சிறந்த கேள்வியாக இதை ஜோதிடதீபம் கருதுகிறது .
ஒருவாருடைய சுய ஜாதகத்தில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் , குரு , சுக்கிரன் , புதன், சந்திரன் ஆகியோர்களின் திசை மற்றும் புத்திகள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையையும், யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பதாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பரவலான கருத்து உண்டு , இதை அடிப்படையாக கொண்டு ஒருவருக்கு ஜாதக பலன்களை சொல்வது என்பது அந்த ஜாதகருக்கு சரியான வாழ்க்கை பாதையை அமைத்து தர வாய்ப்பு என்பது மிக மிக குறைவே .
எடுத்து காட்டாக சில அன்பர்களின் ஜாதகத்தில் இயற்க்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆட்சியாகவோ , உச்சமாகவோ அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலாமல் தவிப்பார் , மேலும் சிலர் ஜாதகத்தில் இயற்க்கை பாவிகளான சனி,செவ்வாய் ,சூரியன் பகை , நீச்சம் அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் மிகசிறந்த யோக பலன்களை அனுபவிப்பார் , மேற்கண்ட விஷயத்தை பாரம்பரிய ஜோதிட முறையில் ஆய்வுக்கு எடுத்துகொண்டு பலன் காணும்பொழுது இறுதியில் அளவுக்கு அதிகமான குழப்பமே மிச்சும் , ஒரு தெளிவான முடிவுக்கு வருவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும் .
ஜோதிடதீபத்தின் கருத்துப்படி எந்த ஒரு கிரகமும் சுப அசுப கிரகமல்ல என்பதை அனைவரும் உணருவது அவசியம் , குறிப்பாக நவகிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்தில் உடல் ,உயிராகிய லக்கினத்தை அடிப்படையாக கொண்டே , 12 பாவக வழியில் இருந்து சுப அசுப பலன்களை வழங்குகிறது , இங்கே ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் எப்படிபட்ட நிலையில் இருக்கின்றன என்பதை தெளிவாக ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்தால் மட்டுமே குறிப்பிட ஜாதகருடைய யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்ய இயலும் .
ஒரு பாவகத்தின் பலனை நிர்ணயம் செய்வதில் நவகிரகங்களின் அமர்வு நிலை , பார்வை நிலை , சேர்க்கை என்ற பல விஷயங்களை எடுத்துக்கொண்ட ஆய்வு செய்தாலும் கூட, ராகு கேது என்ற இரண்டு கிரகங்களுக்கு மட்டும் விதி விளக்கு உண்டு, ராகு கேது எனும் இரண்டு சாய கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் பலனை முழுமையாக ஆளுமை செய்யும் , அந்த பாவகத்தில் அமர்ந்த , பார்த்த , சேர்ந்த எந்த ஒரு கிரகத்திற்கும் நன்மை தீமை செய்யும் வலிமை கிடையாது , ஆக ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரண்டு கிரகங்கள், தான் அமரும் இரண்டு பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்துவிடும் , இதற்க்கு மேற்கொண்டே மற்ற பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்து பலன் காணுவது, ஜாதகருக்கு
சரியான பலனை சொல்ல உதவும்.
ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்து கொண்ட பின் , 12 பாவகங்களில் நல்ல வலிமையுடன் இருக்கும் பாவகங்கள் எவை எவை , பாதிப்படைந்துள்ள பாவகங்கள் எவை எவை என்பதை வகை படுத்திகொண்டு , நவ கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியன எந்த எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை உணர்ந்து , அதற்க்கு உண்டான பலாபலன்களை தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்களின் தன்மையையும் தொடர்பு படுத்தி பலன் காணும் பொழுது , ஜாதகருக்கு தெள்ள தெளிவான பலனை மிக சரியாக சொல்ல இயலும், ஜாதகரும் தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்ள இயலும் .
எடுத்துகாட்டாக :
மேற்கண்ட ஜாதகருக்கு , ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வோம் ,
ஜாதகரின் லக்கினம் : மீனம்
ஜாதகரின் ராசி : மீனம்
ஜாதகரின் நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம் .
ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :
1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,5,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் யோக பலன்களை தரும் ஜாதக அமைப்பில் 10பாவகங்கள் வலிமையுடன் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.
ஜாதக அமைப்பில் பாதிக்கபட்டு இருக்கும் பாவகங்கள் :
6,12ம் வீடுகள் விரைய பாவகமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தீமையான பலன்களை தரும் இவருடைய ஜாதக அமைப்பிற்கு . மேலும் 12ம் பாவகம் சர மகர ராசியாக அமைவதால் தான் தரவேண்டிய கெடுதலான பலன்களை ( அதாவது விரையத்தை ) ஜீவன வழியிலும் , தனது தகப்பனார் வழியிலும் விரைந்து தரும் , இதனால் ஜாதகரின் மன நிம்மதி , பொருள் விரையம் , ஜீவன தடைகள் , தகப்பனார் வழியில் இருந்து வரும் அதிக இன்னல்கள் என்ற வகையில் ஜாதகரை கடுமையாக பாதிக்கும் , மேற்கண்ட பலன்கள் மிக விரைவாக ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் நடை பெரும் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம் .
மேலும் இந்த தீமையான பலன்கள் ஜாதகருக்கு குரு திசை,புத்தி,
அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெறும் மற்ற கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் அனைத்தும் 6,12ம் வீடுகள் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாத காரணத்தால் இந்த பாதிப்புகள் ஜாதகருக்கு மற்ற திசை புத்திகளில் நடைபெறாது என்பதை கருத்தில் கொள்வது சிறப்பு .
ஜாதக அமைப்பில் மிகவும் சிறப்பாக இருக்கும் பாவகம் :
1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் , இந்த பாவகத்தின் பலன்களை ஜாதகருக்கு அடுத்து வரும் கேது திசை நடைமுறைக்கு கொண்டு வருவாதால் ஜாதகர் இலக்கின வழியில் இருந்தும் , வருமானம் குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும் , திடீர் அதிர்ஷ்டத்தின் மூலமாகவும் , தனது முற்ப்போக்கு சிந்தனையாலும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொள்ளும் தன்மையினாலும் ஜாதகர் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், மேலும் 11ம் பாவகம் உபய நெருப்பு தத்துவ ராசியான தனுசுவில் தொடங்கி, சர மண் தத்துவ ராசியான மகரத்திலும் வியாபித்து இருப்பதால் , ஜாதகருக்கு கேது திசை மிகுந்த நன்மையான பலன்களையே தரும் , இந்த ஜாதகருக்கு கேது எனும் பாவ கிரகம் யோகமான பலன்களையே தருகிறது.
ஆக ஒருவருடைய ஜாதக பலன்களை நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவக வலிமையுடனும், தனது திசையில் தான் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்களை தருகிறது என்பது மேற்கண்ட அமைப்பில் இருந்து உறுதியாகிறது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969
jothidadeepam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக