பின்தொடர...

Monday, May 15, 2017

சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் யோக அவயோகங்கள் !சுய ஜாதகத்தை இயக்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அல்லது வலிமை அற்ற பாவக பலனையே நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்தும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, நவகிரகங்களுக்கு தனது திசா புத்திகளில் தனிப்பட்ட நன்மை தீமை பலாபலன்களை ஏற்று நடத்த சிறப்பு தகுதி இல்லை என்பதையும் சுய ஜாதகத்தில் என்ன உள்ளதோ ( பாவக வலிமை அல்லது பாவக வலிமை அற்ற நிலை ) அதை மட்டுமே ஏற்று நடத்தும் என்பதை, இந்த இடத்தில் பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

கீழ்கண்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! சுய ஜாதகம் வலிமை பெரும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான நன்மை மற்றும் சுபயோகங்களையும், சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான அவயோகம் மற்றும் இன்னலைகளையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும் .


லக்கினம் : துலாம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,8ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த துறைகளில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்,மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது ஜாதகர் முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றம் உண்டாகும், பெரிய மனிதர்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், தன்னிலை உணரும் வாய்ப்பும் உண்டாகும், குல தெய்வ அனுக்கிரகமும், இறையருளின் பரிபூர்ண கருணையும் ஜாதகருக்கு மிக எளிதாக அனுபவப்படும் வாய்ப்பு உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் ஆராய்ச்சி துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை பரிபூர்ணமாக அமையும், பெரிய மனிதர்களின் தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம் உண்டாகும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரி யோகம், புதையல் யோகம், மனதிற்கு எட்டாத விஷயங்களில் ஆர்வம், நீண்ட ஆயுள், வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் வருமான வாய்ப்புகள், சுலப வழியிலான தனசேர்க்கை, எஜென்ஜி மற்றும் கான்ராக்ட் தொழில் வழியிலான லாபங்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி தரும், குறிப்பாக வாழ்க்கை துணை எதிர்ப்பால் இனஅமைப்பினர் மூலம் தனசேர்க்கை உண்டாகும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும், மண் மனை, வண்டி வாகனம், வீடு நிலம் மற்றும் சொத்து சுக சேர்க்கை அபரிவிதமாக அமையும், மிக பெரிய சொத்துக்கள், அரசு கெளரவம், சமூக வாழ்க்கையில் தனி அந்தஸ்து, அரசியலில் வெற்றி வாய்ப்பு, பொருளாதார வசதிகள், நல்ல வேலையாட்கள், கலைகளில் ஆர்வம், முக்கிய பொறுப்புகளை ஆளுமை செய்யும் வலிமை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபாரத்தில் வெற்றி, செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள், கம்பீரமான வாத திறமை, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, செல்லும் இடங்களில் இருந்து வரும் மதிப்பு மரியாதை, பெரிய பதவிகளை வகிக்கும் யோகம், இறைநிலையின் பரிபூர்ண கருணை என்ற வகையில் யோகத்தை தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் அமைவது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை  ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும், மிகப்பெரிய கவுரவ பதவிகள் அந்தஸ்து தேடி வரும், ஜீவன வழியிலான பரிபூர்ண முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, அதிபுத்திசாலித்தனம், நுண்ணறிவு, பல்துறை ஆராய்ச்சி  மூலம் புதிய கண்டுபிடிப்புகளை காணுதல், அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கை, சமாதானத்தில் விருப்பம், நல்ல பழக்க வழக்கங்கள், குல தெய்வத்தின் ஆசியை பரிபூர்ணமாக பெறுதல், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, பெற்ற குழந்தைகள் வழியிலான முன்னேற்றம், சுயமாக வாழ்க்கையில் முன்னேனேற்றம் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் இறை அருளின் கருணை மூலம் வாழ்க்கையில் நன்மையை அடையும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து அறிவுத்திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பு, பயண விருப்பம், தெய்வீக ஞானம், ஆன்மீகத்தில் வெற்றி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், மிக சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெரும் அமைப்பு, பித்ருக்கள் வழியிலான ஆசிகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை பெறுதல், அறிவில் விழிப்பு நிலை, குருவின் ஆசியுடன் சூட்ஷம அறிவை பெறுதல், தேடுதல் மூலம் மோட்ச நிலையை அடைதல் என்ற வகையில் சிறப்புகளை தரும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், தனிமை விருப்பம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மிக பெரிய அளவில் வெற்றிகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சக்தி வாய்ந்த கூட்டாளி மற்றும் நண்பர்களை தரும், நல்ல யோகம் உள்ள வாழ்க்கை துணை அமையும், வியாபாரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சரளமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், கூட்டு முயற்சி வெற்றி தரும், தெய்வீக ஆளுமை மூலம் உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், பிரபல்ய யோகமும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், பொது வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நற்பெயர் மற்றும் உயர் பதவிகள் கிட்டும், எதிர்பாராத உதவிகள் வாழ்க்கை துணை வழியில் இருந்து கிடைக்க பெறுவார், பொதுமக்கள் ஆதரவும் பெரிய அளவில் உண்டு, வியாபாரம் விருத்தி அடையும், வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான சவால்களை ஏற்படுத்தும், தெளிவற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பமான மனநிலையில் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை தரும், ஜாதகரின் மனதில் சில நேரங்களில் இனம் புரியா சந்தேகங்கள் அதிக அளவில் ஏற்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு முழு அளவில் பயன் தாராது, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை தந்துவிடும், நல்ல குரு அமைவது ஜாதகருக்கு சற்று கடுமையான காரணமாக அமையும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர்  கடுமையான இன்னல்களை வெகு அளவில் சந்திக்கும் நிலையை தரும், ஜாதகரின் 11ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ ராசியான சிம்மத்தில் அமைவது ஜாதகரின் ஆன்மீக தேடுத்தல்களை கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம் மற்றும் வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், வரும் வருமானம் ஜாதகருக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும், வாக்கு வன்மை குறையும், குடும்ப வாழ்க்கையில் அதிக அளவிலான மன அழுத்தங்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான பிரச்சனைகள் அதிகரிக்கும், எதிர்பாராதஇழப்புகள் பொருளாதார ரீதியாக ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் அருங்கலைகளில் ஆர்வம், ஆய்வுகளில் வெற்றி, பணியில் திருப்தி என்ற நிலையை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகருக்கு இன்னல்களை தரும், பணி சார்ந்த மனஅழுத்தம் அதிகரிக்கும், பணியாட்கள் மூலம் சிறு சிறு தொல்லைகள் உண்டாகும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், நிம்மதி இழப்பு உண்டாகும், தனம் சார்ந்த திட்டமிடுதல்கள் இல்லை எனில் வாழ்க்கை ஜாதகருக்கு சுமையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, எதிரிகள் வழியில் நன்மை உண்டானாலும், அவர்களால் மனநிம்மதி கெடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய வீண் செலவினங்களை தரும், சூது மூலம் நஷ்டம் உண்டாகும், திருப்தி இல்லாத மனநிலை, அணியவராலும் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்பாராத விபத்து என்ற வகையில் கடுமையான பாதிப்பை தர கூடும், நல்ல உறக்கம் இன்மை அல்லது உடல் நல பாதிப்பை தரக்கூடும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத காரணத்தால் சில இடர்பாடுகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும், தெய்வீக சிந்தனை இருந்த போதிலும் முழுமையான வெற்றியை தாராது, அதிக அளவிலான மன போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தரும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 21/10/2014 முதல் 21/10/2031 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கடந்த சனி திசையும் ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற சுகம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு 4,10ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது, இந்த நிலை புதன் திசையிலும் தொடர்வது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் நடந்த, நடைபெறுகின்ற சனி மற்றும் புதன் திசை 100% விகிதம் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுகபோகம் மற்றும் ஜீவன முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு ராகு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது 11,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும், குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வீண் விரையம் என்ற நிலையிலும் இன்னல்களை கடுமையாக தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் திசா,புத்திகளில் ராகு மற்றும் குரு மட்டுமே ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், மற்ற கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவக தொடர்புகளையே ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு யோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நடைபெறும் திசை புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் நேராது, அவயோக பலாபலன்கள் எதுவும் நடைமுறைக்கு வாராது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை என்பதே முற்றிலும் உண்மை, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment