பின்தொடர...

Saturday, January 12, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 ) நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment