சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் ஜோதிடர்களின் கணிப்பு ஜாதகர் சுக போக வாழ்க்கையையும் , பொருளாதார அமைப்பில் தன்னிறைவையும் , மனிதன் பூமியில் வாழ்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற்று நல்ல ராஜயோக பலன்களை பெறுவார் என்றும் , ஜாதகர் பெண் வசியம் கொண்டுள்ளவராக திகழ்வார் என்று சிலாகித்து சொல்லும் ஜோதிடர்களும் உண்டு .
இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இனி பார்ப்போம் , சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகனுக்கு பெண்களால் விரும்பபடுபவராகவும் , கவர்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் , தனது இனிமையான பேச்சு திறமையால் பெண்களை கவரும் தன்மை கொண்டவராகவும் , பெண்கள் ஆதரவு வாழ்நாள் முழுவதும் பெறுபவர் என்பது நிச்சயம், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , ஆனால் ஜாதகனுக்கு இங்கு அமரும் சுக்கிரன் பேரின்பம் எனும் ஞானத்தை தருவாரே தவிர சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவராக ஜாதகர் ஜீவித்து இருக்க வாய்ப்பு இல்லை.
மேலும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் , ஆடை ஆபரணம் , அலங்கார பொருட்கள் , பெண்கள் விரும்பி பயன்படுத்து பொருட்கள் சார்ந்த தொழில்களில் சிறப்பான முன்னேற்றத்தை தரும் , சுய ஜாதகத்தில் இந்த மீனம் ஜாதகருக்கு எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு விருத்தியையும் , முன்னேற்றத்தையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும் .
இதற்க்கு காரணம் மீனம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம் பாவகமாக இருப்பதும் , உபய நீர் ராசியாக அமைவதுமே இதற்க்கு முக்கிய காரணம் , மேலும் சுக்கிரன் நீர் ராசியில் அமரும் பொழுது ஜாதகரின் எண்ணம் , மற்றும் மனநிலை பரிசுத்தமானதாக இருக்குமே அன்றி தீய எண்ணங்களை கொண்டவராக இருக்க சிறிதும் வாய்ப்பு இல்லை , ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரின் மன நிலை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகை ஆகாது , சுக்கிரன் ஆட்சி பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது , ஜாதகர் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் , புதுமையான விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவரகாவும் , மாற்று சிந்தனை உள்ள சிறந்த மனிதராக காணப்படுவார்.
எனவே ஜாதகர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் பல புதிய பரிணாமங்களை காணமுடியும் , புதிய கண்டுபிடிப்புகள் , பிரச்சனைகளுக்கு வித்தியாசமான நல்ல தீர்வுகளை தரும் அறிவாற்றலை பெற்றிருப்பார் , ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெரும் , ஜாதகரை நாடி வருபவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் நிச்சயம் ஜாதகருக்கு உண்டு , மீனம் என்பது உபய ராசியாக வருவதால் இங்கு உச்சம் பெற்று அமரும் சுக்கிரன் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச நன்மைகளையே தருவார் என்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம் .
கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம் வீடான மீனத்தில் உச்சம் பெரும் சுக்கிரன், ஜாதகருக்கு நேர்மையான நிறைவான சுகபோக வாழ்க்கையுடன், நல்ல ஞானத்தையும் தருவார், எனவே ஜாதகர் தனக்கு கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழும் மன நிலையை பெற்று இருப்பார் , இந்த மன நிலையை பெற்ற நபர்களுக்கு இறை அருள் பரிபூரணமான சகல செல்வத்தையும் வாரி வழங்குகிறது, என்பதை மறுக்க இயலாது .
மனிதன் இந்த திருப்தியான மனநிலை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதே உண்மை , அப்படி பட்ட திருப்தியான மன நிலையை வழங்குவதில் நீர ராசியான மீனத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமரும் பொழுது நிச்சயம் வழங்குகிறார், ஆக சுக போகியான சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு நல்ல ஞானத்தை வாரி வழங்குவதில் தவறுவதில்லை என்பதை இங்கு பதிவு செய்ய ஜோதிடதீபம் கடமை பட்டுள்ளது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
அருமையான விளக்கம் ஐயா..
பதிலளிநீக்குஎனது ஜாதகத்தில் கன்னி லக்னத்தில் குரு அமர்ந்து அதற்கு ஏழாம் ஸ்தானமான மீனத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.வயது 19பது ஆகிறது.படிக்கும் மாணவன் நான்..நீங்கள் சொன்ன சில பலன்கள் ஒத்து வருகிறது.மீண்டும் நன்றிகள் ஆயிரம்.
எனது ஜாதகத்திலும் கன்னி லக்னத்தில் குரு அமர்ந்து அதற்கு ஏழாம் ஸ்தானமான மீனத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் நண்பரே நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநல்ல பதிவு .உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துல லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா?
ஏனென்றால் அது அவருக்கு 6 இடம் மற்றும் 12 , 6, 8 வீடுகளின் சம்பந்தம் உண்டாகிறது .இது என் நெடு நாள் ஐயம் .விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
நன்றி
ஈஸ்வா விஜய்