சனி, 16 பிப்ரவரி, 2013

கேந்திர அதிபதி , கோண அதிபதி உண்மை விளக்கம் !



அண்ணன் அவர்களே,
                
  ஜோதிடத்தின் மேலான தன்மையை மிகவும் சிறப்பாக ஜோதிடதீபத்தின் மூலம் விளக்குகிறீர்கள். அதற்கு நன்றிகள் பல.சில ஐயங்களையும் தங்களிடமிருந்து தெளிவு பெறும் நோக்கில் வினவுகிறேன்.
 

கேள்வி :

 
1.கேந்திராதிபதியாக சுபக்கிரகம் வருவதற்கும்,பாவகிரகம் வருவதற்கும் என்ன வித்தியாசம்.திரிகோணாதிபதியாக சுபக்கிரகம் வருவதற்கும்,பாவகிரகம் வருவதற்கும் என்ன வித்தியாசம்?.(உதாரணம் 1.செவ்வாயனவர் கடக லக்கினத்திற்கு 5,10க்கு அதிபதி என்ற அடிப்படையில் 10ம் வீட்டிற்கும் கேந்திரமேறினால் 10ம் பாவத்தின் பலனை நன்மையாகவும்,5ம் வீட்டிற்கு திரிகோணமாக அமர்ந்தால் 5ம் பாவத்தின் பலனை கெடுத்தும் விடுவாரா?.2.குருவானாவர் மிதுன லக்கினத்திற்கு 7,10 அதிபதி என்ற அடிப்படையில் தனது வீடுகளுக்கும்,லக்கினத்துக்கும் மறைவு பெறும் போதுதான் நன்மை கிடைக்கிறது இல்லையெனில் டவுசரைக் கிழித்துவிடுகிறார்).


பதில் :

ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேந்திர வீடுகளுக்கு அதிபதியாக சூரியன் , தேய்பிறை சந்திரன் , செவ்வாய் , சனி , சூரியனுடன் சேர்ந்த புதன் ஆகியோர் அதிபதியாக வருவது சிறப்பு , அப்படி வரும் பொழுது அவர்கள் தனது வீட்டிற்கு வாங்கும் பலம் கேந்திர பலமாகவும் , சம பலமாகவும் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் கோண  வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் , சூரியனுடன் சேராத புதன் , வளர் பிறை சந்திரன் அதிபதியாக வருவது சிறப்பு அப்படி வரும்பொழுது அவர்கள் தனது வீட்டிற்கு சம பலமும் , கோண பலமும் பெறுவது  மிகுந்த நன்மையை வாரி வழங்கும் .

கேந்திர அதிபதியாக இருந்தாலும் சரி , கோண அதிபதியாக இருந்தாலும் சரி தனது வீட்டிற்கு சம பலம் பெரும் பொழுது 100 சதவிகித நன்மையை மட்டுமே செய்வார்கள் என்பது குறிப்பிட தக்கது .

கேள்வி :

 2.சுப‌க்கிர‌க‌ம் ஒன்று ஒரு திரிகோணத்திற்கும்,ஒரு ம‌றைவுக்கும் அதிப‌தியாக‌ வ‌ரும் போது ம‌றைவுக்கு ம‌றைவும்,திரிகோண‌த்திற்கு கோண‌மாக‌வும் அம‌ர்ந்தால் தான் த‌ன‌து பாவ‌ங்க‌ளுக்கு ந‌ன்மை செய்யுமா?.(உதார‌ண‌ம் சிம்ம‌ ல‌க்கின‌த்திற்கு குரு 5,8 அதிப‌தி என்ற‌ அடிப்ப‌டையில் துலாமில் அம‌ர்ந்துள்ளார் எனில் 8 க்கு 8 க‌வும்,5க்கு 11 க‌வும் அம‌ர்ந்தால் ந‌ன்மை செய்யும் என‌க்கொள்ள‌லாமா?.).

பதில் :

சுப கிரகம் ( அதாவது கோண அதிபதி ) தனது வீட்டிற்கு கோண பலம் பெறுவது சிறப்பான நன்மையை செய்யும் , சம பலம் பெரும் பொழுதும் அதிக நன்மையை செய்யும் , ஆனால் மறைவு பலம் பெரும் பொழுது நன்மையை செய்து , ஒரு வேலை கேந்திர வீட்டிற்கு அதிபதியாக வரும் கோண அதிபதி மட்டும் மறைவு பலம் பெரும் பொழுது நன்மையை செய்வார் .

சிம்ம லக்கினத்திற்கு 5,8 க்கு அதிபதியான குருபகவான் துலாம் ராசியில் அமரும் பொழுது ( குருபகவான இயற்கையில் கோண அதிபதி ) கோண வீடான தனுசுவிற்கு 11 ல் சம பலத்துடன் அமர்ந்து 5 ம் பாவகத்திர்க்கு 100 சதவிகித நன்மையையும் , கேந்திர வீடான மீனத்திர்க்கு கோண அதிபதியாக வரும் குருபகவான் மீனத்திர்க்கு 8 ல் மறைவு பலம் பெறுவது 8 ம் பாவகத்திர்க்கு 100 சதவிகித நன்மையை தரும் , இந்த சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் கேந்திர , கோண வீட்டிற்கும் அதிபதியாக வந்தாலும் , இரண்டு பாவகத்திர்க்கும் நன்மையே செய்கிறார் தான் அமர்ந்த இடத்தில் இருந்து , துலாம் ராசியில் அமரும் குருபகவான் சிம்மலக்கினத்திர்க்கு 100 சதவிகித நன்மையே செய்கிறார் தனது வீடுகளுக்கு என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் .

கேள்வி :

3.பாவ‌க்கிர‌க‌ம் ஒன்று ஒரு திரிகோணத்திற்கும்,ஒரு ம‌றைவுக்கும் அதிப‌தியாக‌ வ‌ரும் போது ம‌றைவுக்கு கேந்திரமாகவும்,திரிகோண‌த்திற்கு  கோண‌மாக‌வும் அம‌ர்ந்தால் த‌ன‌து பாவ‌ங்க‌ளுக்கு தீமை தான் செய்யுமா?.ஏனெனில் ம‌றைவுக்கு அதிப‌தியாக‌ பாவ‌க்கிர‌க‌ம் வ‌ந்து அது கேந்திர‌த்தில் அம‌ரும் போது வ‌லிமை பெற்று ஜாத‌க‌ரை ப‌டுத்தி எடுத்துவிடும‌ல்ல‌வா?.(உதார‌ண‌ம் விருச்சிக‌ ல‌க்கின‌த்துக்கு செவ்வாய‌ன‌வ‌ர் 1,6க்கு அதிப‌தி என்ற‌ அடிப்ப‌டையில் 7ல் அம‌ர்ந்தால் ல‌க்கின‌த்துக்கு ந‌ன்மை செய்யும் ,இயற்கைப்பாவிக‌ள் கேந்திர‌மேறினால் ந‌ன்மை என்ற‌ அடிப்ப‌டையில்.ஆனால் 6க்கு அதிப‌தியாக‌வும் ,இய‌ற்கைப் பாவியாகவும் இருந்து கேந்திர‌மேறியதால் ஜாத‌க‌ருக்கும்,6க்கும் தீமை தான் செய்யும் என‌க்கொள்ள‌லாமா?).

பதில் : 

விருச்சக லக்கினத்திற்கு செவ்வாய் 7 ம் வீடான ரிஷபத்தில் அமர்வது , லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மைகளையும் , 6ம் வீடான மேஷத்திற்கு 2ல் ரிஷப ராசியில் அமர்வது 100 சதவிகித தீமையையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை தம்பி .

கேள்வி :

  4.ச‌மீப‌த்திய‌ ப‌திப்பில் ராகு,கேதுப் பெய‌ர்ச்சியை ப‌ல‌ன் சொல்ல‌ எப்ப‌டிப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என்ப‌தில் ரிஷப லக்கினத்துக்கு 12,6 ம் வீடுக‌ளை கேந்திர‌மாக‌ப் பாவிக்க‌ச் சொல்லியிருந்தீர்க‌ள். கேந்திர‌ம் என்ப‌து 1,4,7,10ம் வீடுக‌ள் தானே?.இது கொஞ்ச‌ம் புதிதாக‌ இருந்த‌து.(செவ்வாய‌ன‌வ‌ர் 7க்கு அதிப‌தி என்ப‌தாலா?.இல்லை கால‌ புருஷ‌ த‌த்துவ‌ப்ப‌டியா? 12ம் வீட்டை கேந்திரமாக்கியது கூட செவ்வாய‌ன‌வ‌ர் 7க்கு அதிப‌தியாக வருவதால் எனக்கொண்டாலும்.6ம் வீட்டை கேந்திர‌மாக‌ ஏன் பாவிக்க‌ வேண்டும்).

பதில் :

எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி , லக்கினம் , மூன்றாம் பாவகம் , பதினொன்றாம் பாவகம் இவை மூன்றும் சம வீடாக எடுத்துகொள்ளுங்கள் , ஐந்து , ஒன்பதாம் பாவகத்தை கோண வீடாக எடுத்துகொள்ளுங்கள் , இரண்டு , நான்கு , ஆறு , ஏழு ,எட்டு ,பத்து ,பனிரெண்டாம் வீடுகளை கேந்திர பாவகமாவும்  எடுத்துகொண்டு ஜாதக பலன் கண்டால் மட்டுமே ஜோதிட ரீதியான  பலன்களை தெளிவாக சொல்ல இயலும் , மேலும் விளக்கம் பெற தாங்கள் ஜோதிடத்தை எங்களது முறைப்படி கற்றுகொள்வது தங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் ஜோதிடத்தில் சரியான விளக்கம் கிடைக்கும் .

கேள்வி :

 5.ச‌ர‌,ஸ்திர‌,உப‌ய‌ ராசிக‌ளில் ந‌வ‌க்கிர‌க‌ங்க‌ள் த‌ரும் ப‌ல‌ன் என்ப‌து நெருப்பு,ம‌ண்,காற்று, நீர் த‌த்துவ‌த்தில் எவ்வாறு வித்தியாச‌ப்ப‌டுகிற‌து?.

பதில் :

தம்பி ஜோதிடத்தில் உள்ள சூட்சமமே இதுதான் , இதை தெரிந்து கொண்டால் நீயே  ஒரு சிறந்த ஜோதிடன் ஆகிவிடுவாய் , அதற்க்கு பிறகு எங்களுக்கு என்ன வேலை . இருந்தாலும் நீ நிச்சயம் ஒரு சிறந்த  ஜோதிட கலைஞனாக வருவாய் என்பதில் சந்தேகம் இல்லை , காரணம் உனது ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமை பெற்று இருக்கிறது .

கேள்வி :

  6. ம‌றைவு ஸ்தான‌ ராசிக‌ள் எவையெவை.ஒரு இட‌த்தில் 2ம் பாவ‌த்தை ம‌றைவு என‌க்குறிப்பிட்டிருந்தீர்க‌ள்.அது ப‌ண‌ப‌ர‌ம் இல்லையா?

பதில் :

ஒவ்வொரு பாவகத்திர்க்கும் , அந்த பாவகத்தில் இருந்து 2,6,8,12 ம் வீடுகள் மறைவு  ஸ்தானம் என்பதே உண்மை , பொதுவாக ஜாதகம் பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் லக்கினத்திற்கு  மறைவு ஸ்தானமான 6, 8,12 வீடுகளுக்கு  மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள் , உண்மையில் ஒவ்வொரு பாவகத்திர்க்கு  2,6,8,12 ம் வீடுகள் மறைவு ஸ்தானம் என்பதை உணராத காரணத்தாலேயே ஜோதிடபலன்கள் சொல்லும் பொழுது , பலன்கள் வேறுபடுகிறது அல்லது தெளிவான ஜோதிட பலன்களை சொல்ல முடியாமல் போகிறது  .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


3 கருத்துகள்:

  1. ஓகே , உங்க கிட்ட ஒரு ஜாதகம் வந்துதன முதல இந்த ஜாதகம் ஒரு மனித பிறப்பு அல்லது மிருக பிறப்பு என்று எப்படி கண்டுபீடிபீர்கள். அதபோல் ஒரு ஜாதகம் அல்லது ஜாதகர் உயிர் உடன் இருகிறார் அல்லது அவர் இறந்து விட்டாரா என்று எப்படி கண்டுபீடிப்பிர்கள்.

    பதிலளிநீக்கு
  2. உடனடியாக பதில் சொல்லவேண்டும் எனில் ! ( நகைசுவையாக )

    என்னிடம் வரும் ஜாதகங்களை , வந்தவுடன் மனித பிறப்பா ? அல்லது மிருக பிறப்பா ? என்பதை அறிய , முதலில் வந்தவரின் கால்களை பார்ப்பேன் , 2 கால்கள் என்றால் மனித பிறப்பு என்று முடிவு செய்துகொள்வேன் , 4 கால்கள் என்றால் மிருக பிறப்பு என்று முடிவு செய்து கொள்வேன் , மேலும் ஜாதகர் உயிருடன் இருக்கிறர ? இல்லையா என்பதை அவர் வந்தவுடன் எனது குடும்ப நல மருத்துவரிடம் பரிசோதனை செய்து இதய துடிப்பு , நாடி துடிப்பை அறிந்து உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை உறுதி செய்து கொள்வேன் , இதுதான் எனக்கு தெரிந்த வழி , தங்களுக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள வேறு ஏதாவது வழி முறைகள் இருந்தால் கூறவும் , நான் உடனடியாக தங்களிடம் சீடனாக சேர்ந்து அதை முறைப்படி கற்று கொள்கிறேன் ?

    ஜாதக அமைப்பின் படி ( உண்மையாக )

    ஒரு ஜாதகர் இறந்து விட்டாரா ? இல்லையா என்பதை அறிந்து கொள்ள அந்த ஜாதகத்தில் இதற்க்கு முன் நடந்த திசை புத்தி , அந்தரம் சூட்சமம் ஆகியன லக்கினத்திற்கு ஆயுள் பாவகமான எட்டாம் பாவகம் , பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று , கோட்சார ரீதியாகவும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று , அந்த பாதக ஸ்தானம் மண் தத்துவமாக இருந்து பலனை நடைமுறையில் நடத்தியிருந்தால் ஜாதகர் உயிருடன் இல்லை என்பதை முடிவு செய்யலாம் .

    ஜாதகம் வந்த நேரத்தை ஜாமக்கோல் ஆருடம் கொண்டு கணித்து , ஜாதகர் உயிருடன் இல்லை என்பதை முடிவு செய்யலாம் .

    லக்கினம் நிர்ணயம் செய்யும்பொழுது பிழை ஏற்ப்பட்டால் , ஜாதகர் உயிருடன் இல்லை என்று முடிவு செய்யலாம் .

    துரியம் நன்றாக இயங்கினால் ஜாதகர் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பதை முடிவு செய்யலாம் .

    இதைபற்றி தெளிவாக தெரிந்துகொள்ள ஜோதிட சாஸ்திரம் பல வழிகளை சூட்சமாமாக வைத்து இருக்கிறது என்பது மட்டுமே உண்மை , எனது சிற்றறிவுக்கும் தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன் , இதைபற்றி அறிந்து கொள்ள தாங்களும் சற்றே முயற்சித்து பாருங்கள் .

    பதிலளிநீக்கு