கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கும், அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்கும் அதிபதியான சனிபகவான் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்று அமருவது ஜாதகரின் கர்ம ஸ்தானம் எனும் ஜீவன ஸ்தானத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்க்கும், தனிப்பட்ட முறையில் சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், தன்னம்பிக்கையும் தான் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்தில் சனிபகவான் ஜீவன பாவக அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் ஜீவன வழியில் எதிர்பாராத வெற்றிகளையும் திடீர் முன்னேற்றத்தையும் தொடர்ந்து பெற்றுகொண்டே இருப்பார், ஜீவன அமைப்பில் தோல்வி என்ற விஷயமே ஜாதகரிடம் எட்டிபார்க்கது என்பது வியக்கத்தக்க ஜாதக நிலையாகும்.
மகரம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன பாவக உரிமையை ஏற்றுகொள்கிறது, கும்பம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தான உரிமையை ஏற்றுகொள்கிறது, இந்த இரண்டு ராசிக்கும் அதிபதியாக சனிபகவானே பொறுப்பேற்கிறார், இதில் மகரம் சர மண் தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே இயக்க நிலையில் இருக்கும் மண் தத்துவமான இயந்திரங்கள், மனித உடல், மற்றும் ஜீவன் உள்ள உயிர்கள், பொருட்கள் ஆகியவற்றின் கர்ம நிலைக்கு ஏற்ற நன்மை தீமை விஷயங்களை, சனிபகவான் ஆளுமை செய்கிறார், அவரவருக்கு ஏற்ற ஜீவனத்தை சரியான காலகட்டத்தில் சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு சிறப்பாக அமைத்து தருகிறார்.
மேலும் கும்பம் ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே மகர ராசி அமைப்பில் ஏற்றுகொண்ட கர்ம வினைக்கு ஏற்ற, ஸ்திரமான அறிவாற்றலை சனிபகவான் ஒவ்வொருவருக்கும் வாரி வழங்குகிறார், உலகத்தில் ஜீவனம் எனும் தொழில் அமைப்பை பலபேர் பலவித தொழில்களை செய்த போதிலும் , சிறந்த அறிவு திறனையும் புதிய முயற்ச்சிகளையும், புதிய அணுகுமுறையையும் தொழில் அமைப்பில் செயல்படுத்தி வெற்றி காண்பவரையே, உலகம் வியந்து போற்றும், இதற்க்கு அடிப்படை காரணமாக அமைவது ஸ்திர கும்ப ராசியும், சனிபகவனுமே என்றால் அது மிகையில்லை.
ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன பாவகம் ஜாதகரின் ஜீவன அமைப்பை பற்றியும், அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் கௌரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை ஆகியவற்றையும், ஜாதகரின் கர்ம வினைபதிவினை ஜாதகர் எவ்விதம் அனுபவிக்கிறார் என்பதை பற்றியும் தெளிவாக அறிவுறுத்தும், லாப ஸ்தானம் ஜாதகர் தான் பெரும் புகழ், வெற்றி, மன உறுதி, ஜீவன வழியில் ஜாதகர் செய்யும் புதுமை, எடுக்கும் முயற்ச்சிகளில் ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள், குறுகிய காலத்தில் ஜாதகர் பெரும் எதிர்பாராத வெற்றிகள் என்ற விஷயங்களை அறிவுறுத்தும், மேற்கண்ட இரண்டு பாவகங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவன அமைப்பை, தொழில் மற்றும் பணியை சரியாக அமைத்துக்கொள்ள 100 சதவிகிதம் வழிகாட்டும், இதன் அடிப்படையில் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் ஜீவன வழியில் இருந்து பெறலாம்.
மேற்கண்ட அமைப்பில் சுயஜாதகத்தில் ஜீவனம், மற்றும் லாப ஸ்தானம் வலிமை பெற்று அமர்வது உடன், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்தும், ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் லாபத்தை உறுதிபடுத்தும், மேற்கண்ட விஷயத்துடன் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் ஜாதகரின் ஜீவன வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது, தன்னிகர் இல்ல தொழில் அதிபராக உருவாக்கி விடும்.
சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்தாலும் கூட லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வெற்றியின் பலன்களை 100 சதவிகிதம் அனுபவிக்க வைக்கும், ஒருவேளை 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் உழைக்கும் உழைப்பு அனைத்தும் வீண் போக வாய்ப்பு உண்டு, ஒன்று ஜாதகரை சாந்தவர்கள் அனுபவிப்பார்கள், அல்லது ஜாதகரின் கூட்டாளி அனுபவிப்பர், இல்லை எனில் லாப ஸ்தானம் வலிமை பெற்ற ஜாதகரின் முதலாளி பரிபூரணமாக அனுபவிப்பார்கள்.
எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் வக்கிரக நிலை பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் யோக பலன்களை 10 சதவிகிதம் என்ற அளவிலேயே வழங்கும், சுய ஜாதகத்தில் சனி வக்கிரக நிலையில் இருப்பின், இதன் விளைவை கருத்தில் கொண்டு முறையாக வக்கிரக நிவர்த்தி பெறுவது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ( அதாவது ஜீவனம் மற்றும் லாபம் ) 100 சதவிகதம் அனுபவிக்க வைக்கும், சனிபெருக்கம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனம் பன்மடங்கு பெருகி, மிகப்பெரிய யோக வாழ்க்கையையும் தன்னிறைவான பொருளாதார வெற்றியையும் தங்கு தடையின்றி கொடுக்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக