திங்கள், 14 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )


  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : கடகம்

 கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடு மற்றும் சுக ஸ்தானமாக விளங்கும் கடக லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் ராகு பகவானும், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கேந்திர அதிபதி ) சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவார், நிம்மதியான வாழ்க்கை, முதலீடுகளில் இருந்து வரும் லாபம், வெளியூர் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து வரும் நன்மைகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், நல்ல அயன சயன சுகம், திருப்தியான மனநிலை, நினைக்கும் எண்ணங்கள் பலிதம் பெரும் யோகம், வியாபார விருத்தி, தரகு தொழில் வழியில் இருந்து வரும் மிகுந்த லாபம், மிதம் மிஞ்சிய அதிர்ஷ்டம், முதலீடு செய்து அதன் வழியில் பெரும் வருமானம், தெய்வீக அனுபவம், ஆன்மீகத்தில் பெரும் வெற்றி, நல்ல சிந்தனைகள், வாழ்க்கை துணையுடனான அன்பு மற்றும் ஆதரவு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், எண்ணத்தின் வலிமை மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை, பொருளாதரத்தில் எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டம் மூலம் யோக வாழ்க்கை மற்றும் தன்னிறைவான பண வசதி வாய்ப்புகள் என மிகசிறந்த நன்மைகளை தரும், அறிவில் தெளிவும் சிந்தனை திறனில் மாற்றமும் தங்களது வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை தரும், எதிர்ப்புகள் அனைத்தையும் தங்களது முயற்சியால் மிக எளிதாக கடந்து சென்று வெற்றி வாகை சூடும் வாய்ப்பை நல்கும்.

 அதே சமயம் 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கோண அதிபதி ) சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மிகுந்த துன்பத்தை வாரி வழங்குவார், குறிப்பாக தீய பழக்க வழக்கங்களில் அதீத ஈடுபாடு, லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகள், மனம் சார்ந்த நோயில் சிக்குண்டு இன்னலுறும் தன்மை, குடி நோயாளியாக மாறும் சூழ்நிலை, மற்றவர்களை நம்பி மோசம் போகும் தன்மை, செய்த முதலீடுகள் பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணையுடனான மனப்போராட்டம், எதையும் துணிந்து செய்யும் வல்லமை இன்றி தடுமாறும் தன்மை, மற்றவர்களால் தவறாக புரிந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், சந்தேகம் நிலைத்தன்மை இல்லாமல் போராடும் போக்கு, தவறான வார்த்தை பிரயோகம், எதிர்பாராமல் செய்யும் தவறுகளால் பாதிப்பை சந்தித்தல், முன் யோசனை இன்றி செய்யும் காரியங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்பு வம்பு வழக்குகள் வழியில் இருந்து வரும் துன்பங்கள், உறுதியான மனநிலை இல்லாமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, சிந்தனை சக்தி குறையும் நிலை, உடல் நிலையில் கடுமையான பாதிப்பு, வீண் மனபயம், கட்டுக்கடங்காத கற்பனை மூலம் வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் எதிர்கொண்டு தோல்வியை சந்திக்கும் நிலை, வீரியமிக்க செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு என்ற வகையில் மிகுந்த துன்பத்தை  தரும்.

 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்கள் கடுமையான நெருக்கடிகளை தரும், நண்பர்கள் எதிரியாக மாறக்கூடும், தனம் சார்ந்த விஷயங்களில் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, முன்னேற்ற தடைகளும், தோல்விகளும் சற்று அதிக அளவில் தங்களுக்கு பாதிப்பை தரும் என்பதுடன் எதிரிகளின் தொல்லை அதிகமாக வாய்ப்பு உண்டு, மனநிம்மதி வெகுவாக பாதிக்கும், பெரியமனிதர்களின் கோபத்திற்கும், மேல் அதிகாரிகளின் தண்டனைக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், உடல்  ரீதியானபாதிப்பு தங்களின் வாழ்க்கையில் மிகுந்த தாமதத்தை தரக்கூடும், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு நெருக்கடியை தரும், பொழுதுபோக்கு விஷயங்கள் வீண் செலவினங்களை ஏற்படுத்தும், தெய்வீக அனுக்கிரகம் பெற கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், உயர் கல்வி அல்லது பட்டைய படிப்புகளில் தடை உண்டாகும், உடல் நலனில் அக்கறை செலுத்த வில்லை எனில் வாழ்க்கையில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடி கவனம் எடுத்து நலம் பெறுவது அவசியமாகிறது.

முடிந்த அளவு கடன் வாங்காமல் ஜீவனத்தை மேற்கொள்வது கவுரவத்தை தரும், புது முயற்சிகளை தவிர்ப்பதும், வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடப்பதும் சகல சௌபாக்கியங்களையும் தரும், எதிர்பாராத உடல் தொந்தரவு ஏற்படும் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்வது தங்களது செயல்திறனில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும், தொழில் வழியில் அதிக கடன் பெறாமல் சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், உறவுகளுடன் பகைத்துக்கொண்டு இன்னல்களை தேடிக்கொள்ளவேண்டாம், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது, ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதும், சூரிய வழிபாடு மேற்கொள்வதும் தங்களுக்கு கேது பகவானின் சஞ்சார நிலையில் இருந்து வரும் இன்னல்களுக்கு நிவர்த்தியாக அமையும், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளோர் சுய ஜாதக வலிமை உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லையெனில் கடன் சார்ந்த நெருக்கடிகளில் மாட்டிக்கொள்ள நேரும், மேலும் எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து வருவதால் தங்களின் செயல்திறன் வெகுவாக குறையும், வீட்டில் உள்ளோர் எவரும் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை, சுய மரியாதையும், சுய கெரவம் பாதிக்கும் என்பதால் அனைவரிடமும் கவனமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. ராகு கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கடக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கடக லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

2 கருத்துகள்:

  1. ஐயா எனக்கு சிம்ம ராசி சிம்மலக்னம்13/7/75காலை9.30வேலுர் மாவட்டம் எனக்கு எப்படி உள்ளது

    பதிலளிநீக்கு
  2. Raai veru laginam vera ? neengal koorum palangal laginathirkku endral , kadaga raasi kku ithu porundhatho ?

    பதிலளிநீக்கு