சனி, 8 பிப்ரவரி, 2014

மேஷ லக்கினம் - இலக்கின வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !




ஒருவரின் பிறந்த சரியான நேரம், இடம், நாள் ஆகியவற்றை 
அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் லக்கினம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் யோகம் மற்றும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீடான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் அடையும் நன்மைகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் , மேஷ ராசி காலபுருஷ தத்துவத்திற்கு முதல் வீடாகவும், சர இயக்கம் கொண்ட நெருப்பு ராசியாக இருப்பதால் ஜாதகரின் செயல்பாடுகள் யாவும் மிகவும் துரிதமாகவும், சுறுசுறுப்பு நிறைந்தவராகவும் காணப்படுவார், மேஷ லக்கினத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், ஜாதகர் தனது செயல்களை திறம்பட செய்து வெற்றிகாணும் தன்மையை இயற்கையாகவே பெற்று இருப்பார், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் ஒரு நேர்த்தியையும், ஒழுக்கத்தையும் எதிர்ப்பார்க்கும் குணத்தை கொண்டு இருப்பார், லட்சியமுடன் ஒரு காரியத்தில் இறங்கி இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 ஜாதகரின் தோற்றம் என்பது மிகவும் கம்பீரம் நிறைந்த திடகாத்திரமான உடலமைப்பை இயற்கையாக பெற்று இருப்பார், அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு மற்றும் தேசஸ் ஜாதகரிடம் இயற்கையாகவே குடிகொண்டு இருக்கும், சுய கட்டுபாடு , நேர்மை தவறாமை, தனக்கு சரியென பட்டத்தை துணிவாக வெளிபடுத்து தன்மை, தம்மை நாடி வந்தவரை காக்கும் வல்லமை, எந்த ஒரு காரியத்தையும் நினைத்தவாறு செய்து முடிக்கும் பேராற்றல், தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் நன்மை செய்யும் குணம், பொது வாழ்வில் தூய்மையாக செயலாற்றும் யோக அமைப்பு, பிரதி பலன் பாராமல் உழைக்கும் தன்மை மற்றும் உதவும் மனப்பான்மை ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும். 

மேஷ ராசியை லக்கினமாக பெற்று லக்கினம் வலிமையுடன் அமையும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்துவிடும், மேலும் அதித மனவலிமை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்திருக்கும், கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் உடல் மற்றும் மன வலிமை படைத்தவராக ஜாதகர் காணப்படுவார், தனது முன்னேற்றத்தில் ஜாதகருக்கு தீவிர ஆர்வம் இருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடாமல் முறையாக பயன்படுத்தி தனது முன்னேற்றத்தை செழுமையாக அமைத்தது கொண்டு வாழ்க்கையில் மற்றும் சமுகத்தில் நல்ல அந்தஸ்த்தை விரைவில் பெரும் தன்மையை பெறுவார்.

கால புருஷ தத்துவத்திற்கு முதல் ராசியாக மேஷம் வருவதால், ஜாதகரின் லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து 100 சதவிகித யோகத்தை தங்கு தடையின்றி விரைவாக பெரும் யோகத்தை தரும், மற்றவர்களின் செயல் திறனுக்கும், ஜாதகரின் செயல் திறனுக்கும் பன்மடங்கு வித்தியாசம் இருக்கும், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்ற தன்மையை ஜாதகரின் உடலமைப்பிற்கு தந்துவிடும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்படும் பொழுது அதிலிருந்து விரைவாக குணம் பெரும் மன ஆற்றலை தரும், வலியை தாங்கும் உடல் அமைப்பை ஜாதகர் பெற்று இருப்பது விசேஷமான ஒன்றாக கருதலாம், மேலும் ஜாதகர் எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் மன வலிமை கொண்டவராக காணப்படுவார்.

 மேஷ ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் மேஷ  ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக மேஷ லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. 3மற்றும் 6ம் அதபதி புதன் 4 ம் வூடடில் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன். பலன்?

    பதிலளிநீக்கு