வியாழன், 28 பிப்ரவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 3



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

தனுசு :

இங்கு அமரும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பின் , ஜாதகர் அடிப்படையில் இருந்தே உயர்ந்த குணங்களை பெற்று இருப்பார் , கவிதை , கதை , கட்டுரை இயற்றுவதில் வல்லமை உண்டாகும் , ஜாதகரின் மன உறுதி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் , ஜாதகரின் சிந்தனை ஆற்றல் மற்றவர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்ப்படுத்தும் , வருமுன் உணரும் சக்தி ஜாதகரின் மனதிற்கு இலகுவாக கிடைக்கும் , தனது அபரிவிதமான போதிக்கும் தன்மையால் பொது மக்கள் அனைவராலும் போற்றுதலுக்கு உரியவராக ஜாதகர் காணப்படுவார் , ஜாதகரின் வாழ்க்கை மற்றவருக்கு முன் உதாரணமாகவும் போற்றுதலுக்கு உரியதாகவும் அமைந்துவிடும் .

சந்திரன் இங்கு ஜாதகருக்கு சிறந்த குருவிற்கு உண்டான மனநிலையை தந்துவிடுகிறது , ஒருவரின் சுய திறமைகளை கண்டுணர்ந்து அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு தெரியும் படி ஆக்கமும் , ஊக்கமும் தரும் சிறந்த குருவாக விளங்குவார்கள் , மேலும் கண்டிப்பான மனநிலையும் , ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் தன்மையையும் தரும் , தனக்கு சரியென்பதை செய்யாமல் , உலகிற்கும் , தர்மத்திற்கும் சரியென்பதை செய்யும் மன பக்குவத்தை வாரி வழங்கும் , ஆன்மீக வாழ்க்கையிலும் , ஜோதிட கலையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் நிச்சயம் தருகிறார் சந்திரன் இங்கு நல்ல நிலையில் அமர்வது கோவிலில் ஏற்றும் அகல் விளக்கினை போன்றது .

மகரம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகர் நேர்மையில் சிறந்து விளங்கும் தன்மையை  தரும் , தான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் நேர்மையை  ஜாதகர் கடைபிடிப்பதால் , ஜாதகர் அனைவராலும் கவரபடுவார்  , பொதுமக்கள் சார்ந்த உணர்சிகரமான போராட்டங்களை நடத்தி  வெற்றி பெற செய்யும் , இங்கு அமரும் சந்திரன் பொதுவாழ்க்கையில் அப்பளுக்கற்ற தன்மையை தரும் , நேர்மையின் பிறப்பிடமாக  ஜாதகர் விளங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை , சற்றே நாத்திக போக்கை தரும் , இருப்பினும் மனித நேயம் கொண்ட  மனிதராக ஜாதகர் காணப்படுவார் , மண் தத்துவம் சார்ந்த தொழில்களில்  ஜாதகர் 100 சதவிகித வெற்றியை பெறுவார் , விவசாயம் , மண்  மனை , வண்டி வாகன செல்வாக்கை தந்து , ஜாதகரை சிறப்பான இடத்திற்கு  எடுத்து செல்லும் ஆற்றல் பெற்றது இங்கு அமரும் சந்திரன்.

மகர சந்திரன் அரசு துறையில் பல பெரிய பதவிகளை அலங்கரிக்க செய்யும்  , குறிப்பாக நிர்வாக துறையில் எவரும் எதிர்பாராத முன்னேற்றங்களை  வாரி வழங்கும் , தான் செய்ய வேண்டிய கடமைகளை  ஜாதகர் எவ்வித குறையும் இன்றி செய்யும் மன நிலையை தரும் , எனவே ஜாதகர் செய்யும் தொழில்கள் யாவும் வெற்றிமேல் , வெற்றி  தரும் , ஜாதகரின் நேர்மையான நன்னடத்தை வாழ்க்கையில் மிகப்பெரிய  முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும்  கொள்ள தேவையில்லை , பூமிக்கு அடியில் உள்ளவற்றை தனது மன  ஆற்றல் கொண்டு சரியாக உணர்ந்து சொல்லும் தனி திறமை  ஜாதகருக்கு  இயற்கையாகவே அமைந்து விடும் .

கும்பம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு , தனது எண்ண ஆற்றல் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பினை  பெரும் யோகத்தை வாரி வழங்கும் , ஜாதகர் தீட்டும்  திட்டங்கள் யாவும் பலிதம் ஆகும் , இதற்க்கு ஜாதகரின் அறிவாற்றல்  உறுதுணை புரியும் , கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம்  11 ம் வீடாக வருவது மிகசிறப்பான விஷயம் , இங்கு சந்திரன் அமர்வது  மிகுந்த நன்மைகளை  வாரி வழங்கும் , குறிப்பாக வியாபார அமைப்பை சார்ந்த  வெற்றிகளை  ஜாதகருக்கு நிச்சயம் வாரி வழங்கும் , ஜாதகரின்  ஸ்திரமான மன நிலைக்கு இங்கு அமரும் சந்திரனே முழு காரணம் .

மேலும் இந்த ராசிக்கு அதிபதியான சனி பகவான் நீதி நேர்மை , சுய கட்டுப்பாடு , வியாபாரத்தில் ஸ்திரமான வெற்றி தரும் அமைப்பு ,  தன்னம்பிக்கை  , எவருக்கும் அஞ்சாத மனநிலை , நேர்மை தவறாத குணம்  என ஜாதகரை குறுகிய காலத்தில் மிகுந்த அனுபவசாலியாக மாற்றும் வல்லமையை சந்திரன் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும்  ஜாதகரின் மன நிலையம் , எண்ண ஆற்றலும் ஒரே நேர்கோட்டில்   அமைகின்ற காரணத்தால் , ஜாதகரின் வெற்றியை எவராலும்  தவிர்க்க இயலாது , ஜாதக அமைப்பிலேயே லக்கினம் எதுவென்றாலும் இந்த கும்ப ராசி  சிறப்பாக  அமைவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்  .

மீனம் :

சந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு போதும் என்ற மன நிலையை தரும்  , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையை அதிக அளவில் நடைமுறை  படுத்தும் , அதிக முதலீடுகள் செய்யும் தொழில்களில் எல்லாம்  மிகுந்த வெற்றியை  தரும் , இதை போன்றே ஜாதகரின் உயர்ந்த  எண்ணங்கள்  யாவும் நிறைவேறும் , குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை  பெற்றுத்தரும் , இறை அருளின் முழு நிலை  பரிபூரணமாக  உணரவைக்கும் தன்மையை தரும் , ஜாதகரின் ஆன்மீக வாழ்க்கை  மிகுந்த உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் வல்லமை பெற்றது மீன சந்திரனனின் தன்மை .

மேலும் ஜாதகர் பரந்த மனப்பான்மையும் , நல்ல எண்ணங்களை கொண்ட மன  நிலையினாலும் , ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், சந்திரன் இங்கு நல்ல நிலையில்  அமரும் பொழுது ஜாதகருக்கு  ஆறாம் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட சிறப்பு தகுதிகள் இயற்கையாக கிடைக்க பெரும் யோகம்  உண்டு , மேலும் சிறந்த நிர்வாக திறமையை வாரி வழங்கும் , பெரிய நிறுவனங்கள் , வெளிநாட்டு நிறுவனங்கள் , அரசு துறையில்  நிர்வாகம் சம்பந்தபட்ட துறைகளில் நேர்மை மற்றும் கடமையில் சிறந்து விளங்கும் பல அன்பர்கள்  மேற்கண்ட மீன ராசி நல்ல நிலையில்  அமர பெற்றவர்களே , தங்க நகை வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியை  பெற்று தரும் இங்கு அமரும் சந்திரன் என்றால் அது வியப்பில்லை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக