வியாழன், 17 அக்டோபர், 2013

ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ?


ஆட்சி பெற்ற சனி திசை யோக பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்குமா ? என்ற கேள்விக்கு கிழ்க்கண்ட அன்பரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 2 ம் பாதம் 


நடப்பு திசை சனி திசை ( 01/09/2013 முதல் 01/09/2013 வரை )
நடப்பு புத்தி  சனி புத்தி ( 01/09/2013 முதல் 04/09/2016 வரை )

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் சிறப்பு என்றும், அப்படி அமர்ந்த கிரகத்தின் திசை வரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமும் தன்னிறைவான பொருளாதார சேர்க்கையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, உண்மையில் சுய ஜாதகத்தில் ஒருகிரகம் ஆட்சி உச்ச நிலையில் அமர்ந்து, அந்த கிரகத்தின் திசை வரும்பொழுது ஜாதகனுக்கு முன்னேற்றத்தை வழங்குமா என்பதை பற்றி இன்றைய ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை ஆனது சுய ஜாதகத்தில் சனி கும்பத்தில் ஆட்சி நிலை பெற்று அமர்ந்திருக்கு நிலையில் தனது திசை நடத்துகிறது இருப்பினும் இந்த ஜாதகருக்கு நடைபெறும் சனிதிசையால் அதிக இன்னல்களையும் இழப்புகளையுமே பலனாக தருகிறது, மேலும் தொழில் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பின்னடைவும், மன நிம்மதி இழப்புமே மிஞ்சி இருக்கிறது  இதற்க்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சனி ஆட்சி நிலையில் அமர்ந்த பொழுதிலும், ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் சனி திசை 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் ( உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானம் )சம்பந்தம் பெற்று பலனை தருவதே மேற்கண்ட இன்னல்களும், துன்பங்களும் ஏற்ப்பட காரணம் , ஒருவருக்கு நடக்கும் திசை ஆனது பாதக ஸ்தானம் பலனை தரும் பொழுது ஜாதகரின் நிலை சற்றே கவலைப்படும் விதத்தில் தான் இருக்கும், அந்த கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் சரி வேறு சிறப்பு வாய்ந்த நிலையில் இருந்தாலும் சரி , இவரது ஜாதகத்தில் சனி ஆட்சி பலம் பெற்றிருப்பது நன்மை என்றாலும் கூட, தான் ஏற்று நடத்தும் பாவக பலன் என்று பார்க்கும் பொழுது பாதக ஸ்தான பலனை ஏற்ப்பது சிறப்பான விஷயம் அல்ல , எனவே இந்த ஜாதகர் சனி திசை, சனி புத்தி, சனி அந்தரம் நடை பெரும் காலங்களில் பாதக ஸ்தான பலனையே அனுபவிக்க வேண்டி வரும் என்பதே உண்மை .

மேலும் இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடாக வருவதும், அது உபய ராசியாக இருப்பதும் ஜாதகர் தனது முன்னோர்களின் வினை பதிவினை தான் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை தரும் என்பது உறுதியாகிறது , எனவே தனது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை முறையாக செய்யும் பொழுது ஜாதகருக்கு தீமையான பலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், மேலும் நல்ல ஆன்மீக பெரியவர்களிடம் தீட்சை பெறுவதும் , வயது முதிர்ந்த பெரியவர்களின் ஆலோசனை படி நடப்பதும் ஜாதகருக்கு சனி திசை தரும் பாதக ஸ்தான பலன்களில் இருந்து மீண்டு நன்மைகள் உண்டாகும்.

இதற்க்கு முன் நடந்த குரு திசையும் ஜாதகுக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக அமைப்புடன் தொடர்பு பெற்று தீமையான பலனை தந்தது வருந்த தக்க விஷயமே , எனவே ஜாதகர் குரு திசையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறவில்லை என்பது உறுதியாகிறது , இனி வரும் காலங்களில் ஜாதகர் சனி திசை சனி புத்தி வரை புதிய முயற்சிகளில் இறங்காமல் , அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பதே நல்லது மேலும் பாதக ஸ்தானம் என்பது ஒரு வகையில் களத்திர ஸ்தானமாக வருவதால் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சிறு சிறு இன்னல்களை அனுசரித்தும், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் வழியில் இருந்து வரும் இனல்களை அனுசரித்தும் செல்லும் பொழுது , பாதக ஸ்தான பலன்கள் குறைந்து அந்த பாவக வழியில் இருந்து நன்மைகள் நடைபெறும்.  

பொதுவாக ஒரு கிரகம் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துகொண்டு அந்த கிரகத்தின் திசை மிகப்பெரிய நன்மையை செய்து விடும் என்று கணிதம் செய்வது ஜோதிடத்தின் அடிப்படை கூட தெரியாத நபர்கள் செய்யும் ஒரு வேலை என்பதை உணர்வது அவசியம், இதை போன்றே ஒரு கிரகம் நீச்சம் பகை பெற்று இருக்கிறது என்றால் அந்த கிரகத்தின் திசை தீமை செய்யும் என்று முடிவு செய்வதும் தவறான அணுகு முறையே என்றால் அது மிகையில்லை.

ஒரு கிரகத்தின் திசை எவ்வித பலன்களை தருகிறது என்று அறிய மூன்று விதிகளை உணர்வது அவசியம் அவையாவன :

1 ) நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது?
2 ) அந்த பாவகம் சுய ஜாதகத்தில் நன்மையை தருகிறதா? தீமையான பலன்களை தருகிறதா ?
3 ) அந்த பாவகத்திர்க்கு தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் நன்மையை தருகிறதா? தீமையை தருகிறதா? 

என்ற விஷயங்களை நிர்ணயம் செய்து விட்டால் ஒருவருக்கு நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகின எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை பற்றிய தெளிவான மிக மிக துல்லியமான பலன்களை நிர்ணயம் செய்துவிட முடியும், இதை ஜாதகர் பின் பற்றி நடந்தால் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் யோக காலமே.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696






6 கருத்துகள்:

  1. அண்ணா,
    நில நடுக்கம், சுனாமி போன்ற வற்றின் போது ஒரே நேரத்தில் ஆயிர கணக்கான மக்கள் இறக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாதகமான திசா புக்தி தான் நடை பெறுமா ?

    பதிலளிநீக்கு
  2. ராகு கேது என்பது உண்மையில் என்ன?இவர்கள் ஏன் எப்போதும் ரிவர்ஸ் கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ?
    அறிவியல் ரீதியாக விளக்கம் தர முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவுங்க வண்டியில முன்னாடி போற கியர் இல்ல பேபி

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்!

    சிம்ம ராசிக்கும் (பூரம்), கன்னி ராசிக்கும் (உத்திரம்) ஏழரைசனி எப்போது முடிவடைகிறது?

    பதிலளிநீக்கு