வெள்ளி, 22 மார்ச், 2013

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள் !



கேள்வி :

ஐயா வணக்கம்,


ஒருவரது ஜாதகத்தில் ராசிச்சக்கரத்தில் (லக்ன பாகை அடிப்படையில் பாவகசக்கரப்படியும்) குருவிற்கும் சனிக்கும் தொடர்பு ஏற்பட்டால் அதாவது பரஸ்பர பார்வை, ஒரே பாவகத்தில் இருத்தல்,ஒரே சாரத்தில், பரிவர்தனை இப்படி ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் என ஏதோஒரு புத்தகத்தில் படித்தேன். இது சரியா? சரி எனில் இதனால் ஜாதகர் அடையும் தீமைகள் என்ன?

இதில் ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா?அதாவது சனி நீசமாகி பார்ப்பது அல்லது சனி மறைந்து பார்ப்பது சனியோடு சாயாகிரக அமர்வு இப்படி ஏதேனும் காரணத்தால் இந்த தோஷம் இல்லாமல் போகுமா? மேலும் சனி நல்ல ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் இந்த தோஷம் உண்டா?



பதில் : 

சனிபகவனுக்கும் , குருபகவானுக்கும் எதாவது ஒருவகையில் ( சேர்க்கை , பார்வை , சார தொடர்பு ) தொடர்பு பெறுவதால் அது பிரம்மஹத்தி தோஷத்தை தந்துவிட வாய்ப்பு இல்லை என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , பொதுவாக காலபுருஷ தத்துவ அமைப்பின் படி 9,12 க்கு உடைய குருபகவானும் , 10, 11 க்கு உடைய சனிபகவானும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுவதும் , சமசப்த பார்வை பெறுவது நன்மையே தரும் .

பாக்கிய விரைய ஸ்தான அதிபதியும் , ஜீவன லாப ஸ்தான அதிபதியும் சேர்க்கை பெறுவது ஜாதகத்திற்கு நன்மையை தானே தரும் , பாக்கிய அமைப்பில் இருந்து சிறந்த வெற்றிகளையும் , ஜீவன அமைப்பில் இருந்து சிறந்த தொழில் அமைப்பையும் , லாப ஸ்தான அமைப்பில் இருந்து தொடர் வெற்றி மற்றும் லாபங்களையும் தந்துகொண்டேதான் இருக்கும் , விரைய பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகளில் இருந்து மிகுந்த நன்மைகளையும் , அதிக லாபத்தையும் வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஒரு வேலை ஜாதகர் சுயஜாதாக அமைப்பின் படி 12ம் பாவக அமைப்பில் இருந்து தீமையான பலனை பெறுகிறார் என்று வைத்து கொண்டாலும் அது வெறும் 33 சதவிகித தீமையை மட்டுமே தரும் என்பதே உண்மை .

மேற்சொன்னவை அனைத்தும் பொது பலன்களே , சுய ஜாதகத்தை வைத்தே குரு சனி  சேர்க்கை , பார்வை  , சார தொடர்பு போன்றவற்றின் துல்லியமான பலன்களை  நிர்ணயம் செய்ய இயலும் , மேலும் இந்த இருகிரகங்களுடன் வேறு  ஏதாவது கிரகங்கள் தொடர்பு பெறுகிறத என்பதை சரியாக கவனித்து பலன் காணுவது அவசியம் .

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் அடையும் தீமைகள் முதன்மையானது  நல்ல  பெற்றோர்களை ஜாதகர் பெற வாய்ப்பு இல்லாமல் போய்விடும் , இரண்டாவதாக  சிறப்பாக வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை  தரும் , நல்ல நண்பர்கள் சேர்க்கையை தராது , தனது உடல்நிலையை  தானே தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஜாதகர் இறங்கிவிடுவார் , நல்ல வாழ்க்கை துணை அமையாது , குழந்தை பாக்கியத்தில்  தடையும் , புத்திர சோகத்தையும் தந்துவிடும் .

பிரம்மஹத்தி தோஷம் என்பது , லக்கினம் மற்றும் களத்திர பாவகம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம்  பெறுவதற்கு நிகரானது என்பதே உண்மை , இந்த நிலை  100000 ஜாதகங்களில் ஒரு ஜாதகத்தில் மற்றுமே இருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய  விஷயம் .

இதில் விதிவிலக்கு என்று பார்த்தால் மேற்கண்ட பாவகத்துடன் சாய கிரகமான  ராகு கேது சம்பந்தம் பெற்று , குறிப்பிட்ட பாவகத்திர்க்கு 100 சதவிகித  நன்மையை செய்தால் மட்டுமே ஜாதகருக்கு அவயோக பலன்கள் குறைந்து  யோக பலன்கள் நடைமுறையில் அனுபவிக்க முடியும் , அதுவும் சம்பந்த பட்ட  ராசி என்ன தத்துவ அமைப்பில் வருகிறதோ அதை பொறுத்தே யோக பலன்களின் தன்மை இருக்கும் .

மேற்சொன்ன அனைத்தும் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும்  , பொதுவாக பலன் சொல்வது என்பது தெளிவான ஜோதிட பலன்களை  உணர வாய்ப்பளிக்காது என்பதே உண்மை அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


2 கருத்துகள்: