வெள்ளி, 29 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிலை என்ன ?





அன்பரே இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது .


கால புருஷ தத்துவ விதிப்படி ராசிகளை சரம் ஸ்திரம் உபயம் என்று மூன்று பிரிவுகளாக இயற்க்கை பகுத்து வைத்திருக்கிறது , இதில் சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக இயற்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது .

ஒருவருடைய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் எவ்வித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாக ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நன்மையை தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை , எனவே ஒருவருடைய ஜாதகத்தில் உடலாக , உயிராக , மனதாக  மதிக்கப்படும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

சர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தரவேண்டிய பதிப்புகளை நிலைத்து நின்று செய்யும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தாமே உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , மேலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை ஜாதகர் தவறவிடும் தன்மையை தரும் .

முன் பின் சிந்திக்காமல் செய்யும் காரியங்களால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை தரும் , திருமண தாமதத்தை தரும் , தொழில் முடக்கம் அல்லது வேலைவாய்ப்பற்ற நிலை தரும் , ஆக சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர்  இலக்கின வழியில் இருந்து நிலையான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்  .

ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை  விரைந்து செய்யும் அதுவும் ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில்  மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி சென்றுவிடும் , இதில் இருந்து  ஜாதகர் மீண்டு எழுந்து வர அதிக கால நேரத்தை எடுத்துகொள்ள வேண்டி வரும் , இந்த தீமையான பலன்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை தரும் நேற்றுவரை நன்றாக இருந்தவர் ஒரு இரவில் அனைத்தையும்  இழந்து , ஒன்றும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , இருப்பினும்  ஜாதகர் இவற்றில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பை நிச்சயம் தரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் தனக்கு நடக்கும் இன்னல்களை ஏற்படுத்தி கொள்ளும் தன்மையை தரும் , குறிப்பாக தனது கல்வி , தொழில் , குடும்ப வாழ்க்கை என்ற அமைப்புகளில் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை தரும் , ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்  பொழுது, விரைவான கெடு பலன்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும் , இருப்பினும் இவை அனைத்தும் ஜாதகரின் நன்மைக்கே என்பதை இறுதியில் ஜாதகர் உணரக்கூடும் .

உபய ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ,  ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை ஜாதகருடைய அமைப்பில் இருந்து குறைந்த இன்னல்களை அனுபவித்த  போதிலும் , ஜாதகரின் நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகள்  மூலமாகவே அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எனவே  ஜாதகர் தனது நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்  பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் ஏனெனில் ஜாதகர்  அவர்கள் வழியில் இருந்தே அதிகபடியான பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் தன்மையை ஜாதகரின் நண்பர்கள் , கூடாளிகள் , வாழ்க்கை துணையே நிர்ணயம்  செய்து ஜாதகரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குவார்கள் , குறிப்பாக மற்றவர் செய்யும் காரியங்களுக்கு ஜாதகர் வீண் பலி பாவங்களை அனுபவிக்க  வேண்டி வரும் , குறிப்பாக ஜாதகரின் பொது வாழ்க்கை , தொழில் மற்றும்  திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிட அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தும் , தனது நண்பர்கள் , கூட்டாளிகள் , வாழ்க்கை துணையின் செயல்பாடுகள்  மூலம் ஜாதகர் 100 சதவிகித தீமையான பலனையே அதிகம் அனுபவிக்க  வேண்டி வரும் என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம் , இவரின் தொடர்  தோல்விகளுக்கு காரணமாக மேற்க்கண்டவர்களின் தொடர்பே காரணமாக அமைந்துவிடும்  என்பதே உண்மை .

சர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல்  இருப்பதாலும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் சிந்தனையினாலும் தனக்கு இன்னல்களை தானே தேடி கொள்வதாலும் , உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் பாதக ஸ்தான  பலனை அனுபவிக்க வேண்டி வரும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


1 கருத்து: