சனி, 9 மார்ச், 2013

ரிஷப ராசி லக்கினமும், பிரதோஷ வழிபாடும் சம்பந்தம் உண்டா ?



ஜோதிட கலை என்பது மிகுந்த புனிதமான கலை என்றால் அது மிகையாகாது , இந்த ஜோதிட கலை என்பது இருபக்கம் கூர்முனை கொண்ட கத்தியை போன்றது , முறையாக இதை பயன்படுத்தவில்லை என்றால் இது ஜோதிடம் காண வந்தவரையும் பாதிக்கும் , ஜோதிடம் சொல்பவரையும் கடுமையாக பாதிக்கும் .

இன்று தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விஷயம் , ஜோதிடர்கள் அறியாமல் செய்யும் விஷயம் மக்களை வெகுவாக பதிப்பதை தெளிவாக உணர முடிந்தது , அவர் சொன்ன விஷயம் தன்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணிற்கு 28 வயது என்றும் , அந்த பெண் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்றும் இதுவரை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என்பதாகவும் , தான் பிரதோஷ வழிபாடு செய்ய சொன்னதால் திருமணம் ஆனதாகவும் , இதற்க்கு காரணம் அந்த பெண்ணின் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்பதால் பிரதோஷ நந்தி வழிபாடு செய்ய சொல்லி பரிந்துரை செய்ததாகவும் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணராமல் கதை விட்டு கொண்டு இருந்தார் .

ஒருவர் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்கினத்தை கொண்டு இருந்தால் , ஜாதகரின் எண்ணமும் செயலும் ஒரு பசுவின் குனாதிசையத்துடன் ஒருமித்து இருக்கும் , இதற்கும் நந்திபகவானுக்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உணராமலேயே , மேலும் ரிஷபம் கால புருஷ தத்துவத்திற்கு இரண்டாவது இடத்திலும், ஸ்திர  மண் தத்துவ ராசியாகவும் , வருகிறது எனவே ஜாதகி பூமியை போன்று ( மண் தத்துவம் என்பதால் ) பொறுமையான குணத்தை பெற்றவராகவும் , சிறந்த உடல் நிலையை கொண்டவராகவும் , சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்றவராகவும் இருப்பார் என்பது ரிஷப ராசி லக்கினத்திற்கு உண்டான சூட்சம உண்மை , ஜோதிடர் இதை உணருவது அவசியம் .

மேலும் ஜாதகிக்கு திருமணம் 28 வயது வரை நடைபெறவில்லை என்பதிற்கு உண்டான காரணம் பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மிதுனம் பாதிப்பு அடைந்திருந்தாலோ , அல்லது களத்திர ஸ்தானமான 7ம் பாவகம்  விருச்சகம்  பாதிப்பு அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் தாமத படும் , உதாரணமாக மிதுனம் உபய காற்று ராசியாக வருவதால் 2ம் பாவகம் பாதிக்கப்படும்பொழுது , ஜாதகி தனக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையை தனது வாயினாலேயே கெடுத்து கொள்வார்  அல்லது ஜாதகியுடன் பிறந்த சகோதர அமைப்பை சார்ந்தவர்கள் இவரது  திருமணத்திற்கு பெரும் தடையாக இருப்பார்கள் .

ஒருவேளை 7ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் , இது ஸ்திர நீர் தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகியின் எண்ணம் மற்றும்  கற்பனைக்கு ஒத்துவராத வரன் வருவதால் ஜாதகி இதை தவிர்த்து கொண்டே இருப்பார் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்களின் துர் போதனையால் , திருமணம் தடை பெற்றுகொண்டே இருக்கும் , இதுவே ஜாதக ரீதியான  உண்மை காரணம், பிரதோஷ நந்தி வழிபாட்டிற்கும் ரிஷப ராசி லக்கினத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை .

இறை வழிபாடு என்பது தனது ஆன்மாவை உணரும் தன்மையாகவும் , அறிவில் விழிப்புணர்வு பெறுவதற்கும் வழிபட்டு ஸ்தலங்கள் வழியாக நமக்கு  கிடைக்கும் ஒரு சூட்சம தொடர்பு நிலையே என்பதை உணருவது அவசியம் , இவர் சொல்வதை பார்க்கும் பொழுது ரிஷப ராசி ,லக்கினத்தை பெற்றவர்கள் அனைவரும் நந்தி வழிபாடு செய்தால் போதும் திருமணம் உடனடியாக  நடந்துவிடும் என்பதாக இருக்கிறதே ? இறை வழிபாட்டின் தன்மையை  உணராது செய்யும் வழிபாடுகள் அனைத்தும் கடலில் பயன்படாமல் கலக்கும் நல்ல குடிநீரை போன்றதே .

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

1 கருத்து: