சனி, 9 மார்ச், 2013

7 ம் வீட்டில் அமரும் சனிபகவானால் திருமணம் தாமதமாக நடை பெறுமா ?




பொதுவாக களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவான் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தருவார் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, இது முற்றிலும் தவறான கண்ணோட்டம் என்பதே தீபத்தின் கருத்து ,  உண்மையில் கடகம் சிம்மம் எனும் இரண்டு லக்கினத்திற்கு மேற்சொன்ன விதி பொருந்தும் .

 உதரணமாக கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மகரத்தில் ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான் ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற கடக இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் ,  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , ஆக கடக லக்கினத்திற்கு மகரத்தில் அமரும் சனிபகவான் களத்திர பாவகத்தை வெகுவாக பாதிக்க செய்வார் என்பது உறுதியாகிறது .

அடுத்து சிம்மலக்கின அமைப்பை சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில்                ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான்          ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார், மேற்கண்ட அமைப்பை பெற்ற சிம்ம  இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் .

  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , மேற்சொன்ன அமைப்பின் படி கடக சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினத்திற்கு 7ம் பாவகத்தில் அமரும் சனி மட்டுமே திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை தரும் என்பதே உண்மை .

இதிலும் ஒரு விதி விளக்கு உண்டு மேற்சொன்ன கடக சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான மகரம் மற்றும் கும்பத்தில் , சாய  கிரகமான  ராகுவோ கேதுவோ அமர்ந்தால் களத்திர பாவகம் 100 சதவிகித வலிமை  பெற்று சிறப்பான நன்மைகளை தந்துகொண்டு இருக்கும் , இந்த நிலையை பெற்றவர்கள் சனி களத்திர பாவகத்தில் அமர்ந்ததை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை .

இங்கே சாயா கிரகமான ராகு கேது கிரகங்களுக்கு மட்டுமே முழு வலிமை உண்டு களத்திர பாவகத்தில் அமர்ந்த சனி பகவானால் எவ்வித நன்மை தீமை பலனையும் தர நிலைக்கு தள்ளி விடும் இந்த சாயா கிரகங்கள் , மேலும் களத்திர  பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்  என்பது சாயா கிரகங்களினால் உண்டாகும் கூடுதல் யோக பலன்கள் என்றால் அது மிகையாகாது .

கடக இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  கடகத்தில் அமர்ந்தால் ஜாதகருக்கு 19 வயதில் இருந்து 23 வயதிற்குள்  திருமணம் நடந்துவிடும் என்பதும் , அந்த திருமணத்தின் மூலம் ஜாதகர்  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை  துணை மிகுந்த யோகதாரியாகவும் , பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை தருபவராகும் இருப்பார் என்பது  கூடுதல் சந்தோஷமான தகவல் .

இதே சிம்ம இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  சிம்மத்தில் அமர்ந்தால் மிகவும் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை  மிகவும் சிறப்பாகவோ அல்லது தனது விருப்பபடியோ நடந்துவிடும் என்பதும் , திருமண வாழ்க்கையின் மூலம் ஜாதகர் அதிக படிப்பினையும் , உலக வாழ்க்கையின் புரிதல்களையும் , அறிவில் தெளிவையும்  பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை மிகுந்த புத்திசாலியாகவும் , அறிவாற்றல் நிரம்பியவராகவும் , எந்த ஒரு சூழ்நிலையிலும்  தனது வாழ்க்கை துணையை கைவிடாமல் காப்பற்றும் குணம் கொண்டவராகவும் இருப்பார் என்பது சிம்மலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு  ஒரு சிறந்த வர பிரசாதமாக கருதலாம் .

இந்த கடக சிம்ம லக்கினத்தை தவிர்த்து வேறு எந்த லக்கினம் என்றாலும் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவானால் எவ்வித தொந்தரவும் தடையும் இருக்காது என்பதே உண்மை , அப்படி இருந்து ஜாதகருக்கு  திருமணம் தமத நிலையை தருமாயின் , அந்த ஜாதகரின் களத்திர ஸ்தான  அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்க வேண்டும் என்பதும் , களத்திர ஸ்தானத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்பதே  சம்பந்தபட்ட பாவகத்திர்க்கு உண்டான சரியான பதில் சொல்ல உதவும் என்பதே உண்மை அன்பர்களே !

இதை விட்டுவிட்டு 7ல் சனி அமர்ந்தாலே தீமை என்று முடிவு செய்வது முற்றிலும்  தவறானது என்று ஜோதிட தீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

8 கருத்துகள்:

  1. sanikku simmam maha periya pagai veedu. athil amarnthal simma lakna jathakarin kunathai keduthu avarin ayulukkum kedu varum.

    ithai patri vilakkavum

    பதிலளிநீக்கு
  2. சனி தன் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு அந்த வீட்டிற்குரிய பலனை கொடுக்காமல், கெடுப்பாரா? ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்யமாட்டாரா? நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நமது ஊரில் இருக்கும் தனவந்தனால் நமக்கு என்ன நன்மை ? ஒன்றும் இல்லை , அதே சமயம் அந்த தனவந்தன் நமக்கு அறிமுகம் ஆனா நபர் என்றால் நமக்கு சிறு நன்மை சில நேரங்களில் கிடைக்கும் , நமது உறவினர் என்றால் அதைவிட அதிக நன்மை சில நேரங்களில் கிடைக்கும் , நமது உடன் பிறப்பு அல்லது தாய் தந்தையர் என்றால் மிகுந்த நன்மை என்ற அமைப்பில் பலன்களை நாம் அனுபவிக்கலாம் .

      அது போல் சனி ஆட்சி பெற்றால் என்ன ? உச்சம் பெற்றால் என்ன ? ஒருவேளை நீசம் பெற்றால் என்ன அது பொது காலபுருஷ தத்துவ விதி , நமது லக்கினத்திற்கு சனி பகவான் எந்த பாவகத்தில் அமர்ந்து எவ்வித பலனை நமக்கு தருகிறார் என்பதே முக்கியம், ஆக சுய லக்கினத்திற்கு நவ கிரகங்கள் எவ்வித பலனை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்து அதன் பலனை சரியாக எடுத்து உரைப்பதே ஒரு சரியான ஜோதிடனின் கடமை .

      நீக்கு
  3. kadaga Lagnam kadaga rasi, 4il sani (thulam rasiyil) ..age 31 .. yen thirumanam late aguthu..yepadipatta pen amaivaal..

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. முறைமுறையாக ஜாதக ஆலோசனை பெற்று நலம் பெறுக

      நீக்கு
  5. சிம்ம லக்கிணம். சனி 7ல்(மகரத்தில்) இருந்தால் சொந்தத்தில் பென்னிற்கு திருமணம் அமையுமா???

    பதிலளிநீக்கு