பின்தொடர...

Friday, August 23, 2013

திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !பொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.

6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா ? அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

ஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில்  ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்)  வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .

6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.

2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின்  வலிமையே என்றால் அது மிகையாகாது .

3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை  தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .

4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும்  பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.

5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம்  மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் . 

6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் . 

8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :  

1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்களை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .

3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.

4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும்  ஆயுள் பாவகத்தின் வலிமையே.

5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில்  ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில்  அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .

6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.

12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக  அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம்  உருவாகும்.

2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக  ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொலைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.

3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த  திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .

4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை  தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில்  தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .

5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .

6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும்  பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை அன்பர்களே ! துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com


3 comments:

 1. மிக நல்ல விளக்கங்கள்.
  அனாவசிய அச்சத்தைத் தவிர்ப்பதாக உள்ளது.
  நன்றி !

  ReplyDelete
 2. ஐயா வணக்க்ம!
  தாங்கள் சோதிடத்தினை அணுகும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிற்து. தஙகள்து ஒவ்வொரு பதிவும் சிந்திக்க வைக்கிறது. ஐயா ஒரு சந்தேகம்,
  ஒரு பாவம் வலிமையுடன் இருக்கிறதா என்று எப்படி அறிவது? விளக்க வேண்டுகிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் நிலையை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெறுவது சரியான வழி.

   அனைவரின் ஜாதக நிலையும் தெரிந்து கொள்ள எங்களிடம் முறையாக ஜோதிடம் பயிற்சி பெறுவது மிகசிறந்த வழி.

   தங்களுக்கு எது விருப்பமோ அலைபேசி அல்லது நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

   Delete