வியாழன், 11 ஏப்ரல், 2013

பூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆண் வாரிசு யோகமும் !




சுய ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது . 

இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் )  குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து  அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .

மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை .

ஆனால் பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் சர ராசியாக இருப்பின் தம்பதியர் இருவரின் உடல்  ரீதியான மருத்துவ காரணங்களாலும் , குலதேவதை நிந்தனையின் காரணங்களாலும் , முன்னோர்கள் ,சாதுக்கள் , ஐந்தறிவு ஜீவன்களின் சாபத்தாலும், மற்றும் பெண்களின் சாபத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் ஜீவிக்கும் இடமும் அல்லது தனது  பூர்வீகத்தில் குடியிருப்பதாலும் , தம்பதியரின் விருப்பத்தின் பேரில் குழந்தை பிறப்பை தாமதபடுத்துவத்தின் காரணத்தாலும், தம்பதியர் இருவரும் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணத்தாலும் , தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தவறான போதனை மற்றும் வழிகாட்டுதலின்  காரணத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் உபய ராசியாக இருப்பின் ஜாதகர் மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதிகளாலும் , மற்றவர் பொருளுக்கு விருப்பபட்டு அவர்களை ஏமாற்றுவதினாலும் , தனது பெற்றோரை , சகோதரர்களை , ரத்த உறவுகளை ஏமாற்றுவதினாலும் , தனது குல தேவதையை முறையாக வழிபாடு செய்யாமல் விடுவதினாலும் , பித்ரு கடமைகளை முறையாக கடைபிடிக்காமல் விடுவதினாலும், தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தின் தன்மையை உணர்ந்து , முறையான செயல்பாடுகளையும் , வழிபாடுகளையும் சரியாக செய்தால் அவர்களுக்கு உறுதியாக இறை அருளின் கருணையினால் தனது குலம் விளங்க புத்திர சந்தானம்  உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது ஜோதிடதீபத்தின் கருத்து , ஒருவரது சுய ஜாதகத்தில் இந்த புத்திர ஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் அடுத்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

1 கருத்து:

  1. வணக்கம் ,
    நல்ல பதிவு. பூர்வ புண்ணியம் நன்றாக இல்லாதவர்களுக்கும் ஆண் வாரிசு ஏற்படுகிறதே ? அதேபோல் ஒரு பாவத்திற்கு மூண்று கரஹதுவும் உள்ளதால் ஒன்று பாதிக்கும் பொது மற்ற இரண்டும் நான்றாக இருக்குமா அல்லது அதன் அதிபதியை பொருது மாறுகிறத?
    2.ஒருவர் ஜாதகப்படி வெளி நாடுகளில் தான் வாழும் அமைப்பு இருந்து அவருக்கு ஆண் குழந்தை ஏற்படுமாயின் அவரது பூர்வ புண்ணியம் என்ற வகையில் பதிப்பு உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
    2.மற்றொரு காரகமான புத்திசாலிதனம் எவ்வாறு அமையும் ?

    நன்றி

    ராஜா இராஜேஸ்வரி விஜய்

    பதிலளிநீக்கு