வியாழன், 11 ஏப்ரல், 2013

காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்த்து இல்லற வாழ்க்கை அமைத்து கொள்வது நன்மை தருமா ?



பொதுவாக காதலர்கள் பெற்றோர்  அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளும் முன், சில பெற்றோர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி ஜாதக பொருத்தம் காண எங்களிடம் வருவது உண்டு, தனது வாழ்க்கையை தனது விருப்பபடி அமைத்துகொள்ளும் காதலர்களின் ஜாதக அமைப்பில் , குடும்ப ஸ்தானமோ அல்லது களத்திர ஸ்தானமோ ஒன்று, ஏதாவது ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கிறது ,அல்லது மேற்கண்ட இரண்டு பாவகங்களும் பாதிக்க பட்டு இருக்கின்ற நிலையில் தான் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ள படுகிறார் .

இப்படி பட்ட சூழ்நிலையில் காதலர்களின் சுய ஜாதகத்தில்,  இல்லற வாழ்க்கையை நல்ல முறையில் அமைவதற்கு வழி கோலும் பாவகங்கலான, குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்க பட்டு இருந்த போதிலும் , லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும் இரண்டு பாவகங்கள் இரண்டும் வலிமை பெற்று இருப்பது அவசியம் , ஏனெனில் தான் அமைத்து கொண்ட வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொள்ள இந்த இரண்டு பாவகங்கள் 100 சதவிகிதம் உறுதி புரியும் , வாழ்க்கையில் எவ்வித சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் மன துணிவுடன் எதிர்கொண்டு , காதல் திருமண வாழ்க்கையில்  வெற்றி பெரும் யோகத்தை தரும் .

மேலும் தனது குலம் விளங்க நல்ல வாரிசு அமையும் , இதன் மூலம் சமுதயத்தில் காதல் தம்பதியரின் வாழ்க்கை மேலும் மேலும் முன்னேற்றம் பெரும் , மதிப்பு ,மரியாதை ,அந்தஸ்த்து , கௌரவம் போன்றவை இயற்கையாக அமையும் , தம்பதியருக்கு  குடும்ப வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் உண்டாகும் . எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும்  அன்பர்களின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம், ஏதாவது  ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கும் என்பது உறுதி. ஆனால் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம்  பாதிக்கபடாமல் இருப்பது அவசியம் .

ஒருவேளை காதல் திருமணம் செய்து கொள்ளும் அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும்  இரண்டு பாவகங்களும் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகரின் காதல் வாழ்க்கையும் , காதல் திருமண வாழ்க்கையும்  மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் , இதனால் காதலர்களின்  மன உறுதி உடைபடும் , குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகும்  சூழ்நிலையை, திருமணத்திற்கு பிறகு வெகு விரைவில் தரும் . அப்பொழுது காதலர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் காணும்  மன நிலையையும் , விட்டுகொடுக்கும் மனப்பக்குவத்தை இழந்து தங்களது  காதல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதே உண்மை .

நல்ல வாழ்க்கை துணை ஒருவருக்கு அமைவது என்பது மற்றவர்களால் நிர்ணயம் செய்யபடுவதில்லை இல்லை என்பதை அனைவரும் இந்த இடத்தில் உணருவது  அவசியம், தனது வினை பதிவிற்கு ஏற்ற விதத்திலேயே  இயற்கையால் நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை , ஒருவருக்கு நல்ல வாழ்க்கை துணை  , நல்ல கூட்டாளிகள் , நல்ல நண்பர்கள் , சிறந்த மக்கள் ஆதரவு அமைவதற்கு , அவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் .

இதை போன்றே நல்ல குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமானம் , இனிமையான  பேச்சு திறன் , வாழ்க்கையில் அனைத்தையும் அனுசரித்து செல்லும்  மன பக்குவத்தையும் , அடிப்படை கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், தனது வாழ்க்கை துணையுடன் இனிமையான குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் அமைப்பையும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவக வழியில் இருந்தே  நடை பெரும், எனவே மேற்கண்ட குடும்ப ஸ்தான அமைப்பில்  இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற வேண்டும் எனில் குடும்ப  ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் சுய ஜாதகத்தில் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது  அவசியம் .

ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் நல்ல நிலையில்  இருந்தால் ஜாதகர் திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கபட்டும் , ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதிக்கபட்டு  இருந்தால், ஜாதகர் திருமணம் தமது விருப்பபடி காதல் திருமணமாகவும்  அமையும், எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் குடும்ப களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று வாழ்க்கை இனிமையாக வாழும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது மிகுந்த நன்மை தரும் , காதல் திருமணம் ஆரம்பத்தில் துன்பமாக இருந்தாலும் சில காலங்களுக்கு பிறகு வாழ்க்கை  மிகவும் இனிமையானதாக மாறிவிடும், என்ற உண்மையை காதல் திருமணம்  செய்துகொண்ட தம்பதியர் இருவரும் உணருவது காதல் திருமண வாழ்க்கை 100 சதவிகித வெற்றி பெற உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


1 கருத்து:

  1. அய்யா எனக்கு கேள்வி
    என் ராசி கடகம் பிறந்த தேதி 8/11/1990
    நேரம் 11.45 இரவு
    நான் காதலிக்கும் பெண்ணின் ராசி விருட்சகம் பிறந்த தேதி 4/6/1993 நேரம் 9.52 காலை

    எனது வீட்டில் காதலிப்பதை கூறி சம்மதம் வாங்கிவிட்டேன் இருப்பினும் பெண்ணின் தாயார் சம்மதம் தரமறுக்கிறார்கள் எனது ஜாதகத்தில் ராகு கேது இருப்பதால் கொடுக்க மறுக்கிறேன் என்கிறார்

    என்னுடைய ஜாதகத்தில் ராகு 7ல் கேது 1ல் இருக்கிறது
    எங்கள் திருமணம் பெற்றோர் ஆசியுடன் நடக்கவேண்டூம் என்று விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு