பின்தொடர...

Wednesday, October 30, 2013

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?நிச்சயமாக சொல்ல இயலும் அன்பரே !

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான வருமானம் பெற களத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது அவசியம், அதாவது களத்திர ஸ்தானம் வெளிவட்டார தொடர்புகளையும், பொதுமக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தையும், வேற்று இன மக்கள் மூலம் வரும் லாபத்தையும் குறிக்கும் எனவே சுய ஜாதகத்தில், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சர ராசிகளுடன் தொடர்பு பெறுவது சிறப்பு .

களத்திர ஸ்தானம் சர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தன சேர்க்கையை வாரி வழங்கிவிடும், மேலும் ஜாதகர் செய்யும் தொழிலானது விரைவில் மிக பிரபலாமாக மக்கள் மத்தில் சென்றடையும் , ஜாதகர் விளம்பரம் எதுவும் செய்யாமலேயே தனது வியாபரத்தை பன்மடங்கு வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் திறமை கொண்டவராக இருப்பார், இவருடன் தொழில் தொழில் செய்யும் அன்பர்கள் யாவரும் நேர்மை மிகுந்தவர்களாகவும் உண்மையாக இவர்களுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

களத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில், படிப்படியான நிலையான வளர்ச்சியை தரும், தனது தொழிலை ஜாதகர் பல தலைமுறைக்கு நடத்தும் தன்மையுடன், சரியான திட்டமிடுதலுடன் செம்மையாக தொழில் நிர்வாகம் செய்வார் , இவர்களின் முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, தான் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாழையடி வாழையாக செழித்தோங்கும் தன்மையுடன், சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறுவார்கள், இவர்களின் சிந்தனையெல்லாம் பல தலைமுறைக்கு தனது தொழில் சீரும் சிறப்புமாக நடைபெறும் அளவிற்கும் சரியான திட்டமிடுதலுடன், தொலை நோக்கு பாரவையுடன் இருக்கும்.

களத்திர ஸ்தானம் உபய ராசியுடன் தொடர்பு பெற்று 100 சதவிகித நன்மை தரும் அமைப்பில் இருந்தால் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் தொய்வில்லாத சீரான வருமானத்தை பெரும் அமைப்பிலான வியாபாரங்களை  செய்வார், அதிக ரிஸ்க் இல்லாத தொழில்களாகவும், நிர்ணயக்கபட்ட வருமானம் உள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் தன்மை கொண்டவர்கள், இந்த அமைப்பை பெற்றவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் இழப்பு மற்றும் நஷ்டம் என்பதே இருக்காது, சீரான  நிலையான வருமானத்தை ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பெற்றுகொண்டே இருக்கும் விதத்தில் ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமையும்.

மேற்கண்ட அமைப்பில் களத்திர ஸ்தானம் அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் சுய ஜாதக அமைப்பின் படி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று விட்டல் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது , மேற்கண்ட பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களை வழங்கிவிடும், தீய பலன்கள் 200 மடங்கு  நடை பெரும்.

மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகமும், சுக ஸ்தானமான  4ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகுந்த வற்றி வாய்ப்பை வாரி வழங்கும் .

பங்கு வர்த்தக தொழில்களில் ஜாதகர் நிறைவான வருமானத்த பெற , சுய ஜாதகத்தில் மற்றவர் பணத்தை குறிக்கும் 6ம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வர்த்தகத்தால் வரும் வருமானத்தை தரும் 8ம் பாவகமும், முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும் 12ம் பாவகமும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் மேற்கண்ட அமைப்பில் 6,8,12ம் பாவகங்கள் ஒருவர் ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் 100 சதவிகிதம் சிறப்பாக இருந்தால், பங்குவர்த்தக தொழில்களில் கொடிகட்டி பறக்கலாம், அபரிவிதமான வருமானத்தை பெறலாம்.

மாறாக மேற்கண்ட 6,8,12ம் பாவகங்கள் வலிமை இழந்தோ, தனது பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோ, விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலோ , பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலோ, ஜாதகர் பங்கு வர்த்தக தொழில் பக்கம் தலை வைத்து படுப்பது கூட ஆகாது, மீறி செய்தால்  ஜாதகரின் "கெளனபீடம்"
(கோவணம்) வரை உருவி விடும் .

எனவே எந்த ஒரு ஜாதகரும் சுய ஜாதக ரீதியாக தனக்கு ஏற்ற ஜீவனம் எதுவென்பதை நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று செய்வது சிறப்பு, அதிலும் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள் நல்ல யோக பலன்களை  வழங்குவது நல்லது, சுய ஜாதகம் மட்டும் வலிமை பெற்று தற்பொழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி  சிறப்பாக இல்லையெனில் ஜாதகர் செய்யும் தொழில் மிகப்பெரிய வெற்றியை தர வாய்ப்பில்லை என்பது மட்டும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

1 comment:

 1. அண்ணா,

  நான் ஜோதிடத்தில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டு இதுவரை நெறைய ஜோதிட நூல்கள் பல படித்துள்ளேன்.ஆனால் குழப்பம் தான் மிச்சம்.

  ஜோதிட தீபம் தளம் தெளிவை தந்து உள்ளது..

  ஒரு ஜோதிடருக்கு எந்த எந்த பாவகங்கள் வலிமையுடன் இருக்க வேண்டும்.??விளக்கம் தேவை....
  நான் பிறருக்கு ஜோதிட ஆலோசனை சொல்லும் அமைப்பு உள்ளதா??

  என்னுடைய பிறந்த தேதி : 12-07-1983 1:17 am Erode

  ReplyDelete