமாக சர நெருப்பு ராசியாக அமைவதே .
3) 8ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் வாழ்க்கையில் சரியான வயதில் இளம் வயது திருமண வாழ்க்கையையும் , அருமையான குடும்ப வாழ்க்கையையும் தரும் , ஜாதகர் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் , தன்னம்பிக்கை மேலோங்கி நிற்கும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிட்டும் , தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும் .
4) 11ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் வழ்க்கை அதிர்ஷ்டம் என்பது நீடித்து நிற்கும் ,குறிப்பாக செய்யும் தொழில்களிலும் நிலம் , வண்டி , வாகனம் , வீடு போன்றவறில் இருந்தும் அதிக வருமானம் கிடைக்கும் அல்லது மேற்கண்ட சொத்து சுகங்களை ஜாதகர் தனது சுய உழைப்பாலும் , அறிவாற்றலாலும் பெரும் யோகத்தை தந்துகொண்டே இருக்கும் , ஜாதகரின் முன்னேற்றம் என்பதனை எவராலும் கணிக்க இயலாத அளவில் இருக்கும் .
5) மேற்கண்ட பாவகங்களுடன் தொடர்பு பெற்று நன்மையான பலனை தரும் கேது திசை ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தையும் , பண்பாட்டினையும் , போதும் என்ற மனத்தினையும் , சிறந்த ஆன்மீக வாழ்க்கையினையும் இயற்கையாகவே தந்துவிடும் , மேலும் ஜாதகரின் செயல்பாடுகளும் , மக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து நன்கு புரிந்துகொள்ளப்படும் , எனவே இவர்களின் ஆதரவுடன் ஜாதகர் குறுகிய காலத்தில் பிரபலம் அடையும் யோகத்தை இந்த கேது திசையே அருளும் .
மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் இருந்தும் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் பொதுவாக ஒரு திசை கெடுதல் செய்கிறது என்று கணிப்பது மிகப்பெரிய தவறு , மேலும் ஒவ்வொரு கிரகத்தின் திசையும் அவரவர்களின் சுய ஜாதகத்திற்கு உட்பட்டு , பாவக வலிமைக்கு ஏற்ற அமைப்பில் தொடர்பு பெற்று நன்மை தீமை பலன்களை செய்கிறது , எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருந்தால் , நடை பெரும் அனைத்து திசை மற்றும் புத்திகளும் நன்மையே செய்யும் , இதற்க்கு மாறாக பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதே அது எந்த திசை என்றாலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது .
இறுதியாக :
சுய ஜாதகத்தில் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப்பவே பாவக வலிமை, இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை, ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை தெளிவாக தெரிந்துகொண்டால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நற்பலன் நடைபெறுமா ? தீய பலன் நடைபெறுமா? என்று நிர்ணயம் செய்ய இயலும் , இல்லை எனில் ஜாதகம் பலன் அறிய வந்தவருக்கு ஜோதிடரால் எவ்வித வழிகாட்டுதலையும் எடுத்துரைக்க இயலாது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக