சனி, 1 அக்டோபர், 2022

சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 ) தொழில்யோகம் பொருளாதார முன்னேற்றம் !

சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 )


 கர்மாதிபதி சனி பகவான் ரிஷப ராசி மற்றும் லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் நேரமானது தொழில் ரீதியான தன்னிறைவான யோகங்களை நல்குவதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை வெகு அற்புதமாக வாரி வழங்கும் அருமையான நேரமாக அமைகிறது, இதுவரை இருந்து வந்த தொழில் ரீதியான பிரச்சனைகள் நீங்கி புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடி வரும்.

 ஜீவன ஸ்தானமான 10ம் இட சஞ்சாரம் ரிஷப ராசியினருக்கு தனது வர்க்க கிரக வீட்டில் இருந்து மிகுந்த சுபயோகங்களை மட்டுமே நல்குவது கவனிக்கத்தக்கது, வேலைவாய்ப்பு இன்றி தடுமாறி வந்த அன்பர்களுக்கு தகுதிக்கு தகுந்த நல்லதொரு வேலைவாய்ப்பு தேடி வரும், கவுரவ பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், அரசு வேலைவாய்ப்பு சார்ந்த நிலைகள் நல்லதொரு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் வந்து சேரும், உயர்பதவிகளை வெகு விரைவாக சனி பகவான் தங்களுக்கு பெற்று தருவதுடன், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் நல்குவார் என்பது கவனிக்க்கத்தக்கது, சுய தொழில் யோகம் கூட்டு தொழில் வழியில் இருந்துவரும் மிகப்பெரிய வளர்ச்சி, புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றிகள், சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்துவது வழியில் இருந்து வரும் நன்மைகள், புது முயற்சிகளுக்கான அங்கீகாரம், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை செய்தொழில் வழியில் இருந்து சுவீகரிக்கும் யோகம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையில் தன்னிறைவான ஜீவன மேன்மையை முழு அளவில் சுவீகரிக்கும் யோகம் உண்டு, இதுவரை இருந்து வந்த மனபயம் நீங்கி தைரியத்துடன் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தொழில் ரீதியான முயற்சிகளுக்கான வெற்றிகளை தாங்கள் தன்னிறைவாக சுவீகரிக்கும் நல்ல நேரமிது, மதிப்பு மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து தங்களுக்கான அங்கீகாரம் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள்.

 தங்களின் தகப்பனார் வழியில் இருந்து அபரிவிதமான தொழில் வளர்ச்சி ஏற்படும், அவரது தொழிலை தாங்கள் ஏற்றுநடத்தும் சுபயோகமும் உண்டாகும், குடும்பத்தில் உள்ளோரது அரவணைப்பும் ஆதரவும் தங்களுக்கு முழுமையாக வந்து சேர்வதுடன் சுய கவுரவம் மேம்படும், நிர்வாக திறன் வெகு அற்புதமாக வெளிப்படும், தைரியம் தன்னம்பிக்கை, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் போன்றவை தங்களை மற்றவர்கள் மெச்சும் தன்மையிலான சுபயோகங்களை பெற்று தரும், பணியாளர்கள் ஆதரவு தங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் தொழில் ரீதியான நுட்பங்களை வெகு அற்புதமாக கற்று தேர்ச்சி பெரும் யோகம் உண்டாகும், தொழில் வழியில் முதலீடுகள் புதிய சொத்து வண்டி வாகன யோகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை  தன்னிறைவாக சனிபகவான் நிறைவாக வாரி வழங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இனிவரும் இரண்டரை வருடமும் ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியாக வெற்றி மேல் வெற்றியே உண்டாகும்.

சனி பகவான் தனது 6ம் பார்வையால் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் ரிஷபராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக 3,11ம் வீடுகளை வசீகரிக்கு சுபகிரகமானாலும் சரி, அசுப கிரகமானாலும் சரி சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான சுபயோகங்களையே 3,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அந்த அற்புதமான வாய்ப்பை ரிஷப ராசியை சார்ந்த அன்பர்கள் இனிவரும் இரண்டரை வருடம் தன்னிறைவாக சுவீகரித்து  முயற்சிக்கான வெற்றிகளையும், திட்டமிட்ட காரியங்களில் 100% விகித நன்மைகளையும், இளையசகோதர வழியில் இருந்து வெற்றி வாய்ப்புகளையும், சிறு பயணங்கள் மூலம் மிகப்பெரிய லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்க இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள ரிஷப ராசியினர் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்களை பெறுவார்கள், சரியான விஷயங்களை கிரகிக்கும் ஆற்றல் உண்டாகும், பொதுமக்கள் தொடர்புகள் வழியில் ஏராளாமான நன்மைகளை பெறுவீர்கள், பொதுமக்கள் தொடர்புள்ள துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு அற்புதமான யோக வாழ்க்கையை வழங்க தயார் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது, தோல்விகள் இல்லாத ஒரு அற்புதமான எதிர்காலத்தை ரிஷப  ராசியினர் தன்னிறைவாக பெருகிண்றீர்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஊடகம் பத்திரிகை மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் எதிர்பாராத முன்னேற்றங்களையும், அபரிவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற்று தரும், குறிப்பாக விரைவில் ஜனரஞ்சகமாக பிரபல்யம் அடையும் யோகம் உண்டாகும், முயற்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சரியான தகவல்களை உணர்ந்து அதை பொதுமக்கள் விழிப்புணர்வு பெரும் வகையிலான தகவல் பரிமாற்றத்தை தங்களின் கலைத்திறனுடன் வெளிப்படுத்துவீர்கள், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு பல அற்புதமான முன்னேற்றங்களை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய முயற்சிக்கான வெற்றி 100% சதவிகிதம் தங்களுக்குஉண்டாகும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் இனிவரும் இரண்டரை வருடம் தாங்கள் முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வாய்ப்புகளை சரியாக முன்னெடுத்து நலம் பெறுங்கள்.

 சனிபகவான் தனது சமசப்த 7ம்  பார்வையின் மூலம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வீடு வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை என்ற வகையில் வெகு அற்ப்புதமான யோக வாழ்க்கையை வழங்கிய போதிலும், ஆண்களென்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக அவரது உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஏற்படும் மருத்துவ செலவினங்களை தாங்கள் எதிர்கொள்ளும் தன்மையை தரும் எனவே இன்சூரன்ஸ் திட்டங்களை முன்னெடுப்பது தங்களுக்கான பொருளாதார சிக்கல்களை தீர்க்கும், பெண்கள் தங்களது தந்தையின் வழியில் இருந்து வரும் பொருளாதார செலவினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் புதிய  வீடு வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும், இடமாற்றம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான சுபயோகங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் இந்த அற்புதமான  மாற்றங்களை சுவீகரிக்கும் தன்மையை விழிப்புணர்வுடன் இருந்து பெற்று மகிழுங்கள்.

 தங்களின் குணம் நலன் சார்ந்த சுயமதீப்பீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் தாங்கள் கவனம் செலுத்தவில்லை எனில் தங்களுக்கு வரும் இழப்புகள் என்பதை தவிர்க்க இயலாது, எனேவ அனைவரிடமும் அன்புபாராட்டுங்கள், அவசர கதியில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு அதீத இடர்பாடுகளையும் இன்னல்களையும் வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியத்தை  கையாள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் அதீத தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், கணவன் மனைவி உறவு பலப்படும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் யோகம் உண்டு, திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற  வாழ்க்கை சுவீகரிக்கும் யோகம் உண்டு, எதிர்பார்ப்புகள் நிறைவேறும் லட்சியங்களை வென்று எடுக்கும் யோகம் உண்டு, சொத்து சுக சேர்க்கையை விழிப்புணர்வுடன் பெற்று நலம் பெறுங்கள்.

 சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது திடீரென ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு காதல் திருமண வாழ்க்கை கைகூடி வரும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து  சில நன்மைகள்  நடைபெற்ற போதிலும், அவர்கள் வழியில் இருந்து பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இல்லற வாழ்க்கை கைகூடி வந்த போதிலும் வாழ்க்கை துணை தங்களுக்கு  நேரெதிரான குணநலன்களை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, இதனால் தங்களின் தனித்திறன் யாவும் வீண் விரையம் ஆகும், அதே சமயம் மனநிம்மதி சார்ந்த விஷ்யங்களையும் கேள்விக்குறியாகும்  என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள், இறைவழிபாடும் முற்போக்கு சிந்தனை மட்டுமே தங்களை மேற்கண்ட இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும்  என்பதை  கவனத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே, குறிப்பாக பொது வாழ்வில் பொதுமக்கள் தொடர்பில் உள்ள அன்பர்கள் தங்களது பேச்சில் மிகுந்த கவனம் கொள்வது நன்மைகளை தரும், தெளிவில்லாத செயல்பாடுகள் மூலம் அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 வெளியூர் மற்றும் வெளிநாடு சார்ந்த  சுபயோகங்கள் தங்களுக்கான பொருளாதார முன்னேற்றங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும், வெளிநாடுகளில்  ஜீவனம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் சனி பகவான்  திடீரென பல அற்புதமான நன்மைகளை வாரி வழங்குவார், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், தெய்வீக  அனுக்கிரகம்,  புதிய சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், அரசு சார்ந்த உதவிகள் பெண்கள் வழியிலான தொழில் முன்னேற்றங்கள், வண்டி வாகன துறையில் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், குடும்பத்துடன் சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் தன்மை, மூதாதையர் சொத்துக்கள் கைவர பெரும்  யோகம் என்ற வகையில் நன்மைகளை சனிபகவான்  வழங்குவார் தங்களின் தனித்திறன் கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுங்கள்.

குறிப்பு :

 மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் ரிஷப ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற  10,3,4,7ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக