வெள்ளி, 21 அக்டோபர், 2022

சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 ) அஷ்டமசனி தரும் அபரிவிதமான வளர்ச்சி !

சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 )

 களத்திர ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி சனிபகவான் கடக ராசி மற்றும் லக்கினத்திற்க்கு ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அஷ்டமசனியாக சஞ்சரிக்கும் இனிவரும் இரண்டரை வருடம் மிகுந்த இன்னல்களை தருவார் என்று பயம்கொண்டீர்கள் என்றால்? அது தவறான முரண்பட்ட கருத்தாகும், ஏனெனில் அஷ்டம ஸ்தானத்திற்கு புதையலுக்கு நிகரான சொத்துசுக சேர்க்கையை வழங்கும் வல்லமையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களை தன்னிறைவாக சுவீகரிக்கும் யோகமும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகப்பெரிய சுபயோகங்களை பெற்று வாழ்வில் மிகப்பெரிய பிரபல்ய யோகத்தை பெரும் அமைப்பும் உண்டு என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் கடக ராசி மற்றும் லக்கின அன்பர்களே.



மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம், தனது எதிர் வர்க்க கிரகம் என்றவகையில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், வாழ்க்கை துணை நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மற்றும் கும்பம் வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் அஷ்டம சனியின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் திடீர் அதிர்ஷ்டம் மட்டுமே தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை தொடர்ந்து நிலைத்தன்மையுடன் வாரிவழங்கும், இருப்பினும் தாங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் அதீத கவனம் கொள்வது நல்லது அது தங்களின் பாதுகாப்பான பயணங்கள் என்றால் மிகையாது, இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைக்கவசம் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது பாதுக்காப்பு கச்சை அவசியம் அணிவது நன்மையை தரும், ஆயுள் காப்பீடு அவசியம் செய்து வையுங்கள், மருத்துவ காப்பீடும் மிக மிக அவசியம் என்பதை உணருங்கள், இவையனைத்தும் தங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும், மேலும் தங்களின் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம், குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவது நல்லது தங்களின் குடும்பம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதும், குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்பதும் தங்களின் மனவலிமையை அதிகரிக்கும், தேவையற்ற மனக்குழப்பம் போன்ற விஷயங்களில் இருந்து தங்களை மீட்டு எடுக்கும், மிகப்பெரிய முதலீடுகளை செய்வதற்க்கு முன்பு தங்களின் சுய ஜாதகத்தில் திசா புத்திகளின் வலிமையை உறுதி செய்த பிறகு மேற்கொள்வதே சரியானதாக அமையும், மருத்துவ துறையில் உள்ள நபர்களுக்கு மிகுந்த சுபயோகம் உண்டு, அரசு துறையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டாகும், தொழில் வளர்ச்சியை வெகு அற்புதமாக முன்னெடுக்கும் யோகம் உண்டு, பொது வாழ்க்கையில் உள்ள நபர்களுக்கு அதிகார பதவியை சுவீகரிக்கும் வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை தங்களின் முன்னேற்றத்தை வெகு அற்புதமாக நிர்ணயம் செய்ய உதவி புரியும், முன் பின் அறிமுகம் இல்லாதா நபர்கள் வழியில் இருந்து சுபயோகங்கள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பு உண்டாகும், திடீர் முடிவுகளை தவிர்ப்பதும், அவசர கதியில் செய்யும் காரியங்களும் தங்களுக்கு அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், பிரிந்த கணவன் மனைவி உறவு மேம்படும், திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது கடக ராசியினர் இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி நலம் பெறுங்கள்.

சனி பகவான் தனது 6ம் பார்வையால் ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் கடகராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, உடல் ஆரோக்கியத்தை வெகு சிறப்பாக கட்டமைப்பு செய்வார், உடல் ரீதியாக இருந்த இன்னல்கள் நீங்கும், மனதில் தெளிவு பிறக்கும், மனக்குழப்பம் மனஅழுத்தம் மனபயம் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும், உழைக்கும் திறன் அதிகரிக்கும், தங்களின் நேர்மையான குணம் எதிர்பாராத முன்னேற்றத்தை தரும், கடின உழைப்பு கைகொடுக்கும், வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த கடன் சுமை நீங்கி பொருளாதார தன்னிறைவை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புதிய வீடு வண்டி வாகனம் இடம் பொருள் சொத்து  சுக சேர்க்கை உண்டாகும், தங்களின் குணநலனும் பராமரிக்கும் தன்மையும் மேலோங்கி நிற்கும், எதிர்ப்புகள் அகன்று திறமைக்கான முழு மதிப்பு மரியாதை அங்கீகாரம் கிடைக்கும், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் யோகம் உண்டாகும், தங்களின் தாய் வழி சொத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் தங்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வை தரும், எதிர்ப்புகள் அகன்று நிம்மதியான வாழ்க்கையை சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி தேர்வுகளில் சிறப்பான முன்னேற்றம், உயர்கல்வி பட்டய படிப்பு ஆராய்ச்சி கல்வியில் தேர்ச்சி என்ற வகையில் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும், வெளிநாடு யோகம், வெளியூர் ஜீவனம் தங்களின்  வாழ்க்கையில் பல்வகை மாற்றங்களை வாரி வழங்கும், சீரிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு செழிப்பான வாழ்க்கையை நல்கும், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது தங்களின் உடல்நலத்தை சிறப்பாக அமைத்து தரும், குறிப்பாக பல், எலும்பு, கேசம் போன்ற அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு குணம் பெறுவீர்கள், நேர்மையான செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள், எதிர்பாலின சேர்க்கை சார்ந்த இன்னல்கள் விலகும், முரண்பட்ட உறவுகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை தரும், சிறந்த தொழில் அல்லது வேலைவாய்ப்பு அமைவதற்கான சந்தர்ப்பம் உண்டு மிக சிறப்பாக வாய்ப்புகளை கையாண்டு வெற்றிகொள்ளுங்கள்.

சனிபகவான் தனது சமசப்த 7ம்  பார்வையின் மூலம் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக வழங்கிய போதிலும், குடும்பத்தில் சில சிக்கல்களும் வரவுக்கு மீறிய செலவினங்களும் அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் அதிக அளவில் தேவைப்படும், தங்களின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக அமைவது அவசியமானது, தங்களது பேச்சில் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, பலரது கருத்துக்கள் தங்களுக்கு வீண் மனபயத்தையும் சஞ்சலத்தையும் தரும், செய்யும் காரியங்களில் அதீத தடுமாற்றத்தை தாங்கள் எதிர்கொள்ளவேண்டி வரும், எனவே வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது, கல்வியிலும் கலைகளிலும் மிகப்பெரிய தேர்ச்சியை பெறுவீர்கள், முன்பின் யோசிக்காமல் செய்யும் செயல்களால் தாங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், அறிய கலைகளில் தேர்ச்சியையும் இயல் இசை நாடக துறையில் உள்ள நபர்களுக்கு அபரிவிதமான வெற்றி வாய்ப்பும் உண்டாகும், தங்களின் வாழ்க்கை துணையுடன் சிறு சிறு கருத்துவேறுபாடு வர வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே அவர்களை அனுசரித்து செல்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது தேவையற்ற அவப்பெயரை சந்திக்காமல் மீண்டு வருவதற்கு துணைபுரியும், தனது கருத்துக்களை பதிவு செய்யும் பொழுது மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது, ஆன்மீகத்தில் வெற்றி உண்டு, இறையருளின் கருணை பரிபூரணமாக அமையும், தெய்வீக காரியங்களில் அதீத ஈடுபாடும் அதனால் பெரும் சுபயோகங்களும் அதிகரிக்கும், நன்மை தரும் காரியங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், தங்களின் குழந்தைகள் வழியில் இருந்து சிறப்பான சுபயோகங்கள் உண்டு, இருப்பினும் அவர்களது வளர்ச்சியில் அக்கறையும் முக்கியத்துவம் தருவது நல்லது, சனியின் சமசப்த பார்வை தங்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும், கடின உழைப்பையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும் சிறப்பாக முன்னெடுக்க அருமையான வாய்ப்பையும் வழங்கும்.

சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு பூர்வீக வழியில் இருந்து தன்னிறைவான சுபயோகங்களை வாரி வழங்கும், சனி தனது வர்க்க ராசியான துலாம் ராசியை வசீகரிக்கும் அமைப்பு ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை நல்கும், சிறு குறு தொழில் விருத்தி அடையும், செய்யும் தொழில்வழியில் தங்களின் தனித்திறமை அபரிவிதமாக வெளிப்படும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றமும் வருமான வாய்ப்பும் கைகூடி வரும், தடைபட்ட திருமண  வாழ்க்கை கைகூடி வரும், தங்களின் குடும்பத்தில்  நல்லதொரு ஆண் வாரிசு பிறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, புத்திர பாக்கியம் தங்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் யாவற்றையும் போக்கி மனமகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் முழு அளவில் வாரி வழங்கும், தங்களின் துறை சார்ந்த ஞானம் தொழில் ரீதியான அபிவிருத்தியை தன்னிறைவாக வாரி வழங்கும், கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கான பொருளாதார உதவிகள் வந்து சேரும், குல தெய்வத்தின் ஆசிர்வாதம் தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்க காத்திற்குக்கிறது என்பது கவனிக்கத்தக்க  சிறப்பு அம்சமாகும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள், புதிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும், ஆயகலைகளில் தேர்ச்சியையும், பொதுமக்கள் மூலம் அபரிவிதமான முன்னேற்றங்களை பெறுவதற்கான வாய்ப்பும் தங்களுக்கு வந்து சேரும், பொதுமக்கள் தொடர்பு உள்ள தொழில்களில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றங்களை தன்னிறைவாக பெறுவது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் எழுத்து பத்திரிகை மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் மற்றும் பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் தனைத்திறனை முழுமையாக பிரயோகித்து  வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் பொன்னனான நேரமிது.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக