செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ராகு ஐந்தாம் பாவகத்தில் அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யுமா ? ஆண் வாரிசு அமையாத ?



  ராகு ஐந்தில் அமர்ந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு புத்திர சந்தானம் அமையாது என்பதும், குலம் தழைக்க ஆண் வாரிசு அமையாது என்று சொல்வதும் பொதுவான கருத்து, இதில் ராகு 5ம் பாவகத்தில் அமர்ந்தாலே இந்த பலனை தரும் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, ஜோதிட கணிதம் பற்றிய தெளிவில்லாமல், பாவகங்களின் தன்மை அறியாமலும், சுய ஜாதக ரீதியாக 5ம் பாவகத்தின் வலிமையை பற்றிய கணிதம் செய்ய தெரியாமலும் சொல்லும் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துகொள்ள இயலும், பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு ஐந்தில் அமர்ந்தால் புத்திர பாக்கியத்தை தராது என்று பொதுவாக சொல்வது உண்டு.

 உண்மையில் ராகு 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் தான் அமர்ந்து இருக்கின்றாரா, என்ற தெளிவு வேண்டும், ஒரு வேலை 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்து இருக்கின்றாரா, 5ல் அமர்ந்த ராகு பாவகத்தை வலிமை படுத்துகிறார, அல்லது தீமையான பலனை தருகிறார என்பதை துல்லியமாக, சுய ஜாதகத்தை கொண்டு அறிந்த பிறகே, புத்திர பாக்கியத்தை பற்றி சொல்வது சரியாக இருக்கும், இதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது தங்களுக்கு மிக எளிதாக புரிந்துகொள்ள இயலும்.


மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம்

இந்த கன்னி இலக்கின ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 4 வருடங்கள் ஆயிற்று, இருமுறை கருத்தரித்து, கருச்சிதைவு ஏற்ப்பட்டு இருக்கிறது, இதனால் உடல் நலம் வெகுவாக பாதிக்க பட்டு இருக்கிறது, இது வரை ஜாதகிக்கு புத்திர பாக்கியம் என்பது கிடைக்கவில்லை, ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை தரும் ஐந்தாம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, மேற்கண்ட ஜாதகிக்கு புத்திர சந்தானம் கிடைக்க பெறாத அமைப்பிற்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதே என்று சொல்வது சரியாக இருக்கும் என்றபோதிலும், சுய ஜாதக அமைப்பில் 5ம் பாவகம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே இதற்க்கு காரணம், மேலும் 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி 200% இன்னல்களை அனுபவிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட ஜாதகத்தில் மகரத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார், இதன் காரணமாகவே ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் அமையாமல் தடை செய்கிறது, பொதுவாக தம்பதியரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது உடனடி குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும், திருமணதிற்கு பிறகு குறுகிய காலத்தில் குழந்தை பாக்கியத்தை எவ்வித தங்கு தடையின்றி தரும் குறிப்பாக ஆண் வாரிசாக அது அமையும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம், பிறக்கும் குழந்தையும் பூரண ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும், தனது பெற்றோருக்கு மிகுந்த கீர்த்தியை பெற்று தரும், இதற்க்கு அடிப்படையாக அமைவது தம்பதியரின் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

இதற்க்கு மாறாக மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் 5ம் பாவகம் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பதம் பெற்று 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கின்றது.

 சர மண் தத்துவமான மகர ராசியில் அமரும் ராகு ஜாதகியின் உடல் நிலையையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக வருவதால் ஜாதகியின் முன்வினை கர்ம பலன்களையும் அனுபவிக்கும் தன்மையாக 5ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களை வழங்குகிறார், கிரகங்களில் அதிக வலிமை பெற்றதும், தன்னிகரில்லா தனி தன்மை வாய்ந்ததும் ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் வலிமையாக நல்ல நிலையில் அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, இதற்க்கு மாறாக தீமை தரும் அமைப்பில் ராகு அமரும் பட்சத்தில், தான் அமரும் பாவக அமைப்பில் இருந்து தரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை எவராலும் காப்பாற்ற இயலாது, தனது கடமையை மிகவும் சிறப்பாக ராகு பகவான் தங்கு தடை இன்றி தருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.


மேற்கண்ட ஜாதகம் ராகு பகவான் 5ல் அமர்ந்தால் தரும் தீமையான பலன்கள் பற்றிய உதாரணம், ஆனால் ராகு பகவான் 5ல் அமர்ந்தாலும் 5ம் பாவகத்தை வலிமை செய்யும் அமைப்பும் உண்டு, பொதுவாக 5ல் அமரும் ராகு பகவான் தீமையை மட்டுமே செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்து, இங்கே 5ல் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு மிகுந்த நன்மையையும், அளவில்லா புத்திர சந்தான பாக்கியத்தையும் அருள்கிறார் என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பார்ப்போம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 3ம் பாதம்

இந்த மகர இலக்கின ஜாதகிக்கு திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்கியது ராகு பகவானே, ராகு பகவான் ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமர்ந்து 5ம் பாவகத்திர்க்கு 100% வலிமை தருவது ஒரு சிறப்பான விஷயம் ஸ்திர மண் தத்துவம் என்பதால், ஜாதகிக்கு சிறந்த உடல் வலிமை தந்தது, பூரண சுக பிரசவத்தில் நல்ல யோகமுள்ள ஆண் வாரிசை ஜாதகிக்கு வழங்கியது, ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பூரண வலிமை பெற்று இருந்தது ஜாதகிக்கு நல்ல ஆண் வாரிசை உறுதி செய்தது.

மேற்கண்ட ஜாதகிக்கு ராகு 5ல் அமர்ந்தது ஆண் வாரிசை மற்றும் இன்றி நல்ல புத்திசாலிதனத்தையும், மிகசிறந்த அறிவாற்றலையும் வாரி வழங்கியது, கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்தது, மேலும் இறை அருளின் கருணையை பரிபூரணமான பெற்று தந்து, ஜாதகிக்கு ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வந்தது, ஜாதகிக்கு நிலையான குடும்ப வாழ்க்கையையும், கை நிறைவான பொருளாதார வசதி வாய்ப்பையும், நிலையான வருமான வாய்ப்பையும் பெற்று தந்தது, மேற்கண்ட ஜாதகத்தை பொதுவான கண்ணோட்டத்துடன் 5ல் ராகு இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்காது என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, இந்த ஜாதகிக்கு ராகு பகவானே சிறந்த புத்திர சந்தானத்தை தான் அமர்ந்த இடத்தில் இருந்து வழங்குகிறார் அன்பர்களே!

எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு பகவான் 5ல் அமர்ந்து இருந்தாலும், 5ம் பாவகத்தை வலிமை செய்தால், ஜாதகர் 5ம் பாவாக வழியில் இருந்து 100% நன்மைகளை பெறுவார், இதற்க்கு மாறாக தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால் எவ்வித பாகுபாடும் இன்றி 100% தீமையே செய்வார் இதில் மாற்றம் இல்லை, எனவே சுய ஜாதக அமைப்பின் படி 5ல் அமரும் ராகு பகவான் எந்த நிலையில் இருக்கிறார் என்று துல்லியமாக கணிதம் செய்து, பலன்  காண்பதே சிறந்த உண்மையான ஜோதிட பலன் சொல்ல உதவி புரியும், 5ல் அமரும் ராகு பகவான் கெடுதல் மட்டுமே செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறன ஒரு அணுகுமுறையே.

குறிப்பு :

ராகு பாவக அமைப்பின் படி 5ல் தான் அமர்ந்திருக்கிறார் என்பதை முதலில் நிர்ணயம் செய்வது நலம், இதற்க்கு லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகையும், ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகையும் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

ஒருவேளை ஒரே ராசியில் ராகு பகவான்  5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்திருந்தால், ராகு பகவான் 5ல் என்ற கருத்துக்கே இடமில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக