பின்தொடர...

Saturday, December 23, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மீனம்! சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மீனம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மீன லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், செயல்படும் காரியங்களில் பரிபூர்ணத்துவத்தை அடைய விரும்பும் மீன லக்கின அன்பர்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் தங்களுக்கு ஆன்மிகம் சார்ந்த தடைகளையும், சமூகமதிப்பில் ஓர் சுணக்கத்தையும், தெளிவில்லாத மன நிலையையும் அதன் வழியிலான திருப்தியற்ற வாழ்க்கையையும் தந்து இருக்க  கூடும், ஆனால் தற்போழுது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து  ( ஜீவனம் ) சிறு சிறு அவப்பெயர் மற்றும் தடைகளை தந்த போதிலும் தனது  வர்க்க கிரகங்களின் வீடுகளான ரிஷபம்,மிதுனம் மற்றும் கன்னியை வசீகரித்து மிகுந்த லாபத்தை தரும் அமைப்பாகும், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த சனி தங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும், மேல் அதிகாரிகள் வழியில் இருந்து மனஉளைச்சலை தரும், செய்யும் தொழில் வழியில் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் யாதொரு பாரபட்சமும் இன்றி  கடுமையான இன்னல்களை தங்களுக்கு தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் குறையும், பெற்ற தந்தை வழியிலான இன்னல்கள் தங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது  தங்களுக்கு சகல நலன்களையும் வாரி வழங்கும், திட்டமிடாமல் செய்யப்படும் காரியங்கள் தங்களின் வாழ்க்கையில்  மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க, மீன  லக்கினத்தை சார்ந்த பெண்கள் தனது தாயின் வார்த்தைகளை மதித்து நடப்பது  நல்லது இல்லை எனில் வீண் அவப்பெயரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் , எக்காரணத்தை கொண்டும் தனிமையில்  பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல மேலும், பாதுகாப்பான பயணம் தங்களுக்கு வரும் வீண் மருத்துவ செலவினங்களை குறைக்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனைகாலமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அவர்களது  உண்மை தன்மையை பரிசோதித்து உதவுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், சனிபகவானின் தாக்கம் குறைய இறையருளின் ஆசியை பெறுவது ஒன்றே தீர்வாக அமையும்.

3ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், தங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல  வெற்றி வாய்ப்பு கிட்டும், சகோதரவழியிலானா உதவிகள் தேடிவரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், கமிஷன் தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வருமான கிடைக்கும், அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும், தங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறன் மூலம் சகலவித நன்மைகளையும் பெறுவதற்கு யோகம் உண்டு, தனிப்பட்ட திறமைகளை பரிசோதித்து வெற்றிகாணும் நேரமிது என்பதனை மீன லக்கின அன்பர்கள் உணர்வது அவசியமாகிறது, மனபலம் அதிகரிக்கும்  செயற்கரிய காரியங்களை சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் நேரமாக இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு அமையும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு கவுரவம் மற்றும் நன்மதிப்பு உண்டாகும், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு, செய்தி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சியை பெற்று தரும், புதிய எதிர்காலம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தர தயார் நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும், வீர்ய ஸ்தானத்தின் மீதான சனிபகவானின் பார்வை தங்களுக்கு கைநிறைவான வருமான வாய்ப்பையும், தடைகளை உடைத்தெறிந்து தன்னிறைவான முன்னேற்றத்தை பெறுவதற்க்கான சந்தர்ப்பங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது மீன இலக்கின அன்பர்களே!
 " வாழ்த்துகள் "

4ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு மிதம் மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்குவார், தங்களின் அறிவுத்திறனும், நல்ல குணமும் எதிர்பாராத பொருளாதார அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் தேடிவரும் தெய்வீக அனுக்கிரகம் கூடும், அறிய திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை  உருவாக்கும், சுகபோக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது , தங்களின் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் ஆதாயம் தங்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு சரியான முதலீடாக அமையும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், புதிய வீடு வண்டி வாகனம் வாங்க இதுவே சரியான  தருணம், தடைபெற்ற காரியங்கள் யாவும் தன்னிறைவாக வெற்றி வாய்ப்புகளை வழங்கும் என்பதனால், அறிவில் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளை பெறுவது தங்களின் கடமையாகிறது, சனிபகவானின் சமசப்த பார்வை தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமையுடன் திகழ்கிறது.

7ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சுகபோகத்தை வாரி வழங்குவார், திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதோர் வாழ்க்கை துணை அமையும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளையும், ஆதரவையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நல்ல நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றப்படும், இதுவரை இருந்த சந்தேகங்கள் நீங்கி தங்களின் மனம் தெளிவடையும், எதிர்ப்புகள் யாவும் நட்பு பாராட்டும், விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள், தங்களின் ஆலோசனையின் பெயரில் பல காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும், சமூக அந்தஸ்து உயரும், உடல் நலம் சார்ந்த  முன்னேற்றமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், பிணி அகலும், பொருளாதார வசதி வாய்ப்பை பெறுவதற்கான ஆயத்த பணிகளை இனிவரும் காலங்களில் தாங்கள் நடைமுறைப்படுத்தலாம், கூட்டு தொழில் வழியிலான நன்மைகள் தங்களை தேடி வரும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடு வெளியூர் செல்லும் யோகமும், அதன் வழியிலான ஜீவன முன்னேற்றமும் சிறப்பாக தங்களை தேடிவரும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் சகல சௌபாக்கியமும் தங்களுக்கு உண்டாகும், எதிர்பாலின ஆதரவு தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில்  மீன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

No comments:

Post a Comment